Friday, October 30, 2015


" அடுப்புல பால் வெச்சி இருக்கேன்..
பொங்காம பாத்துக்கோங்க " -னு சொல்லிட்டு
போனாங்க என் Wife...
எனக்கு திக்னு இருந்தது..
இதுக்கு முன்னாடி ரெண்டு மூனு தடவை
இதே மாதிரி சிட்சுவேஷன்ல..
நான் எவ்ளோ தான் கேர்புல்லா இருந்தாலும்..
அந்த பால் பொங்கி... அப்புறம்
அவ என்னை பொங்கி.... அப்பப்பா....
So... இந்த தடவை ரொம்ப அலேர்ட்டா
இருக்கணும்னு மனசுக்குள்ள சொல்லிட்டு
கிச்சனுக்கு போனேன்..
போயி பாத்தா...
அடுப்பு சிம்ல எரிஞ்சிகிட்டு இருந்துச்சு..
உடனே எனக்கு கன நேரத்தில் உதிச்சது
ஒரு சித்தனை...
" இப்ப என்ன... பால் பொங்காம பாத்துக்கணும்..
அவ்ளோ தானே..?!! "
"டக்"-னு அடுப்பை OFF பண்ணிட்டேன்...
ஹி., ஹி., ஹி... இனிமே எப்டி பொங்குதுனு
பார்க்கறேன்...?!!
மாறி இருப்பார்கள்
என்ற நம்பிக்கையில்
ஓட்டு போடுகிறார்கள்
அவர்கள்...!!
மறந்து விடுவார்கள்
என்ற நம்பிக்கையில்
ஊழல் செய்கிறார்கள்
இவர்கள்...!!
- வெங்கூ
 கவிதைன்னா...
இட்லி மாதிரி
அளவா இருக்கணும்.,
இட்லி மாவு மாதிரி
பொங்கக் கூடாது..!! "
- வெங்கூ
என்னோட காலேஜ் ஜூனியர் ஒருத்தன்
எங்க ஊர் பொண்ணை தான் கல்யாணம்
பண்ணியிருக்கான்..
நேத்து அந்த பொண்ணை ஒரு விஷேத்துல 
பாத்தேன்..
" எங்க வூட்டுக்காரரு உங்களுக்கு ஜூனியராம்..!! "
" ஆமா..!! "
" அவரு காலேஜ் படிக்கும் போது பெரிய ரவுடியாமாம்..!! "
" சே.. சே.. அப்டில்லாம் இல்லையே..! "
" எல்லாம் எனக்கு தெரியும்.. சொல்லியிருக்காரு..!! "
" ஹி., ஹி.., ஹி...!! "
" பிரின்சிபால் ரூம்ல பட்டாசை கொளுத்தி போட்டு
இருக்காராம்..! "
" சே.. சே... அப்படில்லாம் இல்லையே.. "
" சும்மா உங்க ஜூனியரை காப்பாத்தாதீங்க...
எல்லாம் எனக்கு தெரியும்.. "
" ஹி., ஹி., ஹி...!! "
" ஸ்டிரைக் சமயத்துல இவர் விட்டெறிஞ்ச கல்லு
வார்டன் நெத்தில பட்டு ரத்தம் வந்துடுச்சாமே..! "
" அது.. அது.. கல்லு ஏறிஞ்சது இவன் இல்ல..
வேற பையன்..! "
" எல்லாம் எனக்கு தெரியும்.. சும்மா மழுப்பாதீங்க..! "
" ஹி., ஹி., ஹி...!! "
" ஒரு தடவை இவரை காலேஜ்ல இருந்து டிஸ்மிஸ்
பண்ற அளவு போயிடுச்சாமே..?!! "
" ஆமா.. அந்த சோனியா பொண்ணுக்கு லவ் லெட்டர்
குடுத்து.. அது கம்ப்ளயிண்ட் பண்ணி.. பெரிய பிரச்னை
ஆகிடுச்சு..!! "
" சோனியாவா..?!! எவ அவ..?!! "
" ஆஹா... எனக்கு எல்லாம் தெரியும்.. எல்லாம்
தெரியும்னு சொன்னியேம்மா..?!!!
அவ்வ்வ்வ்..!!! "
# குலதெய்வமே குனிய வெச்சி கடா வெட்டின
மொமெண்ட்..!!

