Saturday, January 30, 2016

வாட்சிங் " ரஜினி முருகன் " in தியேட்டர்...
பக்கத்துல உக்காந்து இருக்குற ரமேஷ்
என் கைய தட்டி...,
" ஏன் மச்சி.. இந்த புள்ள கீர்த்தி சுரேஷ்
என்ன அவ்ளோ அழகாவா இருக்கு..?!
அவங்க அம்மா மேனகா எவ்ளோ அழகு
தெரியுமா..?!! "
" அங்கிள்... கொஞ்சம் தள்ளி உக்காருங்க அங்கிள்...!! "

Thursday, January 28, 2016

என் சின்ன பையனுக்கு " Save Water " -ங்குற
தலைப்புல ஒரு புராஜெக்ட் ரெடி பண்ணிட்டு
வர சொல்லி இருக்காங்க...
ரெண்டு நாளா என்கிட்ட சொல்லிட்டே இருந்தான்...
நான் பண்ற மாதிரி தெரியலைன்னு
அவங்க அம்மாகிட்ட கம்ப்ளைன்ட் பண்ணிட்டான்..
" ஏங்க... அவன் தான் ப்ராஜெக்ட் கேட்டுட்டே
இருக்கான்ல... பண்ணி குடுத்துடுங்களேன்... "
" 50% ப்ராஜெக்ட் முடிஞ்சிடுச்சு.. "
" 50%-ஆ...? நீங்க இன்னும் ஆரம்பிச்ச
மாதிரியே தெரியல... "
" இதோ... இங்க பாரு... ஸ்கெட்ச் பென்சில்
வாங்கிட்டு வந்துட்டேன்... ஹி., ஹி., ஹி..."
ரெண்டு பேரும் என்னய மொறைச்சாங்க...
உடனே அவங்க அம்மா காதுல ரகசியமா
என்னமோ சொன்னான்...
என்ன சொல்றான்னு நானும் என் காதை
ஷார்ப் ஆக்கி கேட்டேன்....
" ப்ராஜெக்ட் முடிச்சப்புறம் அடிச்சிக்கோம்மா...!! "
( அடப்பாவி...!!! )
# Save Venkat...!!

Sunday, January 24, 2016


என் ப்ரெண்ட் ஆனந்த்கிட்ட இருந்து போன்..
" வெங்கி, என்னடா பண்ணிட்டு இருக்கே..? "
" FB-ல போஸ்ட் போடறதுக்கு நல்ல காமடியா 
மேட்டர் Think பண்ணிட்டு இருக்கேன்... "
" நீ Think பண்றேன்னு சொல்லறதே காமடி தான்..
அதையே போடு..!! "
# அவ்வ்வ்வ்..!!
16,000 பேர் ஃபாலோ பண்ற பொண்ணு
போடற ஸ்டேடஸ்க்கு 107 லைக்ஸ் தான் வருது..
அப்புறம் என்னாத்துக்கு ஃபாலோ பண்றானுங்க..?
# ஒரே கன்பூசனா இருக்கே.!!

" கெத்து " படத்துல உதயநிதி ஆக்ஷன்ல பட்டைய
கெளப்பி இருக்காராம்.. தமிழ்நாட்டுக்கு அடுத்த
மாஸ் ஹீரோ அவர்தானாம்..
யார் சொன்னா..?
உதயநிதியே சொன்னாரு..!!
# ஙே..!!!

130% டிஸ்கவுண்ட்டா..?!!
100 ரூபா பொருளை 50 ரூபாய்க்கு கொடுத்தா..
அது 50% டிஸ்கவுண்ட்..
சும்மாவே கொடுத்தா... அது 100% டிஸ்கவுண்ட்..
இவனுங்க எப்படி 130% டிஸ்கவுண்ட் குடுப்பானுங்க..?!
ஒரே கன்பூசிங்கா இருக்கே...
இந்தியால இருக்குற பூரா அறிவாளிப்பயலுகளும்
ஏர்செல் கம்பெனில தான் வேலை பாக்குறானுங்க
போல...

