Wednesday, August 31, 2016

அப்ப நான் காலேஜ் முடிச்சிட்டு சும்மா சுத்திட்டு இருந்தேன்..
( யார்ரா அது... நீ இப்பவும் அதே தானே பண்ணிட்டு இருக்கேனு சொல்றது... பிச்சு.. பிச்சு... )
ஒருநாள் ஆனந்த் எனக்கு போன் பண்ணினான்..
"மச்சி இன்னிக்கு ஈவினிங் எனக்கு பொண்ணு பாக்க போறாங்கடா.."
" வாழ்த்துக்கள் மச்சி.."
"நீயும் கூட வாயேன்.."
(எனக்கு ஆனந்தை நெனச்சா பெருமையா இருந்தது.. ஆனா.. நான் கூட போக... பொண்ணு என்னை பிடிச்சிருக்குனு சொல்லிட்டா...?! )
"இல்ல மச்சி.. அது சரி வராது... நான் வரல.."
"ஏன் மச்சி, நான் உன்னை தான் நம்பி இருக்கேன்.."
"என்னது என்னை நம்பி இருக்கியா.?"
"பொண்ணு பாக்க போகும் போது உன்னை விட சுமாரான ஒருத்தனை பக்கத்துல வெச்சிக்க.. அப்பதான் நீ பெட்டரா தெரிவன்னு எங்க சித்தப்பா சொன்னாரு.. ஹி., ஹி., ஹி.. அதான் மச்சி.."
# அடிங் கொய்யாலே...

Tuesday, August 30, 2016

ஐபோன் கலாய் - மீம்ஸ்


ஆசை ஆசையா ஒரு டீசர்ட் வாங்கினேன்...
என் கெட்ட நேரம் எனக்கு அது டைட்டா இருந்தது..
சரி.. டயட்ல இருந்து.. உடம்பை கொறைச்சிட்டு போடலாம்னு பத்திரமா வெச்சி இருக்கேன்....
5 வருஷமா...
இன்னிக்கு அத என் பீரோல இருந்து எடுத்த என் Wife...
" இந்த டீசர்ட்டை வேற யாருக்காச்சும் குடுத்துடவா...? "
" நோாா..... நான் அத கண்டிப்பா ஒருநாள் போடுவேன்... "
" அப்ப அதுக்கு ஒரே வழி தான் இருக்கு.. "
" என்ன..?! "
" ம்ம்ம்... அத தூக்கி குப்பையில போடுங்க.. "
( சே.. என்ன ஒரு வில்லத்தனம்..! இந்த கருமம் புடிச்ச டீசர்ட் வேற வளர மாட்டேங்குது...)
# டயட் 9-வது நாள்..

மலர் டீச்சர் ஸ்ருதி - மீம்ஸ்

மங்கு (Shajahan S) காலைல கேட்டான்...
" மச்சி.. ப்ரெண்ட்ஸ் லிஸ்ட்ல ஆக்டீவா இல்லாத மெம்பர்ஸ எப்டி கண்டுபிடிக்கறது..?! "
" நீ புடுங்கறது பூராமே தேவை இல்லாத ஆணிதான்.. போய் புடுங்கு போ.. "
# ஐயோ.. என்னய அன்ப்ரெண்ட் பண்ணிட்டானே...!!!

Sunday, August 28, 2016

டெய்லி காலைல 6 மணிக்கு எந்திரிச்சு 5 கிலோ மீட்டர் போயிட்டு வந்தா வெயிட் கொறையும்னு சிவா சொன்னான்..
நானும் நாலு நாளா போயிட்டு தான் இருக்கேன்..
பெட்ரோல் தான் ஒரு லிட்டர் கொறைஞ்சி இருக்கு...
( ஒருவேளை வண்டிய மாத்தணுமோ..?!!! )
# டயட் 7வது நாள்

குழந்தைங்கள எப்டி வளர்க்கணும்னு டிரைனிங் குடுக்கற மாதிரி படம் எடுக்கறாய்ங்களாம்....
அடேய் வெண்ணைங்களா... உங்க படத்தை பாத்தா... புள்ள பெத்துக்கவே பயமா இருக்குடா..
# பசங்க 2 - on Jaya Tv

