Wednesday, August 28, 2013

" தல ", " குரு "-னு யாராச்சும் உங்களை
சொன்னா... உடனே உஷாராயிடுங்க.. 

அடி வாங்குற மாதிரி எதாவது சிட்சுவேஷன் 
வந்தா முதல் அடி உங்களுக்கு வாங்கி குடுக்கதான் 
இந்த பிட்டு....

- பாபா வெங்கீஷ்..

Monday, August 26, 2013

" என்கிட்ட மெரினா பீச் இருக்கு.. வாங்கிக்கறியா..? "னு 
என் ப்ரெண்ட் அருண் போன் பண்ணி கேட்டான்... 

" என்னை விளையாடறியா...? அப்புறம் ஏற்கனவே 
என்கிட்ட இருக்குற Hawai Beach-ஐ என்னடா 
பண்றது.? " திருப்பி கேட்டேன்..!
சூர்யா தினம் தினம் டிவில வந்து 

" உங்க மனைவியை உங்களுக்கு எவ்ளோ 
பிடிக்கும்..? இவ்ளோ.. இவ்வ்வ்ளோ.. 
இவ்வ்வ்வ்ளோ..? இப்படி பல கேள்விகளுக்கு 
தங்கம் தான் பதில்னு " அட்வைஸ் பண்றாரு...

ஆனா ஜோதிகாவுக்கு தங்கமே வாங்கி தராம
அவர் ஏமாத்திட்டு வருவது சந்தேகத்திற்கு
இடமில்லாம நீருபணமாகிறது.. அதனால்
இந்த சபை சூர்யாவை வன்மையாக கண்டிக்கிறது..

- பொதுநலன் கருதி வெளியிடுவோர்
' கோகுலத்தில் சூரியன் ' வெங்கட்
Saturday, August 24, 2013

நான் நினைக்கிறேன் வெங்காய விலை ஏறினத்துக்கும்
வெள்ளி கொலுசு விற்பனைக்கும் எதோ லிங்க்
இருக்கும்னு

( இதுவும் வெ - அதுவும் வெ )

அதனால வெள்ளி கொலுசு விக்கறதை தடை
பண்ணினா.. வெங்காய விலை தன்னால இறங்கிடும்..

( வரவர நிதி அமைச்சர் மாதிரியே சிந்திக்க
ஆரம்பிச்சிடேன்ல.. )

:)

Thursday, August 22, 2013

நான் சீக்கிரம் சைனா பாஷை கத்துகிட்டு 
சைனா இலக்கியம் படைக்கல.. என் பேரு 
ஜிங் வாங் லீ ( சைனா புனைப்பெயர் ) இல்ல... 

அக்காங்...

Wednesday, August 21, 2013

ஏன்டா எல்லா கருமாந்திரமும் ஒரே டேஸ்ட்ல
தானே இருக்கு.. அப்புறம் எதுக்குடா கலர் கலரா,
உருண்டை, சதுரம், முக்கோணம்னு வெட்டி
வெச்சி இருக்கீங்க..

# ஸ்வீட் கடையில் நிக்கும்போது கனநேரத்தில்
உதித்த சிந்தனை..!

Monday, August 19, 2013

நட்புன்னா என்னான்னு தெரியுமா உனக்கு..?
வெங்கட்னா யார்னு தெரியுமா உனக்கு..??
மங்குனி என் நண்பன்...
மங்குனி என் உயிர் நண்பன்..

அவனுக்கு எதாவது பிரச்னைன்னா...
முதல்ல அவன் என்னைத்தான் சந்தேகப்படுவான்..
ஹி., ஹி., ஹி...!!
 
ஒரு பக்கம் புரோபைல்ல கூட 
தன் போட்டோவ போடாத பொண்ணுங்க...

இன்னொரு பக்கம்.. 
மரத்துகிட்ட நின்னு போஸு
படிகட்டுல உக்காந்து போஸு
ப்ரெண்டு கூட போஸு.,
பார்க்குக்கு போனா போஸு., 
பீச்சுக்கு போனா போஸுன்னு 
இப்படி தினமும் தன் போட்டோவை 
அப்லோடு செஞ்சிட்டே இருக்கற பொண்ணுங்க...