Wednesday, October 28, 2015

" அந்த பொண்ணு உன்னை அப்படி கலாய்க்குது..
நீ என்னடான்னா... ஹி., ஹி., ஹி-னு சிரிச்சிட்டு
கம்முனு இருக்கே.. "
" புதன்கிழமை பொண்ணுங்க கலாய்ச்சா.. 
திருப்பி கலாய்க்க கூடாதுனு எங்க குருநாதர்
சத்தியம் வாங்கிட்டு செத்து போயிட்டாரு மச்சி..!! "
" இன்னிக்கு செவ்வாய்கிழமைடா...!! "
( ஓ.. மை காட்..!! )
" ஹி., ஹி., ஹி... செவ்வாய்கிழமை கூட
எங்க குருநாதர்........ "
" த்த்த்தூ..!!! "

Saturday, October 24, 2015

முன்னெல்லாம் விமர்சனம் படிச்சிட்டு - PS" என்னா சகலை... புது போனா..?!! "
" ஆமா சகலை.. ஐபோன் 6.. "
" என்னுதும் புது போன் தான் Honor 4C..! "
" ஓ.. ஆன்ட்ராய்டா..?!! "
" என்ன சகல.. ஆன்ட்ராய்டானு கேவலமா கேக்கறீங்க..
இதுவும் ஆப்பிள் போனும் ஒண்ணுதான்.. "
" போங்க சகல... காமெடி பண்ணிட்டு.. "
" அட நிசம் தான்.. வேணும்னா போட்டி வெச்சிக்கலாமா..?!! "
" ஐபோன் கூடவே போட்டியா..?!! ஓ.கே... என்ன போட்டி..? "
" நீங்க உங்க போனை ஒரு குடம் தண்ணில போடுங்க..
நானும் போடறேன்.. ரெடியா...?!! "
" ஙே...!!! "
# ஆருகிட்ட..?!! ஹி., ஹி., ஹி..!!!

Thursday, October 22, 2015

10 செகண்ட் கதை - PS


ஏர்டெல் Cheating Challenge - PS" கையேந்தி பவன்ல போயி நின்னுகிட்டு சரவண பவன் மாதிரி
நெய் ரோஸ்ட் வேணும்னு கேப்பியா..?! "
" கேக்க மாட்டேன்... "
" ஏன்..?!! "
" அது அவனுக்கு தெரியாதுல்ல.. "
" கையேந்தி பவன்ல போயி சரவண பவன் மாதிரி ரோஸ்ட் வேணும்னு 
கேக்க கூடாதுனு தெரிஞ்ச உனக்கு...
மொக்கை போஸ்ட் போடற என்கிட்ட வந்து...
' நல்ல போஸ்ட் எப்ப போடுவீங்கனு.?' கேக்க கூடாதுனு
ஏன் தெரியல...?! "
# நாங்க என்ன வெச்சிகிட்டாய்யா வஞ்சனை பண்றோம்..?!!!
என் ப்ரெண்ட் ஜெகன்கிட்ட போன்ல பேசிட்டு இருக்கும் போது..
" Cold-டா.. ரெண்டு நாளா காது அடைச்ச மாதிரியே இருக்கு.. "
" Enjoy பண்றா...!! "
" Enjoy - ஆ..?!! "
" இப்ப உன் Wife திட்னாலும் உனக்கு கேக்காதுல்ல... "
" ஓ.. இதான் மேட்டரா.. என்னடா ரெண்டு நாளா
திட்டவேயில்லையேனு பாத்தேன்.! ஹி., ஹி., ஹி..!!! "

விஷால் - இரும்புக்கம்பி - PSபொதுவாவே நான் போட்டோ எடுத்தா சுமாராத்தான் வரும்...

" ஏன் இப்படி எடுத்து வெச்சிருக்கீங்கனு " யாராவது கேட்டா...

" இதென்ன DSLR -ஆ... இப்படித்தான் வரும்னு " சொல்லி 
சமாளிச்சிடுவேன்...

இப்ப DSLR-ம் வாங்கியாச்சு...

இனிமே என்ன சொல்லி சமாளிக்கறது..?!!
smile emoticon smile emoticon
காலை 10 மணி...
Wife-ஐ " கல்யாண் சில்க்ஸ்ல " இறக்கிவிட்டு
சொன்னேன்...
" நீ பர்சேஸ் பண்ணிட்டு இரு.. அதுக்குள்ள
நான் படம் பாத்துட்டு வந்துடறேன்... "
" எந்த படத்துக்கு போறீங்க..?! "
" ருத்ராமாதேவி..!! "
" ம்ம்... அப்ப மேட்னி ஷோக்கு..?! "
" மேட்னியாஆஆஆ..?!! "
# ஆஹா... ஒரு முடிவாத்தான் இருக்கறாங்கய்யா...!!