Jio - மீம்ஸ்


மங்கு (Shajahan S) காலேஜில் படித்த போது...
கம்பியூட்டர் லேப்பில் மங்குவும்.,HOD-யும்..
" டேய் மங்கு.. என்னடா அப்டி உத்து உத்து பாத்துட்டு இருக்கே..?! "
" எனக்கு சன் டி.வி வரலை சார்.. "
" என்ன.. சன் டிவியா..? "
" நீங்க தானே சார் ப்ரோகிராம் எல்லாம் கரெக்டா வருதான்னு பாருங்கன்னு சொன்னீங்க..!!! "
" ஐயோ..!! அது சன் டிவி ப்ரோகிராம் இல்லடா.. " C " ப்ரோகிராம். "
" சரி., அந்த ப்ரோகிராம் கூட என் டிவி பொட்டில வரலை சார்.. "
" என்னாது இது உனக்கு டிவியா..? இதுக்கு பேரு மானிட்டர் டா.. "
" யாரை சார் ஏமாத்த பாக்கறீங்க..? மானிட்டர்ல்லாம் டாஸ்மாக்ல தான் கெடைக்கும்.. குவார்ட்டர் 88 ரூபா.. "
" கஷ்டம்டா சாமி.. "
" சார்., சார்.. அப்புறம் இந்த டைப் ரைட்டிங் மிஷின்ல பாருங்களேன்.. "
" ஏன்டா படுத்தற.. அதுக்கு பேரு கீ போர்ட்ரா.. "
" கீ போர்ட்டா... அமுக்கினா மியூசிக்கே வரல..?! "
" டேய்.. நீ ஓவரா போறே.. "
" சரி கோவப்படாதீங்க சார்... இதுல பாருங்க A, B, C எல்லாம் வரிசையாவே இல்ல.. தாறுமாறா இருக்கு.. "
" நீ இப்படியே பேசிட்டு இருந்தே.. நான் தாறுமாறு ஆயிடுவேன்.. "
HOD வெறியாகிறார்....
" டேய்.. யாருடா இந்த வெண்ணைக்கு காலேஜ்ல அட்மிஷன் குடுத்தது..??!! "
டிஸ்கி : கதையில் வரும் சம்பவங்கள் அனைத்தும் கற்பனையே.. இந்த மங்கு பன்னாடை மழைக்கு கூட பள்ளிக்கூடம் பக்கம் ஒதுங்கினது கெடையாது...

இந்நேரம் சிந்துவோட வாழ்க்கைய சினிமாவா எடுக்கறோம்னு ஒரு கோஷ்டி கெளம்பி இருப்பானுங்க... அட அது கூட பரவாயில்லை....
அதுல சிந்துவுக்கும், கோச்சுக்கும் ரெண்டு டூயட் வேற வெச்சி விடுவானுங்களே....
அத நெனச்சாத்தான்...
என் டயட் மாஸ்டர் சிவா போன் பண்ணியிருந்தான்...
" என்ன மச்சி வெயிட் கொறைஞ்சி இருக்கா..?!! "
" இல்லயே... "
" டயட் எல்லாம் கரெக்டா ஃபாலோ பண்றியா இல்லியா..?! "
" எல்லாம் நீ சொன்ன மாதிரி அப்டியே(?!).. "
" ம்ம்.. குட்.. உனக்கு டயட் மட்டும் பத்தாது நீ நாளைல இருந்து வாக்கிங் ஆரம்பி. "
" ரோடுலயா..?! "
" மொட்டை மாடி இருக்குல்ல.. "
" ம்ம்ம்... அது ஓ.கே..! "
" ரோடுனா ஸ்ரெய்ட்... மொட்டை மாடின்னா.. "
" என்ன மச்சி யோசிக்கிறே..?!! "
" ம்ம்.. மொட்டை மாடின்னா ரவுண்ட் போட கூடாது மயக்கம் வந்துடும்.... "
" பின்ன..?! "
" எட்டு போடணும்.. 25 போடு.. "
"ஓ.கே டன்..!! அப்புறம் ஒரு டவுட்..."
"நான் சொன்னதை மட்டும் பண்ணு... நாளைக்கு பேசலாம்"
போனை வெச்சிட்டான்..
இந்த எட்டு உக்காந்துட்டு போடணுமா.. படுத்துட்டு போடணுமான்னு சொல்லாமலே வெச்சிட்டானே...
# டயட் 4வது நாள்..!!காலைல 8 மணிக்கே எங்க பக்கத்து வீட்டு அண்ணி வந்துட்டாங்க...
" என்ன அண்ணி காலைலயே... "
" சுஹந்த் (தம்பி பையன்) என்ன பண்றான்..?! "
" தூங்கிட்டு இருக்கான்.. ஏன்..? "
" இன்னிக்கு கோகுலாஷ்டமில்ல.. குழந்தைய வெச்சி கிருஷ்ணர் பாதம் வரையணும்.. "
" அவன் தூங்கறானே... நான் வேணா வரவா..?!! "
" நீயா...?!! நீ அடுத்த மாசம் வேணா வா.. "
" அடுத்த மாசமா..?!! "
" ஆமா.. அடுத்த மாசம் தானே விநாயகர் சதுர்த்தி வருது... "
# அவ்வ்வ்வ்..!!!