இவிங்கள புரிஞ்சிக்கவே முடியலையே....!!!!??
காயத்ரி
Fan of மங்குனி அமைச்சர்..!
-------------------------------------------

இன்னிக்கு மதியம் மங்குனி அமைச்சரோட
காத்தாடி காயத்ரி ( பதிவில் என் பெயர் 
போடக்கூடாது என்று கெஞ்சி கேட்டுக்கொண்டதால்
" ரேகா " என்கிற இவர் பெயர் காயத்ரி என
மாற்றப்பட்டுள்ளது.. ) எனக்கு போன்
பண்ணியிருந்தாங்க..

காத்தாடின்னா சும்மா இல்லங்க...
போலார் , ஓரியண்ட் PSPO மாதிரி
சும்மா கிர்ர்ர்ர்ர்ர்னு சுத்துது நம்ம தலை..
( அவங்க பேச ஆரம்பிச்சா... )

ம்ம்.. இப்ப மேட்டர் என்னான்னா...

அவங்களோட ஆஸ்தான ப்ளாக்கர்
மங்குனி முன்னே மாதிரி டீசெண்டா
பதிவு எழுதறது இல்லையாம்.. நிறைய
கெட்ட வார்த்தைகள் பதிவுகள் இருக்காம்..

சொன்னாலும் கேக்க மாட்டேங்குறாராம்..
அதனால இவங்க இப்பல்லாம் அவர்
பதிவை லைக் பண்றதில்லையாம்...

So., நானு அவருக்கு அட்வைஸ் பண்ணி
திருத்தணுமாம்.. ரொம்ப பீலிங்கா பேசிட்டே
இருந்தாங்க..

" சரிங்க.. நான் போன் பண்ணி சொல்றேன்னு "
சொல்லிட்டு மங்குவுக்கு போனை போட்டேன்...

" ஹலோ மங்கு...! "

" சொல்லு வெங்கட்..! "

" இப்ப நீங்க பதிவு எழுதற மாதிரியே
கண்டினியூ பண்ணுங்க.. நிறைய பேருக்கு
இதான் பிடிச்சிருக்கு...! "

" ஓ.. அப்படியா..? ஓ.கே பண்ணிடுவோம்..! "

.
.
.

ஒழிந்தான் எதிரி...!!
ஹா., ஹா., ஹா... ( வில்லன் சிரிப்பு )
 Friends இல்லாம கஷ்டப்படுவாங்களேன்னு
ஒவ்வொரு பொண்ணுங்க FB அக்கவுண்ட்லயும் 
4000 - 4500 பசங்க Friends இருக்கோமே...

இந்த பெருந்தன்மை ஏன் பொண்ணுகளுக்கு 
இல்ல..?!!


ஒண்ணு 

நீ லவ் பண்ணாமயாவது இருக்கணும்., 

இல்ல 

அந்த புள்ளயை கையை புடிச்சி இழுக்காமயாவது
இருக்கணும்.,

இல்ல..

அதை போட்டோ எடுக்காமயாவது இருக்கணும்..

அதுவும் இல்ல

அதை ஃபேஸ்புக்லயாவது போடாம இருக்கணும்..

அட இதெல்லாம் கூட பரவாயில்ல..

எல்லாத்தையும் பண்ணிட்டு.., இந்த பொண்ணுங்களே
மோசம், நான் சாமியாரா போறேன்னு ஒரு சீனு
காட்டுவ பாரு...

யப்பா... இது உலகமகா நடிப்புடா சாமி...!


போன பதிவுல ஷாகித் கபூர் என் சாயல்ல 
இருக்கார்னு சொன்னதுக்கு... 

