Sunday, March 30, 2014

இன்னொரு குழந்தை வேண்டுமா.?எங்க பசங்க ஸ்கூல்ல " Suggestion Box "
வெச்சி இருக்காங்க....

நானும் ஒரு Suggestion எழுதி போட்டுட்டு வந்தேன்.....

" Suggestion Box- ல சொல்ற Suggestions-ஐ 
கொஞ்சம் படிச்சி பாத்து Consider பண்ணுங்க...!! "

MCA படிச்சப்ப நானும் என் ப்ரெண்ட்ஸ் 
ரெண்டு பேரும் ஒரு கம்பியூட்டர் சென்டர்ல 
போயி ஜாவா கோர்ஸ் சேர்ந்தோம்..

மாசம் 4 ஓடிட்டதே தவிர நாங்க ஜாவா 
கத்துகிட்டபாடில்ல..

ஏன் 4 மாசத்துல ஜாவா ஓரளவாவது
கத்துக்கலமேன்னு நீங்க கேக்க வர்றது
எனக்கு தெரியுது.

But அதுக்கு என்ன காரணம்னா..

வாரத்துல நாங்க 2 நாள் லீவ் போடுவோம்..,

எங்களுக்கு ஜாவா சொல்லிகுடுக்கற சார்
2 நாள் லீவ் போடுவாரு..

அப்ப வாரத்துல 3 நாள் தான் Class-க்கு
போனீங்களான்னு கேட்ககூடாது..

சனி, ஞாயிறு கம்பியூட்டர் சென்டர்
லீவுல்ல..

ஹி., ஹி., ஹி...!!!

நேத்து நானும் மங்குவும் போன்ல 
பேசிட்டு இருந்தோம்... 

பேச்சு அப்படியே எங்க காத்தாடிகள் 
பத்தி அதாவது எங்க Fans பத்தி திரும்பிச்சு... 
வீ ஆர் பேமஸ் ப்ளாக்கர்ஸ்ல

மங்குவுக்கு காயத்ரினு ஒரு தீவிர ரசிகை
இருக்காங்க..

அவங்க பெயரை எங்கே எழுதினாலும்..

" காயத்ரி Fan of மங்குனி அமைச்சர்னு "
தான் எழுதுவாங்கன்னா பாத்துக்கோங்க..

அப்டி ஒரு தீவிரவாத ரசிகை..!!

" எலேய் மங்கு.. உன் காத்தாடி காயத்ரி
என்ன சொல்லுறாங்க..? "

" அந்த பொண்ணு முன்ன மாதிரி இல்லபா..! "

" ஏன் என்ன ஆச்சு...?!! எனி ப்ராப்ளம்...? "

" முன்னே எல்லாம் அந்த பொண்ணுகிட்ட
இருந்து தினமும் போன் வரும்.. இப்பல்லாம்
ஒரு வாரம் ஆனாலும் வர மாட்டேங்குது...!! "

" சே., சே.. இல்லையே... இப்பவும் தினமும்
கரெக்டா போன் வருதே..!!? "

" அடப்பாவி... நீதானா அது..?!! "

ஹா., ஹா., ஹா... ( வில்லன் சிரிப்பு )

டிஸ்கி : எனக்கு போன் எல்லாம் வரல..
நம்ம பய ஒருத்தன் நம்ம கண்ணு முன்னால
சந்தோஷமா இருக்கலாமா சொல்லுங்க...
அது தப்பில்ல.. 

Sunday, March 23, 2014


ஒரு தடவை எக்ஸாம் டைம்ல நான்
கிரிக்கெட் விளையாடிட்டு இருந்தேன்...

அப்ப அந்த வழியா வந்த எங்க அப்பாவோட 
ப்ரெண்டு...

" ஏண்டா எக்ஸாம் வெச்சிக்கிட்டு விளையாடிட்டா
இருக்கே.. போடா.. போயி படிச்சி பாஸாகற
வழிய பாரு.. "

" என்னை போய் எப்படி அங்கிள் எங்க
ஸ்கூல்ல பெயில் ஆக்குவாங்க..? "

" அவ்ளோ நல்லா படிப்பியாடா நீயி..? "

" ஹி., ஹி., அதில்ல அங்கிள்... ஸ்கூல்லயே
எங்கப்பா தான் கரெக்டா சொன்ன தேதிக்கு
பீஸ் கட்டுவாரு.. "

# நாங்கல்லாம் அப்பவே அப்புடி..!!!


# பாய்ஸ் ஸ்பெஷல்...

மங்குனி அமைச்சர்கிட்ட சொன்னேன்...

