Monday, October 31, 2016

வீணா ஸ்ரீவாணி வீணை வாசிக்கறது பாத்துட்டு என் Wife கி்ட்ட...
" நிர்மலா.. இந்த மாதிரி எதாவது இன்ஸ்ட்ரூமெண்ட் வாசிக்கணும்னு சின்ன வயசுல இருந்தே எனக்கு ரொம்ப ஆசை..! "
" ஆஹான்...?!! "
" நான் வேணா.... வீணை கத்துக்கட்டுமா..?! "
" வேணாம்ங்க... நீங்க அமெரிக்க ஜனாதிபதி ஆகிடுங்க... "
" அமெரிக்க ஜனாதிபதியா..?! என்ன உளர்ற..?! "
" இல்ல... நீங்க வீணை கத்துக்கறத விட இது ஈஸியா இருக்கும்னு தோணுது...!! "
# கிர்ர்ர்ர்ர்....!!

Sunday, October 30, 2016

" நைட் போட்டோகிராபி கத்துக்கறேனு கேமரா தூக்கிட்டு போனீங்க..? "
" கத்துக்கிட்டேன்ல... "
" என்ன கத்துகிட்டீங்க..? "
" நைட்ல போட்டோ எடுத்தா.... ஃப்ளாஷ் யூஸ் பண்ணனும்... ஹி.,ஹி.,ஹி.. "
#போட்டோகிராபி டிப்ஸ்...!!
தீபாவளினா.... ஸ்வீட் செஞ்சு பக்கத்து வீட்டுக்காரங்க, எதிர் வீட்டுக்காரங்க, பின் வீட்டுக்காரங்க, சொந்தக்காரங்க இப்டி யார் குடுத்தாலும்... மிஸ் பண்ணாம வாங்கி சாப்பிட்டுடுவோம்...
இந்த வருஷம் இன்னும் யாருமே குடுக்கல...
வர வர உலகத்துல அன்பு கொறைஞ்சிட்டே வருது....!!

Friday, October 28, 2016

இன்னிக்கு " தேவி " படம் பாத்தாச்சு...

நல்லவேளை " படம் பாத்துட்டீங்களா வெங்கட்"-னு தமன்னா கால் பண்றதுக்குள்ள பாத்துடணும்னு நெனச்சிட்டு இருந்தேன்....

ஏன்.. ஏன்... அப்டி டவுட்டா பாக்கறீங்க?

அட சத்தியமா தான்.. நம்புங்க...

தமன்னாகிட்ட இருந்து கால் இன்னும் வரல.. ஹி.,ஹி.,ஹி..!!

Thursday, October 27, 2016

வீரு கண்ணா... உன்னை ஏன் எல்லார்க்கும் புடிச்சி இருக்கு தெரியுமா... ரிடையர்டாகிட்டாலும் வெளாசறதையும், அடிச்சி நொறுக்கறதையும் நீ இன்னும் விடல....
Wednesday, October 26, 2016

இப்பல்லாம் என்கிட்ட வந்து பேசற என் ஃபிரண்ட்ஸ்... கெளம்பறப்ப,
'உன் கைய காலா நெனச்சிக் கெஞ்சிக் கேக்கறேன்... நாம பேசினத ஃபேஸ்புக்ல போட்டு என் மானத்தை வாங்கிடாதே'ன்னு சொல்லிட்டுப் போறானுங்க...
எல்லோரும் இப்டியே சொன்னா... அப்புறம் எப்டிதான்டா நான் தொழில் பண்றது...?!!
# ஒரே குஷ்டமப்பா...!!!

Tuesday, October 25, 2016

ஒரு பொண்ணு ப்ரொஃபைல் பிக்சர்ல கண்ணு மட்டும் வெச்சி இருந்திருக்கு..
இந்த மங்கு பன்னாட போயி..
'உங்க கண்ணைப் பாத்தா நயன்தாரா கண்ணு மாதிரியே இருக்கு'ன்னு கமெண்ட் போட்டுச்சு..
அந்தப் புள்ளயும் 'அது நயன்தாரா கண்ணே தான்'னு ரிப்ளை போட்டு இருக்கு...
உடனே இந்த நாயி என்கிட்ட வந்து..
"மச்சி.. இத்தன நாளா நயன்தாரா என் ப்ரெண்ட் லிஸ்ட்ல இருந்து இருக்கு.. இன்னிக்கு தான் கண்டுபுடிச்சேன்"னு சொல்றான்...
அடேய்ய்ய்ய்...!!
# புடிச்சி ஜெயில்ல போடுங்க சார் இவனை..

