Sunday, December 29, 2013


சன் டி.வி " சூப்பர் குடும்பம் " நிகழ்ச்சில 
மீனாவுக்கு குடுக்கற Payment 

பாதி நிகழ்ச்சியை ஜட்ஜ் பண்றதுக்கு.,
மீதி T.R பக்கத்துல பயப்படாம உக்காந்து 
இருக்கறதுக்கு..

இன்னிக்கு பழைய புக் ஒண்ணு 
படிக்கும் போது தான் தெரிஞ்சது...

" நடிகர் சூர்யா பிளஸ் 2 -ல எடுத்த 
மார்க் 872 தானாம்.. "

( Afterall என்னை விட _ _ _ மார்க்
தான் அதிகம். )

வெரி Bad-ங்க சூர்யா நீங்க...!! 

Wednesday, December 18, 2013

பாஜக அணியில் திமுக, அதிமுக கூடாது 
- வைகோ நிபந்தனை..

# ராகவா... நீ கராத்தே மாஸ்டர் இல்லடா, 
புரோட்டா மாஸ்டர்டா..
நேத்து என் பையன் ஸ்கூல்ல 
Parents-க்கு Craft Making Competition 
நடந்தது... 

என் Wife கலந்துகிட்டாங்க.. 

கிட்டதட்ட 100 பேருக்கும் மேல
கலந்துகிட்டாதுல Top 15-ல செலக்ட் ஆகி.,

இன்னிக்கு கலெக்டர் கையால
பரிசு வாங்க போறாங்க...

மேடையில மைக் குடுத்தா..
( ஒருவேளை குடுக்கலன்னா பிடுங்கியாவது.. )

" இன்னிக்கு நான் பரிசு வாங்கறதுக்கு
காரணமே என் கணவர் தான்."னு

' உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் ' படம்
கிளைமேக்ஸ்ல ரோஜா பேசற மாதிரி
பேசணும்னு 3 பக்கம் எழுதி கொடுத்து
இருக்கேன்...

ம்ம்.. பார்க்கலாம்...
தேர்தல் தோல்விக்கு " மோடி வித்தை " 
காரணமில்லை... - டி.வியில் ஒரு காங்கிரஸ் பிரமுகர்

# இவனுங்க வித்தைன்னா ரோட்ல கயிறு 
மேல நடக்கறதுன்னு நெனச்சிட்டு இருக்கானுவளோ..!!?
இன்னிக்கு டி.வில உக்காந்து பேசிட்டு 
இருக்குற காங்கிரஸ்காரங்களுக்கு 
எல்லாம் எக்ஸ்ட்ரா பேட்டா போட்டு 
தர சொல்லுங்கப்பா.. 

# அடிச்சா... வலிக்காத மாதிரி நடிக்கலாம்..
அவனுங்க அடியே வாங்காத மாதிரி 
நடிக்கறானுங்க..!!

Friday, December 6, 2013

என் ஆதார் அட்டை போட்டோல 
என் மூஞ்சி கருப்பா இருக்கு...

நாமதான் சும்மா எம்.ஜி.ஆர் மாதிரி 
தக தகனு இருக்கோமே.. இப்படி 
எடுத்து வெச்சி இருக்கானேன்னு 
போட்டோ எடுத்தவனை கேட்டேன்..

" என்னடா எடுத்து வெச்சி இருக்க..?! "

" Back Light.., அப்படித்தான் வரும்..!! "

" இங்கே எங்கடா Back Light இருக்கு..?! "

" உங்க தலைக்கு பின்னாடி ஒளிவட்டம்
தெரியுதுண்ணே.. நான் என்ன பண்றது.? "

ஆமா.. வாஸ்தம் தான்..!!!
அவன்தான் என்ன பண்ணுவான்..?!!
என்னாங்கடா இது...?
இப்பல்லாம் ஸ்கூல் ஐ.டி கார்டுக்கு கூட 
போட்டோ நல்லா பிடிக்கறாங்க... # ஆதார் அட்டை

அந்த போட்டோல இருக்கறது நான் தான்னு 
வேற ஆதாரம் காட்ட வேண்டி இருக்கும் 
போலயே... # ஆதார் அட்டை


" படிச்சவன் பாஸ் ஆகறான்..,
லவ் பண்றவன் லூஸ் ஆகறான்..!! "

- வெங்கீஷ்..

