Monday, September 23, 2013

" யார் யாருக்கோ குடுக்கறாங்க.. உங்களுக்கு 
ஏன் இன்னும் நோபல் பரிசு குடுக்கல " னு 
ஒரு நண்பர் கேட்டாரு.....

( " சிரியா கூட சண்டை வேணாம்" னு 
ஓபாமா கூட போன்ல பேசினதை பாத்து 
இருப்பாருன்னு நெனக்கிறேன்.. )

அதுக்கு என் தன்னடக்கமான பதில்..

" நான் தான் வேணாம்னு சொல்லிட்டேன் ப்ரோ. "

" ஏன்...?!!! "

" போன வாரம் தான் 12 நேஷனல் அவார்டு, 
6 கோல்டன் குளோப் அவார்டு, 8 ஆஸ்கார் அவார்டு, 
அப்புறம் கலைமாமணி, பத்மஸ்ரீ, இன்னும் இது மாதிரி 
200 அவார்ட்டை ரூமை அடைச்சிட்டு இருக்கேன்னு 
பழைய இரும்பு கடைக்காரனுக்கு போட்டேன்.. "

" ?!?!!?!?? "

Wednesday, September 18, 2013

இன்னிக்கு காலையில என் சிஸ்டத்துக்கு
பின்னாடி இருக்குற சுவர்ல என் Wife
போட்டோ மாட்டி இருந்துச்சு..

என்னடா இது திடீர்னு.. இந்த போட்டோ
இங்கே எதுக்கு வந்துச்சின்னு யோசிச்சிட்டே
என் Wife-ஐ கூப்பிட்டேன்..

" நிர்மலா.. இங்கே வாம்மா ( அன்பு ).. "

" என்னங்க...? "

" ஆமா இங்கே எதுக்கு உன் போட்டோவை
மாட்டி வெச்சி இருக்க..? "

" வர வர நீங்க பொண்ணுங்களை ஜாஸ்தி
வம்புக்கு இழுக்கறீங்கல்ல.. "

" அதுக்கு..??!! "

" போஸ்டிங் போடும்போது என் போட்டோவ
பாத்துட்டே எழுதினா ஒரு பயம் இருக்கும்..
வீண் வம்புக்கு போக மாட்டீங்க...!! "

" ஹே., ஹே., ஹே.. இத பார்ரா..!! "

டிஸ்கி : இப்ப கண்ணை மூடிகிட்டே டைப்
பண்றது எப்படின்னு டிரைனிங் எடுத்துட்டு
இருக்கேன்.

ஹே யாருகிட்ட... ஹி., ஹி., ஹி...!!


சூர்யாகிட்ட தப்பி தவறி எவனாவது 
லிப்ட் கேட்டான்னா.. அவனை கூட 
நேரா " மலபார் கோல்ட் " கடையில தான் 
போயி எறக்கி விடுவாரு போல இருக்கு..!

:)

Saturday, September 14, 2013இவன் வண்டி ஓட்றதே தப்பு... இதுல டபுள்ஸ்
வேற...( என் பையன் ப்ரெண்டு அரவிந்த்..
வயசு 11 )

அவங்க அப்பன் இந்த பக்கம் வரட்டும்...
நாயை விட்டு கடிக்க வெக்கிறேன்..

காலைல இதை பாத்துட்டு என் பையன்...

" அப்பா.. அப்பா.. அரவிந்த் எல்லாம்
ஸ்கூட்டி ஓட்றான்.. எனக்கும் குடுங்கப்பா... "

" ஸ்கூட்டி சைஸ் கூட இல்ல..
ஸ்கூட்டி கேக்குதா உனக்கு.. போடாங்... "

" அப்ப பைலட் ஆகனும்னா ஏரேப்ளேன்
சைஸ் இருக்கணுமாப்பா...? "

" ?!????!!!! "

Thursday, September 12, 2013

சாட்ல பொண்ணுங்க யாராவது 

" வெங்கட் உங்க வயசு என்னனு.? " 
கேட்டாங்கன்னா... 

" லேடீஸ் பர்ஸ்ட்னு " பாலை தூக்கி 
அவங்க பக்கம் போட்டுடுவேன்.. 

அப்புறம் அவங்க என்ன வயசு சொல்றான்னு 
பாத்துட்டு... நான் 2 வயசு கம்மியா சொல்லுவேன்..

ஆனா... இன்னிக்கு என்ன ஒரு அநியாயம் 
" எனக்கு 17 வயசு "னு சொல்ல வெச்சிடுச்சு 
ஒரு பொண்ணு..

:P :P


ஆயாம்மா எல்லாம் 
ஆஸ்திரேலியால இருந்து வர்றாங்களாம்.... 

ஆங்..!

