Thursday, March 31, 2016

"கொஸ்டின் பேப்பர் Tough-ஆ..?"
"சேச்சே.. வெரி ஈஸி.. எல்லாமே தெரிஞ்ச
கொஸ்டின்ஸ் தான்பா.."
"அப்புறம் ஏன்டா ஃபெயில் ஆனே.?"
"கொஸ்டின் மட்டும் தான்பா தெரிஞ்சது..
ஆன்சர் தெரியாதே..!!"
ஆண்டவா.. என்னை ஏன் இப்படி சோதிக்கற..?!
# ஒரு அப்பாவின் டைரியிலிருந்து..

"சின்ன வயசுல பேய் படம்னா அவ்ளோ பயப்படுவ.. 
இப்ப மட்டும் பேய் படமா பாக்கற.. எப்டி பயம் தெளிஞ்சது..?"

"அதான் தினமும் ஃபேஸ்புக்ல பத்து செல்ஃபியாவது 
பாக்கறோம்ல.."

# செல்பி புள்ள

Tuesday, March 29, 2016


மங்குவோட ஆன்ட்டி பியூட்டி பார்லர்
வெச்சி இருக்காங்க..
ஒரு நாள் மங்கு அவங்ககிட்ட..
" ஆன்ட்டி.. உங்க ப்யூட்டி பார்லருக்கு
அழகான பொண்ணு எதாவது வந்தா
எனக்கு நம்பர் வாங்கி குடுங்க.. ப்ளீஸ்.. "
" லூசாடா நீ.. அழகா இருந்தா.. அது ஏன்டா
ப்யூட்டி பார்லர் வரப்போகுது..?!! "
# த்த்தும் தத்தா..!!!
அதென்னடா Fake ID க்கு எப்பவும் ரம்யா,
அனிதா, கவிதானே பேரு வெக்கறீங்க..?!
ஒரு ஜெனிபர்., ஒரு காத்ரினா., ஒரு எலிசபெத்
இப்டி எதாவது புதுபுதுசா டிரை பண்ணுங்கடா..
இன்பாக்ஸில் வந்து பெண்கள் யாரும்
என் போட்டோ கேக்க வேண்டாம் ப்ளீஸ்..
இங்கு புரோபைலில் உள்ள ஒரு போட்டோவில்
மட்டுமே நான் அழகாக இருப்பேன்..
.
.
.
.
.
.
மத்த போட்டோக்களில் எல்லாம் மிக மிக அழகாக
இருப்பேன் என்பதால்... அதை பகிர முடியாது...
சாரி...
# கண்ணு பட போகுதய்யா சின்ன கவுண்டரே..
உனக்கு சுத்தி போட வேணுமய்யா சின்ன கவுண்டரே...
என் ப்ரெண்ட் லிஸ்ட்ல இருக்குற அந்த 2800 பேருக்கும்
ஒண்ணு சொல்லிக்கறேன்...
லைக் போட்டா.. INCOME TAX ஆபீஸ்ல இருந்து எல்லாம்
வந்து பிடிச்சிட்டு போக மாட்டாங்க.. 
பயப்படாதீங்க...
# முப்பது லைக்ஸ் வாங்க என்னா முக்கு முக்க
வேண்டி இருக்கு..?! இவிங்கள வெச்சிட்டு உஸ்ஸப்பா....

IND Vs AUS T20 World Cup - PS
Thursday, March 24, 2016

Ind Vs Ban WT20

இந்த பும்ரா பய பந்தை புடிக்கறானா..?
இல்ல வாத்தை புடிக்கறானா..?!
# Ind Vs Ban

===========================================


லூசுங்கி்ட்ட இருக்குற ஒரு நல்ல பழக்கமே..
" நீ ஒரு லூசு"-னு சொன்னா...
" நான் லூசு இல்லனு சொல்லாதுங்க..
நீயும் லூசுதான்"-னு திருப்பி சொல்லும்..

