Thursday, April 30, 2015

நானும் என் நண்பன் ஜெகனும்
" தமிழை எப்படி காப்பாத்தறதுனு.(?!) "
தீவிரமா ஆலோசனை பண்ணிட்டு இருந்தோம்..!!
( ஹி., ஹி., ஹி.. அழகிய தமிழ்மகன்கள்..!! )
அப்ப என் மனைவி சாப்பிட கூப்பிட்டாங்க...
" டேய்... வீட்ல கூப்பிடறாங்க... அப்புறமா
பேசலாம்..! "
" இப்படி பாதிலயே போனின்னா.. தமிழை
யார்ரா காப்பாத்தறது.? "
" போலன்ன்னா என்னை யார்ரா காப்பாத்தறது..?!! "

ரோட்ல நாங்க நடந்து போனா - PS


Tuesday, April 28, 2015

பைக் விளம்பரம் - PS


" இன்னிக்கு சினிமாவுக்கு போலாம்னு சொன்னீங்க..? "
" எந்த படத்துக்கு..? ''
" காஞ்சனா - 2 "
" இரு யோசிச்சி சொல்றேன்... "
" காஞ்சனா - 2 தியேட்டர்ல போயி
பார்க்கறீங்களா.? இல்ல வீட்லயே
பார்க்கறீங்களா..? "
" புரிஞ்சிடுச்சி... கெளம்பு கெளம்பு.... "

பனியன் வெளம்பரம் - PS


" நீயெல்லாம் ஒரு பெரிய மனுஷனாய்யா..?!! "
.
.
.
.
.
.
.
.
# மிஸ்டு கால் குடுத்தா.. டக்னு அட்டெண்ட் பண்ற..?!!

நேத்து நைட் டின்னர்...
அப்ப என் பையன் சூர்யா கேட்டான்...
" அப்பா .. கோழி முதல்ல வந்ததா., 
இல்ல முட்டை முதல்ல வந்ததா.? "
" முட்டை தான்..."
" எப்படிப்பா...? "
" நீ சரியா கவனிக்கலை.... அம்மா
எனக்கு பர்ஸ்ட் முட்டை வெச்சாங்களா.,
நெக்ஸ்ட் தோசை வெச்சாங்களா.,
லாஸ்ட்ல தான் சிக்கன் வெச்சாங்க...
So... முட்டை தான் பர்ஸ்ட் வந்தது.... "
அப்புறம் அவன் என்னை முறைச்சிட்டு
எந்திரிச்சி போயிட்டான்..
# நான் கரெக்டா தானே சென்னேன் மக்கழே...?