Wednesday, November 30, 2016

ஆக்சுவலி ரெண்டு வருஷம் முன்னால "நீயா நானா"ல கலந்துக்க வர சொல்லி போன் வந்தது...
" ஏன் கோபி வேலைய விட்டு போயிட்டாரானு " கேட்டேன்.
போனை டக்னு வெச்சிட்டாங்க...
நாம கலந்துகிட்டதுக்கப்புறம் கோபி வேலைய விட்டு போயிட்டா.. பழி நம்ம மேல வந்துடுமேனு ஒரு சேப்டிக்கு கேட்டா....
அதுக்கு போயி..... ஹி., ஹி., ஹி...!!!
விஜய் டிவிக்கும்., நீயா நானா டீம்க்கும் என் நன்றி...!!
.
.
.
" நீயா நானால " கலந்துக்க வரச்சொல்லி எனக்கு போன் எதுவும் வரல....
ஏன் போன் வந்தா தான் நன்றி சொல்லணுமா என்ன...?!

வனிதா போஸ்ட் - கவுண்ட்டர்


நட்சத்திர கிரிக்கெட்டில் முறைகேடுகள் - மீம்ஸ்


எனக்கு ஒண்ணு ரெண்டு வெள்ளை முடி எட்டி பாக்குது...
டாக்டர்கிட்ட கேட்டேன்..
" இவ்ளோ சின்ன வயசுல வந்தா.. இது பித்த நரைனு " சொல்லிட்டாரு.....
அப்ப மொதல்ல இந்த காபிய கட் பண்ணனும்...
ஏன் அப்டி டவுட்டா பாக்கறீங்க...?!! நம்ப முடியலல்ல... தெரியும்...
மொதல்ல டாக்டரும் நம்பல...
" ரெண்டு வெள்ளை முடியா..?! உனக்கானு.?!" அதிர்ச்சியா தான் கேட்டாரு...
என் ப்ரெண்ட் பிரதீப் ICICI Bank-ல மேனேஜரா இருக்கான்...
அவனை இன்னிக்கு தியேட்டர் வாசல்ல பாத்தேன்...
" என்னா மச்சி பேங்க்குக்கு போகாம இங்க சுத்திட்டு இருக்கே...?! "
" 2 நாள் பேங்க் லீவ்ல... "
" வாட்...?!!! ரெண்டு நாள் லீவா....?! எதுக்கு...?! "
" இன்னிக்கு 4th Saturday.., நாளைக்கு Sunday... அதான்... "
" எல்லைல இருக்கற ராணுவ வீரர்கள் எல்லாம்.... "
" போங்கடா... நானும் வேலைய ரிசைன் பண்ணிட்டு ராணுவத்துலயே சேர்த்துக்கறேன்... "
" மச்சி... நில்லு மச்சி... "
கோச்சிட்டு வேகமா போயிட்டான்...
நாட்டுக்கு ஒரு ராணுவ வீரனை Increase பண்ணியிருக்கேனு நெனைக்கும் போது எனக்கு பெருமையா இருக்கு...!!
இன்னிக்கு மதியம் என் பையன் ஸ்கூல்ல இருந்து போன் வந்தது...
" ஹலோ நாங்க ஸ்கூல்ல இருந்து பேசறோம்.. "
" சொல்லுங்க மேடம்.. "
" சூர்யாவோட ஃபாதரா..? "
" ஆமா.. "
" நான் சூர்யாவோட கிளாஸ் மிஸ் பேசறேன்.. "
( என்னாது மிஸ்ஸா..!!! )
" மிஸ்., மிஸ் அவன் வேணும்னே பண்ணியிருக்க மாட்டான்.. கொஞ்சம் துருதுருனு இருப்பான்.. அவ்ளோ தான்.. "
" சார்.. சொல்றதை கேளுங்க.. "
" நீங்க ஒண்ணும் சொல்லவே வேணாம் மிஸ்.. இந்த ஒரு தடவை மட்டும் எக்ஸ்யூஸ் பண்ணிக்குங்க.. நான் அவனை கண்டிச்சு வெக்கிறேன்.. "
" அப்டி எல்லாம்... "
" இல்ல மிஸ்... நீங்க முடியாதுனு சொல்லக்கூடாது.. பெரிய மனசு பண்ணி மன்னிச்சி விட்டுடுங்க.. "
" சார்... நீங்க கொஞ்சம் பெரிய மனசு பண்ணி நான் சொல்றதை கேக்கறீங்களா..? "
" சரி சரி சொல்லுங்க... "
" நாளைக்கு சூர்யாவை காலைல 7 மணிக்கு ஸ்கூல்ல கொண்டு வந்து விடணும்.. ஃபீல்ட் டிரிப் போறோம்.. "
( அவ்ளோ தானா..?! )
" ஓ.கே., மிஸ்..!! "
இதுக்கெல்லாமா ஸ்கூல்ல போன் பண்ணுவாங்க....?!!
நானல்லாம் படிக்கிற காலத்துல எங்க மிஸ் எங்கப்பாவுக்கு போன் பண்ணினா...
சரி சரி.. அதெல்லாம் இப்ப எதுக்கு...?!! லூஸ்ல விடுங்க...