Wednesday, August 24, 2016


3 மாசம் முன்னால என் Wife அம்மா வீட்டுக்கு 10 நாள் லீவ்க்கு போனாங்க..
போன மொத நாளே அங்க இருந்து போன்..
" என்ன பண்ணுவீங்களோ தெரியாது.. இந்த 10 நாள்ல 5 கிலோ கொறைச்சி காட்றீங்க"னு சொல்லிட்டாங்க..
என் Wife பேச்சை என்னிக்கு நான் தட்டியிருக்கேன்.. சரினு சொல்லிட்டேன்..
மொத நாள் வெயிட் செக் பண்ணினேன்.. 73 கிலோ காட்டிச்சு..
அதை போட்டோ எடுத்து என் Wife-க்கு வாட்ஸ் அப்-ல அனுப்பி வெச்சிட்டேன்..
அப்புறம் 10-வது நாள்.. என் Wife வீட்டுக்கு வந்ததும்..
மொத வேலையா வெயிட் செக் பண்ணனும் கூட்டிட்டு போயி.. இல்லல்ல.. இழுத்துட்டு போயி மிஷின்ல நிக்க வெச்சாங்க..
அப்ப 68 காட்டிச்சு.. என் Wife செம ஹேப்பி...
என்ன பண்ணி 5 கிலோ கொறைச்சீங்கனு கேட்டாங்க.. ரகசியம்னு சொல்லிட்டேன்..
ஏன்னா இந்த 10 நாள்ல நான் தான் எதுவுமே பண்ணலயே..
பின்ன எப்டி 5 கிலோ..?! அதானே உங்க டவுட்டு...
ஹி., ஹி., ஹி.. மொத நாள் வெயிட் போடும்போது 5 கிலோ கல்லை கையில வெச்சிட்டு மிஷின்ல ஏறி நின்னேன்ல..!
டிஸ்கி : பின்ன எதுக்கு எக்ஸர்சைஸ் பண்ற மாதிரி போட்டோ போட்டேனு கேப்பீங்களே.. தெரியும்..!!
இந்த மாதிரி எக்ஸர்சைஸ் பண்ணலாமானு மனசுல யோசிச்சிட்டு இருந்தேன்...,ஹி., ஹி., ஹி..!!

காய்கறி முதல் மெடல் வரை பெண்களே - PS


பணக்கார வூட்ல பொறந்தா...
பணத்தோட அருமை தெரியாது...
பொண்ணா பொறந்தா...
லைக்கோட அருமை தெரியாது...
- பாபா வெங்கீஷ்
காலைல ஒரு பொண்ணு மெசேஜ் பண்ணிச்சு..
" அண்ணா.. எங்க மங்கு மாமாவ (Shajahan S) 3 நாளா காணோம்..?! "
( என்னாது... மங்கு மாமாவா..? இது தப்பாச்சே..!! )
" ஊருக்கு போயி இருப்பாம்மா.. "
" போன் பண்ணினாலும் எடுக்கலயே..? "
( ஓ.. போன்ல பேசற அளவு ஆகிப்போச்சா..!! சொல்லவேயில்ல... )
" அப்டியா. இதே தான் ஆனந்தியும் சொல்லிச்சு.. "
" ஆனந்தியா..? யார்ணா அது..?! "
" ஆனந்தின்னா சொன்னேன்..?!! ஹி, ஹி, ஹி. அது ஆனந்தி இல்லம்மா... ஆனந்த்.. "
" நீங்க என்கிட்ட எதையோ மறைக்கறீங்க.. "
" சே., சே.. மங்கு ரொம்ப நல்லவன்மா.. அவனை சந்தேகப்படாதே..."
" உங்க ப்ரெண்ட்டாச்சே... விட்டா கொடுப்பீங்க..?!! "
" ஹி, ஹி, ஹி.. சரி.,சரி.. இந்த ஆனந்தி.. சே.. ஆனந்த் மேட்டரை பத்தி மங்குகிட்ட எதுவும் கேக்காதே... "
" ம்ம்க்கும்.. இனிமே நான் ஏன் அவங்கிட்ட பேச போறேன்.. "
# நாதாரித்தனம் பண்ணினாலும்.. நாசூக்கா பண்ணனும்...!!!

