Thursday, April 30, 2015

நானும் என் நண்பன் ஜெகனும்
" தமிழை எப்படி காப்பாத்தறதுனு.(?!) "
தீவிரமா ஆலோசனை பண்ணிட்டு இருந்தோம்..!!
( ஹி., ஹி., ஹி.. அழகிய தமிழ்மகன்கள்..!! )
அப்ப என் மனைவி சாப்பிட கூப்பிட்டாங்க...
" டேய்... வீட்ல கூப்பிடறாங்க... அப்புறமா
பேசலாம்..! "
" இப்படி பாதிலயே போனின்னா.. தமிழை
யார்ரா காப்பாத்தறது.? "
" போலன்ன்னா என்னை யார்ரா காப்பாத்தறது..?!! "

ரோட்ல நாங்க நடந்து போனா - PS


Tuesday, April 28, 2015

பைக் விளம்பரம் - PS


" இன்னிக்கு சினிமாவுக்கு போலாம்னு சொன்னீங்க..? "
" எந்த படத்துக்கு..? ''
" காஞ்சனா - 2 "
" இரு யோசிச்சி சொல்றேன்... "
" காஞ்சனா - 2 தியேட்டர்ல போயி
பார்க்கறீங்களா.? இல்ல வீட்லயே
பார்க்கறீங்களா..? "
" புரிஞ்சிடுச்சி... கெளம்பு கெளம்பு.... "

பனியன் வெளம்பரம் - PS


" நீயெல்லாம் ஒரு பெரிய மனுஷனாய்யா..?!! "
.
.
.
.
.
.
.
.
# மிஸ்டு கால் குடுத்தா.. டக்னு அட்டெண்ட் பண்ற..?!!

நேத்து நைட் டின்னர்...
அப்ப என் பையன் சூர்யா கேட்டான்...
" அப்பா .. கோழி முதல்ல வந்ததா., 
இல்ல முட்டை முதல்ல வந்ததா.? "
" முட்டை தான்..."
" எப்படிப்பா...? "
" நீ சரியா கவனிக்கலை.... அம்மா
எனக்கு பர்ஸ்ட் முட்டை வெச்சாங்களா.,
நெக்ஸ்ட் தோசை வெச்சாங்களா.,
லாஸ்ட்ல தான் சிக்கன் வெச்சாங்க...
So... முட்டை தான் பர்ஸ்ட் வந்தது.... "
அப்புறம் அவன் என்னை முறைச்சிட்டு
எந்திரிச்சி போயிட்டான்..
# நான் கரெக்டா தானே சென்னேன் மக்கழே...?ஜான்டி ரோட்சுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.
குழந்தைக்கு 'இந்தியா' என்று பெயர் சூட்டி
அவர் மகிழ்ந்துள்ளார். - செய்தி..!!
இதை மட்டும் பெருமையா போடுவானுங்க..
இதே நம்ம தோனி அவர் பொண்ணுக்கு
" ஆஸ்திரேலியா "-னு பேர் வெச்சி இருந்தா...
தேச துரோகி ரேஞ்சுக்கு எழுதி கிழிப்பானுங்க....!!!
# திருந்துங்கடா...

Thursday, April 23, 2015விஜய் டி.வி "தெய்வம் தந்த வீடு " சீரியல்ல
செட் ரெடி பண்ண 3 மணி நேரம் ஆகுதாம்...
சுதா சந்திரனை ரெடி பண்ண
6 மணி நேரம் ஆகுதாம்....
# சீரியல் அலப்பரைஸ்

Wednesday, April 22, 2015

இதுக்குத்தான் காலேஜ் பொண்ணுங்க கூட
எல்லாம் ப்ரெண்ஷிப் வெச்சிக்க கூடாதுனு
சொல்றது..
பொசுக்னு...
" எனக்கு ஒரு ப்ராஜெக்ட் பண்ணி தர்றீங்களா.?-னு "
கேட்டுடுச்சு..!!

அட்சய திருதியை அலப்பறைஸ்

" ஏங்க பாருங்க நம்ம ஊர்ல கூட
அட்சய திருதியைக்கு நகைக் கடையில
எவ்ளோ கூட்டம்...?! "
" ஏன் நம்ம ஊர்ல மட்டும் லூசுங்க 
இருக்காதா..?! "
# அட்சய திருதியை அலப்பறைஸ்

Monday, April 20, 2015

"காஞ்சனா - 2 " நல்லா இருக்கு...,
" ஓ காதல் கண்மணி " நல்லா இல்லனு
என் தங்கச்சி சொல்லிச்சு....
" எங்கே உன் குவாலிபிகேஷன் சர்டிபிகேட் 
காட்டு " -னு கேட்டேனா...
என்னை லூச பார்க்கற மாதிரி பாத்துட்டு
போச்சு....
ஏய்... ஏய்.... நான் லூசில்ல... 
சொன்னா கேளு...

