Thursday, December 21, 2017

நேத்து நைட் ஆனந்தை பாக்க போனேன்... தெரு என்டர் ஆகும் போதே.. அங்க நிக்கறான்...
அங்கயே ஓரமா நின்னு கொஞ்ச நேரம் பேசிட்டு இருந்தோம்..
வீடு பக்கத்துல தான் இருக்கு.. ஏன் அங்க கூப்பிடாம இங்க நிக்க வெச்சி பேசிட்டு இருக்கான்..?! கழட்டி விட பாக்கறானோ..?!!
" வாடா ஆனந்த்... உன் வீட்டுக்கு போயி பேசலாம்.. "
" அது... வித்யா ஊருக்கு போயிருக்காடா.. "
" அதனால என்ன...?! "
" டின்னர்க்கு நாலு சப்பாத்தி தான் சுட்டு வெச்சிட்டு போயிருக்கா.. "
" அட லூசுப்பயலே.. இதுக்கா இப்டி யோசிக்கிறே.. எனக்கு நட்பு தான்டா முக்கியமனு " வீட்டுக்கு இழுத்துட்டு போயிட்டேன்...
அப்புறம் என்ன... நட்புக்காக வெறும் நாலே நாலு சப்பாத்திய நான் அட்ஜஸட் பண்ணிக்கிட்டேன்..
ஆனா நான் சாப்பிடும் போது அவனுக்கும் அரை சப்பாத்திய குடுத்தேன்..
வேணாம்னு சொல்லிட்டான்.. பசிக்கலை போலிருக்கு..
நல்லவேள... நான் போகலைன்னா நாலு சப்பாத்தி வேஸ்ட்டால்ல போயிருக்கும்... ஹி., ஹி., ஹி...
டிஸ்கி: என்னை தப்பா நெனக்காதீங்க... அப்டியெல்லாம் என் ப்ரெண்ட்டை பட்டினியா தூங்க விட்டுடுவேனா...
ஹோட்டல்க்கு வற்புறுத்தி கூட்டிட்டு போயி... அவன் ரெண்டு தோசை.. நான் நாலு தோசை சாப்பிட்டோம்ல.. ( அவன் காசுல... நான் காசு குடுக்கறேனு சொன்னா.. கோவப்படுவான்.. ) 

Wednesday, December 20, 2017

போன வாரம் என் ப்ரெண்ட் தினேஷை பாக்க ஊருக்கு போயிருந்தேன்... ரெண்டு நாளா அவன் ரூம்ல தான் தங்கினேன்...
ரெண்டாவது நாள் தினேஷ் குளிக்க போயிருந்தான்.. அப்ப அவன் போன் ரிங் ஆச்சு... நான் தான் எடுத்தேன்...
" ஹலோ... தினேஷ் இருக்காங்களா..?! "
( இந்த பன்னாடைய யாரு இவ்ளோ மரியாதையா கூப்பிடறது..?!! )
" நீ யாரும்மா..?! "
" நான் அவங்க ஆபீஸ்ல வொர்க் பண்றேன்... கிரிஜா.. "
( ஓ... கிரிஜா... சரி சரி.. )
" நீங்க தானே அவனுக்கு கண்ணம்மா கண்ணம்மா பாட்டு பாடி அனுப்பினது..?! "
" ஆமா... அதெப்படி உங்களுக்கு தெரியும்..?! "
" நாங்க தான் டெய்லி அத கேக்கறோமே..!! "
" ஓ... டெய்லி நைட் என் பாட்டு கேட்டுட்டே தான் தூங்கறேனு சொன்னாரு.. அது நிஜம் தானா..? "
" அப்டியா சொன்னான்..?! "
" ம்ம்ம்ம்... "
" ஆனா அந்த பன்னாடை.. நீ பாடினதை அலாரம் ரிங்டோனால்ல வெச்சி இருக்கு... டெய்லி காலைல அலாரம் அடிச்சதும் அலறி அடிச்சிட்டுல எந்திரிக்கறான்...!! "
" என்னாது... அலாரம் ரிங்டோனா..?!!
கிர்ர்ர்ர்... "
அந்த புள்ள ஒண்ணும் பேசாம கால் கட் பண்ணிச்சு... என்னவா இருக்கும்..?!!
#தும் தத்த்தா...!!! ஹி., ஹி., ஹி...

Friday, December 8, 2017

" ஆயகலைகள் அறுபத்தி நாலாம்..! "
" இருந்துட்டு போகட்டும்..! "
" உனக்கு எத்தனை கலைகள் தெரியும் வெங்கி..?! "
" என்ன ஒரு பத்து பதினஞ்சு தெரியும்.. "
" பதினஞ்சா..?! எங்கே லிஸ்ட் போடு பாக்கலாம்.. "
" ம்ம்.. கலைச்செல்வி, கலைப்ரியா., கலைவாணி.... "
கிர்ர்ர்ர்...!!!
விமல் போன் பண்ணியிருந்தான்...
" வெங்கி... சேலம்ல FM ஆரம்பிக்க போறாங்களாம்.. "
" சரி.. "
" ரேடியோ ஜாக்கி இன்டர்வியூ நடக்குதாம்.. கேள்விபட்டதும் உன் ஞாபகம் தான் வந்தது.. "
( பார்ரா...!!! )
" அதுக்கு..?! "
" உன்கிட்ட தெறமை இருக்கு... நீ அப்ளை பண்ணு.. "
" ஹி., ஹி., ஹி.. தேங்க்ஸ் மச்சி... இருந்தாலும்... "
" என்ன யோசிக்கிறே..?! "
" நாம பிஸினஸ்ல இருக்கோம்.. நமக்கு இதெல்லாம் செட் ஆகுமானு... "
" அதெல்லாம் ஆகும்... உன் தெறமைய இப்டி நாலு செவத்துக்குள்ள வெச்சி வேஸ்ட் பண்ண போறியா..? "
( நம்மகிட்ட ஏகப்பட்ட தெறமை இருக்கே.. அதுல எது இவனை ஹெவியா லைக் பண்ண வெச்சி இருக்கும்..?!! )
" மச்சி.. அது என்ன தெறமைனு நான் தெரிஞ்சிக்கலாமா..?! "
" ம்ம்ம்... மூச்சு விடாம பேசியே எங்கள எல்லாம் கொல்றேல்ல.. அதான்.. "
" கிர்ர்ர்ர்... இரு... உன்னை நேர்ல வந்து கொல்றேன்.. ராஸ்கல்... "

Friday, November 10, 2017

குமார் போன் பண்ணியிருந்தான்..
" வெங்கி.. என்ன காலைல இருந்து உன்னை வாட்ஸ்அப்ல ஆளையே காணோம்..? "
" அதென்னமோ தெரியல மச்சி.. காலைல இருந்து தூக்கம் தூக்கமா வருது.. தூங்கிட்டே இருந்தேன்.. இப்ப தான் குளிச்சுட்டு ப்ரெஷ்ஷா வர்றேன்..."
" குட்.. இப்ப என்ன பண்ண போறே..?! "
" ம்ம்ம்... ப்ரெஷ்ஷா தூங்கப் போறேன்... "

Tuesday, November 7, 2017

சின்ன வயசுல நான் டாக்டர்க்கு படிக்கணும்னு ரொம்ப ரொம்ப ஆசைப்பட்டேன்...
அதுக்கு என்ட்ரன்ஸ் டெஸ்ட் பாஸ் பண்ணனும்னு சொன்னாங்க...
என்ட்ரன்ஸ்னா... பெரிய பெரிய கேட் இருக்கும்.. அதுல ஏறி இறங்க சொல்லுவாங்கனு நெனக்கிறேன்.. அதுல தான் நாம ஈஸியா பாஸ் பண்ணிடுவோமேனு போனேன்..
+2 முடிச்சிட்டு வானு சொன்னானுங்க..
சரினு +2 ஜாயின் பண்ண போனா..
+1 முடிச்சி இருந்தா தான் +2-ல சேர்த்துக்குவாங்களாம்..
சரினு +1 போனா...
நீ இன்னும் 10th பாஸ் பண்ணலியானு கேக்கறாங்க...
சே.. ஒரு டாக்டராகற அழகும், அறிவும், திறமையும் இருந்தும் இந்த சம்முவம் என்ன டாக்டராக விடல...
#சிஸ்டமே சரியில்ல..!!

