Friday, July 31, 2015



ரெண்டு நாளா என் செக் புக்கை
தேடிட்டு இருந்தேன்..
எங்கையோ வெச்சிட்டேன்.. கண்ணுலயே
சிக்க மாட்டேங்குது..
அதுல நாலு லீப்ல என் கையெழுத்து
வேற போட்டு வெச்சி இருந்தேன்..
அதான் டென்ஷன்..
கொஞ்சம் நேரம் முன்னாடி...
" ஏங்க... இங்கே இருக்குங்க உங்க செக் புக்கு.. "
என் பீரோல சர்ட்க்கு கீழே இருந்த
செக் புக்கை எடுத்துட்டு வந்தாங்க
என் Wife... .
" தேங்க் காட்... இப்பத்தான் போன உசுரு
திரும்பி வந்தது.. "
" செக் புக் தானே.. இதுக்கு எதுக்கு இவ்ளோ
டென்ஷன்...?!! "
" என்ன இப்டி சாதாரணமா சொல்லிட்டே.
இது யார் கையிலயாவது கெடைச்சி..
அவன் ஒரு கோடி ரூபாய்க்கு செக் எழுதிட்டு
Bank-க்கு போயிட்டான்னா.... "
" உங்க அக்கவுண்ட்ல ஒரு கோடி ரூபா
இருக்கா..? "
" இல்ல.. 4950 ரூபா தான் இருக்கு..? "
" அப்புறம் என்ன..? "
" மினிமம் பேலன்ஸ் மெயிண்டெய்ன்
பண்ண துப்பில்ல... ஒரு கோடி ரூபாய்க்கு
செக் குடுத்து இருக்கியான்னு மேனேஜரு
துப்புவாரு... அதான்... ஹி., ஹி.., ஹி..!!! "

Monday, July 27, 2015


நம்ம Erode Kathir சார் புக்கு வந்திருச்சு..
வாழ்த்துக்கள் கதிர் சார்..
எப்பல்லாம் பதிவர்கள் புக் ரிலீஸ் ஆகுதோ.. 
அப்பல்லாம் எனக்கு பல்ப் எரியும்..
( " நம்ம புக் எப்ப இது மாதிரி ரிலீஸ் ஆகறது..?!! " )
டக்னு எனக்கு ஞாபகம் வந்தது...
" நம்ம சிஷ்ய பையன் Siva Sankar
பதிப்பகம் வெச்சி இருக்கான்ல... "
அட.. சிக்கனை கையில வெச்சிட்டு
சிக்கன் பிரியாணிக்கு அலைஞ்சி இகுக்கோமே..!?
வெட்டிடுவோம்...!!!
உடனே என் சிஷ்ய பையனுக்கு போனை
போட்டேன்..
" சிவா... எனக்கு ஒரு ஐடியா.. "
" என்ன தல... "
" என் பதிவை எல்லாம் உங்க பதிப்பகம் மூலமா
புக்கா போடலாம்னு இருக்கேன்.. "
( ஒரு செகண்ட் ஜெர்க் ஆகிட்டான்...
இன்ப அதிர்ச்சியா இருக்கும்..!! )
" தல... நாங்க சின்ன பதிப்பகம்.. "
"அதனால என்ன...?!! "
" உயிர்மை " மாதிரி பெரிய பதிப்பகத்துல
ஜாயின் பண்ணி விடவா..?! "
" நோ... நான் உங்களுக்கு தான்
வாழ்க்கை குடுக்கறதா முடிவு பண்ணியிருக்கேன்.. "
" ஆணியே பிடுங்க வேணாம்...!!! "
போனை வெச்சிட்டான்...
# ஆஹா... பிரியாணி போச்சே..!!!
என் Wife என்கிட்ட...
" தமன்னாவுக்காக தான் " பாகுபலி " செகண்ட் டைம்
பார்த்தேன்னு ஸ்டேடஸ் போட்டு இருக்கீங்க..? "
" ஆமா.. அதுக்கென்ன..? "
" என்னை கேட்டா.. தமன்னாவுக்கு பதிலா
வேற யாராவது நடிச்சி இருந்தா.. இன்னும்
நல்லா இருந்து இருக்கும்..!! "
( பொறாமை... பொறாமை..!! )
" அப்படியா சொல்றே..?!! சரி இரு.. நான்
இன்னொரு தடவை நைட் ஷோ பாத்துட்டு
வரேன்.. காலைல முடிவு பண்ணலாம்..!! "
# எப்டி பால் போட்டாலும் சிக்ஸ் அடிப்போம்ல..
ஹி., ஹி..ஹி...!!

