Monday, August 31, 2015

ஏர்டெல் வெச்சிருந்தப்ப
நெட்வொர்க் ப்ராப்ளம்னு சிக்னல் கட் ஆனா...
" வந்திருச்சா..? வந்திருச்சா"-னு அஞ்சு நிமிசத்துக்கு
ஒரு தடவை எடுத்து பாத்துட்டே இருப்பேன்...
BSNL-க்கு மாறினதுக்கு அப்புறம்
அந்த பிரச்னையே இல்ல....
இன்னிக்கு சிக்னல் கட் ஆனா
அது நாளைக்கு தான் வரும்.. நான்
போனை தூக்கி பீரோல வெச்சிடுவேன்..
# லெஸ் டென்ஷன்.. லெஸ் வொர்க்.

Saturday, August 29, 2015

ஊர்ல இருக்குற புள்ளங்க எல்லாம் வந்து
கையில கயிறு கட்டும்..
ஆனா...
வூட்ல இருக்குற தங்கச்சி நம்மள கண்டுக்காது...
# " ராக்கி.. "


ஐய்யயோ... இது விஜய் டிவிக்காரன் கண்ணுல 
சிக்குனா.. மெகா சீரியலா எடுத்து கொலையா கொல்லுவானே...

" வெங்கட் நீங்க சினிமாக்கு போலாம்ல.. "
" நம்மகிட்ட இருக்குற திறமைக்கு போலாம் தான்..
இருந்தாலும் அது கொஞ்சம் ரிஸ்கான ஃபீல்ட்..
அதான் யோசனையா இருக்கு..!! "
" ஐய்யோடா... FB-ல உக்காந்து மொக்கை போட்டு
இருக்கீங்களே.. அதுக்கு தியேட்டர்ல போயி
ஒரு சினிமாவாச்சும் பார்க்கலாம்லனு கேட்டா... "
" தியேட்டர்லயா... அவ்வ்வ்வ..!!!??? "
# நாம கொஞ்சம் ஓவரா போயிட்டோமோ.!!

Wednesday, August 26, 2015

இன்னிக்கு ஒரு கல்யாணத்துல என்னை
பாத்த என் ப்ரெண்ட் மணி...
" ஹேய் வெங்கி.. என்னடா இளைச்ச
மாதிரி இருக்கே..?! "
இதை கேட்டதும் என் Wife அப்படியே
ஷாக் ஆகிட்டாங்க...!!
( இப்ப ஒரு சின்ன ப்ளாஷ்பேக்... )
10 நிமிஷம் முன்னாடி...
மணி கார்ல இருந்து இறங்கி வர்றான்...
என்னை பாத்துட்டு சிரிச்சிகிட்டே
என்கிட்ட வர்றான்...
" ஹே மணி... என்னடா இளைச்ச மாதிரி
இருக்கே..?! "
" நிஜமாவா.?! "
" யெஸ்...!! "
" அப்ப இதை மேனகா ( அவன் Wife)
என் கூட இருக்கும் போதும் சொல்றியா..?! "
" ஓ.... இதே மாதிரி நீயும் நிர்மலா
என் கூட இருக்கும் போது சொல்றியா..?! "
" ஓ.கே.. டீல்..!! "
# இப்படித்தான் ஒரு ஜென்டில்மேன் அக்ரிமெண்ட்
கையெழுத்தாச்சு...!!

பேசாம டிவில " ஸ்டாக் அனலிஸ்டா " வேலைக்கு
போயிடலாம்னு பார்க்கிறேன்...
மார்கெட் ஏறினா..
" வாங்கு.. வாங்கு " -னு சொல்லணும்...,
இறங்கினா...
" வித்துடு.. வித்துடு " -னு சொல்லணும்..
அவ்ளோதான்.... சோ சிம்பிள்...!!!

நல்லவேளை நியூட்டப் புவி ஈர்ப்பு - PS


எனக்கு கவிதை எழுதணும்னு தோனிச்சுன்னா..
என்னை யாரும் கன்ட்ரோல் பண்ணவே முடியாது..
சும்மா எழுதி தள்ளிட்டே இருப்பேன்..
நானா மனசு வெச்சி நிறுத்தினாத்தான்
உண்டு...
உங்க நல்ல நேரம்...
எனக்கு இன்னிக்கு அப்படி எதுவும் தோனலை...
smile emoticon
" அவன் பெரிய ஈகோ புடிச்சவன்..,
பதிவு நல்லா இருந்தாலும் லைக்
போட மாட்டான்... "
" நீ கூட அவன் பதிவுக்கு லைக் 
போடற மாதிரி தெரியலையே.. "
" நான் எதுக்கு லைக் போடணும்.?
அவன் என்ன பெரிய பருப்பா..?! "
# வெளங்கிரும்..!!