Friday, November 3, 2017

நேத்து மதியம் பைக்கை ரோடு ஓரமா நிப்பாட்டிட்டு போன் பேசிட்டு இருந்தேன்...
அப்ப என்னை கிராஸ் பண்ணி ஒரு ஸ்கூட்டி போச்சு...
ஆ...!! ஸ்ரீதிவ்யா...!
இந்த புள்ள எப்டிடா சேலம்ல...?!!
டக்னு வண்டியை ஸ்டார்ட் பண்ணி... சேஸ்ஸிங்....
சே.. தப்பா நெனக்காதீங்க... கன்பார்ம் பண்ணிக்கணும்ல...
இதெல்லாம் ஜெனரல் நாலேஜ்ட் டெவலப்மெண்ட்ல வருது...!!
சிக்னல்ல அந்த ஸ்கூட்டிக்கு பக்கத்துல போயி வண்டிய நிறுத்தி....
அந்த புள்ள முகத்தை நான் பாக்க....
அந்த புள்ள என்னைய பாக்க...
நான் கேக்கலாம்னு வாயை தொறக்கறதுக்குள்ள அந்த புள்ள பேசிடுச்சு...
" ஹலோ... சார்... நீங்க சிவகார்த்திகேயன் தானே...?!! "
என்னாது.... சிவகார்த்திகேயனா..?!
எனக்கு திக்னு இருந்தது...
பின்ன போன வாரம் துபாய் போனப்ப ப்ளைட்ல ரெண்டு ஏர்ஹோஸ்டஸ் என்னைய பாத்து...
" சார் நீங்க ஷாகித் கபூரானுல்ல " கேட்டாய்ங்க...
ஹி., ஹி., ஹி...!!!

Wednesday, November 1, 2017

" நானெல்லாம் ஒரு குழப்பமான சிட்சுவேஷன்னா... எப்பவும் பூவா தலையா போட்டு பாத்துட்டு... பூ விழுந்தா தான் செய்வேன்... "
" அப்டியா..? "
" ம்ம்.. நேத்து ஈவினிங் கூட டின்னர்க்கு வெளியே ஹோட்டல் போயி சிக்கன் சாப்பிடலாமா வேணாமானு ஒரே குழப்பமா இருந்தது... "
" ம்ம்.. அப்புறம்..?! "
" அப்புறம் என்ன.. பூவா தலையா தான்.. "
" என்ன விழுந்திச்சு..?! "
" தலை.... "
" அப்ப டின்னர்க்கு ஹோட்டல் போலயா..?! "
" சே.. சே.. அப்புறம் 25 தடவை சுண்டினதுல 13 பூ, 12 தலை.. சோ மெஜாரிட்டினு கெளம்பிட்டேன்ல... "

Wednesday, October 25, 2017

எங்க ஊர்ல இருக்கற சூப்பர் மார்கெட்ல போய் வாங்க சோம்பேறித்தனம் பட்டு ஆன்லைன்ல ஆர்டர் போட்டா...
டெலிவரி மேன் போன் பண்ணி....
" சார் உங்களுக்கு ஒரு பார்சல் வந்திருக்கு.. இங்க சூப்பர் மார்கெட் பக்கத்துல நிக்கறோம்... வந்து வாங்கிக்கோங்கனு " சொல்றான்...

Monday, October 23, 2017

காலைல ராகவ் வந்தான்....
" மச்சி என் ஆபீஸ்ல கூட வொர்க் பண்ற பொண்ணுகிட்ட லவ் சொல்லலாம்னு இருக்கேன்... எதாவது ஐடியா குடேன்... "
" ஐடியா தானே... குடுத்திட்டா போச்சு... "
( ஹி., ஹி., ஹி... ஐடியா குடுக்கறத நாங்க ஒரு பொதுசேவையா செஞ்சிட்டு இருக்கோம்ல...! )
" சரி.... ஐடியா குடு.. "
" கவிதை எழுதி குடு மச்சி.. அதான் பெஸ்ட்டு.. "
" ஐய்யோ.. எனக்கு கவிதை எழுத வராதே..!! "
( இதுக்கு ஏன் இப்டி பதர்றான்...? நானெல்லாம் என்னிக்காச்சும் இப்டி ஃபீல் பண்ணியிருப்பேனா..?! )
" சரி டோன்ட் வொர்ரி.. நானே எழுதி தர்றேன்.. "
சொல்லிட்டு கவிஞர் வெங்கூவை தட்டி எழுப்பினேன்...
கவிதை அருவி மாதிரி கொட்டிச்சு... டக்னு அத பேப்பர்ல புடிச்சிட்டேன்...
" கண்ணே...
நீயே என் ஆதார் கார்ட்,
வாங்கிக்கலாமா
நமக்கொரு ரேசன் கார்ட்..!! "
வாங்கிட்டு போயி 6 மணி நேரமாச்சு.... இதுவரைக்கும் ஒரு போன் கால் கூட இல்ல...
ஒருவேள லவ் ஓகே ஆகி... சினிமா, பார்க்னு போயிட்டானோ..?!

Sunday, October 22, 2017

பங்சுவாலிட்டினா... இந்த வெங்கி தான்...
எங்கூர்ல யாராச்சும் வாட்சுக்கு டைம் வெக்கணும்னாலே நான் போறதை பாத்து தான் வெப்பாங்கன்னா பாத்துக்கோங்க...
டீ சாப்பிட டீக்கடைக்கு போனா... மணி 11..
வடை சாப்பிட போனா.. மணி 12.
லஞ்சுக்கு வீட்டுக்கு போனா... மணி 1.
பப்ஸ் சாப்பிட போனா... மணி 4.30
டின்னர்க்கு போனா... மணி 8.

