Monday, May 30, 2016

5 நிமிடத்தில் டெல்லியை தாக்க - மீம்ஸ்
இன்னிக்கு என் ப்ரெண்ட் அருண் Other Bank ATM-ல 
பணம் எடுக்க போயி இருக்கான்..
கார்ட் Insert பண்ணி 500 ரூபா என்டர் பண்ணி இருக்கான்..
மெஷின் ரிப்பேர் போல... பணம் வரல... 
சரினு வந்துட்டான்...
இப்ப நைட் அவன் அக்கவுண்ட்ல 500 ரூபா 
டெபிட் ஆகிடுச்சினு மெசேஜ் வந்திருக்குனு 
போன்ல சொன்னான்..
" நாளைக்கு பேங்க்ல போயி கேளு.. "
" ம்க்கும்.. இதுக்காக அரை நாள் ஆபீஸ்க்கு லீவ் 
போட்டுட்டு அலையணும்.. "
" அதுக்கு...?!! 500 ரூபாடா.. "
" ஆமா.. என்ன பண்றது..? வண்டிக்கு 5 லிட்டர் 
பெட்ரோல் அடிச்ச மாதிரி நெனச்சிக்கிறேன் விடு.. "
" ஹி,ஹி,ஹி.. மச்சி அப்டியே.. வண்டிக்கு 10 லிட்டர் 
பெட்ரோல் அடிச்ச மாதிரி நெனச்சிட்டு என் நம்பர்க்கு 
ஒரு 500 ரூபா ரீசார்ஜ் பண்ணிவிடேன்... "
" அடிங் கொய்யாலே....!!! "
மதியம் அசதியா இருக்கேனு தூங்கிட்டு இருந்தேன்...
அப்ப என் மொபைல் ரிங் ஆச்சு.. என் ப்ரெண்ட் ஆனந்த்...
இந்த நாய்க்கு நேரம் காலமே தெரியாது..
போனை எடுத்து...
"மச்சி... நான் தூங்கிட்டு இருக்கேன்.. நீ அப்புறமா 
முழிச்சிட்டு இருக்கும்போது கால் பண்ணு.."
"அப்ப தான் நீ சாப்பிட்டுட்டு இருக்கியே..."
"சரி சாப்பிட்டு முடிச்சப்புறம் பண்ணுடா.."
"அப்ப தான் நீ தூங்கிட்டு இருக்கியே..."
# டேய்ய்ய்ய்ய்....!!!!

Sunday, May 29, 2016

IPL 2016 - மீம்ஸ்
சன்டேனா.. நான் அத சாப்பிட்டேன், இத சாப்பிட்டேனு 
FB-ல போட்டு பெருமை அடிக்கணுமா என்ன.?

என்னய எல்லாம் பாத்து திருந்துங்கடே..

நான் கூட தான் இன்னிக்கு மட்டன் பிரியாணி சாப்டேன்... 
அத எல்லாம் வெளில சொல்லி்ட்டா இருக்கேன்...?!!


'நான் ஏர்டெல்ல இருந்து வோடபோனுக்கு மாறிட்டேன்'னு 
என் ப்ரெண்ட் ஜெகனுக்கு மெசேஜ் அனுப்பினா...

'ஒரு சாதா நாய்.. இப்ப வோடபோன் நாயா மாறிடுச்சி'ன்னு 
ரிப்ளை அனுப்பறான்...