Sunday, October 23, 2016

மங்குவும் நானும் பேசிட்டு இருந்தப்ப...
" நீயே சொல்லு மச்சி.. அழகா பொறந்தது என் தப்பா..?! "
" நீயெல்லாம் பொறந்ததே தப்புடா வெண்ணை..!! "

Saturday, October 22, 2016


ஓ காட்...
சொர்ணமால்யா போட்டோவுக்கு ஒரு லைக் போட முடியல... இதுக்கு மேல நாம ஃபேஸ்புக்ல கன்டினியூ பண்ணனுமா...
ஜிந்திச்சேன்.....
ஜிந்திச்சேன்....
ஜிந்திச்சேன்....
அப்ப கனநேரத்தில் உதிச்சது ஒரு சிந்தனை...
.
.
.
" அதான் தமன்னா போட்டோவுக்கு லைக் போட முடியுதுல்ல... "
அட ஆமால்ல....
மனசை மாத்திக்கிட்டேன்... ஹி., ஹி., ஹி..!!!

Friday, October 21, 2016

" மச்சி க்ரீன் டீ குடிச்சா உடம்பு கம்மியாகும்னு சொன்னாங்க... ஆனா ஆகலியே... "
" நீ எப்ப குடிச்சே..? "
" ஒரு மாசமா குடிக்கிறேனே... "
" எப்டி குடிச்சே...? "
" டெய்லி ரெண்டு.. காலைல 7 மணி, அப்புறம் 5 மணி.. "
" தப்பு பண்ணிட்டியே மச்சி... க்ரீன் டீ எப்பவும் டிபன் , சாப்பாடு சாப்பிட்டதும் குடிக்கணும்.. "
" அப்டியா..? அப்டி குடிச்சா என்ன ஆகும்..?! "
" நீ சாப்பிட்டதெல்லாம் வாந்தி எடுத்துடுவே... அப்ப ஆட்டோமேடிக்கா உடம்பு கம்மியாகி தானே ஆகணும்... ஹி, ஹி, ஹி... "
# க்ரீன் டீ சீக்ரெட்...!

Wednesday, October 19, 2016

நேத்து நானும் என் சகலையும் ஹோட்டல்க்கு போனோம்...
நானு 4 தோசை, 2 புரோட்டா, ஒரு சிக்கன் வெச்சிக்கிட்டேன்...
என் சகலை 2 தோசை, 1 புரோட்டா, ஒரு சிக்கன் வெச்சிட்டு அத சாப்பிட முடியாம சாப்பிட்டுட்டு இருந்தாரு...
"எனி ஹெல்ப் சகலை?"ன்னு கேட்டேன்...
"நோ தேங்க்ஸ்" சொல்லிட்டாரு..
அப்ப பார்சல் வாங்கிட்டு வர சொல்லி வீட்ல இருந்து போன் வந்தது..
சரி வீட்டுல போயி கன்டினியூ பண்ணிக்கலாம்னு 3 சிக்கன் பார்சல் வாங்கிட்டேன்...
வீட்டுக்கு வந்தா...
எனக்கு தேங்க்ஸ் சொல்லிட்டு சாப்பிட ஆரம்பிச்சுட்டாங்க..
நாலு தோசையாச்சும் குடுங்கன்னு கேட்டா மொறைக்கறாங்க...
ம்ம்.. அப்புறம் என்ன.. பசியோட தூங்க வேண்டியதா போச்சு...
காலைல மணி 6.45..
என் ப்ரெண்ட் ஆனந்த்க்கு போனை போட்டேன்...
" ஏன்டா நாயே... காலங்காத்தால எதுக்குடா கூப்பிடற..? "
" ம்ம்.. அமெரிக்க ஜனாதிபதி எலக்ஷன்ல டிரம்ப்க்கு ஓட்டு போடலாமா.? ஹிலாரிக்கு ஓட்டு போடலாம்னு டிஸ்கஸ் பண்ண.. "
" சன்டே கூட நிம்மதியா தூங்க விடமாட்டியா..? "
" ஓ மை காட்... இன்னிக்கு சன்டேவா...?!! "
நான் அதிர்ச்சியாகவும்.. என் சின்னப் பையன் உள்ள வரவும் சரியா இருந்தது...
வந்தவன்... என் தலைல ஒரு கொட்டு கொட்டிட்டு போனான்...
" என்னடா அங்க சத்தம்..? "
" ஒண்ணுமில்ல... என் பையன் என்னை கொட்டிட்டு போறான்.. "
" எதுக்கு..? "
" இன்னிக்கு சன்டேனு ஞாபகமில்ல.. ஸ்கூலுக்கு ரெடியாகுனு எழுப்பி அனுப்பிட்டேன்.. அதான்.."
" உனக்கு நல்லா வேணும்.. "
" அட நீ வேற.. எனக்கு ஒரே டென்ஷனா இருக்கு.. "
" இதுல என்னடா டென்ஷனு..? "
" பசங்களுக்கு டிபன் ரெடி பண்ணுனு என் Wife-ஐ 6.20 க்கு எழுப்பி அனுப்பி வெச்சி இருக்கேனே... "
# சண்டேய்ய்ய்ய்...!!

