Wednesday, September 30, 2015

பலாப்பழம் சாப்பிட்டுட்டு கோகோ- கோலா
குடிச்சா.. அது 5 பாம்பு விஷத்துக்கு சமமாம்..
அப்ப.. பாம்பு விஷத்துல இருந்து தயாரிக்கற
மருந்தை இனிமே இதுல இருந்து தயாரிங்கடே...
# ஷேர் ஆட்டோல போறதுன்னா கூட
யோசிக்கறானுங்க.. இந்த மாதிரி
கண்ட கருமத்தை ஷேர் பண்றப்ப மட்டும்
யோசிக்கவே மாட்டேங்கறானுங்க..
( ஹைய்யா... ரைமிங்..!! )

Tuesday, September 29, 2015

BSNL ஆபீஸ்ல ரீசார்ஜ் பண்ண போயிருந்தேன்...
அங்கே இருந்த பொண்ணு...
" புது ஆஃபர் வந்து இருக்கு சார்..
BSNL to BSNL நிமிஷத்துக்கு 10 பைசா..
பண்ணிக்கறீங்களா."-னு கேட்டுச்சு..
" எனக்கு BSNL வெச்சிருக்குற ப்ரெண்ட்ஸ்
யாரும் இல்ல.. உங்க நம்பர் வேணா குடுங்க"- னு
கேட்டேன்..
அந்த பொண்ணும் சிரிச்சிக்கிட்டே...
" என்னுது ஏர்செல்னு " சொல்லிடுச்சு..
# இந்த ஏர்செல்ல 10 பைசா ஆஃபர்
எதாவது இருக்கானு பார்க்கணும்..!!!
tongue emoticon tongue emoticon

Monday, September 28, 2015

காலைல 8.30 மணிக்கு என் ப்ரெண்ட் அருண்
போன் பண்ணியிருந்தான்...
ஆபீஸ்க்கு கெளம்பணும்.. லேட் ஆகுது..
இவனும் போனை வெக்கிற மாதிரி தெரியல..
" டேய்... நான் குளிக்க போறேன்..
போனை கட் பண்ணு... "
" யேய்.. நேத்து நைட் தான் மழை பெய்ஞ்சதுனு
சொன்ன.. மறுபடியும் ஏன்டா குளிக்கற..?!! "
" எருமை.. எருமை.. வை போனை..!! "

எதோ நயன்தாரா வந்தப்ப கூட்டம் கூடிடுச்சாம்...
உடனே ‪#‎நயனம்4CM‬ னு கெளம்பிட்டாய்க..
நீங்க தமன்னாவ கூட்டிட்டு வந்து பாருங்களேன்..
அப்பவும் கூட்டம் கூடி காட்றோம்..
எல்லோரும் புரோபைல் பிக்சரை
கலர் கலரா மாத்தி வெச்சி இருக்காய்ங்க...
எதாவது முக்கியமான விஷயமா இருக்குமோ..?!!
சரினு புரோபைல் பிக்சரை கலர் மாத்தி
வெச்சிருக்குற என் ப்ரெண்ட்க்கு கால் பண்ணினேன்...
" மச்சி... எதுக்குடா புரோபைல் பிக்சரை
கலர் கலரா மாத்தி வெச்சி இருக்கே..? "
" தெரியல மச்சி.. எல்லோரும் மாத்தி இருந்தாங்க..
நானும் மாத்திட்டேன்..."
# சீக்ரெட் ஆப் பல " கலர் புரோபைல் பிக்சர்..!! "

இந்த ஆந்திரால... போலீஸ்ங்கிற கான்சப்டே
இல்லனு நெனைக்கிறேன்...
கேங்ஸ்டர் படத்துல எல்லாம் கடைசில கூட
போலீஸ் வர மாட்டேங்குது...!!

