Monday, December 29, 2014


 பாஸ்... நாம எங்கே போனாலும் அடிதான்
வாங்குறோம்.. ஆனா அதை நீங்க
சாணக்கியத்தனம்னு சொல்லிக்கறீங்களே..?!! "
- என் சிஷ்யபுள்ளையின் சீரியஸ் டவுட்டு...
" எந்த ஆங்கிள்ல திரும்பி நின்னா
அடி விழும்போது கம்மியா வலிக்கும்னு
தெரிஞ்சி வெச்சிருக்கோம்ல.. அதுக்கு
பேர்தான் சாணக்கியத்தனம்...!! "

Friday, December 26, 2014
நம்ம பொற்செல்வி மேடம்க்கு ஒரு டவுட்டு....
" என்னடா கொஞ்ச நாளா நம்ம வீட்டுக்காரரு
நம்மள பேர் சொல்லி கூப்பிட மாட்டேங்குறாரு..
ஒருவேளை பேரை மறந்திருப்பாரோனு.. "
சரி.. டவுட்டை க்ளியர் பண்ணிக்கலாம்னு
அவங்க Hubby ஆபீஸ்க்கு போன் பண்றாங்க..
" சொல்லும்மா.. என்ன மேட்டர்..? "
" ஏங்க என் பேரு உங்களுக்கு ஞாபகம்
இருக்கா.. இல்லியா..? "
" என்னமா செல்வி இப்டி கேட்டுட்டே..
அதை எப்படி நான் மறப்பேன்..?!! "
" ஒன்னுமில்ல.. ஒரு சின்ன டவுட்டு
அதான்... சரி போனை வெச்சிடறேன்.. "
போனை கட் பண்ணினதும் அவங்க Hubby..
" உஸ்ஸப்பா... இன்னிக்கு வீட்டுக்கு போனதும்
மொதல்ல பாஸ்போர்ட்டை எடுத்து இவ பேரு
தமிழ்செல்வியா..?, கலைசெல்வியானு
கன்பார்ம் பண்ணிக்கணும்..!! "

அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!!
டிஸ்கி : யாரும் கிப்ட், சாக்லெட் எல்லாம் கேக்க கூடாது..
ஏன்னா... நாங்க சான்டா கிளாஸ் இல்ல.. வெறும் கிளாஸ்..!!

கொஞ்சம் கொஞ்சமா குடுத்த கர்ணன்
வள்ளல்னா..
அப்ப 
எல்லாத்தையும் ஒட்டுமொத்தமா கர்ணனுக்கு
தூக்கி கொடுத்த துரியோதனன்..?!!
# திங்கிங்..!!

" லிங்கா " படம் எனக்கு பிடிச்சிருக்கு..!!
( ஒரு இணைய போராளியா இருந்துகிட்டு
லிங்கா நல்லா இருக்குன்னு சொல்லலாமா..?!! )
" லிங்கா நல்லாயில்லைனு சொன்னாதான்
இணைய போராளியா இருக்க முடியும்னா..
நான் என் வேலையை இப்பவே ராஜினாமா
பண்றேன்யா..!! "
மறுபடியும் சொல்றேன்...
" லிங்கா " படம் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு..!!


ரொம்ப நாள் கழிச்சி இன்னிக்கு
ஒரு கவிதை(?!) எழுதினேன்...
அதை என் ப்ரெண்ட்கிட்ட படிச்சி
காட்டினேன்...
" இதெல்லாம் கவிதையே இல்ல "
" ஏன்டா இதுக்கென்ன..? "
" ஒன்னும் புரியலையே...?!! "
" உனக்கு புரியலைங்கறதுக்காக இதை
கவிதை இல்லன்னு சொல்லுவியா..?
சைனீஸ்-ல பேசினாக் கூடத்தான் உனக்கு
புரியாது... அதுக்காக அதை மொழி
இல்லைனு சொல்லுவியா...?! "
டேய்.. டேய்.. நில்லுடா.. அந்த கவித
பேப்பரையாவது குடுத்துட்டு போடா..
ஓடிட்டான்டா...!!!

Monday, December 22, 2014


" பிரியாணி வேணுமின்னா கூட உடனே 
ஆக்கிப்போடலாம். ஆனா பழைய சோறு 
வேணும்னா, ஒருநாள் பொறுத்துதான் ஆகோணும்.. "

- சினிமா டயலாக்.. 

எதுக்கு பொறுக்கோணும்கறேன்..? அப்படியே
தட்டு எடுத்துட்டு நாலு வீட்டுக்கு போனா....

 

" பிள்ளையாராப்பா.... எல்லோரையும்
நல்லா வெச்சிக்கப்பா...!! "
" டேய்... அவரு ஆஞ்சனேயர்டா..!! "
டக்னு கண்ணை தொறந்து பாத்தா...
( ஆஹா.... உணர்ச்சிவசப்பட்டுடோமோ...! )
" எல்லா சாமியும் ஒண்ணுதானே மச்சி..
எந்த பேரு சொல்லி கூப்பிட்டா என்ன..? "
இதை கேட்டு....
என் ப்ரெண்டு கடுப்பில் இருக்க...
பிள்ளையார் @ ஆஞ்சனேயர் என்னை
பாத்து சிரித்துக் கொண்டு இருந்தார்..!