Tuesday, October 18, 2016

இன்னிக்கு என் ப்ரெண்ட் ஜெய் வீட்டுக்கு போயிருந்தேன்...
அப்ப அவன் கொழந்தையா இருக்கறப்ப எடுத்த ‍போட்டோஸ் எல்லாம் எங்கிட்ட காட்டிட்டு இருந்தான்.. நானும் பாத்துட்டு...
" ஆச்சரியமா இருக்கு மச்சி... நம்பவே முடியல.. "
" நெசமா நான் தான்.. "
" அட நான் அத சொல்லல மச்சி... அந்த காலத்துலயே கேமரா எல்லாம் இருந்து இருக்கு பாரேன்... "
" அந்த காலத்துலயேவா... அடிங் கொய்யாலே...!! "
சாப்பிட்டுட்டு இருந்த மிக்சர் தட்டை பிடுங்கிட்டு தொரத்தி விட்டுட்டான்...
# மிக்சர் சாப்பிடும்போது கலாய்க்க கூடாதுனு தெரிந்துகொண்ட நாள் இன்று...!!

Sunday, October 16, 2016

Jio Speed - மீம்ஸ்

என் Wife கிட்ட எனக்கு ரொம்ப பிடிச்சதே அவங்களோட தன்னடக்கம் தான்...
ஒரு பெரிய எழுத்தாளரோட Wife-ங்கற கர்வம் அவங்ககிட்ட துளி கூட கெடையாது... ஹி.,ஹி.,ஹி...!!
ஹேப்பி பர்த் டே நிர்மலா..

Saturday, October 15, 2016

முன்னெல்லாம் புருஷன் கூட சண்டைன்னா... அம்மாவுக்கு போனை போடுவாங்க...
இப்ப ஃபேஸ்புக்ல ஸ்டேடசா போடறாங்க...
# டெக்னாலஜி இச் இம்ப்ரூவ்டு சோ மச்ச்ச்ச்ச்....!!!

Friday, October 14, 2016

B.Com முடிச்சதும்.. நெக்ஸ்ட் என்ன பண்ணலாம்னு யோசிச்சப்ப எனக்கு இருந்தது ரெண்டு சாய்ஸ்..
ஒன்னு C.A ., இன்னொன்னு M.C.A
நான் MCA எடுத்தேன்.. ( ஏன்னா.. இதானே மூனு எழுத்து.. ஹி., ஹி., ஹி..!! )
நேத்து நானும் என் Wife-ம் பேசிட்டு இருக்கும் போது..
" நீங்க C.A எடுத்து படிச்சி ஆடிட்டர் ஆக இருக்கலாம்னு "
" ஆடிட்டரா..? எதுக்கு..? "
" பின்ன.. நானும் ஆடிட்டர் Wife-னு பெருமையா சொல்லிக்குவேன்ல.. "
" அவ்ளோ தானே கவலைய விடு... "
" என்ன.. இனிமே படிச்சி ஆடிட்டர் ஆக போறீங்களாக்கும்..? "
" ஹி., ஹி., ஹி.. இல்ல.. என் பேரை "ஆடிட்டர்"னு மாத்தி வெச்சிக்க போறேன்... "
# Mr.ஆடிட்டர் MCA... எப்பூடி...?!

