Saturday, April 30, 2016


மொதல்ல பொண்ணு பேர்ல Fake Id
ஒண்ணு ஓபன் பண்றோம்..
இனிமே ஸ்டேடஸ் எல்லாம் அதுல
இருந்து போடறோம்..
லைக்ஸ் அள்றோம்..!!
" ஸ்டேடஸ் போடறவன் இருக்கற வரை
அதை காப்பி பேஸ்ட் பண்றவன்
இருந்துட்டு தான் இருப்பான்...!! "

- பாபா வெங்கீஷ்..

Friday, April 29, 2016


ஆன்ட்டி சொன்னாப்ல.. எனக்கு வீட்டுக்கு
கிப்ட் வாங்கிட்டு வர்றதெல்லாம் பிடிக்காதுனு..
அப்புறம் என்ன _______க்கு அத வாங்குனே..?
( ஆல்பர்பஸ் அங்கிஸ் : ஹேய்... ஹேய்.... )
ஹேய்... உக்காரு உக்காரு.. மூஞ்சில
பூரான் வுட்டுடுவேன்.. உக்காரு உக்காரு..
ஏழு ஊர் ரவுடிய பாத்தவன்டா..
ஆன்ட்டி., இப்டி வா ஆன்ட்டி.. வந்து இப்டி
நில்லு...
சுகர் டேப்லட் போட்டுக்கற வயசுல அதென்ன
ப்ளாக் பாரஸ்ட், ரெட் வெல்வட்னு..?
உன் ப்ரெண்ட் வந்து உனக்கு கேக் குடுத்தா
நீ என்னா பண்ணியிருக்கணும்..? என்ன ஆன்ட்டி
பண்ணியிருக்கணும்..?
ஒன்னு வாங்கி வெச்சிருக்கணும்., இல்ல வேண்டாம்னு
சொல்லி இருக்கணும்..
நீ என்னமோ.. லண்டன்ல பொறந்து அமெரிக்காவுல
வாழ்க்கைபட்ட மாதிரி அத ஃபேஸ்புக்ல ஸ்டேடஸா
போட்டு அசிங்கப்படுத்தி இருக்கே..
நீ என்ன அவ்ளோ பெரிய அப்பாடக்கரா..?
இல்ல அவ்ளோ பெரிய அப்பாடக்கரானு
கேக்கறேன்..
" எப்ப பாரு பொண்ணுகளை குறை சொல்றதுதான் 
ஆண்களின் முக்கியமான வேலையே...."

"ஓ... அப்ப இதுக்கு பேரு என்ன..? பாராட்டி பட்டம் 
குடுக்கறதா...? "

# தட் அவிங்களுக்கு வந்தா ரத்தம்..
எங்களுக்கு வந்தா தக்காளி சட்னி மொமெண்ட்...!!
பொண்ணுங்க எல்லாம் அவங்க தோழிகளுக்கு 
கமெண்ட் போடும்போது.. டியர், செல்லம்னு 
சேர்த்து எழுதறாங்க...

சரி நாமளும் இதே மாதிரி ட்ரை பண்ணலாம்னு
மங்கு (Shajahan S) போஸ்ட்ல போயி...

"மங்கு டியர்"னு கமெண்ட் போட்டேனா..
அந்த பன்னாட போன் பண்ணி "என்னா மச்சி... 
குடிச்சிருக்கியா"ன்னு கேக்குது..

# இவனையெல்லாம் வெச்சுக்கிட்டு.. ச்சே

Sunday, April 24, 2016

எங்க காலேஜ்ல 1600 பேர் படிச்சாலும்
எங்க பிரின்சிபால்க்கு என்னை கண்டா
கொல்ல(?!) பிரியம்..
ரெண்டு நாளைக்கு ஒரு தரம் ஆபீஸ் ரூம்க்கு 
வரவெச்சி பல பல அட்வைஸ்கள்(?!) குடுப்பாரு...
அது மட்டுமா... மாசம் ஒரு தடவை எங்க அப்பாகிட்ட
என்னை எப்டி வளர்க்கணும்னு(?!) ஒரு மணி நேரம்
டிஸ்கஸ் பண்ணுவாரு...
அப்பப்ப.. ஒண்ணு ரெண்டு நாள் லீவ்(?!) குடுத்து..
"போயி ரெஸ்ட் எடுப்பா"னு அனுப்பிடுவாரு..
இப்படிப்பட்ட அன்பு தெய்வமான(?!)
எங்க பிரின்சிபால்க்கு எதாவது செய்யணும்னு
ரொம்ப நாளா நெனச்சிட்டு இருந்தேன்...
அதுக்கு இப்ப தான் வேளை வந்து இருக்கு...
அவருக்கு ஃபேஸ்புக்ல ப்ரெண்ட் ரிக்வெஸ்ட்
குடுத்து இருக்கேன்...
அக்சப்ட் பண்ணட்டும்...
# செஞ்சிருவோம்...!! ஹி.,ஹி.,ஹி..!!

