Tuesday, November 25, 2014எனக்கு மேத்ஸ்னா அலர்ஜி...

என் ப்ரெண்ட் ஆனந்துக்கு..
அலர்ஜி + அலர்ஜி + அலர்ஜி..

அன்னிக்கு எங்க மேத்ஸ் மாஸ்டர்
பிரபாகரன் சார்து தான் ஃபர்ஸ்ட் பீரியட்..

நானும் ஆனந்தும் பேசிக்கிட்டோம்..

" வாடா.. நான் பாகிஸ்தானுக்கு ஓடி போயிடலாம் "

" டெரரிஸ்ட் கிட்ட மாட்டிபோமேடா.?!! "

" அது பரவாயில்ல.. அவங்க கொஞ்சம்
கம்மியா கொடுமை பண்ணுவாங்க.. "

" அப்படீன்ற...?!!! "

# எத்தனை எத்தனை பார்முலா..
இருக்க விட்டாய்ங்களா எங்களை நார்மலா.!!போன வாரம் என் ப்ரெண்ட் வினோத்க்கு
கல்யாணம் ஆச்சு...
இன்னிக்கு சாயந்திரம் போன் பண்ணினான்..
" மச்சி.., நீ கல்யாணத்துல என்ன கிப்ட்
குடுத்தே..?!! "
" ஏன்டா.. இன்னும் பிரிக்கலையா..? "
" என் அக்கா பசங்க எல்லா கிப்டையும்
ஓபன் பண்ணிட்டாங்கடா.. எது யார்
குடுத்தானு தெரியல... "
" சரி.. சரி.., நாளைக்கு நானே வீட்டுக்கு
வந்து.. எதுனு சொல்றேன்.. "
# இருக்கறதுலயே நல்லதா பாத்து
நம்மளதுனு சொல்லிட வேண்டியது தான்.. 
ஹி., ஹி., ஹி...


ஆஹா... இவ்ளோ நாள் நம்ம ரேஞ்ச்
தெரியாம வாழ்ந்திருக்கோம் போலயே,,!!!


Sunday, November 16, 2014

பொண்டாட்டி பர்த்டேன்னா... - PC


இன்று எனக்கு " குழந்தைகள் தின " வாழ்த்து 
சொன்ன அனைத்து ஆன்ட்டி, அங்கிள்களுக்கு 
என் நன்றிகள்...!!!
# நீ மீசை வச்ச குழந்தையப்பா மொமண்ட்..!!!

Monday, November 10, 2014

சென்னை to சேலம்...
KPN 2.30 மணி பஸ்..
எத்தனை மணிக்கு சேலம் ரீச்ஆகும்னு
டிரைவரை கேட்டாலும் சொல்ல மாட்டேங்குறாரு.., 
கிளினரும் சொல்ல மாட்டேங்குறான்..
இதை பத்தி என் ப்ரெண்ட் ஜெகன்கிட்ட
போன்ல பொலம்பிட்டு இருந்தேன்..
உடனே அவனும்...
" நீ டிரைவர்கிட்ட போயி.. 9 மணிக்கெல்லாம்
சேலம் போயிடுவீங்களானு கேளு.. அவரு..
7 மணிக்கே போயிடுவோம்னு சொல்லுவாருனு "
ஐடியா கொடுத்தான்..
நானும் டிரைவர்கிட்ட போயி கேட்டேன்..
ஆனா... அவரு என்னை முறைக்கறாரு..
ஏன் முறைக்கறாரா..?!!
" நாளைக்குள்ள சேலம் போயிடுவீங்களானுல்ல
நான் கேட்டேன்.!! ஹி. ஹி.. "
# கொஞ்சம் ஓவராத்தான் போயிட்டோமோ..?!!

" என்னடா மச்சி ஒருவாரமா ஆளையே
காணோம்..?!! "
" மெட்ராஸ் ஐ-டா... ஒருவாரம் படுத்தி
எடுத்துடுச்சு...! "
" உனக்கு ஒரு விஷயம் தெரியுமா..?!! "
" என்ன..?!! "
" ஆக்சுவலி... மெட்ராஸ் ஐ.. வந்தா
ரொம்ப நல்லதாம்டா.. "
" அப்படியா..?!! யார்ரா சொன்னா...? "
" என் ப்ரெண்ட் சுரேஷு....! "
" எப்படி நல்லதுனு சொல்றான்..?!! "
" அவன் மெடிக்கல் ஷாப் வெச்சி
இருக்காண்டா, டெய்லி 5000 ரூபாய்க்கு
மருந்து விக்குதாம்..!! ஹி., ஹி., ஹி... "
# அடங்கொய்யாலே...!!
" ஏன்டா மச்சி சோகமா இருக்கே..? "
" பாரு அவன் எல்லாம் பொண்டாட்டிக்கு
நகை வாங்கி தர்றான்னு என் Wife
சண்டைக்கு வர்றா மச்சி.. "
" எவன்டா அது..? "
" டிவி வெளம்பரத்துல மச்சி.. பின்ன
நகை வெளம்பரத்துல நகை வாங்கி
குடுக்காம நாய் பிஸ்கட்டா வாங்கி
தருவான்..??!! "
# அதானே..!!!

லக்ஷ்மி மேனன் 5 வயசுல FB - PCவிளம்பரங்களுக்கு நடு நடுவே 
படம் போடும் விஜய் டிவிக்கு 
என் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்..!