இந்திய டீம் பவுலர் செலக்ஷன் - PS


நல்லா ஆடறவன் அவுட்டாயிட்டானு பாத்தா...
அடுத்து கண்ணை மூடிட்டு அடிக்கறவன் வர்றான்...
அவனுக்கு அடுத்து காட்டடி அடிக்கறவன் இருக்கான்..
முடியலடா..!! ( தோனி மைண்ட் வாய்ஸ் )

# Ind Vs Aus

" மங்கு... என் போஸ்ட்டை எல்லாம்
ஒருத்தன் காப்பி பண்ணி அவன்
போஸ்ட் மாதிரி போட்டுக்கறான்..!! "
" யார்னு மட்டும் சொல்லு மச்சி... 
பழி வாங்கிடலாம்.. "
" எப்புடி..? "
" நாம போயி அவன் ப்ரெண்ட் லிஸ்ட்ல
இருக்குற எல்லா பொண்ணுங்களுக்கும்
ப்ரெண்ட் ரிக்வெஸ்ட் குடுக்கலாம்..! "
# த்த்த்தூ..!!

அமலா பால், நஸ்ரியா - PS


ஏன்..? ஏன்..? ஏன்..?1. Tv-ல வர்ற சமையல் நிகழ்ச்சி ஒண்ணு
விடாம பாத்து.., Notes எடுக்கறீங்க..
ஆனா ஏன் எப்பவும் அதே உப்புமாவை
செஞ்சி படுத்தறீங்க..?!
2. "எங்கம்மா ரசம் வெச்சா அப்டி இருக்கும்"னு
நினைச்சு நினைச்சு பூரிக்கறீங்க..
ஆனா நாங்க "என் அம்மா செஞ்ச பிரியாணி
சூப்பரா இருக்கு"னு சொல்லிட்டா போச்சு...
டின்னருக்கு மறுபடியும் உப்புமா செஞ்சி வெச்சிடறீங்க...
3. உங்க பீரோ ஃபுல் ஆகிடுச்சே.. சேலை வெக்க
இடம் இல்லாம கஷ்டப்படறீங்களேனு பரிதாபப்பட்டு...
எங்க பீரோல ஒரு ரேக் விட்டு கொடுக்கறோம்.....
ஆனா.. பீரோவ பூட்டி சாவியை நீங்க எடுத்துட்டு
போயிடறீங்க...
4. EB பில் கட்டிடுனு சொன்னா.. மறந்துடறீங்க..
ஆனா 4 வருஷத்துக்கு முன்னால தம்பி
கல்யாணத்துக்கு உங்க தங்கச்சியோட
சின்ன மாமியாரோட ரெண்டாவது மருமக
என்ன கலர்ல சேலை கட்டிட்டு வந்தானு
கரெக்ட்டா ஞாபகம் வெச்சிட்டு இருக்கீங்க..
5. உங்களுக்கு ரொம்ப பிடிச்ச புடலங்காய்
பொரியல்.. எங்களுக்கு பிடிக்கலன்னு சொன்னா...
"நல்லதெல்லாம் உங்களுக்கு பிடிக்காதானு..?! "
திட்றது...
ஆனா எங்களுக்கு பிடிச்ச பப்பாளிபழத்தை
சாப்பிடும் போது.. வேணும்னே முன்னாடி வந்து..
இந்த கருமத்தை எப்படித்தான் சாப்பிடறீங்களோ..?
"உவ்வ்வே"னு வாந்தி எடுக்கறது...!
இதெல்லாம் ரொம்ப ஓவரு... ஆமா..!!
# தூம் ததா..!!!!

Saturday, January 16, 2016

கோலி - தோனி - இஷாந்த் 24வது மாடி


வீட்டுக்கு எவனாவது பாக்க வந்தா..
அவன்கிட்ட பேசாம போன்ல பேசறது...
அட அவன்கிட்டயாவது ஒழுங்கா பேசறீங்களானா
அதுவும் இல்ல... செகண்ட் கால்ல யாராவது வந்தா.. 
இவனை விட்டுட்டு அவன்ட்ட ஓடிடறது..
திருந்துங்கடா டேய்...!!!!

