Saturday, February 28, 2015இவரு பெரிய பாசமலர் சிவாஜி., 
அவங்க சாவித்திரி...
அவரு " சிஸ்டர் " னு பாச மழை பொழியதும்..
இவங்க " சகோ " னு அதுல நனையறதும்... 

அடடடடா.... முடியலடா சாமி...!!!
பேசாம ஃபேஸ்புக்ல " Add Brother ".,
" Add Sister " ரெண்டு பட்டன்
வெச்சிவுட்டுடுங்களேன்பா...
" ப்ரெண்ட் "-னு சொல்ல அம்புட்டு
தயக்கமா இருந்தா ., பயமா இருந்தா..
ப்ரெண்ட் ரிக்வெஸ்ட் எதுக்கு குடுக்கணும்.,
எதுக்கு அக்செப்ட் பண்ணனும்கறேன்..
போலியான உறவுகளை தவிர்ப்போம்..
உண்மையான நட்பை வளர்ப்போம்..
பொதுநலன் கருதி வெளியிடுவோர்....
" கோகுலத்தில் சூரியன் " வெங்கட் .,
மங்குனி அமைச்சர் ( சென்னை கிளை ).,
கணேஸ்ராஜா கணேஸ் ( இலங்கை கிளை )
( அடி விழற மாதிரி இருந்தா... கம்பெனிக்கு
ஆள் வேணும்ல.. ஹி., ஹி., ஹி...!!! )


Wednesday, February 25, 2015


மதியம் என் ப்ரெண்ட் மணி போன்
பண்ணியிருந்தான்...
" என்னடா.. உன் கிரிக்கெட் போஸ்ட்
செம ரீச் ஆகிடுச்சு போல.. "
" ஆமாடா.. நானே இந்த அளவு எதிர்பார்க்கல.. "
" அப்புறம் நெக்ஸ்ட் சினி பீல்ட் போற
ஐடியா இருக்கா..? "
" சினி பீல்டா... சே., சே.. எனக்கு அதுல
இன்ட்ரஸ்ட்டே இல்ல.. "
" ம்ம்... அப்புறம்..?! "
" நெஜமா தான்டா.. 2 வருஷம் முன்னாடியே
ஆஃபர் வந்தது. நான் தான் வேண்டாம்னு
சொல்லிட்டேன்.. தெரியுமா...? "
" தெரியுமே.. என்னால லைட் புடிக்க முடியாதுங்க.,
சூடு தாங்காதுனு சொல்லி இருப்பே.. "
" போடா நாயே..!!! "

Sunday, February 22, 2015

விஜய் டிவி கமெண்டரி...
அஸ்வினும், டுப்லசிஸும் சென்னை டீம்ல
ஒண்ணா நிறைய மேட்ச் வெளையாடி இருக்காங்க..
அதனால அஸ்வினுக்கு டுப்லசிஸ்ஸின் வீக்னஸ் 
தெரியும்..
# கொய்யாலே... அப்ப டுப்லசிஸ்க்கு அஸ்வின்
வீக்னஸ் தெரியாதா...?!
" தவான் இப்படி ஏமாத்துவான்னு எதிர்பார்க்கல... "
" அதான் 137 ரன் எடுத்து இருக்கான்ல..
இன்னும் என்ன..?!! "
"அதான் மச்சி... எப்படியும் கம்மி ரன்ல
அவுட் ஆகிடுவான்னு ரெண்டு, மூனு
போட்டோ ஸ்டேடஸ் ரெடி பண்ணி வெச்சேன்..
போட முடியாம இப்டி பண்ணிட்டானே..!! "
# ஸ்டேடஸ் போச்சே....!!!!
## IND Vs S.A
கான்டேக்ட்ஸ் லிஸ்ட்ல நல்லா தேடி தேடி...
இவன் கண்டிப்பா வெட்டியா தான்
இருப்பான்னு நம்பி போன் பண்றப்ப..
" மச்சி. கொஞ்சம் பிஸியா இருக்கேன்..
அப்புறம் கூப்பிடு " னு அவன் சொல்லும்
போது தான் உறைக்கும்...
" நாம எவ்ளோ வெட்டியா இருக்கோம்னு "
" ஏம்மா... நீ பொண்ணோட ப்ரெண்ட் தானே..?
பொண்ணை விட ஜாஸ்தி மேக்கப்
போட்டுட்டு வந்து இருக்கியே... உன்னை
பாத்தா.. மாப்ள பையன் ஃபீல் பண்ண மாட்டான்..?!!! "
# என்னம்மா... இப்டி பண்றீங்களேம்மா..!!
" பவுலிங் பிட்ச் "-னு சொல்லி சமாளிக்கலாம்னு
பாத்தா.. இவனுங்க வேற காட்டுத்தனமா
அடிக்கறானுங்க...
124 ரன் தானே.. அதை கொஞ்சம் 
மெதுவாத்தான் எடுங்களேண்டா..
# இங்கிலாந்து கேப்டன் மைண்ட் வாய்ஸ்..!!

