Thursday, May 28, 2015


கல்யாண மண்டபம்.
நைட் Buffet டின்னர் ..
நான் சாப்பிட்டு முடிச்சிட்டு 
கை கழுவும் போது தான் இந்த
மெனுவை கவனிச்சேன்...
( ஆஹா ரவா தோசை மிஸ் ஆகிடுச்சே.. )
என் Wife நிர்மலாகிட்ட சொன்னேன்...
" நிர்மலா... என்னைய ஏமாத்திட்டங்க..
எனக்கு ரவா தோசை வரல "
" அட விடுங்க... "
" நோ.. பழி வாங்கியே தீருவேன்..
நீ என்னா பண்றேன்னா... ஒரு ப்ளேட்
எடுக்கற.. "
" போயி ரவா தோசை வாங்கிட்டு வரணுமா.? "
" என்னை அவ்ளோ சீப்பா நெனச்சியா..? "
"பின்னே..? "
" போயி பர்ஸ்ட்ல இருந்து எல்லா
ஐட்டமும் வாங்கிட்டு வா "
# பழி வாங்குவோம்ல..

Wednesday, May 27, 2015

அப்ப என் சின்ன பையன் கோகுல்
LKG படிச்சிட்டு இருந்தான்...
ஒரு நாள் நான் அவன்கிட்ட ...
" இங்கிலீஷ்ல அப்பாவை எப்படி
கூப்பிடுவே.. "
" ஃபாதர்... "
" அப்ப தாத்தாவை.? "
" அவரையும் ஃபாதர் தான்... "
" தப்பு குட்டி., அவரு அப்பாவுக்கே
அப்பால்ல.. எப்படி கூப்பிடுவே.? "
டக்னு சொன்னான்...
" ஃபாதர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்... "

Tuesday, May 26, 2015

IPL 2015 - PS
எல்லோரும் " மாஸ்டர் ஃபிளான்..,
மாஸ்டர் ஃபிளான்" -னு சொல்றாங்களே...
யார்ரா அந்த மாஸ்டர்..?
# ஃபீலிங் கன்பியூஸ்ட்


IPL Final  
CSK பேட்டிங்ல தடுமாறிட்டு இருந்தது..
எனக்கு செம டென்ஷன்..
நான் என் Wife-ஐ பாத்து..
" என்ன இப்படி சொதப்பறாங்க..? "
" நீங்க சொல்லி குடுத்த மாதிரி
ஆடறாங்களோ என்னமோ...?!! "
" என்ன நக்கலா.? நாங்கல்லாம்
விளையாட கிரவுண்ட்ல இறங்கிட்டா..
சும்மா சிக்ஸ்., சிக்ஸா பறக்கும்.. "
" ஹி., ஹி., அப்ப நீங்க பவுலிங் தானே
போடுவீங்க..? "
" கிர்ர்ர்ர்ர்ர்ர்...! "

Monday, May 25, 2015

IPL - 2015

# CSK Vs MI ( FInals )

ஸ்டம்பை பாத்து த்ரோ பண்ண மாட்டோம்...
நாங்க த்ரோ பண்ற எடத்துல
ஸ்டம்பு இருக்குமாக்கும்.

# பார்தீவ் ரன் அவுட்

--------------------------------------------------------


" பேட்டிங் பிட்ச் தல.., அதான் அடிக்கறாங்க... "
" மொதல்ல நீ பிட்ச்ல பாலை டிப் பண்ணி
போடுடா வெண்ணை.. புல்டாசா போடுட்டு
பேச்சை பாரு.. "

---------------------------------------------------------------------------


" சென்னை சூப்பர் கிங்ஸ்க்கு....
பெரிய்ய விசிலு அடிங்க..! "
# இம்மாம் பெருசு போதுமா பாருங்க...!!
ஊ... ஊ....ஊ...!!
========================================

# CSK Vs MI

" சென்னை குப்பர் கிங்ஸ்க்கு
பெரிய விசிலு அடிங்க... "

# போடாங்... இனிமே சங்கு தான்
ஊதணும்...

=======================================


# CSK Vs KKR

அம்பயர் அம்பயர்... ஒருக்கா நல்லா
எண்ணி பாருங்க அம்பயர்...
ஜடேஜா பேட் பண்ணும் போது மட்டும்
பதினைஞ்சு, இருபது பேர் பீல்டிங் 
பண்றாங்களோனு டவுட்டா இருக்கு..