எனக்கு மட்டும் ஏன் இப்டி - சிம்பு - PS


சரத் - விஷால் - PS


EVKS , குஷ்பூ, விஜயதாரணி - PSஇளங்கோவன் முதல்வர் - குஷ்பூ

" மேடம்... ஒன்மோர் டேக் போலாம்... 
இந்த தடவையாவது டயலாக்கை 
சிரிக்காம சொல்லுங்க... ப்ளீஸ்....

டேக் நம்பர் 54... ஆக்சன்...!!!! "


தோனி - அகர்கர் - PS
இதுக்கு " அழகி "-னு பேரு வெச்சதுக்கு பதிலா
" அழுவாச்சி "-னு வெச்சிருக்கலாம்...
# மிடில...!!

ஜனா கவிதை for நிர்மலா பர்த்டே..!


புலி மூவி ஸ்டேடஸ்..!

வாட்சிங் புலி...
என் Wife என்கிட்ட..
" ஏங்க.. இன்டர்வெல்ல என்னை கொண்டு போய் 
வீட்ல விட்டுட்டு வந்துடறீங்களா..?! "
" ஏய்.. இன்னும் ஸ்ரீதேவியே வரல.. அதுக்குள்ளயேவா..?! "
# தல Fan-ஆ இருப்பா போல...

===================================================

" புலி படம் பார்க்கணும்னா குழந்தையா மாறணும்னு "
என் Wife கிட்ட சொன்னேன்..
காதை புடிச்சி கடிச்சி விட்டுட்டாய்யா..!!
# ஐய்யோ...!!!

===================================================

மை மைண்ட் வாய்ஸ்..
" எனக்கு ' புலி ' படம் பிடிச்சி இருக்குன்னு
சொல்லிட்டேனே... வீட்டுக்கு போனா..
சாப்பாடு கெடைக்குமானு தெரியலையே...!??! "
# புலி எபெக்ட்...

" தோக்குற மேட்ச்சை தான் காலைல இருந்து
உக்காந்து பாத்துட்டு இருந்தீங்களா..?!! "
" ஙே...!!! "
# நம்மள திட்டணும்னு முடிவு பண்ணிட்டா
ஒரு லாஜிக்கே இல்லாம திட்றாங்கய்யா..!!

வேஸ்ட் அம்பயர் - PS


Saturday, October 10, 2015

ஸ்கூல்ல பேரண்ட்ஸ் மீட்டிங்...
" மிஸ்.. எங்க பையன் எப்டி பண்றான்..?! "
" அவனுக்கென்ன சார்.. அவன் Out Standing ஸ்டுடண்ட்.. "
" அப்படியா..?!! "
" ஆமா.. சேட்டை ஓவரா பண்றான்னு நேத்து கூட
வெளியே நிக்க வெச்சேனே..! "
அவ்வ்வ்வ்..!!!
# லைக் ஃபாதர், லைக் சன்..!!
" ஏன்டா மங்கு.. நீயே போஸ்ட் போட்டு..
நீயே லைக்கும் பண்ணிக்கிறே..
என்ன கருமம்டா இது..?!! "
" இதான் மச்சி.. ' நமக்கு நாமே ' திட்டம்.. 
நீ கேள்விப்பட்டதில்ல..?! "
# மங்கூ ராக்ஸ்.. வெங்கூ ஷாக்ஸ்..!!!
நைட் 9 மணி...
ஒரு புது நம்பர்ல இருந்து மிஸ்டு கால் வந்தது..
திருப்பி கூப்பிட்டேன்...
" ஹலோ...!! "
" ஹாலோ.. "
( மங்குனி அமைச்சர் வாய்ஸ்..)
" சொல்லு மங்கு.. "
" மச்சி... புது நம்பரை பாத்ததும் எதோ
பொண்ணுனு நெனச்சி தானே திருப்பி
கூப்பிட்டே...?!! "
" சே.. சே.. நீதான்னு தெரியும்.. "
" எப்படி..??!! "
" ஊருக்கே மிஸ்டு கால் குடுக்குற எனக்கு
ஒருத்தன் மிஸ்டு கால் குடுக்கறான்னா..
அந்த கேவலமான ஜந்து நீயா தான் இருப்பே..! "
" ஹி., ஹி.,ஹி..!!! "

