Thursday, September 29, 2016

காலேஜ்ல ஒரு நாள் என் ப்ரெண்ட் ரமேஷ் என்கிட்ட...
"மச்சான் படத்துக்குப் போலாமா"ன்னு கேட்டான்..
எக்கனாமிக்ஸ் கிளாஸ் இருக்கே...
கிளாஸா..? சினிமாவா..? எனக்கு ஒரே குழப்பமா இருந்தது..
நான் குழப்பமா இருக்கறத பாத்துட்டு என் ஞானக்கண்ணைத் திறக்கற மாதிரி ஒரு கேள்வி கேட்டான் பாருங்க ரமேஷூ....
.
.
.
.
.
.
"மச்சி... கிளாஸுக்குப் போனா மட்டும் நமக்கு புரியவா போகுது..?"
# ஆஹா.... தெய்வ மச்சான்...!!!
எங்க மாமனார்க்கு வீசி்ங் ப்ராப்ளம்னு ஹாஸ்பிட்டல் போனோம்...
ஒரு நாள் பெட்ல இருந்து பாத்துட்டு போங்கனு சொல்லி்ட்டாங்க...
சரினு ரிசப்ஷன்ல இருந்த நர்ஸ் புள்ளகிட்ட போயி ரூம் கேட்டா...
" நார்மல் ரூம் இல்ல. டீலக்ஸ் ரூம் மட்டும் தான் சார் இருக்கு... ரென்ட் 2250 ரூபா... "
" யம்மா... 2250-ஆ...?! "
" ரூம்ல ஏசி, டிவி எல்லாம் இருக்குங்க சார்.... "
" நாங்க ஏசி யூஸ் பண்ண மாட்டோம்.. 500 ரூபா கொறைச்சிக்கோங்க.. டிவியும் யூஸ் பண்ண மாட்டோம்... 200 ரூபா கொறைச்சிக்கோங்க... "
இத கேட்டுட்டு அந்த நர்ஸ் புள்ள சிரி்ச்சது....
( என்ன இளிப்பு...?! )
" வொய் சிரிச்சிங்...?! "
" இல்ல... ரூம்ல பெட் கூட இருக்கு.. அதயாச்சும் யூஸ் பண்ணுவீங்களா..?! "
# இவங்களுக்கெல்லாம் யார்கிட்ட சொல்லி ஊசி போடறது...??!!
சொறி புடிச்சவன் கை கூட சும்மா இருக்கும்...
ஆனா... இந்த செல்போன் புடிச்சவன் கையி....
- பாபா வெங்கீஷ்

போட்டோகிராபியில் அப்பாடக்கர் ஆவது எப்படி..?!!

மொபைல்ல என்ன தான் சூப்பரா போட்டோ புடிச்சாலும் யாரும் உங்கள போட்டோகிராப்பர்னு ஒத்துக்க மாட்டாங்க.. அதனால மொத வேலையா.. ஒரு DSLR வாங்குங்க... 

அப்புறம்.....

நெ.1 :

நீங்க ரோட்ல நடந்து போறப்ப... பஸ் ஸ்டேண்ட்ல ஒரு அழகான பொண்ணு நின்னுட்டு இருந்தா... உடனே அத போட்டோ எடுக்க கூடாது...

பக்கத்துல யாராவது பாட்டி இருந்துச்சின்னா... வளைச்சி வளைச்சி பாட்டியை மட்டும் போட்டோ புடிச்சி FB-ல போடணும். மறக்காம அத B&W-ல மாத்தி போடணும்...

நெ.2 :

எல்லோரும் வித விதமா பூவை போட்டோ எடுத்தாங்கன்னா.. நீங்க அது மாதிரி எல்லாம் பண்ணக்கூடாது...

அந்த செடில சிலந்தி வலை, ஏறும்பு இப்படி எதுனா இருக்கும்ல அதை க்ளோசப்ல படம் புடிங்க..

நெ.3 :

அப்புறம் இந்த எருமை மாடு, நாயின்னு எது ரோட்ல படுத்து இருந்தாலும் விட்றக்கூடாது... டக்னு கிளிக்கிடணும்..

நெ.4 :

கொஞ்சமா வெளிச்சம் இருக்குற இடத்துல போட்டோ எடுக்கணும்னா.. மொதல்ல வெளிச்சம் எந்த வழியா வருதுன்னு பாத்து அத்தனையும் க்ளோஸ் பண்ணிட்டு... போட்டோ எடுங்க..