டிஸ்கி : இதுக்கு எதுக்கு தமன்னா படம் 
போட்டு இருக்குன்னு யோசிக்கறீங்களா..??!
.
.
.
.
.
.
.
.
தத்துவம் சொன்னா.. அதை கேக்காம
தமன்னா படம் பத்தி ஆராய்ச்சி பண்றீங்களே....
என்ன இது...?!!

இப்படி இருந்தா இந்தியா எப்ப வல்லரசாவறது..,
நான் எப்ப அமெரிக்க ஜனாதிபதி ஆகறது..!?!!

இப்ப காலையில என் ப்ரண்ட் மணி 
போன் பண்ணியிருந்தான்...

" என்னடா இன்னிக்கு லஞ்ச்க்கு 
வர்றேன்னு சொன்னே..? வர்ற தானே..?!! "

" கண்டிப்பா... நீயே இல்லன்னாலும்
இன்னிக்கு உன் பக்கத்து வீட்டுக்கு
வந்தாவது சாப்பிட்டுட்டு தான் வருவேன்.. "

" சரி ஒரு நிமிஷம் இரு...!! "

அவன் Wife-கிட்ட டிஸ்கஸ் பண்றான்....

( " மேனகா.. தப்பிக்க வழியே இல்ல போல
தெரியுது.. அதனால சிக்கன்ல பிரியாணி.,
மட்டன்ல சுக்கா... அப்புறம் மீனு அரை கிலோ....... " )

" டேய்.. டேய்..... "

" இருடா.. உனக்கு தான் சொல்லிட்டு
இருக்கேன்..!! "

" டேய் இன்னிக்கு சனிக்கிழமை..
நான் ப்யூர் வெஜ்..!! "

" அப்படியா...!!? "

( மேனகா.. அவன் வெஜ்ஜாம்... மட்டன் ,
சிக்கன் எல்லாம் கேன்சல்... )

" மணி... மணி.., அப்ப வெஜ்ஜூக்கு
என்னடா மெனு..?!! "

" அதுக்கெல்லாம் என்னடா மெனு..
புண்ணாக்கும், புல்லுகட்டும் வாங்கி
வெக்கிறேன்.. வந்து மேஞ்சிட்டு
போயிடு..!! "

" கிர்ர்ர்ர்ர்ர்........! "
போன வருஷம் ஒரு ஜரிகை மிஷின் 
வெச்சப்ப நான் ரொம்பவே யோசிச்சேன்..

ஏன்னா அதை நார்த் இந்தியன்ஸ் தான் 
ஓட்டுவாங்க.. அவங்களுக்கு ஹிந்தி 
மட்டும் தானே தெரியும்.. 

எப்படி சமாளிக்க போறோம்.?

ஆனா எதோ ஒரு தைரியத்துல 
மிஷினை வெச்சி., அவன்கிட்ட
தட்டு தடுமாறி ஹிந்தி பேச
ஆரம்பிச்சேன்..

இப்ப நல்ல முன்னேற்றம்..

ஒரு வருஷம் ஆகிடுச்சில்ல..

# " ஹே சர்வேஸ்... கல் ஜல்தி ஆவோ
மே போல்தா., தும் கியா நஹி ஜல்தி
ஆயா..? "

" முதலாளி..!!! இனிமே நீ தமிழ்ல
சொல்லுது.. நான் தமிழ் கத்துகுது.. "

" ஙே..!!! "

" மங்குனி அமைச்சர் " வாங்கிருக்கும் 
லேட்டஸ்ட் நோக்கியா கேமரா மொபைல் 
போன் இது தான்..... 

வாழ்த்துக்கள் மங்கு...!!

" என்னிக்கிங்க இந்த உலகம் ஜீனியஸ்களை 
சம காலத்துல புரிஞ்சிட்டு இருக்கு... 

வள்ளுவர்க்கே 2000 வருஷம் கழிச்சி தானே 
சிலை வெச்சோம்..?! "

# " உங்களுக்கு ஏன் இன்னும் " பாரத் ரத்னா " அவார்ட்
குடுக்கலை.?"னு கலை செல்வி கேட்ட போது
என் பதில்...!

Saturday, November 16, 2013

என் மனைவி..

" ஏங்க உங்க First Fan யாரு...? "

ஒரு செகண்ட் ஜெர்க் ஆனாலும்.,
உடனே சுதாரிச்சிட்டு டக்னு சொன்னேன்...

" நீ... நீதான்..!! "

உடனே சிரிச்சிட்டே போயிட்டாங்க...

யப்பா... தலை தப்பிச்சுதுடா சாமி..!!!

