Wednesday, December 30, 2015

துபாய்ல எனக்கு ரொம்ப பிடிச்ச விஷயம்...
நாம ரோடு கிராஸ் பண்ண வந்து நின்னா..
வர்ற கார் எல்லாம் ஒரு 10 அடி முன்னாலயே
நிறுத்திக்கறாங்க., நாம கிராஸ் பண்ணினப்புறம் தான் 
அவங்க போறாங்க...
ரியலி இம்ப்ரஸ்ட்.. smile emoticon
# துபாய் அலப்பரைஸ் - 5

ஹலோ... நான் அல்ரெடி துபாய்ல தான் இருக்கேன்... tongue emoticon 

:) :) tongue emoticon

" ஹேய்.. பூஜா... "
" டேய்... அக்கானு கூப்பிடறா.. "
" நீ மொதல்ல என்னை அண்ணானு கூப்பிடு... "
" டேய்... நான் உன்னை விட 2 வருஷம் பெரியவடா.. "
" நான் என் தங்கச்சிய விட 5 வருஷம் பெரியவன்...
5 பெருசா..? 2 பெருசா..?! "
# கோகுல் ராக்ஸ்... பூஜா ஷாக்ஸ்..!
## துபாய் அலப்பரைஸ் - 4

Immigration கவுண்ட்டர்ல க்யூல நின்னுட்டு இருந்தேன்....
ஒரு பொண்ணு ஓடி வந்து...
" நீங்க ஷாகித் கபூரானு..? " கேட்டுச்சு..
ஹி. ஹி., ஹி..!!
ஆமா.. இப்ப எதுக்கு மொறைக்கறீங்க..??!
போன வாரம் ஒரு பொண்ணு ஷாகித் கபூர்கிட்ட போயி...
" நீங்க வெங்கட்டா.? "-னு கேட்டு இருக்கு தெரியுமா..?!!
# துபாய் அலப்பரைஸ் - 3
" மச்சி நாளைக்கு தானே நீ துபாய்க்கு போறே..! "
" ஆமா...!! "
" நான் மத்தவங்க மாதிரி அது வாங்கிட்டு வா.. 
இத வாங்கிட்டு வானு சொல்ல மாட்டேன்.. "
" சரி..!! "
" அங்க எது சீப்பா கெடைக்குதோ.. அத வாங்கிட்டு வா... "
" அங்க டீசல்தான் சீப்பா கெடைக்குதாம்...
10 லிட்டர் வாங்கிட்டு வரவா..?!! "
# கொய்யாலே..... ஊருக்கு போறேனு சொன்னா...
" எனக்கு என்ன வாங்கிட்டு வர்றே"-னு
கேக்கறானுங்களே தவிர ஒருத்தனாவது
கையில 10,000 ரூபா குடுத்து என்ஜாய்
பண்ணிட்டு வானு சொல்றானுங்களா...
## துபாய் அலப்பரைஸ் - 2
/// பரீட்சையில் பெயிலானதால் பெற்றோர் உட்பட 
கண்ணில் பட்ட பலரை வாளால் வெட்டிய வாலிபர் 
- செய்தி... //

இப்ப பசங்க ஏன் இப்டி இருக்காங்க...?!
இன்னிக்கு நான் இம்புட்டு பெரிய அறிவாளியா(?) 
இருக்கேன்னா... அதுக்கு காரணமே ஒவ்வொரு 
கிளாஸ்லயும் ரெண்டு வருஷம் ரிசர்ச் பண்ணி.. 
ரிசர்ச் பண்ணி படிச்ச படிப்பு தான் காரணம்...
tongue emoticon tongue emoticon
துபாய்ல போயி 25,000 ரூபாய்க்கு பர்சேஸ்
பண்ணலாம்னு ஐடியா வெச்சி இருந்தேன்...
துபாய் போறதுக்குனு சொல்லி இங்கயே
30,000 ரூபாய்க்கு பர்சேஸ் முடிச்சிட்டாங்க என் Wife...
# அவ்வ்வ்வ்...!!!
## துபாய் அலப்பரைஸ் - 1

Monday, December 28, 2015

" MCA-ல ப்ராஜெக்ட் பண்றது அவ்ளோ கஷ்டமா.?! "
" இல்லியா பின்னே... செம கஷ்டம்..!! "
" ஆனா.. நீ காசு குடுத்துல்ல வாங்கினே..?! "
" ஹி., ஹி.,ஹி.. ப்ராஜெட் கூட செஞ்சிடலாம் மச்சி..
ஆனா செஞ்ச ப்ராஜெக்ட்டை காசு குடுத்து வாங்கறது
எவ்ளோ கஷ்டம் தெரியுமா..?!! "
# த்த்தூ..!!

