Thursday, January 29, 2015

தவான் கலெக்ஷன்..==============================================


" தவானை சீக்கிரம் அவுட் பண்ணக்கூடாது "
இதான் இன்னிக்கு இங்கிலாந்தோட
கேம் ப்ளானு நெனக்கிறேன்..
# மச்சி... நம்ம துருப்பு சீட்டே இவன்தாண்டா...


=============================================


" தவானை நெனச்சா.. ஒரே டென்ஷனா இருக்குது.. "
" ஏன் அவுட் ஆகிடுவானோன்னா..?! "
" இல்ல.. ஆடி தொலைச்சிடுவானோன்னு.. "
# Worldcup Fear..!!

" சாகசப் பிரியர்களுக்காக புது பைக்
அறிமுகம்..!!! "

ம்க்கும்... இந்த ரோட்ல கிழே விழாம
தினமும் ஆபிஸ் போயிட்டு வர்றதே
பெரிய சாகசம் தான்...

இதுல இவனுங்க வேற காமெடி பண்ணிட்டு....

:)

போன வருஷம்னு நெனக்கிறேன்..

என் Wife-கிட்ட 

" இனிமே சேலை எடுத்து., அது கலர்
பிடிக்காம... எக்ஸ்சேஞ்ச் பண்ணி
அதுல 50 - 100 பணம் மிச்சம் வந்தா..

அந்த காசுல எனக்கு ஒரு பனியன்
எடுத்துடு"-னு சொல்லியிருந்தேன்...

இப்ப என்னடான்னா.... 

என்கிட்ட 54 பனியன் இருக்கு..!!! 

என் பையன் ஸ்கூல்ல ராமாயணம் நாடகம்
போடணுமாம்..
தசரதன், கைகேயி, ராமன், சீதா, லட்சுமணன்,
பரதன்னு 6 கேரக்டர்ஸ் வரணுமாம்.. 
எழுதி குடுக்க சொன்னான்..
சரினு எழுதி குடுத்தேன்...
ஸ்கூலுக்கு போயிட்டு வந்து..
" அப்பா.. டைலாக்ஸ் எல்லாம் தூய தமிழ்ல
இருக்கணுமாம்..!! "
( எடிட்டிங்.. # அம்மா ==> அன்னையே )
அடுத்த நாள்..
" ரொம்ப பெருசா இருக்காம்பா.. கம்மி
பண்ண சொல்லி மிஸ் சொன்னாங்க.. "
( எடிட்டிங்... # 8 பக்கம் ==> 4 பக்கம் )
அடுத்த நாள்...
" என்னப்பா இதுல கைகேயி, பரதனே
வரலியாமே.. நான் தான் 6 கேரக்டர்ஸ்
வரணும்னு சொல்லியிருக்கேன்ல..!!! "
" உஸ்ஸப்பா... சரி அந்த பேப்பரை இங்கே குடு.. "
பேப்பரை வாங்கி... மேலே எழுதினேன்..
.
.
.
.
.
.
" அரண்மையில் தசரதன், கைகேயி, ராமன்,
சீதா, லட்சுமணன், பரதன் அனைவரும்
அமர்ந்து இருந்தனர்... "
# ஆறு என்ன அறுநூறு கேரக்டர்ஸ் ஒரே சீன்ல
கொண்டு வருவோமாக்கும்..
இந்தியா கண்டிப்பா வல்லரசாயிடும்..
.
.
.
.
.
.
.
# எல்லா மெகா சீரியல்லயும் அவங்க கம்பெனிய
இந்தியாலயே நெ.1 கம்பெனி ஆக்கறதுக்கு தான்
போராடிட்டு இருக்காய்ங்க...
smile emoticon
" நல்லா பாத்துக்கோ... இதான் சைனா..! "
" ம்க்கும்..!! "
ஹி, ஹி, ஹி... 500 ரூபா செலவுல 
என் Wife-க்கும்., பசங்களுக்கும்
சைனா சுத்தி காட்டிட்டேன்..
சைனா படத்துல கூட இவ்ளோ அழகா
சைனாவ பாத்ததில்லபா...
Hats off to ஷங்கர் & P.C.ஸ்ரீராம்..
# நான் மெர்ஸ்சலாயிட்டேன்...!!!
காலைல மெடிக்கல் ஷாப்ல நின்னுட்டு
இருந்தேன்..
அப்ப அங்கே வந்த என் ப்ரெண்ட் பிரதாப்
என்னை பாத்து கிண்டலா...
" மச்சி.. ஃபேஸ்புக்ல பாத்தேன்..! "
" என்ன பாத்தே..? "
" நீயும் ஓபாமாவும் பயங்கர க்ளோஸ்னு "
" சரி அதுக்கென்ன..?!! "
" என் அண்ணன் பையனுக்கு அமெரிக்கால
விசா தர மாட்டேங்குறாங்க.. ஓபாமாகிட்ட
சொல்லி ஒரு லெட்டர் வாங்கி குடுடேன்..!! "
( என்னை கலாய்ச்சிட்டாராமாம்..!!! )
" இதுக்கு எதுக்கு மச்சி ஓபாமா.. நான் லெட்டர்
குடுத்தாலே போதுமே.. சாயந்திரம் வந்து
என்னை பார்க்க சொல்லு"-னு சொல்லிட்டேன்...
# ஹே.. யாருகிட்ட..!!!
என் Wife என்கிட்ட...