" See ur arm muscle in mirror vs Shahid Kapoor arms " 
சொல்லிபுட்டான் என் ப்ரெண்டு Manivannaraj Panneerselvam

எனக்கு வந்துச்சே கோபம்.. நானும்

" இருடா.. இதே மாதிரி ஒரு டைட்டான டி சர்ட்
போட்டு Arms-ஐ மடக்கி நானும் போட்டோ எடுத்து
காட்டறேன் " னு சவால் விட்டுடேன்..

ஆனா இப்ப....

Arms-ஐ முறுக்கினதுல டிசர்ட் கிழிஞ்சு போச்சே...!!

ஊருக்கு போயிருக்குற என் பொண்டாட்டி வந்து
பையன் டிசர்டை ஏன் கிழிச்சீங்கன்னு கேட்டா..
நான் என்ன பதிலு சொல்லுவேன்...!!

அவ்வ்வ்வ்வ்....
வீட்டுக்கு வரும் சொந்தக்காரங்ககிட்ட 
" நல்லா இருக்கீங்களா.?" நாம் கேக்கும் முன்...

" போன் இருக்கா.?"னு முந்தி கேக்கிறார்கள் 
குழந்தைகள்.
" ஊரார் ஸ்டேடஸ்க்கு லைக் போட்டால்.,
நம் ஸ்டேடஸ் தானே ஷேர் ஆகும்..!! "

- பாபா வெங்கீஷ்..
" மன்னா.. ஆபத்து.., ஆபத்து.... "

" என்னய்யா ஆபத்து... என் அக்கவுண்ட்டை 
யாராவது ஹேக் செய்து விட்டார்களா..? "

" இல்லை மன்னா.. பக்கத்து நாட்டு மன்னன் 
நம்மீது போர் தொடுக்க போகிறானாம்..
ஸ்டேடஸ் போட்டு இருக்கிறான்... "

" என்னாது போரா..? நாம் தான் அவன் போடும்
எல்லா மொக்கை ஸ்டேடசுக்கும் லைக்
போடுகிறோமே... பிறகு எதற்கய்யா போருக்கு
வருகிறான்.. "

" அவர் அந்தபுரத்தில் இருக்கும் 2 ராணிகளுக்கு
நீங்கள் ப்ரெண்ட் ரிக்வெஸ்ட் அனுப்பினீர்களாமே... "

" ப்ரெண்ட் ரிக்வெஸ்ட் அனுப்பினதுக்கெல்லாமா
போர்.. பெரிய அக்கப்போராய் அல்லவா இருக்கிறது..
அவ்வ்வ்..!! "
சாமி இருக்குன்னு சொல்றவன் பின்னாடி 
நூறு பேரு போறாங்க...

சாமி இல்லன்னு சொல்றவன் பின்னாடியும் 
நூறு பேரு போறாங்க...

ஆனா... 

நான்தான் சாமின்னு சொல்றவன் பின்னாடி 
லட்சம் பேரு போறாங்க... ம்ஹும்...!!
நேத்து...
வீட்ல புடலங்காய் பொரியல்..
எனக்கு புடலங்காய்னா அலர்ஜி..

என் Wife என்னை பாத்து..

" நல்லதெல்லாம் உங்களுக்கு பிடிக்காதே..! "

இன்னிக்கு...
பப்பாளிபழம்னா எனக்கு ரொம்ப 
பிடிக்கும்.. அதை சாப்பிட்டுட்டு இருக்கேன்...

அதை பாத்து என் Wife...

" எப்படித்தான் அந்த கருமத்தை
சாப்பிடறீங்களோ.. உவ்வ்வே...!

 " ???!?!?!!??!!?.."

# என்னாம்மா இப்டி பண்றீங்களேம்மா....!!
இந்த மிஸ்டு கால் குடுக்கற பார்டிங்க 
எங்கே போனாலும் திருந்த மாட்டாங்க..
ஜி-டாக் வந்தாலும் மிஸ்டு கால்தான் 
குடுக்கறானுவ... # " கால் மீ நவ்.. "
" நீங்க டாக்டரா.? "-னு சந்தேகமா கேக்கறாங்க...

