Saturday, December 31, 2016

நிமிஷத்துக்கு நிமிஷம் பேச்சை மாத்தி மாத்தி பேசுற.. உனக்கென்ன மனசுல ரிசர்வ் பேங்க் கவர்னர்னு நெனப்பா..?!
#தும் தத்தா..!

கிளி ஜோசியம் - டீமான்டிசேஷன் - மீம்ஸ்


ஜனவரி 1-ல பொறக்க போற இந்தியாவுக்கும் இதே பேரா.. இல்ல வேற பேரு வெப்பாங்களானு ஒருத்தன் கேக்கறான்..
# பேரு வெச்சியே.. சோறு வெச்சியா மொமெண்ட்..

Wife-வோட புது மொபைல்ல (Lenovo K5 Note) சும்மா ஒரு செல்ஃபி...
சுமாரா தான் இருக்குல்ல....?!
நான் மொபைல் கேமராவை சொன்னேன்...
ஹி.,ஹி.,ஹி..!
மங்கு (Shajahan S) போன் பண்ணியிருந்தான்...
" என்னடா காலையிலயே.. "
" ஒரு பொண்ணு மச்சி... "
" ஆரம்பிச்சிட்டான்டா... "
" கேளேன்.. "
" சரி சொல்லித் தொலை.. "
" நான் அது கனவுல வந்தேனு சொல்லிச்சு மச்சி... "
" விட்றா.. விட்றா... நைட் எதாவது பேய் படம் பாத்து இருக்கும்... "
" கிர்ர்ர்ர்... "
என் ப்ரெண்ட் ஜெகன் பெங்களூர்ல இருந்து வந்து இருக்கான்..
அவனை பாக்க போனப்பவே நைட் 9 மணி..
பேசிட்டு இருந்தோம்.. மணி 9.45.. அப்ப ஜெகன்...
" டைம் ஆகலியா..? வீட்ல தேட மாட்டாங்களா..? "
" போன் வரும்டா... அப்ப போலாம்... "
மணி 10.30...
" டேய் 10.30 டா... உனக்கு ஒன்னும் பிரச்னை இல்லியா...? "
" நிர்மலா போன் பண்ணினப்புறம் போனா போதும்டா... "
( ரொம்ப நாள் கழிச்சு மீட் பண்றாங்க.. ஃப்ரீயா பேசிட்டு வரட்டும்னு நெனக்கிறா போல... )
கொஞ்ச நேரம் கழிச்சு..
" டேய்... இப்ப மணி என்னடா..? "
" 11.15... "
" 11.15-ஆ.. ஏன் இன்னும் நிர்மலா போனே பண்ணல...? "
" எதுக்கும் மொபைல் எடுத்து பாருடா... மிஸ்டு கால் இருக்க போவுது..? "
அப்டி இருக்க சான்ஸ் இல்லியேனு சொல்லிட்டு என் மொபைல் எடுத்து பாத்தேன்....
ஷாக் ஆகிட்டேன்....
" என்னடா... மிஸ்டு காலா..? "
" இல்ல... மொபைல் சுவிட்ச் ஆஃப் ஆகியிருக்குடா... அவ்வ்வ்வ்....!! "
# ஆஃப்... ஆப்பு..கண்டுபிடிச்சிட்டேன்... இந்த பரதேசி தான் இப்ப தமன்னாவுக்கு காஸ்டியூம் டிசைனரா இருக்கான் போல..
;) :P
" முன்ன வெச்ச காலை பின்ன வெச்சி எனக்கு பழக்கமில்ல... "
" அப்ப... வா அந்த மலை உச்சிக்கு போவோம்.. நீ என்ன பண்றேனு நான் பாக்கறேன்.. "
" ஏன்டா ஏன்.. ஒரு பஞ்ச் டயலாக் பேச விடமாட்டீங்களாடா..?!! "
என் சிஷ்ய பையன் கார்த்தி போன் பண்ணியிருந்தான்....
" அப்போ உங்களுக்கு போன வருசம் குடுத்தாங்களே அது சாகித்ய அகாடமி விருது இல்லையா தல...? "
" ஹி., ஹி., இல்ல.. அது பரம் வீர் சக்ரா... பெண்கள் முன்னேற்றத்துக்கு பாடுபட்டோம்மில்ல.. ( ம்ம்... எக்ஸாம்ல வேணும்னே கம்மியா மார்க் வாங்கி பொண்ணுங்கள ஸ்டேட் பர்ஸ்ட் வர வெப்போமில்ல.. ) அதுக்கு குடுத்தது... 