காலைல தம்பி அசோக் போன் பண்ணியிருந்தான்...
" அண்ணே... நேத்து தம்மு சேலம் வந்துட்டு போயிருக்கு.. நீங்க மீட் பண்ணலையா.? "
" நேத்து தம்முவ கார்ல டிராப் பண்ணிட்டு போனது யார்னு நீ பாத்தியா..?! "
" இல்லியே...!!! "
" ம்ம்.. அப்ப அது நான் தான்..!! "
#ஙே..!!
சாட்டிங்ல ஒரு பொண்ணு...
" வெங்கி... உங்களுக்கு பிடிச்ச கிரிக்கெட் ப்ளேயர் யாரு..?! "
" ம்ம்.. மித்தாலி ராஜ்.. "
" ஐய்யே... ஆம்பள ப்ளேயர்ஸ்ல எல்லாம் புடிக்காதா..?! "
( இதென்னடா வம்பா இருக்கு..?! )
" சரி உனக்கு புடிச்ச ப்ளேயர் யாரு..?! "
" விராட் கோலி..! "
ஹி., ஹி., ஹி.. நோ கமெண்ட்ஸ்...!!
# பெண்ணாதிக்க சம்முவமே...!!
நேத்து நைட் நானும் ரவியும் ஆனந்த் வீட்டுக்கு போயிருந்தோம்...
டின்னர் அங்க தான்...
சப்பாத்தி வித் எக் மசாலா..
நானும் ரவியும் சப்பாத்தி சாப்பிட்டுட்டு இருந்தோம்...
நான் ஒவ்வொரு சப்பாத்தியா கேட்டு வாங்கி சாப்பிட்டுட்டு இருந்தேன்... அத பாத்துட்டு ரவி...
" ஏன்டா வெச்சிக்கும் போதே ரெண்டு ரெண்டா வெச்சிக்கலாம்ல... "
" ம்ம்.. நீ எத்தனை சப்பாத்தி வெச்சிட்டே...? "
" பர்ஸ்ட் 3 இப்ப 1.. மொத்தம் நாலு... "
" சரி நான் எத்தனை வெச்சிட்டேன் சொல்லு...?! "
" தெரியலியே... "
" தெரியலைல்ல.. அதுக்கு தான் இப்டி... ஹி., ஹி., ஹி...!! "
புதுசா ஒரு டீசர்ட் போட்டு ஒரு செல்ஃபிய வாட்ஸ் அப் க்ரூப்ல போட்டேன்..
உடனே ஒரு தம்பி வந்து...
" நெக் பட்டன் போடாதீங்கண்ணா... வயசு ஜாஸ்தியா தெரியும்.. "
" அப்டியா..? சரி இரு...!! "
நெக் பட்டன் கழட்டிட்டு ஒரு செல்ஃபி எடுத்து அவனுக்கு அனுப்பினேன்...
" இப்ப என்ன வயசு தெரியுது சொல்லு.. "
" 25ணா.!! "
" என்னாது.. 25-ஆ..? ஐ திங்க் இந்த டீசர்ட்ல எதோ ஃபால்ட் இருக்கு... நெக் பட்டன் போடலைன்னாலும் 5 வயசு அதிகமா காட்டுதே...!! "

Tuesday, September 26, 2017

இன்னிக்கு என் பையனோட ஸ்கூல்ல மீட்டிங்னு வர சொல்லி இருக்காங்க...
போன வாரமே இந்த மீட்டிங் வெச்சாங்க.. ஆனா பாதி பேர் கூட வரலியாம்... (ஹி., ஹி,. ஹி.. நான் கூட போகல)
So.. இந்த மீட்டிங் கம்பல்சரினு சொல்லிட்டாங்க...
இப்ப மீட்டிங் நடந்துட்டு இருக்கு...
ஆனா பாத்தீங்கன்னா... மீட்டிங்ல பாதி பேரன்ட்ஸ் தூங்கிட்டு இருக்காங்க..
அடப்பாவிகளா... இவ்ளோ கஷ்டப்பட்டு மீட்டிங் வெச்சி... மிரட்டி அட்டென்ட் பண்ண வெச்சா இங்க வந்து இப்படியா தூங்குவீங்க..?!
இதுக்கு பேசாம என்னைய மாதிரி மொபைல்ல சினிமாவாச்சும் பாக்கலாம்ல....
# வாட்சிங் " கூட்டத்தில் ஒருத்தன்..!! "
ஹி., ஹி., ஹி...!!!

Wednesday, September 20, 2017

என் பையனுக்கு ஜீன்ஸ் பேன்ட் எடுக்கலாம்னு கூட்டிட்டு போயிருந்தேன்...
நான் 600 ரூபாக்கு ஒரு ஜீன்ஸ் காட்டினா.. அவன் 1000 ரூபாய் ஜீன்ஸ் வேணும்கறான்...
பாக்க ரெண்டுமே ஒரே மாதிரி கன்றாவியா தான் இருந்துச்சு...
டக்னு என் 7வது அறிவு வேலை செஞ்சது...
" சரி.. நீ ரெண்டையும் போட்டுப் பாரு... அப்புறம் டீசைட் பண்ணலாம்... "
மொதல்ல 1000 ரூபா ஜீன்ஸை போட்டு வந்தான்.. நல்லா இருந்தது... ஆனா அப்டி சொல்லக் கூடாதே...
" வ்வே... இது பிட்டிங்கே சரியில்ல... "
" இல்லப்பா கரெக்டா இருக்கு.. "
" சாயம் போன மாதிரி இருக்கு... "
என்னைய கேவலமா ஒரு லுக் விட்டான்...
" சரி சரி.. இந்தா இதையும் போட்டு பாரு.. அப்புறம் டிசைட் பண்ணிக்கலாம்... "
600 ரூபா ஜீன்ஸை எடுத்து குடுத்து விட்டேன்... போட்டுட்டு வந்தான்... இதுவும் நல்லா இருந்தது...
" ம்ம்.. இப்ப சொல்லு... எது உனக்கு வேணும்..?! "
" பர்ஸ்ட் போட்டு பாத்ததே புடிச்சிருக்கு.. "
இவன் 1000 ரூபா மொய் வெக்காம விட மாட்டான் போலயே...!!
" சூர்யா.. அத விட இது சூப்பரா இருக்குடா.. கலர் நல்லா பிரைட்டா இருக்கு... பிட்டிங் கரெக்டா இருக்கு... " இப்டி பிரைன் வாஷ் பண்ணி... பண்ணி... ஒரு வழியா ஒத்துக்கிட்டான்...
ஹப்பாடா... 400 ரூபா மிச்சம்...!!
ஆனா பில் பண்ண வந்தப்ப தான் நோட் பண்ணினேன்... இந்த ஜீன்ஸ் ரேட் 1250 ரூபா...
ஆஹா... பதட்டத்துல 600 ரூபா ஜீன்ஸ்க்கு பதிலா..... பக்கத்துல இருந்த 1250 ரூபா ஜீன்ஸை எடுத்து போட்டு பாக்க சொல்லி குடுத்துட்டோம் போலயே...!!!
அவ்வ்வ்வ்வ்.......