# லொள்.. லொள்...!!!

என் ப்ரெண்ட் மெடிக்கல் ஸ்டோர் போனேன்... போயி...
" டேய் சுரேஷ்... நகரு நகரு... "
நான் தேட ஆரம்பிச்சேன்...
அத பாத்த என் ப்ரெண்ட் சுரேஷ்..
" என்னடா தேடுற..?! "
" இங்கே எலும்புக்கூடு படம் போட்டு விஷம்னு எழுதியிருக்குமே.. 
அந்த பாட்டில் எங்கே..?! "
" என்னடா ஆச்சு..?! "
" நீங்களும், மங்குவும் ஒரே ஆள் தானேனு கேக்கறாங்க.. "
" அதுக்கு...?! "
" இந்தா கெடைச்சிடுச்சில்ல பாட்டிலு... "
" டேய்.., டேய்... அவசரப்பட்டு குடிச்சி தொலைச்சிடாதேடா.. "
" அடச்சே... இது எனக்கில்லடா... மங்குவுக்கு... "
# ஹா, ஹா, ஹா ( வில்லன் சிரிப்பு )
MCA 3rd Year...
மைக்ரோபிராசசர் பிராக்டிகல்ஸ்...
மைக்ரோபிராசசரை பொருத்த வரை எல்லா 
Coding-ம் எனக்கு தலைகீழா தெரியும்..
( அப்ப நேரா தெரியாதானு அபத்தமா
கேக்க கூடாது...!! அப்புறம் நான் உண்மைய
உளறிடுவேன்... )
அன்னிக்கு பிராக்டிகல்ஸ் ஒரு சின்ன மோட்டாரை
Clockwise-ல சுத்த வெக்கணும்.
முதல்ல பேப்பர்ல Coding-ஐ எழுதணும்.
அப்புறம் அதை அந்த Micro Processor Kid-ல
இன்புட் பண்ணினா.. மோட்டர் சுத்தும்..
நானும் கோடிங் எழுதி., Input பண்ணி பார்க்குறேன்..
அந்த கருமாந்திரம் புடிச்ச மோட்டர் கடைசி வரை சுத்தவே இல்ல..
பக்கத்துல பாத்தா... என் பிரண்டு விமல்
மோட்டர் சுத்திட்டு இருந்தது...
எனக்கு தலை சுத்த ஆரம்பிச்சிடுச்சு..
( " ஓ.. மை காட்..! இவன் பாஸ் ஆகிடுவான்
போல இருக்கே..?! " )
" டேய்.. விமல்.. என் மோட்டர் சுத்தலைடா..
Coding-ல எதாவது மிஸ்டேக் இருக்கான்னு
செக் பண்றானு.. " என் பேப்பரை லைட்டா
அவனுக்கு காட்டினேன்..
அவனும் பாத்துட்டு...
" 17வது லைனும்., 18வது லைனும் இடம் மாறி
இருக்கு.. மாத்தி எழுதி, Input பண்ணுனு.." சொன்னான்...
ஓஹோ.. டக்னு மாத்தி Input செஞ்சேன்..
வாவ்.. மோட்டர் சுத்திடிச்சி...!!
உடனே அத HOD-கிட்ட காட்டி.. ஓ.கே வாங்கிட்டேன்..
இப்ப பேப்பர்ல Coding-ஐ திருத்தி எழுதணும்..
ஒரு அடித்தல் திருத்தல் இல்லாம எழுதி
இருக்கோம்.. இதை., திருத்தி பேப்பர் அழகை
கெடுக்கணுமானு யோசிச்சேன்..
அப்ப தான் எனக்கு கனநேரத்தில் உதிச்சது
ஒரு சிந்தனை ...
( இந்த கோடிங்கை எழுதறதே இவ்ளோ
கஷ்டமா இருக்கே..
அப்ப இது கரெக்ட்டானு செக் பண்றது
எவ்ளோ கஷ்டமா இருக்கும்..?!! )
பேப்பரை அப்படியே கட்டி குடுத்துட்டு வந்துட்டேன்..
ரிசல்ட வந்தது...
எங்க க்ளாஸ்லயே நான் மட்டும் தான் சென்டம்..
ஹி., ஹி., ஹி...!!!
இதை கேட்டதும் விமல் ஷாக் ஆகிட்டான்...
" டேய்... எங்க எல்லோர் மோட்டரும் தானே
சுத்திச்சு.. நீ மட்டும் எப்டிடா சென்டம்..? "
" ஹி., ஹி., ஹி... நீங்கல்லாம் மோட்டரை மட்டும்
தான்டா சுத்துனீங்க.. நான் எக்ஸ்ட்ராவா HOD காதுல 
பூவும்ல சுத்தினேன்..!! "

டிஸ்கி : எல்லா பக்கிங்களும் பேப்பர்ல கோடிங்க் 
அடிச்சி, திருத்தி எழுதி இருந்தானுங்களாம்..!!

Saturday, May 28, 2016

போன வாரம் மங்கு (Shajahan S) போன் பண்ணியிருந்தான்..
" மச்சி.. இந்த கிரண் யாரு..? "
" எந்த கிரண்..? "
" அதான் உன் ப்ரெண்ட் லிஸ்ட்ல இருக்கே.. "
" ஓ.. அது என் ப்ரெண்ட் தான்.. ஏன்..? "
" ப்ரெண்ட்னா..? எப்டி கொஞ்சம் தெளிவா சொல்லு.. "
" ஃபேஸ்புக் ப்ரெண்ட்.. என் போஸ்ட்க்கு ரெகுலரா லைக் போடுவாப்ல.. "
" அட அதில்ல மச்சி.. அந்த கிரண் பொண்ணா..?
பையனா..? "
" பொண்ணுதான்.. எதுக்குடா கேக்கற..? "
" இதெல்லாம் பர்ஸ்டே கேட்டுகிட்டா டைம்
வேஸ்ட் ஆகாதுல்ல.. "
" என்னாது டைம் வேஸ்ட் ஆகாதா..? "
" ஹி., ஹி., ஹி.. ப்ரெண்ட் ரிக்வெஸ்ட் வந்து
இருக்கு.. அக்செப்ட் பண்றதுக்கு கேட்டேன்.. "
" உனக்கு தான் 5000 ப்ரெண்ட்ஸ் லிமிட்
வந்துடுச்சே.. அப்புறம் எப்டிடா புதுசா ப்ரெண்ட்ஸ்
சேர்ப்ப..? "
" யாரையாவது ஒருத்தரை தூக்கிட்டு சேர்க்க
வேண்டியது தான் மச்சி... "
" நடத்துடா... நீ நடத்து...!! "
இப்ப ஒரு வாரம் ஆச்சு...
அந்த பொண்ணு லைக்கையும் காணோம்..
இந்த பன்னாட போனையும் காணோம்..
என்னடா நடக்குதுனு... அந்த மங்கு பய Wall-ல
போயி பாத்தா...
அவன் ப்ரெண்ட் லிஸ்ட்ல.....
அந்த கிரண் புள்ள இருக்கு..
என்னைய காணோம்..!!
# அடேய்...!!!
பக்கத்துத் தெரு பையனுக்கு ஏகப்பட்ட 
எக்ஸாம் டிப்ஸ் குடுத்து விட்டேன்..
ஆளையே காணோம்...
ஒருவேளை 500க்கு 500 எடுத்துட்டு 
தலைகனத்துல திரியறானோ என்னவோ..?!