Thursday, October 13, 2016

பிரேமம் ( தெலுங்கு ) - மீம்ஸ்


புளி சோத்துல முட்டைய வெச்சி.. பிரியாணினு ஏமாத்திட்டானுவ....

நாக சைதன்யாவுக்கு பதிலா நாகர்ஜுனாவையே போட்டு இருக்கலாம்...
ஸ்ருதிஹாசனுக்கு பதில் கமல்ஹாசனையே டான்ஸ் ஆட சொல்லி இருக்கலாம்....
# கர்மம்டா...!!

Wednesday, October 12, 2016

'நீங்க நல்லா கவிதை எழுதுவீங்களாமே'ன்னு கேட்டா.... நூத்துக்கு அம்பது பொண்ணுங்க,
'ஆமா... இதெப்படி உங்களுக்குத் தெரியும்'ன்னு கேப்பாங்க...
அதே... 'நீங்க சூப்பரா பாடுவீங்க தானே'ன்னு கேட்டுப் பாருங்க... நூத்துக்குத் தொன்னூறு பொண்ணுங்க,
'ஆமா... எப்ப கேட்டீங்க'ன்னு கேப்பாங்க...
ஆனா... தப்பித் தவறிக் கூட 'நீங்க நல்லா சமைப்பீங்களாமே'ன்னு மட்டும் கேட்டு வெக்காதீங்க...
கலாய்க்கறோம்னு கண்டுபிடிச்சிடுவாங்க...!!!

Tuesday, October 11, 2016

" ஏங்க.. கேட்டா பிரபலம்னு சொல்லிக்கறீங்க.. அப்பலோ டாக்டர்ல ஒருத்தர் கூடவா உங்க ப்ரெண்ட் லிஸ்ட்ல இல்ல.. "
" அத ஏம்மா கேக்கறே.. எவனை கேட்டாலும் அப்பலோ டாக்டர் ரேஞ்ச்க்கு தாம்மா பேசறாய்ங்க... "
# மிடிலடா...!!!

Monday, October 10, 2016

" மச்சி.. ஒரு மணி நேரத்துல 1000 லைக்ஸ் வரணும்.. ஒரு ஐடியா சொல்லேன்... "
" நீ ஃபேஸ்புக் விட்டு போறேனு ஒரு ஸ்டேடஸ் போடு.. வரும் பாரேன்.... "
# அடேய்ய்ய்ய்ய்.....

Friday, October 7, 2016

" உங்கள பாத்தா எங்கண்ணன் மாதிரி இருக்கு... அண்ணானு கூப்பிடவா..? "
" உன்னை பாத்தா கூடத்தான் எங்க பெரியம்மா மாதிரி இருக்கு.. நானும் பெரியம்மானு கூப்பிடவா..?!! "
# ஆருகிட்ட...!!

" பணத்தை எப்ப மச்சி திருப்பி தருவ ..? "
" வெள்ளிக்கிழமை..! "
" எந்த வெள்ளிக்கிழமை..? "
" எந்த வெள்ளிக்கிழமைல விஜய் சேதுபதி படம் ரிலீஸ் ஆகலியோ.. அந்த வெள்ளிக்கிழமை..!! "
" அடிங் கொய்யாலே... பணத்தை திருப்பி தரமாட்டேனு சிம்பாலிக்கா சொல்றியாடா..? "
# டிஷ்யூம்.. டிஷ்யூம்..!!

ஆக்சுவலி அந்த கிப்ட் பாக்ஸ்குள்ள என்ன இருந்துச்சுன்னா....
.
.
.
.
.
.
.
.
.
ம்ம்க்கும்... சொன்னாலும் நீங்கல்லாம் நம்பவா போறீங்க..?!!!
:P :P
அறிவாளியா இருக்கறதுக்காக பெருமை பட்டுக்கலாம்.. ஆனா பந்தா பண்ணிக்க கூடாது...
என்னய எல்லாம் பாருங்க.. நான் என்னிக்காச்சும் பந்தா பண்ணியிருக்கேனா..?!!
ஹி., ஹி., ஹி...!!
# நமக்கிந்த வெளம்பரம் புடிக்காதில்ல மொமெண்ட்...!!