Sunday, July 26, 2015

இன்னிக்கு என் ப்ரெண்ட் லிஸ்ட்ல இருக்குற
ஒரு பொண்ணுக்கு பர்த்டே...
ஒரு விஷ் பண்ணிட்டு.. அவங்க
Wall-ஐ போயி பாத்தா....
ப்ரெண்ட் லிஸ்ட்ல என்னையும் சேர்த்தி
மொத்தம் பத்தே பத்து பேர் தான்..
உடனே எனக்கு ஒரு டவுட்டு...
.
.
.
.
# ஒருவேளை " ஒரிஜினல் " ஐடியா இருக்குமோ..?!!

நேத்து "பாகுபலி " செகண்ட் டைம்..
" ஹேய்.. நீ தமன்னாவுக்காக தானே
செகண்ட் டைம் போனேனு..? " கேக்கறவங்களுக்கு
எல்லாம் ஒன்னு சொல்லிக்கறேன்...
.
.
.
நான் பர்ஸ்ட் டைம் போனதே...
தமன்னாவுக்காக தான்...!!!
ஹி., ஹி., ஹி...
ஒரு போராளி.. இன்னொரு போராளிய பாக்க
போனா.. அதுல எதாவது தப்பு இருக்கா என்ன..?!!
இங்கே நட்பூஸ்... நட்பூஸ்னு ஓவரா பொங்குற
பொண்ணுங்க எல்லாம்.. படிக்கிற காலத்துல
கூட படிக்கிற பசங்கள பாத்து மூஞ்சை திருப்பிட்டு
போனவிங்க தான்...
# சீன் ஓவர்..!!!

என் பசங்க ஸ்கூல்ல வருஷா வருஷம்
ஃபீஸ் ஜாஸ்தி பண்ணிட்டே போறாங்க..
கேக்கறதுக்கு யாருமே இல்லங்கற
தைரியம்...
மீ ஹியர்... பீ கேர்புல்...
( போராளினா சும்மாவா..?! )
ஸ்கூலுக்கு போனதும்.. ஆபீஸ்ல போயி
ஃபீஸ் கட்டணும்னு சொன்னேன்...
கையில ஒரு டோக்கனை குடுத்து
" போயி வெயிட் பண்ணுங்க சார்னு "
உக்கார வெச்சிட்டாங்க...
பக்கத்துல பாத்தா...
ஒருத்தர் முகத்துல கூட போராளிக்கான
அடையாளமே இல்ல...
எல்லோரும் கையில கட்டு கட்டா பணம்
வெச்சிட்டு உக்காந்து இருந்தாங்க..
கடைசில நானும் போயி அமைதியா
பணத்தை கட்டிட்டு வந்துட்டேன்..
என்னடா... " போராளி.. போராளி "னு சொன்னே...
இப்படி டம்மி பீஸா இருக்கியேனு கேப்பீங்களே..
தெரியும்...!!
இந்தா... போட்டுடோம்ல ஸ்டேடஸு...
# ஒரு ஃபேஸ்புக் போராளிகிட்ட இதுக்கு மேல
என்ன எதிர் பார்க்கறீங்க..?!!
ஹி., ஹி., ஹி..!!!

