Monday, February 29, 2016

வராத நயன்தாராவுக்கு அவார்ட் குடுப்பாங்களாம்...
வந்து.. டான்ஸ் எல்லாம் ஆடுன
தமன்னாவுக்கு குடுக்க மாட்டாங்களாம்..
என்னடா பங்ஷன் நடத்தறீங்க..?!!
நான் வெளிநடப்பு செய்கிறேன்..!!
# ஐய்யயோ... உணர்ச்சிவசப்பட்டு வீட்டுக்கு
வெளியே வந்துட்டேனே..!!!
அவ்வ்வ்வ்வ்
" எப்ப நீங்க சிரிப்பு வர்ற மாதிரி காமெடி
போஸ்ட் எழுதுவீங்க..? "
( என்னை கலாய்ச்சிட்டாராமாம்.. )
" சாரி பாஸ்... உங்கள மாதிரி காமெடியா
எனக்கு எழுத வராது.. "
" காமெடியா..?! நான் எப்ப எழுதினேன்..?!! "
" அதான் உங்க Wall புல்லா எழுதி வெச்சி இருக்கீங்களே....!! "
" ம்ம்ம்ம்.. அதெல்லாம் கவிதை..!! "
" ஓ...!! அதுக்கு பேருதான் கவிதையா.?!! சரி....!!! "
# ஆருகிட்ட..!!!

Ind Vs Pak ( Asia Cup ) Status

அந்த வெண்ணெய் என்னடா அவுட் இல்லனு சொல்றது..?
இந்தா.... ஆண்டவன் ரன் அவுட் பண்ணிட்டான்ல..

======================================================

ஆஹா.. சோயப் மாலிக் ஏமாத்திட்டானே...
" ரன் எடுக்க மாட்டேன்.. நாலு பேரை
ரன் அவுட் பண்ணிவிடறேன்னு "
சானியா மிர்சாவுக்கு சத்தியம் பண்ணி 
குடுத்து இருந்தானாம்..

======================================================

" என்னங்க.. கிரிக்கெட் ஸ்டேடஸ் போடலியானு கேக்கறாங்க.. "
" எங்க மாமா.. குளிக்கறார்னு.. இல்ல சாப்பிடறார்னு.. 
வேணாம் வேணாம்.. ஊருக்கு கிளம்பிட்டார்னு சொல்லு..."
# ஐயோ... என்னை இப்டி பொலம்ப வுட்டுட்டானுங்களே...!!

======================================================

கோலி யுவராஜ்கிட்ட....
" நீ ஆணியே புடுங்க வேணாம்.. எல்லாத்தையும்
நான் பாத்துக்கறேன்னு " சொல்லிட்டானாம்...

Saturday, February 27, 2016

நானும் மங்குவும் பேசிட்டு இருந்தோம்..
" மச்சி.. இந்த மார்க் பய பண்ணின
வேலைய பாத்தியா..? "
" எத சொல்ற மங்கு..? "
" அதான் மச்சி.. அந்த லைக் பட்டனுக்கு
பக்கத்துல ஏகப்பட்ட ரியாக்சன் பட்டன்
வெச்சி வுட்டு இருக்கான்ல...! "
" ஆமா.. நானும் பாத்தேன்..!! "
" நாமெல்லாம் பிரபல ஃபேஸ்புக் போராளியாச்சே..
இதனால நம்ம புகழுக்கு எதுனா பங்கம் வருமா
மச்சி.. "
" சே., சே.. காறி துப்பற மாதிரி பட்டன் வெக்காம
இருக்கற வரைக்கும் நமக்கு பிரச்னையேயில்ல..!! "
" ஹி., ஹி.., ஹி... ரைட்டு மச்சி..!! "

