Sunday, July 31, 2016என்னாது... தமன்னா OPPO F1S தான் வெச்சி இருக்காப்டியா...?!! ரைட்டு....!!

கன நேரத்தில எனக்கு உதிச்சது ஒரு சிந்தனை...

என் Wife எங்கேனு தேடினேன்... கிச்சன்ல இருந்தாங்க...

நான் பொதுவா கிச்சன்ல எந்த டிஷ்கஸனும் வெச்சிக்கறதில்ல... அது சிங்கத்தை தன் குகையில சந்திச்சதுக்கு சமம்..

சரி... துணிஞ்சவனுக்கு பூரிக்கட்டையும் குல்பி ஐஸ் மாதிரி...

" நிர்மலா.. உன் போனு அடிக்கடி ஹேங் ஆகுதுனு சொன்னேல்ல... "

" அத தான் நான் ரெண்டு மாசமா சொல்லிட்டு இருக்கேனே... "

" நான் வேணா நாளைக்கு புதுசா OPPO F1S வாங்கி...... "

" வாங்கி....??! "

" நான் அத வெச்சிகிட்டு உனக்கு என் போனை குடுத்துடட்டுமா..?!! "

என் Wife அப்படியே என்னை டெரர் லுக் விட்டாங்க..

ஹேய்... ஹேய்... இப்ப எதுக்கு அந்த கரண்டி எடுக்கற...?! வை.. வை..

ஓ... தோசை சுடவா.... நான் என்னமோ நெனச்சிட்டேன்.... ஹி., ஹி., ஹி..!!!
என்னதான் புருஷனும், பொண்டாட்டியும்
ஒண்ணுக்குள்ள ஒண்ணா இருந்தாலும்..
பாஸ்வேர்ட் வேற வேற....
- பாபா வெங்கீஷ்

Friday, July 29, 2016

என்னைய போயி.. சித்தர்கள், முனிவர்கள்னு 
ஃபேஸ்புக் க்ரூப்ல எல்லாம் சேர்த்து வி்ட்டிருக்கானுங்க..
அடேய்... உங்க தொல்லை தாங்காம என்னிக்காச்சும் 
ஒரு நாள் சாமியாரா போனாலும் போயிடுவேன்டா....
பீகேர்புல்.... ( நான் என்னய சொன்னேன்..!! )

Thursday, July 28, 2016


டியர் லேடீஸ்...,
என் ஹஸ்பென்ட் ஃபேஸ்புக் பாஸ்வேர்டே எனக்கு தெரியும்னு ஓவரா அலட்டிக்காதீங்க...
அவருக்கு இன்னொரு FB அக்கவுண்ட் இருக்கறது உங்களுக்கு தெரியுமா..?!!
# ச்சும்மா கொளுத்தி போடுவோம்..!!

" மாச செலவு ஓவரா ஆகுதே.. என்ன காரணம்னு கண்டுபிடிக்க நானும் , என் Wife-ம் 4 மாசமா வீட்டு பட்ஜெட் போட்டு பாத்தோம்..!! "
" என்ன கண்டுபுடிச்சீங்க..? "
" ஹோட்டல்ல சாப்பிடறதால தான் செலவு ஜாஸ்தி ஆகுதுனு கண்டுபிடிச்சோம்..!! "
" ஓ.. அப்புறம்..? "
" அப்புறம் என்ன நிறுத்திட்டோம்....!! "
" ஹோட்டல்ல சாப்பிடறத நிறுத்திட்டீங்களா...?! "
" ஹி., ஹி., ஹி.. பட்ஜெட் போடறத நிறுத்திட்டோம்..!! "
# சோறு முக்கியம்லே..!!
எங்க ப்ரெண்ட்ஸ் வாட்ஸ்அப் குரூப்ல கபாலி பத்தி காரசாரமா டிஸ்கஷன் ஓடிட்டு இருந்தது...
அதுல ரெண்டு பேரு இன்னும் படம் பாக்கல..
ஏன்டா இப்டி சீன் பை சீன் டிஸ்கஸ் பண்றீங்கனு ஒருத்தன் குரூப் விட்டு வெளியே போயி்ட்டான்....
இன்னொருத்தன் கோச்சிக்கிட்டான்...
நான் தான் அட்மினு... இதெல்லாம் பாத்துட்டு நான் சும்மாவா இருக்கறது...?!
உடனே அவனையும் குரூப் விட்டு தூக்கிட்டேன்...
படம் ரிலீஸாகி 3 நாள் ஆகியும் பாக்காதது உன்ர தப்புடா.... இதான்டா என்ர தீர்ப்பு...
# நீதிடா, நேர்மடா, கபாலிடா...!!!
கபாலி படத்தில் உங்களுக்கு பிடிச்ச சீன் எது..?
A.ரஜினி சார் நடந்து வர்ற சீன்..
B.ரஜினி சார் வலது கால் மேல இடது கால் போட்டு உக்காந்து இருக்குற சீன்..
C.ரஜினி சார் இடது கால் மேல வலது கால் போட்டு உக்காந்து இருக்குற சீன்..
D.ரஜினி சார் காபி சாப்பிடற சீன்..
# ஐய்யோ., என்னைய இப்டி பொலம்ப வுட்டுட்டாங்களே...!!!