Wednesday, September 11, 2013

அம்மா.., 

இப்போது உங்களது பொன்னான ஆட்சி 
சிறப்பாக நடந்து வருவது உலகறிந்ததே.. 
உங்கள் ஆட்சியின் ஒரு வருட சாதனைகளை 
போன் போட்டு பலருக்கு தெரிவித்து, அவர்களை 
நல்வழிக்கு ( நம்ம கட்சிக்கு தான் ) கொண்டு 
வருவதை என் கடமையாக கருதி செய்து வருகிறேன். 

அந்த பணியில் எனக்கு இப்போது சிறு தடங்கல் 
ஏற்பட்டு உள்ளது..

உங்கள் சாதனைகளை பாதி சொல்லிக்கொண்டு
இருக்கும்போதே மொபைல் போனில் பேட்டரி
சார்ஜ் காலி ஆகிவிடுகிறது..

ஆகையால் தினமும் மொபைல் போன் சார்ஜ்
செய்யுமளவுக்காவது கரண்ட் கொடுக்கும்படி
தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்..

இப்படிக்கு
அம்மாவின் கொத்தடிமை.

Tuesday, September 10, 2013

ஃபேஸ்புக்னா தினமும் அவங்க மூஞ்சியை 
போட்டோ புடிச்சி போடறதுன்னு சில பேர் 
நினைச்சிட்டு இருக்காங்க.... 

# என்ன சம்முவம் இது..??

Monday, September 9, 2013

இன்னிக்கு நம்ம ப்ரெண்டு ஒருந்தங்க 
ரொம்ப கன்ஃபீஸா இருந்தாங்க... 

நான் அவங்ககிட்ட.. 

" என்னங்க பண்ணிட்டு இருக்கீங்க..? 

"இனிப்பா " சர்க்கரை பொங்கல் செய்வது 
எப்படினு ஆராய்ச்சி பண்ணிட்டு இருக்கேன்.. "

" வெளங்கிடும்..! "

" அதை பிள்ளையாருக்கு வைக்கலாமா
வேண்டாமானு யோசிச்சிட்டு இருக்கேன்.. "

" சுத்தம்..! "

" இப்ப என்ன பண்றது வெங்கட் சார்... "

" செஞ்சி பாருங்க.. ஆனா பிள்ளையாருக்கு வைக்க
வேண்டாம்... பரமசிவனுக்கு வைச்சிடுங்க...
அவருக்கு தான் ஏற்கனவே எக்ஸ்பீரியன்ஸ்
இருக்கு.. ( விஷத்தை முழுங்கி )... " 

Saturday, September 7, 2013

அது என்னமோ தெரியல..

என் கண்ணுக்கு முன்னாடி அநியாயம்
நடந்தா என் நரம்பு எல்லாம் முறுக்கேறி,
கண்ணு எல்லாம் சிகப்பாகி., கன்னம் எல்லாம்
துடிக்கும்...

அப்ப எவனா இருந்தாலும் பாக்க மாட்டேன்..
ஆங்...

" டமால்...."

( அட நான் அடிச்சி.., அவன் விழுதுடுவான்னு
சொல்ல வந்தேன்...! )

Sunday, September 1, 2013

மீட்டிங்குக்கு வந்த பளாக்கர்ஸ்க்கு 
AVM ஸ்டுடியோ முன்னாடிதான் 
ரூம் போட்டிருக்காங்களாம்..

காலைல முதல் வேலையா 
தமன்னா., அனுஷ்கா, சமந்தா 
யாராச்சும் வர்றாங்களான்னு 
பார்க்கணும்..

வந்தா... உடனே ஓடி போய் 
ஒரு போட்டோ எடுத்துகிட்டு,
நம்ம ஆட்டோகிராப் ஒன்னு போட்டு 
குடுத்துட்டு வந்திடணும்.... 

அங்ங்...

வைரமுத்துவுக்கு டஃப் பைட் குடுப்ப போல இருக்கே... 
நல்லவேளை இதையெல்லாம் பார்க்க வாலி இல்ல...

# AVM ஸ்டியோ அருகில் இருந்த மரத்தில் பார்த்தது.
பதிவர் சந்திப்புல தான் 
தெரிஞ்சது.. நிறைய பதிவர்கள் 
 "நீயா., நானால" கலந்துகிட்டவங்கன்னு...

அதை கேள்விபட்டு நண்பர் கேட்டாரு...

" சார்... நீங்க எப்ப ' நீயா.? நானா.?-ல ' வருவீங்க..? "

உடனே நான் அவரை திருப்பி கேட்டேன்...

" அப்புறம் கோபி என்ன சார் பண்ணுவாரு..? "
கல்யாணத்துக்கு போனா...
அங்கே தெரிஞ்ச பேஸ்புக் நண்பர்கள் 
யாராவது இருக்கிறார்களான்னு தேடுவது 
என்ன மாதிரியான மனநோய்..?!?!