Tuesday, March 31, 2015

" நீங்க என்னை ரொம்ப இன்சல்ட் பண்ணிட்டீங்க..
நான் உங்க பேரை எழுதி வெச்சிட்டு
தீக்குளிக்க போறேனு " மங்கு ஒரு பொண்ணுகிட்ட
 சொல்லிட்டான்..
அந்த பொண்ணு பதறி போச்சு..
என்கிட்ட வந்து எதாவது பண்ணுங்கனு
கேட்டுச்சு...
உடனே நான் சொன்னேன்...
" கவலைப்படாதீங்க.... நான் இருக்கேன்ல..
நான் உங்கள ஜாமீன் எடுக்கறேனு "
சொல்லிட்டேன்...
smile emoticon
# இந்த பன்னாட குளிக்கறதே அதிசயம்..
இதுல இது தீ குளிக்க போவுதாம்..!!
" வாட்ஸ் அப் "-ல காலிங் வசதி வந்ததுல
ஒரே பிரயோஜனம்...
.
.
.
.
நம்மகிட்டயும் இருக்குனு வெளில
சொல்லிக்கலாம்...!!!

Monday, March 30, 2015

நேத்து " டார்லிங் " படம் போயிருந்தோம்..
என் சின்ன பையன் கோகுல்
" பயமா இருக்குப்பா., பயமா இருக்குப்பா " னு
சொல்லிட்டே இருந்தான்...
அவன் கையை பிடிச்சி நான் சொன்னேன்..
" ரொம்ப பயமா இருந்தா நீயும் என்னைய
மாதிரி சீட்டுக்கு அடில ஒளிஞ்சிக்க
கோகுல்... "
# தட் பேயே காறி துப்பின மொமண்ட்.

Sunday, March 29, 2015

மேட்ச் பிக்சிங் சர்ச்சையில சிக்கின
நியூசிலாந்து வீரர் கிரிஸ் கெய்ன்ஸ்
இப்ப லாரி ஓட்டிட்டு இருக்காராம்..
அதே மேட்ச் பிக்சிங் மேட்டர்ல சிக்குன 
அசாருதினை நாம MP ஆக்கி அழகு
பாத்தோம்...
# வித்யாசமா செய்வோம்ல...
மங்கு ஃபீலிங்க்ஸ்....
" நியூசிலாந்து தோத்துடுச்சு மச்சி... 
ஒரே ஃபீல்ங்கா இருக்கு... நான் தண்ணி 
அடிக்க போறேன்... "
" தண்ணி அடிக்க போறேனு சொல்லு..
அதுக்கு ஏன்டா.. நியூசிலாந்தை எல்லாம்
வமபுக்கு இழுக்கறே... "
" காரணமே இல்லாம தண்ணி அடிக்கறான்
மங்குனு யாரும் சொல்லிட கூடாதில்ல.. 
பிரஸ்டீஜ் முக்கியம் மச்சி... "
# த்த்தூ..

எல்லா கேஸையும் அனுஷ்கா மேலயே - PS


மெக்குல்லம் அவுட் ஆனதும் எங்க சின்ன மாமனார்...
" இவங்க டாஸ் வின் பண்ணி பேட்டிங்
எடுத்தது ரொம்ப தப்பு மாப்ளே.. "
" அவங்க தான் தப்பு மேல தப்பு பண்ணிட்டு இருக்காங்களே.. "
" என்ன மாப்ளே சொல்றே..? "
" பின்ன இவ்ளோ திறமையான உங்களை
விட்டுட்டு மெக்குல்லமை கேப்டனா
போட்டு இருக்காங்களே மாம்ஸு... "
அப்புறம் அவரு என் Wife-கிட்ட போயி
என்னமோ சொன்னாரு...
நான் ஆபீஸ்க்கு ஓடி வந்துட்டேனே..!!!
# Aus Vs N.Z WC Final

Saturday, March 28, 2015


யேய் கல்யாண் ஜூவர்லர்ஸ்...,
பாத்து சூதானமா நடந்துக்கோங்கடா...
சொத்துல பங்கு கேட்டு பிரபுவோட 
பேரன் பேத்திங்க எல்லாம் கேஸ்
போட்டுட போறாங்க...
# நம்ம கல்யாண் ஜூவர்லர்ஸ்..!!!

