Friday, December 8, 2017

" ஆயகலைகள் அறுபத்தி நாலாம்..! "
" இருந்துட்டு போகட்டும்..! "
" உனக்கு எத்தனை கலைகள் தெரியும் வெங்கி..?! "
" என்ன ஒரு பத்து பதினஞ்சு தெரியும்.. "
" பதினஞ்சா..?! எங்கே லிஸ்ட் போடு பாக்கலாம்.. "
" ம்ம்.. கலைச்செல்வி, கலைப்ரியா., கலைவாணி.... "
கிர்ர்ர்ர்...!!!
விமல் போன் பண்ணியிருந்தான்...
" வெங்கி... சேலம்ல FM ஆரம்பிக்க போறாங்களாம்.. "
" சரி.. "
" ரேடியோ ஜாக்கி இன்டர்வியூ நடக்குதாம்.. கேள்விபட்டதும் உன் ஞாபகம் தான் வந்தது.. "
( பார்ரா...!!! )
" அதுக்கு..?! "
" உன்கிட்ட தெறமை இருக்கு... நீ அப்ளை பண்ணு.. "
" ஹி., ஹி., ஹி.. தேங்க்ஸ் மச்சி... இருந்தாலும்... "
" என்ன யோசிக்கிறே..?! "
" நாம பிஸினஸ்ல இருக்கோம்.. நமக்கு இதெல்லாம் செட் ஆகுமானு... "
" அதெல்லாம் ஆகும்... உன் தெறமைய இப்டி நாலு செவத்துக்குள்ள வெச்சி வேஸ்ட் பண்ண போறியா..? "
( நம்மகிட்ட ஏகப்பட்ட தெறமை இருக்கே.. அதுல எது இவனை ஹெவியா லைக் பண்ண வெச்சி இருக்கும்..?!! )
" மச்சி.. அது என்ன தெறமைனு நான் தெரிஞ்சிக்கலாமா..?! "
" ம்ம்ம்... மூச்சு விடாம பேசியே எங்கள எல்லாம் கொல்றேல்ல.. அதான்.. "
" கிர்ர்ர்ர்... இரு... உன்னை நேர்ல வந்து கொல்றேன்.. ராஸ்கல்... "

Friday, November 10, 2017

குமார் போன் பண்ணியிருந்தான்..
" வெங்கி.. என்ன காலைல இருந்து உன்னை வாட்ஸ்அப்ல ஆளையே காணோம்..? "
" அதென்னமோ தெரியல மச்சி.. காலைல இருந்து தூக்கம் தூக்கமா வருது.. தூங்கிட்டே இருந்தேன்.. இப்ப தான் குளிச்சுட்டு ப்ரெஷ்ஷா வர்றேன்..."
" குட்.. இப்ப என்ன பண்ண போறே..?! "
" ம்ம்ம்... ப்ரெஷ்ஷா தூங்கப் போறேன்... "

Tuesday, November 7, 2017

சின்ன வயசுல நான் டாக்டர்க்கு படிக்கணும்னு ரொம்ப ரொம்ப ஆசைப்பட்டேன்...
அதுக்கு என்ட்ரன்ஸ் டெஸ்ட் பாஸ் பண்ணனும்னு சொன்னாங்க...
என்ட்ரன்ஸ்னா... பெரிய பெரிய கேட் இருக்கும்.. அதுல ஏறி இறங்க சொல்லுவாங்கனு நெனக்கிறேன்.. அதுல தான் நாம ஈஸியா பாஸ் பண்ணிடுவோமேனு போனேன்..
+2 முடிச்சிட்டு வானு சொன்னானுங்க..
சரினு +2 ஜாயின் பண்ண போனா..
+1 முடிச்சி இருந்தா தான் +2-ல சேர்த்துக்குவாங்களாம்..
சரினு +1 போனா...
நீ இன்னும் 10th பாஸ் பண்ணலியானு கேக்கறாங்க...
சே.. ஒரு டாக்டராகற அழகும், அறிவும், திறமையும் இருந்தும் இந்த சம்முவம் என்ன டாக்டராக விடல...
#சிஸ்டமே சரியில்ல..!!

Friday, November 3, 2017

நேத்து மதியம் பைக்கை ரோடு ஓரமா நிப்பாட்டிட்டு போன் பேசிட்டு இருந்தேன்...
அப்ப என்னை கிராஸ் பண்ணி ஒரு ஸ்கூட்டி போச்சு...
ஆ...!! ஸ்ரீதிவ்யா...!
இந்த புள்ள எப்டிடா சேலம்ல...?!!
டக்னு வண்டியை ஸ்டார்ட் பண்ணி... சேஸ்ஸிங்....
சே.. தப்பா நெனக்காதீங்க... கன்பார்ம் பண்ணிக்கணும்ல...
இதெல்லாம் ஜெனரல் நாலேஜ்ட் டெவலப்மெண்ட்ல வருது...!!
சிக்னல்ல அந்த ஸ்கூட்டிக்கு பக்கத்துல போயி வண்டிய நிறுத்தி....
அந்த புள்ள முகத்தை நான் பாக்க....
அந்த புள்ள என்னைய பாக்க...
நான் கேக்கலாம்னு வாயை தொறக்கறதுக்குள்ள அந்த புள்ள பேசிடுச்சு...
" ஹலோ... சார்... நீங்க சிவகார்த்திகேயன் தானே...?!! "
என்னாது.... சிவகார்த்திகேயனா..?!
எனக்கு திக்னு இருந்தது...
பின்ன போன வாரம் துபாய் போனப்ப ப்ளைட்ல ரெண்டு ஏர்ஹோஸ்டஸ் என்னைய பாத்து...
" சார் நீங்க ஷாகித் கபூரானுல்ல " கேட்டாய்ங்க...
ஹி., ஹி., ஹி...!!!

Wednesday, November 1, 2017

" நானெல்லாம் ஒரு குழப்பமான சிட்சுவேஷன்னா... எப்பவும் பூவா தலையா போட்டு பாத்துட்டு... பூ விழுந்தா தான் செய்வேன்... "
" அப்டியா..? "
" ம்ம்.. நேத்து ஈவினிங் கூட டின்னர்க்கு வெளியே ஹோட்டல் போயி சிக்கன் சாப்பிடலாமா வேணாமானு ஒரே குழப்பமா இருந்தது... "
" ம்ம்.. அப்புறம்..?! "
" அப்புறம் என்ன.. பூவா தலையா தான்.. "
" என்ன விழுந்திச்சு..?! "
" தலை.... "
" அப்ப டின்னர்க்கு ஹோட்டல் போலயா..?! "
" சே.. சே.. அப்புறம் 25 தடவை சுண்டினதுல 13 பூ, 12 தலை.. சோ மெஜாரிட்டினு கெளம்பிட்டேன்ல... "

Wednesday, October 25, 2017

எங்க ஊர்ல இருக்கற சூப்பர் மார்கெட்ல போய் வாங்க சோம்பேறித்தனம் பட்டு ஆன்லைன்ல ஆர்டர் போட்டா...
டெலிவரி மேன் போன் பண்ணி....
" சார் உங்களுக்கு ஒரு பார்சல் வந்திருக்கு.. இங்க சூப்பர் மார்கெட் பக்கத்துல நிக்கறோம்... வந்து வாங்கிக்கோங்கனு " சொல்றான்...