Thursday, February 19, 2015


இன்னிக்கு சாயந்திரம்.. என் Wife..
" அனேகன் சஸ்பென்ஸ், த்ரில்லர்
படமாங்க.. போலாம்க... "
" சரி...!! "
தியேட்டர்ல படம் ஓடிட்டு இருக்கும்
போது... பக்கத்துல இருந்த என் Wife...
" எதுக்குங்க இந்த மாத்திரை..?
இதுல தான் எதோ வில்லங்கம் இருக்கு..!! "
" இவன் தான் வில்லனா இருப்பான்.. "
" இது ஆவியா எல்லாம் இருக்காது..
வீடியோ கேம் எபெக்ட்டா இருக்கும்.. "
" இந்த டாக்டர்க்கு இதுல சம்பந்தம்
இருக்குனு நெனக்கிறேன்.. "
" இவனை ரொம்ப கெட்டவன் மாதிரி
பில்டப் பண்றது.. நம்ம அட்டென்சனை
டைவர்ட் பண்றதுக்கு.. இவன் டம்மி பீசா
தான் இருப்பான்.. "
ஒன்னு விடாம நடந்தது...
# ம்ம்... நான் நல்லா பார்த்தேன்...
சஸ்பென்ஸ்..., திரில்லர் படம்...
என் சின்ன பையன் கோகுல்...
" எனக்கு இந்த டியூசன் வேண்டாம்பா..,
ஜோதி மிஸ் டியூசன் சேர்த்தி விடுங்க.. "
" ஏன்டா அங்கே நல்லா சொல்லி தர்றாங்களா..?!! "
" இல்லப்பா.. அந்த டியூசன்ல நெறைய
நாள் லீவ் விடறாங்களாம்..! "
# இதெல்லாம் பெருசான என்னை
மாதிரியே தான் இருக்க போவுது..

இன்னிக்கு சாட்டிங்ல..
" ஹாய் வெங்கட்.. நான் தீபிகா..!! "
இப்படித்தான் ஆரம்பிக்கறாங்க...
ஆனா
3-வது நாள்...
" மங்குனி அமைச்சர் நம்பர் குடுங்க..
அவர் ரேஷன் கார்டு ஜெராக்ஸ் குடுங்கனு
ஆரம்பிச்சிடறாங்க.. "
( அந்த பக்கிதான் வேணும்னே நம்மகிட்ட
இப்டி கேக்க சொல்லி அனுப்பி வைக்கிதோ..?! )
நான் ஒரு முடிவோட இருந்தேன்..
" இத பாருங்க தீபிகா..... மங்குனி அமைச்சர்
என் ப்ரெண்ட் தான்.. ஆனா அவனை பத்தி
கேக்கறதா இருந்தா... ஐயம் வெரி சாரி..
ஒன்னும் சொல்ல மாட்டேன்... "
" மங்குனி அமைச்சரா..? யாரு அவரு...?
லிங்க் ப்ளீஸ்...!! "
# ஆஹா.. நாமளாத்தான் உளறிட்டோமோ..!!!!
உலகின் கடைசி மனிதன் வாட்ஸ் அப்
அப்டேட் செய்து கொண்டிருந்தான்..

அட கொக்கமக்கா....
இதுக்கு 8337 பேர் லைக்கு...
103 பேர் ஷேரு....
# தீயா வேலை செய்யறாங்கோ...!!!!