ADMK - மீம்ஸ்


Thursday, April 21, 2016

நான்., மங்கு(Shajahan S)., தினேஷ்
மூனு பேரும் உக்காந்து பேசிட்டு இருந்தோம்..
அப்ப மங்குவுக்கு ஒரு டவுட்டு..
" ஏன் மச்சி... கல்யாணத்துக்கு அப்புறம்
Wife-கிட்ட நாம லவ் பண்ணினத பத்தி
எல்லாம் சொல்லலாமா..? "
" அடி பிச்சு புடுவேன்.. நீ லவ் பண்ணினத
மட்டும் சொல்லுடா.. எங்கள ஏன்டா
இழுக்கிற..? "
" அட.. நான் லவ் பண்ணின பொண்ணுங்க
பத்தி சொல்லலாமானு தான் கேட்டேன்.. "
தினேஷ்.. சொல்லக்கூடாதுனு ஒரே முடிவா
சொல்லிட்டான்..
ஆனா நான் மட்டும் யோசிச்சிட்டு இருந்தேன்..
இந்த பன்னாட ஊர்ல பாதி பொண்ணுகளுக்கு
லவ் லெட்டர் குடுத்து இருக்கு.. நாளைக்கு
அதுல யார் மூலமாவது விஷயம் தெரிஞ்சா..
" என்னா மச்சி யோசிக்கிறே..?! "
" இல்ல மங்கு.. முழுசா மறைக்கறது தப்பு.. "
" அப்ப சொல்லலாமா..? "
" அதுவும் தப்பு..! "
" என்னா மச்சி குழப்பற..? "
" டேய்.. இந்த பொண்ணுங்ககிட்ட ஒரு கெட்ட
பழக்கம் இருக்கு.. "
" என்ன..? "
" பெரிய தப்பு பண்றவனை விட்டுடுவாங்க..
ஆனா சின்ன தப்பு பண்றவனை போட்டு
மிதி மிதினு மிதிப்பாங்க.. "
" புரியலியே..! "
" அடேய்.. டெய்லி தண்ணி அடிச்சிட்டு
வர்றவனை வீட்ல உக்கார வெச்சி
கறி சோறு போடுவாங்க..
அதே ஆபீஸ் பார்டினு என்னிக்காச்சும்
தண்ணி அடிக்கிறவனை சோறு தண்ணி
இல்லாம அலைய விடுவாங்க.. "
" கரெக்ட் மச்சி..!! "
" அதனால... ஒரு பொண்ணை லவ் பண்ணினேனு
சொன்னா.. நீ காலி... அதே நிறைய பொண்ணுகளை
லவ் பண்ணி இருக்கேனு சொல்லு.. தப்பிச்சிப்ப..!! "
" சூப்பர் மச்சி..!! " சொல்லிட்டு மங்கு
கெளம்பிட்டான்..
ஆனா தினேஷ் ஒரு மாதிரி டவுட்டாவே
இருந்தான்..
" மச்சி.., நிஜமாவே இந்த டெக்னிக்
Workout ஆகுமாடா..?! "
" ஹி., ஹி., ஹி.. அதை நாம இனிமே தானே
தெரிஞ்சிக்க போறோம்..?!! "
# அடப்பாவி..!!!
+2 பிராக்டிகல் எக்ஸாம் முடிஞ்சதும்
என் ப்ரெண்ட் விக்னேஷ் என்னை கேட்டான்...
" நீ பிராக்டிகல்ல வித்யாகிட்ட பேப்பரை
காட்ட சொல்லி கேட்டேல்ல.. "
" ஆ... இதெப்படிடா உனக்கு தெரியும்..?! "
" நான் பாத்துட்டேன்... "
" ஆமா.. அந்த புள்ள காட்ட மாட்டேனு
ஓவரா பந்தா பண்ணிகிச்சு.. "
" டேய்... அதுக்கு வேற எக்ஸ்பிரிமென்ட்..
உனக்கு வேற எக்ஸ்பிரிமென்ட்ரா.. "
" எந்த எக்ஸ்பிரிமெண்டா இருந்தா என்ன.?
சும்மா பேப்பர மடிச்சு குடுக்கறதுக்கு, ஏதாவது
எழுதி குடுக்கலாம்ன்னு பார்த்தேன். ஹி.,ஹி.,ஹி... "
" அதிக லைக்ஸ் வாங்கறது எப்டினு
ஒரு போஸ்ட் போட்டு இருக்கேன்.. "
" அப்டியா..?! "
" ஆமா.. போயி மறக்காம ஒரு லைக் போடு...!! "
# த்த்த்தூ...!!!