நான் LKG-ல இருந்து டிகிரி வரைக்கும் 
லண்டன் மெடிக்கல் காலேஜ்ல தான்பா 
படிச்சேன்... சொன்னா நம்புங்க...
" இந்த கொசுத்தொல்லை தாங்க முடியல " என்று 
சொல்லும் ஒவ்வொரு முறையும் அது கொசுவை 
குறிப்பதாய் இருப்பதில்ல..

- பாபா வெங்கீஷ்..

Sunday, August 18, 2013

நீ
வாய் திறந்தால 
கவிதை., 

வாய் மூடியிருந்தால்.......
Silent கவிதை..!!

- வெங்கூ


மாதுரி தீட்சித் மேம்க்கு நான் ரொம்ப 
கடமைப்பட்டு இருக்கேன்... 

படிக்கறப்ப ஹிந்தி மிஸ்ஸை பாத்து 
ஓடி ஓளிஞ்சிட்டு இருந்தவன் நான்... 

ஆனா என்னால இன்னிக்கு ஹிந்தில
சரளமா ஒண்ணுல இருந்து பதிமூனு
வரை சொல்ல முடியும்னா.. அதுக்கு
காரணமே நம்ம மாதுரி மேம்தான்

# ஏக், தோ, தீன்......
என் பெரிய பையன் 1st Std படிக்கும் போது 
எங்க வீட்ல ரெண்டு ரோஜா செடி இருந்தது.. 

தினமும் ஒரு ரோஜா பூவை அவங்க 
பிரேமா மிஸ்க்குன்னு எடுத்துட்டு போவான்.. 

என் மனைவி கூட " ஏன்டா இந்த வேண்டாத 
வேலைன்னு " திட்டுவாங்க.. ஆனா நான் 
அவனை தட்டி கொடுப்பேன்... 

அடுத்த வருஷம் என் சின்ன பையனை
அதே ஸ்கூல்ல சேர்க்க போனப்ப...
90 சீட்க்கு கிட்டதட்ட 600 அப்ளிகேஷன்
மேல வந்து இருந்தது..

பசங்களை வேற இன்டர்வியூ வெச்சி தான்
சேர்த்திக்கிட்டாங்க..

என் சின்ன பையனோ இன்டர்வியூல வாயே
திறக்கலை.. ஆனாலும் அவன் செலக்ட்டட்..

ஹி., ஹி., ஹி.... இன்டர்வியூ பண்ணினது
பிரேமா மிஸ்ஸூ...
இப்ப நான் மனசை கன்ட்ரோல் பண்ண
கத்துகிட்டேன்.. அட நம்புங்க.. உண்மை...

இப்பகூட பாருங்க ஒரு பொண்ணு ஆன்லைன்ல
இருக்கு.. " போயி ஹாய் சொல்லுடா வெங்கி"னு
மனசு சொல்லிச்சி...

பிச்சிபுடுவேன் படுவா... டென் நிமிட்ஸ் கழிச்சி
சொல்லலாம்னு மெரட்டுனேன்... பயந்துட்டு
கம்னு போயிடுச்சி..

ஹி., ஹி., ஹி.....!!!!!
@ திரு. Manivannaraj Panneerselvam., 

எமது Blog பிரபலமாவதற்காக நீர் எடுத்த 
முயற்சி கண்டு உள்ளம் மகிழ்தோம்.. 

அதற்கு தக்க சன்மானம் வழங்கும் பொருட்டு 
ரூ 25000 செக் ஒன்றை உமது இல்லதிற்கு 
அனுப்பியுள்ளோம்.. பெற்றுக்கொள்ளவும்..

இதே பணியை தொடர்ந்து இந்த வருடமும் 
செய்வீர்களேயானால்.. 

அடுத்த வருடம் அந்த செக்கில் கையெழுத்து 
இட்டு தருவோம் என்பதையும், 

அதுக்கு அடுத்த வருஷம் அந்த அக்கவுண்டில் 
பணம் போடுவோம் என்பதையும் மகிழ்ச்சியுடன் 
தெரிவித்துக் கொள்கிறோம்..

