Tuesday, January 31, 2017

ஒரு ஆஸ்பத்ரியில பொறந்த தமிழனா இருந்தா.... 
அர்த்தம் சொல்லிட்டு போ.....


" எப்டி சார் இவ்ளோ விஷயம் தெரிஞ்சி வெச்சிருக்கீங்க... ஆக்ஸ்போர்ட் யூனிவர்சிட்டில எதுனா படிச்சீங்களா..?! "
" சே.. சே... வாட்ஸ்அப்ல பத்து க்ரூப்ல இருக்கேன்.. அங்கதான் ஆபரேஷன் பண்ற அளவு சொல்லித் தர்றானுவளே...!! "
" மங்கு (Shajahan S) என் Fake Id-னு நெறைய பேரு நெனச்சிட்டு இருக்காங்க.. "
" ஆமா மச்சி எனக்கே ரொம்ப நாளா அந்த டவுட் தான்... "
" ம்ம்ம்... அதான் ஒரு ப்ளான் பண்ணியிருக்கேன்... "
" என்ன ப்ளானு...?! "
" இன்னிக்கு மங்கு கூட பயங்கரமா சண்டை போட்டுட்டேன்... "
" அப்புறம்..?! "
" அப்புறம் என்ன அந்த ஐ.டிய டீஆக்டிவேட் பண்ண வேண்டியது தான்... "
" டீஆக்டிவேட்டாஆஆஆ..?!! "
" டீஆக்டிவேட்டுன்னா சொன்னேன்..?! ( அவசரத்துல உளறிட்டோமோ..?! ) அன்ப்ரெண்ட் பண்ண போறேன்... ஹி., ஹி., ஹி...!! "
( பார்த்தேன் ரசித்தேன் பாடல்... )

சார்.... லைலா சார்.....

அப்டேட் :

இந்த போஸ்ட் பாத்துட்டு என் Wife...

" இப்ப எதுக்கு இந்த பாட்டு..?! "

" ஹி., ஹி., இந்த பாட்ல லைலாவ பாத்தா உன்ன மாதிரியே இல்ல... "

" ம்க்கும்..!! "

( இப்ப எதுக்கு மொறைக்கறாப்ல..?! நாம இல்லனு தானே சொன்னோம்..?! )
நான் இப்ப வெளியே கெளம்பிட்டேன்....
வண்டில வர்றப்ப தான் பாத்தேன்.. எங்க ஊர்ல நாலஞ்சு ஃபாரினர்ஸ் சுத்திட்டு இருந்தாங்க...
( ஒருவேளை நம்ம ஃபேஸ்புக் ஃபேன்ஸா இருப்பாங்களோ..?!! )
டக்னு நிர்மலாக்கு போனை போட்டேன்... தூங்கிட்டு இருந்தாப்ல... எழுப்பி விட்டுட்டேன்...
" நிர்மலா.. நீ நாலஞ்சு டீ ரெடி பண்ணி வெச்சிக்கோ... யாராச்சும் என்னை தேடி வந்தா உக்கார வெச்சு குடு... " சொல்லிட்டேன்..
பின்ன... ரசிகர்களை மதிக்க தெரிஞ்சவன்தான்யா உண்மையான எழுத்தாளன்... ஹி., ஹி., ஹி...!!!

" Save Trees...
Say No to Paper.. "
இத தான் நாங்க ஸ்கூல்ல படிக்கறப்பவே ஃபாலோ பண்ணிட்டு இருந்தோம்..
எக்ஸாம்ல அடிஷன் ஷீட் வாங்கறதேயில்லனு அதுக்கு வேற புடிச்சி அடிச்சீங்க..!!

ஹி., ஹி. ஹி.. அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா...!!


"No Thanks Dear"னு Wife சொன்னா...
அதுக்கு...
"நீ ஆணியே புடுங்க வேணாம்னு" அர்த்தம்...
- பாபா வெங்கீஷ்

Monday, January 30, 2017

ஜல்லிக்கட்டு போராட்டம்

ஆமாம்டா... மாண்புமிகு சின்னம்மா தான் ஜல்லிக்கட்டையே கண்டுபிடிச்சாங்க... போதுமா..?!!
#ஜெயா டிவி நியூஸ்..!!