படம் பாத்துட்டு இருக்கும் போது... பக்கத்துல உக்காந்திருந்த ப்ரெண்ட்கிட்ட...

" கபாலி உயிரோட தான் இருக்கார்னு நம்பற குமுதவள்ளி... 25 வருஷமா அவரை தேடி கபாலியோட ப்ரெண்ட்ஸ் யாரையும் ஏன் மீட் பண்ணலனு.? " கேட்டேன்...

நீ மூடிட்டு படத்தை மட்டும் பாருனு சொன்னான்..

டிக்கெட் 200 ரூபா...
தன்ஷிகா தன்னோட பொண்ணுனு தெரியற
அந்த சீன்ல...
அவளோட தைரியத்தை பாத்து ஆச்சரியம், சந்தோஷம், ஒரு வித மெய்சிலிர்த்த நிலைல தலைவர் நடிப்பு செம்ம...
இந்த ஒரு சீன்லயே நான் 300 ரூபா வசூல் பண்ணிட்டேன்...
வெளியே போகும்போது தியேட்டர்காரன் எக்ஸ்ட்ரா 100 ரூபா கேப்பானோ..?!!
# சிறப்பு..!!
" ஏன் மச்சி சோகமா இருக்கே..?! "
" எனக்கும் என் Wife-க்கும் சண்டை.. "
" அடி பலமா..?!! "
" சே.. சே.. யார்கிட்ட... ஓடிவந்துட்டேன்ல.. "
" ஹி., ஹி., ஹி.. உன்னை என் ப்ரெண்டுனு சொல்லிக்கவே பெருமையா இருக்கு மச்சி... ஆமா அப்புறம் எதுக்கு ஃபீல் பண்றே..?!! "
" இப்ப வீட்டுக்கு போகணும்ல... "
" நான் தான் உனக்கு ஏற்கனவே ஐடியா குடுத்து இருக்கேனே.. உன் Wife கோவமா இருந்தா.. அவங்களுக்கு பிடிச்ச பாட்டை பாடுனு.. "
" சண்டையே பிடிச்ச பாட்டை பாடினதுனால தான்டா வெண்ணை....!!! "
# ஓ மை காட்...!!

" என்ன மச்சி எங்கே கெளம்பிட்டே..? "
" கபாலி படத்துக்கு.. "
" மச்சி.. படம் சுமார்னுல்ல சொன்னாங்க.. "
" அத நான் போயி பாத்துட்டு வந்து சொல்றேன்.. "
# அடக்குனா.. அடங்குற ஆளா நீ...!!
## மகிழ்ச்சி..!!!
எது புதுசா டிரை பண்ணி நல்லா வரலைன்னாலும் அதுக்கு உப்புமானு பேரு வெச்சிடறாங்க..
# ரவா உப்புமா., கோதுமை உப்புமா, அவல் உப்புமா..
" அங்கே என்ன அவ்ளோ கூட்டம்..? கபாலி படத்துக்கா,,? "
" இல்ல.. அங்கே ஒருத்தன் எனக்கு உப்புமானா ரொம்ப பிடிக்கும்னு சொன்னான்.. அவனை பாக்க தான் கூட்டம் கூடிட்டாய்ங்க.. "
# இட்ஸ் எ மெடிக்கல் மிராக்கிள்..!!எனக்கு மட்டும் டைம் மெசின் கிடைச்சா.. இந்த உப்புமா கண்டுபிடிச்ச அந்த ஆயா கையில கால்ல விழுந்தாவது பாதில தடுத்து இருப்பேன்...
# மிடிலடா..!!

கபாலி கோல்ட் பென்டென்ட்...
@ சுமங்கலி ஜூவல்லர்ஸ், சேலம்...


தலைவரு படத்தை பர்ஸ்ட் டே பர்ஸ்ட் ஷோ 
துபாய்ல போயி பாக்கலாம்னு ப்ளான் பண்ணினேன்....
ப்ளைட் டிக்கெட் கெடைச்சிடுச்சு..
படத்துக்கு டிக்கெட் கெடைக்கல...

எல்லோரும் என் ரேஞ்ச் தெரியாம பேசறீங்க.... கமெண்ட் போடறீங்க...

2010 டோரன்டோல நடந்த வேர்ல்ட் கராத்தே சாம்பியன்ஷிப்ல சாம்பியன் யார்னு தெரியுமா..?!!.. தெரியுமா...?!!

தெரியாதா..?!! 

அப்ப அது நான் தான்...