" மாமு.. இனிமே மொக்கையா ஸ்டேடஸ் 
போடதீங்க.. "

" இதுக்கு நீ என்னை ஃபேஸ்புக் அக்கவுண்டை 
டீஆக்டிவேட் பண்ணிடுனு சொல்லி இருக்கலாம்.. "

" நானும் அதை தான் மாம்ஸ் பாலீஷா அப்படி 
சொன்னேன்... "

# கிர்ர்ர்ர்...

Monday, January 26, 2015

மணி : 3 Pm 
என் சின்ன பையன் கோகுல்...
" அப்பா... அண்ணன் ஸ்பீச்க்கு எத்தனை 
லைக் வந்து இருக்கு..? "
( பார்ரா... பொடியன் எல்லாம் லைக் பத்தி
தெரிஞ்சி வெச்சிருக்கான்... )
" இப்ப தானே போட்டேன்.. 15 லைக் வந்திருக்கு.. "
சரினு போயிட்டான்..
மணி : 4.45 Pm
மறுபடியும் வந்து எத்தனை லைக்னு
கேட்டான்...
70-னு சொன்னேன்.. போயிட்டான்..
மணி : 7 Pm
இப்ப பெரியவன் வந்து....
" அப்பா.. இப்ப எத்தனை லைக்கு..? "
" 120.. ஆமா.. எதுக்குடா இதை கேட்டுட்டே
இருக்கீங்க..? "
" ஹி, ஹி, ஹி.. இல்லப்பா கோகுல் தான்
ஒரு லைக்குக்கு ஒரு ரூபானு அப்பாகிட்ட
பணம் வாங்கு.. ஆளுக்கு பாதி வெச்சிக்கலாமனு
சொன்னான்.. "
# அடங்கொன்னியா...!!!
நிச்சயதார்த்தம்ல உக்காந்து இருக்கும் போது...
மாப்பிள்ளை வீட்டு சைடுல இருந்து
ஒரு பொண்ணு " ஹாய் "னு கை ஆட்டிச்சா...
ஒருவேளை நம்ம ப்ளாக் ரசிகையா
இருக்குமோனு நெனச்சிட்டு " ஹாய் "
சொல்லலாம்னு கைய தூக்க போகும் போது...
எனக்கு முன்னாடி சீட்ல இருந்த பொண்ணு
கை ஆட்டி ஹாய் சொல்லிடுச்சு...
# சே..!!

Sunday, January 25, 2015

" ஐ " படம் பாத்துட்டு இருக்கும் போது...
" என்னதான் ஹீரோ பாடிபில்டரா இருந்தாலும்
ஒருத்தனே 100 பேரை அடிச்சி துவைக்கற
மாதிரி காட்றதெல்லாம் கொஞ்சம் ஓவர்.. "
" ப்பூ.. இதென்ன பிரமாதம்... பக்கத்து தியேட்டர்ல
போயி பாரு.. படம் பார்க்க வந்த 600 பேரை
விஷாலு அடிச்சி தொவைச்சிட்டு இருக்காராம்..!! "
# ஐ Vs ஆம்பள

இன்னிக்கு காலைல ஓபாமா போன்ல.. 

" 26-ம் தேதி பங்ஷனுக்கு நீயும் வா வெங்கி.. 
கம்பெனியா இருக்கும்னு " கூப்பிட்டாரு...

ஆனா.. நான் வரலைன்னு சொல்லிட்டேன்..

பின்ன...

Chief Guest நானா..? இல்ல ஓபாமாவானு
மக்கள் கன்பியூஸ் ஆகிடக் கூடாதுல்ல..