Friday, February 26, 2016


இன்னிக்கு என் Wife-கிட்ட சொல்லிட்டு
இருந்தேன்..
" எனக்கு இருக்குற சங்கீத தெறமைக்கு
நான் ஆஹா.. ஓஹோன்னு வந்திருக்க 
வேண்டியவன்.. "
" ஆஹான்...?!! "
" அட நம்புங்கறேன்.. சின்ன வயசுல
சங்கீதம்னா எனக்கு உசுரு..!! "
" அப்புறம்..?!! "
" பாட்டு கத்துக்கறதால ஓவரா பணம்
செலவாகுதுன்னு எங்கப்பா தான்
பாட்டு கிளாஸ் கட் பண்ணிட்டாரு..?! "
" உங்களுக்கு பாட்டு சொல்லிக்குடுக்க
வாத்தியார் எக்ஸ்ட்ரா சம்பளம் கேட்டாரோ..?!! "
" ஹி., ஹி., ஹி.. இல்ல.. பக்கத்து வீட்டுக்காரங்க
எங்கப்பா மேல கேஸ் போட்டுட்டாய்ங்க..!! "
# மேய்ச்சது எருமை..!! அதுல என்ன பெருமை..?!
மங்குனி அமைச்சர் போன் பண்ணியிருந்தான்...

" மச்சி ஒரு குட் நியூஸ்டா... "

" என்ன,,? "

" எனக்கு வேலை கெடைச்சிடுச்சு..! "

( ஆஹா.. இது அந்த கம்பெனிக்கு Bad News ஆச்சே.. )

" சம்பளம் எவ்ளோ மச்சி..? "

" என் திறமைக்கு ஏத்த சம்பளம் தர்றோம்னு
சொல்லி இருக்காங்க..!! "

" இது செட் ஆகாது... நோ சொல்லிடு.."

" ஏன் மச்சி..?!! "

" அவ்ளோ கம்மி சம்பளத்துல எப்டி மச்சி வேலை
பார்ப்பே..?!! "

" அடிங் கொய்யாலே...@#@$%$###@@!!!! "

Wednesday, February 24, 2016

இன்னிக்கு என் சின்ன பையன் கோகுல்
ஸ்கூலுக்கு போற அவசரத்துலயும் எதையோ
தேடிட்டு இருந்தான்..
" ஏன் நிர்மலா.. இவன் எப்ப பாத்தாலும் 
எதையாவது தேடிட்டே இருக்கானே..
இவனுக்கு கோகுல்னு பேர் வெச்சதுக்கு
பதிலா கூகுள்னு வெச்சி இருக்கலாமோ..?! "
என் Wife என்னை கேவலமா ஒரு லுக் விட்டுட்டு
சொன்னாங்க..
( பொதுவாவே என்னை அப்டிதான் லுக் விடுவாங்க..
அது வேற விஷயம்... )
" அப்படி பாத்தா நீங்க பண்ற வேலைக்கு எல்லாம்
உங்களுக்கு வெங்கி்-னு வெக்காம மங்கி்-னு தான்
வெச்சிருக்கணும்..!! "
# ஙே..!!
ஆபீஸ்ல வெட்டியா உக்காந்து இருந்தேன்...
அப்ப என் மொபைல் ரிங் ஆச்சு..
பாத்தா.. புது நம்பர்...
" ஹலோ... "
" ஹலோ.. நான் கவிதா பேசறேன்..."
" எந்த கவிதா..?!! "
( ஹி., ஹி., ஹி.. எனக்கு மூனு கவிதா தெரியும்ல... )
" காயத்ரி ப்ரெண்ட்.. "
" எந்த காயத்ரி..?!! "
( ஹி., ஹி., ஹி.. எனக்கு நாலு காயத்ரி தெரியும்ல.. )
" மீனாட்சி காலேஜ்.. மதுரை.. காயத்ரி.. "
" மதுரையா..?! நான் மதுரைக்கு வந்ததேயில்லையே.. "
" நீங்க ராகவ் தானே..?!! "
" நோ.. நான் வெங்கட்.. "
" அச்சச்சோ... சாரிங்க.. ராங் நம்பர் பண்ணிட்டேன்
போல இருக்கு.. "
" கூல் கவிதா... இதுக்கு எதுக்கு சாரினு பெரிய
வார்த்தை எல்லாம் சொல்லிட்டு இருக்கீங்க.. "
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
( 12 நிமிஷம் கழிச்சு... )
" ஓ.கே வெங்கட்.. Bye..!! "
" Bye கவிதா..!! "
# இப்ப எனக்கு நாலு கவிதா தெரியும்.. ஹி., ஹி., ஹி...!!
ரெண்டு நாளைக்கு முன்னால டிவிடி பிளேயர் 
புட்டுகிச்சி...

