Sunday, March 23, 2014


சில சமயம் நான் ஆபீஸ் கிளம்பறப்ப..
என் Wife என் கையில " I Love You " னு
எழுதி விட்டுட்டு..

" நைட் வரைக்கும் இதை நீங்க அழிக்காம
இருந்தாதான் உங்களுக்கு என் மேல 
அன்பு இருக்குனு அர்த்தம்னு... "
செக் வெச்சி விட்டுடுவா..

( இவங்க பண்ற அக்கப்போரு இருக்கே..!! )

சரினு சொல்லிட்டு நாமளும் ஆபீஸ்ல
போயி ஒளிஞ்சிகிட்டே திரிய வேண்டி இருக்கு....

தப்பி தவறி எவனாவது பாத்துட்டா..
லூசுப்பயல பார்க்கற மாதிரியே
பார்க்கறானுங்க..

அதான் நான் இன்னிக்கு அவ கையை
பிடிச்சி.., இப்படி எழுதி...

" ஒரு வாரத்துக்கு அழியாம பாத்துக்கோ
போன்னு.. " தொரத்தி விட்டுட்டேன்..

 

டிஸ்கி : சத்தியமா இது என் Wife கை தான்...
குடும்பத்துல கும்மி அடிக்க யாரும் டிரை
பண்ணக்கூடாது...

எங்க வீட்ல எப்பவும் பூரி சுடணும்னா... 
ஒரு நாள் முன்னாடியே சொல்லணும்.. 

*
*
*
*
*
*
*
*
*
*
*
*

# ஹி., ஹி., ஹி.. அப்ப தான் பூரிகட்டையை
நான் பேங்க் லாக்கர்ல இருந்து எடுத்துட்டு
வந்து தருவேன்..

டைரக்டர் விசுகிட்ட தயாரிப்பாளர்... 

" என்ன சார் இது பாதி படத்துக்கு தான் 
டயலாக் எழுதி இருக்கீங்க.. அதுக்குள்ள 
சூட்டிங் போலாம்னு சொல்றீங்க... "

" முழு படத்துக்குமே இதான் சார் டயலாக்.. "

" புரியலையே..!!!??? "

" அதாவது 1st Half-ல என் பையனா நடிக்கறவரு
இந்த டயலாக்கை எல்லாம் என்னை பாத்து
பேசுவாரா... அப்புறம் இதே டயலாக்கை 2nd Half-ல
நான் அவரை பாத்து பேசுவேனா.. படம் முடிஞ்சிடும் "

# மிஸ்டர் அம்மையப்பன்..

இன்னிக்கு மதியம் என் wife-வும்., 
அவங்க ப்ரண்ட் சுதாவும் போன்ல... 

" நிம்மி.. அண்ணா ( நான் தான் ) இப்பவும் 
10 வருஷம் முன்னாடி பாத்த மாதிரியே 
இருக்காரு...!! மாறவே இல்ல... " 

" ஆமா மெச்சூரிட்டியும் 10 வருஷம் முன்னாடி
இருந்த மாதிரியே தான் இருக்கு.. வளரவே
இல்ல..!!! "

# சே... எனக்கு எதிரி வெளில இல்லடா...!!

டக்வெர்த் லீவீஸ் மெதெட் - PS


On the way to Pondy :

@ திருவண்ணாமலை..

அம்மன் சன்னதில தரிசனம் பாத்துட்டு 
நகரும் போது அங்கே இருந்த குருக்கள் 
என்னை பாத்து... 

" கொஞ்சம் Wait பண்ணுங்கோ.. இப்ப 
தீபாராதனை காட்டுவா.. பாத்துட்டு 
போங்கோனு " என்னை மட்டும் ஓரமா 
நிக்க வெச்சிட்டார்...

எனக்கு உடனே கன நேரத்தில் உதித்த சிந்தனை..!!!

" ஒருவேளை இந்த குருக்கள் நம்ம ப்ளாக் ரசிகரா 

இருப்பாரோ..?! "
இந்த ஸ்கூல் ஆண்டு விழாவுக்கு வர்ற Chief Guest-ங்க 
என்னிக்கு கம்மியா பேசறானுங்களோ.. அன்னிக்கு தான் 
இந்தியா வல்லரசாகும்... 

ஆங்....!!!

===============================================

இனிமே ஸ்கூல் ஆண்டுவிழாவுக்கு Chief Guest -ஆ 
யாரையாவது கூப்பிட்டீங்கன்னா... மைக்கை குடுத்து 
ஒரு ரூம்ல விட்டு பூட்டுங்கடா... பேசிண்டே கெடக்கட்டும்... 
# மிடில...