Thursday, June 30, 2016நமக்கு ஒரு பொருள் பிடிச்சி இருக்கு.. 
ஆனா பட்ஜெட் இடிக்குது...

அப்ப என்ன பண்ணனும்னா... 

நமக்கு அது ரொம்ப பிடிச்சிருக்குனு அடிக்கடி சொல்லி 

Wife மனசுல ஆழமா பதிய வெக்கணும்...

பர்த்டே கிப்டா கிடைக்கறதுக்கு சான்ஸ் இருக்கு... 

ஹி., ஹி.,ஹி...!!!

# சர்ப்பிரைஸ்...!!!


இந்த ரெண்டு போட்டோவுக்கும் ஒரு ஒத்துமை இருக்கு..
என்னானு சொல்லுங்க பார்ப்போம்..
.
.
.
.
.
.
.
ரெண்டு பேரும் கோடு போட்ட டீசர்ட் போட்டு இருக்கோம்...
ஹி., ஹி., ஹி...!!!
# வெங்கிசாமி...

Wednesday, June 29, 2016

ரெண்டு மாசம் முன்னாடி ஒரு மெகா சீரியல்ல
அண்ணி கேரக்டர் செத்து போயிடுச்சு...
நேத்து எதேச்சையா அந்த சீரியல் பாத்தேன்...
அண்ணி செத்து போச்சுனு அழுதுட்டு இருந்தானுவ...
# டேய்.... இன்னுமாடா...?!!


ஃபேஸ்புக்ல போட்டோ போடற ஐடியா இருந்தா..
கையில ஒரு கொழந்தய வெச்சிட்டு இருக்கற 
மாதிரி போட்டோ போடணும்..
அப்பத்தான் எல்லோரும் Cute-னு கமெண்ட் 
பண்ணுவாங்க... ஹி., ஹி...  
# செல்பி டிப்ஸ்..
மீ வித் தம்பி பையன்..!!

Monday, June 27, 2016

நானெல்லாம் பர்ஸ்ட் பெஞ்ச் ஸ்டுடண்ட்னு சொன்னா யாரும் நம்ப மாட்டேங்குறாங்க..
நம்புங்க.. எங்க ரேவதி மிஸ் மேல சத்தியமா!
ஹைட் கம்மியா இருக்கேனு இழுத்துப் பிடிச்சு அவங்க தான் உக்கார வெச்சாங்க...
"நிர்மலா.. நாளைல இருந்து நான் பேலியோ டயட் 
ஃபாலோ பண்ண போறேன்.."
"என்ன திடீர்னு..?"
"ஜெகன் சொன்னான்.. அதுல ப்ரேக்ஃபாஸ்ட்க்கு நாலு முட்டை சேத்துக்கலாமாம்.."
"ம்ம்க்கும்... ப்ரேக்ஃபாஸ்டே நாலு முட்டை மட்டும் தான்..."
(என்னாது... நாலு முட்டை மட்டும் தானா..? இத அவன் சொல்லவேயில்லையே...)
# பேலியோ கேன்சல்..!!!
"வெங்கின்னா மாஸ்..! வெங்கி தான் எங்க பாஸ்...!!"
"ஸ்டாப்... எனக்கு இப்டி மூஞ்சிக்கு முன்னால புகழ்றது பிடிக்காது.."
"அப்ப புகழ வேணாமா..?"
"நோ.. நோ.. நோ.. நான் திரும்பி நின்னுக்கறேன்... யூ கண்டினியூ"
# ஹி., ஹி., ஹி..!!!

அம்பி, ரெமோ, அன்னியன் - விமலாஸ்ரீ


Saturday, June 25, 2016

காலைல என் ப்ரெண்ட் ஆனந்தை வழில பாத்தேன்..
" ஏன்டா இப்டி 30 மார்க் எடுத்தது, 40 மார்க் எடுத்ததை எல்லாம் ஃபேஸ்புக்ல போட்டா.. உன்னய பத்தி என்ன நெனப்பாங்க..?! "
" என்ன நெனப்பாங்க..?! "
" நீ ஈஸியா பேப்பர் சேஸ் பண்ணி பாஸ் பண்ணிட்டேனு நெனைக்க மாட்டாங்க..?! "
இத கேட்டதும் எனக்கு வந்துச்சு பாருங்க
கோவம்....
" யாரா பாத்துடா ஈஸியா பேப்பர் சேஸ் பண்ணேனு சொன்னே...?!! ராஸ்கல்...
அது எவ்ளோ கஷ்டம் தெரியுமா..?! "

Thursday, June 23, 2016

" நானும் உங்கள மாதிரி டெய்லி 100 லைக்ஸ் வாங்கணும்.. 
எதாவது ஐடியா குடுங்க ஜி..!! "
" டெய்லி என் போஸ்ட்டை ஷேர் பண்ணுங்க ஜி... "
# நாங்கல்லாம் ஊருக்குள்ள பல பேருக்கு ஐடியா குடுக்கறவங்க..  
" ஏன்டா மங்கு... பொண்ணுங்ககிட்ட மட்டுமே சாட்டிங் பண்ற.. பசங்ககிட்ட பேச மாட்டியா..?! "
" பசங்ககிட்ட பேசறது Bad Habit-னு எங்க டீச்சர் சொல்லி இருக்காங்க.. "
" ஹேங்.. என்னடா கலர் கலரா ரீல் விடறே..?! "
" நிஜமா மச்சி.. ஒரு பொண்ணுகிட்ட சொன்னாங்க.. நான் பக்கத்துல இருந்து கேட்டேன்.. "
# இதுக்கு நான் துப்பாம வேற என்ன பண்ணனும் மக்கழே...!!!