==============================================================


" மாணவர்கள் போராட்டத்தை கைவிடலன்னா தீ குளிப்பேனு வைகோ சொன்னாரே..? எனி அப்டேட்..?!! "
" ம்ம்.. இதுவரைக்கும் 100 லிட்டர் பெட்ரோல் சேர்ந்திருக்கு... "
மதியம் ஐஸ்கிரீம் சாப்பிடும் போதே என் Wife...
" ஐஸ்கிரீம் சாப்பிடாதீங்க... உங்களுக்கு ஒத்துக்காது.. "
" டெய்லி ஒரு ஐஸ்கிரீம் சாப்பிட்டா ஹார்ட்டுக்கு நல்லதாம்.. அமெரிக்கா சயின்டிஸ்ட் சொல்றாங்க.. "
" ம்க்கும்.. "
இப்ப நைட் இருமல்....
" நான் அப்பவே சொன்னேன்.. கேட்டா தானே... இப்ப பாருங்க இருமலு... "
" ஆக்சுவலி இருமல், சளி, காய்ச்சல் எல்லாம் நல்லதாம்.. "
" இது யாரு சொன்னது..?! "
" கனகராஜ்.. "
" யாரு அது..?! "
" மெடிக்கல் ஸ்டோர் கனகராஜ்.. இருமல் மருந்து வாங்கும் போது சொன்னான்... "
நல்லவேள போன வருஷமே திரிஷாவோட ப்ரெண்ட் ரிக்வெஸ்ட்டை ரிஜெக்ட் பண்ணினேன்...
இல்லன்னா... இந்நேரம் உன் ப்ரெண்ட் தானேனு எல்லோரும் என் கூட சண்டைக்கு வந்திருப்பாங்க..
#ரணகளத்துலயும் ஒரு கிளுகிளுப்பு...!!
"இந்த தவானை எல்லாம் எதுக்கு மச்சி டீம்ல எடுக்கறாங்க..?!"
" ரெகமன்டேஷன்ல உள்ள வந்து இருப்பான் மச்சி...? "
" ரெகமன்டா..?! இவனை எல்லாம் எவன் மச்சி பண்ணுவான்...? "
" ஆங்.... இங்கிலாந்து டீம் தான்... "
காலைல 8 மணிக்கு ஆனந்த் போன் பண்ணியிருந்தான்..
" ஹலோ வெங்கி... "
"சொல்றா ஆனந்த்... என்ன, மாட்டுப்பொங்கல்க்கு விஷ் பண்ண கூப்பிட்டியாக்கும்..?"
"சே.. சே.. மாட்டுப்பொங்கலுக்கு நான் எருமைங்களுக்கெல்லாம் விஷ் பண்ண மாட்டேன்"
"ஹி., ஹி., ஹி... ஆனா நான் பண்ணுவேனே.... விஷ் யூ ஹேப்பி மாட்டுப்பொங்கல்ரா ஆனந்து..."


என் வழிகாட்டுதல் பேரில் என் Wife நிர்மலாவும்., தம்பி Wife கீதாவும் போட்ட கோலம்...
அப்டி என்ன வழிகாட்னேனு கேப்பீங்களே....
தெரியும்...
ஆக்சுவலி அவிங்க ரெண்டு பேரும் பர்ஸ்ட் ஒரு நோட்ல தான் கோலம் போட்டுட்டு இருந்தாங்க...
நான் தான்..
" என்ன சின்னபுள்ளதனமா நோட்ல எல்லாம் கிறுக்கிட்டு இருக்கீங்க.. வாசல்ல போயி இத போட்டாவாச்சும் நாலு பேருக்கு உங்க தெறமை தெரிய வரும்ல"னு சொன்னேன்..
நான் நல்லது தானே சொன்னேன்..?! பின்ன ஏன் மொறைச்சிட்டே போறாங்க..?!!

இப்டி ஒரு Facility இங்க இருந்தா எவ்ளோ நல்லா இருக்கும்னு Jayanthi Shekhar ரொம்ப ஃபீல் பண்ணினாப்ல..
இருக்கே... அல்ரெடி இங்க இருக்கே...
இங்க அதுக்கு பேரு.... 
.
.
.
" டாஸ்மாக் "
:P