Friday, July 24, 2015




அறிவு ஜீவிங்க..
வாட்ஸ் அப்ல இருக்குற எல்லா க்ருப்லயும்
இது மாதிரி ரெண்டு பேராச்சும் இருப்பாய்ங்க..
இவிங்க பண்ற அக்கப்போரு இருக்கே...
முடியலடா சாமி...
இது IAS கேள்வினு... ஒன்னு அனுப்புவாய்ங்க..
அடுத்து இது இன்போசிஸ்ல இன்டர்வியூல
கேட்ட கேள்வி.. பதில் சொல்லியே ஆகணும்னு
அடம் பிடிப்பாய்ங்க...
இல்ல தெரியாமத்தான் கேக்கறேன்..
நான் என்ன இன்போசிஸ்ல வேலை வேணும்னு
க்யூல நின்னேனா...
இல்ல கலெக்டர் ஆகியே தீருவேன்னு
ஒத்தை கால்லதான் நின்னேனா..
எக்ஸாம்க்கு போற மாதிரி கனவு வந்தாலே...
நானெல்லாம் எந்திரிச்சி நெத்தில விபூதி
வெச்சிட்டு படுப்பேன்..
எனக்கு ஏன் இதையெல்லாம் அனுப்பறீங்க..?!
" பதில் தெரியல... அதான் இப்படி பொலம்பறானோ"-னு...
தப்பா நெனக்காதீங்க..
சத்தியமா சொல்றேன்...
எனக்கு அதெல்லாம் என்ன கேள்வினே தெரியல...
டாட்..!!

Tuesday, July 21, 2015

எங்க அண்ணன் பையன் கிஷோர்
காலேஜ் செகண்ட் இயர் படிக்கிறான்...
போன வாரம் அவன் கூட படிக்கறவங்க
வீட்டுக்கு வர போறாங்கனு சொல்லிட்டு 
இருந்தான்.....
" டேய் கிஷோரு.. ஒரு முக்கியமான விஷயம்
சொல்றேன்.. நல்லா நோட் பண்ணிக்க.... "
" என்ன சித்தப்பு..? "
" உன் ப்ரெண்ட்ஸ் யாராவது என்னைய
யார்னு கேட்டா.. சித்தப்பானு சொல்லக்கூடாது...."
" பின்ன..? "
" பிரதர்னு சொல்லு..!! "
" ஏன் சித்தப்பு இந்த வெளம்பரம்...?!! "
" நான் சொல்றதை மட்டும் கேளு...
குறுக்க கேள்வி கேக்காதே...!! "
" சரி சொல்லித் தொலைக்கிறேன்..!! "
( ரொம்பத்தான் சலிச்சிக்கறானே..!!! )
" டேய்.. அப்புறம்... Younger Brother-ஆ.. இல்ல
Elder Brother-னு கேட்டா என்ன சொல்லுவே..?!! "
( இப்ப அவன் கண்ணுல ஒரு கொலவெறி
தெரிஞ்சது... )
" ஆங்... நீங்க இன்னும் பொறக்கவே இல்லனு
சொல்லிடறேன்.. போதுமா..?!! "
# அடப்பாவி.. ரொம்ப கோவக்காரனா இருப்பான்
போலயே..!!

ரம்ஜான்னாலே " பிரியாணியை " மட்டுமே
நினைக்கும் இந்த சமூகத்தை நான்
வன்மையாக கண்டிக்கிறேன்...
.
.
.
.
.
.
.
.
.
அவங்க சைடு டிஷ்ஷாக
சிக்கன் ப்ரை.,
மட்டன் சுக்கா..
நெஞ்சுக்கறி தால்சா.,
மட்டன் குருமா.,
எல்லாம் தருவாங்க.. அதையும் கொஞ்சம்
நினைக்கும்படி இந்த சமூவத்தை தாழ்மையுடன்
கேட்டுக் கொள்கிறேனுங்கோ...
" ஹேப்பி ரம்ஜான்..!! "