Monday, December 21, 2015

இளையராஜா Vs ரிப்போர்ட்டர்..



" என்னா தல சென்சேஷனா ஒரு நியூஸும் சிக்கல..! "
" தம்பி.. சென்சேஷன் நியூஸ்ங்கறது தானா
வரலைன்னா... நாமா கிரியேட் பண்ணனும்..!! "
" எப்படி தல..?!! "
" இளையராஜாகிட்ட போயி 'பீப்' சாங்கை பத்தி
உங்க கருத்து என்னானு கேளு.. "
" அவரு பதில் சொல்லாம அமைதியா இருந்துட்டா..? "
" நீங்க 'பீப்' சாங்கை ஆதரிக்கறீங்களானு கேள்விய
மாத்தி கேளு.. "
" இப்பவும் அமைதியா இருந்துட்டா..? "
" மௌனம் சம்மதம்னு எழுதிக்கவானு கேளு..!! "
" இதுக்கும் அவர் ஒன்னும் சொல்லலைன்னா..?!! "
" நீங்களும் இதே மாதிரி ஒரு 'பீப்' சாங் போடுவீங்களானு
கேளு..! "
" ஐய்யய்யோ... கோவத்துல அடிச்சிட்டா..?! "
" சூப்பரு... அதானே நமக்கு வேணும்..
' கோவத்தில் அத்துமீறி நிருபரை தாக்கிய இளையராஜா.. '
இந்தா கெடைச்சிடுச்சில்ல சென்சேஷன் நியூஸு...!! "
" ரைட்னே..!! "
# த்த்த்தூ....!! இந்த பொழப்புக்கு....
" என்ன இருந்தாலும் இளையராஜா அப்டி
பேசியிருக்கக் கூடாது... பொறுமையா பதில்
சொல்லியிருக்கணும்னு " ஸ்டேடஸ் போடறான்..
" அவர் இருந்த சிட்சுவேஷன் அப்படி"-னு 
கமெண்ட் போட்டா... கோவப்படறான்..
உனக்கு வந்தா மட்டும் தான் ரத்தமா..?!!
"உனக்கு அறிவிருக்கா"ன்னு கேட்டது
அவ்ளோ பெரிய கெட்ட வார்த்தையா..?!
என்னைய எல்லாம் படிக்கிற காலத்துல
தினம் எத்தனை மிஸ்ஸுங்க இப்டி 
கேப்பாங்க தெரியுமா..?!
இருக்குன்னு சொன்னா எதாவது கேள்வி
கேட்டு வெச்சிடுவாங்களோனு நானும்
இல்லைன்னு சொல்லிடுவேன்...
# ஹி., ஹி., ஹி..!!
"யாராவது Date of Birth கேட்டா சொல்லுவீங்களா..?"
"ஓ.....!"
"வருஷமும் சொல்லணும், சரியா..?"
"சொல்றத நம்பணும், ரெடியா..?"
# ஆருகிட்ட...!!
தினேஷ் ரொம்ப டென்ஷனா இருந்தான்...
" வெங்கி... மத்தியானத்துல இருந்து
எங்க பக்கத்துவீட்டு பொண்ணை காணோம்டா..! "
" என்ன படிக்குது..? "
" காலேஜ் செகண்ட் இயர்..! "
" ஓரு நிமிஷம் வெயிட் பண்ணு "-னு
சொல்லிட்டு போனை போட்டேன்...
" எங்கடா இருக்கே..?!! "
" _____________ "
" ஓ.. அப்படியா... ஒரு சின்ன மேட்டரு...
சரி நான் அப்புறமா பேசறேன்...!! "
போனை கட் பண்ணிட்டு...
" தினேஷு.. இந்நேரம் அந்த பொண்ணு வந்திருக்கும்..
நீ வேணா போன் பண்ணி கேட்டுப்பாரு..!! "
அவனும் போனை பண்ணினான்.. பொண்ணும்
வந்துடுச்சினு சொன்னாங்க..
தினேஷ்க்கு ஆச்சரியம் தாங்கல...
" எப்படிடா கரெட்டா சொன்னே..? யாருக்குடா
போனை போட்டே..?! "
" எல்லாம் நம்ம மங்குனிக்கு தான்...!! "
" மங்குனிக்கா..? அவனுக்கு எதுக்குடா..?! "
" ஊருக்குள்ள பொண்ணு காணோம்னா.. இவன்
எதாவது இழுத்துட்டு ஓடியிருந்தாதான் உண்டு..
இந்த பன்னாடையே வீட்லதான் இருக்கேனு சொல்லிச்சு..
அத வெச்சி தான் அந்த பொண்ணு ஓடியிருக்க
சான்ஸ் இல்ல... வந்துடும்னு சொன்னேன்..!! "
" அடப்பாவிகளா..!! "
பொண்ணு பேர்ல Fake ID வெச்சிருக்கறதுல
என்ன ஒரு சிக்கல்னா...
.
.
.
.
.
.
.
.
.
ஒரு பொண்ணு கூட ரிக்வெஸ்ட் குடுக்க
மாட்டேங்குது..!!
tongue emoticon tongue emoticon