 

Saturday, July 23, 2016

இன்னிக்கு மதியம் ஒரு பொண்ணு கூட ஃபைட் ஸ்டார்ட் ஆச்சு...
நான் கராத்தேல கத்துகிட்ட எல்லா வித்தையையும் மனசுல ஓட்டிப் பாத்துக்கிட்டேன்...
" வேணாம் வெங்கி.. அந்த புள்ள பாவம்னு " என் ப்ரெண்ட்ஸ் கெஞ்சினாங்க... கதறினாங்க...
ஆனா...
" அன்பா இருக்கறவங்களுக்கு நான் வெங்குடா..
அடாவடி பண்றவங்களுக்கு சங்குடானு.. "
பஞ்ச் டயலாக் எல்லாம் பேசிட்டேன்...
அப்புறமா.. சைடுல விசாரிச்சு பாத்ததுல தான் தெரிஞ்சது...
அந்த பொண்ணும் பெரிய ரவுடியாமாம்..
இருக்கட்டுமே... பெரிய ரவுடியா இருந்தா...
நான் மன்னிக்க கூடாதா...?!
பெரியமனசு பண்ணி நான் அந்த புள்ளய மன்னிச்சிட்டேன்...
எல்லோரும் கெளம்புங்க.. கெளம்புங்க...
ஃபைட் கேன்சல்....!!
# இன்னுமா இந்த ஊரு நம்பள நம்ம்ம்புது..?!!
மங்குக்கு (Shajahan S) பொண்ணு பாத்துட்டு இருந்தாங்க...
ஒரு நாள் நான் அவங்க வீட்ல இருக்கும்போது எதோ கல்யாண ஆல்பத்த வெச்சி ஒரு பொண்ணை பத்தி டிஸ்கஸ் பண்ணிட்டு இருந்தாங்க...
நான் லைட்டா அந்த ஆல்பத்தை எட்டிப் பாத்தேன்...
அது ஒரு குரூப் போட்டோ.... அதுல நாலஞ்சு பொண்ணுங்க இருந்துச்சு...
இதுல இவங்க எந்த பொண்ணை பத்தி பேசறாங்க...?!
" ஏன்டா மங்கு... இதுல எதுடா பொண்ணு..?! "
" தெரியாது..!! "
" தெரியாதா..?!! அப்புறம் ஈனு இளிச்சிட்டு இருக்கற..?!! "
" ஹி., ஹி., இதுல எது பொண்ணா இருந்தாலும் எனக்கு ஓ.கே மச்சி..!! "
# துப்பறத தவிர வேற வழியே இல்ல...!!!
ஒரு கன்னத்தில் அறைஞ்சா மறு கன்னத்தை காட்டுணு சொன்னாரு...
நானும் பக்கத்துல இருந்த என் ப்ரெண்ட் கன்னத்தை காட்டினேன்...
ஸ்டுபிட் பெல்லோ.. அவனும் சேர்ந்து அடிக்க வர்றான்...
 
அப்பல்லாம் வேற பேர்ல எழுதினா...
புனை பெயர்னு சொன்னாங்க...
இப்ப ஃபேக் ஐடினு சொல்றாங்க...
# ம்ம்ம்...
"மணி 9 ஆகுது... என்ன பண்ணிட்டு இருக்கீங்க..?"
"லீவு தான.. தூக்கம் தூக்கமா வருது.."
"சரி தூங்குங்க.."
"குளிக்கணுமே.."
"அப்ப போய் குளிங்க.."
"குளிச்சா தூக்கம் போயிடுமே.."
"அப்ப பேசாம தூங்குங்க.."
"யேய்.. நான் தான் குளிக்கணும்னு சொல்றேன்ல..."
(ணங்..ணங்...)
வாவ்... இ்ட்ஸ் எ மெடிக்கல் மிராக்கிள்...!!
நடுமண்டையில கொட்டு வெச்சா தூக்கம் போயிடும்... இட்ஸ் கான்...!!!
நான் ஒரு சைன்டிஸ்ட்ட தான் கல்யாணம் பண்ணி்ட்டு இருக்கேன் போல....!!
ஹி., ஹி., ஹி...!!!
மங்கு (Shajahan S) கால் பண்ணியிருந்தான்.. அட்டெண்ட் பண்ணினா....
" மச்சி அந்த இன்னொரு நம்பர்க்கு கால் பண்ணுனு " சொல்லிட்டு வெச்சிட்டான்...
சரினு அவன் கான்டாக்ட்ல போயி பாத்தா....
10 மொபைல் நம்பர் இருக்குது...
" அட பன்னாடை... இதுல எதுடா அந்த இன்னொரு நம்பரு..?!! "
# டிஷ்ஷும்... டிஷ்ஷும்....!!!