Sunday, April 19, 2015

 வருஷம் முன்னாடி...
மங்கு போன் பண்ணியிருந்தான்...
" மச்சி காலேஜ்ல சேர்ந்துட்டேன்... "
" வாழ்த்துக்கள்..!!! "
" தேங்க்ஸ்..!! "
" Co Ed- ஆ..?!! "
" ஆமா மச்சி..!! "
" அப்ப காலேஜ்ல சுமாரா எத்தனை
பொண்ணுங்க இருக்கறாங்க..?!! "
" எல்லா பொண்ணுங்ளும் சுமாராதான்
மச்சி இருக்காங்க..!! "
# ஞே..!

கே.டிவில " பவானி ஐ.பி.எஸ் " படம்
ஓடிட்டு இருக்கு..
இது " வைஜெயந்தி ஐ.பி.எஸ் " படத்தோட
ரீமேக்காம்...!!!
எனக்கென்னவோ " லொள்ளு சபா "
பார்க்கற மாதிரியே இருக்கு...
tongue emoticon tongue emoticon

" பா.ஜ.க ஒரு மிஸ்டு கால் கட்சி...!! "
- ஈ.வி.கே.எஸ்...
ஹி., ஹி., ஹி... அவிங்களுக்கு மிஸ்டு கால்
குடுக்கறதுக்காவது ஆள் இருக்கு...!!
# ஈஈஈஈ...!!!

மோகன்லால் நகை விளம்பரம் - PS


கல்யாண் ஜூவல்லர்ஸ் - PS


கோயில்ல... பூசாரி குடுக்குற விபூதில
நாம நெத்தில வெச்சிகிட்டது போக..
மீதியை பொண்டாட்டி கையில போடறது கூட
ஆணாதிக்கத்துல வருமா..?!!
# ஃபீலிங் கன்பியூஸ்ட்...

மணீஸ் கவிதை - My Birthday


இன்னிக்கு காலைல என் ப்ரெண்ட் மணி
போன் பண்ணியிருந்தான்....
" உன் பர்த்டேக்கு நான் ஒரு கவித
எழுதி இருக்கேன்.. சொல்றேன்.. 
நோட் பண்ணிக்கோ.. "
" டைப் பண்ணி அனுப்புடா.. "
" எனக்கு தமிழ்ல டைப் பண்ண தெரியாதுடா.. "
" சரி சொல்லு... "
" அதை அப்படியே டைப் பண்ணி எனக்கு
மெயில் பண்ணு.... நான் FB-ல போடணும்... "
" ஓ.கே.. உனக்கு காப்பி பேஸ்ட் பண்ண தெரியும்ல.. "
" ஹேய்.. அதை பண்ணி தான்டா நாம
10th பாஸ் பண்ணினோம்...!! "
" ஹி., ஹி., ஹி... பப்ளிக்.. பப்ளிக்.. "

ஜனா - அனுப்பிய பிறந்தநாள் வாழ்த்து...

