Wednesday, December 30, 2015

துபாய்ல எனக்கு ரொம்ப பிடிச்ச விஷயம்...
நாம ரோடு கிராஸ் பண்ண வந்து நின்னா..
வர்ற கார் எல்லாம் ஒரு 10 அடி முன்னாலயே
நிறுத்திக்கறாங்க., நாம கிராஸ் பண்ணினப்புறம் தான் 
அவங்க போறாங்க...
ரியலி இம்ப்ரஸ்ட்.. smile emoticon
# துபாய் அலப்பரைஸ் - 5

ஹலோ... நான் அல்ரெடி துபாய்ல தான் இருக்கேன்... tongue emoticon 

:) :) tongue emoticon

" ஹேய்.. பூஜா... "
" டேய்... அக்கானு கூப்பிடறா.. "
" நீ மொதல்ல என்னை அண்ணானு கூப்பிடு... "
" டேய்... நான் உன்னை விட 2 வருஷம் பெரியவடா.. "
" நான் என் தங்கச்சிய விட 5 வருஷம் பெரியவன்...
5 பெருசா..? 2 பெருசா..?! "
# கோகுல் ராக்ஸ்... பூஜா ஷாக்ஸ்..!
## துபாய் அலப்பரைஸ் - 4

Immigration கவுண்ட்டர்ல க்யூல நின்னுட்டு இருந்தேன்....
ஒரு பொண்ணு ஓடி வந்து...
" நீங்க ஷாகித் கபூரானு..? " கேட்டுச்சு..
ஹி. ஹி., ஹி..!!
ஆமா.. இப்ப எதுக்கு மொறைக்கறீங்க..??!
போன வாரம் ஒரு பொண்ணு ஷாகித் கபூர்கிட்ட போயி...
" நீங்க வெங்கட்டா.? "-னு கேட்டு இருக்கு தெரியுமா..?!!
# துபாய் அலப்பரைஸ் - 3
" மச்சி நாளைக்கு தானே நீ துபாய்க்கு போறே..! "
" ஆமா...!! "
" நான் மத்தவங்க மாதிரி அது வாங்கிட்டு வா.. 
இத வாங்கிட்டு வானு சொல்ல மாட்டேன்.. "
" சரி..!! "
" அங்க எது சீப்பா கெடைக்குதோ.. அத வாங்கிட்டு வா... "
" அங்க டீசல்தான் சீப்பா கெடைக்குதாம்...
10 லிட்டர் வாங்கிட்டு வரவா..?!! "
# கொய்யாலே..... ஊருக்கு போறேனு சொன்னா...
" எனக்கு என்ன வாங்கிட்டு வர்றே"-னு
கேக்கறானுங்களே தவிர ஒருத்தனாவது
கையில 10,000 ரூபா குடுத்து என்ஜாய்
பண்ணிட்டு வானு சொல்றானுங்களா...
## துபாய் அலப்பரைஸ் - 2
/// பரீட்சையில் பெயிலானதால் பெற்றோர் உட்பட 
கண்ணில் பட்ட பலரை வாளால் வெட்டிய வாலிபர் 
- செய்தி... //

இப்ப பசங்க ஏன் இப்டி இருக்காங்க...?!
இன்னிக்கு நான் இம்புட்டு பெரிய அறிவாளியா(?) 
இருக்கேன்னா... அதுக்கு காரணமே ஒவ்வொரு 
கிளாஸ்லயும் ரெண்டு வருஷம் ரிசர்ச் பண்ணி.. 
ரிசர்ச் பண்ணி படிச்ச படிப்பு தான் காரணம்...
tongue emoticon tongue emoticon
துபாய்ல போயி 25,000 ரூபாய்க்கு பர்சேஸ்
பண்ணலாம்னு ஐடியா வெச்சி இருந்தேன்...
துபாய் போறதுக்குனு சொல்லி இங்கயே
30,000 ரூபாய்க்கு பர்சேஸ் முடிச்சிட்டாங்க என் Wife...
# அவ்வ்வ்வ்...!!!
## துபாய் அலப்பரைஸ் - 1