Saturday, August 22, 2015


கடல் கடந்து நம்ம புகழ் கொரியா வரை
பரவிடுச்சு...
கொரியவில் இருந்து வந்திருக்கும்
ஒரு ரசிகையின் ப்ரெண்ட் ரிக்வெஸ்ட்..
( இவ்ளோ நாள் நம்ம ரேஞ்ச் தெரியாம
வாழ்ந்திருக்கோம் போலயே... )
உடனே இது Fake Id-னு கமெண்ட் போட
கெளம்பி இருப்பீங்களே....
வெயிட்.. வெயிட்...
அதெல்லாம் போன்ல பேசிட்டோம்..
அந்த புள்ள சீக்கிரம் தமிழ் கத்துக்கறேன்
சொல்லி இருக்கு..
நானும் கொரியா பாஷை கத்துகிட்டு
கொரியன் இலக்கியம் படைக்கறேன்னு
மங்குனி அமைச்சர் மேல சத்தியம் பண்ணியிருக்கேன்...
tongue emoticon tongue emoticon
நேந்து ஒரு ரசிகை போன் பண்ணி
இருந்தாங்க...
பேசிட்டு இருக்கும் போது...
" சார்.. நீங்க மதுரை வந்தா.. அவசியம்
எங்க Farm House-க்கு வரணும்.. "
" அங்கே என்ன ஸ்பெஷல்....?!! "
" வயல் இருக்கு.., ஒரு அம்பது கோழி இருக்கு.,
150 புறா இருக்கு.. "
" ஹை... அப்ப நான் வந்தா அடிச்சி., போடுவீங்கனு
சொல்லுங்க.. "
" நீங்க வந்து மட்டும் பாருங்க சார்.. எப்படி
கட்டி வெச்சி அடிக்கறோம்னு.. "
" ஙே...!!! "

புலி டிரைலர் - PS


Friday, August 21, 2015


" பாசத்துக்கு முன்னாடி தான் நான் பனி..,
பகைக்கு முன்னாடி.... நான் புலி...! "
என்னடா பஞ்ச் டயலாக் எழுதறீங்க..?!
பஞ்ச் டயலாக்னா.. ஒரு ரைமிங் வேணாம்...??
இல்ல.. படத்துக்கு " சனி " -ன்னாவது பேரு
வெச்சி இருக்கணும்..!

அன்னிக்கு என் ப்ரெண்ட் அருணுக்கு
பர்த்-டே...
ட்ரீட் குடுக்கறேன்னு ஹோட்டல்க்கு
கூட்டிட்டு போனான்...
அங்கே போயி...
" ஒரு சிக்கன் பிரியாணி.,
ஒரு மட்டன் பிரியாணி.,
ஒரு சிக்கன் சுக்கா.,
ஒரு மட்டன் சுக்கா.,
ரெண்டு ஆம்லெட் "
ஆர்டர் பண்ணினான்...
நான் உடனே அவனை பாத்து....
" ஏன் மச்சி.. உனக்கு ஆம்லெட் மட்டும்
போதுமானு..?! " கேட்டேனா...
அப்படியே ஷாக் ஆகிட்டான்...
tongue emoticon tongue emoticon

Wednesday, August 19, 2015

 எனக்கும்., என் Wife-க்கும் நடுவுல
எந்த ரகசியமும் இல்ல... "
" அப்படியா... எங்கே உன் செல்போன்
லாக்கை ஓபன் பண்ணி., உன் Wife கையில 
கொடு பார்க்கலாம்..! "
# கதம் கதம்...!!

" மனசுக்குள்ள பெரிய 'மயக்கம் என்ன' தனுஷ்னு
நெனப்பு... அந்த கேமரா என்னுது.. "
" தேவா.. நீங்க மைண்ட் வாய்ஸ்னு நெனச்சி
சத்தமா பேசிட்டீங்க..!! "
" இல்ல கேக்கட்டும்னு தான் அப்படி சொன்னேன்.. "
" அப்படியா..?! ஆனா... எனக்கு கேக்கவே இல்லியே...!! "
# ஆருகிட்ட...!!

