Thursday, September 29, 2016


போட்டோகிராபியில் அப்பாடக்கர் ஆவது எப்படி..?!!

மொபைல்ல என்ன தான் சூப்பரா போட்டோ புடிச்சாலும் யாரும் உங்கள போட்டோகிராப்பர்னு ஒத்துக்க மாட்டாங்க.. அதனால மொத வேலையா.. ஒரு DSLR வாங்குங்க... 

அப்புறம்.....

நெ.1 :

நீங்க ரோட்ல நடந்து போறப்ப... பஸ் ஸ்டேண்ட்ல ஒரு அழகான பொண்ணு நின்னுட்டு இருந்தா... உடனே அத போட்டோ எடுக்க கூடாது...

பக்கத்துல யாராவது பாட்டி இருந்துச்சின்னா... வளைச்சி வளைச்சி பாட்டியை மட்டும் போட்டோ புடிச்சி FB-ல போடணும். மறக்காம அத B&W-ல மாத்தி போடணும்...

நெ.2 :

எல்லோரும் வித விதமா பூவை போட்டோ எடுத்தாங்கன்னா.. நீங்க அது மாதிரி எல்லாம் பண்ணக்கூடாது...

அந்த செடில சிலந்தி வலை, ஏறும்பு இப்படி எதுனா இருக்கும்ல அதை க்ளோசப்ல படம் புடிங்க..

நெ.3 :

அப்புறம் இந்த எருமை மாடு, நாயின்னு எது ரோட்ல படுத்து இருந்தாலும் விட்றக்கூடாது... டக்னு கிளிக்கிடணும்..

நெ.4 :

கொஞ்சமா வெளிச்சம் இருக்குற இடத்துல போட்டோ எடுக்கணும்னா.. மொதல்ல வெளிச்சம் எந்த வழியா வருதுன்னு பாத்து அத்தனையும் க்ளோஸ் பண்ணிட்டு... போட்டோ எடுங்க..

அந்த போட்டோல கண்ணு, காது , மூக்கு இதுல எதோ ஒன்னு தெரிஞ்சா போதும்.. தெரியலைன்னாலும் பரவாயில்லை..

நெ.5 :

இப்ப ஒரு குட்டி பாப்பா அழகா சிரிச்சிட்டு இருக்குனு வைங்க.. உடனே டக்னு க்ளிக்கிடக்கூடாது... அது கையில மிட்டாய், பிஸ்கட் எதுனா இருக்கானு பாத்து... அத நைசா புடிங்கிடணும்..

இப்ப அந்த பாப்பா அழும்ல... அப்பத்தான் க்ளிக்...

நெ.6 :

போட்டோ எடுக்கும்போது கலைக்கண்ணோட எடுக்கணும்.. அது என்னானா...

அதாவது கேமராவ நேர வச்சி எடுத்தா... அது ஃபோட்டோ... அதே கேமராவ 45 degree சாய்ச்சா மாதிரி எடுத்தா... அதான் Photography.

லாஸ்ட் பட் நாட் லீஸ்ட்....

நெ,7 :

போட்டோல எல்லாம் " Venki Photography ".. இது மாதிரி உங்க பேரை போட்டுடுங்க.. அம்புட்டுத்தேன்,

No comments:

Post a Comment