டிஸ்கி : இந்த புரட்டாசி மாசம்., விரதம் எல்லாம்
எங்களுக்கு இல்ல..
சேலம்ல ஒரு மெஸ்ல... மட்டன், சிக்கன்
எல்லாம் சூப்பரா இருக்குனு என் சகலை 
சொன்னாரு..
அங்கே சாப்பிட போகணும்னா.. காலைல 11-க்குள்ள
போன் பண்ணி சொல்லிடணும்..
சரினு இன்னிக்கு ப்ளான் பண்ணிட்டோம்..
என் சகலை போன் பண்ணி சொல்லிட்டாரு...
சரியா 1 மணிக்கு மெஸ்ல இருந்தோம்..
அங்கே ஒரு பொண்ணு இருந்தது..
காலேஜ் படிக்கும்னு நெனக்கிறேன்...
" சிக்கன் ரெடி ஆகிட்டு இருக்கு ஒரு 10 நிமிஷம்
வெயிட் பண்ணுங்க"-னு சொல்லிட்டு போச்சு...
கொஞ்ச நேரத்துல இன்னும் 10 பேர் வந்துட்டாங்க..
சாப்பாடு, மட்டன், சிக்கன் எல்லாம் நல்லா இருந்தது..
பில் குடுத்துட்டு வரும்போது.. விசிட்டிங் கார்ட்
குடுத்தாங்க... நான் ஒண்ணு வாங்கிட்டேன்..
அதுல 4 மொபைல் நம்பர் இருந்தது..
உடனே நான் என் சகலைகிட்ட கேட்டேன்..
" சகலை.. உங்ககிட்ட இந்த எல்லா நம்பரும் இருக்கா..?! "
" இல்ல... ஒரு நம்பர் தான் இருக்கு.. "
" அப்ப மத்த 3 நம்பரையும் நோட் பண்ணுங்க... இந்தாங்க.. "
" வேணாம் சகலை... "
" ஏன்...?!! "
" இந்த நம்பர்ல பண்ணினா தான் அந்த பொண்ணு
எடுத்து பேசுது...! "
( நான் அப்படியே ஒரு நிமிஷம் ஷாக் ஆகிட்டேன்...
அடப்பாவி மனுஷா...!! )
உடனே நான் என் சகலைகிட்ட...
" சகலை.... இந்த நாலு நம்பர்ல எது அந்த நம்பரு..?!!
ஹி., ஹி., ஹி.. "
டிஸ்கி : தப்பா நினைக்க கூடாது.. அந்த நம்பரை
விட்டுட்டு மத்த மூனு நம்பர்க்கு போன் பண்ணுவோமாக்கும்...!!!

AirTel 4G லைப் டைம் பில் ஃப்ரீ - PS


" ஓ... கை நீட்டி அடிக்கற அளவு ஆகிப்போச்சா..?!
ஏ... ஆணாதிக்க சமூகமே...!!! "
" அடிக்கலிங்க மேடம்... தடுத்தேன்..."
" ஓ... அடிக்கறத தடுக்கற அளவு ஆகிப்போச்சா..?!
ஏ... ஆணாதிக்க சமூகமே...!!! "
# வெளங்கிரும்..!!!
இன்னிக்கி என் தங்கச்சிக்கு பிறந்தநாள்..
" இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சகோ "-னு
சொன்னேனா....
முறைச்சிட்டு...
" ஃபேஸ்புக்ல இருந்து எந்திரிச்சு வந்தியா எரும..
ஓடிபோயிடு "-னு திட்டுது..
நான் ஹால்ல உக்காந்து இருந்தேன்..
கிச்சன்ல என் Wife-ம், பையனும் பேசிட்டு
இருந்தது எனக்கு கேட்டது...
" அம்மா... என் சைன்ஸ் புக்கை பாத்தியா.?! "
" நான் பாக்கலியே.. எங்கே வெச்சே..?! "
" டிவி மேல தான் வெச்சிருந்தேன்.. "
" அப்பாவ கேட்டியா..? "
" இல்லியே... "
" அவர் தான் எதோ சைன்ஸ் பிக்சன் கதை
எழுதணும்னு சொல்லிட்டு இருந்தாரு... போயி கேளு... "
அடப்பாவிகளா... என்னய பாத்தா..
3rd Std சைன்ஸ் புக்கை வெச்சி கதை
எழுதற மாதிரியா தெரியுது..?!! அதுவும்
அது இங்கிலீஸ்ல வேற இருக்கும்...?!!!
( மைண்ட் வாய்ஸ்.... )
ஆஹா... நம்மள 610 பேரு ஃபாலோ பண்றாங்களா...?!!!
அப்ப இனிமே சூதானமா இருக்கோணும்..
தப்பி தவறி கூட முட்டு சந்து பக்கம்
போயிடாதேடா வெங்கி...!!!
smile emoticon