மீசையை கூட தன் இஷ்டம் போல் வைத்துக்கொள்ள 
சுதந்திரம் இல்லாத பரிதாபத்திற்குரிய ஜீவனுக்கு 
' கணவன் ' என்று பெயர்...

# என்னாங்க மீசை இது..? ரவுடி மாதிரி இருக்கு..?!!
இந்தியாவுலயே.. ஏன் வேர்ல்ட்லயே 
வாங்குற சம்பளத்துக்கு சின்சியரா 
வேலை பார்க்கறது............ 

டெலி மார்க்கெட்டிங்ல இருக்கறவங்க தான்...

காலைல 8 மணிக்கு போன் பண்ணி.. 
" நேத்து நீங்க Enquire பண்ணின Product-ஐ 
Book பண்ணிக்கறீங்களானு " கேக்கறாங்க... 

# வர வர இவிங்க கடமை உணர்ச்சிக்கு 
ஒரு அளவே இல்லாம போச்சு.....

Wednesday, November 6, 2013

வெளி உலகுக்கு 
மனைவியிடம் பயப்படாதவர்கள் 
போல நடிக்கிறார்கள் ஆண்கள்., 

கணவரிடம் பயப்படுவதை போல 
நடிக்கிறார்கள் பெண்கள் # பேமிலி லீக்ஸ்

Tuesday, November 5, 2013

தமிழர்களின் உணவுப்பழக்க முறையில் 
சங்ககாலத்திலேயே பூரி இருந்து இருக்கிறது 
என்பதை இன்று கண்டுபிடித்தேன்... 

# சோழா பூரி.
நான் எப்ப என் Wife-க்கு சேலை எடுக்க 
போனாலும் 

" இருக்கறதுலயே காஸ்ட்லி சேலை 
எது காட்டுங்கன்னு..? " கேப்பேன் 

அவங்களும் கூட்டிட்டு போயி காட்டுவாங்க.... 

உடனே நானும் அதை டக்னு எடுத்துட்டு 
வந்துடுவேன்.. 
:
:
:
:
( ஹி., ஹி., ஹி.., நான் போட்டோவை
சொன்னேன்... )
" கந்தன் கருணை " படத்துல பேசாம 
சிவாஜியே முருகனா நடிச்சி இருக்கலாம்.. 
எல்லா டைலாக்கையும் அவரே பேசிடறாரு...

பாவம் சிவக்குமாரு...!!!!

Monday, October 14, 2013புலியை பாத்து பூனை எதுக்கு சூடு
போட்டுக்கணும்..?!!

எந்த புலியாலயும் எலி புடிக்க முடியாது
தெரியும்ல...

- பாபா வெங்கீஷ்..


எழுதிக்கொண்டிருந்தான்
" குலோபல் வார்மிங் " 
பற்றிய கவிதை..,
ஓடிக்கொண்டிருந்தது 
ஏ.சி... ( அடடே...! )

- வெங்கூ

Saturday, October 5, 2013இப்பல்லாம் சோறு வெச்சி கூப்பிட்டா 
ஒரு காக்கா கூட வர மாட்டேங்குது....

டேய்.. இதெல்லாம் உங்க வேலை தானா..?!!

அப்படியே ராஜேஷ்குமார் கணக்கா ஒரு 
மர்ம நாவல் எழுதணும்னு முடிவு 
பண்ணினேன்..

பேப்பரை எடுத்தேன்., 
பேனாவையும் எடுத்தேன்...

டக்னு எழுத ஆரம்பிச்சேன்..

சும்மா சொல்லக்கூடாது.. நாவல் பயங்கர
மர்மமா இருக்கு...

பின்ன.. 20 பக்கம் ஓடிடுச்சு... இன்னும்
இதுல என்ன கதைனு எனக்கே தெரியாம
மர்மமா இருக்கு...!!


:)

Monday, September 23, 2013

" யார் யாருக்கோ குடுக்கறாங்க.. உங்களுக்கு 
ஏன் இன்னும் நோபல் பரிசு குடுக்கல " னு 
ஒரு நண்பர் கேட்டாரு.....

( " சிரியா கூட சண்டை வேணாம்" னு 
ஓபாமா கூட போன்ல பேசினதை பாத்து 
இருப்பாருன்னு நெனக்கிறேன்.. )

அதுக்கு என் தன்னடக்கமான பதில்..