த்த்தூ..!!!
இதுக்கு நீ லண்டனுக்கு திரும்பி போயி
பிச்சை எடுக்கலாம்...!!!
# வோடோபோன் தில்லுமுல்லு..!!!
ஒரு பொண்ணு ப்ரெண்ட் ரிக்வெஸ்ட் அக்செப்ட்
பண்ணிட்டா... உடனே எதுக்குடா போயி
" தேங்க்ஸ்.. தேங்க்ஸ்.. தேங்க்ஸ்னு " மெசேஜா
அனுப்பி இம்சை பண்றீங்க..?!!!
.
.
.
.
# சே.. இவனுங்களால நிம்மதியா ஒரு Fake Id கூட
வெச்சிக்க முடியல..
smile emoticon tongue emoticon

காலேஜ்ல எனக்கு கண்மணினு
ஒரு ப்ரெண்டு
பேச்சுப்போட்டி, கவிதைபோட்டினு
எது நடந்தாலும் நாங்க ரெண்டு பேரும் 
கலந்துக்குவோம்..
( பரிசு என்னமோ அவங்களுக்கு தான்
கெடைக்கும்.. அது வேற விஷயம்..!!
ஹி., ஹி., )
ஒரு நாள் கண்மணி ஒரு டைரி
வெச்சிருந்தாப்ல... எடுத்து படிச்சா...
டைரி முழுக்க... கவிதை..!!!
அட நம்ம கூட இருக்குற புள்ளக்கு
இவ்ளோ தெறமையான்னு புல்லரிச்சு
போச்சு...
" கண்மணி... இதை நீயா எழுதினே..? "
" ஆமாம்.. எதுக்கு கேக்கற..? "
" வாவ் சூப்பர்... சூப்பர்... வைரமுத்து மாதிரியே
எழுதறியே... "
" ஏய்.. நெசமா சொல்லு... நீ வைரமுத்து கவிதை
படிச்சி இருக்கே...?!! "
" என்ன இப்படி கேட்டுட்டே.. ஒரு புக் விடாம
படிச்சி இருக்கேன்.. ஆமா ஏன் அப்படி டவுட்டா
கேக்கறே..? "
" ஏன்னா.. இதெல்லாமே அவரோட கவிதை
தான்..!!! அதான் கேட்டேன்... "
டொய்ங்....
# ஓவரா ஃபிலிம் காட்டிட்டோமோ..?!!
விஜய் டிவில கிரிக்கெட் பார்க்கறவங்களுக்கு
ஒரு டிப்ஸ்....
கமெண்டரி Mute-ல வெச்சிட்டு பாருங்க..
இல்லன்னா... தூங்கிடுவீங்க..!!!
# மிடில....
கப் எல்லாம் வேணாம்... இந்த மேட்ச்
மட்டும் ஜெயிச்சா போதும்னு
நம்மள மாதிரியே தான் அவிங்களும்
சொல்லி விட்டு இருக்காய்ங்களாம்..!
# இந்தியா Vs பாகிஸ்தான்..!!

Tuesday, February 17, 2015


இந்தியா, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, 
துபாய், அமெரிக்கா, ஆஸ்திரேலியா நண்பர்கள் 
இதையெல்லாம் நோட் பண்ணுங்கப்பா...
smile emoticon
இன்னிக்கு காலைல...
என் Wife கேட்டாங்க...
நீங்க எப்ப கடைசியா என்கிட்ட
" ஐ லவ் யூ " சொன்னீங்க..??
( ஆஹா.. இது எதோ ப்ளான் மாதிரி தெரியுதே...
Valentines Day அன்னிக்கு அடி வாங்க கூடாதுங்கற
என் கொள்கைக்கு பங்கம் வந்துடுமோ...?!! )
" நான் டெய்லி சொல்லிட்டு தான்மா
இருக்கேன்.. "
" எனக்கு கேக்கவே இல்லையே.. "
" அதுக்கெல்லாம் ஞானக்காது வேணும்..! "
" போதும்.. என் ஞானவாய்ல நல்லா
வந்துட போகுது..!! "
# ஞே..!!!!