பொண்ணுகளுக்கு ஹெல்ப் பண்ணினா - PS


NCC Parade - PS


Sunday, December 21, 2014

ஃபேஸ்புக் விமர்சகர்கள் Vs டைரக்டர்ஸ் - PSபுது ஸ்கூட்டர் ஒன்னு எடுக்கணும்..
எதுனு ஐடியா கேக்கலாம்னு
என் ப்ரெண்ட் பாபுக்கு போனை
போட்டேன்...
" டேய்.. புது ஸ்கூட்டர் எடுக்கணும்
எந்த மாடல்டா பெஸ்ட்..? "
" உங்க வீட்ல ஏற்கனவே பெப் இருக்குமே.! "
" இருக்கு.. ஆனா பேமிலியா வெளியே
போனா இடம் ரொம்ப நெருக்கடியா
இருக்கு.. "
" ஓ.. அப்ப நீங்க நாலு பேரு போனாலும்
ப்ரீயா இருக்கற மாதிரி வண்டி கேக்குற..? "
" எக்ஸாட்லி..!! "
" அப்ப நீ பஜாஜ்ல டிரை பண்ணு..! "
" பஜாஜ்லயா..? அதுல என்ன மாடல்.. "
" நீ நேரா பஜாஜ்க்கு போயி... ஆட்டோ
வேணும்னு கேளு.. அவங்களே காட்டுவாங்க.... "
" கிர்ர்ர்ர்..!!! "

என் ப்ரெண்ட் போட்டோ ஸ்டுடியோ
வெச்சி இருக்கான்..
அங்கே அவன் எடுத்த போட்டோஸ்
எல்லாம் பாத்துட்டு இருந்தேன்..
" என்னடா இது... ? பெரிய போட்டோகிராப்பர்
சொல்ற.... ஆனா போட்டோ எல்லாம்
சுமாராதான் இருக்கு.. "
" கேமரா சரியில்ல மச்சி... "
" ம்ம்க்கும்.... !! " .
" ஆமா.. நீ கூடத்தான் பெரிய ப்ளாக்கர்னு
சொல்ற.. ஆனா போடற ஸ்டேடஸ் எல்லாம்
மொக்கையாதானே இருக்கு.. "
" ஹி., ஹி., ஹி.. சிஸ்டம் சரியில்ல மச்சி..!! "
# வெளங்கிடும்ல..!!

ஒரு தடவை ஸ்கூல்ல எங்க மிஸ்ஸு
கேட்டாங்க...
" நமக்கு ரொம்ப முக்கியமானது எது...? "
" சாப்பாடு மிஸ்...!! "
" டேய்... படிப்புனு சொல்லணும்டா...!! "
" படிக்காம ஒரு வாரம் கூட இருக்கலாம்
மிஸ்... ஆனா சாப்பிடாம ஒரு நாள் இருக்க
முடியுமா..?!! "
எங்க மிஸ்ஸு.... அப்படியே ஷாக் ஆகிட்டாங்க...