அந்த போட்டோல கண்ணு, காது , மூக்கு இதுல எதோ ஒன்னு தெரிஞ்சா போதும்.. தெரியலைன்னாலும் பரவாயில்லை..

நெ.5 :

இப்ப ஒரு குட்டி பாப்பா அழகா சிரிச்சிட்டு இருக்குனு வைங்க.. உடனே டக்னு க்ளிக்கிடக்கூடாது... அது கையில மிட்டாய், பிஸ்கட் எதுனா இருக்கானு பாத்து... அத நைசா புடிங்கிடணும்..

இப்ப அந்த பாப்பா அழும்ல... அப்பத்தான் க்ளிக்...

நெ.6 :

போட்டோ எடுக்கும்போது கலைக்கண்ணோட எடுக்கணும்.. அது என்னானா...

அதாவது கேமராவ நேர வச்சி எடுத்தா... அது ஃபோட்டோ... அதே கேமராவ 45 degree சாய்ச்சா மாதிரி எடுத்தா... அதான் Photography.

லாஸ்ட் பட் நாட் லீஸ்ட்....

நெ,7 :

போட்டோல எல்லாம் " Venki Photography ".. இது மாதிரி உங்க பேரை போட்டுடுங்க.. அம்புட்டுத்தேன்,

Sunday, September 25, 2016

நீங்க சிங்கப்பூர் வந்தா சொல்லுங்க... நான் ஏர்போர்ட்க்கே வந்து உங்ககிட்ட ஆட்டோகிராப் வாங்குவேன்னு ரெண்டு வருஷம் முன்னால ஒரு பொண்ணு சொல்லிச்சு...
ஆட்டோகிராப் வாங்கறதெல்லாம் அப்புறம் இருக்கட்டும்.. மொதல்ல வந்து ஸ்டேடஸ்க்கு லைக் போடுமா...
# ஒவ்வொருத்தரையா இழுத்துட்டு வந்து..... உஸ்ஸப்பா....
நேத்து என் தம்பியோட டீ ஷர்ட் போட்டிருந்தேன்...
பாத்தவங்க எல்லாம் 2 வயசு கொறைஞ்ச மாதிரி இருக்குன்னு சொன்னாங்க...
கணநேரத்தில் உதிச்சது ஒரு சிந்தனை....
வேற ஒரு டீ ஷர்ட் எடுத்து ட்ரை பண்ணேன்...
இப்ப என் பையன் அவன் டீ ஷர்ட்டை யாரோ கிழிச்சுட்டாங்கன்னு ரகளை பண்ணிட்டு இருக்கான்...
# உஷ்ஷ்ஷ்... இந்த விஷயம் கடுகளவு கூட வெளிய தெரியக் கூடாது...
கேட்டான் பாரு ஒரு கேள்வி.... :D

 :D

மங்குவோட லவ்வர்...
" இப்ப எதுக்கு மங்கு டியர் புது கேமரா வாங்கணும்னு சொல்றே..? "
" எல்லாம் உன்னை அழகா போட்டோ புடிக்கத் தான் டார்லிங்..! "
" அதுக்காக நாப்பதாயிரம் போட்டு கேமரா வாங்கணுமா..? "
" போட்டோ அழகா இருக்கணும்னா.. ஒன்னு கேமரா காஸ்ட்லியா இருக்கணும்னு இல்ல மூஞ்சி அழகா இருக்கணும் சொன்னாங்க டார்லிங்..!! "
# அடிங் கொய்யாலே..!!