Friday, February 13, 2015

" லவ்க்கு எல்லாம் ஐடியா குடுக்கறீங்க..
பாத்து... ஜாக்ரதையா இருங்க "-னு
ஆளாளுக்கு அட்வைஸ் பண்றாய்ங்க...
ஹா., ஹா., ஹா....
என் ரேஞ்ச் தெரியாம பேசறீங்களே...
ஒரு பய என்னை டச் பண்ண முடியாது..
.
.
.
அம்புட்டு வேகமா ஓடுவேன்..!!!
tongue emoticon tongue emoticon

Thursday, February 12, 2015


" மச்சி.. இந்த லவ்வர்ஸ் டேக்கு
என் லவ்வர்க்கு டெடி பியர் கிப்ட்
குடுக்கலாம்னு இருக்கேன்... "
" டெடி பியரா..? "
" ஆமா மச்சி.. டெடி பியர்ன்னா
அவளுக்கு உயிரு..!! "
" இப்பத்தான்டா ஒரு விஷயம்
வெளங்குது. "
" என்ன..? "
" அந்த பொண்ணுக்கு உன்னை
ஏன் பிடிச்சதுன்னு..!! "
" கிர்ர்ர்ர்..!!! "
( கரடி மாதிரியே உறுமிட்டு போயிட்டான் )

பாஸ்போர்ட் ஆபீசில் உக்காந்து சிந்திச்சிட்டு
இருந்தேன்...
( ஸ்டேடஸ் போடோணும்ல... )
என் பக்கத்துல ஒரு பொண்ணு கையில
ஒரு குழந்தையோட வந்து நின்னது..
" சார்.. கொஞ்சம் சீட்னு... " அவங்க ஆரம்பிக்கவும்
நான் டக்னு எந்திரிச்சு சீட் கொடுக்கவும் சரியா
இருந்தது...
எழுந்து நின்னப்புறம் தான் கவனிச்சேன்..
அந்த பொண்ணு..எனக்கு முன்னாடி உக்காந்திருந்த
7 பொண்ணுகளை தாண்டி என்கிட்ட வந்து
சீட் கேட்டிருக்குன்னு....
# இயற்கையாகவே ஆண்கள் உதவும் குணம்
கொண்டவர்கள் என்பது இதன் மூலம்
தெளிவாகிறது...
smile emoticon smile emoticon

காலைல சாப்பிட்டுட்டு இருக்கும் போது
கனநேரத்தில் உதித்த சந்தேகம்...
" ஒருவேளை இட்லி Chinese Food-ஆ
இருக்குமோ..?!!! "
# புரூஸ் லீ.., ஜெட்லீ.., இட்லீ...!!!
அம்பானிய நெனச்சா நெம்ப பெருமையா
இருக்கு...
நீத்தா அம்பானி ஷாப்பிங் பண்றதுக்குன்னே
இவ்ளோ பெரிய மால் கட்டி விட்டு 
இருக்கான்யா...
# கொய்யாலே.. ஒரு செருப்பு விலை 
3000 ரூபாயாம்.!!!
" லைசன்ஸ் இல்லாம டுவீலர்ல போற
எந்த பொண்ணயாவது போலீஸ் மடக்கி
ஃபைன் வாங்கியிருக்கா..?!! "
# வீ வான்ட் சம உரிமை.... 
போராடுவோம்.. போராடுவோம்...
டிஸ்கி : தேவைப்பட்டால்.. மங்குனி அமைச்சர் 
தீ குளிப்பார்..


" அம்மா.. சீக்கிரம் வந்து இந்த Sum
சொல்லிக்குடு...!! "
" வேலையா இருக்கேன் குட்டி.. 2nd Std
வந்துட்டேல்ல.. நீயே டிரை பண்ணு..!! "
" இல்லம்மா... இந்த Sum ரொம்ப கஷ்டமா
இருக்கு... "
" உனக்கெல்லாம் என்ன கஷ்டமான Sum
இருக்க போவுது.. சரி போயி.. அப்பாவை
கேளு...!! "
" கஷ்டாமா இருக்குனு சொன்னதே
அப்பாதான்மா... !! "
# தட் " கணக்கு புக்கே காறி துப்பின "
மொமண்ட்..!!