Thursday, October 8, 2015

என் ப்ரெண்ட் அருண் போன் பண்ணியிருந்தான்...
" ஏன்டா.. எப்ப பாரு திங்கறதை பத்தியே தான்
போஸ்ட் போடுவியா.? உனக்கு வேற எதுவும்
தெரியாதா.?! "
" ஓ.. தெரியுமே..!! "
" அதெல்லாம் எப்ப போஸ்ட் போடுவே..?! "
" இரு இப்ப பசிக்குது... சாப்பிட்டுட்டு வந்து
அப்புறமா போடறேன்..!! "
( போனை வெச்சிட்டான்...!! )
# ஆருகிட்ட..!!
இது என் ப்ரெண்ட் பாலாஜியோட அத்தை ஹோட்டல்..
போறதுக்கு முன்னாடியே நான் பாலாஜிகிட்ட
போன் பண்ணி சொல்லிட்டேன்..
பாலாஜியும் அத்தைகிட்ட சொல்லியிருப்பாரு போல..
போனப்ப ஏக வரவேற்ப்பு..
ஒரு மட்டன் பிரியாணி,
ஒரு பள்ளிப்பாளையம் சிக்கன்,
ஒரு பெப்பர் சிக்கன்,
ஒரு சில்லி சிக்கன்,
ஒரு மூளை ப்ரை,
ஒரு சாப்பாடு,
ஒரு முட்டை பொரியல்
மட்டும் சாப்பிட்டுட்டு வெளியே வந்தேன்..
டேஸ்ட் ரொம்ப நல்லா இருந்தது..
( கண்ணு வெக்காதீங்க... அப்புறம் வயிறு வலிக்கும் ... 
உங்களுக்கு.. )
கேஷ் கவுண்ட்டர்ல அத்தை தான் உக்காந்து
இருந்தாங்க..
" அத்தை.., பில் எவ்ளோ ஆச்சு..?! "
" அட.. பில்லு எல்லாம் ஒண்ணும் வேணாம்பா..
பாலாஜி திட்டுவான்..."
இத கேட்டு நான் அப்படியே ஷாக் ஆகிட்டேன்...
அப்புறம் அத்தைகிட்ட கேட்டேன்...
" இத நீங்க முன்னாடியே சொல்லியிருக்கலாம்ல 
அத்தை..!!! "
# ஹி.,ஹி.,ஹி..!!
பின் குறிப்பு: கடை அட்ரஸ்
கோவை Brookfield Mall சிக்னல்ல வலது பக்கம் 
திரும்பி... கொஞ்ச தூரம் போனதும் முதல் ரைட் 
ரோடுல திரும்பினா.. 4வது கடை..

" என் போஸ்ட்ல காமெடி பாத்து இருப்பே..
கதை பாத்து இருப்பே...
கவிதை பாத்து இருப்பே.,
ஏன் சினிமா கூட பாத்து இருப்பே..
அரசியல கிழிகிழினு கிழிச்சதை பாத்து
இருக்கியா..?!
ஊழலை வெறித்தனமா தட்டி கேட்டதை
பாத்து இருக்கியா..?!
போஸ்ட் போட்டா.. 1000 லைக்கு, 10000 ஷேர்டா..
பாக்கறியா..? பாக்கறியா..? பாக்கறியா..? "
" எங்கே போடு பார்க்கலாம்..!! "
" என்ன மாப்ள.. பொசுக்னு இப்டி போடுனு
சொல்லிட்டே.. ஒரு பஞ்ச் டயலாக்குகாக பேசுனா.... "
" த்த்தூ..!!! "
ஊர்ல இருந்து எங்க அக்கா வந்திருக்காங்க...
நேத்து எதோ பேசிட்டு இருக்கும் போது
நான் குறுக்கால பூந்து கமெண்ட் அடிச்சிட்டு
இருந்தேன்..
அப்ப எங்க அக்கா என் Wife-கிட்ட..
" ஏன் நிர்மலா... இவன் அரை லூஸா
மாறிட்டானா..?! "
இதை கேட்டதும் நிர்மலா பதறிட்டா..
உடனே டக்னு...
" அவரை பத்தி முழுசா தெரிஞ்சிக்காம
இப்படி எல்லாம் பேசாதீங்க அண்ணினு "
சொல்லிட்டா...
# தட் " ஙே " மொமெண்ட்..!!

Monday, October 5, 2015

நேத்து " சரவணன் - மீனாட்சி " - PS
நேத்து " சரவணன் - மீனாட்சி " சீரியல்ல ஒரு டலயாக்..

சரவணன் ஆடியன்ஸை பாத்து.. 

" இந்த பொம்பளைங்கள புரிஞ்சிக்கவே முடியலையே..
தப்பெல்லாம் அவங்க பண்ணிட்டு நம்மள திட்றாங்க.., 
அப்புறம் நம்மளையே மன்னிப்பு கேக்க வெச்சிடறாங்க.." 