Wednesday, July 13, 2016

நானும் என் Wife-ம் ஒரு பங்சனுக்கு போயிருந்தோம்...
அங்க என் ப்ரெண்ட் முருகனை பாத்தேன்.. அவன் கூட 12 வயசுல ஒரு பொண்ணு இருந்தது...
" ஹேய் இது உன் தங்கச்சி பொண்ணு தானே..?! "
" பரவாயில்லையே.... கரெக்டா சொல்லிட்டியே.. "
" எப்படிடா மறப்பேன்.. இவ நான் பேரு வெச்ச கொழந்தைடா.. "
உடனே என் Wife ஆச்சரியமா...
" என்ன... நீங்க பேரு வெச்சீங்களா..?!! "
" ஆமா.. எனக்கு ஸ்கூல்ல நிவேதானு ஒரு பெஸ்ட் ப்ரெண்ட்.. அது பேரு தான் வெச்சேன்.. "
" நிவேதாவா..?!! சொன்னதேயில்ல... "
" ஹி., ஹி., ஹி... அதான் இப்ப சொல்லிட்டேன்ல... "
முருகன் என்னையே பாத்துட்டு இருந்தான்...
" ஏன்டா அப்டி பாக்குற..?! "
" இல்ல.. இவளுக்கு நீ திவ்யானுல்ல பேரு வெச்சே...!! "
ஆஹா... திவ்யா பேரை வெச்சோமா..?!! அப்ப நிவேதா பேரை...?!!
லைட்டா திரும்பி பாத்தேன்...
My Wife மொறைச்சிங்....
# மீனே மசாலாவ தடவிட்டு எண்ணையில குதிச்ச மொமெண்ட்..!!

மதியம் ஆனந்த் வீட்டுக்கு போயிருந்தேன்.. ஹேர்கட் பண்ணிட்டு அப்பதான் வந்தான்..
என்னை பாத்ததும்..
" என்ன மச்சி அநியாயமா இருக்கு.. ஹேர்கட்க்கு 100 ரூபா வாங்கிட்டாங்க.. "
" ஆமா மச்சி.. இந்த ஹேர்க்கல்லாம் 100 ரூபா அதிகம் தான்.. "
என்னைய மொறைச்சிட்டு.. அவன் Wife வித்யாகிட்ட..
" வித்யா.. நீ ஜென்ட்ஸ் ஹேர்கட் பண்றது கத்துக்க.. நமக்கு வருஷம் 1200 ரூபா மிச்சம்..!! "
வித்யா லைட்டா சிரிச்சிட்டே...
" அப்படியே நீங்களும் இந்த ஐப்ரோ டிரிம்மிங்., பேசியல், ஹேர் ஸ்டெய்டனிங், ஹேர் கர்லிங் எல்லாம் கத்துக்கோங்க.. நமக்கு வருஷம் 24,000 மிச்சமாகிடும்..!! "
" என்னாது... 24,000-ஆ...!!! "
ஆனந்த் கீழே விழப்போனான்.. நான் பிடிச்சிகிட்டேன்....!!!
ஹோட்டல்ல உக்காந்திருந்தோம்....
சர்வர் என்கிட்ட...
" சார்... ஆர்டர்..."
" வெயிட்... பாத்துட்டு இருக்கேன்.. சொல்றேன்.. "
" ஓ.கே சார்... "
( 2 நிமிஷம் கழிச்சு.. )
" சார்.. ஆர்டர்... "
" ம்ம்.. நோட் பண்ணிக்கோங்க... அந்த 3-வது டேபிள்ல சிகப்பா இருக்கே அது ஒரு ப்ளேட்... இந்த பக்கத்து டேபிள்ல வெங்காயம் போட்டு பிரை பண்ணியிருக்கே.. அது ஒரு ப்ளேட்.. அப்புறம் அந்த 2-வது டேபிள்ல.... "
# நம்ம வழி.. குறுக்கு வழி...!!! ஹி., ஹி.,ஹி...!!
எங்கே.. இதுக்கு ஒரு 100 லைக்ஸ் போடுங்க பாக்கலாம்....
( வர வர நீ எத போட்டாலும் லைக் போடறாங்கடானு என் ப்ரெண்ட் பொலம்பினான்.. அதான் டெஸ்டிங்... )
# ஒரு வேள பிரபலமாயிட்டோமோ...!!!!
திலீப்கிட்ட பேசிட்டு இருக்கும்போது..
"வர வர என் பசங்க கிளாஸ் மிஸ்ஸுங்க
தொல்லை தாங்கல..!"
"என்னாச்சி மச்சி..?"
"ஹோம் வொர்க் அதிகமா தர்றாங்க.. பேசாம ஹோம் வொர்க் எழுதி குடுக்க இஞ்சினியரிங் முடிச்ச பசங்க ரெண்டு பேரை வேலைக்கு வெச்சிக்கலாமானு பார்க்கறேன்.. வேலை கொடுத்த மாதிரியும் ஆச்சு, வேலையும் ஆச்சு.. 
ஒரே கல்லுல ரெண்டு மாங்கா..!!"
"அப்ப இஞ்சினியரிங் முடிச்ச பொண்ணுகளா பாத்து வேலைக்கு வெச்சிக்க..
ஒரே கல்லுல மூணு மாங்கா..!!"
"மூணாவது மாங்கான்னு நீ எத சொல்ற மச்சி..?"
"நான் சொல்றத செய், தெரியும்.."
வீட்டுக்குப் போய் அரை மணி நேரத்துல திலீப்க்கு போன்ல..
"பொண்ணுங்கள வேலைக்கு சேக்கறேன்னு சொன்னதுக்கு வீட்ல செம மொத்து மொத்திட்டாங்கங்கடா...."
"ஹி., ஹி., ஹி...இதான் மச்சி அந்த மூணாவது மாங்கா..!!"
# அட கொலகாரப் பாவி...!
நம்ம புகழ் உலகம் முழுக்க பரவிட்டு இருக்கு போல...
இதோ.. இப்ப வெள்ளக்கார புள்ள ஒண்ணு ப்ரெண்ட் ரிக்வெஸ்ட் குடுத்து இருக்கு...
அக்செப்ட் பண்றதா..? வேணாமா..?!!
ஒரு தடவைக்கு 541 தடவை யோசிச்சி பாத்துட்டேன்..
எப்டி இருந்தாலும் சாட்டிங் பண்ணும் போது லாங்வேஜ் பிராப்ளம் வரும்.. நமக்கு தேவையா..?!!
அதனால தெளிவா சொல்லிட்டேன்...
" நீ போயி மொதல்ல தமிழ் கத்துட்டு வாம்மா... "
# தமிழ் வளர்ப்போம்...!!! ஹி., ஹி., ஹி..!!