நான் போனப்ப குமார் போன்ல ரொம்ப பவ்யமா பேசிட்டு இருந்தான்..
பக்கத்துல செந்தில்கிட்ட கேட்டேன்..
"யார்ரா லைன்ல..?"
"பேங்க்ல இருந்து மச்சி.. இன்னும் இந்த மாச
ஜூவல் லோன் வட்டி கட்டலையாம்.. அதான் கேக்கறாங்க."
"வட்டி தானே கட்டல.. அதுக்கு ஏன்டா இப்டி நடுங்கறான்...?"
அதுக்குள்ள லைன் கட் ஆகிடுச்சி.. ரெண்டு நிமிஷத்துல மறுபடியும் ரிங்....
"டேய் குமார், போனை இப்டி குடு.. நான் பேசறேன்..!"
"வெங்கி.. வேணாம்டா.."
"அட குடுடா.. எப்டி கொக்கி பிடி போடறேன்னு மட்டும் பாரு..!"
போன் கைமாறிச்சு..!!
"நான் குமாரோட ப்ரெண்ட் பேசறேன்.. சொல்லுங்க.. "
"இன்னிக்கு ஈவினிங்குள்ள உங்க ப்ரெண்டை இன்ட்ரஸ்ட் கட்ட சொல்லுங்க.."
"இதே மாதிரி விஜய் மல்லயாவை எல்லாம் பணம் கட்ட சொல்லி கேட்டீங்களா..? இவனை மட்டும் கேக்கறீங்க..?!"
"நாங்க ஏன் சார் அவரை பணம் கட்ட சொல்லணும்..? நகை உங்க ப்ரெண்டுது.."
"ஹி., ஹி.. ஹி... சோக்கு... உங்களுக்கு Jewel Loans act 46 clause C தெரியுமா? "
" தெரியாது...! "
( தெரியாதா..!! அப்ப அடிச்சி விட்றா வெங்கி... )
" அந்த 46 Clause C படி கிரிஸிஸ் டைம்ல பணம் கட்ட சொல்லி கம்பெல் பண்ண முடியாது தெரியுமா? "
"ஸாரி சார்.. இருங்க மேனேஜர்கிட்ட ஒரு வார்த்தை சொல்லிடறேன்.."
"ம்ம்.."
2 நிமிஷம் கழிச்சு...
"மேனேஜர்கிட்ட சொல்லிட்டேன் சார்.. அவரு ஓகே, பணம் கட்ட வேண்டாம்ன்னு சொல்லிட்டார்"
( அப்டி வாங்க வழிக்கு..!! யாருகிட்ட.. )
"ம்ம் அப்புறம் என்னா சொன்னாரு..?"
"நகைய ஏலத்துல விடுங்கனு சொல்லிட்டாரு.."
(ஏலமா...?!!! ஓ மை காட்..!! )
‪#‎மாப்பு‬..வெச்சிட்டான்டா ஆப்பு...

Wednesday, June 22, 2016

ஒரு பொண்ணு அதோட Wall-ல பழைய போஸ்ட் 
எல்லாம் படிங்கன்னு சொல்லுச்சு..
சரினு படிச்சுட்டு அந்த பொண்ணுகிட்ட...
" உன் கவிதை எல்லாம் சூப்பாரா இருக்கு..!! "
" ஹேய்.. பொய்.. பொய்..!! "
" ஐய்யோ.. அப்ப அது கவித இல்லியா..?
எனக்கு அப்பவே லேசா டவுட்டு..
ஆனா இந்த மங்கு பயதான்.. மச்சி இது
ஒரு வார்த்தைக்கு கீழ ஒரு வார்த்தை இருக்கு..
ஆச்சரிய குறி எல்லாம் வேற இருக்கு.. சத்தியமா
இது கவித தான்னு சொன்னான்..!! "
" நான் கொலைகாரி ஆகறதுக்குள்ள
ஓடி போயிடுங்க ரெண்டு பேரும்.. "
# நாம கவிதை நல்லா இருக்குனு தானே
சொன்னோம்..?! அதுக்கு ஏன் இந்த புள்ள
இவ்ளோ கோவப்படுது..?!!!