" 4G நெட்வொர்க் சார்... செம்ம ஸ்பீடு..,
அன்லிமிடெட் கால்ஸ்., அன்லிமிடெட் டேட்டா.,
அன்லிமிடேட் டவுன்லோட்., அன்லிமிடெட் SMS... "
" வாவ்... இதை ஆக்டிவேட் பண்ண என்ன 
பண்ணனும்..?! "
" வெரி சிம்பிள் சார்.. வீட்டு பத்திரம்.,
நில பத்திரம் இருந்தா எடுத்துட்டு வாங்க...
உடனே ஆக்டிவேஷன் பண்ணிடலாம்.. "

Monday, September 21, 2015

" குட்டி.. எக்ஸாம் எப்படிடா எழுதினே..? "
" சூப்பரா எழுதினேன்.. "
" எத்தனை மார்க் வரும்..?! "
" 52..!! "
" டேய்.. எக்ஸாமே 50 மார்க்குக்கு தானேடா.. "
" 2 மார்க் ஃபார் குட் ஹேண்ட் ரைட்டிங்..! "
# தட் " ஙே " மொமெண்ட்..!!

OLAY - காத்ரீனா - PS


கவிதை எழுதறது ரொம்ப ஈஸி...
ஆனா...
.
.
.
.
.
.
அது கவிதைனு மத்தவங்கள
நம்ப வெக்கிறது தான் ரொம்ப கஷ்டம்..!!
smile emoticon

Saturday, September 19, 2015

நேத்து வினாயகர் சதுர்த்தி லீவ்..
என் சின்னப்பையன் கோகுல் ( 3rd Std )
காலைல இருந்து புக் எடுத்து வெச்சி
படிக்கவேயில்ல..
அடுத்த நாள் எக்ஸாம் வேற இருக்கு...
எனக்கு ஒரே டென்ஷனா இருந்தது...
நைட் 9 மணி...
" டேய் கண்ணா.. வாடா கொஞ்சமாச்சும்
படிக்கலாம் "
" சாமி ஊர்வலம் வருதுப்பா.. பாத்துட்டு
வரேன்..! "
" இன்னும் நீ படிக்கவே இல்லடா... நாளைக்கு
எக்ஸாம்ல என்னடா பண்ணுவே..!! "
" எக்ஸாம்ல ஜீரோ மார்க் எடுப்பேன்..
கல்யாணமே பண்ணிக்க மாட்டேன்...
ஹேப்பியா இருப்பேன்..! "
ஆங்...!!! கல்யாணம் பண்ணிக்கலன்னா..
ஹேப்பியா இருக்கலாம்னு இவனுக்கு யாரு
சொல்லி இருப்பானு யோசிச்சிட்டே...
பின்னால திரும்பினேனா...
" ஐயோ.. நிர்மலா.. நான் ஒன்னும் சொல்லல..
அவனே... "
# கதம் கதம்..!!!
" பசங்க ரிக்வெஸ்ட் குடுத்தா பென்டிங் வெச்சிடறீங்களாம்...
பொண்ணுங்க ரிக்வெஸ்ட் குடுத்தா.. உடனே அக்சப்ட் 
பண்ணிடறீங்களாம்.. ஏன் பாஸ்..? "

