Sunday, February 9, 2014



அட ஒரு கேட்சதான் விட்டுட்டானுங்கன்னா... 
அடுத்தடுத்து மூனு கேட்சை விட்டுடாணுவளே.. 
தத்திங்க.. 

மூனு கேட்சா..?! நீ எதை சொல்ற..?? 

அதான் இப்ப மூனு கேட்ச் Slow Motion-ல
வந்திச்சில்ல...

அடேய்... அது Action Replay-டா...

இருக்கட்டுமே... பந்து எவ்ளோ ஸ்லோவா
வந்துச்சு.. பிடிக்க வேணாமா..!!

ஐயோ ராமா.. என்னை ஏன் இந்த மாதிரி
லூசு பசங்க கூட எல்லாம் கூட்டு சேர வெக்கிற..?!!!

# வாட்சிங் கிரிக்கெட் வித் மங்குனி அமைச்சர்


நேத்து சாயந்திரம் 6 மணிக்கு
என் Wife-க்கு போன் பண்ணினேன்..

" நிர்மலா... இன்னிக்கு நான் வர
கொஞ்சம் லேட் ஆகும்.! "

" ஏங்க...? "

" சினிமாவுக்கு போலாம்னு பார்க்கறேன்..! "

" எந்த படத்துக்கு..?!! "

" தமன்னா படத்துக்கு...!! "

" எதாவது தெலுங்கு டப்பிங் ரிலீஸ்
ஆகியிருக்கா.....!!? "

" ஹி., ஹி., ஹி... இல்ல அஜித் கூட
ஜோடியா நடிச்சி இருக்கார்ல.. அந்த படம் "

# வீரம்

Wife வெள்ளி கொலுசு கேட்டாங்களா..?!! 
நம்மகிட்ட பணம் கொஞ்சம் டைட்டா... 

டக்னு எடுத்து விட்டோம்ல.... 

" தங்கசிலைக்கு எதுக்கு செல்லம் 
வெள்ளி கொலுசு..?!! "

# பொண்டாட்டிக்கு ஐஸ் பாடம் - 2

( " தங்ககொலுசு கூட இருக்குதாம்ங்க"னு
அவங்க சொன்னது இங்கே அவுட் ஆப் சிலபஸ் )

இமேஜ் மெயிண்டெய்ன் டிப்ஸ்



நம்ம இமேஜை பாதிக்குற விஷயத்துல 
முதல்ல இருக்கறது மிஸ்டு கால் தான்.. 

அதனால யாருக்கா இருந்தாலும்
மிஸ்டு கால் மட்டும் குடுக்காதீங்க..

ஏன்னா நமக்கு இமேஜ் தான் முக்கியம்
இல்லியா.. அதனால நீங்களே போன் பண்ணி
பேசுங்க...

10 செகண்ட் ஆனதும்... Call-ஐ நீங்களே
கட் பண்ணிட்டு Wait பண்ணுங்க....

அவங்க கூப்பிடுவாங்க...

இப்ப இன்கம்மிங்லயும் பேசிக்கலாம்..,
இமேஜும் பாதிக்காது..

எப்புடி..?!!
ஹி., ஹி., ஹி...