# உயர்ந்த உள்ளம்.. ஹி., ஹி., ஹி..!!!

Thursday, January 22, 2015

நாங்க எப்பவும் கொண்ட கொள்கையை
உறுதியா கடைப்பிடிப்போம்..
ஆனா என்ன...
அப்பப்ப கொள்கையை மட்டும் மாத்திப்போம்..!!
:)
ஒரு பொண்ணு புரோபைல் பிக்சர் மாத்தி
16 மணி நேரம் ஆகுது.. இதுவரைக்கும்
ரெண்டே பேர் தான் லைக் போட்டு
இருக்காங்க...
# இட்ஸ் எ மெடிக்கல் மிராக்கிள்..!!
smile emoticon

ஸ்லோ ஓவர் ரேட் - PS


ஓபாமா - 15000 CCTV Camera - PS" மௌன ராகம் " படம் பெண்களுக்கு
ஏன் அதிகம் பிடிக்குது..??!
சீக்ரெட் ரிவீல்ட்..
என் Wife சொன்னாங்க...
" இந்த படத்தை பாத்துட்டு இந்த மாதிரி
ஹஸ்பென்ட் வேணும்னு ஒவ்வொரு
பொண்ணும் அடிமனசுல ஆசைப்பட்டு
இருப்பாங்க....! "
" மோகன் மாதிரியா..? "
" ம்ஹூம்.. இல்ல.. "
" அப்ப கார்த்திக் மாதிரியா..?!! "
" அதுவும் இல்ல..!! "
" அப்ப வேற யாரு... V.K.ராமசாமி..?!! "
" ஐய்யோ... மோகன், கார்த்திக் ரெண்டு
பேரும் கலந்த மாதிரி.! "
" ஆஆஆ..!! "
# ஏம்மா.... லூசாம்மா நீங்க..?!!
ஆஹா.. சன் டிவில " மெளன ராகம்.."
" அடடடா... எத்தனை தடவை தான்
இந்த படத்தை பார்ப்பே..? "
" நீங்க மட்டும் பழைய கிரிக்கெட்
மேட்சை எப்ப போட்டாலும் பார்கறீங்கல்ல.. "
எந்த மேட்சை நாம 50 தடவை பார்த்தோம்..?!! - மீ திங்கிங்..
வெஸ்ட் இண்டீஸ் அணியின் புது பீல்டிங்
வியூகம்... டிவில்லிர்ஸ்காக..
# இப்ப அடிடா பார்க்கலாம்...!!!


கதை Vs இலக்கியம் - PSஜடேஜா : இங்கிலாந்துல அப்படி ஆடுனேன்.., 
சவுத் ஆப்ரிக்கால இப்படி ஆடுனேனு சொன்னே... 
இங்கே ஆடு..

தவான் : டேய் இவனுங்க வித்தையை 
தப்பா கத்து வெச்சிட்டு இருக்கானுகடா..

ஜடேஜா : த்தூ..!!!

Friday, January 16, 2015

மங்கு சொன்னாப்ல...
" எங்கே இந்த பையன் நம்மள விட
அறிவாளி ஆகிடுவானோன்னு பல பேர்க்கு
உன்னை பாத்து பொறாமை வெங்கி... "
" சான்ஸே இல்ல மச்சி...!! "
" எப்படி சொல்ற..?!! "
" அப்படி பொறாமை படறதா இருந்தா
அப்துல் கலாம் ஒருத்தர்தான் பட முடியும்..!! "
smile emoticon smile emoticon

ஏய் எருமை - PS
விஷால் படம் ரிலீஸ் ஆகப்போகுதுன்னாலே
எனக்கு ஒரு எதிர்பார்ப்பு உருவாகிடும்..
நான் வழக்கம் போல அதை பார்க்க மாட்டேன்..
அது வேற விஷயம்..
ஆனா..
படம் ரிலீஸ் ஆன 4-வது நாள்
பர்மா பஜார்ல பூந்து நம்ம விஷாலு
வீடியோ பைரசி புடிக்கறதை யூ டியூப்ல
போடுவாங்க பாருங்க..
செமையா இருக்கும்..
ஐயம் வெயிட்டிங்..!!
smile emoticon smile emoticon

மாட்டு பொங்கல் வாழ்த்து - PS" மக்கள் ப்ளாக்கர் " வெங்கட் அவர்களின்
வழிகாட்டலின் படி Nirmala Venkat அவர்கள்
போட்ட கோலம்..
.
.
.
.
2 மணி நேரம் முன்பு...
" நிர்மலா.. இந்த இடத்துல கோலம்போடு..!!! "
# வழிக்காட்டுதல்

