Friday, June 30, 2017

என் தம்பி பையனுக்கு இப்ப ரெண்டே முக்கால் வயசு..
ரொம்ப குறும்பு பண்றான்.. அதனால ப்ளே ஸ்கூல்ல கொண்டு போயி விடலாம்னு வீட்ல டிஸ்கஸன்..
எங்க ஊர்ல 3 ப்ளே ஸ்கூல்ஸ் இருக்கு.. சரினு பொடியனை கூட்டிட்டு ஒரு விசிட் போனேன்...
1st School-ல வருஷத்துக்கு 10,000 கேட்டாங்க...
2-வதுல 12,000..
3-வது ஸ்கூல் போனோமா... அங்கே...
" ஐ மாலாக்கா..!! "
( ஹி., ஹி.. ஹி.. மாலாக்கா மாதிரியே ஒரு மிஸ் இருந்தாங்க.. )
ஆனா பீஸூ 25,000... யம்மோ...
என் தம்பிகிட்ட வந்து சொன்னேன்... 1st ஸ்கூல் ஓ.கேனு சொல்லிட்டான்...
1st ஸ்கூலாஆஆஆ...?!!
உடனே அவனுக்கு ஒரு ஆஃபர் குடுத்தேன்...
" 3-வது ஸ்கூல்ல சேக்கலாம்.. டெய்லி பையனை நானே கொண்டு போயி விட்டுட்டு, கூட்டிட்டு வர்றேன்.. "
அப்பவும் நோ சொல்லிட்டான்.... சே...!!!
பின்ன அதிகமா பீஸ் வாங்கற ஸ்கூல் தானே பெஸ்ட் ஸ்கூலா இருக்க முடியும்..!!
அதான் மறுபடியும் இன்னொரு ஆஃபர் குடுக்கலாமானு திங்கிங்...
என்ன ஆஃபரா..?!!
" முழு பீஸையும் நானே கட்டிட்டா...?! "
நமக்கு பையன் படிப்பு தானே முக்கியம்.. என்ன நான் சொல்றது..?!

Sunday, June 25, 2017

இந்த கன்றாவி " பிக் பாஸ் " பாக்க பிடிக்கலைன்னா டிவியை ஆஃப் பண்ணி வெச்சா மட்டும் போதாது...
கூடவே ஃபேஸ்புக் அக்கவுண்டையும் டீஆக்டிவேட் பண்ணி வெச்சிடணும்....
முடியலடா.... விட்டுடுங்கடா...
#BigBoss அலப்பரைஸ்...!!

Saturday, June 24, 2017

Smule App டவுன்லோடிட்டேன்...
சரி ஒரு பாட்டு பாடலாம்னு தேடினப்ப..
" காட்டுக்குயிலு மனசுக்குள்ள.... " பாட்டு கண்ணுல பட்டது...
இத SPB வாய்ஸ்ல பாடலாமா..? ஜேசுதாஸ் வாய்ஸ்ல பாடலாமானு யோசிச்சிட்டு இருந்தேன்..
அத பாத்துட்டு மங்கு...
" என்னா மச்சி பண்ணிட்டு இருக்கே...?! "
" காட்டுக்குயிலு சாங்... எந்த வாய்ஸ்ல பாடலாம்னு திங்க் பண்ணிட்டு இருக்கேன்.. "
" நீ எந்த வாய்ஸ்ல பாடினாலும் அது காட்டெரும வாய்ஸ்ல தான் கேக்க போவுது... பாடி தொலை... "
" அடேய்... என்னை பத்தி தெரியாம பேசாதே..."
" எங்கே சொல்லு.. அதையும் தெரிஞ்சிக்கறேன்... "
" என் ப்ளட் குரூப்பே ABS பாஸிடீவ் டா வெண்ணை... "
" என்னா மச்சி எதோ ABT பார்சல் சர்வீீஸ் மாதிரி சொல்றே...?! AB பாஸிடீவ் தெரியும்.. அதென்ன ABS பாஸிடீவ்.?! S-னா....?! "
" ஹி., ஹி., ஹி.. S-னா சங்கீதம்... சங்கீதம் என் ப்ளட்லயே கலந்து இருக்கு மச்சி..!! "
துப்பிட்டு போயிட்டான்... ஞான சூனியம்...!!!
#லா லா லா... லா... லா லா லா...!

Friday, June 23, 2017


" வெங்கி.. உங்களுக்கு அர்விந்த்சாமி புடிக்குமா..? "
" புடிக்காது..!! "
" ஏன்.. ஏன்..?! "
" ம்ம்ம்... எல்லா ஒரு ஈகோ ப்ராளம் தான்.. "
" இதெல்லாம் உங்களுக்கே ஓவரா தெரியல... "
( கொஞ்சம் ஓவரா தான் போறோமோ..?! போவோம்... போவோம்...!! )
" ஒரு விஷயம் சொல்லவா.. 'தனி ஒருவன்' படத்துல மொதல்ல என்னை தான் கேட்டாங்க... "
" ம்ம்ம்.. அப்புறம்..?! "
" அப்புறம் என்ன நான் பிஸினு சொன்னதால கேரக்டர் கை மாறி போச்சு.. "
" ஓ... நீங்க வரலைனு சொன்னதால தான் தம்பி ராமையாவ புக் பண்ணினாங்களா..?! "
" தம்பி ராமையாவா..?! ஙே...!! "
#வெசம்... வெசம்.. அம்புட்டும் வெசம்...!!

Wednesday, June 21, 2017


" பெரிய ஸ்ரேயா கோஷல் ஃபேனு சொல்றீங்களே.. எங்க அவங்க பாடுன ஒரு பாட்டு சொல்லுங்க பாக்கலாம்... "
" ஊரு சனம் தூங்கிடுச்சு.. ஊத காத்தும் அடிச்சிடுச்சு... "
" அய்யே... இது ஜானகி பாடுனது... "
" ஹேய்... நான் பாத்தப்ப.. அந்த புள்ள மேடையில இந்த பாட்டு தான் பாடிட்டு இருந்துச்சு... "

Tuesday, June 20, 2017

பழைய போன் ஸ்லோவா இருக்குன்னு புது போன் வாங்க வேண்டியது...
அதுல பழைய போன்ல இருக்குற எல்லா Apps -ம் இன்ஸ்டால் பண்ணிட்டு...
ஐய்யோ... புது போனும் ஸ்லோவா இருக்கேனு பொலம்ப வேண்டியது...
திருந்துங்கடா டேய்....
#புது போன் அலப்பரைஸ்...

Monday, June 19, 2017

இன்னிக்கு என் காலேஜ்மேட் ரேணுகாவுக்கு பர்த்டே.. நோட்டிபிகேசன் வந்தது...
பாத்ததும் திக்னு ஆகிடுச்சு....
32 Years old-னு போட்டு இருக்கு...
அடப்பாவி...!!!
உடனே போன்ல கூப்பிட்டு...
" என்னாதிது.. ஃபேஸ்புக்ல வயசு 32-னு காட்டுது.. "
" ஹி., ஹி., ஹி... "
" சிரிக்காதே...! "
" சரி.. அதுல உனக்கென்ன பிரச்னை..?! "
" பின்ன.. நீ என் காலேஜ்மேட்னு இங்க பல பேருக்கு தெரியும்ல... "
" அதுக்கு..?! "
" நீ இப்டி உன் வயசு 32-னு போட்டா.. அப்புறம் என் உண்மையான வயசு.. 26-ஐ சொன்னா.. எவன் நம்புவான்..?! "
" 26-ஆ...?! அடிங்ங்ங்... "