:) :) 
ஸ்டீபன் ஸ்பீல்பெர்க், ஜேம்ஸ் கேமரூன்
" நாளைய இயக்குனர்ல " கலந்துக்க வந்தாலும்
சேர்த்துக் கொள்வோம்... ரூல்ஸ் அலோவ் பண்ணுது,,
- " நாளைய இயக்குனர் " ஹெட்

சூப்பர் சிங்கர் ப்ராடு மீம்ஸ்..

Monday, March 21, 2016

கணிதன்


படத்தை ரீவைண்ட் பண்ணி., ரீவைண்ட் பண்ணி 
பாக்கற மாதிரியே ஒரு பீல்..
# கணிதன்

==============================================

" கணிதன் படம் அவ்ளோ ஸ்லோவாவா இருக்கு..? "
" ம்ம்க்கும்... படம் முடியப்போகுது வீட்டுக்கு போலாம்னு
நெனச்சிட்டு இருக்கும் போது Interval கார்டு போட்டாங்க
பாருங்க.. "
# ஆவ்வ்வ்வ்வ்வ்..!!!!
இன்னிக்கு சாட்டிங்ல ஒரு பொண்ணுக்கு
கவுன்சிலிங்..!!
" பொண்ணுங்கல்லாம்... பாரதி கண்ட
புதுமைப்பெண் மாதிரி இருக்கணும்..!! "
" இல்லன்னா... "
" இல்லன்னா என்ன.. வர்றவன் போறவன்
எல்லாம் அட்வைஸ் பண்ணுவான்...!! "
" கரெக்ட்டு..! "
" என்ன கரெக்ட்டு..?! "
" இந்தா... பண்ணிட்டீங்கல்ல..!! "
# அடிங்கொய்யாலே..!!
இவனுங்க தொல்லை தாங்காம தான்
ட்விட்டர் பக்கமே போறதில்ல..
இப்ப என்னடான்னா..
ட்விட்டர்ல போட்டா.. அது ஃபேஸ்புக்ல
வர்ற மாதிரி செட் பண்ணி வெச்சிருக்கானுங்க...
இவனுங்க அக்கப்போரு இருக்கே... மிடில...
# நீ திரும்ப Blog-க்கே போயிடு சிவாஜி மொமெண்ட்
மங்கு (Shajahan S ) போன் பண்ணியிருந்தான்...
" ஏய்.. என்ன போனை எடுக்க இவ்ளோ நேரம்..?
யார் கூட சாட்டிங் பண்ணிட்டு இருக்கே..? "
" சே., சே.. சாட்டிங் பண்ண எனக்கு ஏதுடா நேரம்..?
ஐயம் பிஸி.. "
" நிஜமா..?!! "
" நிஜமா தான்..!! "
" கல்பனா மேல சத்தியமா..? "
" கல்பனாவா.. யாராது..? "
" நீ மொதல்ல சத்தியம் பண்ணு சொல்றேன்..! "
" சரி.. கல்பனா மேல சத்தியமா..!! "
" ஓ.கே இப்ப நம்பறேன்.. போன வெச்சிடறேன்..! "
# டேய் டேய் யார்ரா அது கல்பனா..
சொல்லிட்டு போடா... சொல்லிட்டு போடா..
வெச்சிட்டான்டா..

Sunday, March 20, 2016

இன்னில இருந்து வெஜிடேரியனா மாறிடலாம்னு
ஒரு தீர்மானமான முடிவு எடுத்து இருக்கேன்...
வெளியே வந்தா... எங்க பக்கத்து வீட்ல அண்ணி..
" டேய்.. உங்கண்ணன் வஞ்சிரம் மீன் எடுத்து
வந்து இருக்காரு.. ஒரு பீஸ் எடுத்து வைக்கவா"னு
கேக்குது...
( சே... சத்திய சோதனை.. )
" ரெண்டு பீஸா எடுத்து வைங்க... நாளைல இருந்து
வெஜிடேரியனா மாற போறேன்"-னு சொல்லிட்டேன்...
# ஹி, ஹி., ஹி..!
" எதுக்கு இத்தனை ஐஸ் போஸ்ட்..?
இன்னிக்கு கிரிக்கெட் பாக்கத்தானே..? "
" அடிக்கள்ளி.. கண்டுபிடிச்சிட்டியே..!!! "
# ரிமோட் ப்ளீஜ்..
## Ind Vs Pak