Tuesday, September 19, 2017


B.Com 2nd Year..
அன்னிக்கு ஆஸ்திரேலியா Vs இந்தியா மேட்ச்... நான் கமெண்டரி கேக்க டிரான்சிஸ்டர் எடுத்துட்டு போயிட்டேன்..
அப்ப எங்களுக்கு புதுசா ஒரு சார் வந்திருந்தாரு.. பேரு லோகநாதன்...
அன்னிக்கு அவர் நடத்தின எதுவும் எனக்கு புரியல...
( பொதுவாவே எனக்கு யார் பாடம் நடத்தினாலும் புரியாது.. அது வேற விஷயம்... ஹி., ஹி., ஹி.. )
சரி கொஞ்ச நேரம் கமெண்டரியாச்சும் கேப்போம்னு... குனிஞ்சி நிமிந்து கேட்டுட்டு இருந்தேன்..
கிளாஸே மந்திரிச்சி விட்ட மாதிரி இருக்கறப்ப ஒருத்தன் மட்டும் யோகா பண்ணிட்டு இருந்தா சந்தேகம் வராதா..? வந்துச்சே...
என் பக்கத்துல வந்தவரு டிரான்சிஸ்டரை பாத்துட்டு... புடிங்கிட்டு... இரு உன்னை பத்தி கம்ப்ளயின்ட் பண்றேனு கெளம்பினாரு...
உடனே நானு....
" சார்.. சார்... வேணா சார்... HOD கிட்ட கம்ப்ளயின்ட் பண்ணிடாதீங்க சார்னு... " கெஞ்சினேன்...
லெப்ட்ல பிரின்சிபால் ரூம்.. ரைட்ல HOD ரூம்... லோகு டக்னு ரைட்ல திரும்பி HOD-கிட்ட போயிட்டாரு...
ஆஹா.... HOD ரொம்ப வில்லங்கமானவாராச்சே..?!!
கொஞ்ச நேரத்துல HOD கூப்பிடறார்னு ஆள் வந்துச்சு...
பம்மிட்டே போனேன்....
அவர் கையில என் டிரான்சிஸ்டர்...
" சார்ர்ர்ர்ர்....!! "
தலைய தூக்கி பாத்து கேட்டார் பாருங்க ஒரு கேள்வி...
.
.
.
.
" ஆமா... இதுல எந்த ஸ்டேஷன்லடா கமெண்டரி வருது.? "
ஹி., ஹி., ஹி...!! நான் சொல்லல... எங்க HOD ரொம்ப வில்லங்கமானவர்னு...

Sunday, September 17, 2017


இந்த போட்டோவ பாத்துட்டு ஒரு பொண்ணு கேட்டுச்சு...
" நிஜமாவே உங்களுக்கு கராத்தே தெரியுமா..?! "
" என்ன இப்டி கேட்டுட்டே... வீட்ல வந்து பாரு... கலர் கலரா பெல்ட் வாங்கி வெச்சி இருக்கேன்... "
" கலர் கலரா இருந்தா அதுக்கு பேரு ரிப்பன் பாஸ்... "
என்னாது... ரிப்பனாஆஆ...?!
சாம்பிள்க்கு கராத்தேல ரெண்டு அடி குடுக்கட்டுமா...?!!
ஊ... ஹூ.. ஹூ.. ஊஊ...!

Saturday, September 16, 2017


சேலத்துல ஒரு லேடியோட ஸ்மார்ட் ரேஷன் கார்ட்ல அவங்க போட்டோக்கு பதிலா காஜல் அகர்வால் போட்டோ போட்டுட்டாங்களாம்...
அட எனக்கு கூட இப்டிதான் ஆச்சு...
என் ஸ்மார்ட் கார்ட்ல என் போட்டோக்கு பதிலா அரவிந்த்சாமி போட்டோவ போட்டுட்டாங்க...
விடுவோமா... ஆபீஸ்ல போயி கம்ப்ளயிண்ட் பண்ணினோம்ல...
அந்த ஆபீசரு... என் மொகத்தை பாத்தான்... கார்ட்ல இருக்கற போட்டோவ பாத்தான்... இப்டியே மாத்தி மாத்தி பாத்துட்டு...
" என்ன சார் வெளயாடறீங்களா..? இது நீங்களே தான்... இது நீங்க சேவிங் பண்ணாதப்ப எடுத்த போட்டோனு சொல்லி அனுப்பிட்டான்... "
சரி... ரெண்டு பேரும் ஒரே சாயல்ல தானே இருக்கோம்னு அமைதியா வெச்சிகிட்டேன்...
ஒருவேளை... அரவிந்த்சாமி ரேஷன் கார்ட்ல என் போட்டோ போட்டிருக்குமோ..?!!
ஹி., ஹி., ஹி...!!!

Friday, September 15, 2017

ஹோட்டல் அஸ்வா பார்க்... மேரேஜ் ரிசப்ஷன்...
டின்னர்ல எல்லாமே சூப்பர்... அதுல பர்டிகுலரா ரசமலாய் சூப்பரோ சூப்பர்...!!
என் தம்பி பொண்ணு ஹரினிய கூப்பிட்டு இன்னொரு ரசமலாய் எடுத்துட்டு வரச் சொன்னேன்...
எடுத்துட்டு வந்து குடுத்தா... சாப்பிட்டதும்..
" இன்னொன்னு எடுத்துட்டு வா... போ.. "
" போங்கப்பா... நான் மாட்டேன்... "
" ஏய்... என்ன ஒண்ணுக்கே சலிச்சிக்கிற.. கோகுல் 3 வாங்கிட்டு வந்து குடுத்தான்., வந்தனா 2 வாங்கிட்டு வந்து குடுத்தா... போ... போ.. "
" அப்பா... நீங்க 6 ரசமலாயா..?! "
" ஹேய்.. கணக்கு தப்பா சொல்லாதே..."
" 3+2+1 = 6 தானே...?! "
" ஹி., ஹி., மொதல்லயே நான் 2 சாப்பிட்டேனே அது...?! "
" ஆ...!!! "
என் வயித்துலயே குத்திட்டு போகுது...!!!
வேற யாரை புடிக்கலாம்..?!!
" ஹேய் அருண்... இங்க கொஞ்சம் வாயேன்....!! "
ஹி., ஹி., ஹி....!!!

Tuesday, September 12, 2017


" என்னடா போட்டோ இது..?! "
" இதான் கராத்தேஃபூ..!! "
" அப்டின்னா...?! "
" கராத்தேவையும், குங்ஃபூவையும் மிக்ஸ் பண்ணி நானே கண்டு புடிச்சேன்..... "
" ம்க்க்கும்.. இங்க இத்தனை பேச்சு பேசு.. கமெண்ட்ல பொண்ணுங்க கும்முனா மட்டும் பதில் சொல்லிடாதே.. "
" அது மச்சி... வெள்ளிக்கிழமைல பொண்ணுங்க கூட சண்டை போடக் கூடாதுனு எங்க கராத்தே மாஸ்டர் சத்தியம் வாங்கியிருக்காரு... "
" அப்ப சனிக்கிழமை அடிக்கலாம்ல... "
" நோ... அன்னிக்கு தான் எங்க குங்ஃபூ மாஸ்டர் சத்தியம் வாங்கியிருக்காரே... "
" ம்ம்ம் இன்னிக்கு சன்டே... அப்ப இன்னிக்கு அடிப்பே...?! "
" ஹி., ஹி., இன்னிக்கு எங்க யோகா மாஸ்டரு.... "
துப்பிட்டு போயிட்டான்...!!!

