Tuesday, June 30, 2015

என் பையன்கிட்ட எங்க பேமிலி டாக்டரு...
" எங்கடா.. உங்கப்பன் கொஞ்ச நாளா
ஃபேஸ்புக் வரக் காணோம்னு " கேட்டிருக்காரு...
அதுக்கு இவன்...
" எங்க அப்பவா..?! அவரு வீட்டுக்கு கூட
வராம இருப்பாரு.. ஆனா ஃபேஸ்புக் வராம
இருக்க மாட்டாரேனு " சொல்லி இருக்கான்...
# சே... ஒரு போராளியா இருந்தா...
எவ்ளோ கேவலப்பட வேண்டி இருக்கு..

Monday, June 29, 2015

மங்கு கூட பேசிட்டு இருக்கும் போது
சொன்னேன்...
" எப்படியாவது ஒரு ஸ்டேட்ஸ்க்காவது
100 லைக் வாங்கிடணும் மச்சி..! "
" இப்ப எவ்ளோ வருது..?! "
" 75 கிட்ட வருது..!! "
" டோண்ட் வொர்ரி மச்சி... உன்னால
முடியும்..!! "
" அப்படிங்கிற..?!! "
" கண்டிப்பா... 75 Fake Id ஓபன் பண்ணின
உன்னால.. இன்னும் 25 பண்ண முடியாதா..?! "
" அடிங் கொய்யாலே.. "
# இங்கே விழற ஒவ்வொரு லைக்கும்
நானா ( கெஞ்சி ) வாங்குனதுடா..!

என் ப்ரெண்ட் ராகவன் ஒரு பிரைவேட் கம்பெனில
இன்ஸுரன்ஸ் ஏஜென்ட்டா இருக்கான்..
அப்பப்ப " பாலிசி போடுனு " போன் பண்ணி
தொந்தரவு பண்ணுவான்..
( இன்ஸுரன்ஸ் ஏஜென்ட்டா இருக்கறதை விட
இன்ஸுரன்ஸ் ஏஜென்ட்க்கு ப்ரெண்ட்டா
இருக்கறது ரொம்ப குஷ்டமப்பா..!!! )
நேத்து வழில மீட் பண்ணினோம்..
" மச்சி... ஒரு சின்ன ஹெஸ்ப்.. "
" பாலிசி போடுனு மட்டும் கேக்காதே..
வேற எதுனா கேளு.. "
" நாளைக்கு உங்க ஊர்க்கு வரேன்...
ஒரு 10 பாலிசி பிடிச்சி குடேன்..!! "
" என்னாது 10 பாலிசியா..?!!! எங்க ஊர்க்காரங்க
LIC-ல மட்டும் தான்டா போடுவாய்ங்க.. வேற
இன்ஸூரன்ஸ்னு போயி நின்னா.. சொறி நாய
பார்க்கற மாதிரி பார்ப்பாங்கடா.. "
" சரி விடு... நான் காங்கிரஸ் கட்சில இருக்கேன்..
எங்க கட்சிக்கு 5 உறுப்பினரையாவது சேத்து விடு..!! "
( என்னாது காங்கிரஸா....!!!!!?!??!!?!? )
" உனக்கு 10 பாலிசி போதுமா மச்சி..?!! "

Wednesday, June 24, 2015


" யக்கா... பாம்பு கூட எல்லாம் நின்னு
போட்டோ எடுத்து இருக்கீங்களே...
பயமா இருந்து இருக்குமே...?! "
" சே., சே.. எனக்கென்ன பயம்.?! "
" நானும் உன்ன கேக்கலக்கா.. பாம்புக்கு
பயமா இருந்து இருக்குமேனு தான் கேட்டேன்.. "
# டெரர் சித்ராக்கா வித் அப்பாவி பாம்பு..