" நான் தான் வேணாம்னு சொல்லிட்டேன் ப்ரோ. "

" ஏன்...?!!! "

" போன வாரம் தான் 12 நேஷனல் அவார்டு, 
6 கோல்டன் குளோப் அவார்டு, 8 ஆஸ்கார் அவார்டு, 
அப்புறம் கலைமாமணி, பத்மஸ்ரீ, இன்னும் இது மாதிரி 
200 அவார்ட்டை ரூமை அடைச்சிட்டு இருக்கேன்னு 
பழைய இரும்பு கடைக்காரனுக்கு போட்டேன்.. "

" ?!?!!?!?? "

Wednesday, September 18, 2013

இன்னிக்கு காலையில என் சிஸ்டத்துக்கு
பின்னாடி இருக்குற சுவர்ல என் Wife
போட்டோ மாட்டி இருந்துச்சு..

என்னடா இது திடீர்னு.. இந்த போட்டோ
இங்கே எதுக்கு வந்துச்சின்னு யோசிச்சிட்டே
என் Wife-ஐ கூப்பிட்டேன்..

" நிர்மலா.. இங்கே வாம்மா ( அன்பு ).. "

" என்னங்க...? "

" ஆமா இங்கே எதுக்கு உன் போட்டோவை
மாட்டி வெச்சி இருக்க..? "

" வர வர நீங்க பொண்ணுங்களை ஜாஸ்தி
வம்புக்கு இழுக்கறீங்கல்ல.. "

" அதுக்கு..??!! "

" போஸ்டிங் போடும்போது என் போட்டோவ
பாத்துட்டே எழுதினா ஒரு பயம் இருக்கும்..
வீண் வம்புக்கு போக மாட்டீங்க...!! "

" ஹே., ஹே., ஹே.. இத பார்ரா..!! "

டிஸ்கி : இப்ப கண்ணை மூடிகிட்டே டைப்
பண்றது எப்படின்னு டிரைனிங் எடுத்துட்டு
இருக்கேன்.

ஹே யாருகிட்ட... ஹி., ஹி., ஹி...!!


சூர்யாகிட்ட தப்பி தவறி எவனாவது 
லிப்ட் கேட்டான்னா.. அவனை கூட 
நேரா " மலபார் கோல்ட் " கடையில தான் 
போயி எறக்கி விடுவாரு போல இருக்கு..!

:)

Saturday, September 14, 2013இவன் வண்டி ஓட்றதே தப்பு... இதுல டபுள்ஸ்
வேற...( என் பையன் ப்ரெண்டு அரவிந்த்..
வயசு 11 )

அவங்க அப்பன் இந்த பக்கம் வரட்டும்...
நாயை விட்டு கடிக்க வெக்கிறேன்..

காலைல இதை பாத்துட்டு என் பையன்...

" அப்பா.. அப்பா.. அரவிந்த் எல்லாம்
ஸ்கூட்டி ஓட்றான்.. எனக்கும் குடுங்கப்பா... "

" ஸ்கூட்டி சைஸ் கூட இல்ல..
ஸ்கூட்டி கேக்குதா உனக்கு.. போடாங்... "

" அப்ப பைலட் ஆகனும்னா ஏரேப்ளேன்
சைஸ் இருக்கணுமாப்பா...? "

" ?!????!!!! "

Thursday, September 12, 2013

சாட்ல பொண்ணுங்க யாராவது 

" வெங்கட் உங்க வயசு என்னனு.? " 
கேட்டாங்கன்னா... 

" லேடீஸ் பர்ஸ்ட்னு " பாலை தூக்கி 
அவங்க பக்கம் போட்டுடுவேன்.. 

அப்புறம் அவங்க என்ன வயசு சொல்றான்னு 
பாத்துட்டு... நான் 2 வயசு கம்மியா சொல்லுவேன்..

ஆனா... இன்னிக்கு என்ன ஒரு அநியாயம் 
" எனக்கு 17 வயசு "னு சொல்ல வெச்சிடுச்சு 
ஒரு பொண்ணு..

:P :P


ஆயாம்மா எல்லாம் 
ஆஸ்திரேலியால இருந்து வர்றாங்களாம்.... 

ஆங்..!

Wednesday, September 11, 2013

அம்மா.., 

இப்போது உங்களது பொன்னான ஆட்சி 
சிறப்பாக நடந்து வருவது உலகறிந்ததே.. 
உங்கள் ஆட்சியின் ஒரு வருட சாதனைகளை 
போன் போட்டு பலருக்கு தெரிவித்து, அவர்களை 
நல்வழிக்கு ( நம்ம கட்சிக்கு தான் ) கொண்டு 
வருவதை என் கடமையாக கருதி செய்து வருகிறேன். 

