Friday, February 24, 2017

டீசர்ட் எடுக்கலாம்னு கடைக்கு போனேன்....
அங்க என் ப்ரெண்ட் ஆனந்த் இருந்தான்...
" மச்சி... என்ன துணிக்கடையில சுத்திட்டு இருக்க..? "
" வர்ற புதன்கிழமை எங்க Anniversary... அன்னிக்கு மேட்சிங்கா டிரஸ் பண்ணனுமாம்ல... "
" ஓஹோ... "
" வீட்ல வித்யாகிட்ட பச்சை கலர்ல ஒரு புது சேலை இருக்கு.. அதனால எனக்கு பச்சை கலர்ல சர்ட் எடுக்க கூட்டிட்டு வந்திருக்கா... "
" பார்ரா.... நீ கலக்கு மச்சி "னு சொல்லிட்டு நான் டீசர்ட் பாக்க போயிட்டேன்....
எடுத்துட்டு பில் பண்ண வந்தா.. பில் செக்சன்ல ஆனந்தும், வித்யாவும்...
" என்னா மச்சி... பச்சை சட்டை வாங்கிட்டியா..?! "
" ம்ஹூம்.. ப்ளூ கலர் சேலை தான் வாங்கியிருக்கா.. "
நான் டக்னு வித்யாவ பாத்து கேட்டேன்....
" அப்ப மேட்சிங்கு...?!! "
வித்யா சிரிச்சிட்டே சொல்லிச்சு...
" இவர்கிட்ட வீட்ல ப்ளூ கலர்ல ஒரு புது சட்டை போடாம அப்டியே இருக்குண்ணா... "
( ஆஹா.... என்னா டிரிக்ஸா வேலை பாக்கறாங்கடா... )
ஆனந்த் என் காதுகிட்ட வந்து சொன்னான்....
" அது கேவலமா இருக்குனு தான்டா போடாம வெச்சி இருக்கேன்... "
# மேட்சிங் மேட்சிங்... ஹி., ஹி., ஹி..!!

Thursday, February 23, 2017

எங்க பசங்க சீல்டு, கப்கள் வெச்சி இருக்கற ஷெல்ப்ல நான் வாங்கின 3 கப்பும் இருக்கு...
பின்ன காலேஜ்ல ஐய்யா பெரிய பேச்சாளர்ல....
ஒரு நாள் என் சின்ன பையன் கோகுல் அவங்க அம்மாகி்ட்ட கேட்டான்...
" அந்த 3 கப் யார் வாங்கினதும்மா...?! "
" உங்க அப்பா வாங்கினது... "
" காசு குடுத்து வாங்கினாரா..?! "
" சே... சே.. அவர் காலேஜ்ல பெரிய ஸ்பீக்கராம்... "
" நிஜமாவா மா..?! "
" இதுல என்னடா டவுட்டு... இப்பவும் அவரு டெய்லி எப்டி கத்தராரு பாத்தேல்ல.. "
# என்னாது..... ஸ்பீக்கர்னா... கத்தறதா..?! அவ்வ்வ்வ்...!!!

Wednesday, February 22, 2017

" வேணாம் என் பவர் தெரியாம என்கிட்ட விளையாடறே..?! "
" ஓஹோ.. எங்கே என் செல்போனுக்கு உன் பவரை யூஸ் பண்ணி சார்ஜ் பண்ணு பாக்கலாம்.. தெரிஞ்சிக்கறேன்... "

Tuesday, February 21, 2017

ஆதி யோகி - மீம்ஸ்


டின்னர் டைம்....
என் Wife சிக்கன் குழம்பு, சாதம், மிளகு ரசம் செஞ்சிருந்தாங்க...
சாப்பிட ஒக்கந்தோம்...
அப்ப என் Wife...
" குழம்புல உப்பு இருக்கான்னு பாருங்க மாமா.. "
நான் எட்டி பார்த்துட்டு....
" இருக்கற மாறி தெரியலியே... "
( ஹி., ஹி., காமெடி காமெடி... )
" அட சரியா பார்த்துட்டு சொல்லுங்க... "
ஆஹா என்னடா இது தமிழனுக்கு வந்த சோதனைனு என் கண்ணாடி எடுத்து போட்டுக்கிட்டு நல்ல எட்டி பார்த்துட்டு மறுபடியும் சொன்னேன்....
" உப்பு இருக்கற மாறி தெரியல நிர்மலா..... "
கொஞ்ச நேரத்துல சுட சுட சாதம்., கோழி குழம்பும் வந்துச்சு...
நீ கலக்கு வெங்கினு நெனச்சிட்டு சாப்பாட்டை வாயில வச்சா....
உவ்வே.... உப்பே உப்பு...
ஊ.... ஊ.... ஊத்திக்கிச்சா...?!!
# சிக்கன் குழம்புல எல்லாம் காமெடி பண்ணக்கூடாதுனு தெரிஞ்சிக்கிட்ட நாள் இன்று....!!!

Monday, February 20, 2017

" ஹெல்மெட் இல்லாம போனதுக்கு ஒரு டிராபிக் போலீஸ்கார் என்னை மடக்கி 100 ரூபா ஃபைன் போட்டாரு மச்சி.. "
" நீ என்ன பண்ணினே...?! "
நான் அவர் கண்ணை டெரர்ரா உத்து பாத்து...
" சார்... நான் யார்னு உங்களுக்கு தெரியலைனு நெனக்கிறேனு " சொன்னேன்...
" மச்சி... நிஜமாவா சொல்ற.? "
" ம்ம்ம்... அவர் கண்ணுல அப்ப லைட்டா ஒரு மிரட்சி தெரிஞ்சது..? குழப்பமா பாத்தாரு.. "
" அட... "
" நான் தான் சார் பிரபல ஃபேஸ்புக் போராளி கோகுலத்தில் சூரியன் வெங்கட்னு சொன்னேன்.. "
" அப்புறம்..? "
" அப்புறம் என்ன.. அதான் சொன்னேனே... 100 ரூபா ஃபைன் போட்டாருனு.. "
" அது நீ சொல்றதுக்கு முன்னாடி தானே போட்டாரு..?! "
" ஹி., ஹி., ஹி... சொன்னப்புறம் தான் போட்டாரு... "

Friday, February 17, 2017

" தல நீங்க ஏன் புக் எழுதக் கூடாது..?! "
" அது சிம்பிள் மேட்டரு... ஆனா அத எங்க ஒளிச்சி வெக்கறது அதான் பிரச்னை..?! "
" ஓ... நீங்க எழுதறத வேற யாராவது திருடிட்டு போயி அவங்க பேர்ல புக்கா போட்டுடுவாங்கனு பயப்படறீங்க அதானே..?! "
" ஆங்... அப்டி தான்... அப்டி தான்..!! "
# இன்னுமா இந்த ஊரு நம்பள நம்புது...?!