முந்தா நேத்து மொபைல் டமால்...

நேத்து ஏசி பனால்...

இன்னிக்கு ஒன்னுமே நடக்கல..

# ஐயம் வெரி ஹேப்பி மச்சி..!!!

தலைகீழா சம்மர் அடிச்சாதான் MLA சீட் -PS


பார்த்தீ பட்டேல் இன் இந்தியா டீம் - PS


ஆருகிட்டே....!!! smile emoticon
 smile emoticon


Thursday, February 18, 2016


நேத்து சாயந்திரம் வீட்ல தூங்கிட்டு இருந்தேன்...
என் ப்ரெண்ட் அருண் வந்து எழுப்பினான்..
" மச்சி.. ஒரு சின்ன ஹெல்ப்டா.. "
" என்ன..? "
" என் பையன் ஸ்கூல்ல இருந்து சேரீஸ்
எடுக்க மிஸ்ஸூங்க வர்றாங்களாம்.. "
" அதுக்கு..?!! "
" உன் ப்ரெண்ட் ராஜேஷ் கடைக்கு கூட்டிட்டு
போகணும்..!! "
" கூட்டிட்டு போ.. "
" எனக்கு ராஜேஷ் அவ்ளோ பழக்கம் இல்லயே மச்சி
நீயும் கூட வா.. "
( என்னடா இது.. தூங்கிட்டு இருக்கறவனை
எழுப்பி இம்சை பண்றானேன்னு கடுப்பா
இருந்தது..
சரி என்ன பண்றது.. இவனுக்காக இல்லன்னாலும்..
அந்த மிஸ்ஸூங்களுக்காக.. சே... ராஜேஷ்க்காக
வர ஒத்துக்கிட்டேன்..!! )
கெளம்பும்போது அருண்...
" மச்சி.. அங்கே வந்து நீ எதுவும் பெர்பாமென்ஸ்
பண்ணக்கூடாது..!! "
" என்னாது பெர்பாமென்ஸா...? நான் என்ன 
கரகாட்ட கோஷ்டியாடா வெச்சி இருக்கேன் "

" ஹி., ஹி., ஹி.. அதான் மச்சி.. இந்த ஜோக் அடிக்கறது..
என்னை கலாய்க்கறது இதெல்லாம் பண்ணக்கூடாது..!! "
" ம்ம்.. வெளங்கிடுச்சு... இந்த சீன்ல நீங்க ஹீரோ...
நாங்க ஹீரோவுக்கு ப்ரெண்டு... "
" அதே.. அதே..!! "
" சரி போயி தொலை...!! "
நாங்க பைக்ல போயி பஸ் ஸ்டேண்ட்ல வெயிட்
பண்ணிட்டு இருந்தோம்..
கொஞ்சம் நேரத்துல ரெண்டு மிஸ்ஸுங்க
ஸ்கூட்டில வந்தாங்க..
ஸ்கூட்டிய பாத்ததும் இவன் அலேர்ட் ஆகிட்டான்..
" மச்சி அதோ வர்றாங்க... அடக்கி வாசி..! "
" சரி நாயே.. நீ வேலைய பாரு..! "
வந்தாங்க... Intro பண்ணிட்டாங்க... அப்புறம்
ராஜேஷ் கடைக்கு கூட்டிட்டு போனோம்..
அவங்களுக்கு அங்க டிசைன்ஸ் பிடிச்சது..
ஆளுக்கு 3 சேலை எடுத்துகிட்டாங்க..
நான் முன்னமே ராஜேஷ்கிட்ட டிஸ்கவுண்ட் குடுனு
சொல்லி வெச்சிட்டேன்..
இப்ப நம்மாளு மிஸ்ஸூங்க முன்னால
ராஜேஷ்கிட்ட பேசி டிஸ்கவுண்ட் வாங்கி தர்ற
மாதிரி சீன் போட்டான்..
ராஜேஷும் 20% டிஸ்கவுண்ட் குடுத்தான்..
மிஸ்ஸூங்க செம ஹேப்பி...
போறப்ப அந்த மிஸ்ஸுங்க நம்ம ஆள பாத்து..
" ரொம்ப தேங்க்ஸ் அங்கிள் "-னு சொல்லிட்டு
போனாங்க...
எனக்கு சிரிப்பு பொத்துட்டு வந்தது...
லைட்டா அந்த பக்கம் திரும்பிட்டேன்...
அவங்க போனதும் அருண் எங்கிட்ட..
" ஏன் மச்சி... அங்கிள்னா... தமிழ்ல மாமானு தானே
அர்த்தம்..?!! "
# த்த்த்த்தூ...!!!
நேத்து நைட் சாட்டிங்ல ஒரு பொண்ணு...