Thursday, May 26, 2016

இன்னிக்கு 'சுதா சிவம்'னு ஒரு ப்ரெண்ட் ரிக்வெஸ்ட்
வந்து இருந்தது..

ப்ரோபைல்ல ரோஜாப்பூ படம்..

ஒருவேளை Fake id-யா இருக்குமோனு யோசிச்சேன்..

சே சே இருக்காது.. Fake id-க்கு எல்லாம் ப்ரியா,
கவிதா, அனிதா, ரம்யான்னு தான் பேரு வெப்பாங்க..

சரினு அக்செப்ட் பண்ணிடேன்..

அடுத்து 2-வது நிமிஷம் 'தேங்க்ஸ் வெங்கட்'ன்னு
இன்பாக்ஸ் மெசேஜ்..!

(பார்ர்ரா...!!!!)

நானும் வெல்கம்ன்னு ரிப்ளை போட்டேன்..

"உங்க போஸ்ட் எல்லாம் சூப்பரா இருக்கு..
நீங்க சேலம் தானே..?"

"ஹி., ஹி., ஹி.. நன்றி.. ஆமா.. நீங்க..?"

"மதுரை.. டூ வீலர் மெக்கானிக்கா இருக்கேன்.."

(என்னாது.. இப்ப பொண்ணுங்க எல்லாம்
டூ வீலர் மெக்கானிக் ஆகிட்டாங்களா?
பேரை இன்னொரு தரம் படிச்சிப் பாத்தேன்...)

'சதா சிவம்'னு இருந்தது...!!Airtel-ல சிக்னல் பிராப்ளம்.. Vodafone-க்கு
மாறிடலாம்னு ஆபீஸ் போயிருந்தேன்..
டோக்கன் குடுத்து உக்கார வெச்சிட்டாங்க..
ஆபீஸ்ல.. மொத்தம் 7 டெஸ்க்..
அதுல 6 பசங்க.. ஒரே ஒரு பொண்ணு...
எந்த டெஸ்க் காலியாகுதோ.. டோக்கன் வரிசைபடி போகணும்..
அதிர்ஷ்டம் இருந்தா.. அந்த பொண்ணு தான்
என்னைய கூப்பிடும்னு மனசுல நெனச்சிக்கிட்டேன்...
சொன்ன மாதிரியே அந்த பொண்ணு தான் கூப்பிட்டிச்சு..
பார்ரா... என்னா அதிர்ஷ்டம் அந்த பொண்ணுக்கு..!!!
 
அட பக்கிகளா... ஜஸ்ட் 2 மார்க்ல டாக்டர் சீட் 
மிஸ் பண்ணினவன்டா நானு... 
.
.
.
.
.
.
.
.
.
.
( ஒண்ணுமே எழுதாத பேப்பர்ல 2 மார்க் எதுல 

இருந்து வந்துச்சினு தான் இப்ப வரைக்கும் 
யோசிச்சிட்டு இருக்கேன் )

Monday, May 23, 2016


கண்டிப்பா இந்த ஆராய்ச்சி பண்ணினது 
ஒரு ஜினியஸா தான் இருக்கோணும்...
அப்டியே.. அமெரிக்க எலக்ஷனுக்கும் 
திமுக தோத்ததுக்கும் எதாவது சம்பந்தம் 
இருக்கானு கண்டுபிடிங்க பாஸ்...

கமான் பாஸ்... உங்களால முடியும் பாஸ்... கமான்...!

Friday, May 20, 2016

நாசா சைன்டிஸ்ட்கிட்ட கேட்டாலே..
பதில் சொல்ல தடுமாறுற கேள்விய கூட
இங்க சர்வ சாதாரணமா ஸ்டேடசா போட்டு 
கேக்கறாங்க..

அதுக்கும் நாலு பேர் வந்து பதில் சொல்றானுங்க...

வாவ்.. வாவ்... ஃபேஸ்புக் ஃபுல் ஆஃப் ஜீனியஸ்...

எலெக்ஷன் மீம்ஸ்..

சொல்லிடுங்கடே... அப்டியே யார் யார்க்கு 
மந்திரி பதவினும் இப்பவே சொல்லிடுங்க...
நாளைக்கு வரைக்கும் நாங்க எதுக்கு 
வெயிட் பண்ணனும்...?