பீப் சாங் - முற்போக்குவாதிகள் - PS


Monday, December 14, 2015


ஆபீஸ்ல இருந்தேன்.. Wife-கிட்ட இருந்து
போன்...
" ஏங்க.. காலைல பர்ஸ் மறந்து வெச்சிட்டு
போயிட்டீங்க... "
" அட ஆமா... எடுத்து பத்திரமா வை.. "
" எவ்ளோங்க பணம் வெச்சிருக்கீங்க..? "
" தெரியலையே..!! "
" தெரியலையா... அப்ப சரி..!! "
( ஆஹா.. ஆட்டைய போட்டுடுவா போல
இருக்கே..!! )
" ஏய் நிர்மலா.. அதுல 5000 ரூபா இருக்கும்..
பைசா குறைஞ்சாலும் உன்ன தான் கேப்பேன்..!! "
" ஹே.. அஸ்கு புஸ்கு... இதுல 2300 ரூபா தான்
இருக்கு..!! "
" ஹி., ஹி., ஹி... எப்டி உண்மைய உன் வாயாலயே
வரவழைச்சேன் பாத்தியா..?!! 2300 ரூபா எண்ணி
வெக்கணும்.."
( வெங்கி.. நீ பல ராஜதந்திரங்களை கரைத்து
குடித்திருக்கிறாயடா )
" அப்ப 2300 ரூபா எண்ணி வெச்சா போதுமா..?!!
ஹைய்யா..!! "
" ஹைய்யாவா...?!!! அவ்வ்வ்வ்...!!! "
# நமக்கின்னும் பயிற்சி தேவையோ..?!!

Sunday, December 13, 2015

சிம்பு " பீப் " சாங்



டிவில சமையல் ப்ரோகிராம் வந்தா....
அரைமணி நேரம் உக்காந்த இடத்தை விட்டு
நகராம பாக்கறாங்க..
மாங்கு மாங்குனு நோட்ஸ் எல்லாம்
எடுக்கறாங்க..
சரி சமைச்சி தருவாங்க போல இருக்குனு
நாம ஆசையா இருந்தா...
" சே... இந்த டிஷ் நல்லாவே இருக்காதுனு "
சொல்லிட்டு எந்திரிச்சு போயிடறாங்க...
# என்னம்மா இப்டி பண்றீங்களேம்மா..!!!
ஆக்சுவலி சல்மான் கான் குடிக்கவேயில்லையாம்..
.
.
.
.
.
கார் தான் குடிச்சியிருந்ததாம்..
- மும்பை ஹைகோர்ட்
" அண்ணே... நீங்க ஒரு கோடி ரூபா நன்கொடை 
குடுத்தீங்களாமாம்..?! "
" என்ன... ஒரு கோடியா..?!! "
( இருக்கும் இருக்கும்.. நமக்கு தான் நன்கொடை
குடுக்கும் போது எண்ணி பார்க்கற பழக்கமில்லையே.. )
# கர்ணனை பாக்கணும்னு ஆசைப்பட்டா..
நான் கண்ணாடி எடுத்து பாத்துப்பேன்..!!
" கமல் ஏன் பணம் தரல..,
சாப்ட்வேர் எஞ்ஜினியர் ஏன்
சலங்கை கட்டி ஆடல..
சந்தான பாரதி ஏன் ஹீரோவா நடிக்கல... "
ஃபேஸ்புக்ல போராளியா குப்பை கொட்டணும்னா...
இப்படி தான் எதாச்சும் கொளுத்தி போட்டுட்டே
இருக்கணும்..
# கமான் பாய்ஸ்..!!!
இங்கே ஒரு போஸ்ட் போட்டு.., அதை
என் Fake ID-ல இருந்து ஷேர் பண்ணினேன்..
இங்கே விட்டுட்டு... அங்கே போயி..
" சூப்பர் "-னு கமெண்ட் போட்டு வெச்சி இருக்கானுங்க...
அடேய்... உங்கள எல்லாம் எத்தனை Fake ID
வந்தாலும் திருத்த முடியாதுடா.. திருத்த முடியாது..!!!