லவ் பண்ணி கல்யாணம் பண்ணிக்கலாம்னு 
ஒரு பொண்ணு கேட்டுச்சு...
tongue emoticon : )
போன மாசம் நான் என் ப்ரெண்ட் மணியோட
தம்பி கல்யாணத்துக்கு போயி இருந்தேன்...
பையன் டாக்டர்..
மாப்பிள்ளை கூட படிச்ச பசங்க பொண்ணுங்க
எல்லாம் குரூப்பா நின்னு போட்டோ எடுத்துட்டு
இருந்தாங்க..
நானும் மணியும் வேடிக்கை பாத்துட்டு இருந்தோம்...
போட்டோகிராப்பர் " ஸ்மைல் ப்ளீஸ்.. " சொல்லி
பார்த்தாரு...
" கொஞ்சம் சிரிங்கனு " கெஞ்சி பார்த்தாரு..
ம்ம்ஹூம்.... யாருமே சிரிக்கல..
( பாவம் என்ன டென்ஷனோ..?!! )
உடனே மணி... " இப்ப பாரு நான் இவங்கள
சிரிக்க வைக்கிறேன்"-னு சொல்லிட்டு போனான்..
போயி...
" இதுல பாஸ் ஆனவங்க மட்டும் சிரிங்க..
பெயில் ஆனவங்க எல்லாம் முட்டி போடுங்கனு "
சொன்னான்..
உடனே பயங்கர சிரிப்பு சத்தம்...
அந்த சிரிப்பு... அவன் சொன்னதுக்கு இல்ல...
.
.
.
.
.
நான் பழக்க தோசத்துல முட்டி போட்டுட்டேன்..
ஹி., ஹி., ஹி..!!!!

எங்கிட்ட கேட்டிருந்தா... கலர் போட்டோவே
எடுத்து குடுத்திருப்பேனே ஸ்ருதி....!!
tongue emoticon tongue emoticon grin emoticon tongue emoticon smile emoticon

Saturday, July 11, 2015

" என்னங்க பண்ணிட்டு இருக்கீங்க..? "
" குருபெயர்ச்சி பலன்கள்.. படிச்சிட்டு
இருக்கேன்... "
" ஆச்சரியமா இருக்கு... இதெல்லாம் நீங்க
படிக்க மாட்டீங்களே...!?! "
" இது போன குருபெயர்ச்சி பலன்...
இதுல சொன்ன மாதிரி எதுனா நடந்து
இருக்கான்னு செக் பண்ணிட்டு இருக்கேன்... "
# நாங்கல்லாம் யாரு..!!!
கிரிக்கெட்டை கூட நிம்மதியா பார்க்க
விடாமா இப்டி திருட்டுத்தனமா பார்க்க
வெச்சிட்டீங்களேடா....
ஓவருக்கு ஓவர் ஜிம் வெளம்பரம்..
# இதெல்லாம் ரொம்ப ஓவரு...!!!
நிறைய போட்டோகிராபி குரூப்ஸ்ல என்னைய
சேர்த்தி விட்டு இருக்காங்க..
நினைச்சா ரொம்ப பெருமையா இருக்கு...
நன்றி.... நன்றி...!
.
.
.
.
.
.
.
.
எப்படியாச்சும் இந்த தீபாவளில
ஒரு கேமரா வாங்கிடணும்..
# இன்னுமா இந்த ஊரு நம்மள நம்புது
மொமெண்ட்...
என் ப்ரெண்ட் ஒரு பொண்ணு
" I Hate My Life "-னு ஸ்டேடஸ்
போட்டு வெச்சி இருந்தாங்க..
அட என்னடா இப்படி போட்டு இருக்கு..?!
ஒருவேளை நம்ம ஸ்டேடஸ் எதுனா
படிச்ச பாதிப்பா இருக்குமோன்னு
எனக்கு வேற பயம்..
சரி கொஞ்சம் கவுன்சிலிங் குடுக்கலாம்னு
போனை போட்டேன்..
( இதை நாங்க ஒரு பொதுசேவையாவே
பண்ணிட்டு வர்றோம்ல.. )
போன் பண்ணி பேசினா...
நான் பேச.. அவங்க பொலம்ப..
அவங்க பொலம்ப... நான் கேக்க..
நான் கேக்க.. அவங்க பொலம்ப...
இப்படியே ஒரு அரைமணி நேரம்....
சே.. என்ன வாழ்க்கைடா இது..
# I Hate My Life..!!!

