Monday, August 31, 2015

ஏர்டெல் வெச்சிருந்தப்ப
நெட்வொர்க் ப்ராப்ளம்னு சிக்னல் கட் ஆனா...
" வந்திருச்சா..? வந்திருச்சா"-னு அஞ்சு நிமிசத்துக்கு
ஒரு தடவை எடுத்து பாத்துட்டே இருப்பேன்...
BSNL-க்கு மாறினதுக்கு அப்புறம்
அந்த பிரச்னையே இல்ல....
இன்னிக்கு சிக்னல் கட் ஆனா
அது நாளைக்கு தான் வரும்.. நான்
போனை தூக்கி பீரோல வெச்சிடுவேன்..
# லெஸ் டென்ஷன்.. லெஸ் வொர்க்.

Saturday, August 29, 2015

ஊர்ல இருக்குற புள்ளங்க எல்லாம் வந்து
கையில கயிறு கட்டும்..
ஆனா...
வூட்ல இருக்குற தங்கச்சி நம்மள கண்டுக்காது...
# " ராக்கி.. "


ஐய்யயோ... இது விஜய் டிவிக்காரன் கண்ணுல 
சிக்குனா.. மெகா சீரியலா எடுத்து கொலையா கொல்லுவானே...

" வெங்கட் நீங்க சினிமாக்கு போலாம்ல.. "
" நம்மகிட்ட இருக்குற திறமைக்கு போலாம் தான்..
இருந்தாலும் அது கொஞ்சம் ரிஸ்கான ஃபீல்ட்..
அதான் யோசனையா இருக்கு..!! "
" ஐய்யோடா... FB-ல உக்காந்து மொக்கை போட்டு
இருக்கீங்களே.. அதுக்கு தியேட்டர்ல போயி
ஒரு சினிமாவாச்சும் பார்க்கலாம்லனு கேட்டா... "
" தியேட்டர்லயா... அவ்வ்வ்வ..!!!??? "
# நாம கொஞ்சம் ஓவரா போயிட்டோமோ.!!

Wednesday, August 26, 2015

இன்னிக்கு ஒரு கல்யாணத்துல என்னை
பாத்த என் ப்ரெண்ட் மணி...
" ஹேய் வெங்கி.. என்னடா இளைச்ச
மாதிரி இருக்கே..?! "
இதை கேட்டதும் என் Wife அப்படியே
ஷாக் ஆகிட்டாங்க...!!
( இப்ப ஒரு சின்ன ப்ளாஷ்பேக்... )
10 நிமிஷம் முன்னாடி...
மணி கார்ல இருந்து இறங்கி வர்றான்...
என்னை பாத்துட்டு சிரிச்சிகிட்டே
என்கிட்ட வர்றான்...
" ஹே மணி... என்னடா இளைச்ச மாதிரி
இருக்கே..?! "
" நிஜமாவா.?! "
" யெஸ்...!! "
" அப்ப இதை மேனகா ( அவன் Wife)
என் கூட இருக்கும் போதும் சொல்றியா..?! "
" ஓ.... இதே மாதிரி நீயும் நிர்மலா
என் கூட இருக்கும் போது சொல்றியா..?! "
" ஓ.கே.. டீல்..!! "
# இப்படித்தான் ஒரு ஜென்டில்மேன் அக்ரிமெண்ட்
கையெழுத்தாச்சு...!!

பேசாம டிவில " ஸ்டாக் அனலிஸ்டா " வேலைக்கு
போயிடலாம்னு பார்க்கிறேன்...
மார்கெட் ஏறினா..
" வாங்கு.. வாங்கு " -னு சொல்லணும்...,
இறங்கினா...
" வித்துடு.. வித்துடு " -னு சொல்லணும்..
அவ்ளோதான்.... சோ சிம்பிள்...!!!

நல்லவேளை நியூட்டப் புவி ஈர்ப்பு - PS