Wednesday, October 5, 2016

ப்ரியா இருக்கும் போது கால் பண்ணு - Photo Statusஆபீஸ்ல வெட்டியா உக்காந்து இருந்தேன்.. அப்ப மொபைல் ரிங் ஆச்சு...
" ஹலோ... "
" ஹலோ சார்... நாங்க பஜாஜ் ஃபினான்ஸ்ல இருந்து கால் பண்றோம்.. "
" சொல்லுங்க மேடம்... "
" உங்களுக்கு பிஸினஸ் லோன் வேணுங்களா..?! "
" குடுங்க மேடம்... "
" உங்க பேரு என்னானு தெரிஞ்சிக்கலாங்களா..?! "
" வெங்கட்... "
" என்ன பிஸினஸ் சார் பண்றீங்க..?! "
" நீங்க லோன் குடுத்ததுக்கு அப்புறம் தாங்க மேடம் அத முடிவு பண்ணனும்... "
( டொக்.... )
ஹலோ...ஹலோ... வெச்சிட்டாங்க.... ஹி., ஹி., ஹி...!!
என் Wife இந்த பர்த்டேக்கு Soft silk கேட்டாங்கனு நேத்து எடுக்க போயிருந்தோம்...
அங்க ஒரு Sandal கலர் சேலையும், ஒரு Fanta கலர் சேலையும் ஃபைனல்ஸ்ல நின்னது...
என் Wife-க்கு ஒரே குழப்பம்..
ஆஹா இதான் நான் கருத்து சொல்ல சரியான சமயம்...
" நிர்மலா நீ இந்த Sandal கலர் எடுத்துக்கோ... கட்டினா அசப்புல தமன்னா மாதிரியே இருப்பே.. "
" என்னாது.. தமன்னாவா...? உவ்வ்வே...!!! "
" ம்ம்க்கும்.. சரி சரி.. அந்த Fanta கலரே எடுத்துக்கோ.. "
" அந்த Sandal கலரும் நல்லா இருக்கே...? "
( ஆஹா.. ரெண்டு சேலைக்கும் பிட் போடற மாதிரி தெரியுதே... )
" இல்ல நிர்மலா.. அத விட இது உனக்கு சூப்பரா இருக்கும்... "
" அப்படீன்றீங்க..?!! "
கடைசில Fanta கலர் சேலைய பில் போட்டுட்டு வெளியே வந்தோம்..
ஆனா என் Wife மறுபடியும் கடைக்குள்ள போக டிரை பண்ணினா.. நான் கைய பிடிச்சிட்டேன்...
" என்ன நிர்மலா..? "
" இல்ல.. அந்த Sandal கலர் சேலை எவ்ளோனு பாக்கவேயில்லை... பாத்துட்டு வர்றேன்.. "
" அத நாம எடுக்கவேயில்லையே.. எதுக்கு பாத்துகிட்டுனு " சொல்லி நைசா கூட்டிட்டு வந்துட்டேன்..
எனக்கு தான் நல்லா தெரியுமே...
அந்த Sandal கலர் சேலை இத விட 1000 ரூபா அதிகம்னு... ஹி., ஹி., ஹி...!!
# அனைத்து ராசதந்திரங்களையும் கரைத்து குடித்திருக்கிறாயடா வெங்கி..!!!
" மச்சி மச்சி இங்க வாயேன்.. "
" என்ன..? "
" லேட்டஸ்ட் நியூஸ் மச்சி.. அப்பல்லோ ஆஸ்பத்திரி உள்ளே என்ன நடக்குது தெரியுமா..? "
" அது இருக்கட்டும்.. இன்னிக்கு உன் லஞ்ச் பாக்ஸ்ல என்ன சாப்பாடு இருக்கு தெரியுமா..? "
" ஹி., ஹி., ஹி.. அது தெரியாதே..!! "
# அடிங் கொய்யாலே..!
உலகத்துல இருக்கற பூரா அறிவாளிகளும் அமெரிக்காலயோ.., நாசாலயோ இருக்காங்கன்னா நெனச்சிட்டு இருக்கீங்க...?!!
அதான் இல்ல....
பூரா பயலும் வாட்ஸ் அப்ல தான் இருக்கானுங்க...
# பொழுது விடிஞ்சா இவனுங்க அக்கப்போரு இருக்கே..... மிடில...