Sunday, September 10, 2017

விநாயகர் சதுர்த்தி அன்னிக்கு என் ப்ரெண்ட் வித்யா வீட்டுக்கு போயிருந்தேன்...
" வெங்கி கொழுகட்டை சாப்பிடறியா..?! "
( டக்னு வேண்டாம்னு சொல்லலாம்னு நெனச்சேன்.. அப்புறம் விநாயகர் கோச்சிட்டார்னா...? )
" ம்ம்... கொண்டு வா.. "
உள்ளே போயி வித்யா ஓரு கிண்ணத்துல எடுத்துட்டு வந்தாப்ல..
" ஏய்... என்னா இது..?! "
" கொழுகட்டை பொங்கல்... "
" அப்டினா..?! "
" ஹி., ஹி., தண்ணி கொஞ்சூண்டு அதிகமா போச்சா.. கொழ கொழனு வந்திருச்சு.. அதான் கொழுகட்டை பொங்கல்.. "
" நல்ல வேளை தாயி.. இன்னும் கொஞ்சம் தண்ணி ஊத்தாம போனே.. அப்புறம் நான் கொழுக்கட்டை கஞ்சி தான் குடிச்சிருக்கணும்.. "
" அதுவும் உள்ள இருக்கே... ஒரு டம்ளர் எடுத்துட்டு வரவா..?! "
" என்னாது...?!!! மீ எஸ்கேப்...!! "

Tuesday, September 5, 2017

நானும் என் மச்சானும் சேலம்ல இருந்து ரிடர்ன்.. மச்சான் கேட்டாரு...
" இப்டியே நியூ பஸ்டேண்ட் வழியா போயிடலாமா..?! "
" நோ.. நோ... அது சுத்து.. பால் மார்கெட் வழியா போங்க.. "
" அதுல... டிராபிக் ஜாஸ்தி இருக்குமே... "
" இந்த டைம்க்கு அவ்வளவா டிராபிக் இருக்காது... என்னைய நம்பி போங்க மச்சான்.. "
பால் மார்கெட் வழில திரும்பி போகும் போது அங்க ஒருத்தர் என்னைய பாத்து கை ஆட்டினாரு...
யார்ரா அதுனு உத்து பாத்தேன்... தெரியல... சரினு நானும் பதிலுக்கு கை ஆட்டிட்டேன்...
" யார் மச்சான் அது..?! தெரிஞ்சவரா..? வண்டிய நிறுத்தவா..?! "
" நோ.. நோ.. யாரோ என் பேஸ்புக் ஃபேனா இருப்பாங்க..!! இதெல்லாம் அடிக்கடி நடக்கறது தான்... "
அப்டியானு ஆச்சரியமா கேட்டுட்டு அவரு காரை ஓட்டிட்டு இருந்தாரு...
நான் பேஸ்புக் பாத்துட்டு இருந்தேன்...
ரோடு ப்ரீயா இருந்தது... அதான் சொன்னோம்ல....
எப்பவும் வெங்கிய நம்பினோர் கைவிடப்படார்...
ஒரு 7 கிமீ போயிருப்போம்... காரு டக்னு நின்னுடுச்சு..
வண்டி ஏன் நின்னுடுச்சுனு நான் மச்சானை பாத்தா.... அவரு என்னைய கொலவெறில பாத்துட்டு இருந்தாரு...
ஏன் இப்டி மொறைக்கராருனு திரும்பி ரோட்டை பாத்தா....
ரோடு ப்ளாக்டு..!!
ஆஹா... இதுக்கு தான் அவன் கைய ஆட்டினானா..?! அவ்வ்வ்வ்..!!!

Sunday, September 3, 2017

காலங்காத்தால 8 மணிக்கு சுரேஷ் போன் பண்ணியிருந்தான்...
"வெங்கி... நம்ம கூட படிச்சானே சரவணன்.. அவன் நம்பர் இருக்கா..?"
"இருக்கே... எதுக்கு..?"
"இப்ப சேலத்துல ஒரு கல்யாணத்துல பாத்தேன்.. என்னை பாத்தும் கண்டுக்காம போயிட்டான்... அடையாளம் தெரியல போல இருக்கு..!!"
"கண்டுக்காம போயிட்டானா...? இரு லெப்ட் ரைட் வாங்கிட்டு வரேன்.."
"வேணாம் விடு... நான் கெளம்பிட்டேன்.. வொர்க் இருக்கு..."
"இல்ல... நீ மண்டபத்து வாசல்லயே நில்லு அவனை வந்து உன்னை மீட் பண்ண சொல்றேன்"னு சொல்லிட்டு சரவணனுக்கு போனை போட்டேன்...
"ஹலோ வெங்கி.. சொல்லுடா.."
"கல்யாணத்துல தானே இருக்கே..?"
"ஆமா.. எப்டி தெரியும்..?"
"சுரேசை பாத்தும் பாக்காம போயிட்டியாமாம்..!!"
"ஐய்யயோ... கவனிக்கலியே.."
"சரி இப்ப அவன் மண்டபத்து வாசல்ல தான் நிக்கறான், போயி பாரு..!! "
"பந்தில உக்காந்து இருக்கேன்.. போராடி இடம் புடிச்சேன் சாப்பிட்டு போறேனே.."
"டேய் ப்ரெண்ஷிப் முன்னால சாப்பாடாடா முக்கியம்.. மொதல்ல எந்திரிச்சு போயி அவனை பார்ரா வெண்ணை.."
சரின்னு போனை வெச்சிட்டான்..
8.20.... சுரேஷ்கிட்ட இருந்து போன்..
"என்ன வெங்கி.. அவன் வர்றானா இல்லியா?"
"இன்னும் அந்த நாய் வரலியா? இரு கேக்கறேன்.."
மறுபடியும் சரவணனுக்கு போன்...
"ஏன்டா எரும அவ்ளோ சொல்லியும் திங்க உக்காந்துட்டியா..?"
"டேய் கடுப்ப கெளப்பாதே.. 20 நிமிஷமா மண்டப வாசல்ல தான் நிக்கறேன்.. சுரேஷை காணோம்.."
"சுரேஷை காணோமா..?! ஆமா.. நீ எந்த மண்டபத்துல இருக்கே..?"
"ம்ம்ம்.. KNS மண்டபம்.. பெங்களூர்"
என்னாது... பெங்களூரா..?!! அவ்வ்வ்வ்வ்..

Saturday, September 2, 2017

இப்ப திருப்பூர்ல ஒரு கல்யாணம்... கார்ல போயிட்டு இருக்கேன்...
மாப்பிள்ளையும் டாக்டர், பொண்ணும் டாக்டர்...
ஆக்சுவலி இந்த கல்யாணம் பிக்ஸ் ஆக காரணமே நானும் என் சகலையும் தான்...
பொண்ணு வீட்டு சைடுல என் சகலை.. மாப்பிள்ளை சைடுல நானு... 6 மாசம் விடாம ரெண்டு பக்கமும் பேசி ஃபிக்ஸ் பண்ணினோம்...
கனெக்டிங் பீப்பிள்...!! ஹி., ஹி., ஹி...!!
ஒருநாள் என் சகலை என்கிட்ட கேட்டாரு...
" இவ்ளோ கஷ்டப்பட்டு இருக்கோமே.. கல்யாணத்துல நம்மள கவனிப்பாங்களா..?! "
" கவலைப்படாதீங்க சகலை நமக்கு கல்யாணத்துல கட்அவுட் வெப்பாங்க... "
இப்ப எனக்கு முன்னாடி என் சகலை மண்டபம் போயிட்டு போன்ல கூப்பிட்டாரு....
" சகலை.. நமக்கு கட்அவுட் எதுவும் வெக்கல.. "
" என்னாது கட்அவுட் வெக்கலையா..?! "
" ஆமா சகலை... பா.சிதம்பரம் வர்றாராம்.. அவருக்கு வெச்சியிருக்காங்க.. "
( பா.சிதம்பரமா..?! அவருக்கு எதுக்கு..? ஒருவேள நம்பள விட... சே.. அவர் மினிஸ்டர்ல... )
எனக்கு வந்துச்சே கோவம்... காரை அப்டியே திருப்பலாம்னு நெனச்சேன்...
" சகலை... கெளம்பி வாங்க... இன்னும் மண்டபத்துல என்ன பண்றீங்க..?! "
" இங்க பஃப்பேல ஏகப்பட்ட வெரைட்டி சகலை.. "
அரை மைக்ரோ செகன்ட் யோசிச்சேன்..
" சரி விடுங்க பெரிய மனசு பண்ணி கல்யாண வூட்டுக்காரங்கள மன்னிச்சிட்டலாம்.... "
ஐய்ய்ம் கம்மிங்ங்... ஹி., ஹி., ஹி...!!!