Monday, July 11, 2016

இந்த லேடீஸ் க்ரூப்ல பொண்டாட்டிய சேத்து விடறதுங்கறது...
ரோட்ல ரௌடித்தனம் பண்ணிட்டு இருந்தவனை கராத்தே கிளாஸ்ல சேத்து விட்ட மாதிரி...
# இனிமே அடி டெக்னிக்கா விழும்...!!
ரவி போன் பண்ணியிருந்தான்...
" என்னா மச்சி... இன்னிக்கு சன்டே... வெளுத்து கட்டியிருப்பியே.. "
" இல்ல மச்சி.. வெறும் இட்லி, தோசை தான்.. "
" ம்ம்ம்.. எப்படியும் ஏழெட்டு தோசை போட்டு தாக்கியிருப்பியே...?! "
" சே., சே.. ஒண்ணே ஒண்ணு தான்.. "
" ஒண்ணுதானா..?! ஏன் என்ன ஆச்சு..?! "
" அதென்னமோ தெரியல மச்சி.. 25 இட்லி சாப்பிட்டப்புறம் தோசை சாப்பிடவே பிடிக்கல..""
# அட நன்னாரிப் பயலே...!!!
அப்ப தினேஷ்க்கு கல்யாணம் ஆன புதுசு.. அவனைப் பாக்க அவன் ஆபீஸ் போயிருந்தேன்..
டீ பிரேக்.. டீ குடிச்சிட்டு பேசிட்டு இருந்தோம்..
அவன் மொபைல் ரிங் ஆச்சு.. லைன்ல அவன் Wife திவ்யா..
திவ்யா பேசினது எனக்கு லைட்டா கேட்டுச்சு...
"என்னம்மா..?"
"ஈவினிங் டின்னர்க்கு பரோட்டாவும், மட்டன் குழம்பும்.. ஓ.கேவா?"
"டின்னர்க்கு மட்டன் செட் ஆகாதே.."
"அப்ப சப்பாத்தி, சிக்கன் குருமா..?"
"சிக்கனா..? அது உடம்புக்கு சூடுமா.. அடிக்கடி சாப்பிடக் கூடாது.."
"அப்படின்னா வஞ்சிர மீன் ப்ரை, குழம்பு, சாப்பாடு.."
"மீனா..? அது போன வாரம் தானே சாப்பிட்டோம்.."
"அப்ப முருங்கைக்காய் சாம்பார், சைடு டிஷ்க்கு முட்டை பொரியல்.."
"நைட்ல முட்டை வேணாம்மா.. ஜீரணம் ஆகாது..."
"அப்ப நீங்களே சொல்லுங்க.."
"இட்லியும் இட்லிப்பொடியும்.."
"ஓ.கே மாம்ஸு.. சீக்கிரம் வந்துடுங்க.."
"ஓ.கே மா..!!"
இதைக் கேட்டுட்டு இருந்த நான்..
"ஏன் மச்சி.. உன் Wife டின்னர்க்கு விதவிதமா என்ன சமைக்கட்டும்னு கேக்கறாங்கல்ல.. நீ ஏன் வேணாம் வேணாம்னு சொல்ற..?"
"ம்க்கும்.. அவ போன் பண்ணினது என்ன சமைக்கட்டும்னு கேக்க இல்ல மச்சி.. என்ன சமைச்சி தரப்போறேன்னு கன்பார்ம் பண்ண.."
ஙே..!!!