Monday, August 22, 2016
தோசைன்னா.. ஒண்ணு தான் சாப்பிடணும்னு சிவா சொன்னான்...
# டயட் 2வது நாள்..!!
கண்காட்சிக்கு கெளம்பிட்டு இருந்தோம்.. அப்ப என் பசங்ககிட்ட சொன்னேன்...
"டேய்... நல்லா கேட்டுக்குங்கடா... அங்க போயி அது வேணும், இது வேணும்ன்னு ரகளை பண்ணக் கூடாது... ஆளுக்கு 20 ரூபா தர்றேன் இஷ்ஷ்ஷ்ட்டப்பட்டத வாங்கிக்குங்க.."
என் பெரிய பையன் ‍ஷாக் ஆகிட்டான்.. சின்ன பையன் சொன்னான்..
" நீங்களே வெச்சிக்கோங்க... அவ்ளோ ரூபா வெச்சிருந்தா.. எங்கள யாராவது கிட்நாப் பண்ணிட்டு போயிடுவாங்க... "
# தட் அணிலே காறித் துப்பின மொமெண்ட்..!!
என் ப்ரெண்ட் சிவா டயட்ல இருந்து 10 கிலோ கொறைச்சி இருக்கான்.. காலைல அவனுக்கு போன் பண்ணி...
" மச்சி எனக்கும் உன்னை மாதிரி உடம்பு கொறைக்கணும்... டயட் பளான் சொல்லேன்.. "
" இப்ப ப்ரேக் ஃபாஸ்ட்க்கு ரெண்டு இட்லிக்கு மேல சாப்பிடாதே.. "
" ஓ.கே மச்சி... மதியம் லஞ்ச்க்கு கால் பண்றேன்... "
டைனிங் டேபிள்...
என் Wife என் ப்ளேட்ல ரெண்டாவது இட்லி வெச்சதும்...
" ஸ்டாப்... ஸ்டாப்..!! "
" என்ன... ரெண்டு இட்லி போதுமா..?! "
" ஆமா டயட்டு... சிவா இட்லி ரெண்டுக்கு மேல சாப்பிடாதேனு சொல்லி இருக்கான்.. "
" ஓ...!! "
" நீ சீக்கிரம் போயி நாலு தோசை சுட்டு எடுத்துட்டு வா.. "
" நாலா..?!! "
" ஆமா அவன் இட்லி பத்தி மட்டும் தான் சொன்னான்... தோசை பத்தி எதுவும் சொல்லல... ஹி, ஹி, ஹி.."
# நங்ங்ங்... ஒண்ணுமில்ல.. டம்ளர் கீழே விழுந்துடுச்சு...!!
" புக் எடுத்து வெச்சி படிக்கவே மாட்டேங்குறான்.. சும்மா சுத்திட்டே இருக்கான்" இதான் தினமும் என் Wife பாடற பல்லவி..
இது இன்னிக்கு நேத்தில்ல.. 5 வருஷமா நடக்குது..
இதே தான் சின்ன வயசுல எங்க அம்மாவும் என்னைய பாத்து பாடிட்டே இருப்பாங்க..
அத பாத்துட்டு ஒரு நாள் எங்க தாத்தா எனக்கு ஒரு அட்வைஸ் பண்ணினாரு..
அதுக்கு அப்புறம் எங்கம்மா திட்ற மாதிரி நான் நடந்துக்கலயே..
இப்ப அத என் பையனுக்கு சொல்ல வேண்டிய நேரம் வந்துடுச்சு..
போன வாரம் உக்கார வெச்சு சொல்லிட்டேன்..
அப்புறம் பாக்கணுமே பையன்கிட்ட மாற்றத்தை.. எப்பவும் புக்கும் கையுமாவே இருந்தான்..
இத பாத்துட்டு என் Wife-க்கு அதிர்ச்சி + ஆச்சரியம்..
"அப்டி என்ன அவனுக்கு அட்வைஸ் பண்ணுனீங்க"-னு திரும்ப திரும்ப கேட்டுட்டே இருந்தாங்க..
ஆனா நான் சொல்லலியே...
"அது பிரம்ம ரகசியம்.. வெளியே சொன்னா பலிக்காது"னு சொல்லிட்டேன்.
நேத்து ஈவினிங்.. சினிமாவுக்கு கெளம்பிட்டு இருந்தோம்..
அப்ப என் பையன் தியேட்டர் வர ரெடியா இருந்தான்.. கையில புக்... அத பாத்துட்டு என் Wife..
" என்னடா கையில..? "
" இன்டர்வெல்ல அரைமணி நேரம் கேப் கெடைக்கும்லம்மா.. அப்ப படிக்க.. "
இத கேட்டதும் என் Wife-க்கு மயக்கம் எதுவும் வந்துடுமோனு நான் அவங்க மூஞ்சையே பாக்க..
வந்தது மயக்கம் இல்ல.. டவுட்டு..!!
அவனை அப்டியே தனியா தள்ளிட்டு போயி உருட்டி மிரட்டி கேட்டதுல பய பிரம்ம ரகசியத்தை உளறிட்டான்..
" அப்பாதான்மா சொன்னாரு.. நீ படிக்கலன்னா கூட பரவாயில்ல.. படிக்கிற மாதிரி நடினு.."
# அடங் கொய்யாலே.. ஆக்ட் பண்றான்னா.. இப்டி ஓவர் ஆக்ட் பண்ணி சிக்க வெச்சிட்டானே..!!!

Saturday, August 20, 2016

ஒலிம்பிக் மேட்ச் பாத்துட்டு இருந்தோம்...
அப்ப என் Wife...
" இந்தியாவுக்கு ரெண்டு மெடல் வாங்கி குடுத்ததும் பொண்ணுங்க தான் தெரியும்ல.. "
" அவங்களுக்கு டிரைனிங் குடுத்தது ஆம்பளைங்க தான் தெரியும்ல.. "
" டின்னர் சாப்பிடற ஐடியா இருக்கா.? இல்லியா..?! "
" ஹி, ஹி, ஹி... சக்தி இல்லையேல் சிவமில்லை.., சோறு இல்லையேல் சக்தியில்லை..!!! "