# நல்லா வாய்லயே வடை சுடறானுங்க..!!

Wednesday, May 18, 2016
Wife லீ்வுக்கு அம்மா வீட்டுக்கு போயி இருக்காங்க...
காலைல Wife-கிட்ட இருந்து போன்...
"என்னது.. வாட்ஸ்அப்ல Last seen நைட் 1:30 மணின்னு 
காட்டுது.. அவ்ளோ நேரம் தூங்காம என்ன பண்ணினீங்க?"
"நீ இல்லாம தூக்கமே வரலடா செல்லம்"ன்னு சொன்னேனா.
நம்பிட்டாங்க..!!
# பல ராசதந்திரங்களை கரைத்துக் குடித்திருக்கிறாயடா வெங்கி...!!
டக்வொர்த் லீவிஸ் வாத்தியாரா இருந்திருந்தால்....
" மழை வந்ததால எக்ஸாம் 3 மணி நேரத்துக்கு 
பதிலா 2.30 மணி நேரம் தான் நடக்கும்.. "
" சார்ர்ர்ர்ர்...! "
" கவலைபடாதீங்க.. 100 மார்க்குக்கு பதிலா 
75 மார்க்குக்கு தான் கொஸ்டின் பேப்பர் 
ரெடி பண்ணியிருக்கேன்...! "
" தாங்க் யூ சார்..! "
" ஆனா.. 85 மார்க் எடுத்தா தான் நீங்க பாஸ்...!!! "
# ஆஆஆஆ...!!
" டைரக்டர் சார்... இன்னிக்கு என்ன சார் சீன்..?! "
" ஹீரோவோட தங்கச்சியை காணாம போக 
சொல்லு.. இவங்க எல்லாம் தேடட்டும்.. "
" அவங்க போன வாரம் காணாம போயி.. 
நேத்து தான் சார் கெடைச்சாங்க.. "
" ஆமால்ல... சரி.. இன்னிக்கு ஹீரோவோட 
தம்பிய காணாம போக சொல்லு.. இவங்க தேடட்டும்.. "
" ரைட் சார்..!! "
# மெகா சீரியல் அலப்பரைஸ்...!!!


அனேகமா இந்த "டக்வொர்த் லீவீஸ்" கணக்கு போட 
தெரியாத ஒரு மக்கு பயலாதான் இருந்திருப்பான்னு 
அவதானிக்கிறேன்...

Tuesday, May 17, 2016

ஓட்டு பதிவு கம்மியா போச்சுனு எல்லோரும் 
ஓட்டு போடாத சென்னை மக்களை திட்றீங்களே... 
நியாயமா..?!!

அவங்க மேல என்னய்யா தப்பு..?

எலக்சன் கமிஷன் தான் " உங்களில் யார் அடுத்த முதல்வர்னு " 
போட்டி அறிவிச்சு..

SMS-ல ஓட்டு போட சொல்லிருக்கோணும்.. 
போட்டு இருப்பாங்கல்ல...!!

அத வுட்டுட்டு 50%, 60% னு பொலம்பிட்டு இருக்கீங்க...?!!
தம்பி... நான் +2 படிச்சப்ப...
டேய்... டேய்... ஓடாதடா... நில்லுடா... நில்லுடா..
ஓடிட்டான்டா...
இப்ப என்ன பண்றது..?!!
அதோ... அங்க ஒரு LKG பையன் வர்றான்... வரட்டும்...!!
நேத்து ஓட்டு போனப்ப ஒரு பய கேட்டான்...
" அண்ணே... நீங்க ஏன் சினிமால நடிக்கக் கூடாது..?! "
" அது.... அது.... ரஜினி, கமல் ரேஞ்ச்க்கு எல்லாம் 
எனக்கு நடிக்க வராதே.. "
" விட்டா ஜாக்கிசான் ரேஞ்சுக்கு ஃபீல் பண்ணுவீங்க 
போல... ராமராஜன் இடம் காலியா இருக்கேனு கேட்டேன்.. "

# டேய்.. ஏன்டா என்னை பாத்து அந்த கேள்விய கேட்டே..?!!
எப்பப் பாத்தாலும் மறுபடியும் ஒரு தடவை 
பள்ளி செல்ல வேண்டும், அந்த மரங்களைப் 
பார்க்க வேண்டும்னு ஃபேஸ்புக்ல மொக்கை 
போட வேண்டியது...

எலெக்சன் அன்னிக்கு ஸ்கூல்ல வந்து வோட்டு 
போடுங்கடான்னா வீட்டுல படுத்துத் தூங்கிட 
வேண்டியது..

ஃபேஸ்புக்ல ஸ்டேடஸ் போட்டே...
டிவிட்டர்ல ட்வீட் போட்டே...
வாட்ஸ்அப்ல மெசேஜ் போட்டே...
எலக்ஷன்ல வோட்டு போட்டியா..
சென்னை பீப்பிள்..?!
சென்னைய பிரிச்சு தனி ஸ்டேட்டாக்கிட்டு.., 
மத்த மாவட்டத்துக்கு எல்லாம் தேர்தல் நடத்தினா...

வருங்காலத்துல ‪#‎TN100Percent‬ சாத்தியம் தான்..!!
என் தங்கச்சி ஓட்டு போட போகாம தூங்கிட்டு இருந்தது...
" ஏய்.. எந்திரி... ஓட்டு போட போ.. "
" நீ மொதல்ல போயி கூட்டம் எப்டி இருக்குனு பாத்துட்டு 
போன் பண்ணு.. நான் வர்றேன்... "
பூத்துக்கு போனா.. அஞ்சு பேர் தான் லைன்ல நின்னுட்டு 
இருந்தாங்க..
உடனே போன் அடிச்சேன்...
" இங்க யாருமே இல்ல.. சீக்கிரம் கெளம்பி வா.. "
அரை மணி நேரமாச்சு.. இன்னும் ஆள காணோம்..
மறுபடியும் போனை போட்டேன்..
" ஏய்.. இன்னுமா நீ கெளம்பல..?! "
" நீதான் பூத்ல யாருமே இல்லனு சொன்னியே.. 
ஆபீசர்ஸ் வரட்டும்னு வெயிட் பண்ணிட்டு இருக்கேன்... "
# கிர்ர்ர்ர்...!!
" எத்தனை பர்சன்ட் ஓட்டு பதிவாகும்னு நெனக்கிறே..?! "
" எப்படியும் 105% -ஆகும்.. "
" 105%-ஆ எப்டிரா..?! "
" பின்ன ஃபேஸ்புக்ல மூச்சு விடாம போராடி 
அம்புட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தியிருக்கோம்ல..."