Thursday, November 24, 2016

என் ப்ரெண்ட் ரவிக்கு போன் பண்ணியிருந்தேன்....
" மச்சி.. பொங்கல் லீவ்ல எங்கயாவது டூர் போலாமா..?!! "
" நோ... அப்ப ஐயம் வெர்ர்ரி பிஸி... "
" லீவ்ல என்னடா பிஸி... "
" அப்ப அலங்கா நல்லூர் ஜல்லிக்கட்டுக்கு என்னய கூப்பிடுவாங்கல்ல... "
" ஆ...!!! ஆச்சரியமா இருக்கே... "
" இருக்கணும்ல... "
" இல்ல ஜல்லிக்கட்டுன்னா காளை மாட்டை தான் கூப்பிடுவாங்க... இப்பல்லாம் எருமை மாட்டையுமா கூப்பிடறாங்க..?!! "
# ஆருகிட்ட..!!!

அது சரி.... எந்த ATM-ல கூட்டம் கம்மியா இருக்குனு சொல்றதுக்கு எதுனா App இருக்குங்களா...?!!
:Pஎன்னா மச்சி.. இப்டி சொல்லிட்டே... 

நீ சொன்னா.... நான் இந்த பில்டிங்கல் இருந்து கூட உன்னை தள்ளி விடுவேன்டா.... 

ஹி., ஹி., ஹி...!!!!
மங்கு (Shajahan S) போன் பண்ணியிருந்தான்....
" மச்சி... ஆபீஸ்ல ஒரு பொண்ணு எல்லோரையும் அண்ணா.. அண்ணானு கூப்பிட்டு வெறுப்பேத்துது "
" அது தப்பாச்சே... இரு நான் நாளைக்கு உன் ஆபீஸ்க்கு வந்து இத டீல் பண்றேன்... "
" நீ ஆணியே புடுங்க வேணாம்.. அங்க இருந்தே ஐடியா குடு... "
" ம்ம்க்கும்... சரி ஏன் அப்டி கூப்பிடுதாம்..? "
" அதுக்கு கூடப்பொறந்த அண்ணன் யாரும் இல்லியாம்.. அதான் எல்லோரையும் அண்ணனா ஃபீல் பண்ணுதாம்... "
" நல்லா இருக்கே கதை... உனக்கு கூடத்தான் இன்னும் கல்யாணம் ஆகல... "
" ஆஹா... புரிஞ்சிடுச்சு மச்சி... தேங்க்ஸ்... "
" டேய்.. டேய்... என்னடா புரிஞ்சுது சொல்லிட்டு போடா... "
போனை கட் பண்ணிட்டான்...
ரைட்டு... நாளைக்கு இந்த நாய் செருப்படி வாங்க போறது கன்பார்ம்...!!