அதெப்படி.. " பிளிப்கார்ட் "-க்கும் "ஸ்நாப் டீல் " -க்கும் 
ஒரே ஆள் உரிமையாளரா இருக்க முடியும்..?!!

உங்க ஊர்ல Dealer-னா... " உரிமையாளர் " னா அர்த்தம்..?!!
# வெளங்கிறும்..

Tuesday, July 7, 2015


எங்க வீட்ல எங்க திரும்பினாலும்
கப்பு, ஷீல்டுனு நிறைய இருக்கும்..
கல்யாணம் ஆன புதுசுல என் Wife
அதை எல்லாம் பாத்து ஆச்சரியப்பட்டாங்க...
" ஏங்க... இதெல்லாம் யார் வாங்கினது..?! "
" நான் வாங்கினது தான்.. "
" நிஜமாவா..?! "
( கொஞ்சம் டவுட்டா கேட்டாங்க... )
" நீ இப்படி கேப்பேனு தெரியும்..
இந்தா... இந்த ஃபைலை கொஞ்சம் பாரு... "
" என்னங்க இருக்கு இதுல... சர்டிபிகேட்டா..? "
" இல்ல... இந்த கப் எல்லாம் வாங்கின பில்லு..! "
# கிர்ர்ர்ர...

Monday, July 6, 2015

ஒரு பொண்ணு என்கிட்ட ஆர்கியூ
பண்ணிச்சு...
" நீங்க சரியான ஆணாதிக்கவாதி.. "
" எப்டி சொல்றீங்க..?! "
" உங்க பதிவுகளை படிச்சாலே தெரியுதே... "
" சரி கொஞ்சம் வெயிட் பண்ணுங்க..
சமையல் வேலை முடிச்சிட்டு வரேன்..
அப்புறம் சண்டை போடலாம்.. "
" ஙே...!!! "
" ஏன்டா மங்கு... இது என்ன அநியாயமா
இருக்கு..?! "
" எதை மச்சி சொல்ற..? "
" அந்த பொண்ணு ஃபேஸ்புக் வந்து
5 மாசம் தான் ஆச்சு.. அதுக்குள்ள
5000 ப்ரெண்ட்ஸ் சேர்ந்துட்டாங்க.. "
" அதுக்கென்ன..?! "
" இல்ல நான் ஃபேஸ்புக்ல 4 வருஷமா
குப்பை கொட்றேன்.. 1800 பேர் தான் இருக்காங்க.... "
" இருந்தாலும் உனக்கு இவ்ளோ தன்னடக்கம்
ஆவாது மச்சி.. "
" தன்னடக்கமா..? என்னடா சொல்ற.? "
" ஹி, ஹி, ஹி.. உன்னோட பதிவெல்லாம்
குப்பைனு நீயே ஒத்துகிட்டியே... "
# அடப்பாவி... ஒரு பேச்சுக்கு சொன்னா..
அவ்வ்வ்வ்....

டெய்லி நைட் 9 மணி ஆனா போதும்
இப்படித்தான் ஒரு பத்து நிமிஷம்
ஒலக நிலவரம் பத்தி பேசுவோம்..
ஆனா எனக்கு ஓபாமாகிட்ட பிடிக்காத
ஒரே விஷயம்...
எப்பவும் அவரு மிஸ்டு கால்தான் குடுப்பாரு..
நான் தான் திருப்பி கூப்பிடணும்..!