- இப்படிக்கு
தங்கள் அன்புள்ள
" கோகுலத்தில் சூரியன் " ப்ளாக் ஓனர்
வெங்கட்
" சே.. ஆபீஸ்ல உக்காந்து நிம்மதியா பேஸ்புக் 
பாக்க கூட விட மாட்டேங்குறானுவ... சும்மா 
அந்த பைல பாரு.., இந்த பைலை பாருன்னு.... "

# என்ன மாதிரியான சமூகத்தில் வாழ்கிறோம்..?!
என்னை அடிக்கணும்னு யாராவது 
நினைச்சாலே போதும்.., அதுக்கப்புறம் 
அவங்களால அந்த இடத்துல இருந்து 
ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியாது....

அவங்க காலை., என் கை Arrest பண்ணி 
வெச்சி இருக்கும்ல.. ஹி., ஹி., ஹி...!!!
எல்லோரும் சன் டிவில " தலைவா " 
ஆடியோ ரிலீஸ் பாத்து இருப்பீங்கன்னு 
நினைக்கிறேன்..

அதுல அமலாபால் மேடையில பேசிட்டு 
கீழே இறங்கின உடனே மொபைல் 
எடுத்து யாருக்கோ டயல் பண்ணி
பேசினாங்க கவனிச்சீங்களா...?

அது யார் தெரியுமா..??

சரி விடுங்க..
நான் அதை சொன்னா
நீங்க விளம்பரம்னு சொல்லுவீங்க..

ஹி., ஹி., ஹி...!!

இன்னிய தேதியில English கலக்காம
நம்ம யாராலயும் பேச முடியாதுன்னு 
நினைக்கிறேன்.. 

காரணம்..? 

அவங்க ஒரு பொருளை கண்டுபிடிச்சா.,
நம்ம ஆளுங்க அதுக்கு தமிழ்ல ஒரு பேரு
மட்டும் கண்டுபிடிக்கறாங்க..

அதுக்கு பேசாம உலகம் அந்த பொருளை
எப்படி சொல்லுதோ அப்படியே சொல்லலாம்..

ஒரு பேச்சுக்கு Cycle-ல வேணா மிதிவண்டின்னு
சொல்லலாம்.. ஆனா....

ஹேண்டில் பார்., ஸ்டேண்ட்., மட்கார்ட்.,
சைக்கிள் செயின்., பெடல்., பெல்., சீட்.,
வீல்., பிரேக்., கீர்., டயர்., டியூப்., லைட்,
கேரியர், டபுள்ஸ் , பஞ்சர்.,

இதையெல்லாம்...??

நீங்க 10th-ல என்ன மார்க் - PS


கையில உக்காந்து இருக்குற கொசுவை கூட 
அடிக்க கொசு பேட் தேடுற பய... 
நம்ம க்ரூப்தேன்...
இன்னிக்கு Evening ஜாலியா...

" காதலின் தீபமொன்று.. " பாட்டு பாடிட்டு இருந்தேன்..

அப்ப என் Wife..

" ஏங்க.. பாடறதை கொஞ்சம் நிறுத்தறீங்களா..! "

" ஏன்..? உனக்கு இந்த பாட்டு பிடிக்காதா..? "

" ரொம்ப பிடிக்கும்.. அதனால தான்......... "

" கிர்ர்ர்ர்ர்ர்.........!! "
படுத்துக்கொண்டு 
மேலே பார்த்தால் 
வானம் தெரியவில்லை..
ஓ.. நான் கிரவுண்ட் ப்ளோரில் 
இருக்கிறேன்..

- வெங்கூ
கழுதைக்கு தெரியாதாம் 
கற்பூர வாசனை..
உனக்கு மட்டும் தெரியுமா 
பேப்பரின் சுவை...?