அந்த பணியில் எனக்கு இப்போது சிறு தடங்கல் 
ஏற்பட்டு உள்ளது..

உங்கள் சாதனைகளை பாதி சொல்லிக்கொண்டு
இருக்கும்போதே மொபைல் போனில் பேட்டரி
சார்ஜ் காலி ஆகிவிடுகிறது..

ஆகையால் தினமும் மொபைல் போன் சார்ஜ்
செய்யுமளவுக்காவது கரண்ட் கொடுக்கும்படி
தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்..

இப்படிக்கு
அம்மாவின் கொத்தடிமை.

Tuesday, September 10, 2013

ஃபேஸ்புக்னா தினமும் அவங்க மூஞ்சியை 
போட்டோ புடிச்சி போடறதுன்னு சில பேர் 
நினைச்சிட்டு இருக்காங்க.... 

# என்ன சம்முவம் இது..??

Monday, September 9, 2013

இன்னிக்கு நம்ம ப்ரெண்டு ஒருந்தங்க 
ரொம்ப கன்ஃபீஸா இருந்தாங்க... 

நான் அவங்ககிட்ட.. 

" என்னங்க பண்ணிட்டு இருக்கீங்க..? 

"இனிப்பா " சர்க்கரை பொங்கல் செய்வது 
எப்படினு ஆராய்ச்சி பண்ணிட்டு இருக்கேன்.. "

" வெளங்கிடும்..! "

" அதை பிள்ளையாருக்கு வைக்கலாமா
வேண்டாமானு யோசிச்சிட்டு இருக்கேன்.. "

" சுத்தம்..! "

" இப்ப என்ன பண்றது வெங்கட் சார்... "

" செஞ்சி பாருங்க.. ஆனா பிள்ளையாருக்கு வைக்க
வேண்டாம்... பரமசிவனுக்கு வைச்சிடுங்க...
அவருக்கு தான் ஏற்கனவே எக்ஸ்பீரியன்ஸ்
இருக்கு.. ( விஷத்தை முழுங்கி )... " 

Saturday, September 7, 2013

அது என்னமோ தெரியல..

என் கண்ணுக்கு முன்னாடி அநியாயம்
நடந்தா என் நரம்பு எல்லாம் முறுக்கேறி,
கண்ணு எல்லாம் சிகப்பாகி., கன்னம் எல்லாம்
துடிக்கும்...

அப்ப எவனா இருந்தாலும் பாக்க மாட்டேன்..
ஆங்...

" டமால்...."

( அட நான் அடிச்சி.., அவன் விழுதுடுவான்னு
சொல்ல வந்தேன்...! )

Sunday, September 1, 2013

மீட்டிங்குக்கு வந்த பளாக்கர்ஸ்க்கு 
AVM ஸ்டுடியோ முன்னாடிதான் 
ரூம் போட்டிருக்காங்களாம்..

காலைல முதல் வேலையா 
தமன்னா., அனுஷ்கா, சமந்தா 
யாராச்சும் வர்றாங்களான்னு 
பார்க்கணும்..

வந்தா... உடனே ஓடி போய் 
ஒரு போட்டோ எடுத்துகிட்டு,
நம்ம ஆட்டோகிராப் ஒன்னு போட்டு 
குடுத்துட்டு வந்திடணும்.... 

அங்ங்...

வைரமுத்துவுக்கு டஃப் பைட் குடுப்ப போல இருக்கே... 
நல்லவேளை இதையெல்லாம் பார்க்க வாலி இல்ல...

# AVM ஸ்டியோ அருகில் இருந்த மரத்தில் பார்த்தது.
பதிவர் சந்திப்புல தான் 
தெரிஞ்சது.. நிறைய பதிவர்கள் 
 "நீயா., நானால" கலந்துகிட்டவங்கன்னு...

அதை கேள்விபட்டு நண்பர் கேட்டாரு...

" சார்... நீங்க எப்ப ' நீயா.? நானா.?-ல ' வருவீங்க..? "

உடனே நான் அவரை திருப்பி கேட்டேன்...

" அப்புறம் கோபி என்ன சார் பண்ணுவாரு..? "
கல்யாணத்துக்கு போனா...
அங்கே தெரிஞ்ச பேஸ்புக் நண்பர்கள் 
யாராவது இருக்கிறார்களான்னு தேடுவது 
என்ன மாதிரியான மனநோய்..?!?!