தமன்னா பர்த்டேவுக்கு விஷ் பண்ணலியானு கேக்கறாங்க...
நான் வேணா பக்கத்துல தமன்னாகிட்டயே போனை குடுக்கறேன்... பர்ஸ்ட் விஷ் பண்ணினது யாருனு கேட்டு தெரிஞ்சிக்கோங்க....
# தம்ஸ் பர்த்டே பார்ட்டியில் இருந்து வெங்ஸ்...
பொண்ணுங்கள கேவலமா நெனக்கறதே பொண்ணுங்க தான்...
டவுட்டா இருந்தா.... ஒரு பொண்ணுகிட்ட போயி...
" நீயும் எல்லா பொண்ணுங்க மாதிரி தான்னு " சொல்லி பாருங்களேன்.....
அந்த பொண்ணுக்கு கோவம் வரும்....
#தும் தத்தா..!!
அன்னிக்கு கெமிஸ்டரி மன்த்லி எக்ஸாம்..
எனக்கு கெமிஸ்டரி சம்பந்தமா ஒண்ணும் ஞாபகத்துல இல்ல... ( படிச்சா தானே..?!! )
இப்டியே போனா... வெத்து பேப்பரை தான் குடுக்க வேண்டி இருக்கும்... என்ன பண்ணலாம்...?!
டைம் பாத்தேன்... எக்ஸாம் ஆரம்பிக்க இன்னும் 45 நிமிஷம் இருந்தது..
சரி இந்த கேப்ல 3 கேள்விக்கு பதிலை மனப்பாடம் பண்றோம்.. எந்த கேள்வி வந்தாலும் இதயே ஆன்ஸர் சீட்ல எழுதறோம்னு முடிவு பண்ணினேன்..
ஒரு அரைமணி நேரம் படிச்சிட்டு இருந்து இருப்பேன்... அப்ப அங்க வந்த என் ப்ரெண்ட் மணி என்னைய பாத்து ஷாக் ஆகிட்டான்...
பின்ன.. இந்த மாதிரி அரிய காட்சிய அவன் பாத்ததேயில்லைல...
" என்னடா பண்றே..? "
" இன்னிக்கு எக்ஸாம்க்கு படிக்கறேன்... பாத்தா தெரியல..?! "
" அது சரி.. நாம 9th தானே படிக்கறோம்.. நீ ஏன் 10th புக் படிக்கறே..? "
( என்னாது.. இது 10th புக்கா...? ஐய்யோ.. எங்க அண்ணன் புக்கு... )
சே.. கர்மம்... மொதல்ல நம்ம புக்கு என்ன கலர்ல இருக்குனு பாத்து வெச்சிக்கணும்..!!
கால்ல விழறத கேவலமா நெனச்சா தான் சங்கடமா இருக்கும்...
எக்சைஸ்னு நெனச்சி பாருங்க.. சந்தோஷமா இருக்கும்..!!
ஹி.,ஹி.,ஹி...!!