சாயந்திரம் மணி 6..
நான் வெளியே போயிட்டு அப்ப தான் வந்தேன்...
எனக்கு ரெகுலர் டீ டைம் 5.15 மணி.. வீட்டுக்கு வந்து பாத்தா எனக்கு வெச்ச டீ சூடு ஆறி போயி இருந்தது..
சரி நிர்மலாவ கூப்பிட்டு சூடு பண்ணி தர சொல்லலாம்னு நெனக்கும்போது தான் கன நேரத்தில் உதிச்சது ஒரு சிந்தனை...
நாசால ராக்கெட் விடற அளவு திறமையுள்ள நமக்கு ஆஃப்டர் ஆல் இந்த டீயை சூடு பண்ண முடியாதா..?
நாமளே பண்ணுவோம்னு ஒரு பாத்திரத்துல டீயை ஊத்தி இண்டக்ஷன்ல வெச்சேன்...
வாவ்.. டீ சூப்பரா சூடு ஆகிடுச்சு...
இன்னிக்கு தான் நான் ஒரு விஷயம் தெரிஞ்சிக்கிட்டேன்...
ஆக்சுவலி டீ சூடு பண்றது ஈஸி தான்...
ஆனா அத எடுத்து கிளாஸ்ல ஊத்தும் போது கை தவறி கீழே கொட்டி.. அத க்ளீன் பண்றது இருக்கு பாருங்க.. அதான் ரொம்ப கஷ்டம்...
ஹி., ஹி., ஹி...!!

Wednesday, January 11, 2017

திருவள்ளுவர் சிலை 133 அடி - கணேஷ் கவுண்ட்டர்..!


நீ படிக்குற ஸ்கூல்ல நான் ஹெட் மாஸ்டர்லே...


