Friday, April 7, 2017

ரொம்ப வருஷம் கழிச்சு இன்னிக்கு வழில என் ப்ரெண்ட் வினோத்தை பாத்தேன்...
நாங்க ரெண்டு பேரும் ஒரே ஸ்கூல்ல தான் படிச்சோம்... பட் செக்சன் தான் வேற வேற....
மீ 10 B... அவன் 10 A...
பேச்சு ஃபேஸ்புக் பத்தி திரும்பிச்சு....
" வினோ... நம்ம கூட படிச்ச தேன்மொழி ஃபேஸ்புக்ல இருக்கா..?! "
( தேன்மொழியும் இவனும் ஒரே ஊர்க்காரங்க... )
" தெர்ல... தேன்மொழி கூட கான்டாக்டே இல்ல... "
" ஓ மை காட்...!! "
" நீயேன்டா இவ்ளோ ஃபீல் பண்றே...?! "
" ஹி., ஹி., ஹி... நீங்க ரெண்டு பேரும் பெஸ்ட் ப்ரெண்ட்ஸாச்சே... அதான்... "
" அடங்கு.. அடிக்கடி என்னை பாக்க நீ என் கிளாஸ்க்கு வரும்போதே எனக்கு எல்லாம் தெரியும்... "
" அடப்பாவி.. இப்டிதான் தேன்மொழிகிட்ட என் இமேஜை டேமேஜ் பண்ணி வெச்சிருக்கியா...? "
" இல்லினா மட்டும் இமேஜ் கொடிகட்டி பறந்தாக்கும்... "
" ப்ளடி இடியட்... இனிமே என்கூட பேசாதே.. "
" சரி சரி அப்ப கெளம்பு... "
" இரு.... கெளம்பரத்துக்கு முன்னாடி ஒண்ணே ஒண்ணு கேட்டுட்டு போறேன்... "
" என்ன...?! "
" நம்ம கவிதா ஃபேஸ்புக்ல இருக்கா..?! ஹி., ஹி., ஹி...!!! "
" அடிங்...!! "

Thursday, April 6, 2017

போன ரெண்டு பதிவுல " நானெல்லாம் கஸ்தூரிமான் ஜாதினு " எழுதியிருந்தேன்....
அத படிச்சிட்டு நாலஞ்சு பேரு...
" இப்பல்லாம் மானை பாத்தா உங்க ஞாபகம் தான் வருதுனு " சொன்னாங்க..
அட இதுல கூட ஒரு லாஜிக் இருக்கு ஒத்துக்கறேன்....
ஆனா... ஒரு பக்கி பய போன் பண்ணி....
" இப்பல்லாம் கஸ்தூரிய பாத்தா உங்க ஞாபகம் தான் வருதுனு " சொல்றான்...
# அடேய்ய்ய்ய்ய்.....!!!

Wednesday, April 5, 2017

நேத்து என் மொபைல வாங்கி பாத்தான் என் ப்ரெண்ட் தினேஷ்...
அதுல நான் டெய்லி அலாரம் காலைல 7.55-க்கு வெச்சி இருக்கறத பாத்துட்டு என்னைய கேவலமா ஒரு லுக் விட்டான்...
நல்லவேளை அந்த அலாரம் மிஸ்ஸான இன்னொன்னு 8.35-க்கு வெச்சி இருக்கேன்... அத அவன் கவனிக்கல...
என் மானம் தப்பிச்சது...
பின்ன நாங்கல்லாம் கஸ்தூரிமான் பரம்பரையில்ல... ஹி., ஹி., ஹி....!!!

Tuesday, April 4, 2017

ரெண்டு நாளா தொண்டை சரியில்ல... என் வாய்ஸ் எனக்கே டிப்பரண்ட்டா இருந்தது...
சாதாரணமா பேசினா SPB மாதிரி இருக்கும்... தொண்டை கட்டினதால உதித் நாராயண் வாய்ஸா மாறிடுச்சு....
இன்னிக்கு காலைல எந்திரிச்சதும் நம்ம ஒரிஜினல் வாய்ஸ் வந்திடுச்சானு கன்பார்ம் பண்ணிக்க என் ப்ரெண்ட் ஆனந்த போயி பாத்தேன்.....
" மச்சி... என் வாய்ஸ் SPB மாதிரி இருக்கா...?! "
" SPB- ஆ...?! இதெல்லாம் உனக்கே ஓவராயில்ல...?! "
" நான் பேசறதால உனக்கு தெரியலைனு நெனக்கிறேன்.. இரு மண்ணில் இந்த காதல் அன்றி பாட்டு பாடறேன்... "
" என்னாது.... பாட்டு பாட போறியா..?! "
" ம்ம்.. அதுவும் மூச்சு விடாம பாட போறேன்... "
" மூச்சு விடாமயா... வேணாம் மச்சி... ரிஸ்க்கு... மூச்சு நின்னுட போவுது.. "
" அதெல்லாம் ஒண்ணும் ஆகாது... நெறைய தடவ ப்ராக்டீஸ் பண்ணியிருக்கேன்... "
" அடேய்ய் எரும.. மூச்சு நின்னுட போவுதுனு சொன்னது உனக்கில்ல.., எனக்கு.... "
சே... சுத்த ஞான சூனியமா இருப்பானோ..!!!

Sunday, April 2, 2017

" ஊர்ல நாத்திகம் பேசி்ட்டு திரிஞ்ச பல பேர் என்னால தான் கோவிலுக்கே போக ஆரம்பிச்சாய்ங்க.... "
" நிசமாவா..?! அப்டி நீ என்ன பண்ணினே...?! "
" ஹி., ஹி., ஹி... நான் ப்ளஸ் டூ பாஸானப்புறம் தான் கடவுள் இருக்கறார்ங்கறதையே அவங்க நம்ப ஆரம்பிச்சாய்ங்க.... "

Saturday, April 1, 2017

10 வருஷம் முன்னால நான் ஒரு ஆபீஸ்ல ஜாயின் பண்ணி இருந்தேன்....
காலைல ஆபீஸ் போனதும் மொத வேலையா மொபைல் எடுத்து என் ப்ரெண்ட்ஸ்கிட்ட பேச ஆரம்பிச்சிடுவேன்...
சும்மா ஒரு அரைமணி நேரம், ஒரு மணி நேரம்னு லைட்டா பேசுவேன்.
இது அங்க இருந்த மேனேஜர்க்கு பொறுக்கல...
ஒரு நாள் என்ட்ட வந்து....
" நீ வீட்லயே இருக்க வேண்டியது தானே... எதுக்கு ஆபீஸ் வர்ற..?! "
" ஹி.,ஹி., ஹி... எங்க வீட்ல சரியாவே சிக்னல் கெடைக்க மாட்டேங்குது சார்.. இங்க தான் ஃபுல் சிக்னல் கெடைக்குது... "
அந்த டேமேஜர் ரொம்ப கோவக்காரர் போல... டக்னு என்னைய வேலை விட்டு போனு சொல்லிட்டாரு...
எனக்கு அப்டியே ஷாக் ஆகிடுச்சு...
நாம இதுவரைக்கும் என்ன வேலை பாத்தோம்... எத விட்டுட்டு போக சொல்றாரு இந்தாளுனு தான்...
ஹி., ஹி., ஹி....!!!