இப்பதான் "Lenskart "-ல ஒரு ஆர்டர்
போட்டேன்..
அதுல பவர் டீடெய்ல்ஸ் தப்பா
என்டர் பண்ணிட்டேன்..
சரினு கஸ்டமர் கேர்க்கு போனை
போட்டா... அது இங்கிலீஸா..?
ஹிந்தியானு கேட்டுச்சு..
டக்னு இங்கிலீஸ்சை செலக்ட் பண்ணிட்டேன்...
( ஹி., ஹி., நமக்கு ஹிந்தி தான் கஷ்டம்..
இங்கிலீஷ் தண்ணிபட்ட பாடுல்ல.. )
அதுல பாருங்க.. அந்த கஸ்டமர் கேர் பொண்ணு
நான் எது பேசினாலும்..
" பாடேன்... பாடேன்... " சொல்லிட்டே
இருந்துச்சு..
சின்ன வயசுல இருந்தே இங்கிலீஷ் பாட்டெல்லாம்
நான் நல்லா பாடுவேன் தான்...
( " டிவிங்கிள் டிவிங்கிள் லிட்டில் ஸ்டார்..,"
" பா பா... ப்ளாக் ஷீப்...!! " )
ஆனா இந்த விஷயம் இந்த புள்ளைக்கு
எப்டி தெரியும்...?!?!
ஒரே கன்பியூஸனா இருக்கு.!!

Saturday, July 4, 2015

நாங்கல்லாம் ஸ்கூலை கோயிலாகவும்.,
சொல்லிக்குடுக்குற மிஸ்சை தெய்வமா
மதிச்சவங்க....
ஸ்கூலுக்கு போறப்ப தேங்கா, பழம்., கற்பூரம் 
ஊதுபத்தி எல்லாம் எடுத்துட்டு போவோம்னா
பாத்துக்கோங்களேன்..
# அம்புட்டு குருபக்தி..!!

Friday, July 3, 2015

குத்து விளக்கு - பூதம் - PS



ஹெல்மெட் இல்லாம பைக்ல போனப்ப
போலீஸ்கார் மடக்கினாரு...
உடனே நான் அவர்கிட்ட...
" சார்.... நான் தான் பிரபல ப்ளாக்கர்
கோகுலத்தில் சூரியன் வெங்கட்"-னு
சொன்னேன்...
அதை கேட்டதும் அந்த ஆபீசர் முகத்துல
ஒரு பிரகாசம் தெரிஞ்சது பாருங்க.... .
அப்புறம் அவரு என்னை பாத்து சொன்னாரு...
" ஓ.. நீங்க தான் கோகுலத்தில் சூரியனா...? "
" யெஸ் சார்.. "
" அப்ப நீங்க ஹெல்மெட் இல்லாம என்ன..
பைக்கே இல்லாம கூட போலாம்னு "
சொல்லி என் பைக்கை பிடுங்கி வெச்சிகிட்டாரு..!!
# ரொம்ப கோவக்காரரா இருக்காரே..!
ப்ளாக் எல்லாம் படிக்க மாட்டாரு போல..!!!

இப்பல்லாம் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சில...
எல்லோருக்கும் நல்லா பாடறவங்க
எனக்கு சுமாரா பாடறதாவும்...
எல்லோருக்கும் சுமாரா பாடறவங்க
எனக்கு நல்லா பாடறதாவும் தோணுது..
# ஒருவேளை நமக்கு ஜட்ஜ் ஆகற
தகுதி வந்திருச்சோ என்னமோ..!!

வந்தனா வித் ஹெல்மெட் - PS


Thursday, July 2, 2015

ப்ரெண்டோட தங்கச்சி ஸ்கூட்டி ஸ்டார்ட்
பண்ணிச்சு....

உடனே நான்..

" ஹேய்.... ஹெல்மெட் போட்டுட்டு போ..
போலீஸ் பிடிப்பாங்க.. "

" அதெல்லாம் ஆம்பிள்ளைங்கள தான் பிடிப்பாங்க.. "

" ஙே... புடிங்க சார்... புடிச்சி இந்த பொண்ணுகிட்ட
லைசென்ஸை பிடுங்குங்க சார்... "

" ஹி., ஹி., ஹி... என்கிட்ட தான் லைசென்சே
இல்லியே... "

# அடப்பாவிகளா... எல்லா ரூல்சும் எங்களுக்கு
மட்டும் தானா..?!!