நேத்து வாட்ஸ் அப்ல என் ப்ரெண்ட் ரவி
அவன் பட்டாசு வெக்கற மாதிரி
போட்டோ அனுப்பி இருந்தான்...
அதை பாத்ததும் ஒரு கவிதை எழுதினேன் 
பாருங்க...
.
.
.
.
.
.
.
.
" ஒரு
நரகாசுரனே
தீபாவளி
கொண்டாடுகிறானே
அடடே..!!! " ( 3 ஆச்சரியக்குறி )
# இந்த கவிதை நல்லாத்தானே இருக்கு..
அப்புறம் ஏன் அவன் திட்றான்...?!! - டவுட்டு
என்னதான் இன்னிக்கு ஃபேஸ்புக்ல
ஒரளவு பிரபலமா(?!) இருந்தாலும்
நான் ஒரு Blogger-னு சொல்லிக்கறதுல தான்
எனக்கு ரொம்ப பெருமை.. ஏன் கர்வம்னே கூட
சொல்லலாம்..
பதிவை போட்டு..., திரட்டில இணைச்சி..,
அதுக்கு ஓட்டு வந்து.., பிரபல பதிவு ஆகி..,
கமெண்ட் போட., பதில் போடன்னு சும்மா
பர பரனு இருக்கும்..
இன்னிக்கு நான் Follow பண்ற Bloggers Blog
எல்லாம் போயி பார்த்தேன்... அதுல
ரெண்டு மூனு பேரை தவிர மத்தவங்க
பதிவு போட்டு ஒரு வருஷம், 2 வருஷம்னு
ஆகுது..
படிச்ச காலேஜை பார்க்கும் போது
ஒரு விதமான ஏக்கம் வரும் பாருங்க
அப்படி ஒரு உணர்வு இன்னிக்கு எனக்கு..
அது ஒரு கனா காலம்..!!!

என் பையனுக்கு தமிழ் பேச்சுப்போட்டி..
வழக்கம் போல நானும் எழுதி குடுத்துட்டேன்..
அதுல " கூகுள் இருக்க பயமேன் " னு 
ஒரு லைன் வரும்...
நேத்து ஸ்கூல் விட்டு வந்ததும் என் பையன்
என்கிட்ட வந்து.......
" அந்த லைன் வேணாம்னு எங்க மிஸ்ஸூ
சொல்லிட்டாங்கப்பா... "
" ஏன்..? "
" தமிழ் பேச்சுபோட்டில இங்கிலீஷ் வார்த்தை
கலந்து பேசக்கூடாதாம்.. "
" ஙே...!!!! "
# ஃபேஸ்புக்கை " முகநூல்"-னு மொழிபேத்த
தமிழ் அறிஞர்களே... உங்களுக்கு மறுக்கா
வேலை வந்துடுச்சு...
அப்பாலிக்கா ஃபீரியா இருந்தீங்கன்னா..
இந்த கூகுளையும் கொஞ்சம் பேத்து குடுத்துட்டு
போங்க அய்ய்யா.....

உகாண்டா, சோமாலியா செல்போன் கம்பெனி - PC


போத்தீஸ் Formal Shirt Search - PC


யான் - PC


போன் பண்ணிட்டு இருக்கும் போது
ஒரு 10 ரிங் போயிட்டா..
டக்னு யாருக்கு போன் பண்றோம்.?
எதுக்கு பண்றோம்னு மறந்து போயிடுது.
எனக்கு மட்டும் தான் இப்படியா.?!!


அந்த பக்கம் போனப்ப போராட்டம்
நடந்துட்டு இருந்துச்சு..
எனக்கு தெரிஞ்ச ஒருத்தர் அங்கே இருந்தாரு.
அவர்கிட்ட போயி.....
" என்னண்ணே நடக்குது இங்கே..?! "
" அம்மாவை ஜெயில்ல போட்டுட்டாங்கல்ல
அதுக்காக போராடுறாங்க.... "
" அது சரிண்ணே.. அதுக்கு எதுக்கு மொட்டை
எல்லாம் போட்டுட்டு... "
" அம்மா மேல இருக்குற விசுவாதத்தை
காட்றாங்கப்பா... "
டக்னு நான் கேட்டேன் பாருங்க...
" அப்ப ஏன்ணே வட்ட செயலாளரு.,
( பஞ்சாயத்து ) தலைவரு எல்லாம்
மொட்டை போட்டுக்கல...??!!! "
# பத்த வெச்சிட்டியே பரட்டை..!!
இன்னிக்கு ஒரு கல்யாண பங்ஷனுக்கு
போயிருந்தோம்...
அங்கே என் சகலை என்கிட்ட..
" பொண்ணை விட பையன் கொஞ்சம்
கலர் கம்மி போல..... "
" இல்ல.... மேக்கப் கம்மி..!!! "
இந்த பொண்ணுங்க கட்டிக்க போற 
சேலையை செலக்ட் பண்ற மாதிரியே 
கட்டிக்க போறவனையும் செலக்ட் 
பண்ண ஆரம்பிச்சா...

நம்ம நெலமை..?!!!

# காட் ஈஸ் கிரேட்..!!!
" மச்சி... Flipkart-ல ஒரு காபி மேக்கர்
வாங்கினேன்டா... 30% மிச்சம்.. "
" ம்க்கும்.. இதென்னடா பிரமாதம்..
எனக்கு 100% மிச்சம்... "
# Out of Stock

என்னடா இப்படி கிறுக்குத்தனமா
எல்லாம் ப்ரோகிராம் போடறான்னு
நாம நினைச்சா...
எப்படி ப்ரோகிராம் போட்டாலும் 
பார்கறானுங்க கிறுக்கனுங்கனு
அவன் நெனப்பானா இருக்குமோ..?!!
# டவுட்டு..