பொண்டாட்டிக்கு ஐஸ் பாடம் 1 to 5

" ரொம்ப நேரமா ட்ரை பண்றேன்... உங்க
மொபைல் பிஸி., பிஸின்னே வருது..
அப்படி யார்கிட்ட பேசிட்டு இருந்தீங்கன்னு..? "
பொண்டாட்டி எப்ப கேட்டாலும்....
டக்னு யோசிக்காம சொல்லணும்...
" அட இவ்ளோ நேரம் உனக்குத்தாம்மா
ட்ரை பண்ணிட்டு இருந்தேன்...."
# பொண்டாட்டிக்கு ஐஸ் பாடம் 1

=======================================

ரொம்ப நேரமாச்சு நீங்க Wife கிட்ட பேசி..
வெறுத்து போய் அவங்களே உங்கள
கூப்பிடுறாங்க...
அப்போ என்ன பண்ணுவிங்க??
ரொம்ப simple ..
" 100 வயசுடா செல்லம்.. இப்பத்தான் உனக்கு
கால் பண்ண நான் போனை எடுத்தேன்...
நீயே correcta கால் பண்ணிட்டே... "
ஹி., ஹி., ஹி....!!
# பொண்டாட்டிக்கு ஐஸ் பாடம் - 2

=======================================

Wife வெள்ளி கொலுசு கேக்கறாங்க..
பட்ஜெட் கொஞ்சம் டைட்டு..
யோசிக்காம டக்னு எடுத்து விடணும்....
" தங்கசிலைக்கு எதுக்குடா செல்லம்
வெள்ளி கொலுசு..?!! "
# பொண்டாட்டிக்கு ஐஸ் பாடம் - 3

=======================================

" ஏங்க நைட்டுக்கு உப்புமா செய்யவா..? "
" மத்தவங்க செஞ்சாத்தான் அதுக்கு பேரு உப்புமா..
உன் கைப்பட்டா அதுக்கு பேரு அமிர்தம்டா தங்கம்.. "
# பொண்டாட்டிக்கு ஐஸ் பாடம் - 4

========================================

" ஏங்க இந்த பச்சை கலர் புடவைல
நான் அழகா இருக்கேனா..? "
" நீ கட்டிட்டு இருக்கறதால அந்த
பச்சை கலர் புடவைதான் செல்லம் 
அழகா இருக்கு..! "
# பொண்டாட்டிக்கு ஐஸ் பாடம் - 5