என் கையில " ஸ்போக்கன் இங்கிலீஷ் " புக்
இருக்கறதை பாத்துட்டு என் ப்ரெண்ட் ரவி
நக்கலா சிரிச்சான்...
எல்லாம் சாப்ட்வேர் கம்பெனில மேனேஜரா
இருக்குற திமிரு...
" கழுதை மேய்க்கிற பையனுக்கு எதுக்கு மச்சி
இங்கிலீசு..?!! "
( என்னை கலாய்ச்சிட்டாராமாம்..!!! )
" என்னா மச்சி பண்றது.. இப்ப கழுதைங்க
எல்லாம் இங்கிலீஷ் பேசுது.. சாப்ட்வேர் கம்பெனில
மேனேஜரால்லாம் வேற இருக்கு..!! "
# ஆருகிட்ட..!!

Wednesday, January 13, 2016

திருட்டு டிவிடி- விஷால் - PS" பசங்க 2 " படம் பாத்துட்டு இருந்தப்ப..
" ஏன் நிர்மலா... பசங்கள ஹேப்பியா
வெச்சிக்கணும்னா.. இப்டி கொரங்கு
சேஷ்ட்டை எல்லாம் செய்யணுமா..?!! "
" சே., சே.. அதெல்லாம் மத்தவங்களுக்கு..
நீங்க நார்மலா இருந்தாலே போதும்..!! "
# ஙே..!!

Global Village.. துபாய் கண்காட்சி..
அங்கே ஏமன் பெவிலியன்ல
வித விதமா தேன் வெச்சி இருந்தாங்க..
விலை ஒரு கிலோ 170 திர்ஹாம்ஸ்ல
ஸ்டார்ட் ஆச்சு..
ஒரு தேன் பாத்தேன்.. " Only for Married "-னு
போட்டு இருந்தது.. 400 திர்ஹாம்ஸ் / 1 Kg...
சரி ஒரு கால் கிலோ வாங்கலாம்னு போயி
கேட்டா....
எனக்கு குடுக்க மாட்டேங்குறான்..
டேய்... எனக்கு கல்யாணம் ஆகிடுச்சிடானு
சொன்னா நம்ப மாட்டேனு சொல்லிட்டான்...
தேன் போச்சேனு ஃபீலிங்க விட..
நம்மள கல்யாணம் ஆகாத சின்ன பையன்னு
நெனச்சிட்டான்னு ஒரே குஷியா இருந்தது...
உடனே என் Wife-கிட்ட வந்து...
" டிசர்ட் போட்ட உடனே 10 வயசு கொறஞ்சு
போச்சு போல... சும்மா காலேஜ் ஸ்டுடண்ட்
கணக்கா இருக்கேனாம்... கல்யாணாம் ஆகிடுச்சுனு
சொன்னா நம்ப மாட்டேங்குறான்..!! "
" அது அப்டி இல்ல மாம்ஸு... இந்த மூஞ்சிக்கெல்லாம்
எங்கே கல்யாணம் ஆகியிருக்க போவுதுனு
நெனச்சி இருப்பான்..!! "
" அவ்வ்வ்வ்வ்வ்....!!! "
# துபாய் அலப்பரைஸ் - 12IBN BATTUTA Mall... துபாய்...
அங்கே China Court-ல ஒரு மரக்கப்பல்
நிறுத்தி வெச்சி இருக்காங்க..
அதை சுத்தி 3 அடி உசரத்துக்கு ஒரு சுவர்..
நாங்க எல்லாம் அந்த கப்பலை வேடிக்கை
பாத்துட்டு இருக்கோம்..
ஒருத்தன் அவன் கேர்ள்பிரண்ட்டை
அலேக்கா தூக்கி அந்த சுவத்துல
நிறுத்திட்டான்..
இத பாத்ததும் என் Wife...
" மாம்ஸ்.. நீங்களும் இதே மாதிரி
தூக்குவீங்களா..?!! "
" ஓ.. ஆனா.. அது கொஞ்சம் ரிஸ்க்கு..!! "
" இதுல என்ன ரிஸ்கு..?!! "
"ஹி., ஹி., ஹி., நான் போயி அந்த
பொண்ணை தூக்கினா.. அவன்
சண்டைக்கு வரமாட்டான்..?!! "
( ஐய்யோ... அம்மா... என் காலு...!!! )
# துபாய் அலப்பரைஸ் - 11
புருஷன் கிப்ட் வாங்கி குடுத்தா...
" தேங்க்யூ புருஷா "-னு ஸ்டேடஸ் போடறாங்க..
அவங்க புது டிஷ் சமைச்சி குடுத்தா..
இந்த லூசும்
" தேங்க்யூ பொண்ட்டாட்டினு " ஸ்டேடஸ் போடுது..
ஏன்டா.. நீங்க ரெண்டு பேரும் ஒரே வீட்ல தானே
இருக்கீங்க.. நேர்ல எல்லாம் பேசிக்க மாட்டீங்களா..?!
ரொம்ப கெட்டு போயிருக்கீங்கடே...!!
துபாய் போயிட்டு வந்திருக்கேன்..
வீட்டுக்கு வர்றவங்க எல்லாம் சாக்லெட்டை
வாங்கிட்டு அப்டியே நைசா ஓடிடறாங்க..
ஒருத்தரும் உக்காந்து கத கேக்க மாட்டேங்குறாங்க...
மச்சி நீ கேளேன்...
மச்சி நீ கேளேன்...