ரஜினி - கமல் வித்யாசம் - PS


லவ்வர் ரொமாண்டிக் மெசேஜ் - PS
நேத்து Angel Josh ஆண்களிடம் பெண்கள்
கேட்க விரும்பும் சில கேள்விகள்னு
ஒரு பதிவு போட்டாங்க..
அதுக்கு நாம பதில் சொல்லணும்லயா.
அது நம்ம கடமையாச்சே...
சரி கேள்விகளுக்கு போவோம்..
// 1. சேலை, தாவணி கட்டினா பட்டிக்காட்டு
பொண்ணுன்னு, மார்டன் உடை உடுத்தினா
கலாசாரத்தை கெடுக்குற பொண்ணு அப்படின்னு
சொல்லுறீங்க //
ஆமா நீங்க ஏன்மா தாவணி பாவாடையை சிட்டிலயும்...
மாடர்ன் டிரஸ்ச கிராமத்துலயும் போட்டுக்கறீங்க.?!
// 2. மஞ்சள் பூசினா மாரியாத்தா மாதிரி இருக்கு,
மேக்கப் போட்டா மெர்லின் மன்றோன்னு
நினைப்புன்னு சொல்லுறீங்க நாங்க என்ன தான்
போட்டுகுறது? //
எதுக்கும்மா கண்டதை போடறீங்க.. நீங்க
இயற்கையாவே அழகுன்னு தானே சொல்ல
வர்றோம்..
// 3) தங்க நகை போட்டா இவள்கிட்ட தான்
நகை இருக்குனு அள்ளி மாட்டிக்கிறானு சொல்லுறது,
நகை போடலைன்னா ஆம்பள பையன் மாதிரி
இருக்கன்னு சொல்லுறது //
நகைக்கும் பசங்களுக்கு சம்பந்தமே இல்ல..
நல்லா பாருங்க சொன்னது உங்க பக்கத்து வீட்டு
ஆன்டியா இருக்கும்..
// 4) போன் நம்பர் கேட்டு தரலைன்னா ரொம்ப
பண்ணுறானு சொல்ல வேண்டியது, கேட்ட உடனே
போன் நம்பர் கொடுத்த இவள் சரி இல்லாடா
சொல்றீங்க.. //
போன் நம்பர் மட்டும் குடுத்தா பராயில்லையே..
கூடவே 200 ரூபாய்க்கு டாப் அப் பண்ண சொல்றாங்களே..
அந்த காண்டுல சொல்றானுங்களோ என்னவோ..!!
// 5. கல்யாணத்துல பொண்ணுக புடவை தான் கட்டியிருக்கோம்
ஆண்கள் தான் பேண்டும் டையும் கட்டி இருக்காங்க.
கலாச்சாரத்தை கெடுக்குறது யாரு? //
தாலி கட்டும் போது வேஷ்டி சட்டையில தான்மா
இருக்கோம்.. ( அந்த வேஷ்க்கே பெல்ட் எல்லாம் போட்டு..
அந்த அவஸ்த்தை உங்களுக்கு எங்கே புரிய போகுது.. )
// 6) இதை எல்லாம் விட பெரிய கொடுமை என்னனா,
பெண்களுக்கு முழு சுதந்திரம் இருக்குன்னு சொல்லிட்டு,
பெண்கள் அணியிற உடைகளுக்கு கட்டுப்பாடு விதிச்சுட்டு,
இரவு நேரத்துலதனியா பெண்கள் பிரயாணிக்க கூடாதுன்னு
சொல்லுவாங்க... //
எல்லாம் உங்க நல்லதுக்கு தான்.. இப்பல்லாம்
நல்லது சொன்னாலும் தப்பா போகுதே..
ஆமா.. ஆம்பளைங்க என்னிக்காவது வேலைக்கு
போற எடத்துக்கு ஸ்லீவ்லெஸ் டி-சர்ட் போட்டு
போறாங்களா..? போட்டுட்டு வந்தா.. அவங்களுக்கும்
சில கட்டுப்பாடுகள் போடப்படும்..
பிறர் மனதை புண்படுத்த இதை பதிவு செய்யவில்லை
சும்மா... ரிப்ளை பண்ண தோன்றியதை பதிவு செய்தேன்.
ஆண்கள்+பெண்கள் = நாட்டின் இரு கண்கள்.....
( எதுக்கும் ஒரு Safety-க்கு சொல்லி வெப்போம்..)
டிஸ்கி : ஹப்பாடா.. எப்படியோ " அஞ்சலி "
போட்டோ போடறதுக்கு ஒரு போஸ்ட்
ரெடி பண்ணியாச்சு..!! ஹி., ஹி., ஹி..!!!

Saturday, December 13, 2014


Me.. Steffi Fan...!!
ஸ்டெபி இப்ப ஆக்ரால இருக்காப்ல...
நாளைக்கு டெல்லிக்கு வராப்ல..
" ஸ்டெபி எப்ப இந்தியா வந்தாலும்..
அவங்கள போயி பார்க்கணும்.. "
- இது 15 வருஷத்துக்கு முன்னாடியே
முடிவு பண்ணி வெச்சதுதான்...
ஆனா ஸ்டெபியோட Bad Luck.. அது இப்ப நடக்காது.
ம்ம்..
டெல்லிக்கு ப்ளைட்லல போகணும்..
என்கிட்டதான் பாஸ்போர்ட் இல்லையே..!!
# வாட் எ பிட்டி.. வாட் எ பிட்டி..!!!
" லிங்கா " படத்துல ரஜினி - சோனாக்ஷி
ஜோடி எப்படி..? "
" பொருத்தமாவே இல்ல மச்சி... அந்த புள்ள
ரஜினிக்கு அக்கா மாதிரி இருக்கு.. "
எச்சூஸ் மீ டீச்சர்ஸ்....,
நாங்க என்ன சக்திமானா..?!
கொஞ்சம் விட்டா " சைன்ஸ் எக்ஸிபிஷனுக்கு " 
சஞ்சீவி மலையையே கொண்டு
வர சொல்லுவீங்க போல...!!!
மிடில... வுட்டுடுங்க....

Wednesday, December 10, 2014

FB-ல Status போடறது ரொம்ப ஈஸி...
மல்லக்க படுத்துட்டு விட்டத்தை பாத்து
யோசிக்கணும்..
எதாச்சும் தோணினா.. அதை ஸ்டேடஸா
போடலாம்.. இல்லன்னா...
" மல்லக்க படுத்துட்டு விட்டத்தை பாத்து
யோசிச்சும் ஒண்ணுமே தோணலைன்னு " போட்டு,
கூடவே " # என்ன கொடுமை சார்னு "
சேர்த்துக்கணும்.. அம்புட்டு தான்...