Sunday, August 27, 2017

நேத்து நைட் ஒரு கல்யாண ரிசப்சன்...
அதுக்கு என் மச்சானும் வந்திருந்தாப்ல...
டைனிங் ஹால்... ரெண்டு பேரும் ஒண்ணா உக்காந்துகிட்டோம்....
நான் என் மச்சான்கிட்ட திரும்பி....
" மச்சான்... இந்த வெஜ் ஆம்லெட் நல்லா இருக்குல்ல... "
" அப்டியா... இருங்க... "
டக்னு சப்ளையர்ல ஒருத்தரை கூப்புட்டு இவர்க்கு இன்னொரு வெஜ் ஆம்லெட் கொண்டு வாப்பானு சொல்லிட்டாரு...
பாசக்கார பயபுள்ள...
எனக்கும் எக்ஸ்ட்ரா வெஜ் ஆம்லெட் வந்துடுச்சு...
" தேங்க்ஸ் மச்சான்..!! "
" அட இது என் கடமை இல்லியா..?! "
" நான் ஒண்ணு சொன்னா தப்பா நெனச்சிக்க மாட்டீங்களே...! "
" சும்மா சொல்லுங்க மச்சான்... "
" இந்த ரொமாலி ரொட்டி, ஆப்பம், பனியாரம், கட்லட் இதெல்லாம் கூட நல்லா இருக்கு..!! ஹி., ஹி., ஹி...!! "
மச்சான் மொறைச்சிங்...

Saturday, August 26, 2017

எங்க பக்கத்து வீட்ல இன்னிக்கு வஞ்சிரம் மீன் ரோஸ்ட் போல...
செம வாசனை...
( வாசனையை வெச்சே என்ன மீன்னு கண்டுபிடிப்போம்ல.. )
டக்னு ஒரு ஐடியா....
பாரதியார் புக் இருக்கான்னு கேட்டுட்டு அங்கே போலாமா...??!
பாரதியார் புக் கிடைக்குதோ இல்லையோ.. ஒரு ரோஸ்ட் பீஸ் கன்பார்ம்...
எங்க அண்ணிக்கு என்னை வெறும் கையோட அனுப்ப மனசு வராது... ஹி., ஹி., ஹி..
அண்ணன் வீட்டுக்கு போனேன்...
" அண்ணி... பாரதியார் புக் இருக்கா..? "
" இருடா... தேடி எடுத்து தர்றேன்.. "
( என்னாது இருக்கா..?!! அவ்வ்வ்... )
" அது.. அது பாரதியார் இல்ல அண்ணி.. பாரதிதாசன் புக்..!! "
அண்ணி என்னைய உத்து பாத்தாங்க....
" நெஜமாலுமே நீ புக் வாங்க தான் வந்தியா..?! "
" பின்ன... நீங்க வஞ்சிரம் மீன் செஞ்சிருக்கீங்கனு சாப்பிட வந்தேன்னு நெனச்சீங்களா..?! "
" அதான் தெரிஞ்சி போச்சே.. உக்காரு எடுத்துட்டு வர்றேன்... "
" அண்ணி எனக்கு வஞ்சிரம் மீனு பிடிக்காது.. 2 பீஸ்க்கு மேல எடுத்துட்டு வராதீங்க..!! "
அண்ணி மொறைச்சிங்..!!!
#தனிமனிதனுக்கு மீன் இல்லை எனில் பக்கத்து வீட்டில் போயாவது சாப்பிடுவோம்..

Wednesday, August 23, 2017

" ஏங்க கவர்மெண்ட் வேலையில சேர்றதுக்கு எதுனா வயசு Eligible இருக்கா..?!! "
" யாருக்கு வெங்கி.... உங்களுக்கா..?!! "
" யெஸ்..!! "
" இருக்கே.. 30 வயசு வரை தான் சேர முடியும்... "
" ஹி., ஹி., ஹி... நீங்க சொல்றது Maximum வயசு.., நான் கேட்டது Minimum வயசு..!! "
" ம்ம்ம்ம்... 18 வயசுன்னு நெனக்கிறேன்....!! "
" ஓ மை காட்... அப்ப நான் இன்னும் 2 வருஷம் வெயிட் பண்ணனுமா..? "

Saturday, August 19, 2017

நான் தான் எங்க ஊர்ல பல பேருக்கு நல்வழி காட்டிட்டு இருக்கேன்..
சந்தேகமா இருந்தா சாயந்திரம் 6 மணிக்கு மேல மெயின் ரோடு வந்து பாக்கவும்...
" அண்ணே.. இந்த பக்கம் போங்க.. அந்த பக்கம் குழி வெட்டி வெச்சி இருக்காங்க... " ( நல்வழி காட்றதுக்கு சாம்பிள்) 
ஆனந்த் போன் பண்ணியிருந்தான்...
" எங்க மச்சி இருக்க..? "
"ஆஃபீஸ்ல தான், ஏன்..? "
" இல்ல நம்மூர்ல வரலாறு காணாத மழைன்னு FB-ல பாத்தேன், அதான்.."
" வரலாறுல எப்படா நம்மூர்ல மழை பெய்ததுன்னு எழுதுனாங்க, எல்லா மழையுமே வரலாறு காணாத மழை தான்.. "
நீயெல்லாம் சுனாமி வந்தா கூட திருந்த மாட்டேனு போனை வெச்சிட்டான்.. ஹி., ஹி., ஹி...!!!