Tuesday, June 21, 2016எங்க மாம்ஸ் ஒரு தீவிர தேவயானி ரசிகர்...
தேவயானி கல்யாணம் பண்ணிட்டப்ப ரொம்ப ஃபீல் ஆயிட்டாரு..
" என்னடா தேவயானி இப்டி பண்ணிடுச்சு.. "
" லவ்வு மாம்ஸூ... "
" அட தேவயானியோட அழகென்ன.. திறமையென்ன... 
ஜிரணிக்கவே முடியல.. "
" யெஸ் மாம்ஸ்.. எனக்கு சேம் ஃபீலிங்க்ஸ் தான்.. "
அப்ப உள்ள இருந்து வந்த எங்க அத்தை...
" என்ன ரெண்டு பேரும் ஓவரா ஃபீல் பண்ணிட்டு இருக்கீங்க..?! "
" ஹி., ஹி., ஹி.. அது ஒண்ணுமில்ல அத்தை... 
நம்ம தேவயானி கல்யாணத்த பத்தி... "
" ம்ஹூம்.. எல்லாம் அந்த ஆண்டவனை சொல்லணும்... 
தேவயானியா இருந்தாலும், தேவியா இருந்தாலும்.. 
தலையில ராஜகுமாரனு எழுதி வெக்கிறான்.. "
நானும் மாம்ஸும் கப்சிப்...
எங்க அத்தை பேரு தேவி..
என் Wife பேரு நிர்மலா தேவி...
போஸ்ட்ல சும்மா தமாஷ்காக நான் படிக்கிறப்ப 
40 மார்க் எடுத்தேன்.. ஜஸ்ட் பாஸ் ஆனேனு 
சொன்னதை எல்லாம் உண்மைனு நம்பிட்டீங்களா...?!
ஹைய்யோ... ஹைய்யோ...!!!
ஆக்சுவலி அதுல பாதி தான் உண்மை...!!
ங்ங்ங்ங்...!!!
ஒரு கறி விருந்துல உக்காந்து சாப்பிட்டுட்டு இருந்தேன்...
அப்ப அங்க வந்த என் ப்ரெண்ட் ரவியோட Wife ரேகா... 
என்னை பாத்து ஷாக் ஆகி....
" அண்ணா.... என்ன இது..?!! "
( எதுக்கு இப்டி ஷாக் ஆகறாங்க..? பக்கத்து இலைல 
இருந்து ரெண்டு பீஸ் சுட்டதை நோட் பண்ணியிருப்பாங்களோ...?!! )
" என்னமா..?!! "
" நீங்க டயட்ல இருக்கீங்கனு நிர்மலா சொன்னாங்க... "
" ஹி., ஹி., ஹி.. ஆமாம்மா... வெஜிடேரியன் டயட்.. "
" அப்டின்னா...?! "
" வெஜிடேரியன் லிமிடட்.., நான்-வெஜ் அன்லிமிடட்.. "
த்த்தூனு சத்தம் கேட்டுச்சு.. செகண்ட் டைம் பிரியாணி சாப்பிடற மும்முரத்துல யார்னு கவனிக்கல...

" புதுசா இன்டெக்ஷன் வாங்கி குடுத்திருக்கார்....
சர்ப்ரைஸ் கிப்ட்.... இப்போ நான் அவருக்கு
சர்ப்ரைஸ் குடுக்கணும்.... உப்புமா செய்யலாமானு
யோசிச்சிங்.... "
" உப்புமாவா..?!! அவ்வ்வ்...!! உன் வூட்டுக்காரர்
கேட்டாரா..? "
" இல்ல.. அவரு பொங்கல் தான் கேட்டாரு.."
" அப்ப உனக்கு உப்புமானா ரொம்ப பிடிக்குமா..? "
" உவ்வ்வே...!!! "
" உவ்வேவா..?!! உன் வூட்டுக்காரர் பொங்கல்
தானே கேட்டாரு.. நீ எதுக்கு உப்புமா
செய்யறேனு ஒத்த கால்ல நிக்கறே..?! "
" நானும் ஏர் பிரையர் தானே கேட்டேன்... அவரு
எதுக்கு எனக்கு இன்டெக்ஷன் வாங்கி குடுத்தாரு..? "
# உப்புமாடா... ஓடிடுடா..!!

காலேஜ்லயே நீதான்பா பெஸ்ட் ஸ்டூடண்ட்னு அவார்ட் குடுத்தப்ப க்ளிக்கியது....
 
காலேஜ் படிக்கும் போது ப்ரெண்ட்ஸ் கூட ஹோட்டல் போனா...
சிக்கன் 65, ஹைதராபாத் சிக்கன்,
சிக்கன் லாலிபாப்னு ஆர்டர் பண்ணுவோம்.
அதெல்லாம் வந்ததும்... நான் அதில ரெண்டு ப்ளேட்டை 
செலக்ட் பண்ணி... கட் பண்ணி வெச்சிருக்கிற லெமனை
 எடுத்து டிஷ்ல பிழிஞ்சி விட்டுடுவேன்...
அதுக்கப்புறம் அத ஒரு பய டச் பண்ணமாட்டானுங்க....
# ஹி, ஹி, ஹி

காலேஜ் படிக்கும் போது... எங்க பக்கத்து கிளாஸ் பொண்ணு ஒரு சினிமாவுக்கு போயிட்டு வந்து...
" வெங்கி... இந்த படத்துல அரவிந்த்சாமிய பாக்கும் போது.. 
எனக்கு உன்னை பாக்கற மாதிரியே இருந்துச்சுடானு " சொல்லிச்சு...
நான் ரொம்ப குஷியாகிட்டேன்..
அப்புறம் தான் தெரிஞ்சது...
அரவிந்த்சாமி அந்த படத்துல லூசா நடிச்சிருந்தார்னு..
# புதையல்...!!!