நேத்து என் ஸ்கூல் சீனியர் அக்கா
கேட்டாங்க..
" உன்னை மாதிரியே எழுதற வேற
யாரையாவது ஃபேஸ்புக்ல பாத்து 
இருக்கியா..? "
" இதுவரைக்கும் இல்லக்கா... "
" அப்ப இவரை போயி பாருன்னு "
ஒரு லிங்க் குடுத்தாங்க...
போயி பார்த்தேன்...
அப்படியே ஷாக் ஆகிட்டேன்...
சும்மா சொல்லக்கூடாது... செம சூப்பர்..!!
இவரு நல்லாத்தானே எழுதறாரு.. பின்ன ஏன்
அந்த அக்கா அப்படி சொல்லிச்சு...?!!
# நமக்கிந்த வெளம்பரம் பிடிக்காதில்ல
மொமெண்ட்... ஹி., ஹி., ஹி...

Tuesday, December 9, 2014

" நாம் இருவர்.. நமக்கு ஒருவர் "-னு
கவர்மெண்ட் சொன்னப்ப எல்லாம்
கேக்காத நம்ம பய...
இன்னிக்கு...
" ஒண்ணே போதும்டா சாமி "-ங்கிற
முடிவுக்கு வந்துட்டான்னா.. அதுக்கு
காரணம்...
.
.
.
.
.
.
ஸ்கூல்ல குடுக்குற ப்ராஜெக்ட்ஸ் தான்.
# அப்பா இந்த ப்ராஜெக்ட் பண்ணி குடேன்...

Thursday, December 4, 2014

என் Wife கை மேல ஒரு கொசு
உக்காந்துட்டு இருந்தது..
இதான் சான்ஸ்னு அடிக்க போனேன்..
( கொசுவத்தான்... )
டக்னு என் Wife சொன்னாங்க....
"மெதுவா அடிங்க.. வலிக்க கூடாது.. "
நானும் மெதுவா அடிச்சேன்.. அடிச்சிட்டு
கையை எடுத்தா.. கொசு பறந்து போயிடுச்சு..
உடனே அதுக்கும் திட்றாங்க..
நான் கரெக்டா கொசுவுக்கு வலிக்காத
மாதிரி மெதுவா தானே அடிச்சேன்..
பின்ன ஏன் திட்றாங்க..
# கன்பியூசிங்

Tuesday, December 2, 2014

என் ப்ரெண்ட் மணியை பாத்து
கேட்டேன்...
" எனக்கு ஏன்டா இவ்ளோ ரசிகர்கள்,
புகழ் எல்லாம்.. அப்படி என்ன நல்லதுடா 
நான் இந்த தமிழ் சமூகத்துக்கு
பண்ணிட்டேன்..?!! "
அவன் என்னை கேவலமா ஒரு
லுக் விட்டுட்டு சொன்னான்...
" நிறைய எழுதாம இருக்கியல்ல...
அதா தான் இருக்கும்.. "
" கிர்ர்ர்ர்ர்..!!! "
என் ப்ரெண்ட் ஒருத்தவங்க உடம்மை
குறைக்க போறேனு " Herbalife " யூஸ்
பண்ணிட்டு இருக்காங்க..
அவங்க கூட எனக்கு சின்ன Arguement..
" அதெல்லாம் வேண்டாம்.. சைடு எபெக்ட்ஸ்
வரும்.. "
" இல்லிங்க.. இது ப்யூர் ஹெர்பல்.. "
" அதுக்கு இந்தியன் மெடிக்கல் கவுன்சில்
அப்ரூவல் இல்லங்க.. "
" மீட்டிங்ல டாக்டரே ரெகமண்ட் பண்ணினாரே..! "
" அவர் டாக்டர்த்தானு உங்களுக்கு கன்பார்மா
தெரியுமா.? "
" சரி.. FSSAI ( Food Safety and Standards Authority of India )
அப்ரூவல் இருக்கே.. உடம்புக்கு கெட்டதுன்னா
அவங்க அப்ரூவல் தருவாங்களா..?!! "
" இப்ப ஊறுகாய்க்கு கூட தான் FSSAI Certificate
இருக்கு.. அதுக்காக 3 வேளையும் கால் கிலோ
ஊறுகாய் ( மட்டும் ) சாப்பிட்டாலாமா.?!! "
" ?!!!! "
# அளவுக்கு மீறினால்.....