Wednesday, August 28, 2013

" தல ", " குரு "-னு யாராச்சும் உங்களை
சொன்னா... உடனே உஷாராயிடுங்க.. 

அடி வாங்குற மாதிரி எதாவது சிட்சுவேஷன் 
வந்தா முதல் அடி உங்களுக்கு வாங்கி குடுக்கதான் 
இந்த பிட்டு....

- பாபா வெங்கீஷ்..

Monday, August 26, 2013

" என்கிட்ட மெரினா பீச் இருக்கு.. வாங்கிக்கறியா..? "னு 
என் ப்ரெண்ட் அருண் போன் பண்ணி கேட்டான்... 

" என்னை விளையாடறியா...? அப்புறம் ஏற்கனவே 
என்கிட்ட இருக்குற Hawai Beach-ஐ என்னடா 
பண்றது.? " திருப்பி கேட்டேன்..!
சூர்யா தினம் தினம் டிவில வந்து 

" உங்க மனைவியை உங்களுக்கு எவ்ளோ 
பிடிக்கும்..? இவ்ளோ.. இவ்வ்வ்ளோ.. 
இவ்வ்வ்வ்ளோ..? இப்படி பல கேள்விகளுக்கு 
தங்கம் தான் பதில்னு " அட்வைஸ் பண்றாரு...

ஆனா ஜோதிகாவுக்கு தங்கமே வாங்கி தராம
அவர் ஏமாத்திட்டு வருவது சந்தேகத்திற்கு
இடமில்லாம நீருபணமாகிறது.. அதனால்
இந்த சபை சூர்யாவை வன்மையாக கண்டிக்கிறது..

- பொதுநலன் கருதி வெளியிடுவோர்
' கோகுலத்தில் சூரியன் ' வெங்கட்
Saturday, August 24, 2013

நான் நினைக்கிறேன் வெங்காய விலை ஏறினத்துக்கும்
வெள்ளி கொலுசு விற்பனைக்கும் எதோ லிங்க்
இருக்கும்னு

( இதுவும் வெ - அதுவும் வெ )

அதனால வெள்ளி கொலுசு விக்கறதை தடை
பண்ணினா.. வெங்காய விலை தன்னால இறங்கிடும்..

( வரவர நிதி அமைச்சர் மாதிரியே சிந்திக்க
ஆரம்பிச்சிடேன்ல.. )

:)

Thursday, August 22, 2013

நான் சீக்கிரம் சைனா பாஷை கத்துகிட்டு 
சைனா இலக்கியம் படைக்கல.. என் பேரு 
ஜிங் வாங் லீ ( சைனா புனைப்பெயர் ) இல்ல... 

அக்காங்...

Wednesday, August 21, 2013

ஏன்டா எல்லா கருமாந்திரமும் ஒரே டேஸ்ட்ல
தானே இருக்கு.. அப்புறம் எதுக்குடா கலர் கலரா,
உருண்டை, சதுரம், முக்கோணம்னு வெட்டி
வெச்சி இருக்கீங்க..

# ஸ்வீட் கடையில் நிக்கும்போது கனநேரத்தில்
உதித்த சிந்தனை..!

Monday, August 19, 2013

நட்புன்னா என்னான்னு தெரியுமா உனக்கு..?
வெங்கட்னா யார்னு தெரியுமா உனக்கு..??
மங்குனி என் நண்பன்...
மங்குனி என் உயிர் நண்பன்..

அவனுக்கு எதாவது பிரச்னைன்னா...
முதல்ல அவன் என்னைத்தான் சந்தேகப்படுவான்..
ஹி., ஹி., ஹி...!!
 
ஒரு பக்கம் புரோபைல்ல கூட 
தன் போட்டோவ போடாத பொண்ணுங்க...

இன்னொரு பக்கம்.. 
மரத்துகிட்ட நின்னு போஸு
படிகட்டுல உக்காந்து போஸு
ப்ரெண்டு கூட போஸு.,
பார்க்குக்கு போனா போஸு., 
பீச்சுக்கு போனா போஸுன்னு 
இப்படி தினமும் தன் போட்டோவை 
அப்லோடு செஞ்சிட்டே இருக்கற பொண்ணுங்க...