போன வாரம் இந்த மங்கு பையன்
ஒரு பொண்ணுகிட்ட சாட்டிங்ல...
" வடபழனிக்கு வா.. கல்யாணம் பண்ணிக்கலாம் " னு
கூப்பிட்டு இருக்கான்..
ஆனா அந்த பொண்ணு போகல..
கிரேட் எஸ்கேப்..!!
எனக்கு இன்னிக்கு தான் இந்த மேட்டரை
அந்த பொண்ணு சொல்லுச்சு..
உடனே அந்த பன்னாடை மங்குவுக்கு
போனை போட்டேன்..
பஞ்சாயத்து பண்ணோனும்ல....
" ஏன்டா... என் ப்ரெண்ட்னு சொல்லிட்டு
என் பேரையும் சேர்த்து கெடுக்குற..? "
" வொய் டென்ஷன் மச்சி..? "
" போன வாரம்... வடபழனிக்கு வா..
கல்யாணம் பண்ணிக்கலாம்னு அந்த
பொண்ணை கூப்பிட்டியாமாம்.. "
" ஐய்யயோ..!! "
" நடிக்காதேடா..!! நீ சொல்லி இருப்பே..! "
" அதில்ல மச்சி... போன வாரம் வடபழனில
நின்னுட்டு இருந்த ஒரு பொண்ணுக்கு
தாலி கட்டி கல்யாணம் பண்ணி, ஒரு வாரம்
குடும்பம் நடத்திட்டேனே... அப்ப அது.....
இந்த பொண்ணு இல்லியா..?!! "
" ஞே..!!! "
# ஐயோ.... ராமா... என்னை ஏன் இந்த மாதிரி
பக்கிங்க கூட எல்லாம் கூட்டு சேர வெக்கிற..?!!

இந்த புள்ள கிரவுண்ட்க்குள்ள வந்தா..
உன்னால ரன்னே எடுக்க முடியல..
வாழ்க்கைக்குள்ள வந்தா...?!
எதுக்கும் நல்லா யோசிடா கோலி..
# பத்த வெச்சிட்டியே பரட்டை மொமெண்ட்..

Ind Vs Aus World Cup 2015 - Semi

கண்ணை தொறந்துட்டு அடிக்கறவனே
இப்படி அடிக்கறானே...
அவன் வந்தா... 
கண்ணை மூடிட்டு அடிப்பானே...
அவ்வ்வ்வ்...!
# மேக்ஸ்வெல்.

===========================================

என்னடா டார்கெட் ஃபிக்ஸ் பண்றீங்க....
ஒரு ஓவர்ல ஒரு பவுண்டரி.,
மூனு சிங்கில்ஸ்,
ரெண்டு டாட் பால்...
நடு நடுவுல சிக்ஸ் வேற அடிப்போம்..
அப்படி பாத்தா.... 47 ஓவர்ல அடிச்சிடுவோமே..!!!
# Ind Vs Aus
# கொஞ்சம் ஓவராத் தான் போறோமோ.?!!

============================================

தவான் 45 ரன்ல அவுட் ஆகிட்டானு
குதிக்கறானுங்க...
ஆளுக்கு 45 ரன் எடுத்தா... நாங்க 450 ரன் 
எடுத்துடுவோம்டா வெண்ணைகளா..!!!

==============================================

தோனிகிட்ட...
" தல... நேத்து நைட் டீம் மீட்டிங்ல
கேம் ப்ளான் பத்தி டிஸ்கஸ் பண்ணிட்டு
இருக்கோம்னு சொன்னீங்க.. அப்புறம் 
ஏன் இப்டி சொதப்புது..?! "
" நாங்க பைனல்ஸ்ல நியூசிலாந்து கூட எப்படி
வெளையாடணும் தானே டிஸ்கஸ் பண்ணிட்டு
இருந்தோம்.. "
# வெளங்கிடும்..!!