=====================================

# CSK Vs KXIP

ஜடேஜா அப்பாவுக்கு கூட அவன் மேல 
இவ்ளோ நம்பிக்கை இருக்காது.. 
ஆனா தோனிக்கு இருக்கு.

------------------------------------------------------

ஏ பஞ்சாப் பாய்ஸ்..
அவன் சிகப்பு சட்டை போட்ட
CSK ப்ளேயர்டா ...

# ஜான்சன்

=========================================

# RR Vs KXIP

சூப்பர் ஓவர்...
பஞ்சாப் டீம்ல பேட்டிங் பண்ணின
3 பேரும் ஃபாரினர்.,
பவுலிங் பண்ணினதும் ஃபாரினர்...

ராஜஸ்தான் டீம்லயும் அதே மாதிரி தான்...
# இதான் குடுத்த காசுக்கு வேலை
வாங்கறதுங்கறது...
எப்பூடி...?

=========================================

# CSK Vs MI

ரிக்கி பாண்டிங்., ஜான்டி ரோட்ஸ்.,
ஷேன் பாண்ட்., சச்சின், கும்பிளே..
எல்லாம் மும்பை இந்தியன்ஸ் பக்கம்...
அட போங்கடா... சீனி மாமாவே எங்க பக்கம்..!!!
------------------------------------------------------------------------

டேய் மலிங்கா... பேட்ஸ்மேனுக்கு பவுன்சர்
போட சொன்னா...
பின்னாடி கீப்பிங் பண்ற பார்தீவ் பட்டேலுக்கும்
சேர்த்து போடறியேடா..

-----------------------------------------------------------------------

அசந்தா அடிக்கறது உங்க பாலிசி..
அசராம அடிக்கறது எங்க பாலிசி..!!

-----------------------------------------------------------------------

" ஸ்டேடஜிக் டைம்ல ரிக்கி பாண்டிங்
என்ன மச்சி சொல்லியிருப்பான்.. "

" KFC-ல 5 பக்கெட் சிக்கன் ஆர்டர் பண்ணியிருக்கேன்.. 
சீக்கிரம் மேட்ச் முடிச்சிட்டு வந்தா.. சூடா 
சாப்பிடலாம்னு சொல்லியிருப்பான்... "

========================================

CSK Vs DD

CSK Won by 1 Run..!!!
# தோனிடா... தலடா...
## மூடுடா... படுடா..!!
( பேக்ரவுண்ட் வாய்ஸ்...! )