இவிங்கள புரிஞ்சிக்கவே முடியலையே....!!!!??
காயத்ரி
Fan of மங்குனி அமைச்சர்..!
-------------------------------------------

இன்னிக்கு மதியம் மங்குனி அமைச்சரோட
காத்தாடி காயத்ரி ( பதிவில் என் பெயர் 
போடக்கூடாது என்று கெஞ்சி கேட்டுக்கொண்டதால்
" ரேகா " என்கிற இவர் பெயர் காயத்ரி என
மாற்றப்பட்டுள்ளது.. ) எனக்கு போன்
பண்ணியிருந்தாங்க..

காத்தாடின்னா சும்மா இல்லங்க...
போலார் , ஓரியண்ட் PSPO மாதிரி
சும்மா கிர்ர்ர்ர்ர்ர்னு சுத்துது நம்ம தலை..
( அவங்க பேச ஆரம்பிச்சா... )

ம்ம்.. இப்ப மேட்டர் என்னான்னா...

அவங்களோட ஆஸ்தான ப்ளாக்கர்
மங்குனி முன்னே மாதிரி டீசெண்டா
பதிவு எழுதறது இல்லையாம்.. நிறைய
கெட்ட வார்த்தைகள் பதிவுகள் இருக்காம்..

சொன்னாலும் கேக்க மாட்டேங்குறாராம்..
அதனால இவங்க இப்பல்லாம் அவர்
பதிவை லைக் பண்றதில்லையாம்...

So., நானு அவருக்கு அட்வைஸ் பண்ணி
திருத்தணுமாம்.. ரொம்ப பீலிங்கா பேசிட்டே
இருந்தாங்க..

" சரிங்க.. நான் போன் பண்ணி சொல்றேன்னு "
சொல்லிட்டு மங்குவுக்கு போனை போட்டேன்...

" ஹலோ மங்கு...! "

" சொல்லு வெங்கட்..! "

" இப்ப நீங்க பதிவு எழுதற மாதிரியே
கண்டினியூ பண்ணுங்க.. நிறைய பேருக்கு
இதான் பிடிச்சிருக்கு...! "

" ஓ.. அப்படியா..? ஓ.கே பண்ணிடுவோம்..! "

.
.
.

ஒழிந்தான் எதிரி...!!
ஹா., ஹா., ஹா... ( வில்லன் சிரிப்பு )
 Friends இல்லாம கஷ்டப்படுவாங்களேன்னு
ஒவ்வொரு பொண்ணுங்க FB அக்கவுண்ட்லயும் 
4000 - 4500 பசங்க Friends இருக்கோமே...

இந்த பெருந்தன்மை ஏன் பொண்ணுகளுக்கு 
இல்ல..?!!


ஒண்ணு 

நீ லவ் பண்ணாமயாவது இருக்கணும்., 

இல்ல 

அந்த புள்ளயை கையை புடிச்சி இழுக்காமயாவது
இருக்கணும்.,

இல்ல..

அதை போட்டோ எடுக்காமயாவது இருக்கணும்..

அதுவும் இல்ல

அதை ஃபேஸ்புக்லயாவது போடாம இருக்கணும்..

அட இதெல்லாம் கூட பரவாயில்ல..

எல்லாத்தையும் பண்ணிட்டு.., இந்த பொண்ணுங்களே
மோசம், நான் சாமியாரா போறேன்னு ஒரு சீனு
காட்டுவ பாரு...

யப்பா... இது உலகமகா நடிப்புடா சாமி...!


போன பதிவுல ஷாகித் கபூர் என் சாயல்ல 
இருக்கார்னு சொன்னதுக்கு... 

" See ur arm muscle in mirror vs Shahid Kapoor arms " 
சொல்லிபுட்டான் என் ப்ரெண்டு Manivannaraj Panneerselvam

எனக்கு வந்துச்சே கோபம்.. நானும்

" இருடா.. இதே மாதிரி ஒரு டைட்டான டி சர்ட்
போட்டு Arms-ஐ மடக்கி நானும் போட்டோ எடுத்து
காட்டறேன் " னு சவால் விட்டுடேன்..

ஆனா இப்ப....

Arms-ஐ முறுக்கினதுல டிசர்ட் கிழிஞ்சு போச்சே...!!

ஊருக்கு போயிருக்குற என் பொண்டாட்டி வந்து
பையன் டிசர்டை ஏன் கிழிச்சீங்கன்னு கேட்டா..
நான் என்ன பதிலு சொல்லுவேன்...!!