- பாபா வெங்கீஷ்
" புயல், மழை, நோ கரண்ட் , நோ வாட்டர்னு துக்கத்துல இருந்த எங்களுக்கு உங்க போஸ்ட் தான் சார் ஒரே ஆறுதல்... "
" என் போஸ்ட்டா.. நான் 3 நாளா போஸ்ட் எதுவும் போடலியே... "
" அத தான் சார் ஆறுதல்னு சொன்னேன்... "
#ஙே...!!
ஒரு பிரியாணிய ஒன் பை டூ (1/2) ஷேர் பண்ணும் போது... என் ப்ளேட்டை விட அங்கிட்டு அதிகமா போன மாதிரி தோன்றது எனக்கு மட்டும் தானா..?!!
#வொய் ஐ ஹேட் ஷேரிங்...!!
நேத்து எங்க ஃபேமலி ப்ரெண்ட் ஒருத்தர் பொண்ணுக்கு ரிசப்ஷன்... போயிருந்தோம்...
பொண்ணுக்கு மேக்கப் நல்லா இருந்தது... விசாரிச்சா...
ப்யூட்டிசியன் மும்பை.. அதோ அந்த பொண்ணுதான்னு கை காட்டினாங்க..
பாத்தா.. அந்த பொண்ணு பொம்மை மாதிரி.., ம்ஹூம்... லட்டு மாதிரி இருந்துச்சு...
" நிர்மலா... நீ வெயிட் பண்ணு அந்த பொண்ணுகிட்ட போயி மேக்கப் சார்ஜ் விசாரிச்சிட்டு வர்றேன்... "
" நமக்கெதுக்கு அதெல்லாம்..?! "
" சும்மா... ஒரு ஜெனரல் நாலேட்ஜ்க்கு தான்... "
அந்த பொண்ணுகிட்ட போயி விசிட்டிங் கார்ட் வாங்கி பேசிட்டு இருக்கேன்....
கொஞ்ச தூரம் தள்ளி... என் சகலை , அவர் Wife, என் சகலை ப்ரெண்ட்ஸ் பேமிலினு ஒரு 15 பேரு என்னையே பாத்துட்டு இருந்தாங்க...
இவிங்க எதுக்கு இப்டி பாக்கறாய்ங்க...?!!
5 நிமிஷம் பேசிட்டு வந்தா.. என் சகலை என்கிட்ட...
" சகலை.. அது சினிமா நடிகைங்களுக்கு மேக்கப் போடற பொண்ணாம்ல.. உங்களுக்கு எப்டி பழக்கம்..?!! "
( என்னாது... பழக்கமா..?!! )
நான் திரும்பி என் Wife எங்கே இருக்கானு பாத்தேன்... தூரத்துல யார்கிட்டயோ பேசிட்டு இருந்தா...
இப்ப என் சகலைகிட்ட திரும்பி சொன்னேன்....
" ஹி., ஹி., ஹி... அது என் ஃபேஸ்புக் ஃபேன் சகலை.. "
சகலை....சகலை... எந்திரிங்க சகலை.... ஐய்யயோ... மயக்கம் வந்துடுச்சு போல இருக்கே...!!!
என் ப்ரெண்ட் அருண் தம்பி கல்யாணம்... நானும் என் Wife-ம் போயிருந்தோம்...
அருணும், நானும் பேசிட்டு இருந்தோம்.. கூட எங்க ரெண்டு பேர் Wives-ம் இருந்தாங்க...
அப்ப அருண்.. கொஞ்ச தூரத்துல நின்னுட்டு இருந்த 3 பொண்ணுங்கள காட்டி...
" அவங்கல்லாம் யாருனு தெரியுதா..? "
திரும்பி பாத்தேன்... அட அருணோட அத்தை பொண்ணுங்க.. ஸ்கூல் படிச்சிட்டு இருந்தப்ப பாத்து இருக்கேன்...
" ஹேய்.. உன் அத்தை பொண்ணுங்க.. சுதா, ரேகா, சந்தியா.. "
" இதெல்லாம் கரெக்ட்டா ஞாபகம் வெச்சிக்கோ.."
" ஹி., ஹி..ஹி., எல்லாம் ஒரு ஜெனரல் நாலேட்ஜ் தான்... "
" அவங்க பக்கத்துல ரெண்டு பசங்க நிக்கறாங்கல்ல.. அது..? "
" தெரியலியே.... "
" ஒன்னு சுதாவோட தம்பி., இன்னொன்னு சந்தியாவோட தம்பி.. "
" சரி அதுக்கென்ன..? "
உடனே அந்த நாயி என் Wife-கிட்ட...
" பொண்ணுங்க பேரு மட்டும் தான் தெரிஞ்சி வெச்சி இருக்கான்.. இதுல இருந்து என்ன தெரியுது...? "
என் Wife கண்ணுல லைட்டா ஒரு டெரர் லுக்...
நான் உடனே அருண் Wife-கிட்ட...
" இவன் அந்த பொண்ணுங்கள பத்தி மட்டும் தான் என்கிட்ட பேசி இருக்கானு தெரியுதுல்ல.. "
இப்ப டெரர் லுக் ஷிப்டட் டூ அருண் Wife...
# ஆருகிட்ட...?!!

வி்ட்டா சுடுதண்ணி கண்டுபிடிச்சதுக்காக நோபல் பரிசு குடுக்கணும்னு ரெகமண்ட் பண்ணுவானுங்க போல....