" வெங்கி... மனசொல்லாம் ஒரே குழப்பமா இருக்கு.. 
நைட் தூக்கமே வர மாட்டேங்குது.. தூக்கம் வர்றதுக்கு 
எதாவது ஐடியா குடுங்களேன்... "

நாம தான் ஐடியா குடோன் ஆச்சே.. யாராவது 
ஐடியானு கேட்டுட்டா... சும்மா அள்ளி விடுவோம்ல... 
ஏகப்பட்ட ஐடியாஸ் குடுத்தேன்..

அத கேட்டு அந்த பொண்ணு செம ஹேப்பி..

நைட் 1 மணி :
" ஐடியா வொர்க் அவுட்டாகி அந்த பொண்ணு 
தூங்கி இருக்குமா..?!! "

நைட் 2 மணி :
" ஐடியா வொர்க் அவுட்டாகி அந்த பொண்ணு 
தூங்கி இருக்குமா..?!! "

நைட் 3 மணி :
" ஐடியா வொர்க் அவுட்டாகி அந்த பொண்ணு 
தூங்கி இருக்குமா..?!! "

நைட் 4 மணி :
" ஐடியா வொர்க் அவுட்டாகி அந்த பொண்ணு 
தூங்கி இருக்குமா..?!! "

5 மணி.... என் Wife...

" நைட் தூங்காம.. அங்கே லேப்டாப்ல என்ன 
நோண்டிட்டு இருக்கீங்க...?!! "

" ஹி., ஹி., ஹி. தூக்கம் வரல...! "

# வெளங்கிடும்ல...!!!

Wednesday, February 17, 2016

சேலத்துல ஒரு ப்யூட்டி என்னான்னா...

நீங்க எங்க போயி நின்னாலும் அங்கே 
ஒரு ஹோட்டல் இருக்கும்...

அப்டியே கண்ணை மூடிட்டு எதோ ஒரு பக்கம் 
15 அடி நடந்தீங்கன்னா... நீங்க போயி நிக்கறதும் 
ஒரு ஹோட்டலா தான் இருக்கும்...

அப்ப இந்த ரெண்டு ஹோட்டலுக்கும் நடுவுல 
என்ன இருக்கும்னு கேக்கறீங்களா...?!

அதுவும் ஹோட்டல்தேன்...!!