புருஷனா இருந்தாலும் சண்டைனு வந்துட்டா - Screen Shot
" JIO வேற... ரிலையன்ஸ் 4G வேற,,, "
" அப்படியா..? "
" ஆமா.. ஜியோ அண்ணன்து ( முகேஷ் ) ,
ரிலையன்ஸ் 4G தம்பிது ( அனில் ) "
" சரி ரெண்டுக்கும் என்ன வித்யாசம்..? "
" சிம்பிளா சொல்லணும்னா...
ஜியோ 4G.., ரிலையன்ஸ் ஃபோர்ஜரி..! "
# கதம் கதம்..!!
புடவை கடைக்கு போனா.. அமைதியா இருக்கக் கூடாது...
உங்க Wife ஒரு புடவையை காட்டி எப்டி இருக்குனு கேட்டா..
அந்த புடவை உங்களுக்கு புடிக்கலைன்னா.. நல்லா இல்லனு தைரியமா சொல்லணும்..
ஏன்னா அது உங்க கருத்து...
அப்புறம்... உங்க Wife... ஏங்க நல்லா பாத்து சொல்லுங்கனு சொன்னா..
ஹி., ஹி., ஹி.. இத தனியா பாத்தா நல்லா இல்ல.. ஆனா நீ கட்டினா சூப்பரா இருக்கும்னு தோனுதுனு கூச்சமே படாம பல்டி அடிக்கணும்..
ஏன்னா.. உங்கள கருத்து கேக்க கூட்டிட்டு போல... பில் கட்ட தான் கூட்டிட்டு போயிருக்காங்க... மைண்ட் இட்..!!
# கருத்து முக்கியமா..?! சோறு முக்கியமா..?!!
இன்னிக்கு ஒரு பொண்ணு என் புரோபைல் போட்டோ பாத்துட்டு..
" நானும் உங்க கலர் வரணும்னா என்ன பண்ணனும்.?-னு " கேட்டுச்சு..
" நல்லதா ஒரு போட்டோ எடிட்டிங் App இன்ஸ்டால் பண்ணி யூஸ் பண்ணனும்"-னு சொல்லிட்டேன்..
# ப்ளே ஸ்டோர் இருக்க பயமேன்..!!
இன்னிக்கு என் ப்ரெண்ட் தினேஷை கோவில்ல பாத்தேன்..
அவன் கையில 7 மாச குட்டிப் பையன்.. ரொம்ப க்யூட்டா இருந்தான்..
( ஆஹா.. பையன் பேரு என்ன..? மறந்து போச்சே..!! )
" சாரி மச்சி.. உன் பையன் பேரு மறந்து போச்சு.. "
" மறந்து போச்சா..?!! "
" ஆமா மச்சி.. நான் பொதுவா பேரை மறக்க மாட்டேன்.. பையன் பேருங்கறதால மறந்து போச்சு போலருக்கு..! ஹி., ஹி., ஹி..!!! "
" அதெல்லாம் தெரியாது.. நீயே யோசிச்சு சொல்லு..!! "
" வருண், தருண், விகாஸ், லோகேஷ், விஷால்... "
" போதும்.. போதும் நிறுத்து... "
" கொஞ்சம் வெயிட் பண்ணு மச்சி.. நான் எப்படியும் கண்டுபிடிச்சிடுவேன்..!! "
" ம்க்கும்... கண்டுபிடிச்சு கிழிச்சே.. இவனுக்கு இன்னும் பேரே வெக்கலைடா வெண்ணை..!! "
" என்னாது... பேரே வெக்கலியா...?!!! "
# அப்ப நானாதான் தண்டவாளத்துல தலைய குடுத்தேனா..?!!

" இன்னிக்கு சேலத்துக்கு தமன்னா வந்தா... நீ என்னை பாக்க வருவியா..? இல்ல தமன்னாவ பாக்க போவியா..?! "
" உன்னை தான் பாக்க வருவேன் மச்சி... "
" நிஜமாவா..?!! இந்த மூஞ்சை பாத்தா நம்ப முடியலியே... "
" ஹி., ஹி., ஹி.. என் வண்டி சர்வீஸ் போயி இருக்கு.. உன் வண்டி வாங்கிட்டு போலாமேனு... "
என் ப்ரெண்ட் ரமேஷ்கிட்ட பேசிட்டு இருக்கும் போது சொன்னேன்....
"காட் ஈஸ் கிரேட் மச்சி..."
"என்ன திடீர்னு பக்தி...?!"
"மச்சி... நல்லா யோசிச்சி பாரேன்... நமக்கெல்லாம் வாய் மட்டும் இல்லன்னா நாய் கூட மதிக்காதுல்ல.."
"ஹி.,ஹி., ஹி.., இப்ப மட்டும் என்ன வாழுதாம்.. நாய் மட்டும் தான் மச்சி நம்மள மதிக்குது...!!"
# க்ர்ர்ர்ர்.... லொள்.. லொள்..!!