Monday, September 19, 2016

என் பையன் டைரில அவன் மிஸ் என்னமோ இங்கிலீஸ்ல எழுதி இருந்தாங்க..
படிச்சி பாத்தேன்.. புரியல..
ஆக்ஸ்போர்ட் யூனிவர்சிட்டில படிச்ச எனக்கே புரியலைன்னா.. பசங்களுக்கு எப்டி புரியும்..?!
( ஐ திங்க்.. திஸ் ஈஸ் அமெரிக்கன் இங்கிலீஷ்.. )
உடனே பேனா எடுத்து டைரில எழுதினேன்..
'ஒரு மொழிங்கறது மத்தவங்கிட்ட நம்ம கருத்தை சொல்ல ஒரு கருவி தான்.. அது ஒண்ணும் அறிவு இல்ல... உங்க திறமைய டைரில எல்லாம் காட்டாதீங்க'ன்னு எழுதினேன்... அதுவும் இங்கிலீஷ்ல.. ஹி, ஹி, ஹி..
சாயந்திரம் பையன் வந்ததும் டைரிய எடுத்து பாத்தேன்..
அவங்க மிஸ் ரிப்ளை பண்ணியிருந்தாங்க.. தமிழ்ல...
.
.
.
.
.
.
'என்ன சார் எழுதியிருக்கீங்க? ஒண்ணுமே புரியல...'
# ஹி., ஹி., ஹி... ஆக்ஸ்போர்ட்லே...!!
என் பசங்க ஸ்கூல்ல என்னைய பாக்கணும்னு ஆசைப்பட்டாங்கனு போயிருந்தேன்...
மீட்டிங் முடிஞ்சி வெளியே வரும் போது என் Wife...
" ஏங்க... ரிலையன்ஸ் மால் போகணும்... "
( எனக்கு திக்னு இருந்தது... அது அம்பானி அவன் பொண்டாட்டி ஷாப்பிங் பண்றதுக்காக கட்டி வெச்சதாச்சே...!!! )
" எதுக்கு அங்க..? "
" ஆப்பிள் சைடர் வினிகர் வாங்கணும்.. இங்க தான் கெடைக்கும்... "
" ரொம்ப காஸ்ட்லியா இருக்குமா...? "
" சே., சே... நூறு ரூபாய்க்குள்ள தான் வரும்... "
" அப்ப சரி.... "
ரிலையன்ஸ் மால் போனோம்... உள்ளே என்டரி குடுக்கும் போது எனக்கு ஒரு போன் வந்தது...
" நிர்மலா.. நீ போயி வாங்கி்... பில் பண்ணிட்டு இரு.... வரேன்... "
நான் போனை கன்டினியூ பண்ண... என் Wife உள்ளே போயிட்டாங்க...
நானும் பேசி முடிச்சிட்டு உள்ளே போனா.... என் Wife @ பில்லிங்...
" என்ன நிர்மலா... முடிஞ்சதா..?!! "
" ம்ம்ம்... "
" பில் அமொவ்ன்ட் எவ்ளோ...? "
" 940 ரூபாங்க... "
" என்னாது.... ஒரு வினிகர் 940 ரூபாயா...? "
" சே, சே... அதான் ஸ்டாக் இல்லைனு சொல்லிட்டாங்களே... "
" என்னாது.... ஸ்டாக் இல்லியா...?!!! "
# கேம் ஓவர்...!!