" ஒரு போராளிய பாத்து கேக்கற கேள்வியா இது..?!
போ... தூரமா போயி வெளையாடு போ..! "
# நல்லா கேக்கறாங்கய்யா டீடெய்லு..!!
tongue emoticon tongue emoticon
" நம்ம படம் சூப்பர் ஹிட்டாக ஒரு ஐடியா
சொல்லுங்க.. "
" டிவி ரைட்ஸ்சை சன் டிவிக்கு குடுத்துடுங்க... "
# திரைக்கு வந்து சில வாரங்களேயான
" சூப்பர் ஹிட் " திரைப்படம்.. உங்கள் சன் டிவியில்...
நைட் 7 மணி..
எங்க ஊர் பள்ளிவாசல்ல தாயத்து
கட்டுவாங்க..
ஒரு தாயத்து வாங்கணும்னு போயி
இருந்தேன்..
கொஞ்சம் கூட்டமா இருந்தது.. சரினு
போயி க்யூல நின்னுட்டேன்..
கொஞ்ச நேரத்துல என் ப்ரெண்ட் ரமேஷ்கிட்ட
இருந்து போன்..
" என்னடா.. எங்க ஏரியாவுக்கு வந்து இருக்கே..? "
" தாயத்து வாங்கலாம்னு.. ஆமா.. நீ எங்கடா
இருக்கே..?! "
" இங்கே பார்.. அங்கே பார்னு " சொன்னான்...
நானும் சுத்தி சுத்தி பாத்தேன்... எங்கேனு தெரியல...
" மச்சி.. எங்கே இருக்கேனு தெரியலடா.."
" கண்ணு டொக்கு ஆகிடுச்சா..?! "
" சே.. சே.. இருட்டா இருக்குல்ல.. அதான்.. "
" அதே இருட்டு தானே எனக்கும்.. நான்
உன்னை பார்க்கறேன்ல... "
" அது வேற ஒண்ணுமில்ல மச்சி..
என் தலைக்கு பின்னாடி ஒளிவட்டம்
தெரியுதுல்ல.. அதான் நீ ஈஸியா கண்டுபிடிச்சிட்டே... "
" டமால்...!! "
( போனை போட்டு உடைச்சிட்டான் போல... 
ஹி., ஹி., ஹி..!! )
இந்த " டோலக்பூர் " இந்தியால தானே
இருக்கு..?!!
அப்ப பாகிஸ்தான் கூட War வந்தாக்கூட
கவலைப்பட தேவையில்ல..
சோட்டா பீம் பாத்துப்பான்..!!
இன்னிக்கி என் லேப்டாப் ரொம்ப ஸ்லோவா
இருந்தது.. ஒருவேளை வைரஸ் எதுனா
இருக்குமோ..?!!
என் ப்ரெண்ட் கார்த்திக்கு போனை போட்டு 
சொன்னேன்..
" கொண்டுவா மச்சி.. ஆன்டி-வைரஸ் அப்டேட்
பண்ணி தரேன்"-னு சொன்னான்..
சரினு லேப்டாப்பை Bag-ல போட்டு
பின்னாடி மாட்டிட்டு பைக்ல போனேனா...
கடையில உக்காந்திருந்த என் ப்ரெண்ட் சுரேஷ்
என்னை பாத்து ஒரு நிமிஷம் ஜெர்க் ஆகிட்டான்..
பின்ன.. நான் சாதாரணமாவே சாகித் கபூர்
கணக்கா இருப்பேன்..
இப்ப லேப்டாப் Bag வேற பின்னாடி
மாட்டி இருக்கேனா...
லேப்டாப் மாட்டின சாகித் கபூர் மாதிரியே
இருந்தேன்.. ஹி., ஹி.,ஹி..!!
" என்னடா.. Bag-ஐ மாட்டிட்டு எங்கே கெளம்பிட்டே..? "
" ஆன்டி-வைரஸ் அப்டேட் பண்ணன்னு.. "
சொல்லிட்டு நான் கெளம்பிட்டேன்..
கார்த்தி வீட்ல உக்காந்து இருக்கேன்..
என் Wife-கிட்ட இருந்து போன்...
" யாருங்க அது..? "
" என்ன யாரு..? "
" இல்ல.. எதோ ஆன்ட்டிய பாக்க போறேன்னு
சுரேஷ் அண்ணாகிட்ட சொன்னீங்களாம்..
அதான் யாருனு கேட்டேன்.. "
# அடப்பாவி..!! குடும்பத்துல கும்மி அடிச்சிட்டானே..!!