துபாய்ல எலக்ட்ரானிக்ஸ் வாங்கினா 
ரொம்ப சீப்பா இருக்கும்னு யாராவது 
நெனச்சிட்டு இருந்தீங்கன்னா..

அந்த எண்ணத்தை இன்னியோட குழிதோண்டி 
புதைச்சிடுங்க..

நான் துபாய்ல போயி NIKON D3300 கேமரா
வாங்கலாம்னு மொதல்ல நெனச்சிட்டு இருந்தேன்..

ஆனா அக்டோபர்ல நடந்த துபாய் எலக்ட்ரானிக்ஸ்
பெஸ்டிவல் ( GITEX Festival ) சமயத்துல அங்கே
என்ன ரேட்னு நெட்ல தேடி பாக்கும் போது
விலை எல்லாம் கொஞ்சம் ஜாஸ்தியா தெரிஞ்சது..

நார்மலா 25000 - 27000 விக்கிற அந்த
கேமரா... தீபாவளி சமயத்துல SNAPDEAL-ல
ரூ23,500-க்கு வந்தது.. வாங்கிட்டேன்..

என் கேமரா Made in Thailand..

தாய்லாந்து மேக்.. அதான் சீப்பா குடுத்துட்டான்
போல.. துபாய்ல எல்லாம் ஜப்பான் மேக்
கெடைக்குமாக்கும்னு நெனச்சிக்கிட்டேன்..

இப்ப துபாய் போனப்ப... இதே மாடல்
என்ன வெலைனு போயி பாத்தேன்..

ஜாஸ்தி எல்லாம் ஒன்னுமில்ல 2399 திர்ஹாம் தான்..
அதாவது... 44380 ரூபா.. ( 2399 x 18.5 )

சரி.. என்ன மேக்னு எடுத்து பார்த்தேன்...

Made in Thailand..!!!

மொத்தத்துல இங்கே விட்டுட்டு துபாய்ல
போயி எலக்ட்ரானிக்ஸ் வாங்கினா...

அதுக்கு பேருதான்..

" பெருமைக்கு எருமை மேய்க்கறது..!! "

டிஸ்கி : நான் பாத்த வரைக்கும் LED Tv மட்டும்
இந்தியாவ விட துபாய்ல விலை கம்மி..!!

# துபாய் அலப்பரைஸ் - 10

சவுத்னா ஓ.கே.. - South Africa


Tuesday, January 12, 2016


" டேய் ஜனா.... இன்னிக்கு போற வழியில 
எங்கயாவது ATM இருந்தா.. இந்த HDFC Card-ஐ 
செக் பண்ணி பாக்கணும்.. "

" சாரி ஜென்டில்மேன்.. இங்க எந்த ATM வழியில 
இருக்காது... ஓரமாத்தான் வெச்சிருப்பாங்க..
பரவாயில்லையா..?!! "

ஆஹா.... காலைலயே ஆரம்பிச்சிட்டானா...?!!