" மங்கு.... இந்த பொண்ணுங்கள நான் நல்லா 
நோட் பண்ணிட்டேன்.. " 

" என்ன நோட் பண்ணினே..?!! " 

" கமெண்ட்ல அவங்க தோழிகளை எல்லாம் 
Dear., Chellam, Sweetheart-னு தான் கூப்பிடறாங்க.. "

" சரி.. அதுக்கு..?!! " 

" அதனால இனிமே நாமளும் அப்படித்தான் 
கூப்பிடணும்.. "

" நாம கூப்பிட்டா சண்டைக்கு வருவாங்க மச்சி..!! "

" அடேய்.. நான் சொல்றது நம்ம ப்ரெண்ட்ஸ்குள்ள..!! "

"  ஓ.. நீ அப்டி வர.., ஹி., ஹி., ஹி... "

# தட் " அட ராமா.. என்னை ஏன் இந்த மாதிரி பிக்காலி 
பசங்க கூட எல்லாம் சேர வெக்கிற " மொமெண்ட்..!!!

சில சமயம் நான் ஆபீஸ் கிளம்பறப்ப..
என் Wife என் கையில " I Love You " னு
எழுதி விட்டுட்டு..

" நைட் வரைக்கும் இதை நீங்க அழிக்காம
இருந்தாதான் உங்களுக்கு என் மேல 
அன்பு இருக்குனு அர்த்தம்னு... "
செக் வெச்சி விட்டுடுவா..

( இவங்க பண்ற அக்கப்போரு இருக்கே..!! )

சரினு சொல்லிட்டு நாமளும் ஆபீஸ்ல
போயி ஒளிஞ்சிகிட்டே திரிய வேண்டி இருக்கு....

தப்பி தவறி எவனாவது பாத்துட்டா..
லூசுப்பயல பார்க்கற மாதிரியே
பார்க்கறானுங்க..

அதான் நான் இன்னிக்கு அவ கையை
பிடிச்சி.., இப்படி எழுதி...

" ஒரு வாரத்துக்கு அழியாம பாத்துக்கோ
போன்னு.. " தொரத்தி விட்டுட்டேன்..

 

டிஸ்கி : சத்தியமா இது என் Wife கை தான்...
குடும்பத்துல கும்மி அடிக்க யாரும் டிரை
பண்ணக்கூடாது...

எங்க வீட்ல எப்பவும் பூரி சுடணும்னா... 
ஒரு நாள் முன்னாடியே சொல்லணும்.. 

*
*
*
*
*
*
*
*
*
*
*
*

# ஹி., ஹி., ஹி.. அப்ப தான் பூரிகட்டையை
நான் பேங்க் லாக்கர்ல இருந்து எடுத்துட்டு
வந்து தருவேன்..

டைரக்டர் விசுகிட்ட தயாரிப்பாளர்... 

" என்ன சார் இது பாதி படத்துக்கு தான் 
டயலாக் எழுதி இருக்கீங்க.. அதுக்குள்ள 
சூட்டிங் போலாம்னு சொல்றீங்க... "

" முழு படத்துக்குமே இதான் சார் டயலாக்.. "

" புரியலையே..!!!??? "

" அதாவது 1st Half-ல என் பையனா நடிக்கறவரு
இந்த டயலாக்கை எல்லாம் என்னை பாத்து
பேசுவாரா... அப்புறம் இதே டயலாக்கை 2nd Half-ல
நான் அவரை பாத்து பேசுவேனா.. படம் முடிஞ்சிடும் "

# மிஸ்டர் அம்மையப்பன்..

இன்னிக்கு மதியம் என் wife-வும்., 
அவங்க ப்ரண்ட் சுதாவும் போன்ல... 

" நிம்மி.. அண்ணா ( நான் தான் ) இப்பவும் 
10 வருஷம் முன்னாடி பாத்த மாதிரியே 
இருக்காரு...!! மாறவே இல்ல... " 

" ஆமா மெச்சூரிட்டியும் 10 வருஷம் முன்னாடி
இருந்த மாதிரியே தான் இருக்கு.. வளரவே
இல்ல..!!! "

# சே... எனக்கு எதிரி வெளில இல்லடா...!!

டக்வெர்த் லீவீஸ் மெதெட் - PS


On the way to Pondy :

@ திருவண்ணாமலை..

அம்மன் சன்னதில தரிசனம் பாத்துட்டு 
நகரும் போது அங்கே இருந்த குருக்கள் 
என்னை பாத்து... 

" கொஞ்சம் Wait பண்ணுங்கோ.. இப்ப 
தீபாராதனை காட்டுவா.. பாத்துட்டு 
போங்கோனு " என்னை மட்டும் ஓரமா 
நிக்க வெச்சிட்டார்...

எனக்கு உடனே கன நேரத்தில் உதித்த சிந்தனை..!!!

" ஒருவேளை இந்த குருக்கள் நம்ம ப்ளாக் ரசிகரா 

இருப்பாரோ..?! "
இந்த ஸ்கூல் ஆண்டு விழாவுக்கு வர்ற Chief Guest-ங்க 
என்னிக்கு கம்மியா பேசறானுங்களோ.. அன்னிக்கு தான் 
இந்தியா வல்லரசாகும்... 

ஆங்....!!!

===============================================

இனிமே ஸ்கூல் ஆண்டுவிழாவுக்கு Chief Guest -ஆ 
யாரையாவது கூப்பிட்டீங்கன்னா... மைக்கை குடுத்து 
ஒரு ரூம்ல விட்டு பூட்டுங்கடா... பேசிண்டே கெடக்கட்டும்... 
# மிடில...