=============================================

டியர் பிசிசிஐ..,
நீங்க ஏன் இந்த விஜய் டிவி கமெண்டரி டீமை
" அட்வைசிங் கமிட்டி " னு ஆஸ்திரேலியா
அனுப்ப கூடாது...?!
# ஐடியா குடோனா இருக்கானுங்கப்பா..
விஜய் டிவி கமெண்டரி...
" இந்த சமயத்துல தோனி போயி
பவுலர்ஸ்கிட்ட பேசறது நல்லது.. "
# அப்படியே என்ன பேசணும்னும்
சொல்லி குடுத்தீங்கன்னா... அப்படியே
சொல்லிடுவாரு...
கேள்வி : எப்போது டெல்லி சென்று
சோனியா காந்தியை சந்திக்க போகிறீர்கள்..?
குஷ்பூ : வீடு இங்கே இருக்கிறது, மக்கள் இங்கே
இருக்கிறார்கள்., இதயம் இங்கே இருக்கிறது., 
வாழக்கை இங்கே இருக்கிறது. எனினும் டெல்லியில்
வேலை நடக்கும். வரும் ஞாயிறு டெல்லி சென்று
சோனியாவை சந்திக்க உள்ளேன்...
# பார்.., கேள்வி கேட்டா...சம்பந்தா சம்பந்தம் இல்லாமல்
நீளமா பேசி முழுநேர அரசியல்வாதியாக மாறி நிக்கும்
குஷ் அக்காவை பார்...
## என்ன கொடுமை பன்னிக்குட்டி ராம்சாமி இது..?!
நீங்களும்., மங்குவும் ஒரே ஆளானு
கேக்கறாங்க...
கர்மம்.. கர்மம்..!
எங்கடா... " விஷம் " - னு எழுதி 
எலும்புக்கூடு படம் போட்டு இருக்குமே.. 
அந்த பாட்டில்..?

இன்னிக்கே... மங்கு சாப்பாட்ல கலந்துட 
வேண்டியது தான்..

ஹா., ஹா., ஹா... ( வில்லன் சிரிப்பு )

டக்லஸ் லீவீஸ் - PS


வேர்ல்ட் கப் யார் வின் பண்ணுவா.?
யார் எவ்ளோ ரன் அடிப்பா.?
யார் மேன் ஆப் தி மேட்ச்.?
எல்லாமே புக்கிங்க ஃபிக்ஸ் பண்ணிட்டாங்களாம்.
ஆனா.. சுத்த லூசு புக்கிகளா இருப்பானுங்க
போல....
எல்லா டீடெய்ல்சையும் வாட்ஸ் அப்ல
ஷேர் பண்ணிட்டு இருக்கானுங்க...
" உலகம் உருண்டை.,
பெருமாள் பெரிய ஆளு..!! "
- பாபா வெங்கீஷ்..
" ஒண்ணு குடுக்கட்டுமா..? "
" என்ன..?! "
" போன்ல என்ன குடுக்க முடியும்..?! "
# போன்ல மிஸ்டு கால் தான் குடுக்க
முடியும்..!! இதுக்கு போயி....
smile emoticon
கோயில்ல....
" ஏங்க... அங்கே எங்க நிக்கறீங்க..?
இந்த க்யூல வந்து நில்லுங்க... "
" இந்த க்யூலதான் கூட்டம் கம்மியா
இருக்கு.. "
" அது பிரசாத க்யூங்க... "
" ஹி., ஹி., ஹி.. தெரியும்.. "
"ஆனா பிரசாதம் ஃப்ரீ கிடையாது,
காசு குடுக்கனும்."
"அப்படியா..? நமக்கு சாமி தரிசனம்
தான் முக்கியம். நான் அந்த க்யூவுக்கே வர்றேன்"
smile emoticon smile emoticon

Ind Vs Bangladesh

" கவலைப்படாதே மச்சி... தோனி வந்து
அடிப்பாப்ல... "
" யாரை.. கோலியையும், தவானையுமா..?!! "
# Ind vs Bangladesh

============================================

" அவங்க பவுலர்ஸே இப்படி பவுலிங்
பண்றாங்களே.. நம்ம பவுலர்ஸ் எப்டி
கலக்குவாங்க.. "
" அது சரி மச்சி. ஆனா இதை சொல்லும் 
போது ஏன் உன் கண் கலங்குது..? "
" சே., சே.. கண்ணு வேக்குது.."
# Ind Vs Bangladesh

=============================================

ஐ மழை..!!
இனிமே டக்லஸ் லீவீஸ் தான்...
நாம 38 ஓவர்ல 186 ரன்..
உங்களுக்கு டார்கெட் 455 ( 13 ஓவர் )
# முடிஞ்சா அடிச்சி ஜெயிச்சிக்கோங்கடா...