Friday, August 18, 2017

எங்க அத்தை எப்ப பிரியாணி பண்ணினாலும் எனக்கும் குடுத்து விட்டுடுவாங்க..
போன வாரம் பிரியாணி வந்தது... நல்லா இருந்தது...
ஆனா நான் அத்தைக்கு போன் பண்ணி...
" அத்தை... நீங்க சூப்பரா பிரியாணி செய்வீங்களே.. இன்னிக்கி ஏன் சுமாரா இருக்குனு " கேட்டு வெச்சிட்டேன்...
ரிசல்ட்.....
இன்னிக்கும் பிரியாணி வந்திருக்கு...!!
#அனைத்து ராசதந்திரங்களையும் கரைத்து குடித்திருக்கிறாயடா வெங்கி..!! ஹி., ஹி., ஹி...!!
தட்டிக் கொடுக்கறது தப்பில்ல.. அதுக்கு முன்னாடி கையில வெச்சிருக்கற சுத்திய கீழே வெச்சிடணும்...!!
- பாபா வெங்கீஷ்

நேத்து என் ப்ரெண்ட் Janarthanan Kasiviswanathan வீட்டுக்கு போயிருந்தேன்... அப்ப அவனோட பெரிய அத்தை...
" வெங்கிட்டு போன்ல என்ன படம்டா வெச்சி இருக்கே..? "
" ஜெமினி கணேசனும், சுருளிராஜனும்.. "
" சரி என் போன்ல ஏத்தி குடு.. "
ஷேரிட்ல ஷேர் பண்ணிட்டு மொபைல குடுத்தேன்.. அத பாத்துட்டு...
" என்னடா ஒரு படம் தான் ஏத்தியிருக்கே... இன்னொன்னு எங்க..? "
" ஒண்ணு தான் அத்தை..!! "
" டேய்.. ஜெமினிகணேசன் ஒரு படம்... சுருளிராஜன் ஒரு படம்னு ரெண்டு சொன்னியேடா.. "
" ஐய்யோ அத்தை... அது ஒரே படம் தான்.. "
" ஒரு படத்துக்கு ஏன்டா ரெண்டு பேரு வெக்கறாங்க..?! "
நான் ஜனா பக்கம் திரும்பி...
" எப்டிடா முடியல..!! "
" திஸ் ஈஸ் ஓபனிங்... யூ சீ என்டிங்... "
" என்னடா சொல்ற..?! "
" ம்ம்ம்... படம் பாத்துட்டு எங்கடா ஜெமினி கணேசனையும் கணோம், சுருளி ராஜனையும் காணோம்னு கேக்க போறாங்களே.. அப்ப என்ன பண்ணுவே..?! "
" என்னாது...!!! மீ எஸ்கேப்..!! "
இன்னிக்கு ஒரு பொண்ணு ப்ரோபைல் பிக்சர் பாத்தேன்... ப்ரோபைல் பிக்சர் சுத்தி ஒரு கட்டம் இருந்துச்சு...
" என்னாங்க அது..?! "
" அது ப்ரோபைல் பிக்சர் கார்ட் (Guard) "
" அப்டின்னா..?! "
" நம்ம ப்ரோபைல் பிக்சர் யாரும் டவுன்லோடு பண்ணவோ, ஸ்கிரீன் ஷாட் எடுக்கவோ முடியாது.. "
" அதனால என்னாகும்..?! "
" ஒரு சேப்டி தான்... நம்ம போட்டோவ யாரும் மிஸ் யூஸ் பண்ண முடியாதுல்ல.. "
" ஓ... அப்ப உங்க டைம்லைன்ல போட்டிருக்கிற மத்த செல்ஃபீஸை எல்லாம் என்ன பண்ண போறீங்க..?! "
" அது... அது வந்து.... "
#எதுக்கு இந்த பெருமைக்கு எருமை மேய்க்கிற வேலை..?!
தொண்டையில கிச் கிச்... தொண்டையில கிச் கிச்... என்ன செய்ய...?!
என் ப்ரெண்ட் சுரேஷ் மெடிக்கல்ஸ் போனேன்..
" டேய் தொண்டை கர கரனு இருக்கு.. எதுனா நல்லதா குடு.. "
" இந்தா ஸ்டெப்சில்ஸ்.. "
" ஏ.. இது வேணாம்டா.. மிட்டாய் மாதிரி இனிப்பா இருக்கு.. கொஞ்சம் காரமா எதுனா... "
" அப்ப ஹால்ஸ் வாங்கிக்கோ.. "
" ஹால்ஸ் கூட முன்ன மாதிரி காரமா இல்லியே.... "
" அப்ப விக்ஸ்ல ஜிஞ்சர் வாங்கிக்கோ.. அது காரமா இருக்கும்... "
" விக்ஸா.. அதெல்லாம் கொழந்தைங்க சாப்பிடறதுடா.. வேற எதாவது காரமா.. "
" நீ கேக்கற ரேஞ்க்கு என்கிட்ட ஒன்னு இருக்கு..!! "
" என்ன என்ன...?! "
இரு வரேன்னு போன பக்கி.. கொண்டு வந்து என்கிட்ட குடுத்தது... 

Monday, July 31, 2017

ஒரு பொண்ணு அதோட ப்ரெண்ட் லிஸ்ட்ல இருந்து 100 பசங்கள தூக்கிட்டேனு ஸ்டேடஸ் போட்டு இருந்தது..
அத பாத்ததும் தினேஷ் செம காண்டாகிட்டான்...
( ஒரு வேள இந்த பன்னாடையும் லிஸ்ட்ல இருந்திருக்குமோ..?! )
" இந்த பொண்ணுகளுக்கு எவ்ளோ திமிர் பாத்தியா... "
" விடு மச்சி...."
" அதெல்லாம் விட மாட்டேன்.. பழிக்கு பழி வாங்கியே தீருவேன்... "
" என்ன பண்ண போறே..?! "
" நாங்களும் ப்ரெண்ட் லிஸ்ட்ல இருந்து 100 பொண்ணுங்கள தூக்கிட்டு ஸ்டேடஸ் போடுவோம்ல... "
சொல்லிட்டு கெளம்பிட்டான்...
இப்டி ஒரு மானஸ்தன் நமக்கு ப்ரெண்டா இருக்கானேனு புல்லரிச்சு போச்சு...
கொஞ்ச நேரத்துல வந்தான்...
" என்னா... நிஜமாவே 100 பொண்ணுங்கள தூக்கிட்டியா..?!! "
" இல்ல மச்சி... எண்ணி பாத்தேன்... 64 பேர் தான் வந்தது... "
" அதுக்கு...?! "
" இன்னும் 36 பேர்க்கு ரிக்வெஸ்ட் குடுத்து இருக்கேன்.. அக்செப்ட் மட்டும் பண்ணட்டும்.. அப்புறம் பாரேன்... "

Sunday, July 30, 2017

" கல்லானாலும் கணவன்,
புல்லானாலும் புருஷன்" னு Wife-கிட்ட பஞ்ச் டயலாக் பேசி வெக்காதீங்க...
கல்லு, புல்லு ரெண்டும் கீழே தான் கெடக்கும்... காலம் காலமா அத மிதிக்கறது தான் வழக்கம்...!!
- பாபா வெங்கீஷ்

Saturday, July 29, 2017

ரொம்ப வருஷம் கழிச்சு என் ஸ்கூல்மேட் பிரசாத்தை இன்னிக்கு ரோட்ல பாத்தேன்...
அவன் என்னைய பாத்ததும் சொன்னான்....
" ஒரு மந்தையில் இருந்த இரண்டு ஆடுகள் வேறு வேறு பாதையில் சென்று விட்டன. இரண்டும் சந்தித்த போது பேச முடியவில்லையே.. ஏன்..? ஏன்..? ஏன்...?! "
நான் அவன் முகத்தை உத்து பாத்துட்டு சொன்னேன்....
" ஏன்னா ஆடு பேசாதுடா லூசு..!!! "
நீ இன்னும் திருந்தவேயில்லையானு கேட்டுட்டு போறான்...