நான் ரூம்ல படுத்திருந்தேன்..
அப்ப கொசு பேட்டும்., கையுமா உள்ளே
வந்தாங்க என் Wife...
" நிர்மலா... நிர்மலா... அந்த கொசுவை
மட்டும் அடிக்காதே.. "
( என்னை லூச பார்க்கற மாதிரி பார்த்தா...
பொதுவாவே அப்படித்தான் பார்ப்பா..
அது வேற விஷயம்.. ஹி, ஹி, ஹி.. )
" ஏன்..?!! "
" இப்ப தான் அது என்னை கடிச்சிட்டு
போச்சு... "
" அப்ப ஏன் அடிக்க வேணாம்கறீங்க..?!! "
" ஏன்னா... ஏன்னா... அது என் ரத்தம்மா...! "
# கடைசில அந்த கொசு தப்பிச்சிக்கிச்சி..!!!

நேத்து நான் சொன்ன பேச்சை
என் சின்ன பையன் கோகுல் கேக்கல..
அதனால அவன் கேட்ட சாக்லெட்டை
நான் வாங்கித் தரமாட்டேனு சொல்லிட்டேன்..
( வூட்லயே இவன் ஒருத்தன் தான்
என் பேச்சை கேட்டுட்டு இருந்தான்...
இப்ப இவனும் கேக்கலன்னா..
கோவம் வருமா.. வராதா.?!! )
சாக்லெட் வரலைன்னா.. சாப்பிட மாட்டேனு
அடம் பண்ணிட்டு இருந்தான்...
" மொளைச்சி மூனு எலை விடல. அதுக்குள்ள
இவ்ளோ பிடிவாதமானு..? " நானும் விடாப்பிடியா
நின்னேன்..
அப்பனும், புள்ளயும் என்னமோ பண்ணுங்கனு
என் Wife தலையில அடிச்சிகிட்டு போயிட்டாங்க..
நான் அவன்கிட்ட போயி..
" ஏன்டா உனக்கே இவ்ளோ திமிர் இருந்தா..
நான் உங்கப்பன் எனக்கு எவ்ளோ திமிரு
இருக்கும்..?!! "
நைசா என்னை திரும்பி பார்த்தான்..
பாத்துட்டு...
" அப்ப நம்ம வீட்லயே தாத்தாவுக்கு தான்
திமிர் அதிகம்னு " சொல்றியாப்பானு கேட்டுட்டு
சிரிச்சான்..
" அடப்பாவினு " மனசுல நெனச்சிகிட்டு
ஆமா எதுக்கு இப்டி சிரிக்கறானு திரும்பி பார்த்தா...
" ஐயோ.. எங்க அப்பா..!!! "
" ஏங்க தூங்காம என்ன பண்ணிட்டு
இருக்கீங்க..?!! "
" ஒரு ஸ்டேடஸ் டைப் பண்ணிட்டு இருக்கேன்.. "
" நைட் 12.30.மணிக்கு கூட ஸ்டேடசா..? "
" நேரம் காலம் பாத்தா போராளியா
இருக்க முடியுமா..!! "
" இன்னிக்கு உங்க நேரம் நல்லா இருக்கு... "
" புரியலயே... "
" ம்ம்.. நான் டயர்டா இருக்கேனு சொன்னேன்.. "
# கைப்புள்ள... இன்னுமா முழிச்சிட்டு இருக்க...
தூங்ங்ங்கு.....
டயட்டீசியன்கிட்ட " உடம்பு குறைக்கணும்.,
அதுக்கு என்ன சாப்பிடலாம்னு.. " கேட்டேன்..
" இப்ப என்னெல்லாம் சாப்பிடறேனு "
கேட்டாரு...
சொன்னேன்....
" அதெல்லாம் இனிமே சாப்பிடக்கூடாதுனு "
சொல்லிட்டாரு...
# அவ்வ்வ்வ்வ்....!!!
எச்சூஸ் மீ மேடம்.......
நீங்க காலை வணக்கம், மதிய வணக்கம்,
இரவு வணக்கம்னு ஸ்டேடஸ்
போடறதை வெச்சி தான் நானு 
இப்ப காலைலயா, ராத்திரியானே
தெரிஞ்சிக்கறேன்..
தயவு செஞ்சு இந்த பொதுசேவைய
நிறுத்திடாதீங்க...
( கொய்யாலே... இதுக்கு 908 லைக்
வேற..)
# வயித்தெரிச்சல் எல்லாம் இல்ல.. 
சும்மா... ஹி., ஹி., ஹி..!!
என் ப்ரெண்ட் மணி வீட்டு விசேஷம்..
மதியம் விருந்து..
மணியோட சகலை தான் ரொமாலி ரொட்டி 
வெச்சிட்டு வந்தாரு...
எல்லோருக்கும் ஒன்னு வெச்சிட்டு வந்தவரு..
என்னை பாத்ததும்... எனக்கு மட்டும்
2 வெச்சாரு...
( ரெகுலரா நம்ம ஃபேஸ்புக் ஸ்டேடஸ்
எல்லாம் படிப்பாரு போல... )
வெச்சிட்டு.... என்னைய பாத்து...
" போதுமா "-னு கேட்டாரு...
நானும்...
" போதுங்க... நான் டயட்ல இருக்கேன் " -னு
சொல்லிட்டேன்...

