Tuesday, March 31, 2015

" நீங்க என்னை ரொம்ப இன்சல்ட் பண்ணிட்டீங்க..
நான் உங்க பேரை எழுதி வெச்சிட்டு
தீக்குளிக்க போறேனு " மங்கு ஒரு பொண்ணுகிட்ட
 சொல்லிட்டான்..
அந்த பொண்ணு பதறி போச்சு..
என்கிட்ட வந்து எதாவது பண்ணுங்கனு
கேட்டுச்சு...
உடனே நான் சொன்னேன்...
" கவலைப்படாதீங்க.... நான் இருக்கேன்ல..
நான் உங்கள ஜாமீன் எடுக்கறேனு "
சொல்லிட்டேன்...
smile emoticon
# இந்த பன்னாட குளிக்கறதே அதிசயம்..
இதுல இது தீ குளிக்க போவுதாம்..!!
" வாட்ஸ் அப் "-ல காலிங் வசதி வந்ததுல
ஒரே பிரயோஜனம்...
.
.
.
.
நம்மகிட்டயும் இருக்குனு வெளில
சொல்லிக்கலாம்...!!!

Monday, March 30, 2015

நேத்து " டார்லிங் " படம் போயிருந்தோம்..
என் சின்ன பையன் கோகுல்
" பயமா இருக்குப்பா., பயமா இருக்குப்பா " னு
சொல்லிட்டே இருந்தான்...
அவன் கையை பிடிச்சி நான் சொன்னேன்..
" ரொம்ப பயமா இருந்தா நீயும் என்னைய
மாதிரி சீட்டுக்கு அடில ஒளிஞ்சிக்க
கோகுல்... "
# தட் பேயே காறி துப்பின மொமண்ட்.

Sunday, March 29, 2015

மேட்ச் பிக்சிங் சர்ச்சையில சிக்கின
நியூசிலாந்து வீரர் கிரிஸ் கெய்ன்ஸ்
இப்ப லாரி ஓட்டிட்டு இருக்காராம்..
அதே மேட்ச் பிக்சிங் மேட்டர்ல சிக்குன 
அசாருதினை நாம MP ஆக்கி அழகு
பாத்தோம்...
# வித்யாசமா செய்வோம்ல...
மங்கு ஃபீலிங்க்ஸ்....
" நியூசிலாந்து தோத்துடுச்சு மச்சி... 
ஒரே ஃபீல்ங்கா இருக்கு... நான் தண்ணி 
அடிக்க போறேன்... "
" தண்ணி அடிக்க போறேனு சொல்லு..
அதுக்கு ஏன்டா.. நியூசிலாந்தை எல்லாம்
வமபுக்கு இழுக்கறே... "
" காரணமே இல்லாம தண்ணி அடிக்கறான்
மங்குனு யாரும் சொல்லிட கூடாதில்ல.. 
பிரஸ்டீஜ் முக்கியம் மச்சி... "
# த்த்தூ..

எல்லா கேஸையும் அனுஷ்கா மேலயே - PS


மெக்குல்லம் அவுட் ஆனதும் எங்க சின்ன மாமனார்...
" இவங்க டாஸ் வின் பண்ணி பேட்டிங்
எடுத்தது ரொம்ப தப்பு மாப்ளே.. "
" அவங்க தான் தப்பு மேல தப்பு பண்ணிட்டு இருக்காங்களே.. "
" என்ன மாப்ளே சொல்றே..? "
" பின்ன இவ்ளோ திறமையான உங்களை
விட்டுட்டு மெக்குல்லமை கேப்டனா
போட்டு இருக்காங்களே மாம்ஸு... "
அப்புறம் அவரு என் Wife-கிட்ட போயி
என்னமோ சொன்னாரு...
நான் ஆபீஸ்க்கு ஓடி வந்துட்டேனே..!!!
# Aus Vs N.Z WC Final