Tuesday, April 19, 2016

4வது மாடில இருந்து குதிச்சா.. கை கால்
உடைஞ்சிடு்ம்னு குதிச்சு பாத்து தான்
சொல்லணும்னு இ்ல்ல....
அடுத்தவன் உடைச்சிக்கிட்டத பாத்தும் சொல்லலாம்..!!
- பாபா வெங்கீஷ்..
யாராவது பாட்டிமா கண்ணு தெரியாம
ரோடு கிராஸ் பண்ண முடியாம நின்னுட்டு
இருந்தா.. உடனே ஓடிபோய் ரோடு கிராஸ்
பண்ண ஹெல்ப் பண்ணிடாதீங்க...
எதுக்கும் பாத்து.., நின்னு நிதானமா யார்னு
தெரி்ஞ்சிகிட்டு ஹெல்ப் பண்ணுங்க..
அப்புறம் அது எதாவது ஃபேஸ்புக் பிரபலமா இருந்து..
" என்னைய ஆன்டினு கூப்பிட்டானு " கலவரம்
பண்ண ஆரம்பிச்சிடும்க...
ரொம்ப நாள் கழிச்சி என் ப்ரெண்ட் ஒருத்தனை
இன்னிக்கு மீட் பண்ணினேன்...
பேசிட்டு இருக்கும்போது கேட்டான்..
" என்னா மச்சி ஃபேஸ்புக்ல ரொம்ப ஆக்டீவா
இருக்க போல... "
" ஹேய்.. நீ ஃபேஸ்புக் எல்லாம் பாக்கறியா..?! "
" அப்பப்ப பார்ப்பேன்.. "
" ஒரு லைக் போடு மச்சி.. அப்பதான் எனக்கு தெரியும்.. "
" நீ ஜோக் போடு மச்சி.. நான் லைக் போடறேன்... "
" நான் ஜோக்தான்டா போடறேன்... "
" அத நாங்க சொல்லோணும்... "
# அடிங்கொய்யாலே... எங்கிருந்துடா வர்றீங்க..?!!
பாட்டிகளா ஒரு க்ரூப் சேர்ந்துகிட்டு..
" அவன் என்னை ஆன்டினு கூப்பிட்டான்
இவன் என்ன ஆன்டினு கூப்பிட்டா"-னு
கலவரம் பண்ணிட்டு இருக்குதுங்க.....
பேசாம போறீங்களா.. இல்ல கண்ணாடிய
கழட்டி காக்காவுக்கு போடவா..?!

Monday, April 18, 2016

நான் பெட்ல படுத்துட்டு போன் பேசிட்டு இருந்தேன்..
" டேய் ஜெகன், ஓசோன் ஓட்டை விழாம இருக்க
R410A தான யூஸ் பண்ணனும்? "
அப்ப அங்க வந்த என் Wife டேபிள் மேல
வெச்சிருந்த என் பர்ஸ்ல இருந்து
ஒரு 500 ரூபா நோட்டு எடுத்தாங்க..
அத நான் நோட் பண்ணிட்டேன்...
( இந்த "வெங்கி பாண்ட் 007"-கிட்ட இருந்து
யாரும் தப்ப முடியாது..!! )
போன் பேசி முடிச்சு.. ஒரு 10 நிமிஷம் கழிச்சி...
" நிர்மலா.. நீ எனக்கு 500 ரூபா தரணும்.. "
" எதுக்கு..?!! "
" நீ பர்ஸ்ல இருந்து எடுத்ததை நான் பாத்துட்டேன்.. "
" அச்சசோ... இன்னிக்கு பாத்துட்டீங்களா..?! "
" என்னாது... இன்னிக்கு பாத்துட்டீங்களாவா...?!! "
# அடிப்பாவி...!!!