ரிலையன்ஸ் கோல்மால்
------------------------------------------

நான் ரிலையன்ஸ் 3G-ல 40 GB ப்ளான்ல கனெக்ஷன் எடுத்தேன்.. மாசம் பில் 1150 ரூபா வரும்.
கனெக்ஷனும் ஒன்னும் மோசமில்ல.. 4 மாசமா நல்லா தான் போயிட்டு இருந்தது..
திடீர்னு 4G-க்கு மாறப்போறோம்.. எக்கசக்க ஸ்பீடு வரும்.. நீங்க அதே ப்ளான்ல கண்டினியூ பண்ணலாம்னு போன் பண்ணினாங்க..
3200 ரூபா டிவைச 900 ரூபாய்க்கு உங்களுக்கு குடுக்கறோம்.. நீங்க எங்களுக்கு முக்கியமான கஸ்டமர்னு சொன்னாய்ங்க.. நம்பி வாங்கிட்டேன்..
போன வாரம் 4G சர்வீஸ் ஓபன் ஆகிடுச்சு.. என்ஜாய்னு மெசேஜ் வந்தது..
நானும் புது டிவைச ஆக்டிவேட் பண்ணி யூஸ் பண்ணினேன்.. ஸ்பீடு ஒரே மாதிரி இல்ல..
7 Mbps-ம் வந்தது 1 Mbps-ம் வந்தது..
சரி போக போக சரியா போயிடும்னு யூஸ் பண்ணிட்டு இருந்தேன்..
இன்னிக்கு பில் வந்து இருக்கு.. 1800 ரூபா..
அதாவது நான் 3G-ல 22 GB தான் யூஸ் பண்ணி இருக்கேன்.. அதுலயே 18 GB மிச்சம் இருக்கு..
ஆனா அதுக்கு 1150 ரூபா எப்பவும் போல..
4G-ல 3.5 GB (4 நாள்ல) யூஸ் பண்ணியிருக்கேன்.. அதுக்கு 650 ரூபா (With Tax)
என்னடா இது கோல்மாலா இருக்குனு கஸ்டமர்கேர்க்கு போனை போட்டா..
உங்க ப்ளானை மாத்திட்டோம்னு சொல்றாய்ங்க.. வந்துச்சே கோபம்..
1. அதே ப்ளான்ல கண்டினியூ ஆகலாம்னு ஏன் பொய் சொல்லி டிவைஸ் வித்தீங்க..?
2. ப்ளான் சேஞ்ச் பண்ண போறோம்னு ஏன் எங்கிட்ட தகவல் குடுக்கல..
3. கஸ்டமர் என்ன உங்க அடிமையா.. நீங்களா இஷ்டத்துக்கு அந்த ப்ளான்., இந்த ப்ளான்னு மாத்தறதுக்கு..?
4. இந்த 650 ரூபாய்க்கு நீங்க எனக்கு பதில் சொல்லியே ஆகணும்.. இல்லன்னா ஃபேஸ்புக்ல இத போஸ்ட்டா போடுவேன்.. எனக்கு 5000 ஃபாலோயர்ஸ் இருக்காங்கனு மிரட்டி பாத்தேன்..
எங்க மேல் அதிகாரிக்கு கனெக்ட் பண்றோம்னு சொன்னாங்க.. ஆனா ஒரு ரெஸ்பான்ஸூம் இல்ல..
இவங்கள என்னால என்ன பண்ண முடியும்னு தெரியல.. ஆனா எதாச்சும் பண்ணனும்..
அட்லீஸ்ட் இத பாத்து நாலு பேராவது ரிலையன்ஸ்ல மாட்டாம தப்பிச்சா போதும்..

Thursday, August 11, 2016

நானும் என் ப்ரெண்ட் ஜெகனும் போட்டோகிராபி பத்தி போன்ல டிஸ்கஸ் பண்ணிட்டு இருந்தோம்..
அப்ப என் Wife..
"இப்டி தினமும் வெட்டியா பேசறதுக்கு பதிலா உருப்படியா எதாவது பண்ணலாம்ல.."
"உருப்படியாவா.. அப்டின்னா..?!"
"பேசாம உங்க ரெண்டு பேருக்கும் இருக்குற திறமைக்கு போட்டோக்ராபிய சைடு பிஸினஸா பண்ணலாம்ல.."
"நாங்கல்லாம் இருக்கற திறமைக்கு எல்லாம் சைடு பிஸ்னஸ் பண்ணனும்னா.. ஆள் கடத்தல் வரைக்கும் பண்ணனும்.. பேசாம போவியா..."
அப்புறம் ஒரு டம்ளர் பறந்து வந்துச்சி.. எப்படி கேட்ச் புடிச்சேன் தெரியுமா.?!
# தெறமை.. தெறமை..!!!
மதியம் ரிலையன்ஸ் ஆபீஸ்க்கு போன் பண்ணினேன்.. 
அங்கிருந்த பொண்ணு பேசிச்சு...
" சொல்லுங்க சார்... "
" நெட் ஸ்பீடாவே இல்லங்க.. "
" 15-ம் தேதி வரைக்கும் கொஞ்சம் பொறுத்துக்கோங்க சார்.. "
" அப்புறம் சரியாகிடுமா..?!! "
" ஹி., ஹி., ஹி.. இல்ல பழகிடும் சார்..!! "
# அடிங் கொய்யாலே..