அப்துல் கலாம் பொன்மொழி - PS


" முன்ன எல்லாம் மாசம் 500 ரூபாக்கு ரீசார்ஜ்
பண்ணுவேன்.. BSNL- க்கு மாறினதுக்கு அப்புறம்
மாசம் 100 ரூபா தான் ஆகுது... "
" பரவாயில்லையே... என்ன ரேட் கட்டர் 
யூஸ் பண்றே... "
" ரேட் கட்டர் எல்லாம் ஒண்ணுமில்ல..
மாசத்துல பாதி நாள் சிக்னல் கெடைக்காது..
நாமளா யாரையும் கூப்பிட முடியாது..
பணம் மிச்சம்... "
# BSNL-க்கு மாறுங்கள்.. நிம்மதியாய் இருங்கள்...!!
எப்ப பார்த்தாலும் ஃபேஸ்புக்லயே இருக்கோமே..
ஒருவேளை நாம வெட்டியா இருக்கோம்னு
மக்கள் கண்டுபிடிச்சிடுவாங்களோ.. சே..
நெனச்சுப்பாங்களோனு வாலண்டரியா 
2 நாள் அமைதியா இருந்துட்டு இன்னிக்கி
வந்தா...
வந்த 10-வது நிமிஷத்துலயே ஒரு மெசேஜ்...
" என்ன சார்.. ரெண்டு நாளா ஆளையே
காணோம்..?!! நெட்டு டவுனா..?!! "
# அவ்வ்வ்வ்..!!

Happy Independence Day - PS


குதிரையில் வரும் கொள்ளைக்காரங்க - PS


ஏன் கேக்கணும் மிஸ் - PS


மச்சான் பொண்ணுக்கு " பூப்பு நன்னீராட்டு " விழா..
கூப்பிடும் போதே சொன்னான்...
" மச்சான்... நீங்க தான் விஐபி.. பங்ஷன் 
10.30 மணிக்கு ஆரம்பிக்கணும்.. கரெக்டா
வந்துடுங்க னு " சொல்லி கூப்பிட்டுட்டு போனான்...
நான் போறதுக்கு கொஞ்சம் லேட் ஆகிடுச்சு...
12.30 மணிக்கு தான் போனேன்..
மச்சான் வாசல்லயே நின்னுட்டு இருந்தான்..
கெட்ட வார்த்தையில எதுனா திட்டுவானோனு
பயந்துட்டே என்ட்ரி குடுத்தேன்..
என்னை பாத்ததும் ரொம்ப குஷியாகிட்டான்...
" வாங்க..., வாங்க -" னு கூப்பிட்டுட்டு
மண்டபத்துக்கு உள்ளே சவுண்ட் குடுத்தான்...
" ஏய்.. மச்சான் வந்துட்டாரு... ஸ்டார்ட்
பண்ணுங்கப்பா... "
( எனக்கு " பக் "-னு இருந்தது.. நமக்காக
இவ்ளோ நேரம் பங்ஷன் ஸ்டார்ட் பண்ணாம
இருந்தாங்களா..?! )
" என்ன மச்சான்.. இப்பதான் பங்ஷன்
ஸ்டார்ட் பண்ண போறீங்களா..?! "
என்னை ஒரு லுக் விட்டுட்டு சொன்னான்...
" இல்ல.., பந்தி ஸ்டார்ட் பண்ண போறோம்..!! "
# அடப்பாவி..!!

இங்கிலாந்தை White Wash - மெக்ராத் - PS


Saturday, August 8, 2015

" பாகுபலி " எடுத்த ஒரு ராஜமெளலி தான்
நமக்கு தெரியும்..
ஆனா.. இன்னும் ஓராயிரம் ராஜமெளலீஸ்
ஃபேஸ்புக்ல இருக்காய்ங்க...
2nd Part இப்படித்தான் இருக்கும்னு
கதை சொல்லி கொலையா கொல்றாய்ங்க...
# முடியல ராஜமெளலி..!!!

Thursday, August 6, 2015

வர வர ஃபேஸ்புக்ல இந்த ஆன்டிங்க
தொல்லை கட்டுக்கடங்கமா போயிட்டு
இருக்கு...
ஃபேஸ்புக்னா... தினமும் அவங்க மூஞ்சை 
போட்டோ பிடிச்சு போடறதுன்னு நெனச்சிட்டு 
இருக்காங்க..
# மிடில...!!