ஹீரோயின் போலீசா.. - PSமூனு நாள் முன்னாடி திடீர்னு
என் மவுஸ்ல வொர்க் ஆகல...
மனசு சோகம்...
அன்னிக்கு நைட்டே புது மவுஸ்க்கு
ஆர்டர் போட்டுட்டேன்..
ஆனா அடுத்த நாள் காலைல இருந்து
பழைய மவுஸ் நல்லா வொர்க் ஆக
ஆரம்பிச்சிடுச்சு..
டென்ஷன்.. டென்ஷன்..!!
இன்னிக்கு புது மவுஸ் வந்துடுச்சு..
பழைய மவுஸ் அகெய்ன் கெட்டு
போச்சு..
நவ் ஃபீலிங் வெரி ஹேப்பி...!!
# என்ன வாழ்க்கைடா இது..?!!!

ஃபேஸ்புக்னா தினமும் அவங்க மூஞ்சியை - PS


காங்கிரசில் இணைந்தார் குஷ்பூ..
# ஒரு ஓட்டு எக்ஸ்ட்ரா.. காங்கிரஸார்
குதூகலம்..


" SALEM " -ஐ.... " salem "-னு எழுதினா..
அது சின்ன சேலம் ஆகிடுமா..?!!
# ஒரு குழந்தையின் டவுட்டு..!!
* குழந்தை = நான் தான்

Tuesday, November 25, 2014எனக்கு மேத்ஸ்னா அலர்ஜி...

என் ப்ரெண்ட் ஆனந்துக்கு..
அலர்ஜி + அலர்ஜி + அலர்ஜி..

அன்னிக்கு எங்க மேத்ஸ் மாஸ்டர்
பிரபாகரன் சார்து தான் ஃபர்ஸ்ட் பீரியட்..

நானும் ஆனந்தும் பேசிக்கிட்டோம்..

" வாடா.. நான் பாகிஸ்தானுக்கு ஓடி போயிடலாம் "

" டெரரிஸ்ட் கிட்ட மாட்டிபோமேடா.?!! "

" அது பரவாயில்ல.. அவங்க கொஞ்சம்
கம்மியா கொடுமை பண்ணுவாங்க.. "

" அப்படீன்ற...?!!! "

# எத்தனை எத்தனை பார்முலா..
இருக்க விட்டாய்ங்களா எங்களை நார்மலா.!!போன வாரம் என் ப்ரெண்ட் வினோத்க்கு
கல்யாணம் ஆச்சு...
இன்னிக்கு சாயந்திரம் போன் பண்ணினான்..
" மச்சி.., நீ கல்யாணத்துல என்ன கிப்ட்
குடுத்தே..?!! "
" ஏன்டா.. இன்னும் பிரிக்கலையா..? "
" என் அக்கா பசங்க எல்லா கிப்டையும்
ஓபன் பண்ணிட்டாங்கடா.. எது யார்
குடுத்தானு தெரியல... "
" சரி.. சரி.., நாளைக்கு நானே வீட்டுக்கு
வந்து.. எதுனு சொல்றேன்.. "
# இருக்கறதுலயே நல்லதா பாத்து
நம்மளதுனு சொல்லிட வேண்டியது தான்.. 
ஹி., ஹி., ஹி...


ஆஹா... இவ்ளோ நாள் நம்ம ரேஞ்ச்
தெரியாம வாழ்ந்திருக்கோம் போலயே,,!!!


Sunday, November 16, 2014

பொண்டாட்டி பர்த்டேன்னா... - PC


இன்று எனக்கு " குழந்தைகள் தின " வாழ்த்து 
சொன்ன அனைத்து ஆன்ட்டி, அங்கிள்களுக்கு 
என் நன்றிகள்...!!!
# நீ மீசை வச்ச குழந்தையப்பா மொமண்ட்..!!!

Monday, November 10, 2014

சென்னை to சேலம்...
KPN 2.30 மணி பஸ்..
எத்தனை மணிக்கு சேலம் ரீச்ஆகும்னு
டிரைவரை கேட்டாலும் சொல்ல மாட்டேங்குறாரு.., 
கிளினரும் சொல்ல மாட்டேங்குறான்..
இதை பத்தி என் ப்ரெண்ட் ஜெகன்கிட்ட
போன்ல பொலம்பிட்டு இருந்தேன்..
உடனே அவனும்...
" நீ டிரைவர்கிட்ட போயி.. 9 மணிக்கெல்லாம்
சேலம் போயிடுவீங்களானு கேளு.. அவரு..
7 மணிக்கே போயிடுவோம்னு சொல்லுவாருனு "
ஐடியா கொடுத்தான்..
நானும் டிரைவர்கிட்ட போயி கேட்டேன்..
ஆனா... அவரு என்னை முறைக்கறாரு..
ஏன் முறைக்கறாரா..?!!
" நாளைக்குள்ள சேலம் போயிடுவீங்களானுல்ல
நான் கேட்டேன்.!! ஹி. ஹி.. "
# கொஞ்சம் ஓவராத்தான் போயிட்டோமோ..?!!