# துபாய் அலப்பரைஸ் - 9
துபாய்ல தங்கம் வாங்கினா கம்மினு சொன்னாங்க...
சரி பாத்துட்டு வரலாம்னு போனோம்...
ப்ளீஸ் நோட்... பாக்க மட்டும் தான் போனோம்....
2 நாள் முன்னாடி..
துபாய்ல 22K கிராம்.. ரூ 2190
இந்தியால 22K கிராம்.. ரூ 2370
So.. கிராம்க்கு 180 ரூபா கம்மி...
ஆஹா... கம்மினு நெனச்சிடாதீங்க...
இனிமே தான் இருக்கு உள்குத்து..
இந்தியால சேதாரம்னு சொல்லி வாங்கறத..
இவங்க மேக்கிங் சார்ஜ்னு தீட்டிடறாங்க..
25% - 30% மேக்கிங் சார்ஜ்.... கேட்டா..
இது Italian Design., இது Germany Design-னு 
சொல்றானுங்க..
நானும் ஒரு சேல்மேன்கிட்ட கேட்டேன்...
" இந்த மாதிரி நகை போட்டுட்டு சுத்தற
ஒரு இத்தாலி பொண்ணையாவது காட்டுயானு "
அதுக்கு சிரிக்கறான்..
இப்ப... நகை வாங்கினா சீப்பானு கணக்கு பாத்தோம்னா...
மொதல்லயே நாம இந்திய ரூபாயை திராம்ஸா
மாத்த 3.5% கமிஷன் குடுத்து இருக்கோம்..
அப்ப 25% மேக்கிங் சார்ஜ் உள்ள நகை வாங்கினா...
நமக்கு 25%+3.5% = 28.5% வருது...
கிராம்க்கு 180 ரூபா கம்மி... So.. அதுல நமக்கு
7.5% மிச்சமாகுது...
அப்ப Net 21% வருது...
ம்ம்ம்... நாங்க ரெகுலரா வாங்கற கடையில
இதுவரைக்கும் 13% க்கு மேல குடுத்ததே கெடையாது...
துபாய்ல நகை வாங்கணும்னு நெனச்சிட்டு இருந்த
என் Wife-ஐ கூட இந்த கணக்கு எல்லாம் சொல்லி
குழப்பி.. நகை எதுவும் வாங்காம நைசா கூட்டிட்டு
வந்துட்டேன்...
எப்பூடி...?!!
# பல ராசதந்திரங்களை கரைத்து குடித்திருக்கிறாயடா 
வெங்கி....
## துபாய் அலப்பரைஸ் - 8
துபாய்ல எல்லோரும் பணக்காரங்களா இருப்பாங்கனு
நெனச்சிட்டு இருந்தேன்....

மால்ஸ்க்கு போயி பாத்தா தான் ஏழைகளும்
இருக்காங்கனு  தெரியுது..

நிறைய பொண்ணுங்க கிழிஞ்ச பேண்ட் போட்டுட்டு
சுத்திட்டு இருக்கு...

சோ சேட்.. :(

# துபாய் அலப்பரைஸ் - 7

துபாய் மால்... ஹேண்ட்பேக் கடை...
அங்க இருந்த பிலிப்பைன்ஸ் பொண்ணுகிட்ட...
" இந்த ஹேண்ட்பேக் எவ்ளோ..?! "
" 3400 திர்ஹாம்ஸ்.. "
( 3400 x 18 = ₹61,200.... எனக்கு ஒரு செகண்ட்
மயக்கம் வர்ற மாதிரி இருந்தது.. சுதாரிச்சிட்டேன்...
டக்னு எனக்குள்ள இருந்த ஃபேஸ்புக் போராளி
முழிச்சிகிட்டான்... )
" எச்சூஸ்மீ... ஒரு போட்டோ எடுத்துக்கலாமா..?! "
" நோ.. நோ..!! "
" அட... நான் உங்கள போட்டோ எடுக்க கேக்கலைங்க... 
ஹேண்ட்பேக்கை தான்.. "
அந்த பொண்ணு சிரிச்சிட்டே...
" நீங்க என்னை கூட போட்டோ எடுத்துக்கோங்க...
ஹேண்ட்பேக்கை எடுக்காதீங்க... "
" ம்க்கும்..!!! "
( அந்த பொண்ணு லைட்டா திரும்பின சைக்கிள் கேப்பில 
க்ளிக்கிட்டோம்ல... அட ஹேண்ட்பேக்கைத் தான்... )
‪#‎இந்தியன்டா‬…… துபாய்டா..!!
## துபாய் அலப்பரைஸ் - 6