Friday, July 28, 2017

துன்பம் வர்றப்ப சிரிக்கலாம் தப்பில்ல... ஆனா
அது அடுத்தவனுக்கு வர்றப்ப சிரிக்கக் கூடாது..!!!
- பாபா வெங்கீஷ்

Thursday, July 27, 2017

என் ப்ரெண்ட் ஆனந்த் போன் பண்ணியிருந்தான்....
" மச்சி... என்ன விசயம்னே தெர்ல... இந்த வாரம் மட்டும் புதுசா 2 பொண்ணுங்க என்கிட்ட சாட்டிங் பண்ணியிருக்காங்க... "
" யாரு மச்சி... வெலாசம்..?! "
" உன்னை பாத்தா அவ்ளோ நல்லவனா தெரியலியே... "
" அப்ப தரமாட்டே..?! "
" எக்ஸாட்லி... "
" சரி விடு... நானே கண்டுபிடிக்கறேன்.. "
" முடிஞ்சா கண்டுபிடிச்சிக்கோ.. "
" ம்ம்ம்.!! "
அவன்கிட்ட பேசிட்டு வந்து நான் தீவிரமா யோசிக்க ஆரம்பிச்சேன்...
.
.
.
.
ஆமா... நம்ம 3-வது புது ஃபேக் ஐடிக்கு என்ன பேரு வெக்கலாம்..?!
#சாவுடா ஸ்டேடஸ்...!!!

Wednesday, July 26, 2017

என் சின்ன பையன் கோகுல்கிட்ட..
" இன்னிக்கு என்ன எக்ஸாம்..?! "
" இங்கிலீசு..!! "
" படிச்சிட்டியா..?! "
" ம்ம்ம்.. " தலைய ஆட்டினான்..
" இங்க தலைய தலைய நல்லா ஆட்டு.. ஆனா மார்க் மட்டும் 50-ஐ தாண்டிடாதே...."
அவன் என்னைய லூச பாக்கற மாதிரி பாத்தான்... பாத்துட்டு....
" எக்ஸாமே 50 மார்க்தான்பா..!! "
#ஙே..!!!

Tuesday, July 25, 2017


ஐ ஜாலி.... ஐயம் வெரி ஹேப்பி..!!
டேய்... மனசு எதுவும் மாறி தொலைச்சிடாதேடா....


Saturday, July 22, 2017

என் எழுத்து திறமையை(?!) பாராட்டி ஆஸ்திரியா அரங்சாங்கம் ஸ்டாம்பு வெளியிட்டுக்கறோம்னு கெஞ்சினாங்க...
என் ரேஞ்சுக்கு இந்த 1 ஈரோ, 2 ஈரோ மதிப்புல எல்லாம் ஸ்டாம்பு வெளியிடக் கூடாது... கொறைஞ்சது 10,000 ஈரோ மதிப்பாச்சும் இருக்கணும்னு சொன்னேன்...
சரி டிஸ்கஸ் பண்ணிட்டி சொல்றோம்னு போயி இருக்காங்க..!
என்ன இதுக்கே டென்ஷன் ஆகிட்டீங்க...?
போன மாசம் வந்துட்டு போன இத்தாலிகாரங்களுக்கு 20,000 ஈரோ மதிப்பு சொல்லியிருந்தேன்...
இப்ப ஆடி மாசம்ல.. அதான் 50% டிஸ்கவுண்டு..
ஹி., ஹி., ஹி...!!

Sunday, July 16, 2017

என் க்ளாஸ்மேட் ராதிகா ப்யூட்டி பார்லர் வெச்சி இருக்காப்ல... இன்னிக்கு சூப்பர் மார்கெட்ல பாத்தேன்...
" ஹாய் ராதிகா.. என் முகம் ப்ரைட்டாகணும்.. எதாவது டிப்ஸ் சொல்லேன்... "
( இப்ப நான் என்ன கேட்டுட்டேன்.. எதுக்கு இப்ப நாயை பாக்கற மாதிரி பாக்கறா..?! )
" ம்ம்ம்.. ஒரு டார்ச் வாங்கி மூஞ்சில அடிச்சிக்கோ..!! "
( டார்ச்சா..?! ஒருவேளை நம்ம அழகை பாத்து பொறாமையா இருக்குமோ..?!! )
" வெளையாடாதே... "
" சரி., சரி.. டெய்லி 2 தடவை அலோவெரா பூசு.. "
" அத நான் எங்க தேடறது..?! வேற சொல்லு.. "
" கடலை மாவு, கொஞ்சம் தயிர், எலுமிச்சை ஜூஸ்... "
" ஸ்டாப் ஸ்டாப்.. ரொம்ப கஷ்டமான வேலையா இருக்கும் போல... சிம்பிளா வேற..."
" அப்ப காலைல, சாயந்திரம் ஒரு தக்காளிய கட் பண்ணி மூஞ்சில பூசிக்கோ......"
" என்னாது தக்காளியா..?!! ஆணியே பிடுங்க வேணாம்.. நான் இப்டியே இருந்துட்டு போறேன்... "
" ஏய்.. மூஞ்சி நல்லா இருக்கும்டா.. "
" ம்ம்க்கும்.. மூஞ்சி இருக்கும்.. தக்காளில கை வெச்சா கை இருக்குமானு தெரியலயே... "

Saturday, July 15, 2017

" இந்த விஜய் டிவி ' சூப்பர் சிங்கர் '-ல எல்லாம் ஏகப்பட்ட பாலிடிக்ஸ் இருக்குபா.. "
" தெரியுமே... அதனால தான் நான் கலந்துக்கறது இல்ல...! "
" ஙே...!! "

Friday, July 14, 2017

நான் படிச்சதென்னவோ கோ-எஜுகேஷன் ஸ்கூல்ல தான்... அப்பல்லாம் கூட படிக்கிற பொண்ணுங்ககிட்ட பேசினதேயில்ல...
பேசிக்கலி ஐயம் வெரி Shy type. அதுவுமில்லாம அந்த பொண்ணுங்க என்னைய மதிக்காது வேற...
எல்லாம் என்னைய விட 50 மார்க் ஜாஸ்தியா எடுக்கற திமிரு.. ( ஒவ்வொரு சப்ஜெக்ட்லயும் )
ஹி., ஹி., ஹி...!!!

Wednesday, July 12, 2017

பிக் பாஸ் 1 முடிஞ்சதும்...
Shajahan S -க்கு ஜூலியையும்,
Maram R-க்கு ஓவியாவையும் பேசி முடிக்கறோம்..
எத்தனை பிரச்னை வந்தாலும்.. Ramesh Subburaj-ஐ பலி குடுத்தாவது இந்த கல்யாணத்தை நடத்தி காட்டுறோம்...
இது டெரர் கும்மி மீது ஆணை...!!!

Tuesday, July 11, 2017


சேலம் சுப்பன் கடையில சாப்பிட்டுட்டு வரும்போது என் சகலை பாத்துட்டாரு...
" என்னா சகலை... காலை டிபனா..?! "
" ஆமா சகலை... "
" என்ன சாப்பிட்டீங்க..?! "
" தோசையும், சிக்கனும்.. "
" அவ்ளோதானா..?! லைட்டா முடிச்சிட்டீங்க போல...?! "
" ம்ம்ம்ம்... அதான் நான் டயட்ல இருக்கேன்ல... "
அப்புறம் கொஞ்ச நேரம் பேசிட்டு கெளம்பி போயிட்டாரு...
நல்லவேளை எத்தனை தோசைனு அவரும் கேக்கல... 11-னு நானும் சொல்லல...!!
ஹி., ஹி., ஹி...!!!