என் ப்ரெண்ட் Janarthanan Kasiviswanathan
அனுப்பிய பிறந்தநாள் வாழ்த்து...
-----------------------------------------------------------------------------
என் இனிய வெங்கட்,
May 5,1994 நியாபகம் இருக்கிறதா?
அன்றுதான் நம் முதல் சந்திப்பு..
21 வருடம் ஆகிறது நம் நட்புக்கு.
எவ்வளவோ சந்தோச கணங்கள்,சண்டைகள், திட்டுக்கள்,மனஸ்தாபங்கள் அத்தனையும் தாண்டி
இன்னும் இம்மியளவும் குறையாத பாசத்தோடு
என்னோடு நட்பு பாராட்டுவதற்கு நெஞ்சார்ந்த நன்றி.
படிப்பு முடிந்து
கடமை உணர்ந்து
குடும்ப பொறுப்பும் வளர்ந்து
ஆளுக்கொரு திசையில்
எதிர்காலம் நோக்கி பயணம் செய்யும்போதும்
ஏப்ரல் வந்தவுடன்....
இளம்பிள்ளை திருவிழாவும்...,
கறிக்கோழி பிரியாணியும்,
உன் மாமன் மகள் (நிர்மலா வெங்கட்)காதல் கதையும்,
உன்னுடைய பிறந்த நாளும்,
எப்போதும் பசுமையாய் என் நெஞ்சில்
" அது ஒரு அழகிய நிலாக்காலம்
கனவினில் தினம் தினம் உலா போகும்"
இணையம் வளர நீ வளர்ந்தாயா
இல்லை நீ வளர இணையம் வளர்ந்ததா
சரியாக கணிக்க இயலா புதிர்...
நீ இரவில் கூட ஒளிரும் கதிர்...!
SUN TV க்கு முன்னமே
"நீங்கள் கேட்ட பாடல்" நிகழ்ச்சியை நடத்தியவன்
ஊர் மக்கள் சிந்தனையில் புது ரத்தம் செலுத்தியவன்...!
கறந்த பால் மடிபுகாது
உடைந்த கண்ணாடி ஒட்டாது
உன் நகைச்சுவை யாருக்கும் கிட்டாது...!
பொறுப்பான அண்ணன்.,
அன்பான கணவன்.,
சிறப்பான தகப்பன்.,
என பல அவதாரம் கொண்டவண்டா
நீ எப்போதும் எனக்கு "நண்பேண்டா"
ஏப்ரல்14
தமிழுக்கு பிறந்த நாள்
நீ பிறந்ததால் தமிழுக்கே
இது சிறந்த நாள்...!
பல்லாண்டு பல்லாண்டு
பல்லாயிரத்தாண்டு
பலகோடி நூறாண்டு
வாழ வாழ்த்தும் ஜனா...!

இன்னிக்கு என் Wife கொஞ்சம் கோவமா
கேட்டாங்க..
" சுஹாசினியை கலாய்ச்சி எல்லாம்
எதுக்கு போஸ்ட் போடறீங்க..?! "
" அவங்க மட்டும் எங்களை சீண்டலாமா..?! "
" உங்களையா..?!! "
" எங்களைன்னா... இணைய போராளிகளை..,
மீ ஆல்சோ எ இணைய போராளி யூ நோ..?! "
" ம்ம்க்கும்...!! "
" சரி.. உனக்கு பிடிச்ச மணிரத்னம் படம்
எல்லாம் சொல்லு...!! "
" மௌன ராகம்., தளபதி, நாயகன்..,
அலைபாயுதே... "
" ஸ்டாப்.. ஸ்டாப்.. ' அலைபாயுதே '-க்கு
அப்புறம் சொல்லு..!! "
" அலைபாயுதேக்கு அப்புறமா.. அது...
அது... அதுக்கு அப்புறம் எனக்கு எதுவும்
புடிக்கலையே...!! "
" இத.. இத.. இதத்தானேம்மா... நாங்களும்
சொல்றோம்..!! "
# ஓ.கே கண்மணி..?!!

ஓ.கே கண்மணி - சுஹாசினி - PS

என் மொபைல்ல...
இன்னிக்கு நோட்டிபிகேஷன்..
ஐயம் எ வெரி பிஸி மேன் யூ நோ..!!
smile emoticon
# கொஞ்சம் ஓவராத்தான் போறோமோ.!!


" பர்த்டே அன்னிக்கு மொத வேலையா
என்ன பண்ணுவீங்க..?!! "
" FB-ல போயி Date Of Birth-ஐ எடிட்
பண்ணுவேன்..!!! "
# நோ நோ.. நோ பேர்ட் வேர்ட்ஸ்...
இன்னிக்கு எனக்கு பர்த் டே..!!
ஹி., ஹி., ஹி..!!!

நாம " உம்"னு சொன்னா...
அப்படியே பல கோடி ரூபா Foreign Investments
இந்தியாவுக்கு வந்துடும் போலயே..
# இத்தன நாள் நம்ம ரேஞ்ச் தெரியாம 
வாழ்ந்திருக்கோமோ..?!!