டேய்... கேள்வி கேக்கறேன்... பரிசு கொடுக்கறேனு 
சிவக்குமார் ஃபேமிலில பிரச்னைய கிளப்பி விட்டுடாதீங்கடா...
மங்கு (Shajahan S) அவன் புது கேர்ள் ப்ரெண்ட் கிட்ட..
" செல்லம்., இதுவரைக்கும் நானா எந்த பொண்ணுக்கும் 
ப்ரெண்ட் ரிக்வெஸ்ட் குடுத்ததேயில்ல தெரியுமா.. 
உனக்கு தான் பர்ஸ்ட்..!! "
" இதே தானே திவ்யாகிட்டயும் சொன்னே..?! "
" ஆஆ...!!! இதெப்படி உனக்கு தெரியும்..?! "
" நான்தான்டா திவ்யா..!! "
# செருப்புடா...!!!

Thursday, June 16, 2016

பேங்க்ல என் ப்ரெண்ட் ஆனந்தை பாத்தேன்..
"மச்சி ஏன்டா சோகமா இருக்கே..?"
"Wife ஊருக்கு போயிருக்கா..!"
"இது ஓவர் ஆக்டிங்கால்ல இருக்கு..!!"
"அதில்ல மச்சி.. சின்ன சண்டை.. ரெண்டு நாளா 
போன் பண்றேன்.. எடுக்க மாட்டேங்குறா...."
"சார்ஜ்ல போட்டுருப்பாங்க.."
"இல்ல மச்சி.. ஒரு நாளைக்கு 50 தடவைக்கு மேல பண்ணினேன்.."
"ஓ.. மேட்டர் கொஞ்சம் சீரிய்ஸ் தான்.. சரி இப்ப 
ஒரு தடவை கால் பண்ணு..!! "
"இப்பவா..? நெக்ஸ்ட் டோக்கன் நான் தான்..!!"
"எப்படியும் எடுக்க போறதில்ல.. கணக்கு காட்ட 
யூஸ் ஆகும்.. பண்ணு..!! "
"அப்படின்ற..? சரி..."
டயல் பண்னான்... டக்னு கால் அட்டெண்ட் ஆச்சு..
"ஹலோ.." (அவன் Wife குரல்)
இந்த பக்கி டென்ஷன் ஆகிட்டான்..!!
"ஐயோ.. வித்யா அட்டெண்ட் பண்ணிட்டியா..? 
நீ அடெண்ட் பண்ண மாட்டேனு நெனச்சில்ல 
கால் பண்ணினேன்..!!"
( டொக்..!! )
# செத்தான்டா ஆனந்த்..!!
பஃங்ஷன்ல...
" என்னா மச்சி சிரிச்சிட்டே இருக்கே..? "
" பக்கத்துல Wife இருக்காங்கல்ல.. அதான்.. "
" கஷ்டம் வரும்போது சிரினு சொல்வாங்களே.. 
அது இதானா மச்சி..?! "
# டேய்.... ஏன்டா...!!
போன வருஷம் இதே தேதில ஒரு போஸ்ட் போட்டு இருக்கேன்..
அதுக்கு 96 பேர் லைக் போட்டு இருக்காங்க..
இப்ப நான் போடற போஸ்ட்டுக்கும் இவங்களே தான் 
லைக் போடறாங்க..
அப்ப இந்த ஒரு வருஷத்துல நான் ப்ரெண்ட்டா சேர்த்த 
அந்த 970 பேர் என்ன தான் பண்றாங்க..?!
# டவுட்டு..!!

இன்னிக்கு மங்குகிட்ட (Shajahan S) சாட்டிங்ல ஒரு பொண்ணு...
" உங்க போன் நம்பர் குடுங்க.. உங்க போட்டோ
அனுப்புங்கனு " கேட்டு டார்ச்சர் பண்ணி இருக்கு
அதுக்கு இவன்...
" நீங்க எல்லாம் அண்ணன் தம்பி கூட பொறக்கலயானு "
கேட்டு நல்லா திட்டி விட்டுட்டான்...
ஹா., ஹா., ஹா..!!
# தட் உங்களுக்கு வந்தா ரத்தம், எங்களுக்கு வந்தா தக்காளி சட்னியா மொமெண்ட்.!
இதுல எனக்கு ஏன் இவ்ளோ சந்தோஷம்னு யோசிப்பீங்களே...
இருக்கு..
இனிமே எந்த பொண்ணும் இந்த பன்னாடை கிட்ட போன் நம்பர் கேக்காதுல்ல...
ஹா., ஹா., ஹா.. ( வில்லன் சிரிப்பு )
Fake Id ஒண்ணு ஆரம்பிச்சு.. அதுல சினிமா நடிகை 
ஒருத்தவங்க போட்டோவ புரோபைல் பிக்சரா வெச்சா...

