Monday, October 31, 2016

வீணா ஸ்ரீவாணி வீணை வாசிக்கறது பாத்துட்டு என் Wife கி்ட்ட...
" நிர்மலா.. இந்த மாதிரி எதாவது இன்ஸ்ட்ரூமெண்ட் வாசிக்கணும்னு சின்ன வயசுல இருந்தே எனக்கு ரொம்ப ஆசை..! "
" ஆஹான்...?!! "
" நான் வேணா.... வீணை கத்துக்கட்டுமா..?! "
" வேணாம்ங்க... நீங்க அமெரிக்க ஜனாதிபதி ஆகிடுங்க... "
" அமெரிக்க ஜனாதிபதியா..?! என்ன உளர்ற..?! "
" இல்ல... நீங்க வீணை கத்துக்கறத விட இது ஈஸியா இருக்கும்னு தோணுது...!! "
# கிர்ர்ர்ர்ர்....!!

Sunday, October 30, 2016

" நைட் போட்டோகிராபி கத்துக்கறேனு கேமரா தூக்கிட்டு போனீங்க..? "
" கத்துக்கிட்டேன்ல... "
" என்ன கத்துகிட்டீங்க..? "
" நைட்ல போட்டோ எடுத்தா.... ஃப்ளாஷ் யூஸ் பண்ணனும்... ஹி.,ஹி.,ஹி.. "
#போட்டோகிராபி டிப்ஸ்...!!
தீபாவளினா.... ஸ்வீட் செஞ்சு பக்கத்து வீட்டுக்காரங்க, எதிர் வீட்டுக்காரங்க, பின் வீட்டுக்காரங்க, சொந்தக்காரங்க இப்டி யார் குடுத்தாலும்... மிஸ் பண்ணாம வாங்கி சாப்பிட்டுடுவோம்...
இந்த வருஷம் இன்னும் யாருமே குடுக்கல...
வர வர உலகத்துல அன்பு கொறைஞ்சிட்டே வருது....!!

Friday, October 28, 2016

இன்னிக்கு " தேவி " படம் பாத்தாச்சு...

நல்லவேளை " படம் பாத்துட்டீங்களா வெங்கட்"-னு தமன்னா கால் பண்றதுக்குள்ள பாத்துடணும்னு நெனச்சிட்டு இருந்தேன்....

ஏன்.. ஏன்... அப்டி டவுட்டா பாக்கறீங்க?

அட சத்தியமா தான்.. நம்புங்க...

தமன்னாகிட்ட இருந்து கால் இன்னும் வரல.. ஹி.,ஹி.,ஹி..!!





Thursday, October 27, 2016

வீரு கண்ணா... உன்னை ஏன் எல்லார்க்கும் புடிச்சி இருக்கு தெரியுமா... ரிடையர்டாகிட்டாலும் வெளாசறதையும், அடிச்சி நொறுக்கறதையும் நீ இன்னும் விடல....




Wednesday, October 26, 2016

இப்பல்லாம் என்கிட்ட வந்து பேசற என் ஃபிரண்ட்ஸ்... கெளம்பறப்ப,
'உன் கைய காலா நெனச்சிக் கெஞ்சிக் கேக்கறேன்... நாம பேசினத ஃபேஸ்புக்ல போட்டு என் மானத்தை வாங்கிடாதே'ன்னு சொல்லிட்டுப் போறானுங்க...
எல்லோரும் இப்டியே சொன்னா... அப்புறம் எப்டிதான்டா நான் தொழில் பண்றது...?!!
# ஒரே குஷ்டமப்பா...!!!

Tuesday, October 25, 2016

ஒரு பொண்ணு ப்ரொஃபைல் பிக்சர்ல கண்ணு மட்டும் வெச்சி இருந்திருக்கு..
இந்த மங்கு பன்னாட போயி..
'உங்க கண்ணைப் பாத்தா நயன்தாரா கண்ணு மாதிரியே இருக்கு'ன்னு கமெண்ட் போட்டுச்சு..
அந்தப் புள்ளயும் 'அது நயன்தாரா கண்ணே தான்'னு ரிப்ளை போட்டு இருக்கு...
உடனே இந்த நாயி என்கிட்ட வந்து..
"மச்சி.. இத்தன நாளா நயன்தாரா என் ப்ரெண்ட் லிஸ்ட்ல இருந்து இருக்கு.. இன்னிக்கு தான் கண்டுபுடிச்சேன்"னு சொல்றான்...
அடேய்ய்ய்ய்...!!
# புடிச்சி ஜெயில்ல போடுங்க சார் இவனை..