" என்னடா மச்சி ஒருவாரமா ஆளையே
காணோம்..?!! "
" மெட்ராஸ் ஐ-டா... ஒருவாரம் படுத்தி
எடுத்துடுச்சு...! "
" உனக்கு ஒரு விஷயம் தெரியுமா..?!! "
" என்ன..?!! "
" ஆக்சுவலி... மெட்ராஸ் ஐ.. வந்தா
ரொம்ப நல்லதாம்டா.. "
" அப்படியா..?!! யார்ரா சொன்னா...? "
" என் ப்ரெண்ட் சுரேஷு....! "
" எப்படி நல்லதுனு சொல்றான்..?!! "
" அவன் மெடிக்கல் ஷாப் வெச்சி
இருக்காண்டா, டெய்லி 5000 ரூபாய்க்கு
மருந்து விக்குதாம்..!! ஹி., ஹி., ஹி... "
# அடங்கொய்யாலே...!!
" ஏன்டா மச்சி சோகமா இருக்கே..? "
" பாரு அவன் எல்லாம் பொண்டாட்டிக்கு
நகை வாங்கி தர்றான்னு என் Wife
சண்டைக்கு வர்றா மச்சி.. "
" எவன்டா அது..? "
" டிவி வெளம்பரத்துல மச்சி.. பின்ன
நகை வெளம்பரத்துல நகை வாங்கி
குடுக்காம நாய் பிஸ்கட்டா வாங்கி
தருவான்..??!! "
# அதானே..!!!

லக்ஷ்மி மேனன் 5 வயசுல FB - PCவிளம்பரங்களுக்கு நடு நடுவே 
படம் போடும் விஜய் டிவிக்கு 
என் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்..!

நேத்து வாட்ஸ் அப்ல என் ப்ரெண்ட் ரவி
அவன் பட்டாசு வெக்கற மாதிரி
போட்டோ அனுப்பி இருந்தான்...
அதை பாத்ததும் ஒரு கவிதை எழுதினேன் 
பாருங்க...
.
.
.
.
.
.
.
.
" ஒரு
நரகாசுரனே
தீபாவளி
கொண்டாடுகிறானே
அடடே..!!! " ( 3 ஆச்சரியக்குறி )
# இந்த கவிதை நல்லாத்தானே இருக்கு..
அப்புறம் ஏன் அவன் திட்றான்...?!! - டவுட்டு
என்னதான் இன்னிக்கு ஃபேஸ்புக்ல
ஒரளவு பிரபலமா(?!) இருந்தாலும்
நான் ஒரு Blogger-னு சொல்லிக்கறதுல தான்
எனக்கு ரொம்ப பெருமை.. ஏன் கர்வம்னே கூட
சொல்லலாம்..
பதிவை போட்டு..., திரட்டில இணைச்சி..,
அதுக்கு ஓட்டு வந்து.., பிரபல பதிவு ஆகி..,
கமெண்ட் போட., பதில் போடன்னு சும்மா
பர பரனு இருக்கும்..
இன்னிக்கு நான் Follow பண்ற Bloggers Blog
எல்லாம் போயி பார்த்தேன்... அதுல
ரெண்டு மூனு பேரை தவிர மத்தவங்க
பதிவு போட்டு ஒரு வருஷம், 2 வருஷம்னு
ஆகுது..
படிச்ச காலேஜை பார்க்கும் போது
ஒரு விதமான ஏக்கம் வரும் பாருங்க
அப்படி ஒரு உணர்வு இன்னிக்கு எனக்கு..
அது ஒரு கனா காலம்..!!!

என் பையனுக்கு தமிழ் பேச்சுப்போட்டி..
வழக்கம் போல நானும் எழுதி குடுத்துட்டேன்..
அதுல " கூகுள் இருக்க பயமேன் " னு 
ஒரு லைன் வரும்...
நேத்து ஸ்கூல் விட்டு வந்ததும் என் பையன்
என்கிட்ட வந்து.......
" அந்த லைன் வேணாம்னு எங்க மிஸ்ஸூ
சொல்லிட்டாங்கப்பா... "
" ஏன்..? "
" தமிழ் பேச்சுபோட்டில இங்கிலீஷ் வார்த்தை
கலந்து பேசக்கூடாதாம்.. "
" ஙே...!!!! "
# ஃபேஸ்புக்கை " முகநூல்"-னு மொழிபேத்த
தமிழ் அறிஞர்களே... உங்களுக்கு மறுக்கா
வேலை வந்துடுச்சு...
அப்பாலிக்கா ஃபீரியா இருந்தீங்கன்னா..
இந்த கூகுளையும் கொஞ்சம் பேத்து குடுத்துட்டு
போங்க அய்ய்யா.....

உகாண்டா, சோமாலியா செல்போன் கம்பெனி - PC


போத்தீஸ் Formal Shirt Search - PC


யான் - PC


போன் பண்ணிட்டு இருக்கும் போது
ஒரு 10 ரிங் போயிட்டா..
டக்னு யாருக்கு போன் பண்றோம்.?
எதுக்கு பண்றோம்னு மறந்து போயிடுது.
எனக்கு மட்டும் தான் இப்படியா.?!!


