Sunday, August 24, 2014

திருட்டு டிவிடில படம் பார்க்க கூடாதுன்னா 
அந்த அளவுக்கு படம் எடுக்கணும்யா.. 
அத வுட்டுட்டு...

.
.
.
.
.
.
.
.

# இப்ப " திருமதி தமிழ் " படத்தை எல்லாம்
எவனாவது திருட்டு டிவிடில பாத்திருப்பான்றீங்க...?!!!
நேத்து மதியம் மங்குனி அமைச்சரோட காத்தாடி காயத்ரிகிட்ட 
இருந்து போன்.....

" நீங்க அஞ்சானை ஏன் இவ்ளோ ஓட்றீங்கனு 
நான் கண்டுபிடிச்சிட்டேன்.. "

" ஏன்..? "

" ஏன்னா.. உங்களுக்கு சூர்யாவை பிடிக்காது... "

" ஹி., ஹி., ஹி... இல்லியே... "

" அப்புறம்... ஏன்..?!! "

" ஏன்னா.. என் Wife-க்கு சூர்யாவ ரொம்ப பிடிக்கும்..!!! "

# எப்புடி...?!!
" அஞ்சான் " படத்தை பார்க்காம 
விமர்சனம் பண்ணக்கூடாதுன்னு 
நடிகர் விவேக் சொன்னாப்லன்னு 
நானும் 10 நிமிஷம் பாத்தேன்....

அப்புறம்....
.
.
.
.
.
.
.
.
.
வாந்தி வர்ற மாதிரி இருக்குன்னு
எழுந்து வந்துட்டேன்....

யாருமே இல்லாத கடையில 
யாருக்குடா " டீ " ஆத்திட்டு இருக்கீங்க....?!!!

Friday, August 22, 2014

இந்தியன் கிரிக்கெட் டீம் டிக்ஸ்னரி - PS


அஞ்சான் - PS






இந்த கோலி, புஜாரா எல்லாம் இங்கிலாந்து 
போனதுக்கு ஒரே ஒரு காரணம் தான் 
இருக்க முடியும்...

.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.

# இங்கிலாந்தை சுத்தி பார்க்கணும்னு
ஆசைப்பட்டு இருப்பானுங்க..!!!

Kids Crying in Flag Hosting - PS



இந்த அமலா பால் தலையில குருவி எதாவது 
கூடு கட்டி இருக்கான்னு மொதல்ல செக் பண்ண 
சொல்லணும்... 

# வி.ஐ.பி
எங்க Family Doctor Clinic...

" டாக்டர்... எனக்கு காலைல இருந்து ஃபீவர்...! " 

" இந்த மருந்தை மூனு நாள் சாப்பிடு.. 
சரியா போயிடும்..! "

" போன வாரம் என் Wife-க்கும் இதே மாதிரி தான் 
ஃபீவர் இருந்தது.. "

" எல்லாம் வைரல் ஃபீவர் தான்.. "

" இப்ப எங்க பாட்டிக்கும் ஃபீவர் வர்ற மாதிரி
இருக்குன்னு சொன்னாங்க..!! "

" இது வைரல் ஃபீவர் சீஸன்... எல்லோருக்கும் 

வரும்.. "

" டாக்டர்.. ஒரு டவுட்டு..."

" என்ன...?? "

" எந்த சீஸன்லயும்., எந்த டாக்டர்க்கும்.,
எந்த ஃபீவரும் வர்றதேயில்லையே...
எப்படி டாக்டர் அது..? "

" நர்ஸ்ஸ்ஸ்... இவன் ஜாஸ்தி பேசறான்..
வாயிலயே ஒரு ஊசி போட்டு அனுப்பு.. "

" வாயிலயா.... அவ்வ்வ்வ்வ்...!!! "
மங்குனி அமைச்சர்கிட்ட இருந்து போன்....

" யோவ்... என்னாய்யா பண்ணிட்டு இருக்கே..? "

" உடம்பு சரியில்ல.. ரெஸ்ட்ல இருக்கேன்..!! "

" என்னாய்யா ஆச்சு..??! "

" தெரில.. ரொம்ப டயர்ட்டா இருக்கு.., 
இப்பதான் வாந்தி எடுத்துட்டு வந்து 
படுத்துட்டு இருக்கேன்...!! "

" வாவ்... கங்காருலேஷன்... நீங்க
அப்பா ஆகப்போறீங்க... "

" அட பன்னாட...!!! "