Sunday, May 24, 2015

கூட்டமா இருக்குற எடத்துல
ஒருத்தன் மட்டும் தனியா இருக்கான்னா....
.
.
.
.
.
.
.
.
அவன் ஃபேஸ்புக்ல ஸ்டேடஸ் அப்டேட்
பண்ணிட்டு இருக்கானு அர்த்தம்..
# ஃபேஸ்புக் போராளி அப்டேட்ஸ்
என் ப்ரெண்ட் காயத்ரி பொண்ணு தாரிணி
10th-ல 495 மார்க்...
" என்ன காயத்ரி இது... நம்ம ரெண்டு பேர்
மார்க்கை கூட்டினா கூட இவ்ளோ வராது 
போலயே..!!! "
" அப்படியா..? நான் 319 மார்க்.. நீ எத்தனை..?! "
" ஹி., ஹி., ஹி... இப்ப எதுக்கு அதெல்லாம்
விடு., விடு..!! "
# நமக்கு வில்லனே நம்ம வாய் தான்..!!!
நேத்து 10-th ரிசல்ட்.....
என் ப்ரெண்ட் காயத்ரி பொண்ணு
ரிசல்ட் கேக்கலாம்னு போன்
பண்ணினேன்...
"ஹலோ.. எங்கே தாரிணி.? "
"அழுதுகிட்டு இருக்கா.. "
( அச்சச்சோ.. போச்சா..? )
" சரி சரி அழ வேணாம் சொல்லு,
அடுத்த மாசம் எக்ஸாம் வெப்பாங்க
அதுல பாத்துக்கலாம்.. "
" டேய்... அவ 495.. ரெண்டு மார்க்
கம்மியா போச்சுனு அழுதுட்டு
இருக்கா.. "
" ஆ.... "
# என்னம்மா. இப்டி பண்றீங்களேம்மா......
என் சின்ன பையன் கோகுல்
கிரிக்கெட் பாத்துட்டு இருந்தான்..
எனக்கு ஆச்சரியமா இருந்தது.,
இவனுக்கு கிரிக்கெட் பத்தி ஒண்ணும் 
தெரியாதே.. பின்ன எப்படி.?
டெஸ்ட்டிங்......
" கோகுல்.. இந்த Yellow Dress எந்த டீம்..? "
" சென்னை சூப்பர் கிங்ஸ்... "
" அப்ப Blue Dress...? "
" மும்பை இந்தியன்ஸ்... "
பார்ரா....!!
கொஞ்ச நேரத்துல தோனி அவுட்...
பையன் குஷியாகிட்டான்...
எனக்கு ஒண்ணும் புரியல...
" குட்டி.. உனக்கு எந்த டீம் ஜெயிக்கணும்..? "
" மும்பை இந்தியன்ஸ்... "
" ஆ... ஏன்டா..? ஏன்..? "
என்னை லூச பார்க்குற மாதிரி பாத்துட்டு
சொன்னான்...
" ஏன்னா... நாமல்லாம் இந்தியன்ஸ் தானேப்பா... "
" அவ்வ்வ் "
# CSK Vs MI
100 லைக் வந்துடுச்சின்னு ஓவரா குதிக்காதே..
உன் ப்ரெண்ட் லிஸ்ட்ல மொத்தம் 1750 பேரு..
அப்ப 1650 பேருக்கு பிடிக்கலைன்னு அர்த்தம்டா
வெண்ணை...!!
# தட் ஙே மொமெண்ட்..!!

Sunday, May 17, 2015


ஜோதிகா நிறைய சீன்ல
" என் கனவு., என் கனவு"-னு
டயலாக் பேசறாங்க....
என் டவுட் என்னான்னா.....
ஒரு சீன்ல கூட ஜோதிகா தூங்கற
மாதிரி காட்டல...
அப்புறம் எப்படி கனவு வந்திருக்கும்..?!!
# டைரக்டர்... இந்த ஆங்கிள்ல நீங்க
திங்க் பண்ணி பாத்தீங்களா..?!!!
## 36 வயதிலேயே...

36 வயதினிலே....


ஜோ... 10 வீட்ல மாடி தோட்டம் போட்டு., 
பூச்சி மருந்து, உரம் இதனால ஏற்படுற
பாதிப்புகளை மக்களுக்கு எடுத்து 
சொல்லிட்டாங்களாம்..
உடனே விழிப்புணர்வு வந்துடுச்சாம்..
பசுமை புரட்சி ஏற்பட்டுடிச்சாம்...
ஜனாதிபதியே நேர்ல ஜோவை
பாராட்டணும்னு ஆசைப்படறாராம்..
அதுக்காக என்னமோ வார்டு கவுன்சிலரை
போயி மீட் பண்ற மாதிரி ஜோதிகா
பொசுக் பொசுக்னு ஜனாதிபதியை
போயி மீட் பண்றாப்ல.
என்னப்பா கலர் கலரா ரீல் விடறீங்களே..?!!
இதை தானே நம்மாழ்வார் ஐயா 40 வருஷமா
பண்ணிட்டு இருந்தாரு.. எத்தனை ஜனாதிபதி
கூப்பிட்டு பாராட்டினாங்க..?!!!
# இத கேட்டா... நம்மள....