இன்பாக்ஸ்ல ஒருத்தன் வந்து...
" நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க.. உங்க 
மொபைல் நம்பர் குடுங்க.. சினிமால நடிக்க 
சான்ஸ் வாங்கி தர்றேனு " சொல்றான்...
# அடேய்.....
 


கொஞ்ச நேரம் முன்னாடி என் ப்ரெண்ட் மணி
போன் பண்ணியிருந்தான்...
" வெங்கி... ஈவினிங் ஒரு மீட்டிங் இருக்கு..
வா போலாம்..! "
" என்ன மீட்டிங்..? "
" அதெல்லாம் உனக்கு எதுக்கு..? டின்னர் பஃபே.. 
வர்றியா..? இல்லியா..? "
" வர்றேன்.. வர்றேன்..!! "
" லஞ்ச் முடிச்சிட்டியா..? "
" இல்ல... "
" நல்லதா போச்சு.. சாப்பிடாதே.. மீட்டிங் என்ட்ரி ஃபீஸ் 
600 ரூபாடா.. நாம அத ப்ஃபேல தான் சரி பண்ணனும்.."
" ஹி., ஹி., ஹி.. நீ காலைலயே சொல்லி இருந்தா.. 
ஒரு 800 ரூபாக்கு சரி பண்ணியிருக்கலாம்ல..! "

# தூம் தத்தா..!

பல ராஜதந்திரங்களை கரைத்து குடித்திருக்கிறாயடா வெங்கி...!!!  


இந்த அட்டை போடற பழக்கத்த விட்டா தான் 
இந்தியா வல்லரசு ஆகும்.

# மிடிலடா...!!!
மங்கு போன் பண்ணிருந்தான்..
"மச்சி.. ஒருமைப்பாட்டுக்கு இங்கிலீஷ்ல என்ன..?"
"ஒருமைப்பாட்டுக்கு.. அது வந்து.. Solo Song!!"
"டேய்ய்..."
" ஹி., ஹி., ஹி.. இப்டி டக்னு கேட்டா.. யோசிக்கணும்ல.."
"போடா.. போயி யாராவது படிச்சவனை ஃபோன்
பண்ணி கேட்டு சொல்லு..!!"
ரொம்ப கோவப்படறானே..
ஒரு வழியா ஒருமைப்பாடுன்னா இன்டெக்ரிட்டினு
என் ப்ரெண்ட் ரவிகிட்ட கேட்டுத் தெரிஞ்சுகிட்டேன்..
மங்குவுக்கு ஃபோனைப் போட்டேன்..
"மங்கு... ஒருமைப்பாடுன்னா.. இன்டெக்ரிட்டி.."
"இன்டெக்ரிட்டியா.. சரி ஸ்பெல்லிங் சொல்லு.."
(ஸ்பெல்லிங்கா..?!!!!)
"ஹலோ.. ஹலோ... சரியா கேக்கலடா.."
பரதேசி.. படிக்கிற காலத்துல ஒழுங்கா படிக்காம
என்னைய வந்து உயிர் எடுத்துட்டு இருக்கு..!!

Sunday, June 12, 2016" என்ன இது.. பூரா வெத்து பேப்பரா இருக்கு..
ஒண்ணுமே எழுதல.. "
" கடைசி பக்கத்துல பாரு.....
.
.
.
.
.
.
.
.
.
.
நல்லதா ஒரு கால்குலேட்டர் வாங்கிக்கங்கனு
எழுதி இருக்கேன்.. ஹி., ஹி., ஹி..!! "

வடை போச்சே - மீம்ஸ்


Friday, June 10, 2016"எதுக்கு எப்ப பாத்தாலும் வீட்ல இருக்குற Wifi Dongle-ஐ 
கழட்டிட்டுப் போய் ஆபீஸ்ல மாட்டிக்கறீங்க..?"
"தெரியாதா.. நாங்க இப்ப எல்லா அக்கவுண்ட்ஸும் 
ஆன்லைன்ல தான் மெய்ன்டெய்ன் பண்றோம்..!!"
"அப்டி என்னா அக்கவுண்ட்ஸ் மெய்ன்டெய்ன் பண்றீங்க...?"
"ஹி., ஹி., ஹி.. ஃபேஸ்புக் அக்கவுண்ட், டிவிட்டர் அக்கவுண்ட், 
இன்ஸ்டாக்ராம் அக்கவுன்ட்..!!"
ஏய்.. ஏய்.. இப்ப நான் என்ன தப்பா சொல்லிட்டேன்..
எதுக்கு கரண்டிய எல்லாம் எடுக்குற..?!!
நேத்து என் ப்ரெண்டு மங்கு அவன் வாட்ஸ்அப் புரோபைல்ல..
மரத்து கிளைல உக்காந்து இருக்கற மாதிரி போட்டோ 
வெச்சி இருந்தான்..
" ஏன்டா மச்சி கொரங்கு போட்டோவ புரோபைல் பிக்சரா 
வெச்சி இருக்கே"னு மெசேஜ் அனுப்பினேன்..
பயபுள்ள இன்னிக்கு காலைல வேற போட்டோ மாத்திட்டான்..
விடுவோமா..
" ஏன்டா மச்சி கொரங்கு போட்டோவ மாத்திட்டு எரும போட்டோ 
வெச்சி இருக்கேனு " மெசேஜ் அனுப்பி இருக்கேன்... ஹி,ஹி,ஹி..!!
# ம்ம்.. ரெண்டு நாளைக்கு கண்ல படாம தலைமறைவா சுத்தணும்..!!