- வெங்கூ
" ரொம்ப நேரமா ட்ரை பண்றேன்... 
உங்க மொபைல் பிஸி., பிஸின்னே வருது.. 
அப்படி யார்கிட்ட பேசிட்டு இருந்தீங்கன்னு..? " 
பொண்டாட்டி கேட்டா....

டக்னு யோசிக்காம 

" அட இவ்ளோ நேரம் உனக்கு தான் ட்ரை 
பண்ணிட்டு இருந்தேன்....   நீ எனக்கு பண்ணிட்டு 
இருந்தியா.? " னு  திருப்பி கேக்கணும்..

# பொண்டாட்டிக்கு ஐஸ் பாடம் 1.
தனித்து போட்டியிட்டால் தமிழ்நாட்டில் 
காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும். - தங்கபாலு...

# தல எவ்ளோ சீரியஸா பேசிட்டு இருக்கு.. 
எதுக்குடா இதை போயி விளையாட்டு செய்தியில 
போட்டீங்க..?

நீ சொல்லு தல... அப்புறம் எப்ப அமெரிக்கால 
ஆட்சி அமைக்க போறோம்..?
இன்னிக்கு ஒரு பொண்ணு என்கிட்ட சாட் 
பண்ணிச்சின்னு ப்ரெண்ட்கிட்ட சொன்னா... 
உடனே " அது Fake ID "தான்னு உயிரை கொடுத்து 
ப்ரூவ் பண்ண கெளம்பிடறானுங்க.. 

# நண்பேன்டா
உங்க குழந்தைங்க டாக்டராவோ., இஞ்சினியராவோ 
ஆகணும்னு ஆசைப்படறது தப்பில்ல... 

அது இன்னிக்கே ஆகணும்னு அவசரப்படறது தான் தப்பு...

- பாபா வெங்கீஷ்..


எச்சூஸ்மீ லேடீஸ்.., 

யாராவது உங்கம்மாவை பாத்து " அக்கா மாதிரி " 
இருக்காங்கன்னு சொன்னா... சந்தோஷப்பட்டுக்காதீங்க.. 
உங்கம்மாவுக்கு தங்கச்சி மாதிரி நீங்க இருக்கீங்கன்னு 
அதுக்கு அர்த்தம்...
ராதா, கௌதமி, ரோஜா, ஜோதிகா, த்ரிஷா, 
அனுஷ்கா, காஜல்..... இப்படி அடிக்கடி 
நம்ம பேவரட் ஹீரோயினை மாத்திட்டே 
இருக்கணும்... 

இல்லன்னா நம்ம வயசை கண்டுபிடிச்சிபுடுவாங்க....
"உங்களை மாதிரி நல்லவங்க எல்லாம் இருந்தும் 
நம்ம ஊர்ல மழையே பெய்ய மாட்டேங்குதே ஏன்னு.? "
 ஒருத்தர் என்னை பாத்து கேட்டாரு.... 

" நான் தான் அமைதியா இருக்குற இடமே தெரியாம 
இருக்கிறேனே.... அதனாலயா இருக்கும்... " சொன்னேன்...

# ஹே.. யார்கிட்ட....
எது நடந்தாலும் லைட்டா எடுத்துக்கோங்க.... 
வாழ்க்கையே வெளிச்சமா இருக்கும்.... 

- பாபா வெங்கீஷ்..
வீட்ல இருக்கிற ஒரு டம்ளர் கூட விடாம 
எல்லாத்துலயும் தண்ணி புடிச்சி வெச்சிருந்தா...... 
கார்பரேஷன் தண்ணி 10 நாள் கழிச்சி 
வந்திருக்குன்னு அர்த்தம்..
என் Wife என்கிட்ட....

" கல்யாணத்துக்கு போகணும் சீக்கிரம் ரெடி ஆகுங்க.. "

" கல்யாணமா..? யார்க்கு..? "

" சுமதியோட சித்தப்பா பையனுக்கு.."

" மாப்ள எனக்கு பழக்கமில்ல.. அதனால நான் வரல.. "

" எத்தனையோ கல்யாணத்துக்கு கார்ல போயிருக்கோம். 