'மார்ஷியன்' படம் பாத்துட்டு இருந்தோம்...
அப்ப என் பையன் சூர்யா...
"இது என்ன பிளானட்பா..?"
"செவ்வாய் கிரகம்..!"
"செவ்வாய் கிரகமா..?! அதுக்கு இங்கிலீஸ்ல என்னப்பா..?"
"ம்ம்ம்.. Tuesday planet..!!"
# ஹி., ஹி., ஹி. நாங்கல்லாம் இங்கிலீஸ் எக்ஸாமையே தமிழ்ல எழுதினவங்க..
மங்கு (Shajahan S) அவன் கேர்ள் ப்ரெண்ட்கிட்ட...
" அழகான பொண்ணுங்க கூட சண்டை போடக்கூடாதுனு என் குருநாதர் என்கிட்ட சத்தியம் வாங்கி இருக்காரு.. "
" அப்ப நேத்து ஏன்டா என் கூட சண்டை போட்டே..?!! "
" ஆங்... அழகான பொண்ணுங்க கூடத்தான் சண்டை போடக்கூடாதுனு சொல்லி இருக்காரு..??!! "
தத்துவத்தை உளறிட்டு இருந்தா..
நீ சாதாரண மனுஷன்..
நீ உளறினதெல்லாம் தத்துவமா மாறிட்டா..
நீ பிரபலம்..
- பாபா வெங்கீஷ்
கிறீச்ச்ச்ச்
----------------
போட்ட பிரேக்கில்
தப்பியது ஓணான்..
ஐயகோ...
கொட்டி விட்டதே
வாங்கி வந்த
சிக்கன் பிரியாணி..!!
- வெங்கூ
"இது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும் " என்பது தான் இப்போது ஃபேஸ்புக்கில் டிரெண்டிங்...
இது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்...?!
‪#‎சாவுங்கடே‬ ஸ்டேட்டஸ்
" இது நான் எழுதின கவிதை.. படிச்சு பாரு"-னு என் ப்ரெண்ட் அருண்கிட்ட குடுத்தேன்..
அவனும் படிச்சி பாத்துட்டு...
" நம்ப முடியலியே..!! "
" சத்தியமா நான் எழுதினது தான் மச்சி..!! "
" ஹி., ஹி., ஹி.. நான் இத கவிதைனு நம்பமுடியலன்னு தான் சொன்னேன்..! "
# பிளடி இடியட்..!!
ப்ளாக் & ஒயிட் படத்தை கலர் டிவில பாத்தாலும்.... 
அது ப்ளாக் & ஒயிட்டில தான் தெரியும்..
இது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்...?!
‪#‎சாவுங்கடே‬ ஸ்டேட்டஸ்

Monday, August 8, 2016


உங்கள ஃபாலோ பண்ற 1000 பேரும் ஆம்பளங்களாவே இருக்காங்களே.. ஏன்னு ஒருத்தர் கேட்டாரு..
பொம்பள புள்ளங்க என்னை ஃபாலோ பண்ணினா எனக்கு சுத்தமா பிடிக்காது சார்னு சொன்னேன்..
நம்பிட்டு போயிட்டாரு...!!!

டியர் பேச்சிலர் பாய்ஸ்..,
உங்கள விட வயசுல பெரிய பொண்ணா பாத்து கட்டிக்கோங்க..
எப்படியும் கல்யாணத்துக்கு அப்புறம் பொண்டாட்டி சொல்ற மாதிரி தான் கேட்டு நடக்க போறோம்...
அப்பல்லாம் வயசுல பெரியவங்க சொல்படி நடக்கறோம்னு மனச தேத்திக்கலாம்..!!
# தூம் தத்தா..!!
ஆபீஸ்ல இருந்தேன்...
என் ப்ரெண்ட் ரவி போன் பண்ணினான்...
"என்ன மச்சி... இப்ப நீ பிஸியா இருப்பியே...?"
"ஹி., ஹி.,.ஹி.. ஆமா மச்சி எப்டி கரெக்டா சொல்ற..?!!"
"அதான் வாட்ஸ்அப்ல ஆன்லைன்னு காட்டுதே.."
# அடப்பாவிகளா... இப்ப இதயெல்லாமா நோட் பண்றீங்க..?!!

ரமேஷ் ஸ்டேடஸ் - கவுண்ட்டர்


ப்ரெண்ஷிப் டே - மீம்ஸ்போன மாசம் என் ப்ரெண்ட் ஆனந்த்கிட்ட பேசிட்டு இருக்கும் போது பொலம்பினான்...
" மச்சி.. என் Wife வீட்டு செலவுக்கு எவ்ளோ குடுத்தாலும் 1000 பத்தல, 2000 பத்தலனு சொல்லிட்டே இருக்காடா.. "
" அப்டி என்னாடா செலவு..? "
" தெரியலியே..! "
" த்த்து.. நீ ஒரு அக்கவுண்ட்ஸ் ஸ்டூடெண்ட்டா இருந்துட்டு இப்டி சொல்றியே.. வெக்கமா இல்ல.. "
" சரி இத எப்டி கரெக்ட் பண்றது..?!! "
" இனிமே பணம் குடுக்கும் போது.. இதுல செலவு பண்றதுக்கு கணக்கு எழுதி வெச்சி எனக்கு காட்டுனு சொல்லு.. "
" அப்டி சொன்னா...?!! "
" அநாவசிய செலவெல்லாம் தானா கட்டாகிடும்ல... "
" செம்ம ஐடியா மச்சி.. "
இந்த மாசம் ஆன்ந்த்க்கு போன்...
" என்னா மச்சி.. உன் Wife செலவு கணக்கெல்லாம் எழுதறாப்டியா..?!! "
" ஓ... இந்த மாசம் 10,000 குடுத்து செலவு கணக்கு எழுதுனு சொன்னேன்... எழுதி வெச்சு இருக்கா...!! "
" வாவ் சூப்பரு... "
" ம்ம்க்கும்.... அத கூட்டினா 15,000 வருது..."
# ஓ மை காட்...!!