இதை கேட்டு நான் நமுட்டு சிரிப்பு எதாவது 
சிரிக்கிறேனான்னு என் Wife என்னை உத்து பாத்தாங்க.. 
ஆனா நான் சிரிக்கலையே..

அடக்கிக்கிட்டேன்.. 


எங்க பையன் ஸ்கூல்ல ஒரு வழக்கம்..
பசங்க தினமும் அவங்க Parents கால்ல
விழுந்து ஆசிர்வாதம் வாங்கணும்.
அப்புறம் அவங்க வலது கையில
நாங்க Sign போட்டு விடணும்..
பெரியவன் கரெக்ட்டா பண்ணிடுவான்..
சின்னவன் தன்மான சிங்கம்..
யார் கால்லயும் விழமாட்டாரு..
ஆனா நைஸ் பண்ணி அவங்க அம்மாகிட்ட
Sign மட்டும் வாங்கிட்டு போயிடுவான்..
இன்னிக்கு காலைல...
" ஆசிர்வாதம் வாங்கினாத்தான் Sign-னு.. "
நான் ஸ்டிரிக்ட்டா சொல்லிட்டேன்..
வேற வழியேயில்லாம..
அவன் என் கால்ல விழுந்து ஆசிர்வாதம் வாங்க...
நான் Sign போட...
போறப்ப என் தலையில " நங் "-னு
ஒரு கொட்டு கொட்டிட்டு போயிட்டான்..
ஏனுங்க மிஸ்...
" அப்பாவை கொட்டக் கூடாதுன்னு
எல்லாம் எதும் Sign வாங்கிட்டு வர
சொல்ல மாட்டீங்களா..?! "
அவ்வ்வ்....!!!

கோபி Vs டி.டி - PS


மாமனார் வீட்டுக்கு விருந்துக்கு போனா...
Wife-ஐ கூப்பிட்டு பக்கத்துல உக்கார வெச்சிக்கணும்...
.
.
.
.
.
.
.
அப்பதான் மாமியார் பரிமாறுவாங்க
ரெண்டு பீஸ் எக்ஸ்ட்ரா கெடைக்கும்..!!
# டிப்ஸூ..!!

புலி படத்தை பத்தி ரெண்டு மீம்ஸ்
என் தங்கச்சிக்கு பார்வேர்ட் பண்ணினேன்...
கொஞ்ச நேரத்துல என் தங்கச்சி பொண்ணு ( 5th Std )
போன் பண்ணி...
" விஜய் படத்தை கிண்டல் பண்ணி எதுவும்
அனுப்பாதிங்க மாம்ஸ்னு " அழுவுது..
# அணில் அண்ணாவின் ரசிகர் படையை
கண்டு அசந்த தினம் இன்று...!!
tongue emoticon tongue emoticon
மொக்கை போஸ்டிங் போடாதடானு திட்றான்
என் ப்ரெண்ட் ஜனா...
இதுக்கு நீ " பேஸ்புக் அக்கவுண்ட்டை
க்ளோஸ் பண்ணிடு"-னு நேரடியாவே 
சொல்லியிருக்கலாம்டா...
smile emoticon smile emoticon

Thursday, October 1, 2015

இன்னிக்கு என் ப்ரெண்ட் சிவாவோட FB Wall-ஐ பாத்துட்டு இருந்தேன்.. அப்ப தான் நோட் பண்ணினேன்.. எங்க பக்கத்து கிளாஸ்ல படிச்ச வித்யா அவனுக்கு ப்ரெண்டா இருந்துச்சு.. அவன் மட்டுமில்ல.. கணேஷ், அருண்,
பிரகாஷ்னு என் ப்ரெண்ட்ஸ் நாலு பேர்
வித்யாவுக்கு ப்ரெண்டா இருந்தானுங்க.. அடப்பாவிகளா..!! ஒருத்தன் கூட எங்கிட்ட
சொல்லியே..! சரினு வித்யாவுக்கு ஒரு ப்ரெண்ட் ரிக்வெஸ்ட்டை தட்டிட்டு... சிவாவுக்கு போனை போட்டேன்.. " டேய்.. வித்யா உன் ப்ரெண்ட் லிஸ்ட்ல இருக்குல்ல.. " " ஆமா.. அதுக்கென்ன..? " " ஏன்டா எனக்கு சொல்லல..?!! " " சரி.., ஜெயக்குமார் உன் ப்ரெண்ட் லிஸ்ட்ல இருக்கானா..? " " ஜெயக்குமாரா..? யார்ரா அது..??! " " த்த்தூ... அவன் நம்ம கிளாஸ்ல படிச்சவன்..!! " # ஓ மை காட்..!!