Saturday, July 9, 2016


3 வருஷம் முன்னால ப்ரெண்ட்ஸ் 15 பேரு சேர்ந்து கோவா டூர் போயிருந்தோம்...
ஒரு நாள் நைட் ஜாலியா பீச்ல நடந்து வந்துட்டு இருந்தோம்...
அப்ப மகேஷ் ஒரு விஷயம் என்கிட்ட சொன்னான்.... நான் அப்டியே ஷாக் ஆகிட்டேன்..
" வேணாம் மகேஷ்... இது வெளையாட்டு இல்ல... உன் கூட வந்திருக்குற எங்க 14 பேரையும் இது பாதிக்கும்னு " கெஞ்சி கெஞ்சி சொல்லிப் பாத்துட்டேன்...
அப்பவும் அந்த பய அரை மனசா தான் சரினு தலையாட்டினான்...
எனக்கு அவன் மேல டவுட்டாவே இருந்துச்சு..
ஆனந்தை கூப்பிட்டு... மகேஷை தனியா விட்டுடாதே.. அவன் மேல ஒரு கண்ணு இருக்கட்டும்னு சொல்லி வெச்சேன்...
அதுக்கப்புறம் மகேஷ் காலைல இருந்து எங்க கூடவே இருந்தான்...
ஆனா... நைட் 7 மணிக்கு மேல ஆள் எஸ்கேப்...
ரூம்ல நாங்க பதட்டமா உக்காந்துட்டு இருக்கோம்.. ரெண்டு மணி நேரம் கழிச்சு தான் வந்தான்...
எது நடந்துடக்கூடாதுனு நான் பதறிட்டு இருந்தேனோ... அது இனிதே நடந்திருந்தது...
என்ன நடந்ததா...?!!
அந்த பக்கி அவன் Wife தீபா பேரை கையில பச்சை குத்திட்டு வந்திருந்தது...
ஐய்யோ... ஊருக்கு போனதும் தீபாகிட்ட இருந்து மொத போனு என் பொண்டாட்டிக்கில்ல வரும்...
# டேய்... வெட்டுங்கடா.. அவன் கைய...
மங்கு (Shajahan S)ரொம்ப ஹேப்பியா இருந்தான்..
"என்னடா மங்கு.. என்ன மேட்டரு..?"
"மச்சி.. இந்த வாரத்துல மட்டும் அஞ்சு பொண்ணுங்க எங்கிட்ட நம்பர் குடுத்து இருக்காங்க..!!"
"போடாங்.. குமார்கிட்ட நேத்து மட்டும் பதினேழு பொண்ணுங்க நம்பர் குடுத்தாங்க.."
"17 பொண்ணுங்களா..?? எந்த குமார்டா..?"
"அதான்டா பஸ் ஸ்டேண்ட்ல ரீசார்ஜ் கடை வெச்சிருக்கானே.."
# டிஷ்யூம்.. டிஷ்யூம்..!!
நாங்க நாலு ப்ரெண்ட்ஸ் பேமிலியா குற்றாலம் வந்திருக்கோம்...
குற்றாலத்துலயே அடுத்த தாய்லாந்து டூர்க்கு அடி போட்டாச்சு...
மொதல்ல ஜென்ட்ஸ் டீம் தாய்லாந்து போய் லொகேஷன் பாத்துட்டு வர்றது..
6 மாசம் கழிச்சு பேமிலியா தாய்லாந்து போறது...
இந்த ப்ளானை கேட்டு மகளிர் டீம் எங்களை மொறைக்க... நான் லைட்டா திரும்பி என் Wife-ஐ பாத்தேன்...
அவங்க மூஞ்சில ஒரு மர்ம புன்னகை...
"ஏன் நிர்மலா அப்டி சிரிக்கற?"
"ஊருக்கு போனதும் மொத வேலையே.. உங்க பாஸ்போர்ட்டை எடுத்து ஒளிச்சி வெக்கறது தான்.."
"ஹெஹெஹேய்"
"நீங்க எதுக்கு இப்ப சிரிக்கறீங்க..?"
"நான் அல்ரெடி அத எடுத்து ஒளிச்சி வெச்சிட்டு தான் வந்திருக்கேன்.."
# ஆருகிட்ட...!!
எப்பவும் குற்றாலம் மாதிரி அருவி இருக்கற ஏரியாவுக்குப் போகும்போது கூடவே ஒரு டம்மி பீஸையும் கூட்டிட்டுப் போய்டணும்..
அப்பத்தான்.. இந்த செல்போன், வாட்ச் எல்லாம் அவங்ககிட்ட குடுத்துட்டு நாம நிம்மதியா ஃபால்ஸ்ல குளிக்கலாம்...
"டேய்.. டேய்.. இருங்கடா நானும் வர்றேன்... செல்போனை எல்லாம் என்கிட்ட குடுத்துட்டு எங்கடா போறீங்க..?! "
# அந்த கொழந்தையே நீங்க தான் சார் மொமெண்ட்...
கணவனின் காலை மனைவி பிடித்து விட்டால்.. 
செல்வம் பெருகும்..
- ஜோதிட சாஸ்திரம்..
மனைவியின் காலை கணவன் பிடித்து விட்டால்... 
வீட்டில் அமைதி நிலவும்..
- பாபா வெங்கீஷ்..

