Monday, May 30, 2016

5 நிமிடத்தில் டெல்லியை தாக்க - மீம்ஸ்




இன்னிக்கு என் ப்ரெண்ட் அருண் Other Bank ATM-ல 
பணம் எடுக்க போயி இருக்கான்..
கார்ட் Insert பண்ணி 500 ரூபா என்டர் பண்ணி இருக்கான்..
மெஷின் ரிப்பேர் போல... பணம் வரல... 
சரினு வந்துட்டான்...
இப்ப நைட் அவன் அக்கவுண்ட்ல 500 ரூபா 
டெபிட் ஆகிடுச்சினு மெசேஜ் வந்திருக்குனு 
போன்ல சொன்னான்..
" நாளைக்கு பேங்க்ல போயி கேளு.. "
" ம்க்கும்.. இதுக்காக அரை நாள் ஆபீஸ்க்கு லீவ் 
போட்டுட்டு அலையணும்.. "
" அதுக்கு...?!! 500 ரூபாடா.. "
" ஆமா.. என்ன பண்றது..? வண்டிக்கு 5 லிட்டர் 
பெட்ரோல் அடிச்ச மாதிரி நெனச்சிக்கிறேன் விடு.. "
" ஹி,ஹி,ஹி.. மச்சி அப்டியே.. வண்டிக்கு 10 லிட்டர் 
பெட்ரோல் அடிச்ச மாதிரி நெனச்சிட்டு என் நம்பர்க்கு 
ஒரு 500 ரூபா ரீசார்ஜ் பண்ணிவிடேன்... "
" அடிங் கொய்யாலே....!!! "
மதியம் அசதியா இருக்கேனு தூங்கிட்டு இருந்தேன்...
அப்ப என் மொபைல் ரிங் ஆச்சு.. என் ப்ரெண்ட் ஆனந்த்...
இந்த நாய்க்கு நேரம் காலமே தெரியாது..
போனை எடுத்து...
"மச்சி... நான் தூங்கிட்டு இருக்கேன்.. நீ அப்புறமா 
முழிச்சிட்டு இருக்கும்போது கால் பண்ணு.."
"அப்ப தான் நீ சாப்பிட்டுட்டு இருக்கியே..."
"சரி சாப்பிட்டு முடிச்சப்புறம் பண்ணுடா.."
"அப்ப தான் நீ தூங்கிட்டு இருக்கியே..."
# டேய்ய்ய்ய்ய்....!!!!

Sunday, May 29, 2016

IPL 2016 - மீம்ஸ்




சன்டேனா.. நான் அத சாப்பிட்டேன், இத சாப்பிட்டேனு 
FB-ல போட்டு பெருமை அடிக்கணுமா என்ன.?

என்னய எல்லாம் பாத்து திருந்துங்கடே..

நான் கூட தான் இன்னிக்கு மட்டன் பிரியாணி சாப்டேன்... 
அத எல்லாம் வெளில சொல்லி்ட்டா இருக்கேன்...?!!


'நான் ஏர்டெல்ல இருந்து வோடபோனுக்கு மாறிட்டேன்'னு 
என் ப்ரெண்ட் ஜெகனுக்கு மெசேஜ் அனுப்பினா...

'ஒரு சாதா நாய்.. இப்ப வோடபோன் நாயா மாறிடுச்சி'ன்னு 
ரிப்ளை அனுப்பறான்...

# லொள்.. லொள்...!!!

என் ப்ரெண்ட் மெடிக்கல் ஸ்டோர் போனேன்... போயி...
" டேய் சுரேஷ்... நகரு நகரு... "
நான் தேட ஆரம்பிச்சேன்...
அத பாத்த என் ப்ரெண்ட் சுரேஷ்..
" என்னடா தேடுற..?! "
" இங்கே எலும்புக்கூடு படம் போட்டு விஷம்னு எழுதியிருக்குமே.. 
அந்த பாட்டில் எங்கே..?! "
" என்னடா ஆச்சு..?! "
" நீங்களும், மங்குவும் ஒரே ஆள் தானேனு கேக்கறாங்க.. "
" அதுக்கு...?! "
" இந்தா கெடைச்சிடுச்சில்ல பாட்டிலு... "
" டேய்.., டேய்... அவசரப்பட்டு குடிச்சி தொலைச்சிடாதேடா.. "
" அடச்சே... இது எனக்கில்லடா... மங்குவுக்கு... "
# ஹா, ஹா, ஹா ( வில்லன் சிரிப்பு )