@ காலை 7 மணி..
என் பையன் சூர்யாகிட்ட..
" இன்னிக்கு எக்ஸாம் கண்ணு.. 
எப்டி பண்ணுவே..? "
" சூப்பரா பண்ணுவேன்... "
" நேத்து பூரா புக் எடுத்து படிச்ச மாதிரி
நான் பார்க்கவே இல்ல..! "
" ஹே.. இது ஜூஜூபி மேட்டர்பா..
கலக்கிடறேன்..!! "
@ காலை 8 மணி...
என்னமோ தேடிட்டு இருந்தான்..
" என்னடா தேடற..?! "
" ஜியோமெட்ரி பாக்ஸ்பா..! "
" அதெல்லாம் நேத்தே ரெடி பண்ணி
வெச்சிக்க மாட்டியா..?!! "
" நான் இன்னிக்கு சைன்ஸ் எக்ஸாம்னு
நெனச்சிட்டேன்...! "
" என்னாது.... சைன்ஸ் எக்ஸாம்னு
நெனச்சியா..?!!! "
# கலக்கிடறேன்.. கலக்கிடறேனு சொல்லிட்டு
கடைசில இப்டி என் வயித்தை கலக்கிட்டானே..!!

Thursday, April 9, 2015

" அண்ணே.. உங்க ஸ்டேடஸ் எல்லாம்
செமையா இருக்குண்ணே..!! "
" Thanks தம்பி..! "
" எப்படிண்ணே முடியுது உங்களால..?!! "
" அதெல்லாம் தானா வருதுப்பா..! "
" யோசிப்பீங்களா..? "
" பின்ன..?! "
" இப்படியே யோசிச்சிட்டு இருந்தா..
அப்புறம் சாப்பாட்டுக்கு என்னண்ணே
பண்ணுவீங்க..?! "
## டேய்... என்னய பாத்து ஏன்டா அந்த
கேள்விய கேட்டே மொமெண்ட்...!!!
" ஃபேஸ்புக் லைக்கை வெச்சி சிங்கிள் டீ
கூட வாங்க முடியாது.. அப்புறம் ஏன்டா
இப்படி அலையுற..?!! "
" அதான் தெரியுதுல்ல... அப்புறம் ஏன்டா 
கஞ்சத்தனம் பண்ற... வந்து ரெண்டு லைக்
போட்டுட்டு போறது.. "
" த்த்தூ...!!! "
அமிதாப்பச்சனை வேஷ்டில பாத்தா..
அப்படியே சிவாஜியை பார்க்கற மாதிரி
இருக்காம்...
படுத்தறானுங்களே...
எலேய்... எப்படா சிவாஜி ஏழு அடி
இருந்தாரு..??!!
கொஞ்சமாவது லாஜிக்கா திங்க் பண்ணுங்கடா...
# கல்யாண் ஜூவர்லர்ஸ்
ஒரு Fake ஐ.டியோடு சாட் செய்து
கொண்டிருக்கிறேன்..
.
.
.
.
.
என் Fake ஐ.டியில் இருந்து...
# மவனே இன்னிக்கு நீ செத்தடா...!!!
( இப்ப எல்லோரும் பதறுவானுங்க பாரேன்.. )
smile emoticon smile emoticon

ரேவ்ஸ் குமார் சமையல்..!


அவசரப்பட்டு உண்மைய உளறிட்டோமோ..?!!!
smile emoticon smile emoticon

Wednesday, April 8, 2015

TSU - PS


" போன வாரம் உங்க ஊர்ல பண்டிகையாமாம்...?! "
" ஹி., ஹி., ஹி... ஆமா..!! "
" கூப்பிடவே இல்ல.. "
" கூப்பிடலாம்னு தான் நெனச்சேன்... "
" ம்ம்... அப்ப ஏன் கூப்பிடல..?!! "
" கூப்பிட்டா நீ வந்துடுவியே... "
" அட நாயே..!! "
டிஸ்கி : என் Wife & அவங்க ப்ரெண்ட் சேர்ந்து
" @Sahana Sarees " ஒரு ஆன்லைன் ஷாப்
ஆரம்பிச்சு இருக்காங்க..
நேத்து மதியம் நான் மங்குகிட்ட....
" ஏன் மச்சி... எங்க கடைக்கு கொஞ்சம்
விளம்பரம் பண்ணேன்..... "
" எனக்கு வெளம்பரமே புடிக்காதுன்னு
உனக்கு தெரியாதா மச்சி..? டிவில விளம்பரம்
வந்தா கூட கண்ணை மூடிப்பேனே..!! "
( ஓவரா அலட்டிக்கறானே..!!? )
" இல்ல மச்சி.. ஜஸ்ட் எங்க கடையை பத்தி
ஃபேஸ்புக்ல உன் ப்ரெண்ட்ஸ்க்கு எல்லாம்
ஒரு மெசேஜ் அனுப்பேன்.... "
" என்னாது மெசேஜா.? எனக்கு 5000 ப்ரெண்ட்ஸ்
இருக்காங்க.. எப்படி மச்சி அனுப்பறது..? "
" எல்லோருக்கும் வேணாம்.. பொண்ணுகளுக்கு
மட்டும்..!! "
" ஐயோடா.. அப்ப 4975 மெசேஜ்ல அனுப்பனுமே.. "
" அட பக்கி பயலே, சரி சரி உன் லவ்வர்க்கு
மட்டுமாவது அனுப்பு.....!!! "
" லவ்வர்க்கா..? ஹி., ஹி., ஹி.. அப்ப
200 மெசேஜ்ல அனுப்பணும்..!! "
" த்த்தூ..!!! வைடா போனை..!!! "