பொண்ணுங்க டூவீலர் டிரைனிங் - PS


Thursday, June 18, 2015


நானும் என் Wife-ம் மார்கெட் போயிருந்தோம்...
அவங்க பர்சேஸ் பண்ணிட்டு இருந்தாங்க..
நான் பராக்கு பாத்துட்டு நின்னுட்டு 
இருந்தேன்...
அப்ப ஒரு லேடி என்னை பாத்து
வந்தாங்க..... வந்து...
" நீங்க வெங்கட் தானே..?! "
( யார்ரா இது..? ஒருவேளை நம்ம
ஃபேஸ்புக் ரசிகையா இருக்குமோ..?! )
" ஆமா.. நீங்க..? "
" என்னை தெரியல...?! நான் வித்யா.. "
" எந்த வித்யா..?! "
( ஹி., ஹி.., ஹி.. எனக்கு நாலு வித்யா
தெரியும்ல.. )
" ம்ம்.. +2 பிசிக்ஸ் பிராக்டிகல்ஸ்ல என்
பேப்பரை காட்ட சொல்லி கேட்டியல்ல..
அந்த வித்யா.. "
( ரெண்டு வருஷம் ஒண்ணா படிச்சி இருக்கோம்...
இதை விட்டா வேற இன்சிடென்ட் கிடைக்கலையா..?!!
அவ்வ்வ்..!! )
" ஆமா.. நீ கூட காட்ட மாட்டேனு மறைச்சி
மறைச்சி எழுதி பந்தா காட்னியே.. "
" டேய்.. எனக்கு வேற எக்ஸ்பிரிமெண்ட்.,
உனக்கு வேற எக்ஸ்பிரிமெண்ட்ரா.. "
" ஓ... அதை நான் கவனிக்கவே இல்லையே...!!!
ஹி., ஹி., ஹி..!! "

அனுஷ்கா அவங்க வீட்டுல உக்காந்து
டிவில மேட்ச் பாத்துட்டு இருக்கு...
அதான் கோலி அவுட் ஆகிட்டானு
இன்னும் யாரும் கெளம்பலையா..?!!
வாட் போராளீஸ்..?!!
# Ind Vs Bangladesh 