Saturday, March 19, 2016

நேத்து நைட், விஜய் சூப்பர் சிங்கர் ரிசல்ட் அறிவிச்சவுடனே...
"த்த்த்தூ..!!"
"இப்ப எதுக்குங்க துப்புனீங்க..?!"
"நான் ஒரு ஃபேஸ்புக் போராளி.. எங்க அநியாயம்
நடந்தாலும் என் கண்டனத்தை பதிவு பண்ணுவேன்.."
"அதுக்கெதுக்கு நம்ம டிவி மேல துப்புனீங்க..??"
"ஓ மை காட்.. இது நம்ம டிவில்ல.."
# ஓடிர்றா கைப்புள்ள
" நிர்மலா.. அடுத்த வருஷம் சூப்பர் சிங்கர்ல
நானும் கலந்துக்கலாம்னு இருக்கேன்.. "
" என்ன மாமு சொல்றீங்க..? உங்களுக்கு
பாட்டெல்லாம் பாட தெரியுமா..?!! "
" சுமாரா பாடுவேன்.. "
" அப்புறம் எந்த தைரியத்துல சூப்பர் சிங்கர்ல
கலந்துக்கறேனு சொல்றீங்க..?! "
" அட அங்க சுமாரா பாடுறவங்களுக்கு தான்மா
அவார்ட் குடுப்பாய்ங்க.. "
# விசய் டிவி ராக்ஸ்.. த்த்த்தூ..!
நேத்து போஸ்ட்ட பாத்துட்டு எங்க அண்ணன்
போன்ல பிடிச்சிட்டாரு..
" ஆப்பிள் சரியில்லன்னு சொன்னியா..? "
" ஐயோ.. நான் எப்ப சொன்னேன்.. "
" நடிக்காதேடா.. எல்லாம் தெரியும்.. "
" ஹி., ஹி., ஹி... "
" அடி பத்தல உனக்கு..!! "
" அட.. என்னங்கண்ணா பெரிய வார்த்தை
எல்லாம் பேசிட்டு.. இப்ப நான் என்ன
பண்ணனும்..? "
" ஒழுங்கு மரியாதையா ஆப்பிளை கலாய்க்கறத
இன்னியோட நிறுத்து.. "
" சரிங்கணா.. "
" உடனே ஆப்பிளை புகழ்ந்து ஒரு போஸ்ட் போடு.. "
" இதோ...
.
.
.
.
.
.
.
" ஆப்பிள் ஒரு நல்ல பழம்.. சத்து நிறைந்தது..
சாப்பிட சுவையாக இருக்கும்..!! "
# ஆன்ட்ராய்ட் யூசர் போன் ஸ்விச்ஆப் ஆனாலும்
ஐபோன தொட மாட்டோம்ல..!!

கார்த்திக் கட்சி ரெண்டாக உடைந்தது - PSஎங்கிட்ட வந்து யாராவது ஐபோன்..ஐபோன்னு
பெருமை பேசினாங்கனு வைங்க..
நான் சிம்பிளா..
" என் போன் சார்ஜ் 2 நாள் நிக்குது.. உங்களுதுனு..? "
கேப்பேன்..
பார்ட்டி கப்சிப்..
# ஹே ஆருகிட்ட..!!

உண்மையான கடவுள் WIFI Pass - PS


மொத மேட்ச்ல யார் ஜெயிக்கறாங்கங்கறது 
முக்கியமில்ல...
கடைசி மேட்ச்ல யார் ஜெயிக்கறாங்கங்கறது தான் 
முக்கியம்..!!
# அழல... கண்ணு வேர்க்குது மொமெண்ட்..!!

# IND Vs N.Z WCT20

==========================================

இனிமே உங்க யாருக்கும் IPL-ல சான்ஸ் கிடையாது... 
நியுசிலாந்துல இருந்து சியர் கேர்ள்ஸ்சை கூட
புக் பண்ண மாட்டோம்..
# போங்கடே..!!!

Airtel 4G இமயமலை - PS


Sunday, March 13, 2016

எங்க கடைப்பையன் வீட்ல இன்னிக்கு
Non Veg விருந்து..
"அவசியம் வரணும்"-னு திரும்ப திரும்ப
கூப்பிட்டுட்டு போயிருக்கான்..
இப்ப போன் பண்ணியிருந்தான்...
" அண்ணே வர்றீங்கல்ல...?! "
" கண்டிப்பா... "
" எத்தனை மணிக்கு வர்றீங்க..? "
" ஒன்னு.. ஒன்ரை ஆகிடும்.. "
" சரி.. எதாவது ரிசர்வ் பண்ணி வெக்கட்டுமா..?! "
" ஒரு லெக் பீஸ் மட்டும் தனியா எடுத்து வை.. "
" அண்ணே... இன்னிக்கு கோழி செய்யல..
ஆடு மட்டும் தான்.. "
" தெரியும்... நானும் அத தான்டா சொன்னேன்..!! "
# ம்ம்ம்மே..!!