இஷாந்த் 24வது மாடி - PS
இந்தாம்மா... நீ பேசு.., பேசாம போ..
அது உன் இஷ்டம்...
ஆனா.... வந்து எல்லா போஸ்ட்டுக்கும்
லைக் போட்டுட்டு போ...
# என் போஸ்ட்டுக்கு விழற ஒவ்வொரு
லைக்கும்... நானா ( கெஞ்சி ) வாங்குனதுடா...!!!!
ஹி., ஹி., ஹி..!!!

Sunday, April 5, 2015

( என் மனைவி )
" ஒரு நாள் முழுக்க English கலக்காம
உங்களால பேச முடியுமா..? "
" Oh Sure..!! "

உதயநிதியுடன் ஒரு மினி பேட்டி :
" இந்த படத்துல கதை என்ன சார்..? "
" சந்தானம் என் ப்ரெண்டு., நானும் 
ஹீரோயினும் லவ் பண்ணுவோம்.,
இண்டர்வெல்ல பிரிஞ்சிடுவோம்.,
கிளைமேக்ஸ்ல சேர்ந்துடுவோம்..! "
" போன உங்க ரெண்டு படத்துலயும்
இதே கதை தானே..? "
" அடுத்து எடுக்க போற 10 படத்துக்கும்
இதே தான் கதை.! "
# தப்பிச்சேன்டா..!!
" அட்வான்ஸ் ஹேப்பி பர்த்டே..!!! "
" ஹலோ.., என் பர்த்டே... நேத்து..!! "
" ஹி., ஹி., ஹி.. நான் விஷ் பண்ணினது 
அடுத்த வருஷத்துக்கு..! "
# ஞே..!!
என் ப்ரெண்ட் ஜெகன் வீட்டுக்கு
போயிருந்தேன்..
புதுசா ஜெர்மன் ஷேப்பர்டு நாய்
ஒண்ணு வாங்கியிருக்காங்க...
" என்னடா பேரு..? "
" பைரவ். "
" பைரவ்னா..?!! "
" பைரவ்னா.. நாய்னு அர்த்தம்.."
" அட நாயே... அதுக்கு நீ அதை நாய்னே
கூப்பிடலாமே..!!!? "
" கிர்ர்ர்ர்ர்...!!! "
வீட்ல சாப்பிட்டுட்டு இருக்கும் போது
யாராவது சொந்தக்காரங்க வந்துட்டா..
" வாங்க கொஞ்சம் சாப்பிட்டுட்டு
போகலாம்"னு சொல்லலாம்...
அதுவே துணி துவைச்சிட்டு இருக்கும் போது
வந்துட்டா..
" வாங்க.. வந்து ரெண்டு துணி துவைச்சி
குடுத்துட்டு போங்கன்னா " சொல்ல முடியும்..?!!

Wednesday, April 1, 2015

" ஐ லவ் யூ " சொல்லலாமா.? வேண்டாமானு
ரொம்ப நாளா மனசுல போட்டு
குழப்பிட்டு இருக்கறவங்க...
இன்னிக்கு போயி தாராளமா சொல்லிடுங்க...
இதை கேட்டுட்டு அந்த புள்ள சந்தோஷப்பட்டா...
சக்சஸ்...!!!
ஒரு வேளை கோவப்பட்டா...
" யேய்.. சும்மா ஏப்ரல் ஃபூல் பண்ணினேன்பா " னு
சமாளிச்சிக்கலாம்...
எப்பூடி..?!!
பொதுநலன் கருதி வெளியிடுவோர்..
" கோகுலத்தில் சூரியன் " வெங்கட