ஆங்.... என்ன இது தலயோட வலது கையில மை 
வெச்சிருக்கு...? எனக்கு இடது கையிலல்ல வெச்சாங்க...
ஆபீசர்ஸ்..,
இது போங்கு ஆட்டம்.. நான் ஒத்துக்க மாட்டேன்...
என் கையில இருக்குற மையை அழிங்க... 
நான் பர்ஸ்ட் இருந்து ஓட்டு போடறேன்..
tongue emoticon tongue emoticon

லக்கானி - மீம்ஸ்


" ஹலோ... என்ன பண்ணிட்டு இருக்கீங்க..?! "
" தூங்கிட்டு இருக்கேன்.. "
" தூக்கமா..? இந்நேரத்துலா.?! "
" ஆமா... முழிச்சிட்டு இருந்தா.. ஒரே ஸ்டேடஸா
தோணிட்டே இருக்கு.. அதான்.. "
# முத்திடுச்சோ..!!!
இன்னிக்கு ஒரு பொண்ணு ஐடில இருந்து
ரிக்வெஸ்ட் வந்தது...
போயி பாத்தா...
அதுல மியூட்சுவல் ப்ரெண்ட் லிஸ்ட்ல
மங்கு (Shajahan S) பேரை காணோம்..
என்னடா இது உலக அதிசயமா இருக்கேனு
நெனச்சிட்டே அக்சப்ட் பண்ணிட்டேன்..
கொஞ்சம் நேரத்துல என் மொபைல் ரிங் ஆச்சு..
லைன்ல மங்கு..
" மச்சி.. அது என் Fake id தான்.. அக்சப்ட்
பண்ணினதுக்கு தேங்க்ஸ்.... "
எனக்கு கேத்ரினா கயிப் ரிக்வெஸ்ட் குடுத்தாக..,
நயன்தாரா ரிக்வெஸ்ட் குடுத்தாக., ஏன்..
ஏஞ்சலினா ஜோலி கூட ரிக்வெஸ்ட் குடுத்தாக..
அதயெல்லாம் விட்டுட்டு.. என் கெரகம்....
பக்கத்து தெருவுல பணம் குடுத்திட்டு
இருந்தவர்கிட்ட..
" அரவங்குறிச்சியில தேர்தல் தள்ளி
வெச்சிட்டாங்களாம்ணே.. "
" ஆமாம்பா.. அங்க ஓவரா பணம்
குடுத்துட்டாங்களாம்.. "
" அப்ப இது..?! "
" அதான் சொன்னேனே.. அங்கே ஓவரா
குடுத்துட்டாங்களாம்..! "
# ஓ...!! ஓவர் ஓவர்..!!
"எந்த கட்சிக்குடா வோட்டு போட போறே..?"
" அதுக்கு தான்..! "
" அதுக்கா..?!! "
" ஏன்..?! சரி இதுக்கு போடவா..?! "
" தம்பி... Pepsi-ல பூச்சி மருந்து இருக்குனு தெரிஞ்சா.. 
Pepsi-ஐ தூக்கி எறி்ஞ்சிடணும்...
அத விட்டுட்டு.. நான் டைரக்டா பூச்சி மருந்தே 
குடிச்சிக்கிறேன்னு சொல்ல கூடாது.. "
" கொழப்பிட்டியேண்ணே..! "
" ஹி., ஹி., ஹி.. இப்பதான்டா தெளியவே 
வெச்சி இருக்கேன்...! "