Friday, March 11, 2016

நேத்து சாயந்திரம் என் தங்கச்சி போன் பண்ணியிருந்துச்சு...
" Anniversary-க்கு அண்ணிக்கு என்ன கிப்ட்ணா
வாங்கி குடுத்தே..?! "
" ஒண்ணுமில்ல... "
" ஒண்ணுமில்லையா..?!! ஏன்..??!! "
" அதான் நகைக்கடை எல்லாம் ஸ்ட்ரைக்கா இருக்குல்ல...!! "
# ஆட்டோ கேப்பில் ஆடிட்டோரியம் கட்டுவோர் சங்கம்..
போஸ்ட் பாத்துட்டு என் ப்ரெண்ட் மணி கால் பண்ணியிருந்தான்...
" Happy Anniversary வெங்கி.. "
" தேங்க்ஸ் மணி.. "
" ஆக்சுவலி இப்பல்லாம் உன் கண்ல தண்ணியே 
வர்றது இல்லியாமாம்.. நெசமாவா..?! "
" யெஸ்... "
" அடிக்கறதில்லையா..?! "
" வலிக்கறதில்ல... "
# ஹி., ஹி., ஹி..!

Anniversary Post - 1

நேத்தே என் சிஷ்ய புள்ளங்க 10 பேரை கூப்பிட்டு...
" நாளைக்கு எனக்கு Anniversary... உடனே
என்னை புகழ்ந்து கவிதை எழுதறது..,
போட்டோஷாப் பண்ணி வாழ்த்து சொல்றது.. 
போஸ்ட் போட்டு என்னை Tag பண்றது
இதெல்லாம் இருக்க கூடாதுனு " சொல்லி இருந்தேன்...
மணி இப்ப 7.30 ஆச்சு...
ஒரு பயலும் போஸ்ட் போட காணோம்...
நாம சொன்னத பூரா நிஜம்னு நம்பிட்டாய்ங்களா...??!!
ஹைய்யோ... ஹைய்யோ...!!!
டிராபிக்ல ஒரு ஸ்கூட்டியும், பைக்கும்
முட்டிக்கிச்சு...
அந்த பொண்ணு திட்ட..,
அந்த பையன் பதிலுக்கு கத்த..
ஒரு ரணகளமாக கூடிய சூழல்
என் கண்ணுக்கு தெரி்ஞ்சது..
( " நாட்டாமை... சீக்கிரம் பஞ்சாயத்து பண்றா.. "
- என் உள்மனசு )
எப்படியும் தப்பு அந்த பொண்ணு மேல தான் இருக்கும்...
டக்னு நான் வண்டிய விட்டு இறங்கி
அவங்க பக்கத்தில போனேன்...
போயி...
" ஏம்பா தம்பி.... பாத்து வரக்கூடாது..?! "
மாமனார் வீட்டு கல்யாணம்...
நான் உண்டு.. என் மொபைல் உண்டுனு
ஓரமா உக்காந்து இருந்தேன்..
அப்பத்தான் அவன் மண்டபத்துல என்ட்ரி ஆனான்...
ஐயோ இவனா..!! சிக்கினா... 
பேசியே சின்னாபின்னமாக்கிடுவானே...!!
அவனை பாத்தும் பாக்காத மாதிரி தலைய
குனிஞ்சிக்கிட்டேன்..
ஒரு 5 செகண்ட் கழிச்சி... போயிட்டானானு
லேசா தலைய தூக்கி பாத்தேன்..
இப்ப என்னை பாத்துட்டான்..
டக்னு ஒரு செகண்ட் ஷாக் ஆனவன்...
அப்டியே பாக்காத மாதிரி போயிட்டான்...
# அடேய்ய்ய்ய்ய்ய்.....

கோர்ட் : விஜய் மல்லய்யா எங்கே..?!
கவர்மெண்ட் : அவர் இந்தியாலயே இல்ல...
கோர்ட் : அதெப்படி தேடிப்பாக்காமயே சொல்றீங்க..?!
கவர்மெண்ட் : அனுப்பி வெச்சதே நாங்க தானே...!!