=============================================புதுசா கண்ணாடி போட்டு இருக்கேன்..
அதை நம்ம மக்களுக்கு காட்லாமேன்னு
என் ப்ரெண்ட் சுரேஷ் மெடிக்கல் ஷாப்
போனேன்..
அங்கே இன்னொரு ப்ரெண்ட் சரவணனும்
இருந்தான்..
என்னை புது கெட்டப்ல பாத்ததும்
சரவணன் சொன்னான்..
" டேய் சுரேஷூ... இங்கே பார்ரா..
நம்ம வெங்கி கண்ணாடி போட்டதும்
செம அழகாகிட்டான்.. "
" அதுக்கு காரணம் அவன் கண்ணாடி
போட்டிருக்கறதில்ல...!! "
" பின்ன..?!! "
" நீ கண்ணாடி போடாம இருக்கறது..!! "
# அட பிக்காலி பசங்களா..!!
வேணாம்...,
வேணா.....ம்
வலிக்குது...
அழுதுடுவேன்.....


smile emoticon

" நான் கட்டிக்கிட்டா எங்க
மங்கு மாமாவை தான் கட்டிப்பேன்... "
" ஹி., ஹி., ஹி... இதே தான்
போன வாரம் அந்த பொண்ணும் 
சொல்லுச்சு.... "
" எவ அவ..?!! "
# மங்கு..... உனக்கு சங்கு...!!

Sunday, March 15, 2015

காலைல மங்கு என்கிட்ட...
" என்னா மச்சி இது அநியாயமா இருக்கு..?! "
" இங்கே எல்லாமே அநியாயம் தான்., 
நீ எதை சொல்ற..?! "
" பெட்ரோல் வெலைய இப்படி ஏத்திட்டாங்களே..
அதை சொன்னேன்.. "
" ஓகே.., இத பத்தி நான் சட்டசபைல
பேசி வெலையை கம்மி பண்ணி
தர சொல்றேன்.."
" என்னாது நீ பேசறியா..?!! அதெப்படி முடியும்..?!!
நீ சொன்னா எவன் கேப்பான்..?! "
" தெரியுதுல்ல., தெரியுதுல்ல.. அப்புறம்
ஏன்டா நாயே என்கிட்ட வந்து பொலம்பிக்கிட்டு
இருக்கே.?! ஓடி போயிடு..!! "
ப்ரெண்ட்ஸ் பர்த்டே அன்னிக்கு
விஷ் பண்ண மறந்து போயி.,
அடுத்த நாள் கூப்பிட்டு விஷ் பண்ணினா..
நல்லா வாய்க்கு வந்த மாதிரி திட்டுவானுங்க..
அதனால நான் இந்த மாதிரி சிட்சுவேஷன்ல
என்ன பண்ணுவேன்னா...
அடுத்த நாள் போன் பண்ணி...
" என்ன மச்சி.. நேத்தே போன் பண்ணினேன்..
Not Reachable-னு வந்திச்சுனு " ஒரு பிட்
போட்டுடுவேன்....
அவனுங்களும்..
" அப்படியா..? Not Reachable-ஆ..? "
கொழப்பத்துல திட்ட மாட்டானுங்க...
நேத்து அப்படித்தான்..
என் ப்ரெண்ட் விமல்க்கு பர்த்டே...
மறந்து போச்சு...
இன்னிக்கு கூப்பிட்டு...
" என்ன மச்சி.. நேத்தே போன் பண்ணினேன்..
Not Reachable-னு வந்திச்சுனு " சொன்னேன்..
செமையா திட்றான்..
" ஏன்டா..? ஏன்..? "
" அட கூறுகெட்ட குக்கரு... நீ போன்
பண்ணியிருக்கறது லேண்ட் லைனுக்கு..!! "
# லேண்ட் லைன்ல Not Reachable வராதா..?!!
என்னடா கவர்மெண்ட்டு...?!!!