என் பையன் ஸ்கூல்ல சைன்ஸ் எக்ஸிபிசனாம்..
இவன் குப்பையில இருந்து கரெண்ட் எடு்க்கற மிஷின் கண்டுபிடிக்க போறானாம்...
அது சம்பந்தமா என்கிட்ட ஐடியா கேட்ட போது க்ளிக்கியது...
என் ப்ரெண்ட் அருண் வீட்டு கிரகபிரவேசம்...
பந்தில நானும் என் ப்ரெண்ட் சுரேஷும்...
மெனு : இட்லி, பொங்கல், வடை, பூரி, ஆனியன் தோசை..
எல்லாமே நல்லா இருந்து.. அதுல ஸ்பெஷல் ஆனியன் தோசை... செம்ம்ம....
நான் பக்கத்துல இருந்த சுரேஷ்கிட்ட...
" டேய்.. நான் ஆனியன் தோசை கேக்க போறேன். உனக்கும் வேணுமா..? "
"நோ.. நோ... நீ மட்டும் சொல்லிக்க.. "
உடனே நான் பந்திய மெய்டெய்ன் பண்ணிட்டு இருந்த அருணை கூப்பிட்டு...
" மச்சி... ரெண்டு ஆனியன் எடுத்துட்டு வாயேன்.. "
இப்ப சுரேஷு டென்ஷனாகிட்டான்....
" டேய்.. எனக்கு தான் வேணாம்னு சொல்றேன்ல... "
" ஹி., ஹி., ஹி... ரெண்டும் எனக்கு தான்... நீ அமைதியா இரு... ! "
# நம்ம கேரக்டரையே புரிஞ்சிக்க மாட்டேங்குறாங்களே...!!!
இன்னிக்கு IMO-ல இருந்து ஒரு மெசேஜ்...
" Manju just joined IMO "
மஞ்சுவா...?!! யாரு...?!!.
புரோபைல் போட்டோல இருந்த புள்ளய நான் எங்கயும் பாத்ததேயில்லையே..
இந்த புள்ள நம்பர் எப்டி நம்ம போன்ல வந்துச்சு..?!!
சந்தேகம்னு வந்துட்டா உடனே க்ளியர் பண்ணிக்கணும்னு எங்க சீக்ரெட் ஏஜென்ட் டிரைனிங்ல சொல்லி இருக்காங்க...
டக்னு அந்த நம்பர்க்கு வீடியோ கால் போட்டேன்....
வீடியோ ஆன் ஆச்சு....
பாத்தா.....
" அண்ணே.... வெங்கட்ணே... எப்டிணே இருக்கே...?! "
" அடிங்கொய்யாலே... மஞ்சுநாதா... நீயாடா...?! "
# இந்த பொண்ணுங்க போட்டோவ புரோபைல் பிக்சரா வெக்கறவனை ஜெயி்ல்ல பிடிச்சு போட சட்டத்துல எடம் இருக்கா ஆபீசர்...?!

Wednesday, December 7, 2016

இன்னிக்கு காலைல ஒரு பயங்கர கனவு... திக்னு எந்திரிச்சிட்டேன்...
8 மணி ஆகியும் அந்த கனவு நெனப்பாவே இருந்தது... உடனே மங்குவுக்கு (Shajahan S) போன் பண்ணினேன்..
" மச்சி இந்த விடியக்காலைல வர்ற கனவு எல்லாம் பலிக்குமா..? "
" அதெல்லாம் பலிக்காது.. "
" எப்டி அவ்ளோ உறுதியா சொல்றே..? "
" கனவு பலிக்கறதா இருந்தா.. இந்நேரம் நான் நயன்தாராவ கல்யாணம் பண்ணிட்டு இருக்கணுமே..!! "
" ஹி., ஹி., ஹி...!! "

செல்பி வாட்ஸ்அப் - ஜெகன் கமெண்ட்


கருப்பு பணம் ஒழியாது - மீம்ஸ்


என் ப்ரெண்ட் ரமேஷ்க்கு போன் பண்ணியிருந்தேன்..
" ஹலோ..!! "
" ஹேப்பி ஆனிவர்சரி மச்சி.. "
" ஐய்யயோ... எனக்கு இன்னிக்கு ஆனிவர்சரியா..?! "
( அதிர்ச்சியாகிட்டான்..!! )
" என்ன ஆச்சி மச்சி...? "
" ஆனிவர்சரினு சுத்தமா மறந்துட்டேன்... நீ போனை வை.... நான் என் Wife கிட்ட பேசி்ட்டு அப்புறமா கூப்பிடறேன்.... "
" சரி சரி....!! "
கொஞ்ச நேரத்துல போன் பண்ணினான்... எடுத்தா... கெட்ட கெட்ட வார்த்தையிலயே திட்றான்..
ஆக்சுவலி... S.ரமேஷ்க்கு ஆனிவர்சரி... நான் R.ரமேஷ்க்கு விஷ் பண்ணிட்டேன்...
இதெல்லாம் ஒரு தப்பா மக்கழே...!!!