Saturday, February 28, 2015



இவரு பெரிய பாசமலர் சிவாஜி., 
அவங்க சாவித்திரி...
அவரு " சிஸ்டர் " னு பாச மழை பொழியதும்..
இவங்க " சகோ " னு அதுல நனையறதும்... 

அடடடடா.... முடியலடா சாமி...!!!
பேசாம ஃபேஸ்புக்ல " Add Brother ".,
" Add Sister " ரெண்டு பட்டன்
வெச்சிவுட்டுடுங்களேன்பா...
" ப்ரெண்ட் "-னு சொல்ல அம்புட்டு
தயக்கமா இருந்தா ., பயமா இருந்தா..
ப்ரெண்ட் ரிக்வெஸ்ட் எதுக்கு குடுக்கணும்.,
எதுக்கு அக்செப்ட் பண்ணனும்கறேன்..
போலியான உறவுகளை தவிர்ப்போம்..
உண்மையான நட்பை வளர்ப்போம்..
பொதுநலன் கருதி வெளியிடுவோர்....
" கோகுலத்தில் சூரியன் " வெங்கட் .,
மங்குனி அமைச்சர் ( சென்னை கிளை ).,
கணேஸ்ராஜா கணேஸ் ( இலங்கை கிளை )
( அடி விழற மாதிரி இருந்தா... கம்பெனிக்கு
ஆள் வேணும்ல.. ஹி., ஹி., ஹி...!!! )


Wednesday, February 25, 2015


மதியம் என் ப்ரெண்ட் மணி போன்
பண்ணியிருந்தான்...
" என்னடா.. உன் கிரிக்கெட் போஸ்ட்
செம ரீச் ஆகிடுச்சு போல.. "
" ஆமாடா.. நானே இந்த அளவு எதிர்பார்க்கல.. "
" அப்புறம் நெக்ஸ்ட் சினி பீல்ட் போற
ஐடியா இருக்கா..? "
" சினி பீல்டா... சே., சே.. எனக்கு அதுல
இன்ட்ரஸ்ட்டே இல்ல.. "
" ம்ம்... அப்புறம்..?! "
" நெஜமா தான்டா.. 2 வருஷம் முன்னாடியே
ஆஃபர் வந்தது. நான் தான் வேண்டாம்னு
சொல்லிட்டேன்.. தெரியுமா...? "
" தெரியுமே.. என்னால லைட் புடிக்க முடியாதுங்க.,
சூடு தாங்காதுனு சொல்லி இருப்பே.. "
" போடா நாயே..!!! "

Sunday, February 22, 2015

விஜய் டிவி கமெண்டரி...
அஸ்வினும், டுப்லசிஸும் சென்னை டீம்ல
ஒண்ணா நிறைய மேட்ச் வெளையாடி இருக்காங்க..
அதனால அஸ்வினுக்கு டுப்லசிஸ்ஸின் வீக்னஸ் 
தெரியும்..
# கொய்யாலே... அப்ப டுப்லசிஸ்க்கு அஸ்வின்
வீக்னஸ் தெரியாதா...?!
" தவான் இப்படி ஏமாத்துவான்னு எதிர்பார்க்கல... "
" அதான் 137 ரன் எடுத்து இருக்கான்ல..
இன்னும் என்ன..?!! "
"அதான் மச்சி... எப்படியும் கம்மி ரன்ல
அவுட் ஆகிடுவான்னு ரெண்டு, மூனு
போட்டோ ஸ்டேடஸ் ரெடி பண்ணி வெச்சேன்..
போட முடியாம இப்டி பண்ணிட்டானே..!! "
# ஸ்டேடஸ் போச்சே....!!!!
## IND Vs S.A
கான்டேக்ட்ஸ் லிஸ்ட்ல நல்லா தேடி தேடி...
இவன் கண்டிப்பா வெட்டியா தான்
இருப்பான்னு நம்பி போன் பண்றப்ப..
" மச்சி. கொஞ்சம் பிஸியா இருக்கேன்..
அப்புறம் கூப்பிடு " னு அவன் சொல்லும்
போது தான் உறைக்கும்...
" நாம எவ்ளோ வெட்டியா இருக்கோம்னு "
" ஏம்மா... நீ பொண்ணோட ப்ரெண்ட் தானே..?
பொண்ணை விட ஜாஸ்தி மேக்கப்
போட்டுட்டு வந்து இருக்கியே... உன்னை
பாத்தா.. மாப்ள பையன் ஃபீல் பண்ண மாட்டான்..?!!! "
# என்னம்மா... இப்டி பண்றீங்களேம்மா..!!
" பவுலிங் பிட்ச் "-னு சொல்லி சமாளிக்கலாம்னு
பாத்தா.. இவனுங்க வேற காட்டுத்தனமா
அடிக்கறானுங்க...
124 ரன் தானே.. அதை கொஞ்சம் 
மெதுவாத்தான் எடுங்களேண்டா..
# இங்கிலாந்து கேப்டன் மைண்ட் வாய்ஸ்..!!