நட்சத்திர கிரிக்கெட் - மீம்ஸ்


Sunday, April 17, 2016

தெறி - மீம்ஸ்


நடிகர் / நடிகைகள் கலந்துக்கிற ப்ரோகிராம்
எவ்ளோ கேவலமா இருந்தாலும் எங்க வீட்ல
அத தான் பார்ப்பாங்க...
மதியம் லஞ்ச்க்கு போகும்போது பயந்துட்டே 
போனேன்...
எப்படியும் "நட்சத்திர கிரிக்கெட்" தான் ஓடிட்டு
இருக்க போவுதுனு...
போயி பாத்தா...
டிவி ஆஃப் பண்ணி வெச்சி இருந்தது...!!!
# தட் கரடியே காறி துப்பின மொமெண்ட்..!!!
இன்னிக்கு என் ப்ரெண்ட் லிஸ்ட்ல இருக்குற
ஒரு பொண்ணுக்கு பர்த்டே...
விஷ் பண்ணலாம்னு போனா...
8 மணிக்கே 2000 பேர் விஷ் பண்ணி வெச்சி
இருக்கானுங்க...
ரொம்ப் பாஸ்ட்டா இருக்கீங்கடா....
சரினு காலண்டரை பாத்தா..
புதன்கிழமை ஒரு பொண்ணுக்கு பர்த்டே வருது...
அங்கன போயி... " அடவான்ஸ் ஹேப்பி பர்த்டேனு "
போட்டுட்டு வந்துட்டேன்...
# நாம இப்டிக்கா போவோம் மொமெண்ட்..!!
அதிக லைக் வாங்கணும்னா... கஷ்டப்பட்டு
ஸ்டேடஸ் எல்லாம் போட தேவையில்ல...
புரோபைல் பிக்சர் மாத்தினா போதும்னு
ஒரு பொண்ணு சொல்லிச்சு...
# ஹூம்... எங்களுக்கெல்லாம் எங்கமா போடறாங்க..?!
ஒரு தடவை காலேஜ் கிரிக்கெட் மேட்ச்..
ஜெயிக்கறதுக்கு கடைசி பால்ல 6 ரன் தேவை..
எங்க டீமே என்னை நம்பி தான் இருந்தது...
சொல்லி வெச்ச மாதிரி அது சிக்ஸ் போச்சு...
உடனே எங்க மொத்த டீமும் ஓடி வந்து
.
.
.
.
.
.
என்னை மொத்தி எடுத்தாங்க..!!
# ஹி., ஹி., ஹி.. மீ த பவுலர்..!!

" புலி " படத்தை வெச்சி என்னை எல்லோரும்
ஓவரா கலாய்க்கறாங்க"னு அண்ணன்
சொன்னாப்லயாம்..
" கவலைப்படாதீங்க.. அத இந்த படத்துல 
மாத்திடலாம்"-னு அட்லி சொன்னானாம்..
# இனி " புலி "க்கு பதில் " தெறி "
நேத்து என் பர்த்டேக்கு வாழ்த்திய அனைத்து
நல் உள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்...
இப்ப
வாழ்த்து சொல்லாதவங்க லிஸ்ட் எல்லாம்
எடுத்துட்டு இருக்கேன்...
இருக்கு உங்களுக்கெல்லாம்... :) :) 
smile emoticon
மங்கு (Shajahan S) IPL பாத்துட்டு இருந்தான்...
" ஏன்டா... CSK இல்லன்னா IPL பாக்க மாட்டேனு
சொன்னே...? "
" நான் அப்டி சொல்லவேயில்ல மச்சி.. "
" இல்லடா நீ சொன்னே... "
" நல்லா யோசிச்சி பாரு மச்சி... CSK இல்லன்னா
பாக்க மாட்டேனு சொன்னேனா... இல்ல
சியர் கேர்ள்ஸ் இல்லன்னா பாக்க மாட்டேனு
சொன்னேனா...?! ஹி., ஹி..!!"
# அட பிக்காலி பயலே...!!
என் ப்ரெண்ட் ஆனந்த்கிட்ட...
"ஒரே நாள்ல 5000 ரூபா சம்பாதிக்கிற டெக்னிக்
எனக்கு தெரியும்.."
"எனக்கும் சொல்லிக்குடேன்.."
"5000 ரூபா குடு.. சொல்லிக்குடுக்கறேன்..!!"
"ஓ.கே புரிஞ்சிடுச்சு... அப்டியே ஓடி போயிடு நாயே..!!"
# ஹி., ஹி., ஹி.. நம்ம கூட சேர்ந்து எல்லா பயலும்
உஷாரா இருக்கானுங்கப்பா..!!!
மேட்சிங் ப்ளவுஸ் கடையில...
பில் 1700 ரூபா...
நான் ரெண்டு 1000 ரூபா நோட்டு குடுத்தேன்..
வாங்கி.. அத Counting Machine-ல வெச்சி பாத்துட்டு
கல்லால போட்டுட்டான்..
( கள்ள நோட்டானு செக் பண்றாராமாம்..!! )
மீதி 300 ரூபா குடுத்தான்..
இதையும் அந்த மிஷின்ல வெச்சி செக் பண்ணி
குடுனு கேட்டேனா... மொறைக்கறான்...
# ஏன்டா.. உங்களுக்கு வந்தா ரத்தம்..
எங்களுக்கு வந்தா தக்காளி சட்னியா..?!!