சாம்சங் நோட் 4 - PS


நேத்து என் ஸ்கூல் ப்ரெண்ட் பத்ரி
வீட்டுக்கு போயி இருந்தேன்....
வழக்கமா கலகலனு பேசற பய..
நேத்து ரொம்ப அமைதியா இருந்தான்..
" என்னாச்சு பத்ரி..?! "
" என்ன..? "
" இல்ல.. ஒன்னுமே பேச மாட்டேங்குற..?! "
" அப்டி எல்லாம் இல்லியே..!! "
" ஹேய்... என்னமோ இருக்கு.. சொல்லுடா..! "
" மணி தான் சொன்னான்... "
" என்ன சொன்னான்..?! "
" வெங்கிகிட்ட கொஞ்சம் கேர்புல்லா இரு..
எது பேசினாலும் ஃபேஸ்புக்ல போட்டு
விட்டுடறானு..!! "
( அடப்பாவிகளா..?!! நான் அப்படியா பண்றேன்..?!!!
நீங்களே சொல்லுங்க மக்களே..!! )
wink emoticon wink emoticon

டேய்... மூஞ்சை இந்த பக்கம் திருப்பு...
நீ.. நீ.... நீ... மங்குனி அமைச்சர் தானே..!!
அடிங் கொய்யாலே..
முன்னெல்லாம் எங்கே போனாலும்
" மார்க் என்ன.? "-னு கேட்டு படுத்தினீங்க..
இப்ப " சம்பளம் எவ்ளோ.? " -னு கேட்டு
அசிங்கப்படுத்தறீங்க..
கொஞ்சமாச்சும் திருந்துங்கய்யா..
அதெல்லாம் சொல்ற மாதிரி இருந்தா
நாங்களே சொல்ல மாட்டோமா.?!!விஜய் அவார்ட்ஸ் பாத்துட்டு இருந்தேன்..
அப்ப என் Wife உள்ளே இருந்து சவுண்ட்
விட்டுட்டே வந்தாங்க...
" அடடடடா.., கொஞ்சம் சவுண்ட் கம்மி
வெச்சி பாத்தா தான் என்ன.. அந்த பொண்ணு தான்
மைக்கை பிடிச்சா காட்டு கத்து கத்துதல்ல... "
" ஞே...!!! "
" ஏன் இப்படி முழிக்கறீங்க..?! "
" இல்ல நிர்மலா... நான் டிவியை Mute-ல
தான் வெச்சி இருக்கேன்.. அப்பயும்
DD பேசறது மட்டும் கேக்குது... ""
# பேங்... பேங்...!!
யேய்.... இது " பைரவி - ஆவிகளுக்கு
பிரியமானவள் " Male Version டா...
# வாட்சிங் " மாசு.."
" மச்சி... இன்னிக்கு ஈவினிங் உங்க வீட்டுக்கு
வரேன்..!! "
" நிஜமாவா.. ஐ ஜாலி., ஜாலி..!! "
" என்னை மீட் பண்றதுல அவ்ளோ சந்தோஷமா..?!! "
" ஹி., ஹி., ஹி.. வர்றப்ப வெறும் கைய
வீசிட்டு வராம. சாப்பிட எதாவது வாங்கிட்டு
வருவியல்ல.. அதுக்கு சொன்னேன்..!! "
" த்த்தூ....!! "
மார்கெட்ல என் ப்ரெண்ட் விக்கிய
பாத்தேன்...
" வெங்கி.., உனக்கு தெரிஞ்சு மிடில் கிளாஸ்ல
யாராவது கல்யாணம் ஆகாத பொண்ணு 
இருக்கா..?! "
" பொண்ணா...? என்ன கேஸ்ட்டு..?! "
" அது முக்கியம் இல்ல., டிகிரி முடிச்சு
இருக்கணும்.., ஆனா வேலைக்கு போக
கூடாது... "
" ஆஹாங்.... "
( மை மைண்ட் சர்ச்சிங்... )
" ஒரு 22 - 24 வயசுக்குள்ள இருக்கலாம்.. "
" ஆஹாங்... "
( சர்ச்சிங்... )
" பார்க்க லட்சணமா இருக்கணும்.. "
" ஓ... சரி... ஒரு பொண்ணு இருக்கு...
நீ இன்னும் யாருக்குனு சொல்லவே
இல்ல...? "
" ம்ம்.., எனக்குத் தான்... "
" அடப்பாவி... அப்ப உன் பொண்டாட்டியோட
கதி..? "
" ஹி., ஹி.. நான் கேட்டது என் பையனுக்கு
டியூசன் மிஸ் மச்சி... "
" அடப்பக்கி பயலே... ஓடிபோயிடு..!! "
# மிடில...!!!