நானும் என் ப்ரெண்ட் ரவியும் ஃபேமிலியோட டூர் போனப்ப ஷாப்பிங் போயிருந்தோம்..
அங்கே...
நான் என் Wife-கிட்ட அத வாங்கிக்க.. இத வாங்கிக்கனு சொல்லியும் அவங்க கடைசி வரை எதையுமே வாங்கல..
இதயெல்லாம் ரவி நோட் பண்ணிட்டே இருந்தான்..
சரி பையன கொஞ்சம் உசுப்பேத்தலாமேனு...
" மச்சி.. கவனிச்சேல்ல.... "
" ம்ம்..... "
" நானே அத வாங்கிக்கோ.. இதை வாங்கிக்கோன்னு சொல்லியும் என் Wife எதையும் வாங்கல.. இதுல இருந்து உனக்கு என்ன தெரியுது..? "
" நீ சொல்றது எதையுமே உன் Wife காதுல கூட வாங்க மாட்டாங்கனு தெரியுது..!! "
# ஙே... அவ்ளோ சத்தமாவா கேக்குது..?!!
இன்னிக்கு ரோட்ல என்னைய ஒரு கும்பல் மறிச்சது...
"உன்னை பாத்தா தமிழன் மாதிரி தெரியலியே..?"
"ஆமாங்க.. பாக்கறதுக்கு ஹாலிவுட் ஹீரோ மாதிரி இருக்கேனா.. எல்லோரும் இதே தான் சொல்றாங்க.."
அதுக்கு அப்புறம் என்ன நடந்துச்சுன்னா...
சரி விடுங்க...
அவனுங்களுக்கு ஹாலிவுட் ஹீரோ மேல எதோ கடுப்புன்னு நெனக்கிறேன்..
ஹி., ஹி., ஹி...
காலைல 5 மணிக்கு என் மொபைல் ரிங் ஆச்சு.. எடுக்கறதுக்குள்ள கட் ஆகிடுச்சு...
அர்த்த ராத்திரில கூட மிஸ்டு கால் குடுக்குதுன்னா அது இந்த மங்கு (Shajahan S) பன்னாடையா தான் இருக்கும்னு நெனச்சிட்டே பாத்தேன்..
அவனே தான்... திருப்பி கூப்பிட்டேன்..
" ஹலோ....!! "
" மச்சி.. தூங்கிட்டா இருக்கே..?? "
" இல்ல.. நைட் ஒரு பேயி வாக்கிங் வந்துச்சு.. அது கூட பேசிட்டு இருக்கேன்..! "
" ஆம்பள பேயா..? பொம்பள பேயா மச்சி..? "
" த்த்தூ... மேட்டரை சொல்லுடா.. "
" என் போனுக்கு ரீசார்ஜ் பண்ணி விடேன்.. "
" அடேய்ய்ய்ய்ய்ய்...!! "
" கோச்சிக்காத மச்சி.. முக்கியமான மேட்டர்.. பேலன்ஸ் இல்லாம கட் ஆகிடுச்சு.. "
" அப்டி என்னடா முக்கியமா மேட்டர்..? "
" ஒரு கேஸு விஷயமா.. "
" கேஸா.. போலீஸ்ல எதுனா மாட்டிக்கிட்டியா..? முட்டிக்கு முட்டி தட்டினாங்களா இல்லியா..? "
" வெளையாடாதே மச்சி.. சீக்கிரம் ஒரு 30 ரூபாய்க்கு ரீசார்ஜ் பண்ணி விடேன்..! "
" சரி பண்ணி விடறேன்.. அப்புறமா கேஸு என்னாச்சுனு சொல்லு..! "
" ஓ.கே மச்சி..!! "
என் மொபைல்ல இருந்து 30 ரூபாய்க்கு ரீசார்ஜ் பண்ணி விட்டேன்..
அடுத்த அஞ்சாவது நிமிஷம் அந்த பக்கிகிட்ட இருந்து வந்தது..
.
.
.
.
.
"கிரிமினல் கேஸ்" கேம் ரிக்வெஸ்ட்..
அட பரதேசி நாயி..!!!

Saturday, September 10, 2016மங்கு (Shajahan S) போன் பண்ணியிருந்தான்...
"மச்சி நேத்து தான் பிரேமம் பாத்தேன்... பாத்ததுல இருந்து மலர் டீச்சர் நெனப்பாவே இருக்குடா.."
"ஆங்.. சாய் பல்லவி"
"மலரே நின்னே காணாதிருந்நால் மிழியேகிய நிறமெல்.."
"நாயே.. பாடறத நிறுத்தித் தொலை.."
"அப்ப மறக்கறதுக்கு எதுனா ஐடியா இருந்தா குடு மச்சி.."
"விட்றா... ரெண்டு நாள்ல சரியா போயிடும்.."
"இல்ல மச்சி.. ரொம்ப ஃபீல் ஆகிட்டேன்.. எதாவது ஐடியா குடு.."
"அப்ப போய் தெலுங்கு பிரேமம் பாரு.."
"பாத்தா... மறந்துடுவேனா..?"
"ம்ஹூம்... செத்துடுவ..!!"
இந்த வாட்ஸ் அப்ல கண்டதையும் ஷேர் பண்ற நாய்ங்க.. கண்டதை மட்டுமே ஷேர் பண்ணுதுங்க..
தப்பித்தவறி கூட உருப்படியானது வர மாட்டேங்குது...
# டிஷ்யூம்., டிஷ்யூம்..!!!
Wife புது டிஷ் டிரை பண்ணி சமைச்சி தரும்போது அத கிண்டல் பண்றவன்.. வாழ்நாள் முழுக்க இட்லியும்., உப்புமாவுமே சாப்பிடுவான்..
- பாபா வெங்கீஷ்

Jio - மீம்ஸ்

"நிர்மலா... பாரேன் இந்த அதிசயத்தை... "
" என்ன..?! "
" டயட் இருக்கணும்னு மனசுல நெனச்சதுக்கே.. இளைச்சிட்டேன் போல.. பேன்ட் லூசா இருக்கு.. "
" நல்ல நாளும் அதுவுமா கெட்ட வார்த்தை சொல்லி திட்டிட போறேன்.. அது உங்க அப்பாவோடது.. "
" அப்பாதா... அவ்வ்வ்வ்..!!! "
# டயட் 15-வது நாள்..!!