எலெக்ஷன் மீம்ஸ்
Sunday, April 10, 2016

நான் யாரையாவது ஃபாலோ பண்ணினா..
உடனே அத மார்க் பய ஊருக்கே தண்டோரா
போட்டு சொல்லிடறான்..
ஏன்டா... ஏன்...?!!
நான் வேற இமேஜ் மெய்டெய்ன் பண்ண
வேண்டி இருக்கு..
அதனால இனிமேல யாருக்கும் தெரியாம
Venki-Monki-ங்கற Fake id-ல் இருந்து
ரகசியமா ஃபாலோ பண்ண போறேன்...
இனிமே ஒரு பய என்னை அசைச்சிக்க முடியாது...
ஆமா..

:)
tongue emoticon tongue emoticon
People you may know னு வரிசையா
பொண்ணுங்க போட்டோ காட்றியே மார்க்கு...
எனக்கொரு டவுட்டு...
இதே மாதிரி என் போட்டோவ அவங்களுக்கும்
காட்றியா இல்லியா..?
ஒரு ரிக்வெஸ்ட் கூட வர மாட்டேங்குது...
ஐ திங்க் இந்த சிஸ்டம்ல எதோ மிஸ்டேக் இருக்கு.
tongue emoticon tongue emoticon

Saturday, April 9, 2016


நேத்து மதியம் DVD கடையில இருந்து போன்..
"அண்ணே.. புதுசா நாலு தெலுங்கு படம்
நல்ல ப்ரிண்ட்ல வந்து இருக்கு.. எப்ப வர்றீங்க..?!! "
"இதோ இப்பவே வர்றேன்..!!"
( ஹி.,ஹி.. தெலுங்கு படத்துக்கு எல்லாம்
லேட் பண்ணக்கூடாது.. கை மாறி போயிடும்..)
பக்கம் தான் நடந்தே போயிட்டேன்..
கடைக்கு போயி அந்த 4 படத்தையும்
வாங்கிட்டு வெளியே வந்து பாத்தா..
என் இடது கால் செருப்பு மட்டும் இருக்கு..
வலது கால் செருப்பை காணோம்..
பக்கத்துல இன்னொருத்தரோட
வலது கால் செருப்பு இருக்கு..
இடது கால் செருப்பை காணோம்..
அட.. கூறுகெட்ட குக்கருங்களா.. செருப்பை கூட
கண்ணை தொறந்து., பாத்து போட்டுட்டு
போக மாட்டீங்களாடா..?!!
இத்தனைக்கும் என்னோடது கருப்பு கலர் Bata..
அந்த இன்னொன்னு ப்ரவுன் கலர் Paragon..
ம்ம்.. சுத்த கிறுக்கு பசங்க இருக்கற ஊர்ல
இருக்கோமே.. பேசாம நாம துபாய்கே
போய் செட்டில் ஆகிடலாமான்னு தோணிச்சு..
அப்புறம் அந்த கடைக்காரர்கிட்ட அந்த பய
வந்தான்னா எனக்கு போன் பண்ணுங்கனு
சொல்லிட்டு அந்த ரெண்டு செருப்பையும்
மாட்டிட்டு வீட்டுக்கு வந்தேன்.
(அசிங்கமா தான் இருந்துச்சி.. வேற வழி..?)
வீட்டுக்கு வந்து பாத்தா என் தம்பி கத்திட்டு
இருந்தான்..
யாரோ லூசு அவனோட ஒரு செருப்பை மட்டும்
மாத்தி போட்டுட்டு போயிடுச்சாம்..!
( ஆஹா... அப்ப மாத்தி போட்டுட்டு போனது
நாமதானா.?!! )
நான் போனை தூக்கிட்டு ஓரமா ஓடியாந்துட்டேன்..
"ஹலோ.. துபாயா..! "
ஒரே நாள்ல Back to Back 3 படம் பாக்கணும்...
இது என் ரொம்ப நாள் ஆசை...