பூபதி முருகேஷ் ஸ்டேடஸ் - கவுண்டர்


எல்லோரும் அவங்கவங்க பழைய போட்டோஸ் FB-ல ஷேர் பண்றாங்க...
சரி நாமளும் ஒரு 10 வருஷம் முன்னால எடுத்த போட்டோவ ஷேர் பண்ணலாம்னு பாத்தா...
அதுல நான் 5 மாச கைக்குழந்தையா இருக்கேன்.. பரவாயில்லையா..?!!
 
என் பிரதர் பொண்ணுக்கு ஸ்கூல்ல எதோ டிராமாவாம்... சேலை கட்டிட்டு வர சொல்லி இருக்காங்க...
சேலை கட்டிட்டு வந்து நின்னா.. நல்ல ரிச்சா இருந்தது...
"எப்டி இருக்குப்பா..?"
"சூப்பரா இருக்கு.."
"டிராமால எனக்கு ஏழை அம்மா கேரக்டர்..!!"
"என்னாது.... ஏழை அம்மாவா..?!! "
(அவ்வ்வ்வ்...!!! )
"ம்ம்ம்... ஸ்கூல்ல... ஏழை அம்மா கட்டியிருக்குற சேலை இப்டி ரிச்சா இருக்கேன்னு கேட்டா என்னப்பா சொல்றது..?"
"குட் கொஸ்டின்... இந்த மாதிரி சேலை எடுத்து தான் ஏழையா போயிட்டேன்னு சொல்லிடுமா...!!"
வாழ்க்கைன்னா... நாலு பேரையாவது சம்பாதிக்கணும்....
அப்பத்தான் போஸ்ட் போட்டா நாலு லைக்காவது தேத்த முடியும்..!!
- பாபா வெங்கீஷ்
" நான் மத்த பொண்ணுங்க மாதிரியில்ல.. ஐயம் டிப்பரெண்ட்..! "
" ஓ..! சரி.., புதுசா சிங்கப்பூர் டிசைன்ல மூணு சவரன்ல ஒரு நெக்லஸ் வந்திருக்கு பாக்கறியா.?!! "
" எங்கே.. எங்கே.. காட்டு.. காட்டு... "
# ஹி., ஹி., ஹி.. டிப்பரெண்ட்..!!
" என் பசங்க ஸ்கூல்ல இம்சை பண்றாங்க மச்சி.. "
" என்னா பண்றாங்க..?!! "
" பசங்கள படிக்க வைங்கடான்னா.. இவங்க தினமும் பிராஜெக்ட் குடுத்து வெக்கிறாங்க.. "
" இது நல்லது விஷயம் தானே..?!! "
" ம்ம்க்கும்..., நானும் என் பொண்டாட்டியும்ல படிச்சிட்டு பிராஜெக்ட் பண்ணிட்டு இருக்கோம்.. "
" உஷ்.. சத்தம் போட்டு சொல்லாதே மச்சி.. ஒருத்தர்க்கு ஃபீஸ் கட்டிட்டு மூனு பேர் படிக்கறீங்களானு ஃபீஸை ஜாஸ்தி பண்ணிட போறாங்க.."
" அட.. ஆமா.. ஆமா...!! "
# உஷ்...!!!

என் ப்ரெண்ட் வெங்கடேஷ் கடையில...
" மச்சி... குழந்தை விளையாடற மாதிரி ஒரு பொம்மை குடுடா..!! "
" ஏன்டா.. மறுபடியுமா..? கவர்மெண்ட் சொல்றதை எல்லாம் கேக்கவே மாட்டீங்களா..? "
" அட நாயே... நான் குழந்தைன்னு சொன்னதே என்னை தான்டா...! "
" கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்....!! "
" டேய்.... நிறுத்து... கேட்டதுக்கு மட்டும் பதில் சொல்லு.. "
" சாரி குட்டிப்பையா... எங்க கடையில இல்ல... "
" வேற எங்கே கிடைக்கும் அங்கிள்..?!! "
" இப்டியே நேரா போயி லெப்ட்ல திரும்பினா.. "
" திரும்பினா... கிரவுண்ட் வரும்.... "
" ஆங்.. அங்க தான்... நாலஞ்சு கழுதை மேய்ஞ்சிட்டு இருக்கும்., புடிச்சிட்டு போயி வெளையாடு..!! "
# டேய்.. டேய்...!!
ப்ரெண்ட்ஸ் குரூப்ல என் போட்டோ ஒன்னு அப்லோடு பண்ணினேன்..
உடனே ஒருத்தன் வந்து...
" மச்சி.. பிரிஸ்மாவா..? கலக்கு மச்சினு " ரிப்ளை பண்றான்...
ஏன்டா லைட்டா மேக்கப் போட்டதெல்லாம் ஒரு குத்தமாடா..
இவிங்களோட ஒரே அக்கப்போரா இருக்கே..!!

ஆடிப் பெருக்கு.. - மீம்ஸ்