நம்ம டிரைவர் எப்பவாச்சும் இப்படி சொல்லியிருப்பாரா..? "

" ஹே.. என்ன வெளடுறயா..? நான் வரமாட்டேன் போ.. "

" ரொம்ப பிகு பண்ணாதீங்க.. ப்ளீஸ் வாங்க... "

" நானெல்லாம் மானஸ்தன்.. அப்படியே கவரிமான் மாதிரி... 

ஒரு முடி... "

" நீங்க கொடுத்து வைச்சது அவ்ளோதான்.. நான் என்ன பண்றது.. "

" வாட் டு யு மீன்...? "

" டின்னர்க்கு ஏகப்பட்ட வெரைட்டியாம்.. செம கிராண்டா 

இருக்கும்னு சுமதி சொன்னா.. "

" ஹி.,ஹி.. கல்யாணம் எந்த மண்டபத்துல...? "
10 மணி பங்சன்னா... 

கூப்பிடறவன் 9.30 மணின்னு சொல்லி 
கூப்பிடுவான்... 

10.30 மணிக்கு போனா சரியா இருக்கும்னு 
நாம நெனைச்சிப்போம்.. 

# இந்தியன் பங்க்சுவாலிட்டி.
பாரு... நல்லா பாரு.. எந்த பொண்ணாவது 
புரோபைல்ல ஆம்பளை படம் வெச்சிருக்கா...? 
அப்புறம் நீங்க மட்டும் எதுக்குடா பொம்பள 
படத்தை வெச்சி இருக்கீங்க..?! 

கன்பியூஸ் பண்றானுங்கப்பா...
பேஸ்புக்ல ஆக்டிவா இருக்கறதுல 
ஒரு நல்ல விஷயம்.. 
.
.
.
.
.
.
எந்தெந்த ஊர்ல எப்பப்ப மழை பெய்யுதுன்னு 
தெரிஞ்சிக்கலாம்..

பேட்டரி எத்தனை நாள் நிக்குது.. - PS
நடிகர் சூர்யா பிளஸ் 2 -ல எடுத்த மார்க் 872..

( Afterall என்னை விட _ _ _ மார்க் தான் அதிகம். )
வெரி Bad-ங்க நீங்க...!!
 • ஷாப்பிங் கணக்கு சொல்லும் மனைவியிடம் 
  " செலவு ஜாஸ்தி பண்ற போலன்னு " சொல்லி 
  பாருங்களேன். 

  உடனே குறைச்சிக்கறாங்க... 
  உங்ககிட்ட கணக்கு சொல்றதை
 • இந்த டியோடரண்ட் விளம்பரத்துல வர்றவனுக்கு மட்டும்
  சொந்தமா ஏன் ஒரு கேர்ள் ப்ரெண்ட் இருக்க மாட்டேங்குது..?
  # டவுட்டு
சாப்பிடறதுக்கு கோச்சிங் தர்றோம், தூங்கறதுக்கு கோச்சிங் 
தர்றோம்னு எதை ஆரம்பிச்சாலும் குழந்தைகளை 
கொண்டுவந்து தள்ளிட்டு போயிடுவாங்க போல இருக்கு 
பெத்தவங்க.. # சம்மர் லீவ் ராக்ஸ்..
ப்ரெண்ட் கூட போன்ல பேசிட்டு இருக்கும் போது.., 
அவ்ன் பேசறது எல்லாமே ஸ்டேடஸ் போட ஐடியா 
குடுக்குற மாதிரி இருக்கு..! # முத்திடுச்சோ...
Fake ID-ஐ பாத்து ஏமாற நான் என்ன கேனையா..?!
ஒரு பொண்ணு., ஆம்பளை ஐ.டில வந்து என்கிட்ட 
சாட் பண்ணுச்சு... கண்டுபிடிச்சி துரத்திவிட்டுட்டேன்..
# ஹே... யார்கிட்டா..!
எனக்கு இந்த IPL-ல பிடிக்காத விஷயம், எதுக்கெடுத்தாலும் 
வெளிநாட்டுக்காரங்களையே நம்பிட்டு இருக்கறது.. 