Saturday, November 19, 2016


"நிர்மலா.. இங்க வாயேன்.."
"இருங்க இந்த டிஷ் மட்டும் எப்டி பண்றார்னு பாத்துட்டு வரேன்.."
"தலை வலிக்குது எனக்கு டீ குடேன்"
"கொஞ்ச நேரம் பொறுக்க முடியாதா? எல்லைல ராணுவ வீரர்கள் எல்லாம்..."
"வேண்டாம் வேண்டாம் எனக்கு தலைவலி சரியா போச்சு.."
ATM-ல பணம் எடுக்க க்யூல நின்னுட்டு இருந்தேன்...
ஒரு லோக்கல் டிவி சேனல் அங்க பேட்டி எடுத்துட்டு இருந்தாங்க...
கம்பியரிங் பண்ணிட்டு இருந்த புள்ள மைக்க நீட்டி...
" இந்த கருப்பு பண ஒழிப்பு நடவடிக்கையில மிகப்பெரிய பாதிப்புனு எத நெனக்கிறீங்க.?" கேட்டுச்சு
எனக்கு முன்னாடி நின்னுட்டு இருந்தவங்க எல்லாம்...
" வேலைக்கு போக முடியல.., குழந்தைக்கு பால் வாங்க முடியல., அம்மாக்கு மாத்திரை வாங்க முடியலனு " பொலம்பிட்டு இருந்தாங்க...
மைக் என்கிட்ட வந்தது...
" இந்த கருப்பு பண ஒழிப்பு நடவடிக்கையில மிகப்பெரிய பாதிப்பு..... மீண்ண்டும் கருப்பு பணம்னு.. " சொன்னேன்...
நான் என்ன சொன்னேன்னு எனக்கே புரியல... ஆனா அந்த புள்ளக்கு புரிஞ்சிடுச்சு போல... என்னைய பாத்து சிரிச்சது...
போறப்ப கேமராமேன்கிட்ட..
" இவரு கண்டிப்பா ஆக்ஸ்போர்ட் யுனிவர்சிட்டிலதான் படிச்சி இருக்கணும்னு " சொல்லிட்டே போச்சு....
ஹி., ஹி.,ஹி...!!!
எப்பவும் அந்த புள்ள FB புரோபைல்ல அதோட போட்டோ தான் வெச்சிருக்கும்..
இன்னிக்கு பாத்தா... பூ படம் இருக்கு...
உடனே அந்த புள்ளய சாட்டிங்ல புடிச்சி..
" ஹேய்... புரோபைல்ல உன் போட்டோவ காணோம்..?! "
" புரோபைல்ல நம்ம போட்டோ வெச்சா டேஞ்சர்னு சொன்னாங்க அதான்.... "
" ஹி., ஹி., ஹி.. யார்க்கு டேஞ்சர்னு நல்லா விசாரிச்சியா...?! "
# BLOCKED
# ஆஹா.. உளறிட்டோமே...!!
நடிகர் விஜயகாந்த் வீட்டில் கருப்பு பணம் உள்ளதாக வந்த செய்தியை அடுத்து விஜயகாந்த் வீட்டிற்குள் நுழைந்த சிபிஐ... கடைசியில் விஜயகாந்த் வீட்டில் உள்ள பணமும் வெள்ளை, அவர் மனசும் வெள்ளை என தெரிவித்தனர்... 😜😜😜😜
" 500, 1000 செல்லாதுனு சொன்னதால என்ன நடக்கும்னு நெனக்கறீங்க..? "
" இந்தியால இருக்கற கருப்புபணம் எல்லாம் ஒழிஞ்சிடும்ல... "
" அப்ப சுவிஸ் பேங்க்ல இருக்கற கருப்பு பணமெல்லாம்...??!! "
" அதான் அடுத்த வாரம் சுவிட்சர்லாந்து பணமெல்லாம் செல்லாதுனு மோடி அறிவிக்க போறாராம்ல... "
# பாரத் மாதா கீ ஜே...

இது மிகவும் நல்ல சிறப்பான முடிவு...
மிகவும் நல்ல சிறப்பான முடிவு...
நல்ல சிறப்பான முடிவு...
சிறப்பான முடிவு...
முடிவு..!!
!!
#கதம் கதம்...
" ரூபாய் நோட்டுகளில் கையெழுத்திடுவேன் " - விராட் கோலி
ஹி., ஹி., ஹி...இதெல்லாம் நாங்க 7வது படிக்கும் போதே பண்ணிட்டோம்..!!!
அதுல ஒரு நோட்டு பிரின்சிபால் கையில சிக்கி என்னை தனியா கூப்பிட்டு பாராட்டினது தனி கதை..
:)