வெங்கட்.. நீங்க போட்டோல இருக்கற

இன்னிக்கு சாட்ல ஒரு பொண்ணு...
" வெங்கட்.. நீங்க போட்டோல இருக்கற
மாதிரியே தான் நேர்லயும் இருப்பீங்களானு..? "
கேட்டாங்க..
" ஆமாம்"-னு பொய் சொல்ல மனசு வரல..,
அதனால...
.
.
.
.
.
.
.
.
" இல்லங்க... நேர்ல இன்னும் அழகா
இருப்பேன் "-னு சொல்லிட்டேன்..
# அரிச்சந்திரனை பார்க்கணும்னு தோனினா...
நானெல்லாம் செல்போன்ல செல்பி எடுத்து
பார்த்துப்பேனாக்கும்...
smile emoticon

பொங்கல் வாழ்த்து - PS


Wednesday, January 14, 2015

ஃபேஸ்புக் லவ் - PS


எதை வேணும்னாலும் சொல்லிட்டு...
கடைசியா ஒரு ஸ்மைலி போடுவது
பின்ஜாக்கிரதை என கொள்க..

- பாபா வெங்கீஷ்..
smile emoticon
வாட்சிங் பிசாசு..
வித் மை காதல் பிசாசு..!!
smile emoticon

நம்ம ரேவ்ஸ் குமார் மேடம்
குடும்ப நாவல்கள் / காதல் நாவல்கள்
எல்லாம் சிறப்பா எழுதுவாங்க..
ஆனா.. அவங்களுக்கு கிரைம் நாவல்
எழுதணும்னு ரொம்ப நாளா ஆசை..
எங்கிட்ட டிப்ஸ் கேட்டாங்க..
" வெங்கட்.. கிரைம் நாவல் எப்படி எழுதறது.? "
" அது ரொம்ப சிம்பிள் மேட்டர்.. நீங்க
எழுதின எதாவது ஒரு கதையை குடுங்க
அதைக் கூட கிரைம் நாவலா மாத்திக்கலாம். "
" அது எல்லாமே பேமலி , லவ் சப்ஜெக்ட்.. "
" நல்லா யோசிச்சி பாருங்க.. எந்த கதையிலயாவது
கொலை எதாவது நடக்குதா..? "
யோசிக்கிறாங்க..
" ம்ம்.. ஒரு கதையில.. 10-வது அத்தியாயத்துல
நிருபமானு ஒரு நடிகையை அவளோட
லவ்வர் அருண் கொலை பண்ணிடறான்.. "
" குட்.. அப்ப அதை முதல் அத்தியாயமா
போட்டுடலாம்.. ஆனா கொலை பண்ணினது
ராஜீவ்னு கடைசி அத்தியாயத்துல சொல்லலாம்.. "
" ராஜீவா..? அது யாரு..? "
" அவளோட லவ்வர்.. "
" அவன் பேரு அருண்ங்க.. "
" நாமதான் 12-வது அத்தியாயத்துல
அவன் பேரை ராஜீவ்னு மாத்த போறோமே..!! "
" எதுக்கு மாத்தறோம்..?!! "
" கொலை பண்ணினது அருண்ன்னு
மக்கள் நினைச்சிட்டு இருக்கும் போது..
நாம ராஜீவ்னு சொன்னா.. செம ட்விஸ்டா
இருக்கும்ல.. "
" ஓஹோ.. அப்புறம்.. "
" கிரைம் நாவலுக்கு முக்கியமே கதையை
மக்கள் யூகிக்கவே கூடாது.. "
" சரி.. அதுக்கு என்ன பண்ணலாம்..??! "
" 3வது அத்தியாயத்தை தூக்கி 16-ல போடுங்க,
10-ஐ தூக்கி முதல்ல போடுங்க, 4-ஐ தூக்கி
13-ல்ல போடுங்க... 8-ஐ தூக்கி 19-ல.. "
" அப்படியே அந்த அம்மி கல்ல தூக்கி
என் தலைல போடுங்க... "
" ஹா., ஹா., ஹா.. "
( ஹப்பா எங்கே போட்டிக்கு வந்துடுவாங்களோனு
பயந்தே போயிட்டேன்...
நீ கலக்கு வெங்கி.. இனிமே மர்ம நாவல்ல
நீதான்டா தனிக்காட்டு ராஜா..!! )