ச்சும்மா... ஒரு செல்பி...
அப்டியே எல்லோரும் வரிசைல வந்து..
" அழகா இருக்கீங்க.. "
" ஹேண்ட்ஸம்மா இருக்கீங்க.. "
" மகேஷ்பாபு மாதிரி இருக்கீங்க.. "
" ஷாகித் கபூர் மாதிரி இருக்கீங்க " -னு
சொல்லிட்டு போங்க பாக்கலாம்..
# கமான் ஸ்டார்ட் மியூசிக்..!!!

என் ஃப்ரெண்ட் Janarthanan வீட்டு ஃபங்சன்.. பக்கத்து சீட்ல கிச்சா..
"கிச்சா.. வாட்ச் நல்லா இருக்கே.. எங்க வாங்கின...?"
"சேலம் தான்"
"எவ்ளோ..?"
"1200"
சொல்லிட்டு அமைதியா ஃபங்சனை வேடிக்கை பாக்க ஆரம்பிச்சிட்டான்...
(நம்ம வாட்ச் பத்தி கேக்க மாட்டானோ..? கொஞ்சம் கூட இங்கிதம் தெரியாது..? இடியட்..!!)
"டேய் கிச்சா... இந்த வாட்ச்... துபாய்ல..."
"ஹலோ.. ஹலோ... "
மொபைல எடுத்துகிட்டு எஸ்கேப் ஆகிட்டான்.. திரும்ப வராமலா போயிடுவான்.?!
# ஐய்யம் வெயிட்டிங்...!!
வெங்கி.. நம்ம படத்தை எல்லோரும் "சூப்பர்"-னு 
சொல்லணும்.. அதுக்கு ஒரு ஐடியா குடேன்....
படத்துக்கு "சூப்பர்"-னு பேரு வை.... அப்ப 
சொல்லித்தானே ஆகணும்..!!
# ஐடியா குடோன்..!!


என் Wife தங்கமயில் போகணும்னு சொன்னாங்க...
நான் அங்க வேணா.. Khazana போலாம்னு சொன்னேன்..
அப்புறம் என்ன நடந்திருக்கும்னு தான் உங்களுக்கே தெரியுமே....
ம்ம்ம்.. தங்கமயிலுக்கு தான் போனோம்...
ஆனா டிசைன்ஸ் பிடிக்கல... சரினு Khazana போனோம்..
எகப்பட்ட டிசைன்ஸ்... என் Wife-க்கு கடை ரொம்ப பிடிச்சி போச்சு..
7 சவரன்ல ஒரு ஆரம் வாங்கினோம்...
" இந்த கடையில தங்கமயிலை விட டிசைன்ஸ் நல்லா இருக்கும்னு எப்படிங்க உங்களுக்கு தெரியும்...? "
" உன் மாமன் ஒரு ஜீனியஸ்மா.. ஏகப்பட்ட விஷயம் தெரியும்.. அதுல இது ஒண்ணு... "
என் Wife வேற வழி இல்லாம நம்பிட்டாங்க...
நல்லவேள Khazana விளம்பரத்துல தமன்னா வர்றதால தான் அந்த கடைக்கு கூட்டிட்டு போனேனு டவுட் எதுவும் வரல... ஹி.,ஹி.,ஹி..!!!
# மீ எஸ்கேப்...