Monday, February 9, 2015


" இன்னிக்கு என்ன டின்னர்..? "
" சப்பாத்தி... "
" ஆமா வெங்கி.. எனக்கு ஒரு டவுட்டு.. 
அதுக்கு ஏன் சப்பாத்தினு பேரு வந்துச்சு.. "
" ஓ.. அதுவா... அந்த காலத்துல நம்ம ஊர்ல
இட்லி மட்டும் தான்.. "
" ம்ம்..!! "
" அப்புறம் வட நாட்டு மன்னர்கள் படையெடுத்து
வந்து.. இங்கே ஆக்கிரமிப்பு செஞ்சாங்களா..? "
" ம்ம்.. "
"அப்பத்தான் நம்ம ஆளுங்க சப்பாத்தியை
கண்ணுல பாத்தாங்க... "
" சரி.. "
" அதுல சாப்பிட உப்பு காரம் இல்லாம
சப்புனு இருந்துச்சா... உடனே சப்பாத்தினு
பேரு வெச்சிட்டாங்க..!!! "
" ஞே..!!! "
# இதுக்கு பேரு தான் வாய்லயே சப்பாத்தி சுடறது..!
மங்கு அடிக்கடி சொல்வான்...
" மச்சி... நீ பேமிலிமேன்... ஆனா..
நான் பேச்சிலர்டா...!! "
இன்னிக்கும் சொன்னான்...
" டேய் மங்கு... எனக்கு ரெண்டு விதமான
ப்ரெண்ட்ஸ் இருக்காங்க... "
" ம்ம்.. "
" ஒன்னு.. கல்யாணம் ஆகாத ப்ரெண்ட்ஸ்.. "
" இன்னொன்னு...??!! "
" கல்யாணமே ஆகாத ப்ரெண்ட்ஸ்...!! "
" கிர்ர்ர்ர்...!!!! "
# கொய்யாலே.. இனிமே பெருமை பேசுவ...?!!

Sunday, February 8, 2015

பேட்டிங் நல்லா பண்ணினா இந்தியா
ஜெயிக்கும்..!
பவுலிங் நல்லா பண்ணினா ஆஸ்திரேலியா
ஜெயிக்கும்...!
இந்த சூட்சுமம் தெரிஞ்சா போதும்..
டிவில கமெண்டரி சொல்ல போலாம்...!!!

காலைல Chat-ல ரெண்டு பொண்ணுங்க
நம்பர் கேட்டாங்க..
குடுத்திட்டேன்...
இப்ப ஒரே டென்ஷனா இருக்கு...
.
.
.
.
.
.
.
# மிஸ்டு கால் குடுப்பாங்களோ..?!!!
நாமதான் திருப்பி கூப்பிடணுமோ..?!!!
smile emoticon tongue emoticon

Friday, February 6, 2015

" மச்சி.. Saree Business பண்ணலாமா..? "
" என்ன ஐடியா.. விளக்கமா சொல்லு.. "
" சூரத்ல இருந்து 500 ரூபாய்க்கு Saree 
வாங்கறோம்.. இங்கே Wholesale கடைக்கு
700 ரூபாய்க்கு போடறோம்.. "
" அப்ப ஒரு Saree-க்கு லாபம் 200 ரூபா... "
" கரெக்ட்.. ஆளுக்கு Fifty : Fifty.. ஓ.கேவா.. "
" ஓ.கே மச்சி.. ஆனா அந்த 100 ரூபாய
என்ன பண்ண போறே..? "
" எந்த 100 ரூபா.. "
" ஆளுக்கு அம்பது, அம்பது எடுத்துகிட்ட
மிச்சம் 100 ரூபா இருக்குமே.. அது.. "
துப்பிட்டு போயிட்டான்..!!!