அதென்ன எல்லோரும்..
" Anniversary-க்கு என்ன கிப்ட் உன் Wife-க்கு
வாங்கி குடுத்தேன்னே கேக்குறீங்க..?!! "
" ஏன் என்ன கிப்ட் உன் Wife வாங்கி
குடுத்தாங்கனு " கேக்க மாட்டீங்களா..?!!
இன்னிக்கு எனக்கும் தாங்க Anniversary..
( டின்னர் முடித்துவிட்டு வந்து... )
போராடுவோம் போராடுவோம்..!!

Anniversary Cartoon


Tuesday, March 10, 2015

பேசாம வேர்ல்ட் கப் யார் ஜெயிக்க 
போறானு ஸ்டார் ஸ்போர்ட்ஸ்காரனுக்கு 
ஒரு போன் பண்ணி கேட்டுடலாமா..?
.
.
.
.
எப்படியும் வெளம்பரம் எடுத்து ரெடியா
வெச்சிருப்பான்...

நேத்து என் ப்ரெண்ட் லேகா போன்
பண்ணியிருந்தாங்க... அப்ப...
" வெங்கட்.. , என் ப்ரெண்ட் உங்க கூட
பேசணும்னு சொல்றா.. இன்ட்ரோ பண்ணி வெக்கட்டுமா..? "
" வேண்டாங்க.. அப்புறம் ஃபீல் பன்ணுவீங்க..!! "
" எதுக்கு..? "
" நான் உங்களை பத்தி எதுனா தப்பு தப்பா
சொல்லிட்டா.. உங்க ப்ரெண்ஷிப் கெட்டுடும்..!! "
" சே.., சே.. என் ப்ரெண்ட் அதெல்லாம்
நம்ப மாட்டா... "
" வேணாங்க... சொன்னா கேளுங்க.. "
" நீங்க வேணா என்னை பத்தி சொல்லி
பாருங்க.. சே., சே., லேகா அப்படி இல்லைனு
தான் சொல்லுவா....!! "
" சரி போனை ஸ்பீக்கர்ல போட்டு குடுங்க..!! "
" ஹாய்.. மீ வெங்கட்.. "
" ஹாய்... நான் லேகா ப்ரெண்ட் ஆனந்தி..!! "
" இந்த லேகா பொண்ணு ரொம்ப வாய்ங்க..! "
" சே., சே., லேகா அப்படி இல்லைங்க..!! "
( ஓ.. டிரைனிங்கா..?!!! )
" லேகா ரொம்ப புத்திசாலிங்க....! "
" சே., சே., லேகா அப்படி இல்லைங்க..!! "
" லேகா ரொம்ப அமைதிங்க....! "
" சே., சே., லேகா அப்படி இல்லைங்க..!! "
" ஏய்.. என்னடி அவரு புத்திசாலி, அமைதினு
சொல்றாரு.. நீ இல்லன்னு சொல்றே..?!! "
( டிஷ்ஷூம்.. டிஷ்ஷூம்..!!! )
ஹா., ஹா., ஹா...!!!
நான் தான் அப்பவே சொன்னேன்ல..!!
( நாராயணா.. நாராயணா..!! )
" எதை கேட்டாலும்
வெட்கத்தையே
தருகிறாயே..
வெட்கத்தை கேட்டால்
என்ன தருவாய்..?!! "
- தபூ சங்கர்
========================
" எதை கேட்டாலும்
செருப்பையே
காட்டுகிறாயே..
செருப்பை கேட்டால்..
என்ன காட்டுவாய்..?!! "
- மங்குனி அமைச்சர்
( கவித..!!! கவித..!!! )
வேர்ல்ட் கப்ல மேட்ச் பிக்ஸிங்
நடந்திருக்குமோனு சந்தேகம் வந்தா...
மொதல்ல மாட்ட போறது...
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
ஸ்டார் ஸ்போர்ட்ஸ்காரன் தான்..
# மோக்கா.. மோக்கா...!!!
பவுலர் ரன் அப்-ஐ மிஸ் பண்ணிட்டு
பால் போடாம திரும்பி போனா...
விஜய் டிவி கமெண்டரில சொல்றானுவ...
" இது கூட எதோ கேம் ப்ளானா தான்
இருக்கும்னு "
# உங்க அறிவை கண்டு நான் வியக்கேன்...
என் பத்து மெயிலுக்கு
நீ அனுப்புவதோ
ஓரே ஒரு பதில் மெயில்....
அதிலும் எழுதியிருக்கிறாய்..
" இனிமே மெயில் அனுப்பாதே..!! "
- வெங்கூ
இது எந்த க்ரூப்ல இருந்து வந்தது..?!
இதை இப்ப நாம எந்த க்ரூப்புக்கு
பார்வேர்ட் பண்ணனும்..?!!.
ஒரே குழப்பமா இருக்கே..
சே என்ன வாழ்க்கைடா இது..?!!
# Whatsapp