36 வயதினிலே படம் வாட்சிங்...
" ஆணாதிக்கம்., பெண் உரிமை"-னு
ஜோதிகா மூச்சு விடாம பேசும் போது
எனக்கு பக் பக்னு இருந்தது..
( இந்த அக்கப்போருக்கு தான் நான்
" நீயா நானா " பார்க்கறதேயில்ல... )
பக்கத்துல திரும்பி பாத்தா....
என் Wife வேற ரொம்ப Interesting-ஆ
லயிச்சு பாத்துட்டு இருந்தாங்க..
இப்ப திக் திக் அதிகமாச்சு..!!
சரி.., படம் எந்த ரேஞ்ச்ல பாதிச்சி இருக்குனு
தெரிஞ்சிக்கலாம்னு நைசா பேச்சு குடுத்தேன்...
" நிர்மலா... படம் எப்படி..? "
" நல்லா இருக்குங்க..!! "
" வெச்ச கண்ணு வாங்காம பார்க்கறியே..
அப்படி என்ன பார்க்குற..? "
" போஸ்டர்ல ஜோதிகா பச்சை கலர்ல
ஒரு புடவை கட்டி இருக்காங்க.. அது
எப்ப வரும்னு பாத்துட்டு இருக்கேன்..!!! "
# அப்பாடா... தப்பிச்சோம்டா..!!!

Friday, May 15, 2015


என் ப்ரெண்ட் ரவி வீடு...
லஞ்ச் டைம்...
நானும் ரவியும் டைனிங் டேபிள்ல 
உக்காந்து இருந்தோம்..
ரவி Wife தீபா எங்களுக்கு பரிமாறிட்டு
அப்பளம் சுட கிச்சனுக்கு போயிட்டாங்க..
அப்ப ரவி....
" தீபா.... லஞ்ச் சூப்பர்மா..!! "
அவன் இன்னும் சாப்பாட்டுல கையே
வெக்கல... நான் அவனை அதிர்ச்சியா
பாத்தேன்..!!!
" என்னடா... இன்னும் சாப்பிடவே இல்ல
அதுக்குள்ள சூப்பர்னு சொல்ற..?!! "
உடனே அவன் கிசுகிசுனு சொன்னான்..
" ஹி., ஹி., ஹி..!! சாப்பிட்டப்புறம் இப்படி
சொல்ல என் மனசாட்சி ஒத்துக்காது மச்சி..!! "
# சுத்தம்..!!!!

Chitti.. Dismantle urself - PSமைசூர் அலப்பரைஸ்இது தான் " Karnataka State Open University "
" Open " University - னு பேர் வெச்சிட்டு
Gate - ஐ " Close " பண்ணி வெச்சிருக்கானுவ...
லூசு பசங்களா இருப்பாய்ங்க போல...
# மைசூர் அலப்பரைஸ் - 1

===================================================


உங்க கடமை உணர்ச்சிக்கு
ஒரு அளவே இல்லையா...?
# மைசூர் ZOO..

===================================================

அப்பாடா ஒரு வழியா டூர் முடிச்சி
வந்தாச்சு...
5 நாள் கழிச்சு இன்னிக்கு தான்
திருப்தியான டிபன்... சரவண பவன்ல...
நீதி : வெளியூர் டூரை விட
நம்ம ஊர் சோறே இனிது...!!
# மைசூர் அலப்பரைஸ் - 2

கூர்க் அலப்பரைஸ்ஹேய்..
இந்த காபி எஸ்டேட் என்ன விலை.?
அந்த டீ எஸ்டேட் என்ன விலை .?
ஐயோ... இப்ப நான் எதாவது வாங்கியாகணுமே...
# கூர்க் அலப்பரைஸ் - 1

========================================================

சாம்பார் இனிக்குது.,
சட்னி இனிக்குது.,
மசால் தோசை இனிக்குது.,
ஆனியன் தோசை இனிக்குது..
டேய்.. பச்சை மிளகாய் இருந்தா
கொஞ்சம் குடுங்கடா... அதுவும்
இனிக்குதானு செக் பண்ணிடறேன்..
என்ன டேஸ்டுடா உங்களுக்கு.?
# கூர்க் அலப்பரைஸ் - 2

=========================================================

கூகுளை நம்பற அளவுல கூட
கூட இருக்கறவனை நம்ப மாட்டேங்குறாங்க...
" வழி இந்த பக்கம்னு போர்ட் போட்டு இருக்கு.. "
" நீ எதுக்கும் கூகுள் மேப் பாரேன்... "
# கூர்க் அலப்பரைஸ் - 3