Thursday, September 10, 2015

இப்பல்லாம் ஊருக்குள்ள எங்கே போனாலும்
நாலு பேராச்சும் பாத்து சிரிக்கறாங்க..
அவ்ளோ ஃபேமஸ் ஆயிட்டோமா.,
இல்ல லூஸ் ஆயிட்டோமா.. 
அதான் தெரியல...

குழந்தைக்கு உடம்பு சரியில்லாத போது - கவிதை


இன்னிக்கு " டீச்சர்.. டீச்சர்னு " உருகி உருகி
பதிவு போடற பயலுக எல்லாம்...
படிக்கிற காலத்துல...
" டீச்சருக்கு உடம்பு சரியில்லையாம்..
இன்னிக்கு லீவாம்னு " சொன்னப்ப
சந்தோஷப்பட்ட பயலுக தான்..!!
# டீச்சர்... இவனுங்கள நம்பாதீங்க..!!
என்னோட பழைய டைரி ஒண்ணு
ரொம்ப நாள் கழிச்சு இன்னிக்கு கைல
கிடைச்சது...
டைரி முழுக்க காதல் ரசம்., காதல் மோர்., 
காதல் சாம்பார் சொட்ட சொட்ட கவிதையா
எழுதி தள்ளியிருந்தேன்..
அதை பாத்துட்டு என் Wife கேட்டாங்க..
" இதெல்லாம் யாருக்காக எழுதினீங்க..? "
" எல்லாம் உனக்கு குடுக்கலாம்னு தான்..
ஆனா... நம்ம கல்யாணத்தப்ப இந்த டைரி
காணாம போயிடுச்சு... "
அப்படியே ஓரக்கண்ணுல பாத்துட்டு
சொன்னா....
" நல்லவேளை காணாம போச்சு....!! "
# ஙே..!!
" நிர்மலா " என்பது
தேவதைகளின் பெயர் ..
smile emoticon" தனி ஒருவன் " படத்துல அரவிந்த்சாமி
" ஆன்ட்டி ஹீரோவா " நடிச்சி இருக்கார்னு
சொன்னாங்க..
படத்துல பாத்தா..
இந்த பொண்ணு தான் ஜோடியா நடிச்சி இருக்கு..
இந்த புள்ளய பாத்தா.. " ஆன்ட்டி " மாதிரியா
தெரியுது..?!!!
# ஒரே கன்பீஷனா இருக்கே..!!

தனி ஒருவன் வாட்சிங்


படம் பாத்துட்டு இருக்கும் போது...
" இந்த படத்துல விஜய் நடிச்சி இருந்தா..
இன்னும் செமையா இருந்து இருக்கும்னு "
என் Wife சொன்னாங்க...
நான் டக்னு கேட்டேன்...
" ஏன் அரவிந்த்சாமியே நல்லா தானே
நடிச்சி இருக்காரு..?! "
# Wife முறைச்சிங்....

தனி ஒருவன் காப்பி - PS


புரட்சி திலகம் சரத் - PS