Saturday, May 14, 2016


பெங்களூர்ல இருந்து என் ப்ரெண்ட் ஆனந்த்
போன் பண்ணியிருந்தான்..
"மச்சி.. வீட்ல ஏசி வெச்சிட்டேன்டா.."
"எந்த ப்ராண்ட்..?"
"வோல்டாஸ்"
"ஏன்.. ஜெனரல், மிட்சுபிஷி இப்டி வெச்சி இருக்கலாம்ல.."
"இந்திய ஏ.சி வாங்கி வெக்கறது தான் மச்சி
நம்ம நாட்டுக்கு நல்லது.. நான்லாம் தேச பக்தன்.."
"மொதல்ல ஏ.சி வெக்கறதே நாட்டுக்கு நல்லதில்லடா 
வெண்ணை..!!"
" இலவசம் குடுத்தா.. பண்ணினதெல்லாம் மறந்துடுவோமா..? 
நாங்க எதையும் மறக்கல "
இப்டி ஒரு கட்சி விளம்பரம் ஓடிட்டு இருந்தது...
எனக்கு கண நேரத்தில் உதித்த சிந்தனை....
.
.
.
.
.
" எதையும் மறக்கலன்னா... உங்களுக்கு மட்டும்
எப்படிய்யா ஓட்டு போடுவாய்ங்க..?! "இன்னிக்கு மதியம் என் சிஷ்ய பய போன் பண்ணியிருந்தான்...
" தல... உங்களுக்கு மேட்டர் தெரியுமா..?! "
" என்ன..?! "
" வாட்ஸ் அப் க்ரூப்ல யாராவது கருத்து கணிப்பு அனுப்பினா... "
" அனுப்பினா...??! "
" க்ரூப் அட்மினை 2 வருஷம் ஜெயில்ல போட்டுடுவாங்களாம்... "
( ஆஹா.. எதோ ப்ளான் பண்றான் போலயே...!! )
" சரி.. அதுக்கென்ன..?! "
" தல.. நீங்க ஜெயிலுக்கு போயிட்டா நாங்க என்ன பண்ணுவோம்..? "
( " நாங்களா..?! " அப்ப ஒரு க்ருப்பா தான் ப்ளான் பண்றாய்ங்களா..?! )
" போயிட்டா இல்லடா.. அனுப்பிட்டானு சொல்லு... "
" ஹி.,ஹி.,ஹி.. சரி தல இப்ப என்ன பண்ண போறீங்க..? "
" யூ டோன்ட் வொர்ரி... அப்டி ஒரு நெலமை வந்தா..
க்ருப்ல இருக்குற உங்க எல்லாரையும் அட்மினாக்கி விட்டுடுவேன்... "
ஹா., ஹா., ஹா.. ( வில்லன் சிரிப்பு )
# ஆருகிட்ட..!!

Thursday, May 12, 2016

" எப்ப பாரு ஃபேஸ்புக்லயே இருக்கீங்களே..
வேற வேலை இல்லியா..?! "
" குட் கொஸ்டின்.. இருங்க நான் பேங்க் வரைக்கும்
போயிட்டு வந்துடறேன்.. "
" பேங்க்கா..? மணி 5.00 ஆச்சே... மூடியிருப்பாங்களே.. "
" அதனால என்ன.. நான் போறது பேங்க் பக்கத்துல
இருக்குற சூரி டீ கடைக்கு தானே... ஹி.,ஹி.,ஹி..!"
# டீ டைம்...!!!

FB-ல காப்பி பேஸ்ட் - தேவர்மகன் மீம்ஸ்


" மச்சி.. வீட்டுக்கு போயிட்டு வர்றேன்டா.. "
" ஓ.கே.. கையில எவ்ளோ பணம் வெச்சி இருக்கே..? "
" சம்பள பணம் 35,000 இருக்கு. ஏன் கேக்கற..? "
" வழில பறக்கும்படை இருந்தா புடிச்சிப்பாங்க..
அதுக்கு சொன்னேன்..!! "
" ஹேய்.. ஹேய்.. உனக்கு ரூல்ஸ் தெரியாதா..?
ஒருத்தர் 50,000 வரை கொண்டு போலாம்..! "
" ஓ.. ரூல்ஸூ... எங்ககி்ட்டயே...!! சரி..,
இத கொண்டு போயி யார்கிட்ட குடுப்பே..? "
" என் Wife-கிட்ட..! "
" உன் Wife-க்கு ஓட்டு இருக்கா..? "
" ஓ இருக்கே..! "
" அப்ப உன் Wife ஒரு வாக்காளர்..
நீ வாக்காளர்க்கு பணம் குடுக்க போறே..
புடிங்க சார் இவனை.. புடிச்சு ஜெயில்ல
போடுங்க சார்...! "
# அடப்பாவி...!!!!
+1 Annual Exam ரிசல்ட் நாள்..
நானும்., என் ப்ரெண்ட் ஆனந்தும்
பயங்கர டென்ஷனோட வெயிட்
பண்ணிட்டு இருந்தோம்..
ரிசல்ட் வந்ததும்.. மார்க்கை பாத்தா...
Maths-ல பார்டர் பாஸ் ஆயிருந்தோம்...
எங்களுக்கு ஒரே ஷாக்..!
இருக்காதா பின்ன., எழுதினதே 30 மார்க்குக்கு தானே..!

கோடி கோடியா காசை வாங்கிட்டு
ரெண்டு கட்சி வெளம்பரத்தையும்
விஜய் டிவி போட்டா... அது பிஸினஸூ..
அதே 1000 ரூபா காசை வாங்கிட்டு 
கஸ்தூரி பாட்டி செஞ்சா... பித்தலாட்டமாம்...
நல்லா இருக்குடே உங்க நியாயம்..

Tuesday, May 10, 2016

" ஏன்டா எப்ப பாரு போஸ்ட்டை போட்டுட்டு
லைக் போடு., லைக் போடுனு உயிரை வாங்கற.. "

" சரி நீ லைக் போட வேணாம்.. என் அக்கவுண்ட்ல
1000 ரூபா போடு..! "

" ஆங்.... நான் லைக்கே போட்டுடறேன்..! "

" ஹி., ஹி., ஹி..!!! அது...!!! "

# என் போஸ்ட்டுக்கு விழற ஒவ்வொரு
லைக்கும்... நானா ( கெஞ்சி ) வாங்குனதுடா...!!!!என் Wife என் கூட சண்டையே போட மாட்டாங்க..

ஏன்னா..