FB போராளி - அது ஒரு மெலிசான கோடு - PS


என் ப்ரெண்ட் ரவி வீட்டுக்கு வந்திருந்தான்...
மூஞ்ச பாத்தாலே தெரிஞ்சது எதோ சிக்கல்ல இருக்கான்னு..
" மச்சி.. என்ன மேட்டரு..? "
" அது வந்து.. அது வந்து... கொஞ்சம் பணம் கெடைக்குமா..? "
" இதுக்கு ஏன் இவ்ளோ தயங்கற.. நீ என் உயிர் நண்பன்டா.. உனக்கு குடுக்காம.. "
" தேங்க்ஸ் மச்சி.. "
" சரி எவ்ளோ வேணும்..? 1 லட்சமா..? 2 லட்சமா..? "
" அவ்ளோல்லாம் வேணாம்.. 400 ரூபா இருந்தா குடு.. "
" என்னாது.... நாலு 100 ரூபா நோட்டு வேணுமா..? ஓடி போ நாயே..!! "

Tuesday, November 15, 2016

மதியம் பேங்க் பக்கம் போனப்ப அங்க மங்கு (Shajahan S) நின்னுட்டு இருந்தான்...
" என்ன மங்கு.. இங்க நிக்கிறே..?! "
" இந்த 4000 ரூபா மாத்தி வாங்க தான் மச்சி.. "
" அப்ப போயி வாங்க வேண்டியது தானே..?! "
" கூட்டம் ஓவரா இருக்கே... "
" அதுக்கு...?! "
" ஆனந்தோட இன்ஃப்லுயென்ஸ் யூஸ் பண்ணலாம்னு அவனை வர சொல்லி இருக்கேன்... "
" அந்த வெண்ணை என்ன பெரிய ரிசர்வ் பேங்க் கவர்னரா..?! "
" மச்சி.. அவனுக்கு இந்த பேங்க்ல இருக்கற மரியாதைய பத்தி உனக்கு சரியா தெரியாது... "
" ஏன் எங்களுக்கு இல்லியா மரியாதை..?! நேத்து கூட 4000 ரூபா எடுத்துட்டு மாத்தறதுக்கு மேனேஜர் ரூம்க்கே போயிட்டேன்ல... "
" நிசமாவா..?! "
" அக்காங்.... "
" மேனேஜர் என்ன சொன்னாரு..?! "
" மரியாதையா போயி க்யூல நில்லுனு சொன்னாரு... "
# த்த்தூ.....!!!!
நேத்து நைட் மங்குக்கு (Shajahan S) போன் பண்ணி..
" மங்கு... சூப்பர் மூன்... பெருசா தெரியும்னு சொன்னே.. அப்டி ஒண்ணும் தெரியலியே... "
" அத சாதாரணமா பாத்தா தெரியாது மச்சி... "
" பின்ன...?! "
" போட்டோ எடுத்து ஜூம்ம்... பண்ணி பாரு.. "
என் பையன் ஸ்கூல்ல சில்ட்ரன்ஸ் டே ஃபங்சன்... பாக்க போயி இருந்தேன்..
ஆடிடோரியம்ல ஃபங்சன்...
அங்க போனா... ஸ்டுடண்ட்ஸ் மட்டும் தான் கீழே.. பேரன்ட்ஸ்க்கு பால்கனில இடம் அலாட் பண்ணியிருக்குனு சொன்னாங்க...
மாடி ஏற போனா... ஒரு மிஸ்ஸு நின்னுட்டு இருந்தாங்க...
" ஹலோ... பால்கனி பேரன்ட்ஸ் மட்டும் தான்.. "
( ஹய்யோ.. ஹய்யோ... இந்த மிஸ்ஸு என்னய ஸ்டூடண்ட்னு நெனச்சிட்டாங்க போல... )
" மிஸ்... நானும் பேரன்ட் தான்.. டீசர்ட் போட்டு இருக்கறதால ஸ்டூடண்ட்னு நெனச்சிட்டீங்களாக்கும்...?!! "
" ஹி., ஹி., ஹி... சாரி சார்.. கேமரா வெச்சி இருக்கறதால கேமராமேன்னு நெனச்சிட்டேன்..."
# தூம் தத்தா...!!!
கோவிலுக்கு போறேனு சொன்னா போதும்... உடனே " எனக்கும் சேர்த்து கும்பிட்டுட்டு வா"-னு சொல்றது....
உங்க எல்லோருக்கும் சேர்த்து நானே உண்டியல்ல காசு போட்டுட்டு வர்றேன்.. ஆளுக்கு 1000 ரூபா அக்கவுண்ட்ல போட்டு வுடுங்க....
# சம்போ... சிவசம்போ...!!!
கருப்பா இருக்கறதெல்லாம் கருப்பு பணம்னு பேசிட்டு இருந்தவனெல்லாம் இன்னிக்கு பொருளாதார மேதை ரேஞ்ச்க்கு பேசறான்...
2000 ரூபா நோட்டாமாம்...
சாட்லைட் கனெக்ஷனாமாம்...
பதுக்கி வெச்சா அதுவே இன்கம் டேக்ஸ் ஆபீஸ்க்கு போன் பண்ணுமாமாம்...
# சத்தியமா முடியலடா...!!!
இப்ப நீங்க என்ன பண்றீங்க பக்தாஸ்... இந்தியாவ அலேக்கா தூக்கிட்டு போயி அமெரிக்கா பக்கத்துல வெச்சிடறீங்க...
அப்புறம் நாம தானே அடுத்த வல்லரசு....
# பாரத் மாதா கீ ஜெ...
அமெரிக்கத் தேர்தலில் ட்ரம்ப் வெற்றி...
# ஏ அமெரிக்க ஆணாதிக்க ஏகாதிபத்தியமே....