# சேலம்டா...!!!

Sunday, February 14, 2016


என் ப்ரெண்ட் ஜெகன் போன் பண்ணியிருந்தான்..
பேச்சு அப்டியே போட்டோகிராபி பத்தி திரும்பிச்சு..
" ஏன்டா வெங்கி.. நீ ஏன் எங்கே போனாலும்
SLR தூக்கிட்டு போறே.. மொபைல்லயே எடுக்கலாமே..!! "
( ஒரு போட்டோகிராப்பரை பாத்து கேக்கற
கேள்வியாடா இது..?!! )
" ஹேய்.. இப்ப எல்லோரும் மொபைல்ல தான்டா
போட்டோ எடுக்கறாங்க... நாம கொஞ்சம் டிப்பரண்ட்னு
காட்டணும்ல...!! "
" ம்ம்க்கும்.. இப்ப மட்டும் என்ன சொல்லுவாங்கனு
நெனக்கிறே,,? "
" என்ன சொல்லுவாங்க..?!! "
" கண்ட நாயெல்லாம் SLR வெச்சி இருக்கு பாரேனு
தான் சொல்லுவாங்க...!! "
# ஞே..!!!

Thursday, February 11, 2016


இந்த நாடகத்துல எல்லோருமே சுமாராத்தான் இருக்காங்க..
அப்புறம் என்னாத்துக்குடா " அழகி " னு பேரு வெச்சீங்க..?!!

Wednesday, February 10, 2016


இன்னிக்கு மதியம் சுதாகிட்ட சாட்டிங்..
" சுதா.. ஒரு சின்ன மேஜிக்.. "
" என்ன மேஜிக்...?! "
" உங்க மொபைல் நம்பர் சொல்லுங்க..
உங்க Date of Birth நான் சொல்றேன்.. "
" அதெப்படி..?!! "
" அதெல்லாம் கேக்கப்படாது... நம்பர்
மட்டும் சொல்லுங்க.. "
" சரி.. 897*****84.. "
" பர்ஸ்ட் நம்பர் 8.., லாஸ்ட் நமபர் 4...
கூட்டிக்கழிச்சு பார்த்தா... உங்க பர்த்டே
செப்டம்பர் 16.. கரெக்ட்டா..? "
" வாவ்... அமேசிங்... எப்படி கண்டுபிடிச்சீங்க..?!! "
( அல்ரெடி புரோபைல் பாத்து நோட் பண்ணி
வெச்சிருக்கோம்ல...!! )
" அதெல்லாம் அப்படித்தான்.... "
" வெங்கட் நீங்க ரியலி கிரேட்... இருங்க
என் ப்ரெண்ட் ஹேமா ஆன்லைன்ல இருக்கா..
அவகிட்ட இத பத்தி சொல்லிட்டு வரேன்...!! "
( ஐ.. ஹேமா நம்பரும் கெடைக்க போவுதா..?!! )
இன்பாக்ஸ் மெசேஜில் ஹேமா...
" ஹாய் வெங்கட்... "
" ஹாய்..!! "
" பெரிய மேஜிசியன் ஆகிட்டீங்களாமாம்..
சுதா சொன்னா.. "
" சே.. சே.. அப்டி எல்லாம் இல்ல..!! "
( திஸ் ஈஸ் ' தன்னடக்கம்..' ப்ளீஸ் நோட்.. )
" அவங்க அப்பா நம்பரை வெச்சே
அவ பர்த்டே கண்டுபிடிச்சிட்டீங்களாம்..!! "
" என்னாது இது அவங்க அப்பா நம்பரா..?!! "
அவ்வ்வ்வ்வ்..!!!
# என்னம்மா... இப்டி பண்றீங்களேம்மா...?!!

Wednesday, February 3, 2016


" முயற்சி பண்ணினா முடியாதது
எதுவும் இல்ல"-னு சொல்றாங்க..
நான் சும்மா ஒரு பேச்சுக்கு கேக்கறேன்...
எவ்ளோ தான் முயற்சி பண்ணினாலும்
நானும் காத்ரீனாவும் ஒரு படத்துல ஜோடியா
நடிக்க முடியுமா..?!!
ஐ மீன்... காத்ரீனா எவ்ளோ தான் முயற்சி பண்ணினாலும்...
ஹி., ஹி., ஹி...!!!