எது சார் உண்மையான கடவுள் - PS


கூடவே இருக்கானுங்க... ஆயிரம் ரூபா
கடன் கேட்டா... முறைக்கறானுங்க...
ஆனா.. அந்த புள்ள யார்னே தெரியல...
போன் பண்ணி 2 லட்ச ரூபா கடனா 
வேணுமான்னு கேக்குது..
கண்ணு கலங்கிட்டது...
# HDFC கஸ்டமர் கேர்...!!
ஹீரோயின் தடுக்கி விழும்போது
ஹீரோ அவங்கள விழாம பிடிச்சதும்
லவ் வர்ற மாதிரி காட்றதை என்னிக்கு
நிறுத்தறீங்களோ... 
அன்னிக்குதான்டா இந்தியா வல்லரசாகும்...!!
# 50 வருஷமா இந்த சீனை மட்டும்
மாத்தவே மாட்டேங்குறானுங்க...

வாயை ஊது.. - PS


Tuesday, August 4, 2015

டாஸ்மாக் - போலீஸ் பாதுகாப்பு - PS


அழகுப் பெண்கள் - PS
ரெண்டு நாள் முன்னாடி...
மங்கு ரொம்ப ஃபீலிங்கா சொன்னான்..
" ஆபீஸ்ல ஒரு கேரளா பொண்ணு 
என்னை வேணும்னே அண்ணான்னு
கூப்பிட்டு வெறுப்பேத்துது மச்சி... "
" யாரு மச்சி அது...?! நம்பர் குடு.. "
( முறைச்சான்.. )
" நீ ஆணியே பிடுங்க வேணாம்.. "
" சரி., சரி.. இப்ப என்ன உன் பிரச்னை..? "
" என்னை அண்ணான்னு கூப்பிடக்கூடாது.. "
" அவ்ளோ தானே..? "
( டுர்ர்ர்ர்ர்ர்ர்....!!! என் மாஸ்டர் மைண்ட்
ஒரு மாஸ்டர் ப்ளான் போட்டது... )
" மங்கு... அந்த பொண்ணுக்கு ப்ரெண்ட்ஸ்
இருக்காங்களா..? "
" ஓ.... ஆனா யாரும் எனக்கு பழக்கமில்ல... "
" வெரிகுட்... அவங்க ப்ரெண்ட்ஸ்ல அழகா
இருக்குற ஒரு பொண்ணை செலக்ட் பண்ணிக்க.. "
" எதுக்கு..? "
" இப்ப நான் இந்த பொண்ணோட பொஸசிவ்னஸை
கிளறி விடப்போறேன்.. "
" நீ கிள்ளி விடுவியோ... கிளறி விடுவியோ
எனக்கு தெரியாது.. நல்லதா ஒரு ஐடியா குடு.. "
" சரி.. நான் சொல்ற மாதிரி செய்... "
" சொல்லு.. "
" இப்ப இந்த பொண்ணுகிட்ட போயி...
' நீ அண்ணானு கூப்பிடு.. தம்பினு கூப்பிடு.,
எப்டி வேணா கூட கூப்பிட்டுக்கோ.. ஆனா
உன் ப்ரெண்டை மட்டும் இன்ட்ரோ பண்ணி வைனு
கேளு.. "
" கேட்டா...?!! "
" இங்கே தான் பொஸசிவ்னஸ் வேலை
செய்யும் மச்சி.. நீ வேணா பாரு... அவங்க
ப்ரெண்டை இன்ட்ரோ பண்ணி விடாது...
உன்னையும் இனிமே அண்ணான்னு கூப்பிடாது.. "
" அப்டீன்ற..?!! சரி... "
( மங்கு ஹேப்பி ஆகிட்டான்.. )
ரெண்டு நாள் கழிச்சி இன்னிக்கு மதியம்
அவன்கிட்ட இருந்து போன்...
" மச்சி... இப்பல்லாம் அந்த பொண்ணு என்னை
அண்ணான்னு கூப்பிடறதில்லடா..... "
" வாவ்... நம்ம ப்ளான் பக்கா சக்ஸஸ் போல... "
.
.
" மண்ணாங்கட்டி.... சித்தப்பான்னு கூப்பிடுது...
# செத்தாண்டா சேகரு..!! அவ்வ்வ்...

அடங்க மாட்டோம்ல... - PS


நேத்து நைட்டு 11.30 மணி இருக்கும்..
என் ப்ரெண்ட் சக்திகிட்ட இருந்து மெசேஜ் வந்தது.....
என்னடா.. மெசேஜ் பண்ணாதவன்
பண்ணியிருக்கானேனு நானும்..
" என்னடா.?-"-னு ரிப்ளை பண்ணினேன்...
அதுக்கு அவன்..
" என்னா மச்சி நீ இன்னும் தூங்கலயா.?
உங்க வீட்லயும் சண்டையா.?-னு " கேக்கறான்..
# அடேய்...!!!!