எப்பவாவது சண்டைக்கு வந்தாங்கன்னா 
உடனே அவங்களுக்குப் பிடிச்ச பாட்டைப் பாட 
ஆரம்பிச்சுடுவேன்.. அப்படியே அமைதி ஆகிடுவாங்க..

( சண்டைய நிறுத்தினா தான் பாடறத நிறுத்துவேன்னு 
அவங்களுக்குத் தெரியும்..! )
# லா லா லா....!!!!

அட்சய திருதியை மீம்ஸ்போன டிசம்பர்ல துபாய் போனப்ப
என் ப்ரெண்ட் ஜனா வீட்ல தங்கினதால
ஆற அமர 15 நாள் துபாய் சுத்தி பாத்தோம்....
அதனால இனிமே ப்ரெண்ட்ஸ் இருக்குற 
நாட்டுக்கு மட்டும் தான் டூர் போறதுனு
முடிவு பண்ணிட்டோம்..
( ஹி., ஹி.. நமக்கு தான் உலகம் பூரா
ப்ரெண்ட்ஸ் இருக்காங்கல்ல.. )
நெக்ஸ்ட் ப்ளான் தாய்லாந்து..
" ஏங்க அங்க யார்ங்க இருக்கா..?! "
" யாராச்சும் இருப்பாங்க.. இரு தேடி
பாக்கலாம்..! "
டக்னு என் ப்ரெண்ட் ராஜ்குமார் ஞாபகம்
வந்தது.. உடனே வாட்ஸ் அப்ல மெசேஜ்
தட்டினேன்..
" மச்சி.. நீ இப்ப பாரின்ல தானே இருக்கே..?! "
" ஆமா.. ஏன் கேக்கற..? "
" உன் வீட்டுக்கு வந்து., தங்கி., ஊர் சுத்தி
பாக்கலாம்னு தான்.. "
" எப்ப வர்ற..? "
" மொதல்ல நீ எந்த ஊர்ல இருக்கே சொல்லு..! "
" மணிலா..! "
" மணிலான்னா.. பிலிப்பைன்ஸ் தானே..?!! "
" ஆமா..! "
" ஆஹா.. நாங்க தாய்லாந்துக்கில்ல ப்ளான்
பண்ணி வெச்சி இருக்கோம்..! "
" ஓ.. இப்ப என்ன பண்ண போறே.? "
" நீதான் மச்சி மனசு வெக்கணும்..! "
" நானா..? என்ன சொல்ற..? "
" ஹி.,ஹி.,ஹி.. நீ தாய்லாந்துக்கு டிரான்ஸ்பர் 
வாங்கு மச்சி..!! "
" அடிங் கொய்யாலே..!!! "

நாலு பொண்ணுங்க க்ரூப்பா இருக்கிற போட்டோ 
பாத்ததும் உங்களுக்கு அதுல

ஒரு பொண்ணு மட்டும் அழகா இருக்கற மாதிரி 
தெரிஞ்சா... நீங்க அழகை ரசிக்கிறவர்னு அர்த்தம்..

ரெண்டு பொண்ணுங்க அழகா இருக்கற மாதிரி 
தோணினா... நீங்க அட்ஜஸ்டபிள் டைப்னு அர்த்தம்..

மூணு பொண்ணுங்க அழகா இருக்கற மாதிரி 
தோணினா.. நீங்க ரொம்ப பிராக்டிகல் பர்சன்னு அர்த்தம்...

நாலு பொண்ணுங்களுமே அழகா இருக்கற மாதிரி 
தோணினா....
.
.
.
.
.
டியர் கேர்ள்ஸ்..., நீங்க எச்சரிக்கையா இருக்க வேண்டியது 
இவன்கிட்ட தான்.. பாத்து சூதானமா இருங்க...

" யார்ரா இவரு..? எதுக்கு இவரை
எல்லோரும் கலாய்ச்சிட்டு இருக்காங்க..!! "
" இவருதான் சரவணா ஸ்டோர்ஸ் ஓனர்..!! "
" சரி.. அதுக்கு என்ன..?!! "
" நீ சரவணா ஸ்டோர்ஸ் புது விளம்பரம்
பாக்கலியா..? "
" ஓ.. பத்து பதினஞ்சு தடவை பாத்துட்டேனே..
ஏன்..? "
" பத்து பதினஞ்சு தடவையா..?!! அதுல
தமன்னா கூட இவர் வர்றாரே.. நீ கவனிக்கல..?! "
" ஏன்டா.. தமன்னா வர்ற வெளம்பரத்துல
தமன்னாவை பாக்காம பக்கத்துல
இருக்கறவங்கள எல்லாமா பாப்பாங்க..
போடாங்ங்...... "
பக்கத்துல இருக்குற கடைய விட
இங்கே 2 ரூபா கம்மியா கெடைக்குதுன்னு
வெயில்ல அரை கிலோ மீட்டர்
நடந்து வந்து வாங்கினா..
இவனுங்க மீதி 2 ரூபாய்க்கு சாக்லேட்
குடுக்கறானுங்க....
# இதெல்லாம் பாவம் மை சன்..!!!

