Tuesday, June 30, 2015

என் பையன்கிட்ட எங்க பேமிலி டாக்டரு...
" எங்கடா.. உங்கப்பன் கொஞ்ச நாளா
ஃபேஸ்புக் வரக் காணோம்னு " கேட்டிருக்காரு...
அதுக்கு இவன்...
" எங்க அப்பவா..?! அவரு வீட்டுக்கு கூட
வராம இருப்பாரு.. ஆனா ஃபேஸ்புக் வராம
இருக்க மாட்டாரேனு " சொல்லி இருக்கான்...
# சே... ஒரு போராளியா இருந்தா...
எவ்ளோ கேவலப்பட வேண்டி இருக்கு..

Monday, June 29, 2015

மங்கு கூட பேசிட்டு இருக்கும் போது
சொன்னேன்...
" எப்படியாவது ஒரு ஸ்டேட்ஸ்க்காவது
100 லைக் வாங்கிடணும் மச்சி..! "
" இப்ப எவ்ளோ வருது..?! "
" 75 கிட்ட வருது..!! "
" டோண்ட் வொர்ரி மச்சி... உன்னால
முடியும்..!! "
" அப்படிங்கிற..?!! "
" கண்டிப்பா... 75 Fake Id ஓபன் பண்ணின
உன்னால.. இன்னும் 25 பண்ண முடியாதா..?! "
" அடிங் கொய்யாலே.. "
# இங்கே விழற ஒவ்வொரு லைக்கும்
நானா ( கெஞ்சி ) வாங்குனதுடா..!

என் ப்ரெண்ட் ராகவன் ஒரு பிரைவேட் கம்பெனில
இன்ஸுரன்ஸ் ஏஜென்ட்டா இருக்கான்..
அப்பப்ப " பாலிசி போடுனு " போன் பண்ணி
தொந்தரவு பண்ணுவான்..
( இன்ஸுரன்ஸ் ஏஜென்ட்டா இருக்கறதை விட
இன்ஸுரன்ஸ் ஏஜென்ட்க்கு ப்ரெண்ட்டா
இருக்கறது ரொம்ப குஷ்டமப்பா..!!! )
நேத்து வழில மீட் பண்ணினோம்..
" மச்சி... ஒரு சின்ன ஹெஸ்ப்.. "
" பாலிசி போடுனு மட்டும் கேக்காதே..
வேற எதுனா கேளு.. "
" நாளைக்கு உங்க ஊர்க்கு வரேன்...
ஒரு 10 பாலிசி பிடிச்சி குடேன்..!! "
" என்னாது 10 பாலிசியா..?!!! எங்க ஊர்க்காரங்க
LIC-ல மட்டும் தான்டா போடுவாய்ங்க.. வேற
இன்ஸூரன்ஸ்னு போயி நின்னா.. சொறி நாய
பார்க்கற மாதிரி பார்ப்பாங்கடா.. "
" சரி விடு... நான் காங்கிரஸ் கட்சில இருக்கேன்..
எங்க கட்சிக்கு 5 உறுப்பினரையாவது சேத்து விடு..!! "
( என்னாது காங்கிரஸா....!!!!!?!??!!?!? )
" உனக்கு 10 பாலிசி போதுமா மச்சி..?!! "

Wednesday, June 24, 2015


" யக்கா... பாம்பு கூட எல்லாம் நின்னு
போட்டோ எடுத்து இருக்கீங்களே...
பயமா இருந்து இருக்குமே...?! "
" சே., சே.. எனக்கென்ன பயம்.?! "
" நானும் உன்ன கேக்கலக்கா.. பாம்புக்கு
பயமா இருந்து இருக்குமேனு தான் கேட்டேன்.. "
# டெரர் சித்ராக்கா வித் அப்பாவி பாம்பு..

நான் ரூம்ல படுத்திருந்தேன்..
அப்ப கொசு பேட்டும்., கையுமா உள்ளே
வந்தாங்க என் Wife...
" நிர்மலா... நிர்மலா... அந்த கொசுவை
மட்டும் அடிக்காதே.. "
( என்னை லூச பார்க்கற மாதிரி பார்த்தா...
பொதுவாவே அப்படித்தான் பார்ப்பா..
அது வேற விஷயம்.. ஹி, ஹி, ஹி.. )
" ஏன்..?!! "
" இப்ப தான் அது என்னை கடிச்சிட்டு
போச்சு... "
" அப்ப ஏன் அடிக்க வேணாம்கறீங்க..?!! "
" ஏன்னா... ஏன்னா... அது என் ரத்தம்மா...! "
# கடைசில அந்த கொசு தப்பிச்சிக்கிச்சி..!!!

நேத்து நான் சொன்ன பேச்சை
என் சின்ன பையன் கோகுல் கேக்கல..
அதனால அவன் கேட்ட சாக்லெட்டை
நான் வாங்கித் தரமாட்டேனு சொல்லிட்டேன்..
( வூட்லயே இவன் ஒருத்தன் தான்
என் பேச்சை கேட்டுட்டு இருந்தான்...
இப்ப இவனும் கேக்கலன்னா..
கோவம் வருமா.. வராதா.?!! )
சாக்லெட் வரலைன்னா.. சாப்பிட மாட்டேனு
அடம் பண்ணிட்டு இருந்தான்...
" மொளைச்சி மூனு எலை விடல. அதுக்குள்ள
இவ்ளோ பிடிவாதமானு..? " நானும் விடாப்பிடியா
நின்னேன்..
அப்பனும், புள்ளயும் என்னமோ பண்ணுங்கனு
என் Wife தலையில அடிச்சிகிட்டு போயிட்டாங்க..
நான் அவன்கிட்ட போயி..
" ஏன்டா உனக்கே இவ்ளோ திமிர் இருந்தா..
நான் உங்கப்பன் எனக்கு எவ்ளோ திமிரு
இருக்கும்..?!! "
நைசா என்னை திரும்பி பார்த்தான்..
பாத்துட்டு...
" அப்ப நம்ம வீட்லயே தாத்தாவுக்கு தான்
திமிர் அதிகம்னு " சொல்றியாப்பானு கேட்டுட்டு
சிரிச்சான்..
" அடப்பாவினு " மனசுல நெனச்சிகிட்டு
ஆமா எதுக்கு இப்டி சிரிக்கறானு திரும்பி பார்த்தா...
" ஐயோ.. எங்க அப்பா..!!! "
" ஏங்க தூங்காம என்ன பண்ணிட்டு
இருக்கீங்க..?!! "
" ஒரு ஸ்டேடஸ் டைப் பண்ணிட்டு இருக்கேன்.. "
" நைட் 12.30.மணிக்கு கூட ஸ்டேடசா..? "
" நேரம் காலம் பாத்தா போராளியா
இருக்க முடியுமா..!! "
" இன்னிக்கு உங்க நேரம் நல்லா இருக்கு... "
" புரியலயே... "
" ம்ம்.. நான் டயர்டா இருக்கேனு சொன்னேன்.. "
# கைப்புள்ள... இன்னுமா முழிச்சிட்டு இருக்க...
தூங்ங்ங்கு.....