ஆன்லைன்ல டீசர்ட் வாங்கினேன்...
புது டீசர்ட் போட்டுட்டு போட்டோ எடுத்து 
என் ப்ரெண்ட்ஸ் வாட்ஸ் அப் க்ரூப்ல போட்டு...
" எப்டி இருக்கு?"னு கேட்டா ...
ஒருத்தன் " கண்றாவியா இருக்கு"னு சொல்றான்..
இன்னொருத்தன் " கேவலமா இருக்குனு " மெசேஜ் பண்றான்...
( நல்லா இல்லியா... 670 ரூபா வேஸ்ட்டா போச்சா.. போச்சா..?!! )
" சரி இருங்கடா... இன்னொரு டீசர்ட் இருக்கு அத போட்டு போட்டோ போடறேன்.. அதாவது நல்லா இருக்கானு சொல்லுங்க.. "
உடனே ஒருத்தன் மெசேஜ் பண்றான்...
" மச்சி.. இவ்ளோ நேரம் நாங்க கண்றாவியா இருக்குனு சொன்னது டீசர்ட்டைனு நெனச்சிட்டியா... ஹைய்யோ... ஹைய்யோ...! "
# பாவிகளா..!
இன்னிக்கு காலைல...
" ஏங்க இன்னிக்கு மதியம் ரெண்டு பங்ஷன் இருக்கு... 
எதுக்கு போலாம்.. "
" யார்து பங்ஷன்..?! "
" ஒண்ணு உங்க சைடு சொந்தம்.. இன்னொன்னு 
எங்க அக்கா வீட்டு விசேஷம்.. "
" எங்க சைடு சொந்தக்காரங்க பங்ஷனுக்கு போலாம்... 
நமக்கு சொந்தம் தான் முக்கியம்.. "
" எங்க அக்கா வேற மதிய சாப்பாட்டுக்கே வர சொன்னாங்க.. "
" அப்ப இன்னும் கெளம்பாம என்ன பண்ணிட்டு இருக்கே... 
கெளம்பு கெளம்பு... "
# நமக்கு சோறு தான் முக்கியம் மொமெண்ட்..!!
"குடியோட தீமையைப் பத்தி.. இதே மாதிரி 
இன்னும் ரெண்டு படம் எடுத்தா.. 
ஆம்பளைங்க விட்டுடுவாங்க.."

"குடிக்கறதையா..?"

"இல்ல படம் பாக்கறத..!"

# இறைவி - ஆஹான்.. நெடில்

இன்னைக்கு எங்க கடைப்பையன் என்னைப் பாத்து..
"உங்களப் பாத்தா மகேஷ்பாபு மாதிரியே இருக்குண்ணா"-னு சொன்னான்..
என் கூட இருந்த சுரேஷ்க்கு அதிர்ச்சி...
"அவன் எதுக்குடா அப்டி சொல்லிட்டுப் போறான்..?"
"ஹி.,ஹி.,ஹி.. நான் தான் சொல்ல சொன்னேன்..!!"
"இருந்தாலும் அவனுக்கு மனசாட்சியே இல்லியா..?"
"அவனைத் திட்டாதேடா.. பாவம்.. அவன் இன்னும்
மகேஷ்பாபுவைப் பாத்ததே இல்ல.. !!"
"த்தூ..."
# தமிழ்நாடு இப்ப ரொம்ப கெட்டுப் போயிடுச்சி.. எதுக்கெடுத்தாலும் துப்பறானுங்க...

என் ப்ரெண்ட் கிச்சா ஃபேஸ்புக்ல இந்த போட்டோ 
அப்லோடு பண்ணினான்..

ஒருத்தன் " அரவிந்த்சாமி மாதிரி இருக்கீங்கனு "
கமெண்ட் போடறான்..

இன்னொருத்தன் வந்து.. " அடுத்த அஜித் "-னு
கமெண்ட் பண்றான்..

இத பாத்ததும் கிச்சாவுக்கே லைட்டா டவுட்டு
வந்துடுச்சு..

என்கிட்ட கேட்டான்..

" மச்சான்... இவிங்க எல்லாம் என்னைய கலாய்க்கறாய்ங்களா..? "

" சே., சே..!! நீ கூல் மச்சி... அவங்க எல்லாம் அரவிந்த்சாமியையும், அஜித்தையும் தான் கலாய்க்கறாய்ங்க...!!! "

# கிர்ர்ர்ர்ர்..!!!
பொண்ணுங்ககிட்ட மொபைல் நம்பர் வாங்க டிப்ஸ்
 
எனக்கு ஃபேஸ் ரீடிங் தெரியும்.. உங்க முகத்தைப் பாத்து 
உங்களப் பத்தி சொல்லட்டானு கேக்கணும்..

சரி சொல்லுங்கனு சொல்லிட்டா... ஆரம்பிங்க...

1. உங்களுக்கு பிடிச்ச கலர் "பிங்க்"
(பத்துக்கு எட்டு புள்ளங்களுக்கு இந்த கலர் தான் பிடிக்கும்.. 
அதனால தாராளமா அடிச்சி விடலாம்)

2. நீங்க அப்பா செல்லம்.. அம்மா ஸ்ட்ரிக்ட்டு ஆபீசர்
(இதான் உலக வழக்கம்.. மிஸ்ஸாக சான்ஸே இல்ல)

3. உங்களுக்கு டீ வெக்க கூட தெரியாது.. மேரேஜ் ஃபிக்ஸானா கத்துக்கலாம்னு இருக்கீங்க..
(இதுக்கு எந்த பொண்ணாவது இல்லனு சொல்லிச்சுனா.. 
உலகம் அன்னியோட அழிஞ்சிடும்)

4. ஓவரா மேக்கப் போட்டுக்கறது உங்களுக்கு சுத்தமா 
பிடிக்காது.. ஒன்லி லைட் மேக்கப்..
(எவ்ளோ "ஓவரா" இருந்தாலும்.. அவங்கள பொறுத்தவரை 
அது "லைட்" தான்)

5. உங்களுக்கு பிடிச்ச ஹீரோ.... விஜய்ய்ய்ய்ய்...
(அப்டினு சொல்லிட்டே அவங்க மூஞ்சை பாக்கணும்.. 
ஸ்மைல் வந்தா... விஜய்னே முடிச்சிடணும்.. மூஞ்சி மாறிச்சின்னா..... விஜய்ய்ய்ய்... இல்ல.. அஜித்னு முடிச்சிடணும்...)