என்னை பத்தி உங்களுக்கெல்லாம் தெரியாது...
நானா எந்த பிரச்னைக்கும் போக மாட்டேன்...
ஆனா.... பிரச்னை என்னை தேடி வந்தது....
.
.
.
கால்ல விழ கூட யோசிக்க மாட்டேன்...
பீ கேர்புல்.. ( நான் என்னைய சொன்னேன் )
என் Wife அவங்க ப்ரெண்ட்கிட்ட போன்ல பேசிட்டு இருந்தாங்க.. எனக்கும் லைட்டா கேட்டுச்சு...
( நான் ஒட்டுக்கேக்கல.. அதுவா காதுல விழுந்தது... ஹி., ஹி., ஹி.. )
" ஆக்சுவலி இவரு தூரத்துல பாக்க தான் காமெடி பீஸ் மாதிரி இருப்பாரு.. பக்கத்துல பாத்தா டெரர்ர்ர்ரா இருப்பாரு டெர்ர்ர்ரா...! "
( யாரு நானு..?!! )
" நிஜமாவா சொல்றே..?! "
" ஆமா... இவர பாத்தா தான் எங்க வீடே பயப்படும்.. "
" ஆங்... நம்ப முடியலியே...! "
" அட நிசம்தான்.... இவர கண்ணாடில பாத்தா இவரே பயப்படுவார்னா பாத்துக்கோயேன்... "
# இந்த தடவை பக்கத்துல சுவரு இல்ல... கட்டில் தான் இருந்தது...
லஞ்ச்ல ப்ளேட்ல சாப்பாட்டை விட வெண்டக்காய் பொரியல் அதிகமா இருந்தது....
" என்ன நிர்மலா இது... இவ்ளோ பொரியல் வெச்சி இருக்கே... "
" வெண்டக்காய் அதிகமா சாப்பிட்டா மூளை வளரும்னு சொல்வாங்க கேள்விட்டு இருக்கீங்கல்ல.. "
" ஓ... புரிஞ்சிடுச்சு... உன் மாமனை ஒரு மிகப்பெரிய ஜீனியஸாக்கி இந்த உலகத்துக்கு காட்ட போற.. ரைட்..?! "
" சே.. சே.. அதெல்லாம் பொய்னு இந்த உலகத்துக்கு காட்டப் போறேன்... "
# டங்... டங்... டங்....
( ஒண்ணுமில்ல சுவரு வந்து என் தலைல இடிச்சிடுச்சு...!! )
தினேஷ்கிட்ட பேசிட்டு இருக்கும்போது சொன்னான்...
" நானெல்லாம் எந்த பொண்ணுக்கும் பயப்பட மாட்டேன்.. "
" மச்சி.. அப்ப உன் Wife-க்கு...?!! "
" அவ எல்லாம் பொண்ணா மச்சி..?!! "
# ரொம்ப பாதிக்கப்பட்டு இருப்பானோ..?!!
சாட்டிங்ல ஒரு பொண்ணு...
" நீங்க சரியான ஆணாதிக்கவாதி.. "
" யாரு... நானு...?! "
" பின்ன பொண்ணுங்க தப்பு பண்ணினா புருஷன் கால்ல விழுந்து மன்னிப்பு கேக்கணும்னு போட்டிருக்கீங்க... "
" அது சீரியல்ல வந்தது... "
" அதே மாதிரி ஆம்பளைங்களும் தப்பு பண்ணினா.. பொண்டாட்டி கால்ல விழுந்து மன்னிப்பு கேப்பீங்களா..?!! "
" என்னாது...?!! தப்பு பண்ணினா தான் கால்ல விழணுமா..?! இது தெரியாம போச்சே...!! "
#ஙே...!!!
நான் லஞ்ச்க்கு வீட்டுக்கு போனப்ப என் Wife எதோ சீரியல் பாத்துட்டு இருந்தாப்ல..
அதுல ஒரு பொண்ணு அவ புருஷன் கால்ல விழுந்து நான் பண்ணினது தப்பு.. என்னை மன்னிச்சிடுங்கனு கெஞ்சிட்டு இருந்தது...
நான் அப்டியே லைட்டா திரும்பி என் Wife-ஐ பாத்தேன்...
" ஏன் அப்டி பாக்கறீங்க..? "
" இல்ல இதெல்லாம் நம்பற மாதிரியா இருக்கு..?!! "
" இது கனவு சீன்ங்க.. "
" அதானே பாத்தேன்...!! "
இன்னிக்கு காலைல மங்கு (Shajahan S)
" மச்சி.. என் லவ்வர இம்ப்ரஸ் பண்ணனும்.. ஒரு ஐடியா குடேன்... "
" உன் லவ்வருக்கு எதாவது கவிதை எழுதி குடு... "
" கவிதையா..? நானா..? நான் கவிதைனு எழுதினாலே ஸ்பெல்லிங் மிஸ்டேக் வருமே.... "
" அப்ப பாட்டாவே படிச்சிடு.. "
" அப்டீன்ற... சரி ஈஸியா ஒரு கவிதை சொல்லு.. "
" ஒரு
ஸ்வீட் ஸ்டாலே
ஸ்வீட்
சாப்பிடுகிறதே..
அடடே..!!! "
" சூப்பர் மச்சி... ஒருவேளை அவ ஸ்வீட் சாப்பிடலைன்னா.. "
" எது சாப்பிடறாங்களோ. அத வெச்சி டெவலப் பண்ணிக்கோடா.. "
" டன் மச்சி... "
இப்ப நைட் போன் பண்ணினான்...
" மச்சி... கோச்சிட்டு போயிட்டாடா... "
" ஏன்..?! என்ன ஆச்சு..?! "
" கவிதை சொன்னேன் மச்சி... கிண்டல் பண்றியானு கோச்சிட்டு போயிட்டா...!! "
" கிண்டலா...?! அப்ப அவ என்ன சாப்பிட்டுட்டு இருந்தா...?! "
" வாட்டர்மெலன் ஜூஸு..!! "
" த்த்த்தூ...!! "
#கதம் கதம்....!!
நைட் 12 மணியிருக்கும்... தூக்கம் வரல... பெட்ல எந்திரிச்சு உக்காந்திருந்தேன்...
டக்னு முழிச்சு பாத்த என் Wife நிர்மலா..
" ஏன்.. இப்டி ஆந்தை மாதிரி கொட்ட கொட்ட முழிச்சிட்டு இருக்கீங்க..?! "
( ஆந்தை இவ்ளோ அழகாவா முழிக்கும்..?!! )
" ஹேங்... தூக்கம் வரல.. "
" நான் வேணா ஒரு டிப்ஸ் குடுக்கவா..?! "
" ம்ம்.. "
" பீரோல என் சேரீஸ் எல்லாம் கன்னாபின்னானு கெடக்கு... அத போயி நீட்டா அடுக்கி வெச்சிட்டு வாங்க... "
என்னாது சேரீஸ அடுக்கணுமா..?!
கைப்புள்ள... இன்னும் ஏன்டா முழிச்சிட்டு இருக்கே... தூங்குங்ர்ர்ர்ர்ர்..!!!

2016 இந்தியா vs 2017 இந்தியா - மீம்ஸ்


நியூ இயர் கடவுள் வரம் - மீம்ஸ்