Sunday, June 7, 2015


பொண்டாட்டிக்கு மொபைல் வாங்கி தந்தா..
நம்மள விட காஸ்ட்லியான மொபைலா
வாங்கி தந்திடணும்..
.
.
.
.
.
.
.
.
அப்ப தான் நம்ம மொபைல நோண்டாம
இருப்பாங்க...
# சேப்டி டிப்ஸ்... tongue emoticon
MCA படிச்சப்ப ஒரு செமஸ்டர்ல
ஒரு கொஸ்டின் பேப்பர் அவுட் ஆகிடுச்சு...
" யாருக்கும் குடுக்காதே"-னு சொல்லி 
இன்னொரு காலேஜ்ல படிக்கிற என் ப்ரெண்ட்
குடுத்தான்...
ஆனா என் ப்ரெண்ட்ஸ்கிட்ட மறைக்க
மனசு கேக்கல..
( இங்கே தான் நீங்க என் நல்ல மனசை
நல்லா நோட் பண்ணனும்..!! )
என் சொந்த காசுல ஆளுக்கு ஒரு ஜெராக்ஸ்
எடுத்து கொடுத்தேன்....
( நண்பேன்டா..!! )
.
.
.
.
.
அப்புறம்....
எக்ஸாம்ல கொஸ்டின் பேப்பர் மாத்திட்டாங்க..
கிளாஸே... கூண்டோட கைலாசம்..!!
ஹி., ஹி., ஹி..!!!
இங்கிட்டு போனா....
டிபன் போடுவாய்ங்களா...
இல்ல...
" நீங்களே மாவு ஆட்டி., தோசை சுட்டு
சாப்பிட்டுட்டு கெளம்புனு சொல்லுவாய்களா...?!!! "

" Maggi " - இது என் ப்ரெண்ட் ஒருத்தரோட
Nick Name...
இப்ப Maggi கூட சம்பந்தப்பட்டவங்க
மேல எல்லாம் கேஸ் போடறாங்களாம்..
So.. இனிமே அவங்கள.. " ஹார்லிக்ஸ் "
அல்லது " பூஸ்ட் " னு கூப்பிடலாமானு
யோசிச்சிட்டு இருக்கேன்...
smile emoticon

காலைல 7.00 மணி..
நான் பேப்பர் படிச்சிட்டு இருந்தேன்.
அப்ப என் Wife எனக்கு காபி கொண்டு வந்து
வெச்சாங்க...
பேப்பர் படிக்கற சுவாரசியத்துல காபியை
எடுத்தேனா.....
காபி கொட்டி போச்சு...
அச்சசோ...!!!
டக்னு என் Wife-ஐ பாத்து...
" சாரி நிர்மலா...!! "
" அட., எனக்கெதுக்கு மாம்ஸ் சாரி சொல்றீங்க..?!
துடைக்க போறது நீங்க தானே..! "
# தட் ஞே மார்னிங் மொமெண்ட்

Tuesday, June 2, 2015

வெளம்பரத்துல ஆயிரம் சொல்லுவாய்க....
நாம தான் பாத்து சூதானமா இருக்கோணும்..
சிகரெட் வந்த புதுசுல டாக்டர்ங்க ரெகமண்ட் 
பண்ற மாதிரி தான் வெளம்பரம் பண்ணினாங்க.....
# உஷாரப்பு... உஷாரு...!!
# அந்த டாக்டர்க்கும் அந்த சிகரெட்க்கும் சம்பந்தமில்லயாம்...
நல்லா விசாரிச்சு குடிச்சிக்கறதாம்..!!