அந்த பக்கம் போனப்ப போராட்டம்
நடந்துட்டு இருந்துச்சு..
எனக்கு தெரிஞ்ச ஒருத்தர் அங்கே இருந்தாரு.
அவர்கிட்ட போயி.....
" என்னண்ணே நடக்குது இங்கே..?! "
" அம்மாவை ஜெயில்ல போட்டுட்டாங்கல்ல
அதுக்காக போராடுறாங்க.... "
" அது சரிண்ணே.. அதுக்கு எதுக்கு மொட்டை
எல்லாம் போட்டுட்டு... "
" அம்மா மேல இருக்குற விசுவாதத்தை
காட்றாங்கப்பா... "
டக்னு நான் கேட்டேன் பாருங்க...
" அப்ப ஏன்ணே வட்ட செயலாளரு.,
( பஞ்சாயத்து ) தலைவரு எல்லாம்
மொட்டை போட்டுக்கல...??!!! "
# பத்த வெச்சிட்டியே பரட்டை..!!
இன்னிக்கு ஒரு கல்யாண பங்ஷனுக்கு
போயிருந்தோம்...
அங்கே என் சகலை என்கிட்ட..
" பொண்ணை விட பையன் கொஞ்சம்
கலர் கம்மி போல..... "
" இல்ல.... மேக்கப் கம்மி..!!! "
இந்த பொண்ணுங்க கட்டிக்க போற 
சேலையை செலக்ட் பண்ற மாதிரியே 
கட்டிக்க போறவனையும் செலக்ட் 
பண்ண ஆரம்பிச்சா...

நம்ம நெலமை..?!!!

# காட் ஈஸ் கிரேட்..!!!
" மச்சி... Flipkart-ல ஒரு காபி மேக்கர்
வாங்கினேன்டா... 30% மிச்சம்.. "
" ம்க்கும்.. இதென்னடா பிரமாதம்..
எனக்கு 100% மிச்சம்... "
# Out of Stock

என்னடா இப்படி கிறுக்குத்தனமா
எல்லாம் ப்ரோகிராம் போடறான்னு
நாம நினைச்சா...
எப்படி ப்ரோகிராம் போட்டாலும் 
பார்கறானுங்க கிறுக்கனுங்கனு
அவன் நெனப்பானா இருக்குமோ..?!!
# டவுட்டு..

Monday, October 6, 2014
ஒரு நாள் இல்ல ஒரு நாள்.... நிஜமாவே
எனக்கு நஸ்ரியா ப்ரெண்ட் ரிக்வெஸ்ட்
குடுக்க போவுது..
அப்ப அதையும் ரிஜெக்ட் பண்ணி 
வெக்க போறேன்.....
# எத்தனை பேரு அந்த புள்ள போட்டோவை
புரோபைல் பிக்சரா வெச்சிப்பீங்க..
மிடில....!!!
புறமுதுகிட்டு ஓடினதா மட்டும் என்
சரித்திரத்துலயே கிடையாது..
.
.
.
.
.
.
.
# நின்ன இடத்துலயே கால்ல வேணாலும்
விழுவோமோ தவிர.. ஓட மட்டும் மாட்டோம்..
" என்னண்ணே சம்பந்தமே இல்லாம
' அஞ்சான் ' படம் சூப்பர்னு சொல்லிட்டு
போறான்.. யாருண்ணே அவன்..? "
" அநேகமா ' யான் ' படம் பாத்தவனா 
இருப்பானு நெனக்கிறேன்...!! "
" முதலமைச்சரு பிரதமருக்கு லெட்டர்
எழுதியிருக்காருப்பு.. "
" முதலமைச்சரு... பிரதமருக்கு.., லெட்டரு...
நீ பாத்த... "
" ஆமாப்பு... எழுதியிருக்காருப்பு....! "

Wednesday, October 1, 2014ஆயுத பூஜைக்கு வீடு க்ளினிங்...

ரூம்க்குள்ள இருந்து என் Wife குரல்... 

" ஏங்க.. இங்கே பரண் மேல உங்க 
+2 மார்க் ஷீட் இருக்குதுங்க..!! "

" இப்படி மொட்டையா சொன்னா எப்படிமா... 
பர்ஸ்ட் இயரா.? செகண்ட் இயரா.? இல்ல 
தேர்ட் இயரா..?!! "

# ஹி., ஹி., ஹி..!! பேஸ்மெண்ட் ரொம்ப 
ஸ்டராங்கு.. 

எங்க அண்ணி தீவிர " அம்மா " பக்தை...
இன்னிக்கு...
" டேய் வெங்கி.. பாத்தியா.. அம்மா 
இல்லன்ன உடனே கரண்ட் கூட
சரியா இல்ல.. "
" அட ஏன் அண்ணி நீங்க வேற..
காத்து வீசல.. காத்தாடி சுத்தல..
அதான் கரண்ட் இல்ல.. "
" பாத்தியா வெங்கி.. அம்மா இல்லன்ன
உடனே காத்து கூட வீசல... "
" ஆங்ங்ங்.... "
# ஆத்தா என்னை விட்டுடு...