நேத்து நம்ம ரேவ்ஸ் குமார் மேடம்
சாட்டிங்ல...
" வர்ற சென்னை புத்தகக் கண்காட்சில
என் புக் வெளியிடப்போறாங்க.. "
" நான் வந்து தலைமை தாங்கணுமா..?
நீங்க முன்னமே சொல்லி இருக்கலாம்ல..
நான் வேற எஸ்.ரா-வுக்கு.. "
" ஹலோ.. ஹலோ.. கொஞ்சம் சொல்றதை
கேக்கறீங்களா..?!! "
" சரி.. சொல்லுங்க.. "
" எங்கே எனது கவிதை..?!! "
" ஐயோ.. சத்தியமா நான் பார்க்கலைங்க..
அங்கே தான் எங்கயாவது இருக்கும்
நல்லா தேடி பாருங்க. "
" அட.. அது என் புக் தலைப்புங்க.. "
" ஓ.. கவிதை புக்கா... "
" இல்லங்க.. கதை புக்கு..!! "
( குழப்பறாய்ங்களே...!!! )
" நீங்க ஒருதரம் படிச்சிட்டு நல்லா
இருக்கானு சொல்லுங்க..!! "
" சொன்னா... என்ன தருவீங்க..?! "
" என்ன வேணும்..?!! "
" அடுத்த நாவல்ல ஹீரோவுக்கு வெங்கட்னு
பேர் வெக்கணும்.. டீலா..?!! "
" ஐயோ.. நான் மாட்டேன்பா... என் ஹீரோஸ்
எல்லாம் ரொம்ப நல்லவங்க... "
" என்னாது... நல்லவிங்களா..?!! அவ்வ்வ்..!!! "
டிஸ்கி :
டியர் ப்ரெண்ட்ஸ்..,
நம்ம ரேவ்ஸ் குமார் நாவல்கள் சூப்பரா
இருக்கும்..
இந்த சென்னை புத்தக கண்காட்சில
நம்ம நண்பர்கள் எல்லோரும் ரேவ்ஸ் மேடம்
புக்கை வாங்கி ( அப்படியே எனக்கு ஒன்னு
பார்சேல்ல்ல்.. ) இந்த வருஷம் டாப் சேல்ஸ்
ஆனது ரேவ்ஸ் குமார் புக் தான்னு பேர் வர
வெக்கணும்..
செய்வீர்களா..?!! நீங்கள் செய்வீர்களா..?!!
கிடைக்கும் இடம் :
ஸ்டால் - மூவர் நிலையம்
ஸ்டால் எண் - 478 & 479.
வழி - மகேந்திர பல்லவன் வீதி.

அவள் அப்படி ஒன்றும் அழகில்லை 
அவளுக்கு தங்கச்சி யாருமில்லை 
அவள் அக்கா ஒன்றும் கலரில்லை 
அதுக்கு இவளே பரவாயில்லை...


" அண்ணே... அவனுக்கு உடம்பல்லாம்
மூளைண்ணே..!! "
" உடம்பெல்லாம் இருந்தா அதுக்கு பேரு
மூளையில்லடா.. கொழுப்பு.! "

லிங்கா 25 நாள் கலெக்சன் : 350 கோடி

மேக்கிங் :
லிங்கா பட்ஜெட் : 100 கோடி..
சேல்ஸ் :
டிஸ்ட்ரிபியூட்டர் ரைட்ஸ்: 169 கோடி
சேட்டிலைட் ரைட்ஸ் : 32 கோடி..
ரிலீஸ் :
25 நாள் கலெக்சன் : 350 கோடி..
100 கோடி ரூபா பட்ஜெட் படம்
350 கோடி ரூபா வசூல் பண்ணியிருக்கு..
இதுல சில பேர்க்கு நஷ்டமாயிடுச்சாம்..
நஷ்டஈடு கேட்டு போராட்டம் பண்ண போறாங்களாம்..
அமைதி.. அமைதி...
நஷ்டமடைஞ்சவங்க இந்த க்யூல வந்து அக்கவுண்ட் நம்பர் குடுங்க...
லாபம் வந்தவங்க அந்த க்யூல வந்து
பணம் குடுங்க...
செட்டில் பண்ணனும்..!!
# லிங்காவுக்கு பிரச்னைனா..
வருவான்டா இந்த வெங்கா..
கொய்யாலே... யாருகிட்ட...