6. நீங்க ரொம்ப தன்னம்பிக்கையான ஆளு.., சமுதாயத்துல 
சாதிச்சு சொந்த கால்ல நிக்கணும்கறது தான் உங்க இலட்சியம்..
(அப்டி ஒரு ஐடியாவே இல்லன்னாலும்.. ஆமானு தான் சொல்லி 
ஆகணும்.. இது பிரஸ்டீஜ் மேட்டர்..)

லாஸ்ட் பட் நாட் லீஸ்ட்..

7. யாருக்கும் உங்க மொபைல் நம்பர் குடுக்கறது உங்களுக்கு 
பிடிக்காது.. ஆனா உங்களுக்கு ஒருத்தரை பிடிச்சி போச்சுன்னா.. 
அவங்க கேக்காமலே உங்க நம்பரை தருவீங்க..

இப்ப இவ்ளோ போதும்.. மீதிய போன்ல பேசிக்கலாம்..!!

Friday, June 3, 2016

"ரெண்டு நாளா உன் கூட பேசாம, உன் குரலை 
கேக்காம சோறே சாப்பிடல தெரியுமா..?!"
"நம்பற மாதிரி இல்லியே..."
"சத்தியமா... ஒன்லி கொத்து பரோட்டா, 
முட்டை தோசை, சில்லி இட்லி...."

Thursday, June 2, 2016

ஒரு போராளிக்கு இன்னொரு போராளி லைக் - மீம்ஸ்


டிஸ்கவரி சேனல்ல காட்றானுங்க...
என்னமோ இமயமலைல ஏறிட்டோம்.,
அமேசான் ஆற்றை நீந்தி்ட்டோம்.,
நயாகரால இருந்து குதிச்சி்ட்டோம்.. 
சாகசம் பண்ணிட்டோம்னு ஓவரா சீன் போடறானுங்க...
எங்க தில் இருந்தா வந்து... 

சேலம்-திருச்சி மெய்ன் ரோட்டை இந்த பக்கம் 
இருந்து அந்த பக்கம் கிராஸ் பண்ணி காட்டுங்கடா பாப்போம்....

# நாங்கல்லாம் தினம் தினம் சாகசம் பண்ணிட்டு இருக்கோம்டா...!!!


கடந்த ஒரு வருட காலமாக நான் ஒரு சஸ்பென்ஸ் கிரைம் நாவல் எழுதி வருவது அனைவரும் அறிந்ததே...
அந்த நாவல் சென்னையில் நடைபெறும் 39-வது புத்தகக் கண்காட்சியில்.......
ஸ்டால் No.1-ல் இருந்து ஸ்டால் நமபர் 777- வரை எதிலுமே கிடைக்காது...
சஸ்பென்ஸ் வெளியே தெரிந்துவிடும் என்ற காரணத்தால் நாவலை எங்க வீட்டு பீரோவில் பத்திரமாக பூட்டி வைத்துள்ளேன் என்பதை இங்கே அனைவருக்கும் தெரியப்படுத்திக் கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன்.
ஊர்ல மழை பேஞ்சு மொபைல் நெட்வொர்க்
எல்லாம் மக்கர் பண்ணிட்டு இருந்தது..
செக் பண்றதுக்காக என் ப்ரெண்ட் ஆனந்த்க்கு
போன் பண்ணினேன்..
" வெங்கி.. நீ பேசறது தெளிவா கேக்கலை.. "
சரினு BSNL-ஐ கட் பண்ணிட்டு... Vodafone-ல கூப்பிட்டேன்...
" இப்ப கேக்குதா..?! "
" இப்பவும் கர கரனு தான் கேக்குது.. "
"சரி இரு.."
என் Wife ஏர்செல்ல இருந்து கூப்பிட்டேன்...
" மச்சி.. இப்ப..? "
" ம்ஹும்.. இதுவும் க்ளியரா இல்ல... எதுக்கும்
சிக்னல் செக் பண்ணு...."
கால் கட் பண்ணிட்டு நேரா அவன் வீட்டுக்கு
போயி அவன் முன்னாடி நின்னேன்...
" இப்ப நான் பேசறது கேக்குதா? "
" சுமாரா கேக்குது.. ஹி., ஹி., ஹி..!! "
பளார்..!!
" மொதல்ல போயி காதை செக் பண்றா நாயே...!!"
"நம்ம ஊர்ல ரிலையன்ஸ் Jio வந்துடுச்சாடா..?"
" சீக்கிரம் வந்துடும்.."
"எப்டி சொல்ற..?"
"Shankar Ji-க்கே கெடைச்சிடுச்சாம். அவருக்கு 
கெடைச்சா கடைக்கோடி தமிழனுக்கே கெடைச்ச மாதிரி.."
"ரைட்டேய்.."