Wednesday, November 30, 2016

ஆக்சுவலி ரெண்டு வருஷம் முன்னால "நீயா நானா"ல கலந்துக்க வர சொல்லி போன் வந்தது...
" ஏன் கோபி வேலைய விட்டு போயிட்டாரானு " கேட்டேன்.
போனை டக்னு வெச்சிட்டாங்க...
நாம கலந்துகிட்டதுக்கப்புறம் கோபி வேலைய விட்டு போயிட்டா.. பழி நம்ம மேல வந்துடுமேனு ஒரு சேப்டிக்கு கேட்டா....
அதுக்கு போயி..... ஹி., ஹி., ஹி...!!!
விஜய் டிவிக்கும்., நீயா நானா டீம்க்கும் என் நன்றி...!!
.
.
.
" நீயா நானால " கலந்துக்க வரச்சொல்லி எனக்கு போன் எதுவும் வரல....
ஏன் போன் வந்தா தான் நன்றி சொல்லணுமா என்ன...?!

வனிதா போஸ்ட் - கவுண்ட்டர்


நட்சத்திர கிரிக்கெட்டில் முறைகேடுகள் - மீம்ஸ்


எனக்கு ஒண்ணு ரெண்டு வெள்ளை முடி எட்டி பாக்குது...
டாக்டர்கிட்ட கேட்டேன்..
" இவ்ளோ சின்ன வயசுல வந்தா.. இது பித்த நரைனு " சொல்லிட்டாரு.....
அப்ப மொதல்ல இந்த காபிய கட் பண்ணனும்...
ஏன் அப்டி டவுட்டா பாக்கறீங்க...?!! நம்ப முடியலல்ல... தெரியும்...
மொதல்ல டாக்டரும் நம்பல...
" ரெண்டு வெள்ளை முடியா..?! உனக்கானு.?!" அதிர்ச்சியா தான் கேட்டாரு...
என் ப்ரெண்ட் பிரதீப் ICICI Bank-ல மேனேஜரா இருக்கான்...
அவனை இன்னிக்கு தியேட்டர் வாசல்ல பாத்தேன்...
" என்னா மச்சி பேங்க்குக்கு போகாம இங்க சுத்திட்டு இருக்கே...?! "
" 2 நாள் பேங்க் லீவ்ல... "
" வாட்...?!!! ரெண்டு நாள் லீவா....?! எதுக்கு...?! "
" இன்னிக்கு 4th Saturday.., நாளைக்கு Sunday... அதான்... "
" எல்லைல இருக்கற ராணுவ வீரர்கள் எல்லாம்.... "
" போங்கடா... நானும் வேலைய ரிசைன் பண்ணிட்டு ராணுவத்துலயே சேர்த்துக்கறேன்... "
" மச்சி... நில்லு மச்சி... "
கோச்சிட்டு வேகமா போயிட்டான்...
நாட்டுக்கு ஒரு ராணுவ வீரனை Increase பண்ணியிருக்கேனு நெனைக்கும் போது எனக்கு பெருமையா இருக்கு...!!
இன்னிக்கு மதியம் என் பையன் ஸ்கூல்ல இருந்து போன் வந்தது...
" ஹலோ நாங்க ஸ்கூல்ல இருந்து பேசறோம்.. "
" சொல்லுங்க மேடம்.. "
" சூர்யாவோட ஃபாதரா..? "
" ஆமா.. "
" நான் சூர்யாவோட கிளாஸ் மிஸ் பேசறேன்.. "
( என்னாது மிஸ்ஸா..!!! )
" மிஸ்., மிஸ் அவன் வேணும்னே பண்ணியிருக்க மாட்டான்.. கொஞ்சம் துருதுருனு இருப்பான்.. அவ்ளோ தான்.. "
" சார்.. சொல்றதை கேளுங்க.. "
" நீங்க ஒண்ணும் சொல்லவே வேணாம் மிஸ்.. இந்த ஒரு தடவை மட்டும் எக்ஸ்யூஸ் பண்ணிக்குங்க.. நான் அவனை கண்டிச்சு வெக்கிறேன்.. "
" அப்டி எல்லாம்... "
" இல்ல மிஸ்... நீங்க முடியாதுனு சொல்லக்கூடாது.. பெரிய மனசு பண்ணி மன்னிச்சி விட்டுடுங்க.. "
" சார்... நீங்க கொஞ்சம் பெரிய மனசு பண்ணி நான் சொல்றதை கேக்கறீங்களா..? "
" சரி சரி சொல்லுங்க... "
" நாளைக்கு சூர்யாவை காலைல 7 மணிக்கு ஸ்கூல்ல கொண்டு வந்து விடணும்.. ஃபீல்ட் டிரிப் போறோம்.. "
( அவ்ளோ தானா..?! )
" ஓ.கே., மிஸ்..!! "
இதுக்கெல்லாமா ஸ்கூல்ல போன் பண்ணுவாங்க....?!!
நானல்லாம் படிக்கிற காலத்துல எங்க மிஸ் எங்கப்பாவுக்கு போன் பண்ணினா...
சரி சரி.. அதெல்லாம் இப்ப எதுக்கு...?!! லூஸ்ல விடுங்க...