Wednesday, September 30, 2015

பலாப்பழம் சாப்பிட்டுட்டு கோகோ- கோலா
குடிச்சா.. அது 5 பாம்பு விஷத்துக்கு சமமாம்..
அப்ப.. பாம்பு விஷத்துல இருந்து தயாரிக்கற
மருந்தை இனிமே இதுல இருந்து தயாரிங்கடே...
# ஷேர் ஆட்டோல போறதுன்னா கூட
யோசிக்கறானுங்க.. இந்த மாதிரி
கண்ட கருமத்தை ஷேர் பண்றப்ப மட்டும்
யோசிக்கவே மாட்டேங்கறானுங்க..
( ஹைய்யா... ரைமிங்..!! )

Tuesday, September 29, 2015

BSNL ஆபீஸ்ல ரீசார்ஜ் பண்ண போயிருந்தேன்...
அங்கே இருந்த பொண்ணு...
" புது ஆஃபர் வந்து இருக்கு சார்..
BSNL to BSNL நிமிஷத்துக்கு 10 பைசா..
பண்ணிக்கறீங்களா."-னு கேட்டுச்சு..
" எனக்கு BSNL வெச்சிருக்குற ப்ரெண்ட்ஸ்
யாரும் இல்ல.. உங்க நம்பர் வேணா குடுங்க"- னு
கேட்டேன்..
அந்த பொண்ணும் சிரிச்சிக்கிட்டே...
" என்னுது ஏர்செல்னு " சொல்லிடுச்சு..
# இந்த ஏர்செல்ல 10 பைசா ஆஃபர்
எதாவது இருக்கானு பார்க்கணும்..!!!
tongue emoticon tongue emoticon

Monday, September 28, 2015

காலைல 8.30 மணிக்கு என் ப்ரெண்ட் அருண்
போன் பண்ணியிருந்தான்...
ஆபீஸ்க்கு கெளம்பணும்.. லேட் ஆகுது..
இவனும் போனை வெக்கிற மாதிரி தெரியல..
" டேய்... நான் குளிக்க போறேன்..
போனை கட் பண்ணு... "
" யேய்.. நேத்து நைட் தான் மழை பெய்ஞ்சதுனு
சொன்ன.. மறுபடியும் ஏன்டா குளிக்கற..?!! "
" எருமை.. எருமை.. வை போனை..!! "

எதோ நயன்தாரா வந்தப்ப கூட்டம் கூடிடுச்சாம்...
உடனே ‪#‎நயனம்4CM‬ னு கெளம்பிட்டாய்க..
நீங்க தமன்னாவ கூட்டிட்டு வந்து பாருங்களேன்..
அப்பவும் கூட்டம் கூடி காட்றோம்..
எல்லோரும் புரோபைல் பிக்சரை
கலர் கலரா மாத்தி வெச்சி இருக்காய்ங்க...
எதாவது முக்கியமான விஷயமா இருக்குமோ..?!!
சரினு புரோபைல் பிக்சரை கலர் மாத்தி
வெச்சிருக்குற என் ப்ரெண்ட்க்கு கால் பண்ணினேன்...
" மச்சி... எதுக்குடா புரோபைல் பிக்சரை
கலர் கலரா மாத்தி வெச்சி இருக்கே..? "
" தெரியல மச்சி.. எல்லோரும் மாத்தி இருந்தாங்க..
நானும் மாத்திட்டேன்..."
# சீக்ரெட் ஆப் பல " கலர் புரோபைல் பிக்சர்..!! "

இந்த ஆந்திரால... போலீஸ்ங்கிற கான்சப்டே
இல்லனு நெனைக்கிறேன்...
கேங்ஸ்டர் படத்துல எல்லாம் கடைசில கூட
போலீஸ் வர மாட்டேங்குது...!!

டிஸ்கி : இந்த புரட்டாசி மாசம்., விரதம் எல்லாம்
எங்களுக்கு இல்ல..
சேலம்ல ஒரு மெஸ்ல... மட்டன், சிக்கன்
எல்லாம் சூப்பரா இருக்குனு என் சகலை 
சொன்னாரு..
அங்கே சாப்பிட போகணும்னா.. காலைல 11-க்குள்ள
போன் பண்ணி சொல்லிடணும்..
சரினு இன்னிக்கு ப்ளான் பண்ணிட்டோம்..
என் சகலை போன் பண்ணி சொல்லிட்டாரு...
சரியா 1 மணிக்கு மெஸ்ல இருந்தோம்..
அங்கே ஒரு பொண்ணு இருந்தது..
காலேஜ் படிக்கும்னு நெனக்கிறேன்...
" சிக்கன் ரெடி ஆகிட்டு இருக்கு ஒரு 10 நிமிஷம்
வெயிட் பண்ணுங்க"-னு சொல்லிட்டு போச்சு...
கொஞ்ச நேரத்துல இன்னும் 10 பேர் வந்துட்டாங்க..
சாப்பாடு, மட்டன், சிக்கன் எல்லாம் நல்லா இருந்தது..
பில் குடுத்துட்டு வரும்போது.. விசிட்டிங் கார்ட்
குடுத்தாங்க... நான் ஒண்ணு வாங்கிட்டேன்..
அதுல 4 மொபைல் நம்பர் இருந்தது..
உடனே நான் என் சகலைகிட்ட கேட்டேன்..
" சகலை.. உங்ககிட்ட இந்த எல்லா நம்பரும் இருக்கா..?! "
" இல்ல... ஒரு நம்பர் தான் இருக்கு.. "
" அப்ப மத்த 3 நம்பரையும் நோட் பண்ணுங்க... இந்தாங்க.. "
" வேணாம் சகலை... "
" ஏன்...?!! "
" இந்த நம்பர்ல பண்ணினா தான் அந்த பொண்ணு
எடுத்து பேசுது...! "
( நான் அப்படியே ஒரு நிமிஷம் ஷாக் ஆகிட்டேன்...
அடப்பாவி மனுஷா...!! )
உடனே நான் என் சகலைகிட்ட...
" சகலை.... இந்த நாலு நம்பர்ல எது அந்த நம்பரு..?!!
ஹி., ஹி., ஹி.. "
டிஸ்கி : தப்பா நினைக்க கூடாது.. அந்த நம்பரை
விட்டுட்டு மத்த மூனு நம்பர்க்கு போன் பண்ணுவோமாக்கும்...!!!