Tuesday, March 8, 2016

காலைல 11 மணி... டீ பிரேக்..
ஹப்பாடா கொஞ்சம் நேரம் ரிலாக்ஸா
இருக்கலாம்..
அப்ப இவ்ளோ நேரம் என்ன பண்ணிட்டு
இருந்தேன்னு கேக்கக் கூடாது..
11 மணி எப்ப ஆகும்னு வெய்ட் பண்ணிட்டு
இருந்தேன்.. ஹி., ஹி., ஹி...
சரி சரி.. மேட்டர்க்கு வருவோம்..
ரிலாக்ஸா ஃபேஸ்புக்கை ஓபன் பண்ணினேனா..
சுத்தி சுத்தி.. " Women's Day " வாழ்த்து தான்..
ஒவ்வொண்ணா படிக்க படிக்க...
அப்டியே என் கண்ணு கலங்கி.,
கை கால் எல்லாம் நடுங்கி..
சே புல்லரிச்சி போச்சு..
பெண்கள் நாட்டின் கண்கள்..!!
சக்தி இல்லையேல் சிவமில்லை..!!
அடடா.. இந்த பொண்ணுங்க அருமை பெருமை
தெரியாம இத்தன நாளா கலாய்ச்சிட்டு வந்து
இருக்கோமே..
நீ வெங்கி இல்லடா.. மங்கி..!!
பளார்.., பளார்.., பளார்..!!
( என்னை நானே அடிச்சிட்டேன்..!! )
இன்னிக்கு பொண்ணுகளுக்கு எல்லாம்
வாழ்த்து சொல்லணும்..
சரி மொதல்ல நம்ம வீட்ல இருந்து
ஆரம்பிப்போம்னு முடிவு பண்ணினேன்..
லஞ்ச்க்கு வீட்டு வந்தேன்..
என் Wife ஹால்ல உக்காந்து டிவி பாத்துட்டு
இருந்தாங்க..
மெதுவா அவ பக்கத்துல போயி..
அவ கையை பிடிச்சி..
" Happy Women's Day நிர்மலா..!! "
என்னை ஒரு மாதிரி லூச பாக்கற
மாதிரி பாத்தா..
பாத்துட்டு...
டக்னு டிவி ரிமோட்டை எடுத்து ஒளிச்சி
வெச்சிகிட்டா..
# ஏம்மா... ·.இப்டி பண்றீங்களேம்மா...!!!

மகளிர் தின வாழ்த்து ( ஜனா ) - PSகால் பண்ணினப்ப... " ஒரு 10 நிமிஷம் கழிச்சு
நானே கூப்பிடறேனு " போனை கட் பண்ணிட்டான்..
இன்னியோட 3 வாரம் ஆகுது.. அந்த 10 நிமிஷமும்
இன்னும் வரல... போனும் வரல..
இனிமே அந்த நாயி போன் பண்ணினா பேசக்கூடாது..
கட் பண்ணிடனும்னு முடிவோட இருக்கேன்..
அது சரி.. அவன்தான் நம்மள கூப்பிடற மாதிரியே
தெரியலியே.. அப்புறம் எப்டி கட் பண்றது யோசிச்சேன்..
உடனே ஒரு சூப்பர் ஐடியா தோணுச்சு..
மொதல்ல நாம அவனுக்கு போன் பண்ணி..
" எனக்கு கால் பண்ணு"-னு சொல்லலாம்.....
அப்புறம் அவன் கால் பண்ணுவான்ல...
அப்ப கட் பண்ணலாம்னு முடிவோட போனை போட்டேன்....
" மச்சி... எனக்கு கால் பண்றா.. "
" நீ போனை கட் பண்ணு மச்சி.. 10 நிமிஷத்துல கூப்பிடறேன்... "
" என்னாது.... 10 நிமிஷமா..?!!! "
# ஆஹா... மறுபடியும் மொதல்ல இருந்தா..?!!