500 ரூபா, 1000 ரூபா செல்லாதுனு சொன்னது மோடிஜியின் தனிப்பட்ட கருத்து... அதுக்கும் தமிழக பா.ஜ.க.வுக்கும் சம்மந்தமில்லை....
# சொன்னாலும் சொல்லுவாங்கோ...!!!


இந்தியாலயே... ஏன் வேர்ல்டலயே... ஓவர் நைட்ல மொத்த தாய்குலத்தோட வயித்தெரிச்சல கொட்டிக்கிட்ட கட்சின்னா.. அது நம்ம கட்சி தான்....
:P
500, 1000 ரூபா..
இல்லியேனு ஃபீல் பண்ணினவன் இப்ப ஹேப்பியா இருக்கான்...
இருக்குனு ஹேப்பியா இருந்தவன் இப்ப ஃபீல் பண்ணிட்டு இருக்கான்..
இத தான் " வாழ்க்கை ஒரு வட்டம்னு " அன்னிக்கே எங்க விஜய் அண்ணா சொன்னாரு...
டேய் மங்கு... தொண்டை கட்டிட்டு இருக்கறதால நீ உன்ன சிங்கம்னு நெனச்சிட்டு இருக்கே...
ஒரிஜினல் வாய்ஸ்ல பேசுடா... அப்ப லொள் லொள்னு தான் கேக்கும்....
# கேட்ச் இட்...!!

நான் பாக்கறதெல்லாம் ஷேர் பண்ற சாதாரண FB யூசர் இல்ல..
பிரச்னை வந்தா மட்டும் போராடுற போராளி...
இப்ப கொலவெறில இருக்கேன்...
எந்த பிரச்னை கெடைச்சாலும் போராடணுங்கற வெறில இருக்கேன்....
எதிர்ல எவன் வந்தாலும் மீம்ஸ் போட்டு கலாய்ச்சிட்டு போயிட்டே இருப்பேன்....
# ஃபேஸ்புக் சங்கம் 3

Monday, November 7, 2016

நான் சொல்ற எதையுமே நம்பாத ஒரு மனுஷன் இருந்தார்னா... அது எங்க காலேஜ் பிரின்சிபால் தான்...
அம்புட்டு நம்பிக்கை என் மேல..!!
கட்ட கடேசில... ஃபேர்வெல் டேல...
" நீங்க ரொம்ப நல்லவர் சார்னு " மேடையில வெச்சே சொல்லிட்டேன்...
அதையும் அந்த மனுஷன் நம்பல...!!!
:P :P
எனக்கு ஸ்கூல்ல பிரகாஷ்னு ஒரு ப்ரெண்ட் இருந்தான்..
பிரகாஷ் 10-A, நான் 10-B..
நான் லஞ்ச் பிரேக்ல அங்க போயி அவன்கிட்ட பேசிட்டு இருப்பேன்..
வழக்கம் போல ஒரு நாள் நான் போனப்ப...
அந்த கிளாஸ்ல சுதா பொண்ணு பக்கத்துல இருந்த சங்கீதாகிட்ட என்னைய காட்டி...
" ஹேய்.. இவன பாத்தா... கமலஹாசன் மாதிரியே இருக்கான்டி " னு சொல்லுச்சு..
அத கேட்டு எனக்கு கோவம் கோவமா வந்துச்சு,,,
ஆனா பிரின்சிபால் கையில இருக்கற குச்சிக்கு மரியாதை குடுத்து வந்த கோவத்தை கன்ட்ரோல் பண்ணிகிட்டேன்....
எதுக்கு கோவம் வந்துச்சாவா..?
அப்ப தான் " குணா " படம் ரிலீஸ் ஆகியிருந்துச்சு..!!