ஒரு பெரிய விளம்பர படம் எடுக்கற கம்பெனில இருந்து நேத்து ஒருத்தர் பாக்க வந்தாரு....
" சார்.. எங்க அடுத்த விளம்பரத்துல நீங்க நடிக்கறீங்க... "
" என்ன விளம்பரம்..?! "
" Dove சோப்பு.. "
" என்ன வெளயாடறீங்களா..?! நாங்க எல்லாம் சுமார் மூஞ்சி குமாரு.. "
" கான்செப்டே அதானே.. "
" அப்டியா.. எங்கே சொல்லுங்க.. "
" மொதல் நாள் நீங்க ஒரு தெருவுல நடந்து போறீங்க அங்க நிறைய பொண்ணுங்க நின்னுட்டு இருக்காங்க.. "
" சரி..! "
" ஆனா ஒருத்தர் கூட உங்கள திரும்பி பாக்கல.. "
" ம்ம்.. அடுத்து நான் Dove யூஸ் பண்றேன்... அந்த பொண்ணுங்க எல்லாம் என் பின்னாடி ஓடி வர்றாங்க.. ரைட்டா.. "
" அதான் இல்ல... அப்பவும் உங்கள யாரும் திரும்பி பாக்கல.. "
" ஆங்... என்ன கான்செப்ட் இது.. இத எப்டி விளம்பரமா எடுப்பீங்க..?!! "
" கான்செப்ட் எல்லாம் OK ஆகி.. பர்ஸ்ட் பேமெண்ட் வந்திடுச்சு.... "
" இந்த கருமாந்திரம் பிடிச்ச கான்செப்டுக்கு எப்டி Dove கம்பெனிக்காரன் காசு குடுத்தான்..?!! "
" ஹி., ஹி., ஹி.. காசு குடுத்தது Dove கம்பெனிக்காரன் இல்ல பாஸ்.. Yardley கம்பெனிக்காரன்.. "
# ஸ்கெட்ச் உனக்கில்ல வெங்கி... Dove-க்கு....!!!
ஜெகன்கிட்ட போன்ல பேசிட்டு இருக்கும் போது பேச்சுவாக்குல...
"நாளைக்கு குற்றாலம் போறேன்ல..."
"குற்றாலம் போறியா..? சொல்லவே இல்ல.."
"ஒரு வாரமா சொல்லி்ட்டு இருக்கேனே... உன்கி்ட்ட சொல்லலியா..?!"
"இல்லியே.."
எவன்கிட்ட சொன்னாலும் இப்டியே சொல்றீங்களேடா.. 
அப்ப நான் யார்கிட்டதான் இதெல்லாம் சொல்றேன்..?!
# ஒரே கன்பூசனா இருக்கே..!!
பொண்ணுங்ககிட்ட இருந்து ப்ரெண்ட் ரிக்வெஸ்ட் வந்தா.. 
நான் உடனே அக்செப்ட் பண்ண மாட்டேன்...
தப்பா நெனச்சிப்பாங்க...
ரெண்டு நிமிஷம் கழிச்சு தான் அக்செப்ட் பண்ணுவேன்...
 

" மச்சி... நான் மதுரைக்கு வர்றேன்டா.. "
" ஹே.. எப்ப வர்றே..? "
" சொல்றேன்.. ஜிகிர்தண்டா வாங்கி வை.. "
" ம்ம்.. சரி..!! "
" நாங்க 15 பேர் வர்றோம்.. 15 வாங்கி வை.. "
" 15-ஆவ்வ்வ்..?!!! "
" ஏன்டா.. வாய பொளக்குற.. ஒண்ணு எவ்ளோ வரும்..? "
" ஒண்ணு 50 ரூபா வரும் மச்சி.. "
" அம்பது ரூபா தானே.. சரி. சரி நானே பணம் குடுத்துடறேன்.. "
" நீயே பணம் குடுக்கறியா...?! அப்ப நான் தப்பா சொல்லிட்டேன் மச்சி.. ஒண்ணு 100 ரூபா வரும்.. "
# அடிங் கொய்யாலே..!!