இப்பதான் என் ப்ரெண்ட் சுரேஷ்க்கு
போன் பண்ணினேன்....
அவன் Wife போனை எடுத்து..
" போனை வெச்சிட்டு வெளியே போயிருக்கார்னு "
சொன்னாங்க...
" நம்ப முடியலையே.... அவன் அங்கே தான்
இருப்பான் கூப்பிட்டு குடுமா.. "
" இல்லண்ணா... நிஜமாவே போனை விட்டுட்டு தான்
போயி இருக்காரு..!! "
" அப்படியா... பொண்டாட்டியா விட்டுட்டு கூட போவேன்..
போனை விட்டுட்டு போக மாட்டேன்னு அடிக்கடி
சொல்வானே..!! "
" ஆ.. அப்படியா சொல்வாரு.. வரட்டும் வெச்சிக்கறேன்...!! "
# நாராயணா.. ..!!! நாராயணா..!!

ஹெய்டன் பிட்ச் ரிப்போர்ட் - IND Vs S.A - PS


சென்னை வெள்ளம் ஸ்டேடஸ்..

பிரபாஸ் ₹50 லட்சம்.,
ராம்சரண் ₹35 லட்சம்.,
அல்லு அர்ஜுன் ₹25 லட்சம்.,
மகேஷ் பாபு ₹10 லட்சம்.,
ஜூனியர் NTR ₹10 லட்சம்...
# சென்னை வெள்ள நிவாரண நிதி.
இனிமே தெலுங்கு படம் மட்டுமே பார்க்கலாம்னு இருக்கேன்...!!

======================================================

டேய்... நீங்க ஆணியே புடுங்க வேணாம்..
கண்ட கண்ட Rumours-ஐ ஷேர் / டெலிகாஸ்ட் பண்ணி 
பீதிய கிளப்பாம இருங்கடா..!!

# கடுப்பேத்தறானுங்க மை லார்ட்..!!

======================================================

நாளைக்கு சென்னைக்கு அனுப்பறதுக்காக
பிஸ்கட் , டவல், பெட்ஷீட், டார்ச் எல்லாம்
வாங்கப் போனப்ப... அங்கே இன்னும்
நிறைய பேர் இதெல்லாம் வாங்கி பேக்
பண்ணிட்டு இருந்ததை பாக்க முடிஞ்சது..
# எங்கள் மக்கள்... எங்கள் தேசம்...


எங்க பசங்க ஸ்கூல் பஸ் 8 மணிக்கு
டான்னு வந்துடும்..
ஸ்டாப்பிங்ல மொத்தம் 20 பசங்க..
அவங்கல்லாம் கரெக்ட்டா பஸ் வர்றதுக்கு
முன்னாலயே ஸ்டாப்பிங்ல வந்து நிப்பாங்க.
ஆனா எங்க பசங்க மட்டும்.. பஸ் வந்து
ஹாரன் அடிச்சிட்டே நிக்கும்...8.05-க்கு தான்
ஓடுவானுங்க..
" ஒரு 5 நிமிஷம் முன்னால ரெடி ஆகி
ஸ்டாப்பிங் போங்கடா"னு நாம சத்தம் போட்டா...
" படிக்கறப்ப நீ என்னிக்காச்சும் 5 நிமிஷம்
முன்னால ஸ்டாப்பிங் போயி நின்னு
இருக்கியா?"-னு அம்மா என்னை திட்றாங்க..
( ஓ.. லைக் ஃபாதர்... லைக் சன்ஸ்..!!
இது Manufacturing Defect..!! )
சரி.. இத வேற விதமாதான் ஹேண்டில்
பண்ணலாம்னு.....
தீபாவளி சமயத்துல பஸ் டிரைவர் கையில
500 ரூபாவை தீபாவளி போனஸா வெச்சிக்கோங்கனு
குடுத்து..
" ஏன்ணே.. 9.30 மணிக்கு தானே பிரேயர்..
இப்டி 8 மணிக்கே வந்தா... அடிச்சி பிடிச்சி
ஓடிவர வேண்டி இருக்குண்ணே.. ஒரு 10 நிமிஷம்
லேட்டா வந்தா.. பசங்க கொஞ்சம் ப்ரீயா ரெடி
ஆவாங்க"-னு அவர் காதை கடிச்சேன்...
டிரைவர் ரொம்ப நல்லவரு... இப்பல்லாம்
8.10-க்கு தான் எங்க ஸ்டாப்பிங் வர்றாரு...
ஆனா... இவனுங்க தான் 8.15-க்கு ஓடறானுங்க..
டிரைவர் முறைச்சிங்..!
# அண்ணே வணக்கம்னே..!!

ரெண்டாவது பந்தியில தான் சாப்பிட்டேன்...

இந்த நாள்....
என் வாழ்க்கை சரித்திரத்துல நோட் பண்ணி
வெக்க வேண்டிய முக்கியமான நாள்....
# இன்னிக்கு நான் ரெண்டாவது பந்தியில தான்
சாப்பிட்டேன்...
( யார்ரா அது துப்பறது..?!! )