Sunday, November 6, 2016

7 ஐஸ்கிரீம் சாப்பிட்டா உடம்பு வெயிட் போடுமா..?!!
திங்கிங்....
போட்டா போடட்டுமே....
ஐஸ்கிரீமை வெயில்ல வெச்சா என்ன ஆகும்..?
உருகிடும்....
அப்ப நாளைக்கு காலைல அரைமணி நேரம் வெயில்ல நின்னா போச்சு.. தானா உருகிட போவுது.. சே.. கொறைஞ்சிட போவுது...
# நானே கண்டுபிடிச்சேன்..
என் வண்டி சாவி எங்க வெச்சேன்...?!!
2 நிமிஷத்துக்கு அப்புறம்...
ஆங்... கெடைச்சிடுச்சு...
என் பர்ஸூ..?
1 நிமிஷத்துக்கு அப்புறம்.. அதையும் எடுத்துக்கிட்டேன்...
என் கண்ணாடி..?!!
அத தேடிட்டு இருக்கும் போது என் Wife....
" எதையும் ஒரு எடத்துல வெக்கிறதில்ல.. அப்புறம் காலைல அரக்க பறக்க தேடறது.. "
" ஹி.,ஹி.,ஹி.. வாழ்க்கைன்னா ஒரு தேடல் இருக்கணும்னு என் குருநாதர் சொல்லி இருக்காரு... "
" தேடல் இருக்கலாம். ஆனா இப்டி சதா தேடிட்டே இருக்க கூடாது... "
அப்ப இன்னும் நான் மட்டும் தான் போயி பாக்கல போல...


உங்கள யாராவது கேவலமா பேசினா.... அவங்க முன்னாடி வாழ்ந்து காட்டணும்..
அத விட்டுட்டு அவங்க வீட்டு முன்னாடி போய் டான்ஸ் ஆடிட்டே இருக்கக் கூடாது..
- பாபா வெங்கீஷ்
"ஏங்க லட்டு சாப்பிடறீங்களா..?"
"வேணாம்... எனக்கு இப்ப லட்டு பிடிக்கல.."
"இது எப்ப இருந்து..?"
"5 லட்டு சாப்பிட்டப்ப இருந்து.. ஹி.,ஹி.,ஹி.."

Tuesday, November 1, 2016

திருப்பதி ரூம்....
நடுராத்திரி 6 மணி...
" நிர்மலா என் பேஸ்ட் எங்கே..?! "
" அத எடுத்துட்டு வரல... பதஞ்சலி பேஸ்ட் தான் இருக்கு... அட்ஜெஸ்ட் பண்ணிக்கோங்க... "
" சரி குடு.. "
" அங்க டேபிள் மேல இருக்கு எடுத்துக்கோங்க.. "
பேஸ்ட் போட்டு பல்லு வெளக்கினா...
" நிர்மலா.. என்ன இது நுரையே வரல..?! "
" அது ஆயுர்வேத பேஸ்ட் அப்டிதான் இருக்கும்.. "
" ஆனா.. வழவழனு இருக்குதே... "
" அட மூலிகைகள் கலந்து இருக்குல்ல... அப்டித்தான் இருக்கும்.. "
பேஸ்ட்டை திருப்பி பாத்தேன்... பல மூலிகை படம் போட்டு இருந்தது....
10 நிமிஷம் கழிச்சு.. என் Wife பிரஷ் பண்ண போனப்ப வேற பேஸ்ட் எடுத்துட்டு போனாப்ல...
" ஏய்... அது என்ன..?! "
" இதான் பதஞ்சலி பேஸ்ட்.. "
" அப்ப நான் யூஸ் பண்ணினது..?! "
" ஐய்யய்யோ... பதஞ்சலி Crack Cream எடுத்துட்டு போயிட்டீங்களா..?! "
" என்னாது.... Crack Cream-ஆ..?! "
அவ்வ்வ்வ்வ்...!!!!