பயபுள்ளக்கு என்னை மாதிரியே கராத்தேல
ப்ளாக் பெல்ட் வாங்கணும்னு ஆசை....!!!
.
.
.
.
.
.
.
.
.
நானும் ரொம்ப நாளா கராத்தேல ப்ளாக் பெல்ட்
வாங்கணும்னு ஆசைப்பட்டுட்டு தான் இருக்கேன்..
ஹி., ஹி., ஹி...


 ஜீவா " படத்துல காட்றாங்கல்ல...
இந்தியன் டீம்ல வெளையாட திறமை
மட்டும் இருந்தா போதாது.. பல தடைகளை
தாண்டி வரணும்னு..
அது நிசம்தான்..
.
.
.
.
.
.
.
அன்னிக்கு மட்டும் எங்க எதிர் வீட்டு பாட்டி
என் ரப்பர் பாலை எடுத்து ஒளிச்சி வெக்காம
இருந்திருந்தா...
இந்நேரம்...

Sunday, September 28, 2014


என் கணக்கு தெறமையை (?!) பாத்துட்டு
என் Wife சொன்னாங்க...
" உங்களுக்கு மேத்ஸ் சொல்லிக்கொடுத்ததுக்கு
பதிலா உங்க மேத்ஸ் மாஸ்டர் எங்கயாவது 
டீ மாஸ்டரா வேலைக்கு போயி இருக்கலாம்.... "
அதுக்கு நான் சொன்னேன்...
" ஹி., ஹி., ஹி..! ஒருவேளை அவர் டீ மாஸ்டரா
இருந்திருந்தா.. அந்த கடையில கூட நான்
' கணக்கு ' வெச்சு இருக்க மாட்டேனே..!! "
# எத்தனை எத்தனை பார்முலா..
இருக்க விட்டாய்ங்களா நார்மலா..!!!
சுப்ரீம் கோர்ட்டுக்கே ஜட்ஜா போக
வேண்டியவனுங்க எல்லாம் எங்க ஊரு
டீக்கடையில டீ குடிச்சிட்டு இருக்கானுவ...
# ஓ.சி. டீக்கே என்னா சட்ட நுணுக்கம் பேசறானுவ..
மிடில....

Venkat Parbu - PCஎன் Wife-கிட்ட...
" இன்னிக்கு டின்னர்க்கு என்னனு.? "
கேட்டா...
" நான் கத்துகிட்ட மொத்த வித்தையும்
இன்னிக்கு எறக்க போறேன்..
Wait and See-னு " சொல்லிட்டு போறா...
# அவ்வ்வ்வ்வ்வ்.!!!
சென்னையில இருந்து ஒரு ப்ரெண்ட்
திருச்சி வந்து இருக்காங்க.. இன்னிக்கு
என்னை பார்க்க எங்க வீட்டுக்கு வரேனு
சொல்லி இருந்தாங்க..
காலையில போன் பண்ணி...
" இன்னிக்கு எங்க வீட்டுக்கு வர்றீங்க தானே..
கன்பார்மா..?!! "
" அதுல ஒரு சின்ன சிக்கல்ங்க.. "
" என்ன..?!. "
" உங்க வீட்டுக்கு வரணும்னு ஸ்நாக்ஸ்
எல்லாம் நேத்தே வாங்கி வெச்சிட்டேன்..! "
" சரி... "
" ஆனா ஆபீஸ்ல இருந்து அர்ஜெண்ட்
போன் பண்ணி உடனே வர சொல்றாங்க... "
" அதுக்கு..?!! "
" உங்க வீட்டுக்கு வந்தா லேட் ஆகிடுமே...
அதான் யோசிக்கிறேன்... "
நான் டக்னு ஒன்னு சொன்னேன் பாருங்க..
அவங்க அப்படியே ஷாக் ஆகிட்டாங்க...
.
.
.
.
.
.
" நீங்க வரலைன்னாலும் பரவாயில்ல...
அந்த ஸ்நாக்ஸை மட்டும் யார்கிட்டயாவது
குடுத்து அனுப்பிடுங்க..!! "
# கெட்ட பையன் சார்.. இந்த வெங்கட்..!!!
ஹி., ஹி., ஹி..!!!

Sunday, September 21, 2014

" கத்தி " படம் ரிலீஸாகறதுல விஜயை விட 
சூர்யா தான் அதிக சந்தோஷமா இருப்பாரு....

# ஹப்பாடா.... இனிமே கத்தியை ஓட்டுவானுங்க...!!
எனக்கு பேரே வெக்கலன்னு சொன்னா கூட 
நம்பிடுவாங்க போல... 

ஆனா..... 

செல் நம்பர் இல்லனு சொன்னா 
நம்ப மாட்டேங்குறாய்ங்க...!!!!

# கலி முத்தி போச்சோ....

யார்ட்லியும் - கேஸும்.. PS