இன்னிக்கு பாத்தாச்சு.. ( நான் மட்டும் )
1.Arya
2.Julayi
3.Leader
மூணுமே தெலுங்கு படம்...
இத கேள்விப்பட்டதுல இருந்து என் Wife தான்
ஒரு மாதிரி மிரட்சியா இருக்காப்ல...
நிர்மலா.. இக்கட சூடு...
ஐயம் நார்மல்மா... நார்மல்...!!
ஒரு தடவை மங்கு ( Shajahan S )
செமத்தியா அடி வாங்கி வீட்ல
ரெஸ்ட்ல இருந்தான்..
பாக்க போயிருந்தேன்..
" ஏன்டா நீ திருந்த மாட்டியா.?
பொண்ணுங்ககிட்ட அடி வாங்கறதே
உனக்கு வேலையா போச்சு.. "
" சே., சே.. இதுவரைக்கும் எந்த பொண்ணும்
என்னை அடிக்கணும்னு நினைச்சதே இல்ல மச்சி.. "
" அப்புறம் இதெல்லாம் எப்டிடா..?! "
" என்ன பண்றது மச்சி.. அவங்க அப்பா..,
அண்ணனுங்களுக்கு அந்த நல்ல மனசு இல்லியே.. "
# த்த்தூ..!
நேத்து நைட் என் Wife-கிட்ட..
" இந்தியால மொத்தம் ரெண்டே ரெண்டு
அறிவாளிங்க தான்... "
" ம்ம்ம்.. "
" ஒண்ணு ஜி.டி.நாயுடு.. "
" இன்னொண்ணு...?! "
" அத நான் சொல்ல மாட்டேன்... "
" ஏன்..? "
" ஏன்னா.. எனக்கு வெளம்பரம் புடிக்காதுல்ல..
ஹி., ஹி., ஹி.. "
" கரெக்டா சொல்லுங்க.. வெளம்பரம் புடிக்காதா..?
இல்ல அடி தாங்க முடியாதா..?! "
# அவ்வ்வ்வ்..!!!
நேத்து ஒகேனக்கல் போயிருந்தோம்...
அங்கே... " பெண்கள் உடை மாற்றும் அறை"னு
கட்டி வெச்சி இருக்காங்க...
சரி "ஆம்பளங்க உடை மாற்றும் அறை" எங்கே
இருக்குனு பாத்தா...
ஹூஹூம்ம்... நோ... நஹி...
அங்கங்க மரத்துக்கு பின்னாடி மாத்திக்க வேண்டியது தான்...
ஏன் எங்களுக்கு மட்டும் இந்த மானம், சூடு, வெக்கம்,
வெங்காயம், உளுத்தம் பருப்பு, துவரம் பருப்பு
இதெல்லாம் கெடையாதா..?!
# வர வர ஆம்பளங்களுக்கு பாதுகாப்பே இல்லாம போச்சு..
நானும் என் மச்சானும் செமி ஃபைனஸ்
பாத்துட்டு இருந்தோம்..
19வது ஓவர்.. 4வது பால் சிக்ஸ்..
மை மச்சான் கமெண்டரி..
" சே.. இந்த ஓவர ஜடேஜாவுக்கு பதிலா
கோலிக்கு குடுத்து இருக்கலாம்..! "
" ஓ..!! "
20வது ஓவர்... சிக்ஸ் போனப்புறம்..
" சே.. இந்த ஓவர கோலிக்கு பதிலா
அஸ்வினுக்கே குடுத்து இருக்கலாம்..! "
( அடேய் நீ ஓவரா போறடா...!! )
நான் அமைதியா இருக்கறத பாத்துட்டு...
" என்ன மச்சான் யோசிக்கறீங்க..? "
" இல்ல கேப்டன்சிப்பை தோனிக்கு பதிலா 
எனக்கு (அவனுக்கு) குடுத்து இருக்கலாம்னு 
எதுனா சொல்லுவியோனு வெயிட் பண்ணிட்டு 
இருக்கேன்.. "

# T20 Semi

பும்ரா கேட்ச் - PS