அவ்வ்வ்வ்வ்....
வீட்டுக்கு வரும் சொந்தக்காரங்ககிட்ட 
" நல்லா இருக்கீங்களா.?" நாம் கேக்கும் முன்...

" போன் இருக்கா.?"னு முந்தி கேக்கிறார்கள் 
குழந்தைகள்.
" ஊரார் ஸ்டேடஸ்க்கு லைக் போட்டால்.,
நம் ஸ்டேடஸ் தானே ஷேர் ஆகும்..!! "

- பாபா வெங்கீஷ்..
" மன்னா.. ஆபத்து.., ஆபத்து.... "

" என்னய்யா ஆபத்து... என் அக்கவுண்ட்டை 
யாராவது ஹேக் செய்து விட்டார்களா..? "

" இல்லை மன்னா.. பக்கத்து நாட்டு மன்னன் 
நம்மீது போர் தொடுக்க போகிறானாம்..
ஸ்டேடஸ் போட்டு இருக்கிறான்... "

" என்னாது போரா..? நாம் தான் அவன் போடும்
எல்லா மொக்கை ஸ்டேடசுக்கும் லைக்
போடுகிறோமே... பிறகு எதற்கய்யா போருக்கு
வருகிறான்.. "

" அவர் அந்தபுரத்தில் இருக்கும் 2 ராணிகளுக்கு
நீங்கள் ப்ரெண்ட் ரிக்வெஸ்ட் அனுப்பினீர்களாமே... "

" ப்ரெண்ட் ரிக்வெஸ்ட் அனுப்பினதுக்கெல்லாமா
போர்.. பெரிய அக்கப்போராய் அல்லவா இருக்கிறது..
அவ்வ்வ்..!! "
சாமி இருக்குன்னு சொல்றவன் பின்னாடி 
நூறு பேரு போறாங்க...

சாமி இல்லன்னு சொல்றவன் பின்னாடியும் 
நூறு பேரு போறாங்க...

ஆனா... 

நான்தான் சாமின்னு சொல்றவன் பின்னாடி 
லட்சம் பேரு போறாங்க... ம்ஹும்...!!
நேத்து...
வீட்ல புடலங்காய் பொரியல்..
எனக்கு புடலங்காய்னா அலர்ஜி..

என் Wife என்னை பாத்து..

" நல்லதெல்லாம் உங்களுக்கு பிடிக்காதே..! "

இன்னிக்கு...
பப்பாளிபழம்னா எனக்கு ரொம்ப 
பிடிக்கும்.. அதை சாப்பிட்டுட்டு இருக்கேன்...

அதை பாத்து என் Wife...

" எப்படித்தான் அந்த கருமத்தை
சாப்பிடறீங்களோ.. உவ்வ்வே...!

 " ???!?!?!!??!!?.."

# என்னாம்மா இப்டி பண்றீங்களேம்மா....!!
இந்த மிஸ்டு கால் குடுக்கற பார்டிங்க 
எங்கே போனாலும் திருந்த மாட்டாங்க..
ஜி-டாக் வந்தாலும் மிஸ்டு கால்தான் 
குடுக்கறானுவ... # " கால் மீ நவ்.. "
" நீங்க டாக்டரா.? "-னு சந்தேகமா கேக்கறாங்க...

நான் LKG-ல இருந்து டிகிரி வரைக்கும் 
லண்டன் மெடிக்கல் காலேஜ்ல தான்பா 
படிச்சேன்... சொன்னா நம்புங்க...
" இந்த கொசுத்தொல்லை தாங்க முடியல " என்று 
சொல்லும் ஒவ்வொரு முறையும் அது கொசுவை 
குறிப்பதாய் இருப்பதில்ல..

- பாபா வெங்கீஷ்..

Sunday, August 18, 2013

நீ
வாய் திறந்தால 
கவிதை., 

வாய் மூடியிருந்தால்.......
Silent கவிதை..!!

- வெங்கூ


மாதுரி தீட்சித் மேம்க்கு நான் ரொம்ப 
கடமைப்பட்டு இருக்கேன்... 

படிக்கறப்ப ஹிந்தி மிஸ்ஸை பாத்து 
ஓடி ஓளிஞ்சிட்டு இருந்தவன் நான்... 

ஆனா என்னால இன்னிக்கு ஹிந்தில
சரளமா ஒண்ணுல இருந்து பதிமூனு
வரை சொல்ல முடியும்னா.. அதுக்கு
காரணமே நம்ம மாதுரி மேம்தான்

# ஏக், தோ, தீன்......