காலைல அலாரம் வச்சி எந்திருச்சு மணிரத்னம், ஷங்கர்,
முருகதாஸ், கௌதம் மேனன்னு ஒவ்வொருத்தர் வீட்டு
வாசல்ல போயி நின்னு.. யார்கிட்டயாவது அசிஸ்டெண்ட்
வேலைக்கு போயி சேர்ந்து.. திட்டு வாங்கி, குட்டு வாங்கி..
அதுல வாங்குற சம்பளம் பத்தாம தனியா ஒரு படம் 
பண்ணலாம்னு ரெண்டு மாசம் உக்காந்து ராப்பகலா
கஷ்டப்பட்டு ஒரு கதையை எழுதி, டீயும், தம்மும் பத்த
வெச்சிட்டே அதுக்கு யோசிச்சி யோச்சிச்சு சீன் புடிச்சு..
அதை தூக்கிட்டு A.V.M ஸ்டுடியோ, ஷங்கர் சார் ஆபீஸ்,
ஆஸ்கார் பிலிம்ஸ் ஆபீஸ், லிங்குசாமி சார் ஆபீஸ் ,
உதயநிதி சார் ஆபீஸ்னு ரோடு ரோடா அலைஞ்சு..
அதுல ஒரு புண்ணியவான் கதை நல்லா இருக்கே..
டெவலப் பண்ணுங்கனு சொல்லி ஒரு க்ரூப் செட் ஆகி..
அவங்க கூட நைட் எல்லாம் flask-ல டீ வச்சி, கதையை
டிஸ்கஸ் பண்ணி, கதையை மெருகேத்தி.. அதை தூக்கிட்டு
ஹீரோகிட்ட போனா..
அவரு கதையில அது சரியில்ல, இதை மாத்து,
பஞ்ச் டயலாக் வை., அங்கே பைட் வை , ஃபாரின்ல
ரெண்டு சாங் வை., ஹீரோயினா அவங்கள புக் பண்ணுனு
நம்மள கொலையா கொன்னு.. எல்லாத்துக்கும் சரி சரினு
தலையாட்டிட்டு... திருப்பி பாத்தா.. இது நம்ம கதைதானானு
சந்தேகம் நமக்கே வரும்.. அப்புறம் புரோடியூசர் கையில
கால்ல விழுந்து சம்மதம் வாங்கி சூட்டிங் போயி...
பைட் சீன்ல ஹீரோக்கு கால்ல அடி.. சூட்டிங் கேன்சல்...
ஹீரோயினுக்கு தலைவலி.. சூட்டிங் கேன்சல்னு எப்படியோ
தட்டு தடுமாறி ஒரு வழியா படத்தை எடுத்து முடிச்சி
ரிலீஸ் பண்ண தியேட்டர் கிடைக்காம முழிக்கும் போது..
சேரன் சார் போன் பண்ணி C2H-ல ரிலீஸ் பண்ணலாமானு
கேப்பாரு.. வேணாம்னு சொல்லிட்டு உக்காந்து இருக்கும்
போது.. கடவுள் புண்ணியத்துல ரிலிஸ் பண்றதுக்கு
வழி பொறந்து.. படத்தை ரிலீஸ் பண்ணினா...
கதை என்னுதுனு ஒருத்தன் கேஸ் போடுறான்... அதை
சமாளிச்சு இந்தாண்ட திரும்பினா...
பர்ஸ்ட் ஷோ முடிச்ச உடனே " மொக்கை"-னு ஸ்டேடஸ்
போட்டுடறாங்க... படமே பார்க்காம...
# போதும்பா.... மிடில..


என் Wife என்கிட்ட கையை நீட்டி..
" ரெண்டு விரல்ல ஒண்ணை தொடுங்க.. "
" எதுக்கு..? "
" எதை தூக்கிட்டு வர்றீங்க..?
மாவு பாத்திரம்., உப்பு சட்டி..!
ரெண்டுல எது உங்க சாய்ஸ்..? "
" நீயும் இந்த ரெண்டு விரல்ல ஒண்ணை
தொடு.. "
" எதுக்கு..? "
" மாவு கொட்டினா பரவாயில்லையா.?
உப்பு சட்டி உடைஞ்சா பரவாயில்லையா.? "
# என்னை அறிந்தால்...!!!