Sunday, July 3, 2016

நேத்து என் பையன் ஸ்கூல்ல ஐ.ஐ.டி கோச்சிங் சம்பந்தமா 
ஒரு மீட்டிங்..
ஸ்டேஜ்ல ஒருத்தர் மைக்கைப் புடிச்சி...
எங்க டிரெய்னிங்ல படிச்ச ஸ்டுடெண்ட்ஸை ஐ.ஐ.டில 
கூப்பிட்டாக, இஸ்ரோல கூப்பி்ட்டாக, நாசால கூப்பிட்டாகனு 
ஸ்லைடு போட்டு பேசிட்டிருந்தாரு...
முப்பதாவது ஸ்லைடுக்கு மேல எனக்கு தூக்கம் சொக்கிச்சு.. 
லைட்டா தூங்கிட்டேன்..
பக்கத்துல இருந்த என் Wife...
"உஸ்.. என்னங்க தூங்கிட்டு இருக்கீங்க.. எந்திரிங்க.. 
இது நம்ம பையன் படிப்பு மேட்டர்.."
"நம்ம பையன் முன்னாடி உக்காந்து கேட்டுட்டு தானே 
இருக்கான்.. அவன் எதுல சேரணும்னு ஆசைப்படறானோ.. 
அதுல சேத்தி விடறேன்.."
"ம்ம்க்கும்..!!"
அவரு பேச்சை கண்டினியூ பண்ண... நான் தூக்கத்தை 
கண்டினியூ பண்ண.. அரைமணி நேரத்துக்கு அப்புறம் 
மைக்ல ப்ரின்சிபால் குரல்....
" டியர் பேரன்ட்ஸ்.. இந்த மீட்டிங்ல என்ன தெரிஞ்சிக்கிட்டீங்க..?"
(ம்ம்ம்.. ஃபீஸ்ல 25000 சேத்த போறீங்கன்னு தெரிஞ்சிக்கிட்டோம்..)
மீட்டிங் முடிஞ்சி பையனைக் கூட்டிட்டு வெளியே வந்தோம்..
அப்ப என் Wife பையன்கிட்ட..
"சூர்யா... நீ எந்த கோச்சிங்ல சேரலாம்னு இருக்கே..?"
"போம்மா.. மீட்டிங் செம்ம போரு... நான் தூங்கிட்டேன்.."
# மயக்குறு ஃபாதர்.. மயக்குறு சன்... ஹி., ஹி., ஹி..

இப்பல்லாம் நகைல அடிக்கடி டிசைன்ஸ் மாறிட்டே இருக்கு...
அதனால வருஷம் ஒரு தடவை என் Wife-ஐ நகை கடைக்கு கூட்டிட்டு போயிடுவேன்...
போயி...
வந்திருக்கிற எல்லா லேட்டஸட் டிசைன்ஸையும் காட்டிட்டு கூட்டிட்டு வருவேன்..
அப்டேட்டா இருக்கோணும்ல....


விமர்சகர்கள் சுமார் படம்னு சொன்னதால பாக்காம விட்டு 
நேத்து தான் பாத்தேன்...
சிரிச்சி சிரிச்சி... செம்ம... ரொம்ப நாள் கழிச்சி ஒரு நான் 
ஸ்டாப் காமெடி...
சாம்பிள்...
( ஸ்ரீதிவ்யா: உன்ன கல்யாணம் பண்ணிக்க எனக்கு 
இஷ்டம்ல்ல...
ஜான் விஜய்: உனக்கு நான் ரெண்டு ஆப்சன் தர்றேன்...
ஒண்ணு.. என்னை கல்யாணம் பண்ணிட்டு சந்தோஷமா 
சிரிச்சிட்டே இரு...
ரெண்டு... என்னை கல்யாணம் பண்ணிட்டு சோகமா 
அழுதுட்டே இரு... )
ஜான் விஜய் வாய்ஸ்ல யோசிச்சி பாருங்க..
காலைல இருந்து இத நெனச்சி நெனச்சி சிரிச்சிட்டே இருக்கேன்....
சூரி காமெடி ராக்ஸ்...!!
செகண்ட் டைம் பாக்க போறேன்...
நான் காலேஜ் படிச்சிட்டு இருந்தப்ப அருண் 
அவங்க சொந்தக்கார பொண்ணு அனிதாவ லவ் பண்ணினான்..
ஒன்சைடு லவ்..
ஆனா.. இவன் படிச்சிட்டு இருக்கும்போதே 
அந்தப் புள்ளக்கு வேற இடத்துல கல்யாணம் 
பண்ணி வெச்சிட்டாங்க..
அருண் பயங்கர அப்செட்...
காலேஜ் முடிச்சும் கூட அடிக்கடி அவனைப் பாப்பேன்.. 
அப்பல்லாம் கல்யாணமே பண்ணிக்க மாட்டேன் மச்சினு 
பொலம்புவான்..
திடீர்னு ஒரு நாள் வீட்டுக்கு வந்தான்..
"மச்சி கல்யாணம் ஃபிக்ஸ் ஆகிடுச்சிடா.."
"வாவ்.. சூப்பர்டா மாப்ளே..!! யார் பொண்ணு..?"
"அனிதாவோட தங்கச்சி.. கவிதா.."
"என்னாது அனிதாவோட தங்கச்சியா.. எப்டி மச்சி ஒத்துகிட்டே..?!!"
ஒரு பத்து செகண்ட் அமைதியா இருந்தான்..
அப்புறம் மெதுவா என் காதுல சொன்னான்..
"இதுவும் சூப்பர் ஃபிகர் மச்சி.."