இன்னிக்கு திரிஷா பர்த்டே...!!
நான் " ஹேப்பி பர்த்டே " சொல்லல...
திரிஷா கோச்சிட்டாப்ல...
சொல்லியிருந்தா..
1. தமன்னா கோசிப்பாப்ல..
2. நயன்தாரா கோசிப்பாப்ல..
3. கீர்த்தி சுரேஷ் கோசிப்பாப்ல..
1 பெருசா..? 3 பெருசா..?!
# கூட்டி கழிச்சி பாருங்க... கணக்கு சரியா வரும்...!! 
ஹி.,ஹி.,ஹி...!!
தங்கச்சி வீ்ட்டுக்கு போயி்ட்டு இருந்தோம்...
வழில எலெக்ஷன் பறக்கும் படை நிறுத்தினாங்க...
வாக்காளர்க்கு பணம் குடுக்க போறோமானு 
செக் பண்றாங்களாம்...
ஒரு ஆபீசர் கார் ஜன்னல் வழியா தலை விட்டு
எட்டி என் முகத்தை மட்டும் பாத்துட்டு, 
நீங்க போலாம்னு அனுப்பிட்டாரு..
ஒருவேளை இந்த மூஞ்ச பாத்தா குடுக்கற மாதிரி
தெரியல, வாங்கற மாதிரி தெரியுதுன்னு 
நெனச்சிருப்பாரோ..!!!

சிங்கப்பூரில் என் ப்ரெண்ட் மணி...
" டேய்... என்னாடா இது...? பயமா இருந்து இருக்குமே..?! "
" சே., சே... எனக்கென்ன பயம்..?! "
" நான் உனக்கு சொல்லலடா... பாம்புக்கு சொன்னேன்...!! "
# கிர்ர்ர்ர்ர்...!!

" ஏங்க பங்ஷனுக்கு ரெண்டு நாள் தான்
இருக்கு.. எங்க அண்ணனை இன்னும்
கூப்பிடவேயில்ல.. "
" அவனை போன்ல கூப்பிட்டா போதும்..
வந்துடுவான்.. "
" எங்க அண்ணன்னா..அவ்ளோ எளக்காரமா
போச்சா..?!! "
( ஆஹா.. ஆரம்பிச்சிட்டாய்ங்கடா " பாசமலர் "
படத்தை.. )
" சரி சரி,, கெளம்பு..!! "
" டி-சர்ட்., தாடி... இப்படி பிச்சக்காரத்தனமா போனா..
எங்க அண்ணன் என்ன நெனப்பான்..? ஷேவ்
பண்ணி டீசண்டா டிரஸ் பண்ணிட்டு வாங்க.."
" என்னாது இது உங்க ஊர்ல பிச்சக்காரத்தனமா..?!
ஸ்டைலுமா ஸ்டைலு...!! "
" இப்ப நான் சொன்ன மாதிரி வரப்போறீங்களா
இல்லியா..!? "
என் Wife அன்பா.. கெஞ்சி கேட்டதால
ஷேவிங் பண்ணிட்டு அயர்ன் பண்ணின
சர்ட், பேண்ட் போட்டுட்டு கண்ணாடிய பாத்தேன்..
ஒரு சஞ்சய் ராம்சாமி தெரிஞ்சான்..
மச்சான் வீட்டுக்கு போனோம்...
கதவை தொறந்ததே என் மச்சான் தான்..
நான் அவனை அப்படியே மேலயும் கீழேயும்
பார்த்தேன்..
டீசர்ட்... ரெண்டு நாள் தாடி...!! அதே பிச்சக்கார
கெட்டப்பு...
" என்ன மச்சான்.. எதுக்கு இந்த வெயில்ல
சர்ட்டை டக்இன் எல்லாம் பண்ணிட்டு வந்து
இருக்கீங்க..? எதாவது MLM-ல சேர்த்துட்டீங்களா..? "
( திரும்பி என் Wife-ஐ முறைச்சேன்...
சரி சரி பாத்தேன்..!! )
" வீட்ல பங்ஷன்ணா.. அழைக்க வந்தோம்..! "
" என்ன பங்ஷன் மச்சான்..?!! "
" நீ மொதல்ல போயி ஷேவ் பண்ணிட்டு.,
சர்ட்டை டக்இன் பண்ணிட்டு வா.. அப்பத்தான்
சொல்லுவேன்..!! "
# ஹே... ஆருகிட்ட..?!!!
" சே.. வருஷா வருஷம் வெயில் ஓவரா
அடிக்குதுனு பொலம்பறாங்க.. ஒருத்தனும்
அதை சரிபண்ண என்ன பண்ணனும்னு
யோசிக்கறதில்ல.. "
" சரி.. நீ என்ன பண்ணினே..?! "
" ஹி., ஹி., ஹி.. ஏசில ரெண்டு பாயிண்ட்
கொறைச்சி வெச்சேன் மச்சி..!! "
# எட்ரா அந்த அருவாள..!!!

Tuesday, May 3, 2016இந்த மாதிரி தீவிர ரசிகர்கள் இருக்கற வரை
எத்தன Fake Id வந்தாலும் உன்ன அசைச்சிக்க
முடியாதுடா வெங்கி...

# மீண்டும் மகிழ்ச்சி...


இதே மாதிரி சைனீஸ், ஜப்பானீஸ், ஜெர்மன்,
ஸ்பானீஷ், பிரெஞ்ச், ரஷ்யன், அரபிக் மொழிகளில்
டிரான்ஸ்லேட் செய்ய விரும்புவோர் தொடர்பு கொள்ளவும்...
# மகிழ்ச்சி...tongue emoticon