Tuesday, March 3, 2015


" உங்கள கலாய்ச்சவங்களுக்கு எல்லாம்
உங்களை சப்போர்ட் பண்ணி நம்ம கணேஸ்
கமெண்ட் போட்டு இருக்காப்ல.. அவருக்கு
எவ்ளோ பாஸ் பேமண்ட் குடுக்க போறீங்க..?!! "
" போன வாரம் நம்மள சப்போர்ட் பண்ணி
கமெண்ட் போட்ட சிவாவுக்கு எவ்ளோ
குடுத்தோம்.?!! "
" ஒன்னும் குடுக்கல....!!! "
" அப்ப போன மாசம் நம்மள சப்போர்ட்
பண்ணின மங்குவுக்கு..? "
" அவருக்கும் ஒன்னும் குடுக்கல..!!! "
" அப்ப அதேதான் கணேஸுக்கும்..!! "
மங்குகிட்ட இன்னிக்கு கேட்டேன்...
" டேய்.. மரியாதையா உண்மைய
சொல்லு.. நீ பத்தாவது பெயில் தானே..?!! "
" ஆமா..!! "
" அப்புறம் எதுக்குடா அடிக்கடி
நான் MBA கோச்சிங் போனவனாக்கும்.,
நான் MBA கோச்சிங் போனவனாக்கும்னு
சொல்ற..?!! "
" ஹி., ஹி., ஹி.. அது என் தங்கச்சிக்கு
பீஸ் எவ்ளோன்னு விசாரிக்க போனேன்
மச்சி..!! "
" த்த்தூ..!!! "

" டெய்லி இவர் போஸ்டிங் படிக்கலைன்னா
எனக்கு தூக்கமே வராது... "
இந்த ஸ்கிரிப்டை...
ஒரு பொண்ணுக்கு எழுதி குடுத்து..
என் Wife-கிட்ட போன்ல பேசும் போது
மறக்காம சொல்லணும்னு 3 நாளா
டிரைனிங் குடுத்து இருந்தேன்..
" நல்லா மனப்பாடம் பண்ணிட்டேன்..
கலக்கிடறேனு " சொன்னதால...
என் Wife-கிட்ட போனை குடுத்தேன்..
அப்ப அந்த புள்ள...
" இவர் போஸ்டிங் படிச்சா...
எனக்கு தூக்கம் தூக்கமா வருதுனு "
சொல்லிடுச்சு..
# கலக்கறேன்.. கலக்கறேன்னு சொன்னியேம்மா...!!
அவ்வ்வ்..!!!!
# # நமக்கின்னும் பயிற்சி தேவையோ..?!!

நடிகர் அஜித்துக்கு ஆண் குழந்தை..
" குட்டி தல " என ரசிகர்கள் கொண்டாட்டம்..
# பொறக்கும் போது எல்லா குழந்தைக்கும்
தலை குட்டியா தானே இருக்கும்..?!!
கொழப்பறாய்ங்களே...!!!