Wednesday, February 4, 2015


" ஒரே ஒரு பொய்ய சொல்லியா
இத்தனை பொண்ணுகளை ப்ரெண்ட்
புடிச்சே..? அப்படி என்னடா சொன்னே...?! "
" உங்க கவிதை சூப்பருங்க...!!! "


" ஹேப்பி பர்த்டே சோபிகண்ணு..!! "
" உன்னைத்தான் தேடிட்டு இருந்தேன்.. வா.. "
" எதுக்கு பர்த்டே ட்ரீட் குடுக்கவா....?!!! "
" ஆக்சுவலா நீ ஓட்டைவாயாடா...? "
" வொய்.. யூ ஆஸ்கிங் திஸ் சில்லி கொஸ்டின்..? "
" எனக்கு இன்னிக்கு பர்த்டேனு எதுக்குடா
ஊர் புல்லா சொல்லி வெச்சே..? "
" ஹி., ஹி., ஹி.. ஒரு வெளம்பரம்..!! "
" போன் பண்ணி பர்த்டே விஷ் பண்ணி
கொல்றானுங்கடா.. "
" பர்த்டே விஷ் பண்ணினா என்ஜாய் பண்ணனும்..
நீ என்னமோ சலிச்சிக்கிற..? "
" அட பக்கி.. எனக்கு இன்னிக்கு பர்த்டேவே
இல்லடா..!! "
" என்னாது.. பர்த்டே இல்லியா.?!! நான் ஐ.டி.கார்ட்ல
பார்த்தேனே.. " 4/2 " -னு போட்டு இருந்ததே.. "
" அது 2/4 ( ஏப்ரல் 2 ) "
( ஆஹா... மாத்தி படிச்சி தொலைச்சிட்டோமோ...?!! )
# பிரியாணி போச்சே..!!
'மெட்ராஸ் ஐ'-யே பரவுது...
' ஐ ' வைரஸ் பரவாதா..?!!
# இத கேட்டா நம்பள...
தவம் முடிந்து கண்விழித்தார் குரு..
அப்போது சிஷ்யன்...
" குருவே... வாழ்க்கைன்னா என்ன..? "
அவனை தீர்க்கமாய் உற்று நோக்கிவிட்டு
குரு சொன்னார்...
" சிஷ்யா... அது சிவாஜி , அம்பிகா
நடிச்ச படம்..!! ""

Sunday, February 1, 2015

" ஹலோ.. அடுத்த மாசம் 20-ம் தேதி
எங்க வீட்ல விசேஷம்... "
" என்ன விசேஷம்..? "
" தங்கச்சிக்கு நிச்சயதார்ததம்.. "
" சரி.. அதுக்கென்ன... "
" சுண்ணாம்பு அடிக்கணும்.. வர்றீங்களா..? "
" நாங்க சுண்ணாம்பு எல்லாம் அடிக்கறதில்ல..! "
" இல்லையே சுண்ணாம்பு அடிக்கறதுல
நீங்கதான் நெ. 1 சொன்னாங்களே..!! "
" எவன் சொன்னான்..?!! "
" யார் சொல்லணும்... எனக்கே தெரியுமே..!!
நிறைய தடவை நானே பாத்து இருக்கேன்... "
" மவனே... பார்லர் பக்கம் வா... மூஞ்சில
சுடுதண்ணி புடிச்சி ஊத்தறேன்..!!! "
" ஹி., ஹி., ஹி...!!! "
# பியூட்டி பார்லர் வெச்சிருக்கும்
என் ப்ரெண்ட் தீப்தி கூட பேசினது...!!
// என்னது Sunday குளிச்சிட்டு சாப்பிடனுமா ???
அதுவும் பல்லுவிளக்கிட்டு குளிக்கனுமா ???
- மங்குனி அமைச்சர் //
த்த்தூ....!!
உன்னையெல்லாம் என் ப்ரெண்டுனு
சொல்லிக்கறதுக்கே கேவலமா இருக்கு.
என்னைய பாத்தாவது திருந்துடா..
.
.
.
.
.
நானெல்லாம் என்னிக்காச்சும் இந்த மேட்டரை
பப்ளிக்ல சொல்லி இருப்பேனா....
சீக்ரெட் மச்சி.. சீக்ரெட்..!!!

கர்நாடாகா ஹீரோ - PS