Monday, January 5, 2015

" நீங்க தெலுங்கா.? "-ன்னு என்னை பாத்து
இன்னிக்கு ஒருத்தங்க கேட்டாங்க..
யாரைப் பாத்து.. யாரைப் பாத்து..?
தமிழ்தான் என் மூச்சு..
தமிழ்தான் என் பேச்சு..
தமிழ்தான் என் வாட்ச்சு..
( ஹி., ஹி., ஹி.. ஒரு ப்ளோல வந்துடுச்சு.. )
நாங்கல்லாம் இங்கிலீசு எக்ஸாமையே
தமிழ்ல எழுதினவங்க... எங்கள போயி...
# ஓ மை காட்..!!

அது என்னமோ தெர்ல... 

நாம எடுத்த போட்டோவ நாம போட்டா... 
20 லைக் வர்றதே பெரும்பாடா இருக்கு.. 

அதே போட்டோவை மத்தவங்க காப்பி பண்ணி
போட்டா.. ஆயிரக்கணக்குல லைக்ஸ், ஷேர்ஸ்
அள்ளுது..

# டிசைன் அப்புடி..!!

Sunday, January 4, 2015


நைட்டு 8 மணிக்கு மங்குவோட போன்..
" ஹலோ.. வெங்கி... "
" சொல்லு மங்கு.... "
" இன்னிக்கு ஆபீஸ்ல திட்டிட்டாங்கப்பா...!! "
" நீ என்ன பண்ணே..?!! "
" ஒன்னுமில்ல மச்சி.. டியூட்டி டைம்ல
லைட்டா தண்ணி அடிச்சேன்.. இது
ஒரு தப்பா..? "
" இல்லியா பின்னே..?!! "
" அப்ப ஏன் மச்சி கவர்மெண்ட்
காலைல 10 மணிக்கே கடையை
ஓபன் பண்ணி வெக்குது..?!! "
" குட் கொஸ்டின்... இருந்தாலும்
நீ பண்ணினது தப்புதேன்... "
" அப்படின்ற..? "
" ஆமா.. நான் சொன்னா நீ கேப்பியா..?
மாட்டியா..? "
" என்னா மச்சி இப்படி கேட்டுட்டே..
நீ சொன்னா நான் மாடில இருந்து கூட
குதிப்பேன்.. "
( டேய்.. போதும்டா...!!! )
" அப்படின்னா.. இனிமே வேலை நேரத்துல
தண்ணியடிக் கூடாது..!! "
" ஓ.கே.. நாளைக்கே விட்டுடுடறேன்.. "
" தண்ணியவா...?!! "
" ஹி., ஹி., ஹி... வேலையை..!!! "
" த்த்தூ..!!! "

இன்னிக்கு என் ப்ரெண்ட் கிச்சாவுக்கு 
பர்த்டே... வாழ்த்துக்கள் பாவா... 

அவனுக்கு எங்க ப்ரெண்டு வாணி 
வாட்ஸ் அப் க்ரூப்ல அனுப்பின 
வாழ்த்தும்.. அதுக்கு நம்ம உரையும்..Thursday, January 1, 2015


கோவிலுக்கு போனா... 

சாமியை மறைச்சி நின்னுகிட்டு 
மொபைல் கேமரால போட்டோ 
பிடிச்சிட்டு இருக்கானுங்க.. 

கொஞ்சமாச்சும் அறிவு வேணாம்..??!

இடியட்ஸ்..

நகருங்கடா...

அப்புறம் நாங்கல்லாம் எப்படிடா
போட்டோ பிடிக்கறது..?!


" மச்சி.. இன்னிக்கு சாட்ல ஒரு பொண்ணு
மங்குனி அமைச்சர் பேரு என்ன..?
பேரு என்னு கேட்டுட்டே இருந்திச்சா..
நானும் சொல்ல மாட்டேன்.. 
சொல்ல மாட்டேனு சொல்லிட்டே
இருந்தேனா..
கடைசில எனக்கு மனசு கேக்கல..
சரி நம்பர் தர்றேன்.. பேசறீங்களானு
கேட்டு நம்பர் குடுத்துட்டேன்.. "
" அச்சசோ.. மங்கு திட்டுவானே.. "
" எதுக்கு திட்டுவான்..? நான் என் நம்பர்ல
குடுத்தேன்.. ஹி., ஹி., ஹி..!!! "

இனியா... புத்தாண்டு வாழ்த்துக்கள் - PS


வீட்டில் எத்தனை ஆணிகள் - PS