ஏன் நம்ம இந்தியன்ஸ் மேல நம்பிக்கை இல்லையா..? 
ஒரு சான்ஸ் குடுத்து பாருங்க சார்.. 

நம்ம பொண்ணுங்களும் சூப்பரா டான்ஸ் ஆடுவாங்க... 
ஹி..,ஹி.. # சியர்ஸ்..
பேச்சு போட்டிக்கு என் மகனுக்கு பயிற்சி
கொடுத்த போது..

" இதுக்கே நீ இப்படி தடுமாறுறயே.., 
இனிமே தான் முக்கியமானது எல்லாம் 
வரபோகுது. அதை எல்லாம் எப்படிடா 
சொல்ல போற..? "

" அப்ப முக்கியமானதை எல்லாம் விட்டுட்டு., 
இதை எதுக்குப்பா இப்ப சொல்லி குடுத்திட்டு 
இருக்கே..?! "

" ?!?!?!?!? "
ஆண்கள் கீழே விழுந்தா மீசைல மண் ஓட்டும்னு 
யார் சொன்னது..? நாங்க தலைய லேசா தூக்கிப்போமே..! 
வலிச்சா... பல்லை கடிச்சிக்கிட்டு 
பொறுத்துக்கலாம்.. - ஆனா.... 
பல்லு புடுங்கும் போது வலிச்சா..???

Friday, August 16, 2013

ஒவ்வொரு நகையையும் நாங்க சொந்தமாவே 
செய்யறோம்.. அதனால தான் கம்மியா தர முடியுது 
- கஸானா ஜூவல்லரி..

# கொய்யாலே.. கொஞ்சம் விட்டா சொத்தமா 
ரெண்டு தங்க சுரங்கம் இருக்குன்னு கூட 
சொல்லுவாங்க போல..
" லவ் பண்ணுங்க பாஸ். லைப் நல்லா இருக்கும்..! " 

# ஐஸ்கிரீம் கடைக்காரன் லைப், 
மொபைல் கம்பெனிக்காரன் லைப், 
கிப்ட் ஷாப்காரன் லைப்..
பியூட்டி பார்லர் நடத்தும் பெண்களில் 
பெரும்பாலோனோர் பார்க்க சுமாராகவே 
இருக்கிறார்கள்.., # ஆராய்ச்சி

பர்ஸ் நிறைய பணத்தோட - PSஇப்பதான் வீட்டுக்காரம்மா புடவை கடையில 
இருந்து போன் பண்ணினாங்க.. 

" பர்ஸ் நிறைய பணத்தோட உடனே வாங்கன்னு.. " 

சரிம்மான்னு சொல்லிட்டு... 

நானும் என்கிட்ட இருந்த 27 பத்து ரூபா நோட்டை
எடுத்து வெச்சேனா.. பர்ஸ் நிறைஞ்சி போச்சு..

ஹி., ஹி., ஹி..!!


இன்னிக்கு எனக்கு லீவ்.. அதனால என் ரசிகர்களை 
சந்திச்சி., பேசி., ஆட்டோகிராப் போட்டு குடுக்கலாம்னு 
இருக்கேன்.. ஆசைப்படறவங்க வரலாம்... வெயிட்., வெயிட்., ஏன் அவசரப்படறீங்க.. 
ஒவ்வொருத்தரா வாங்க.. 

ப்ளீஸ்.. பக்கத்துல நிக்கறவங்களை தள்ளாதீங்க.. 
பொறுமை.. பொறுமை..!!லைன்ல வாங்க...

முதல் மகளிர் தினம் 1909, 
 • முதல் ஆண்கள் தினம் 1999
  #ம்ம்,என்னிக்கு தான் எங்க நல்ல மனசை 
  இந்த பொம்பள புள்ளங்க புரிஞ்சிக்க போறாங்களோ.!