Wednesday, November 25, 2015


மதியம் லைட்டா தலைவலி..
சோபால படுத்திருந்தேன்..
அப்ப என் Wife...
" என்னங்க... என்ன ஆச்சு..? "
" தலைவலி...!! "
" நான் வேணா ஒரு காபி போட்டு தரவா..? "
" வேணாம்..!! ஆமா உன் ப்ரெண்ட் அக்குபஞ்சரிஸ்ட்
இருக்காங்கல்ல.. அவங்ககிட்ட தலைவலி சரியாக
எதாவது பாயிண்ட் கேக்கறது..!! "
" எதுக்கு கேக்கணும்..?! எனக்கே தெரியுமே..!! "
" உனக்கே தெரியுமா..? இதெல்லாம் எப்படி
கத்துகிட்ட..? "
" அதெல்லாம் எப்படியோ... இப்ப உங்களுக்கு
தலைவலி சரியாகணுமா.. வேணாமா..? "
" ஆகணும்.. ஆகணும்...!!! "
" அப்ப எந்திரிச்சி நில்லுங்க..!! "
நான் எழுந்து நின்னேன்... நின்னதும்..
என் கால் கட்டைவிரல்ல ஓங்கி ஒரு மிதி மிதிச்சா...
" ஐய்ய்யோ.... என் காலு...!!! "
" என்ன ஆச்சு..? "
" கால் வலிக்குது..!! "
" கரெக்ட்டா சொல்லுங்க,, கால் வலிக்குதா.?
தலை வலிக்குதா..? "
" இப்ப கால்தான் வலிக்குது..!! "
" ஹப்பாடா.. அப்ப தலைவலி சரியா போச்சு..
எப்டி நம்ம ட்ரீட்மெண்ட்..!! "
# அடிப்பாவி..?!!!

Tuesday, November 24, 2015

அந்த புள்ள உனக்கு லவ் லெட்டரா குடுத்துச்சு..?!!
" லைக்கு " தானே போட்டுச்சு...?!!.
அடங்குடா..!!
# யாருக்கோ..!!!

Sunday, November 22, 2015

ரிப்போர்ட் - உலகம் நாளைக்கே அழிஞ்சிட்டா- PS


தினமும் அவன் நாலு ஸ்டேடஸ் போட்டு 
கொல்றானா..?
அவனை ஆஃப் பண்ணனுமா..?!!
வெரி சிம்பிள்...
சாட்லயோ., போன்லயோ அவனை பிடிச்சி...
" நான் உங்க ஃபேன் சார்னு ஆரம்பிச்சு.,
உங்க எழுத்துன்னா எனக்கு உயிர் சார்னு
பில்டப் பண்ணி.. எப்டி சார் இப்டி பின்றீங்கனு
கண்டினியூ பண்ணி... அப்படியே கடைசில...
இப்பல்லாம் நீங்க எழுதறது ரொம்ப
மொக்கையா இருக்கே... உங்க பழைய
டச் இல்லியேனு " முடிச்சீங்கனு வைங்க...
# கதம் கதம்...!
டிஸ்கி : " நான் உங்க ஃபேன் சார் "-னு யாரும்
ஆரம்பிக்க வேணாம்... ஆல்ரெடி போன் வந்துடுச்சு...

Wednesday, November 18, 2015



நல்லவேளை போன வருஷமே நயன்தாரா
ப்ரெண்ட் ரிக்வெஸ்ட்டை ரிஜெக்ட் பண்ணினேன்..
இல்லன்னா இப்ப...
சென்னைக்கு ப்ளைட்டு.,பர்த்டே கிப்ட்,
பார்ட்டினு ஏகப்பட்ட செலவு ஆகியிருக்கும்..
# இன்னிக்கு நயன்தாரா பர்த்டே..!!
இப்ப எதுக்கு மொறைக்கறீங்க..?!!
என்ன... நம்ப முடியலையா..?!
அப்ப என் ப்ரெண்ட்ஸ் லிஸ்ட்ல வேணா
போயி நல்லா செக் பண்ணிக்கோங்க..
என் ப்ரெண்ட்ஸ் லிஸ்ட்ல நயன்தாரா இல்ல..
நயன்தாரா ப்ரெண்ட்ஸ் லிஸ்ட்ல நான் இல்ல..!!
# அக்காங்..!!
smile emoticon

Tuesday, November 17, 2015


" நேத்து லக்ஷ்மி மேனன் என் கனவுல வந்தாப்ல.... "
" அப்புறம்...?! "
" அப்புறம் என்ன... எந்திரிச்சு நெத்தில 
விபூதி பூசிகி்ட்டு படுத்துட்டேன்.. "
# கிரேட் எஸ்கேப்..!